WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
அனைத்துச் செலவுகளும் கொடுக்கப்பட்டு எகிப்திய
விடுமுறையை அனுபவித்தது
தொடர்பாக பிரெஞ்சுப் பிரதம மந்தரி அவதூற்றை
எதிர்கொள்கிறார்
By Kumaran Ira
11 February 2011
Use this version to print | Send
feedback
எகிப்தில் தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்துமஸ்
விடுமுறையை ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியின் செலவில்
கழித்ததாக செவ்வாயன்று பிரெஞ்சுப் பிரதம மந்திரி பிரான்சுவா
பியோன் ஒப்புக் கொண்டுள்ளார்.
மூன்று
வாரங்களாக ஒரு வெகுஜன எழுச்சியினால் எகிப்து அதிர்விற்கு
உள்ளாகியுள்ளது.
செவ்வாயன்று பிரெஞ்சு அங்கத வார ஏடான
Le
Canard Enchaîné
இத்தகவலைப் பியோன்
“வெளிப்படைத்
தன்மையைக் கருதி பகிரங்கமாக்குகிறார்”
என்று
புதனன்று வெளிவந்த தகவல்களுக்கு முன்னரே பிரதம மந்திரி
அலுவலகத்தின் அறிக்கை செவ்வாயன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.
“பிரான்சுவா
பியோன்,
அவருடைய மனைவி,
குழந்தைகள் ஆகியோர் ஆட்சியினால் அளிக்கப்பட்ட உபசாரங்களை
ஏற்றனர்,
கெய்ரோ
இலவசமாக அளித்த அரசாங்க விமானத்தை முழு பியோன் குடும்பமும்
Abou-Simbel
க்குச்
சுற்றுப் பயணத்திற்குப்
பயன்படுத்தியது.
அதே
போல் நைலில் ஒரு படகுப் பயணத்தையும் மேற்கொண்டார்”
என்று
எழுதப்பட்டுள்ளது.
அஸ்வானில் நைல் சுற்றுலாத் தலம் ஒன்றில்
டிசம்பர்
26ல்
இருந்து ஜனவரி
2
வரை
இவர் விடுமுறையைக் கழித்தார்.
முபாரக்கை டிசம்பர்
30ம்
திகதி அஸ்வானில் பியோன் சந்தித்தார் என்றும் அறிக்கை கூறுகிறது.
எகிப்தில் ஜனவரி
25ல்
ஒரு மாதத்திற்குள் பெரும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடிப்பதற்கு
முன்னால் இது நிகழ்ந்தது.
வெளியுறவு மந்திரி மிஷேல் அலியோ-மரி
மற்றும் அரசாங்க மந்திரியான அவருடைய கணவரும் கிறிஸ்துமஸ்
விடுமுறையைத் துனிசியாவில் கழித்தனர் என்ற தகவல்களுக்குப்
பின்னர் பியோனின் விடுமுறை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அவர்கள் ஒரு தனி ஜெட்டைப் பயன்படுத்தி,
அகற்றப்பட்டுவிட்ட ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியுடன்
தொடர்புடைய செல்வந்த வணிகருக்குச் சொந்தமான ஆடம்பர ஓட்டலில்
தங்கினர்.
தங்கள்
பில்லியனர் விருந்தோம்பினர் செலவில் இவர்கள் ஓய்வெடுத்தபோது,
பென்
அலியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுச்சிகள் நடந்தன.
அவற்றையொட்டி கடுமையான அரச அடக்குமுறையும் நடைபெற்றது.
("பிரெஞ்சு
அரசாங்கம் அதன் வட ஆபிரிக்க சர்வாதிகாரங்களுடனான உறவுகளால்
சங்கடம் அடைகிறது")
அலியோ-மரியின்
பயண அவதூறு அம்பலமானபோது,
பியோன்
அவருக்கு ஆதரவு கொடுத்து அவர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று
வந்த முறையீடுகளை நிராகரித்திருந்தார்.
UMP (Union for a Popular Majority)
ஆளும்
கட்சி அதன் சமூக சிக்கனக் கொள்கைகளால் முற்றிலும்
இழிசரிவிற்கு உட்பட்டுள்ளது.
பிரெஞ்சு அரசியல்வாதிகள் மற்றும் மத்திய கிழக்கு
சர்வாதிகாரிகளைப் பற்றி
தொடர்ந்த அவதூறுகள் வந்த வண்ணமிருப்பது பிரான்ஸின் அரசியில்
ஸ்தாபனம் பற்றி மக்கள் விரோதப் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பிரெஞ்சு அரசியல் உயரடுக்கின் சங்கடத்தை
எதிர்கொள்ளும் வகையில்,
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அரசாங்க உறுப்பினர்களை தங்கள்
விடுமுறையினை பிரான்சிற்குள் குவிப்புக் காட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.
“குடியரசின்
ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள ராஜதந்திரப் பிரிவின் வழிமுறைகளுக்கு
ஏற்ப பிரதம மந்திரியால் வெளிநாடுகளுக்கான அழைப்புக்கள்
ஒப்புதல் கொடுக்கப்படும்.
பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கைகளுடன் அவை பொருந்தியிருக்குமா
என்பது அப்பொழுதுதான் முடிவு செய்யப்படும்”
என்றார்.
முக்கிய அரசியல்வாதிகளிடையே சர்வாதிகார
ஆட்சிகளுடன் ஊழல் நிறைந்த தொடர்புக்களை உட்குறிப்பாக ஒப்புக்
கொண்ட வகையில்,
அவர்
கூறினார்:
“சில
ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் சாதாரணமாக இருந்தவை இப்பொழுது
பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடும்.”
