செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
Protests shake
Algerian regime
போராட்டங்கள் அல்ஜீரிய ஆட்சியை உலுக்குகின்றன
By Alex Lantier
10 February 2011
Back
to screen version
நாடு
முழுவதிலும்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
மற்றும் தொழிலாளர்களின்
போராட்டங்கள் பரவியுள்ள
நிலையில்,
அல்ஜீரிய
ஜனாதிபதி
Abdelaziz
Bouteflika
வுக்கு எதிராக
நேற்று சுகாதாரத்துறை
தொழிலாளர்களால் ஒரு நாடுதழுவிய
போராட்டம் நடத்தப்பட்டது.
வட
ஆபிரிக்கா
மற்றும் மத்தியகிழக்கு
முழுவதிலும்,
குறிப்பாக
எகிப்து மற்றும் துனிசியாவில்
நிகழ்ந்துவரும் தொழிலாளர்களின்
புரட்சிகர போராட்ட அலையால்
Bouteflika
வின் ஆட்சி
நிலைகுலைந்து போயுள்ளது.
தேசிய விடுதலை
முன்னனியின்
(FLN)
பெப்ரவரி
5
அறிக்கையின்படி,
19
ஆண்டுகளுக்கு
முன்னர்,
அல்ஜீரிய
உள்நாட்டு யுத்தத்தின்
தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட
நெருக்கடிநிலை சட்டம் விரைவில்
திரும்பப் பெறப்படும் என்று
Bouteflika
அறிவித்தார்.
அரசாங்க
மானிய வெட்டுக்கள் மற்றும்
உலகளவிலான உணவுப்பொருட்களின்
விலையுயர்வுகளோடு தொடர்புபட்ட
உணவுப்பொருட்களின் அதிக
விலைகளுக்கு எதிராக இளைஞர்களின்
ஒரு தொடர்ச்சியான கலகங்களால்
கடந்த மாதம் அல்ஜீரிய ஆட்சி
தாக்கப்பட்டது.
நேற்று
செவிலியர்களும்,
மருத்துவ உதவியாளர்களும்
ஒரு நாளைக்கு முன்னதாகவே ஒரு
காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தத்தைத்
தொடங்கினர்.
போராடத்தில்
இறங்கியுள்ள சுகாதாரத்துறை
தொழிலாளர்கள் ஒரு குறைந்தபட்ச
அளவிலான அடிப்படை மற்றும்
அவசரகால சேவைகளை மட்டும்
அளித்து வருகின்றனர்.
உத்தியோகபூர்வ
UGTAஐ
(General Union of Algerian Workers)
கையாள
விரும்பும் வகையில்,
சிறுபான்மை அல்ஜீரிய
மருத்துவ உதவியாளர்கள்
சங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடத்த ஆட்சி இறங்கி வந்துள்ளது.
எவ்வாறிருப்பினும்,
மருத்துவ உதவியாளர்கள்
அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்துவதில் சிறியளவிலேயே
நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அல்ஜியேர்ஸின்
(Algiers)
பர்ன்
வைத்தியசாலைக்கு வெளியில்
நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில்
காட்டப்பட்ட ஓர் அறிவிப்பு,
“
இரத்தத்தைச்
சுரண்டும் வாக்குறுதிகளை
நிறுத்துங்கள்"
என்று காட்டியது.
ஊடகங்களின்
அறிக்கையின்படி,
சுகாதாரத்துறையில்
உள்ள
100,000
தொழிலாளர்களில்
பெரும்பான்மையினர் வேலைநிறுத்தத்தில்
பங்கேற்று வருகின்றனர்.
சம்பள உயர்வுகள்,
பல்கலைக்கழக
அமைப்புமுறைக்குள் அவர்களின்
பயிற்சி திட்டத்தை உள்ளடக்குவது,
மற்றும் வேலையிலிருந்து
நீக்கப்பட்ட சங்க பிரதிநிதிகளை
மீண்டும் நியமித்தல் ஆகியவற்றை
அவர்கள் கோரி வருகின்றனர்.
