WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
Mass
protests and strikes escalate as Egyptians reject “orderly transition”
எகிப்தியர்கள்
“ஒழுங்கான
இடைமாற்றத்தை”
நிராகரிக்கையில்
வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் பெருகுகின்றன
By Bill
Van Auken
9 February 2011
Back to
screen version
செவ்வாயன்று
இதுவரை இல்லாத பெரியளவு ஆர்ப்பாட்டத்தினால் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கம்
நிறைந்திருந்தது.
பெரும்பான்மையான
மக்கள் ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் முக்கிய நண்பரான முன்னாள் இராணுவ உளவுத்துறைத்
தலைவர் ஒமர் சுலைமான் எகிப்தின் சர்வாதிகார இராணுவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு
“ஒழுங்கான
இடைமாற்றம் தேவை”
என்று கூறிய கருத்தை
நிராகரித்ததைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டது.
அமெரிக்க
ஆதரவைக் கொண்ட ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்தை அதிர்ச்சிக்கு
உட்படுத்தியுள்ள வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது வாரமாக கெய்ரோவில் நுழைகையில்,
இதேபோன்ற
ஆர்ப்பாட்டங்கள் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்சாந்திரியாவிலும் பல சிறு
நகரங்களிலும்,
பெருநகரங்களிலும்
நாடு முழுவதும் ஏற்பட்டன.
இன்னும்
குறிப்பிடத்தக்க வகையில்,
வெகுஜன எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்கள் முபாரக் அகல வேண்டும் என்று கோருபவற்றில் எகிப்திய தொழிலாளர்கள்
மற்றும் வேலைகளைக் கோரும் சீற்றம் மிகுந்த இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களும் அலையெனப்
பெருகும் வேலைநிறுத்தங்கள் மூலம் இணைந்து கொண்டன.
செவ்வாயன்று
சர்வதேச நிதியச் சந்தைகள் சூயஸில் பெருகும் வேலைநிறுத்த அலைகள் பற்றிய தகவல்களால்
அதிர்ச்சி அடைந்தன.
இதில் சூயல்
கால்வாய் அதிகாரத்தின் கீழுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும் அடங்கும்.
இவர்கள் தான் நாள்
ஒன்றிற்கு இரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை நீர்வழியாக அனுப்பப்படுவதற்குப்
பொறுப்பானவர்கள் ஆவர்.
சூயஸ்
கால்வாய் அதிகாரமானது சூயஸ்,
போர்ட் சையத்
மற்றும் இஸ்மைலியா ஆகிய இடங்களில் நிறுவியுள்ள ஐந்து நிறுவனங்களிலுள்ள
6,000 தொழிலாளர்கள்
செவ்வாயன்று ஒரு கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
தொழிலாளர்கள்
நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வெளியே அமரும் போராட்டம் ஒன்றை தங்கள் கோரிக்கைகளான
அதிக ஊதியங்கள்,
மட்டமான சுகாதார
மற்றும் தொழில் பணிநிலைகள் சீரடைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை
தொடரவிருப்பதாக உறுதிபூண்டுள்ளனர்.
இதேபோல் அவர்கள்
நேரடியாக அதிகாரத்தால் நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும்
ஊதியத்திற்கு இணையான ஊதியங்களும் அளிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
கால்வாய்
அதிகாரத்தின் மூத்த அதிகாரிகள் வேலைநிறுத்த நடவடிக்கை கால்வாயில் இன்னமும்
செயற்பாடுகளைப் பாதிக்கவில்லை என்றும்
46 கப்பல்கள்
கால்வாயை செவ்வாயன்று கடந்தன என்றும் கூறினர்.
மற்றும் ஒரு
1,300 தொழிலாளர்கள்
சூயஸிலுள்ள எஃகு உற்பத்தி ஆலை ஒன்றில் அதிக ஊதியங்களைக் கோரி வேலைநிறுத்தம்
செய்துள்ளனர்.
டெலிகாம்
எகிப்து நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
அரசிற்குச் சொந்தமான
நிலவழித் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கெய்ரோ மற்றும் சூயஸ் இன்னும்
எகிப்தில் பிற இடங்களில் வேலையை வெளிநடப்புச் செய்தனர்.