எகிப்தில் சமூக எழுச்சி வெடித்தபோது,
பிரெஞ்சு அரசாங்கமும் முதலாளித்துவ
“இடது”
எதிர்ப்பும் முபாரக் ஆட்சி பற்றி தொழிலாளர்கள் கௌரவமான
வாழ்க்கைத் தரங்கள்,
ஜனநாயக
உரிமைகள்,
சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது
போலித்தனமாக அரசாங்க அடக்குமுறையைக் குறைகூறின.
இந்த
அடக்குமுறை குறைந்தபட்சம்
300
பேர்
உயிர்களையாவது குடித்துள்ளது.
Canard Enchaîné
கட்டுரையின் ஆசிரியர்
Brigitte Rossigneux, France 24 TV
யில்
“அரச
தலைவர் அகல வேண்டும் என்று எப்படி நீங்கள் கோரலாம்?
அதேபோல் அவருக்குக் கட்டுப்பட்டுள்ள நிலையில் ஆட்சியைப் பற்றி
எப்படிக் குறைகூறலாம்?”
என்று
எழுதியுள்ளார்.
பிரெஞ்சு ஆளும் வர்க்கம் நீண்டகாலமாகவே தன்
ஏகாதிபத்திய நலன்களைக் காப்பதற்காக
வட
ஆபிரிக்க சர்வாதிகார ஆட்சிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.
தேவையான தளவாடங்கள் மற்றும் இராணுவ ஆதரவை பொலிஸ் அரச
அடக்குமுறை நடவடிக்கைகளை அந்த அரசுகள் எடுத்துத் தொழிலாளர்
வர்க்கத்தை குறைவூதியம்,
இழிந்த
வாழ்க்கை நிலைமை ஆகியவற்றில் தொடர வைப்பதற்கு உதவியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிரெஞ்சு பொலிஸ்
அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி எகிப்திய
பாதுகாப்புப் பிரிவினருக்கு பயிற்சி அளித்ததாகத் தகவல்கள்
வந்துள்ளன.
எழுச்சி தொடங்கியவுடனேயே,
பிரதம
மந்திரி அலுவலகக் கூற்றின்படி,
பிரான்ஸ் ஆயுதங்கள் மற்றும்
கலகமடக்கும் பொலிஸ் பிரிவிற்குத் தேவையான கருவிகள்,
வெடி
மருந்துகள்,
பெரும்பாலும் கண்ணீர்ப்புகைக்குத் தேவையான கருவிகள்,
எரிவாயு எறிகுண்டுகள் ஆகியவை அனுப்ப இருந்ததைத் தற்காலிகமாக
நிறுத்தியது.
ஆனால்
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் துனிசியப்
பாதுகாப்புப் படைகளுக்கு இத்தகைய பொருட்களை பிரான்ஸ் அனுப்ப
இசைவு கொடுத்தது.
பென்
அலி அகன்ற பின்னரும் இது நடைபெற்றது.
அலியோ-மரி
பயண அவதூறு வெடித்தெழுந்தபோது,
உத்தியோகப்பூர்வ முதலாளித்துவ இடது எதிர்ப்பான சோசலிஸ்ட் கட்சி
(PS)
மற்றும் அதன் நட்புக் கட்சிகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி
(PCF)
மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
(NPA)
ஆகியவை
இழிந்த முறையில் அவர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரின.
ஆனால் இம்முறை அவை வேறுபட்ட மனப்பாங்கைக்
காட்டியுள்ளன—பியோனை
மன்னித்து அவருடைய விடுமுறை எகிப்திய எழுச்சியின் போது
நடக்கவில்லை,
ஆனால்
அவருடைய வெளியுறவு மந்திரி அலியோ மரியின் பயணம் பென் அலிக்கு
எதிரான
எதிர்ப்பு இயக்கம் துனிசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்டது என்று
கூறியுள்ளன.
PS
ன்
பிரதிநிதி
René Dosière,
பொது
வாழ்வில் வெளிப்படைத்தன்மை பற்றி சிறப்பாகப் பேசும் வல்லுனர்,
i-Télé
யிடம்
பியோனின் நிலைமை வெளியுறவு மந்திரியிடமிருந்து
“முற்றிலும்
மாறுபட்டது”
என்றார்.
“அடிப்படையில்,
இது
தொழில் அறநெறிப் பிரச்சினை ஆகும்.
ஆனால்
பிரதமருடைய பயணத்தைப் பொறுத்தவரை,
எந்த
பிறழ்தலும் இல்லை”
என்றார்.
தேசிய சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியான
PS
குழுவின் தலைவர்
Jean-Marc Ayralt,
அலியோ
மரி இராஜிநாமாவிற்குக் குரல் கொடுத்தவர்
RTL
வானொலியிடம் கூறினார்:
“கலகங்களால்
அதிர்ச்சியடைந்து கொண்டுவந்த ஒரு நாட்டிற்குச் செல்லுதல்
என்னும் பிழையை பிரான்சுவா பியோன் செய்யவில்லை.
அவரைப்
பொறுத்தவரை,
சொந்த
விடுமுறை மற்றும் பொதுச் செயல் என்ற மாறுபட்ட செயல்கள் ஒன்றாக
இணைந்தன.”
நீண்ட காலமாகவே
PS
ஆனது
பிரெஞ்சு முதலாளித்துவ நலன்களுக்காக வட ஆபிரிக்காவில்
சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. |