SAP
செய்தி
தொடர்பாளர்
லென்ஸ் காசி விவரித்தது:
“அச்சுறுத்தல்கள்
மற்றும் மிரட்டல்களுடன்
வேலைநிறுத்தத்தைக் கைவிட
மருத்துவமனை இயக்குனர்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவ
உதவியாளர்களைச் சாராமல்
அவர்களால் சமாளிக்க முடியவில்லை.”
நேற்று,
சூர்-எல்-க்ஹோழ்லனேவில்
உள்ள அரசுத்துறை
ENAD
இரசாயன
ஆலையின் பணிநீக்கம் செய்யப்பட்ட
தற்காலிக தொழிலாளர்கள்,
அவர்களின்
வேலைகளைத் திரும்பத் தரக்
கோரி அந்நிறுவனத்தின்
தலைமையகத்திற்கு வெளியில்
போராடினர்.
கடந்த
மார்ச் மாத தொடக்கத்தில்
அவர்கள் வேலையிலிருந்து
நீக்கப்பட்டனர்.
Libertéஇன்
நேர்காணல்களின்படி,
தொழிலாளர்கள்
அவர்களின் கோரிக்கைகள்
தீர்க்கப்படவில்லையானால்
தற்கொலை செய்துகொள்ள அச்சுறுத்தி
வருகின்றனர்.
தொழிலாளர்களை
மீண்டும் வேலைக்கு எடுக்க
தாம் மறுத்துவிட்டதை அந்த
ஆலையின் நிர்வாகி
Libertéக்கு
தெரிவித்தார்.
“அவர்கள்
திரும்பி எடுத்துக்கொள்வது
குறித்து நான் ஒருபோதும்
வாக்குறுதி அளிக்கவில்லை,”
என்று
அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களும்,
பல
அல்ஜீரிய நகரங்களை இணைக்கும்
தேசிய தட
(RN)
நெடுஞ்சாலைகளை
மறித்து வருகின்றனர்.
நசிரியா
மற்றும்
Bordj-Menaïel
(Boumerdès)இல்
வாழும் இளைஞர்கள்,
வேலைகள்
மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு
ஒரு மாத உதவித்தொகையாக
தினப்படியாக
12,000
அல்லது
அண்ணளவாக
€120
அளிக்க
வேண்டுமென கோரி நேற்று
RN 12
நெடுஞ்சாலையை
மறித்தனர்.
அதற்கு
முந்தைய நாள்,
நசிரியாவிற்கு
அருகில்
RN 12
நெடுஞ்சாலைக்கு
அருகிலும்,
ஸ்கிக்டா
மற்றும் கான்ஸ்டன்டைனுக்கு
இடையில்
RN 3
நெடுஞ்சாலையிலும்
வேலைகளைக் கோரிய வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களுடனும் மற்றும்
அல்ஜீரிஸ்-திஜி
ஔஜோ சாலையில்
200
இளைஞர்களுடனும்
பொலிஸிற்கு மோதல் வெடித்ததாக
செய்திகள் வெளியாகி உள்ளன.
பால்பவுடர்களுக்கான
விற்பனை வீழ்ச்சியடைந்த போது
நீக்கப்பட்ட
40
தொழிலாளர்களை
மறுநியமனம் செய்ய கோரி,
தாஜ்மால்ட்டில்
உள்ள
"லா
வால்லி"
பால்
ஆலை தொழிலாளர்களும் பெஜாயா-அல்ஜீரிஸ்
சாலையை அடைத்தனர்.
ஒட்டுமொத்த
அரசியலைப்புமே அல்ஜீரியாவில்
ஒரு சமூக போராட்ட எழுச்சிக்குத்
தயாராகி வருகிறது.
அல்ஜியேர்ஸின்
துறைமுகங்களில் பெருமளவிலான
கண்ணீர் புகைகுண்டுகளும்,
கலக
தடுப்பு துணைப்பொறிகளும்
கப்பலில் வந்து இறங்குவதாக
அங்கே செய்திகள் உள்ளன.
