WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
மூனிச் பாதுகாப்பு மாநாடு எகிப்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது
By Peter Schwarz
9 February 2011
Use this version to print | Send
feedback
மூனிச்சில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு
மாநாடு டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கிற்கு சமமான இராணுவ
மட்டத்திலான
செயற்பாடாகும்.
இரு
நிகழ்வுகளும் உத்தியோகபூர்வமாக
“பொதுமக்களுக்குரியதல்ல”
என்று
வரையறுக்கப்பட்டாலும்,
அரசியல்,
பொருளாதார,
இராணுவ
உயரடுக்குகள் சந்தித்து பேசப் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு
உத்தியோகபூர்வ விவாதங்களை தவிர இன்னும் கூடுதலான,
நெருக்கமான சூழலில் தற்போதைய உலக அரசியல் பிரச்சினைகளை
விவாதிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற
47வது
பாதுகாப்பு மாநாட்டில்
500க்கும்
மேற்பட்ட விருந்தினர்கள்,
பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்.
இதில்
22
அரசாங்கம் அல்லது நாட்டின் தலைவர்கள்,
22
வெளியுறவு மந்திரிகள்,
24
பாதுகாப்பு மந்திரிகள் மற்றும் கட்டுப்பாட்டுத் தளபதிகள்
மற்றும்
67
பிற
மந்தரிகள் அடங்குவர்.
ஜேர்மனிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக சான்ஸ்லர் அங்கேலா
மேர்க்கலும் வெளியுறவு,
பாதுகாப்பு,
நிதி
மற்றும் வளர்ச்சித்துறை மந்திரிகள் இருந்தனர்.
அமெரிக்காவில் இருந்து வந்த குழுவில் வெளிவிவகார செயலாளர்
ஹிலாரி கிளின்டன் இருந்தார்.
ரஷியக்குழுவில் செர்ஜி லாவ்ரோவ் இருந்தார்;
இங்கிலாந்தில் இருந்து பிரதம மந்திரி டேவிட் காமரோன்
வந்திருந்தார்.
ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் நேட்டோ பொதுச் செயலர்களும் ஆப்கானிய
ஜனாதிபதியும் சிறப்பு விருந்தினர்கள் ஆவர்.
மாநாட்டின் உத்தியோகபூர்வ இலக்கு “சர்வதேசப்
பாதுகாப்பு புதிய சவால்களை எதிர்கொள்கிறது -நிதிய
நெருக்கடியில் இருந்து இணையத்தள போர் வரை” என்பதாகும். ஆனால்
துனிசிய மற்றும் எகிப்திய எழுச்சிகள் உத்தியோகபூர்வ
செயற்பட்டியலை மாற்றிவிட்டன. கூடியிருந்த தலைவர்கள் மற்றும்
தளபதிகள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும்
மக்கள் எழுச்சிகள் தங்கள் “பாதுகாப்பிற்கு” (அதாவது
ஏகாதிபத்திய ஆட்சிக்கு) அரசநிதி இல்லாதது அல்லது இணைய தளத்தில்
இருந்து தாக்குதல்கள் ஆகியவற்றைவிட பெரிய ஆபத்தைக்
கொண்டிருக்கிறது என்பதைத்தான் உணர்ந்தனர்.
இதனால் அவர்கள் ஆபத்திற்குட்பட்டுள்ள
கொடுங்கோல்
ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கான வழிவகைகள் பற்றித் தீவிரமாக
ஆராய்ந்தனர்.
வெறுக்கப்படும் எகிப்திய ஆட்சிக்கு ஆதரவாக தங்களை வெளிப்படையாக
காட்டிக்கொண்டதால்,
சில
செய்தி
தலையங்க கருத்துக்கள் எச்சரிக்கைகளை விடுக்கும் கட்டாயத்திற்கு
உட்பட்டன.