தஹ்ரிர் சதுக்க
ஆர்ப்பாட்டக்காரர்களின் போர் முழக்கமான
“நாங்கள்
வெளியேறமாட்டோம்”
என்பதை
இத்தொழிலாளர்களும் கோஷமிட்டனர்.
அதைத்தவிர
“நிறுவனத்தின்
இலாபங்கள் எங்கே?”,
“எங்கள் பணத்தைக்
கொடுங்கள்”
என்று எழுதப்பட்ட
பதாகைகளையும் தாங்கிச் சென்றனர்.
மூன்று
நாட்கள் ஆலையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஜவுளித் தொழிலாளர்கள்,
வேலைகளைத் தேடிய
2,000
இளந்தொழிலாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துடன் சேர்ந்து கொண்டனர் என்ற தகவலை அல்-அஹ்ரம்
ஆன்லைன் என்னும் எகிப்தின் மிகப் பெரிய ஆங்கில இணையத்தள நாளேடு கொடுத்துள்ளது.
உள்ளூர் நகரசபை
உறுப்பினர்கள் பெருகும் அமைதியின்மையைத் தடுக்கும் பெருந்திகைப்பான முயற்சியில்
எதிர்ப்பாளர்களை சந்திக்க முற்பட்டனர்.
நைல் டெல்டா
ஜவுளி ஆலை சிறு நகரான மஹல்லாவில்
1,500க்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள்
Abu El-Subaa
நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்,
தங்கள் கோரிக்கையான
ஊதிய அதிகரிப்பிற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு முக்கிய சாலையை முற்றுகையிட்டனர்.
தொழிலாளர்கள் பல
முறை எதிர்ப்புக்களையும் உள்ளிருப்புப் போராட்டங்களையும்
2008ல் நகரத்தை அதிர
வைத்த பெரும் வேலைநிறுத்தங்களுக்குப் பின் இப்பொழுது நடத்தியுள்ளனர்.
வடக்கேயுள்ள
அஸ்வான் நகரத்தில் கிட்டத்தட்ட
5,000 இளம்
வேலையின்மையில் உள்ளவர்கள் அஸ்வான் கவர்னர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டங்களை
நடத்தினர்.
கட்டிடத்தைத்
தாக்கவும் முயன்றனர்.
எதிர்ப்பாளர்கள்
வேலை வேண்டும் என்று கோரி அஸ்வான் கவர்னர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும்
வலியுறுத்தினர்.
கெய்ரோவில்
கிட்டத்தட்ட
1,500 தெருத்
துப்பரவுத் தொழிலாளர்கள் அவர்களுக்கு வேலைகொடுத்துள்ள பொது அதிகாரத்தின்
அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாத ஊதியமான
1,200 எகிப்திய
பவுண்டுகள் கூட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இது கிட்டத்தட்ட
200 டொலருக்கு
ஒப்பாகும்.
அதைத்தவிர நிரந்தரப்
பணி ஒப்பந்தங்களையும்,
அதிகாரத்தின் தலைவர்
அகற்றப்பட வேண்டும் என்றும் கோரினர்.
மேலும்
கெய்ரோவிலேயே நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் எகிப்தின் இரு அரசிற்குச் சொந்தமான
நாளேடுகளான
Al-Ahram, Rose Al-Youssef
ஆகியவற்றின்
முன் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அல்-அஹ்ரம்
தொழிலாளர்கள் நாளேட்டின் தலைவர் அப்தெல் மொனிம் சயீட் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்
ஒசாமா சரயா ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்,
இருவரும்தான்
எகிப்தின் மிகப் பழைய செய்தித்தாள் ஊழல் மலிந்துவிட்டதற்குக் காரணம் என்று கூறினர்.
இதேபோல்,
ரோஸ் அலி யூசுப்பின்
செய்தியாளர்கள் அதன் தலைவர் கரம் காபர் மற்றும் தலைமை ஆசிரியர் அப்தல்லா கமால்
ஆகியோர் இராஜிநாமா செய்யவேண்டும்,
அவர்கள் தவறாக
நிர்வாகம் செய்கின்றனர்,
தொழில் நேர்த்தியில்
சரிவு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.