இதற்கிடையில்,
அல்ஜீரிய
மேற்தட்டுக்களுக்குப் பெரும்
பாதிப்பில்லாமல்,
இளைஞர்கள்
மற்றும் தொழிலாளர்கள்
மத்தியிலிருக்கும் கோபத்தைத்
தணிக்கும் வகையில்,
உத்தியோகபூர்வ
"எதிர்கட்சிகள்"
ஒரு
போராட்ட அணிவகுப்பிற்கு
மிகத் தாமதமாக அழைப்புவிடுத்துள்ளன.
Bouteflika
ஆட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
மனித உரிமைகள்,
சங்கங்கள்
மற்றும் உத்தியோகப்பூர்வ
"எதிர்கட்சிகளின்"
ஒரு
கூட்டமைப்பும்,
கலாச்சாரம்
மற்றும் ஜனநாயகத்திற்கான
பேரணியைப்
(RCD)
போன்றவொன்றான,
மாற்றம்
மற்றும் ஜனநாயகத்திற்கான
தேசிய ஒருங்கிணைப்புக்குழு
(The
National Coordination for Change and Democracy – CNCD)
பெப்ரவரி
12இல்
.
அல்ஜியேர்ஸில் ஒருநாள் பேரணி
திட்டங்களை அறிவித்துள்ளது.
.
அல்ஜியேர்ஸ்
மாவட்ட அதிகாரிகள் சம்பிரதாயமாக
அந்த பேரணியை அனுமதிக்க
மறுத்துள்ளனர்,
ஆனால்
எப்படியாயினும் பேரணி
நடத்தப்படுமென்று
CNCD
தெரிவித்தது.
அதிருப்திமிக்க
இளைஞர்களைக் கண்டறியவும்,
ஆட்சிக்கு
எதிராக உள்ள எதிர்ப்பை அளவிடவும்
உதவும் விதத்தில் இந்த பேரணியை
அதிகாரிகள் பயன்படுத்திக்
கொள்ள இருப்பதாக தெரிகிறது.
Radio Kalimaஇன்
கருத்துப்படி,
.
அல்ஜியேரஸைச்
சுற்றிலுமுள்ள உள்ளூர்
அதிகாரிகள் இளைஞர்களுடனும்,
பேரணியில்
பங்குபெற இருக்கும்
"அமைப்புகள்
அல்லது இளைஞர் குழுக்களையும்"
சந்தித்து,
அதில்
கலந்துகொள்ள வேண்டாமென்று
கேட்டுக் கொள்ள
கூட்டங்களை ஏற்பாடு செய்து
வருகின்றனர்.
“இத்தகைய
விவாதங்கள் குறித்த அறிக்கைகள்
.
அல்ஜியேர்ஸ் மாவட்ட மேயர்களுக்கு
அனுப்பப்படும்.
அவர்
அவற்றை
உடனடியாக,
பெப்ரவரி
12இல்
பேரணி எதிர்ப்பு நடவடிக்கையை
கவனித்து வரும் உள்துறை
மந்திரிக்கு அனுப்பி வைப்பார்,”
என்று
வானொலி நிலையம் அறிவித்தது.
எகிப்தில்
ஏற்பட்டதைப் போல,
ஆட்சிக்கு எதிராக
புரட்சிகர போராட்டத்திற்குள்
தொழிலாளர் வர்க்கம் பெருந்திரளாக
குதித்துவிடுமோ என்பது தான்
ஆட்சிக்கும்,
உத்தியோகபூர்வ
எதிர்ப்புகளுக்கும் உள்ள
முக்கிய பயமாக உள்ளது.
முன்னனி
பத்திரிக்கை
El
Watan
உடனான
ஒரு நேர்காணலில்,
வழக்கறிஞரும்
மனித உரிமைகள் காரியதாரியுமான
மொக்ரைன் அய்ட் லார்பி
எழுதினார்:
“ஆட்சி
மக்கள் செல்வாக்கைப்
பெற்றிருக்கவில்லை,
எதிர்கட்சிகள்
பலவீனமாகவும்,
சமரசப்பட்டும்
உள்ளன,
அதாவது
அவை ஒன்றுமற்று உள்ளன என்பதைப்
புரிந்துகொள்ள ஒருவர் ஒரு
பெரிய நிபுணராக இருக்க
வேண்டியதில்லை.”