Süddeutsche Zeitung
பத்திரிகையில் எகிப்தில் எழுச்சியை நாளேட்டின் நிருபர் என்று
நோக்கிய தோமஸ் அவநேரியஸ் பின்வருமாறு
எழுதினார்:
“துணை
ஜனாதிபதி
[முபாரக்கின்
நீண்ட கால உளவுத்துறைத் தலைவர் ஒமர் சுலைமான்]
மீது
அதிக நம்பிக்கையை வைப்பதில் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும்
விரைவில் மீண்டும் தாங்கள் எகிப்தில் கொடுங்கோல்
ஆட்சியின்
பக்கத்தில் உள்ளதைத்தான் அறிவர்.
புதிய
முகம்,
ஆனால்
பழைய நடைமுறைதான்.
இது
எகிப்தியர்களுக்கு இன்னும் ஆத்திரமூட்டுதலைக் கொடுக்கும்.
இதன்
பின் மற்றொரு புரட்சிக்கான அச்சுறுத்தலும் உள்ளது:
அமெரிக்க-எதிர்ப்பு,
இஸ்ரேலிய எதிர்ப்பு,
மேலை-எதிர்ப்பு,
ஒருவேளை இஸ்லாமிய
எதிர்ப்பு என்றுகூட
இருக்கலாம்.”
எகிப்திய மக்களை இன்னும் தூண்டிவிடாமல்
இருப்பதில் கவனமாக இருந்த மூனிச் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள்
“மாற்றம்
அமைக்கப்பட வேண்டும்”,
“ஒழுங்குமுறையான
இடைமாற்றம்”
போன்ற
கோஷங்களை ஏற்றனர்.
இவை
வெளிவிவகார
செயலாளர்
கிளின்டன் மற்றும் சான்ஸ்லர் மேர்க்கெல் ஆகியோரால் உடன்பட்டு,
ரஷ்ய,
துருக்கிய வெளியுறவு மந்திரிகள் உட்பட
அநேகமாக அனைத்துப் பங்கு பெறுபவர்களாலும் ஏற்கப்பட்டது.
இந்தக் கோஷங்களின் பொருள் இதுதான்:
இருக்கும் சமூக முறை மற்றும் தற்போதைய ஆட்சிமுறை
தக்கவைக்கப்பட்டு எழுச்சியாளர்களுக்கு எதிராகக் பாதுகாக்கப்பட
வேண்டும்;
அதே
நேரத்தில் புதிய வழிவகைகள் மற்றும் அரசியல் கட்சிகளும் மக்கள்
இயக்கத்தை பிரிக்க,
முடக்க
மற்றும் நசுக்க கட்டமைக்கப்பட வேண்டும்.
கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மாபெரும்
எகிப்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ
அமைப்பு,
செல்வம் கொழிக்கும் உயர்வகுப்பினரின் சலுகைகள்,
தொழிலாள வர்க்கம் பெரிதும் சுரண்டப்படுதல் மற்றும் நாட்டின்
வாஷிங்டன் சார்பு வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை எப்படியும்
பாதுகாக்கப்பட வேண்டும்,
அதே
நேரத்தில் மேற்புறத்தில் சில போலி
மாற்றங்கள்
செய்யப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டனர்.
மீண்டும் மீண்டும் மூனிச்சில் புதிய தேர்தல்கள்
இயன்ற அளவு தாமதப்படுத்தப்பட வேண்டும்,
அப்பொழுதுதான் ஒரு இன்னும் உறுதியான ஆட்சியை கட்டமைக்க அவகாசம்
பெற முடியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
“ஒழுங்குமுறையான
மாற்றம்”
என்பது
82
வயது
ஹொஸ்னி முபாரக்கீன்கீழ் செயல்படுத்தப்பட வேண்டுமா அல்லது
இப்பணி அவருடைய நீண்டகால எடுபடியான சுலைமான் மூலமா அல்லது
மேலைச் சக்திகள் மற்றும் எகிப்திய முதலாளித்துவத்தினால்
செய்யப்பட வேண்டுமா என்பது பற்றிய சிறு தந்திரோபாயரீதியான
பிரச்சினைகள் வெளிப்பட்டன.
உடனடியாக முபாரக் இராஜிநாமா செய்யவேண்டும்
என்று எவரும் மூனிச்சில் வாதிடவில்லை.