தொழிலாளர்கள்
திறமைப்படியோ,
மூப்புரிமைப்படியோ
ஊதியம் அளிக்கப்படுவதில்லை,
உயர்மட்ட
நிர்வாகத்திடம் கொண்டுள்ள விசுவாசத்திற்கு ஏற்றவாறு ஊதியம் அளிக்கப்படுகின்றனர்
என்றும் குற்றம் சாட்டினர்.
செய்தித்தாள்கள் கௌரவமான செய்தியாளர்கள் அடங்கிய குழுக்களின் பொறுப்பின் கீழ்
வரவேண்டும் என்று செய்தியாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
தங்கள்
தொழிற்சங்கத்தையும் அவர்கள் கண்டித்தனர்.
அதன் அதிகாரிகள்
முழு ஊதியம் பெறுகின்றனர்,
சலுகைகளைப்
பெறுகின்றனர்,
இவை தொழிலாளர்களின்
கோரிக்கைகளை அடக்குவதற்குப் பரிசாக வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும்
முன்வைத்தனர்.
வேலைநிறுத்தங்கள்,
தொழிலாள வர்க்க
எதிர்ப்புக்களின் வெடிப்புக்கள் ஆகியவை எகிப்திய புரட்சியின் ஆழ்ந்த சமூக வேர்களைக்
காட்டுகின்றன.
வேலைகள்,
கௌரவமான வாழ்க்கைத்
தரங்கள் மற்றும் சமூக உரிமைகளுக்கான கோரிக்கைகள் முபாரக் அகற்றப்படுவதின் மூலமோ,
உயர்மட்டத்திலுள்ள
அதிகாரிகள் மாற்றப்படுவதின் மூலமோ தீர்க்கப்பட முடியாது.
இவை சமூக உறவுகளின்
ஒரு ஒருங்கிணைப்பின் மூலம் தான் பெறமுடியும்.
அது நாட்டின்
உற்பத்திச் சக்திகளை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
ஏகாதிபத்திய
ஆதிக்கத்தை அகற்றி,
முபாரக் மற்றும்
அவருடைய எடுபிடிகளால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்
இழப்பில் சேமித்துள்ள பல பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்வதன்
மூலம் தான் சாதிக்கப்பட முடியும்.
எகிப்தில்
பணவீக்க விகிதம் கடந்த மாதம்
13.6 ஆக உயர்ந்தது.
இது எகிப்திய
தொழிலாளர்களின் உண்மை ஊதியங்களின் மதிப்பைப் பெரிதும் அரித்துள்ளது.
மேலும்
உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம்
9 சதவிகிதம் என்று
குறிப்பிடப்படுகையில்,
உண்மையில் இவற்றில்
பாதிக்கும் மேலானவர்கள்,
விவசாயத்துறைக்கு
வெளியே பட்டியலிடப்பட்டுள்ளவர்கள்
“முறைசாராப் பிரிவு”
என்று அழைக்கப்படும்
பிரிவில் பெரும் சிரமத்துடன் வாழ்கின்றனர்.
முறையான வேலை ஏதும்
இல்லை.
இளைஞர்கள் இத்தகைய வேலையற்ற
நிலையில் 90
சதவிகிதத்திற்கும்
மேலாக உள்ளனர்.
மேலும் சமீபத்திய
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை ஒன்று தெளிவாக்கியுள்ளது போல் பேர்சிய வளைகுடா
நாடுகளில் வேலை பெற்றுள்ளவர்கள் அங்குள்ள பொருளாதார நெருக்கடியினால் வேலையை விட்டு
நீக்கப்பட்டுள்ளனர்,
தாய்நாட்டிற்கு
வேலையின்றித் திரும்புகின்றனர் என்று கூறியுள்ளது.
இந்த
நிபந்தனைகள் எகிப்தியத் தொழிலாளர்களை எழுச்சியில் ஈடுபட உந்துதல் கொடுப்பவை ஆகும்.
அவர்கள்
முபாரக்கிற்கு எதிராக வெகுஜன இயக்கத்தால் தைரியமுற்றுள்ளனர்.