லார்பி
தொடர்ந்து
குறிப்பிட்டார்,
“ஒரு
எதிர்ப்பெழுச்சி
போராட்டத்தால் அமைப்புமுறை
மாற்றப்படலாம் என்பதை விட்டுவிட
முடியாது.”
இது,
எந்தவித மாற்றமும்
“அமைதியான"
முறையில் நடக்க
வேண்டும் என்று அவர் விரும்புவதற்கான
எச்சரிக்கையாகும்.
தொழிலாளர்
வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான
போராட்டத்தால் சலுகைபெற்ற
மத்திய-தர
அடுக்குகளிடையே ஏற்பட்டுள்ள
அச்சத்தைப் பிரதிபலிக்கும்
இத்தகைய கருத்துக்கள்,
Causeurஇல்
RCD
தலைவர்
சயத் ஷைதியால் எழுதப்பட்ட
ஒரு கண்டன கட்டுரையில் மிக
வெளிப்படையாக எதிரொலித்தது.
“2010இல்
அல்ஜீரியாவில் பல்வேறு
அளவுகளில்
9700
கலகங்கள்
நடைபெற்றன,”
ஷைதி
எழுதினார்.
“துனிசிய
புரட்சியில் ஒருங்கிணைந்திருந்த,
உள்ளடங்கி இருந்த
மத்தியதட்டு வர்க்கங்கள்
தோற்றப்பாட்டளவில் அல்ஜீரியாவில்
இல்லை என்று ஒருவர் நினைத்தால்,
அந்த முடிவு மிகத்
தெளிவானது.
நீண்டகாலமாக
ஒடுக்கப்பட்ட மக்கள் ஆத்திரத்துடன்
ஆட்சியின் பிடிவாதமும்
சேர்ந்து,
முன்னிகழ்ந்திராத
தேசிய மற்றும் பிராந்திய
விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய
ஒரு வெடிப்பை உருவாக்கக்கூடும்.”
“Algeria: the
historic impasse,”
என்று
தலைப்பிடப்பட்ட அவருடைய
கட்டுரை,
அல்ஜீரிய
குட்டி-முதலாளித்துவ
தேசியவாத முட்டுச்சந்தின்
ஒரு குறிப்பிடத்தக்க
தொகுப்புரையோடு—அதாவது
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கும்,
மற்றும் ஷைடிக்கு
எதிராகவும் கூட
FLN
தொடுத்த
அதன் யுத்தத்தின் அரசியல்
மெய்யியலோடு—முற்று
பெற்றது.
“மென்மையான
இளம் அல்ஜீரிய தேசியவாத நனவு,
சமூக விதிமுறைகள்
மற்றும் சமூகத்துவ மதிப்புகளைத்
தூள்தூளாக்கிய
[பிரெஞ்சு]
காலனியாக்கத்திற்கு
எதிரான எதிர்ப்பிலிருந்து
பிறந்தது,”
அவர்
விளக்கினார்.
“கையிலிருக்கும்
பெரும் ஆதாரங்களால்
சாத்தியப்படுத்தப்பட்டு
இருக்கும்,
[தற்போதைய]
ஆட்சியால் இன்னும்
அதிகளவில் வறுத்தெடுக்கப்பட்ட
நிலைமை ஒரு சீற்றத்தைத்
தோற்றுவித்துள்ளது.
உண்மையில்
அப்பிராந்தியம் எங்கிலும்
தொழிலாள வர்க்கம் புரட்சிகர
போராட்டத்திற்கு நுழையும்
இந்த வேளையில்,
இது,
வட அபிரிக்க இராணு
ஆட்சியும்,
அவர்களின்
உத்தியோகபூர்வ
"எதிர்கட்சிகளும்",
மற்றும் அவர்களின்
"மனித
உரிமைகள்"
எடுபிடிகளும்
எதிர்கொள்ளும் வரலாற்றுரீதியிலான
நிலைமையாகும். |