ஏனெனில் துனிசிய ஆட்சியாளர் ஜேன் எல் அபிடைன் பென் அலி
இராஜிநாமாவைத் தொடர்ந்தது போல்
மற்ற
நாடுகளிலும் எழுச்சியாளர்களுக்கு இது ஊக்கத்தை அளிக்கும்
என்ற
பயத்தினாலாகும்.
முபாரக்கை படிப்படியாக அதிகாரத்தை விட்டு நீக்கும் திட்டங்கள்
முன்வைக்கப்பட்டன;
உத்தியோகபூர்வ இராஜிநாமாதான் இல்லை;
அவர்
தன்னுடைய ஷர்ம் எல்ஷேக் சுற்றுலா மாளிகைக்கோ அல்லது முன்பு
மருத்துவக் காரணங்களுக்காக சேர்க்கப்பட்டிருந்த ஒரு ஜேர்மனிய
மருத்துவமனைக்கோ அனுப்பப்படலாம் போன்றவை விவாதிக்கப்பட்டன.
எகிப்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின்
சிறப்புத் தூதராக உள்ள பிராங்க் விஸ்னர்
வீடியோ
மூலம் மூனிச் மாநாட்டிற்கு வழங்கிய
உரையில்
இந்த
விருப்புரிமையை எதிர்த்தார்.
30
ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஒரு சர்வாதிகாரியின் அனுபவத்தைக்
கைவிடுவதற்கு எதிராக விஸ்னர் எச்சரித்தார்.
“ஜனாதிபதி
முபாரக் அவர் நாட்டிற்கு
60
ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்,
இப்பொழுது எகிப்தை வருங்காலத்திற்கு தலைமையேற்று வழிநடத்திச்
செல்லும் பொறுப்பையும் எதிர்கொண்டுள்ளார்.”
என்று
அவர் கூறினார்.
முபாரக்தான் மாற்றத்திற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும் என்றார் விஸ்னர்.
அவருடைய தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது.
எகிப்தில் இன்னும் ஒரு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது,
ஒரு
ஜனாதிபதி உள்ளார்,
அதிகாரம்
“முழுக்குழப்பத்தை”
ஏற்படுத்தும் விதத்தில் பலிகொடுக்கப்படக்கூடாது.
விஸ்னர் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளில்
மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
அவருடைய தந்தை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்
CIA
ஐ
நிறுவ உதவினார்.
ஜேர்மனியில் மூத்த விஸ்னர்
Gehlen Organization
என்னும் ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவின் முன்னோடியை நிறுவினார்
அதுதான் பழைய நாஜிக்களைத் தேர்ந்தெடுத்து சோவியத் ஒன்றியத்தின்
மீது துப்பறிய உதவியது.
1953ல்
அவருடைய
CIA
அலுவலகம்தான் ஈரானில் ஆட்சி சதியை
ஏற்பாடு செய்தது.
அதுதான் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி
மஹ்மட் மொசடெக்கை அகற்றி அவருக்குப் பதிலாக ஷாவின்
சர்வாதிகாரத்தைக் கொண்டுவந்தது.
இளைய
விஸ்னர் இதேபோன்ற செயல்களை கொசொவோ மற்றும் ஈராக்கில்
செய்துள்ளார்.
ஜேர்மனியின் சான்ஸ்லர் மேர்க்கெல்
“ஒழுங்குமுறையான
இடைமாற்றம்”
என்னும் மூலோபாயத்தை விளக்கும் வகையில் ஜேர்மனிய ஜனநாயகக்
குடியரசு
(GDR) 1989
இலையுதிர்காலத்தில் வீழ்ச்சியடைந்தபோது ஏற்பட்ட சொந்த
அனுபவத்தைக் குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில் கிழக்கு ஜேர்மனியில்
வசித்துவந்து வலதுசாரி குடியுரிமை இயக்கமான ஜனநாயக
விழிப்புணர்ச்சி
(Democratic
Awakeing )
இல்
சேர்ந்த மேர்க்கெல் ஒரு புரட்சி போதிய வேகத்துடன் செயல்பட
முடியாது என்ற உணர்வு பற்றித் தான் அறிந்துள்ளதாகக் கூறினார்.
ஆனால்
ஜேர்மனிய ஒற்றுமை முடிக்கப்பட்டபின்,
தான்
“அதை
எவரோ
சிறப்பாக
தயாரித்துள்ளது பற்றி மகிழ்ந்ததாகவும்”
குறிப்பிட்டார்.
“ஒரு
மாற்றம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்”
என்று
அவர் முடிவுரையாகக் கூறினார்.
மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேர்க்கெல்,
முதலாளித்துவ அறிமுகப்படுத்தலுக்கு
ஆதரவைக் கொடுத்த ஜனநாயக
விழிப்புணர்ச்சி
அரசியல் ஊழலுக்கு எதிராகவும் சிறந்த வாழ்க்கை நிலைமகளுக்கும்
போராடிய
மக்களிடையே தான் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்றார்.
“அப்பொழுது
சரியான சிந்தனைகளைக் கொண்ட ஒரு புதிய கட்சியில் நான் இருந்தேன்.
தேர்தலில் எங்களுக்குமுழு
0.9
சதவிகிதம் கிடைத்தது”
என்றார் மேர்க்கெல்.
இந்த
அனுபவத்தில் இருந்து அவர் பெற்ற முடிவு ஒரு
“ஜனநாயக
நிகழ்வுப்போக்கு”
ஆரம்பத்தில் ஒரு தேர்தலை நடத்துவது என்பது தவறு என்பதாகும்.
புதிய
சக்திகளுக்கு
ஸ்திரப்படுத்திக்கொள்ள
கால
அவகாசம்
தேவை.''
1989/90
ல்
மேர்க்கெல் அவரது
“சரியான
சிந்தனைகளை”
சாதிக்க மேற்கு ஜேர்மனி அரசாங்க
அமைப்பையும்
பழைய
ஸ்ராலினிச
கிழக்கு
ஜேர்மனி
(GDR)
அமைப்பையும் நம்ப முடிந்துடன்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிச
சோசலிச
ஐக்கிய
கட்சி
(SED)
அதன்
கடைசிப் பிரதமரான ஹான்ஸ் மோட்ரோவின்
வார்த்தைகளில்
“ஐக்கியத்திற்குப்
பாதை முற்றிலும் தேவை,
உறுதியுடன் தொடரப்பட வேண்டும்”
என்று
நம்பியதாகக் கூறினார்.
ஆனால்
மில்லியன் கணக்கான கிழக்கு ஜேர்மனிய தொழிலாளர்களுக்கு ஜேர்மனிய
ஐக்கியத்திற்கான பாதை என்பது அவர்கள் வேலையிழப்பு மற்றும்
பாதுகாப்பற்ற வாழ்க்கை என்பதாயிற்று.
எகிப்தில் மக்களின் புரட்சிகர ஆர்வத்தை அடக்கி
நசுக்கக் கூடிய ஒரே சக்தி தற்பொழுதுள்ள அரசாங்க அமைப்புகள்தான்.
எனவேதான் மேர்க்கெல் இவ்வமைப்புகளை தக்கவைத்துக் கொள்ளுவதில்
ஆர்வம் காட்டுகிறார்.
மேலை
அரசாங்கங்கள்
“அனைவருக்கும்
பொருந்தும் சுதந்திரமான”
செய்தி
ஊடகத்தின் சுதந்திரம்,
பேச்சு
சுதந்திரம் ஆகியவற்றிற்று ஆதரவு தரும் கட்டாயத்தில் உள்ளன
என்று மூனிச்சில் அவர் பிரகடனம் செய்தார்.
ஆனால்
“எகிப்தியத்
தலைவர்களான”
முபாரக்,
சுலைமான் ஆகியோருக்குத்தான் அத்தகைய சுதந்திரங்களை உறுதிபடுத்த
இயலும்.
அதிகார
வெற்றிடம் என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு உறுதியளிக்கையில் ஐரோப்பா நெருக்கமாக
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்று மேர்க்கெல் முடிவுரையாகக்
கூறினார்.
இந்த
உடன்பாட்டிற்குத்தான் அவர் வெளிவிவகார செயலர்
ஹிலாரி
கிளின்டனுடன் மூனிச்சில் ஒப்புக் கொண்டுள்ளார். |