அதேபோல் அமெரிக்க
ஆதரவுடைய ஆட்சியின் நெருக்கடியினாலும் தைரியம் அடைந்துள்ளனர்.
செவ்வாயன்று
தஹ்ரிர் சதுக்கத்தில் நடந்த பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் முபாரக் ஆட்சி மற்றும்
வாஷிங்டனிலுள்ள ஒபாமா நிர்வாகம் எகிப்தியயெழுச்சியை அடக்கி இராணுவக்
கட்டுப்பாட்டிற்குள் உள்ள சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளை மக்கள்
நிராகரிப்பதின் பிரதிபலிப்பாகும்.
இந்தப்
பெரும் நிகழ்விற்கு பங்களிப்பு கொடுப்பது எகிப்தின் மிகச் செல்வாக்கு பெற்ற மாலை
உரையாடல் நிகழ்வில்
Wael Chonim என்னும்
கூகிளின் மத்திய கிழக்கு இளம் விற்பனை நிர்வாகி அளித்த பேட்டியாகும்.
இவர் இரகசியப்
போலிசின் சீருடை அணியாத பிரிவினால் கடத்திச் செல்லப்பட்டு திங்களன்று
விடுவிக்கப்பட்டார்.
ஆட்சியின் சிறைப்
பகுதிக்குள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கோனிம்
12 நாட்களுக்குக்
கண்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதாகவும்,
அவருடைய மனைவி
மற்றும் பெற்றோர்களுக்கு அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை என்றும்
கூறினார்.
ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்த பட்சம்
300 பேர்
கொல்லப்பட்டனர் என்ற மதிப்பீடுகளைத் தொலைக்காட்சி அவரிடம் கூறியபோது,
அவர் கண்ணீர்விட்டு
அழுது தன் இரங்கல் செய்திகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இப்பேட்டி
ஐயத்திற்கு இடமின்றி ஆட்சியின் மிருகத்தனம்,
படுகொலைகள்,
காவலில் வைத்தல்,
வாடிக்கையாகிவிட்ட
சித்திரவதைகள் என்று பல தசாப்தங்களாக நடைபெறுபவற்றில் சீற்றமுற்றுள்ள எகிப்தியரின்
உணர்வைகளைப் பாதித்துள்ளது.
மக்களுடைய
எழுச்சிகளுக்கு விடையிறுப்பு தேவை என்பதையும் தீவிரமாக்கியுள்ளது.
பேஸ்புக்,
You Tube
செயற்பாடுகள் போன்றவற்றை அமைத்து ஆரம்பித்த எதிர்ப்புக்களுக்கு ஊக்கமளித்த கோனிம்
போன்ற ஒருவருக்கு இப்படி நிகழும் என்றால்,
இரகசியப் பொலிசார்
மற்றவர்களுக்கும் இதையும் இதைவிட மோசமானவற்றை செய்யமுடியும் என்ற உணர்வுதான்
மேலோங்கியுள்ளது.
தஹ்ரிர்
சதுக்கத்திலிருந்து வந்துள்ள தகவல்கள் செவ்வாய் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களில்
முன்பு எதிர்ப்புக்களில் சேராத புதிய தட்டுக்கள் பங்கு பெற்றுள்ளதைக் காட்டுகின்றன.
இவற்றுள் தற்பொழுது
பணியில் இல்லாத இராணுவத்தினர்கள்,
கெய்ரோ பல்கலைக்கழக
ஊழியர்கள்,
ஏராளமான பெண்கள்,
சிறார்கள் மற்றும்
பிற பகுதிகளில் இருந்து கெய்ரோவிற்கு வந்தவர்கள் ஆகியோர் அடங்குவர்.
தேசிய
தொலைக்காட்சியில் முன்னாள் உளவுத்துறைத் தலைவர்,
முபாரக்கால் தன்
துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஒமர் சுலைமான் அறிவித்த பூச்சு நடவடிக்கைகள்
எகிப்திய மக்களைப் பற்றியுள்ள புரட்சிகர ஆர்வத்தை தணிக்க ஏதும் செய்யாது.
முபாரக்
எடுத்த முடிவுகளின் அனைத்துக் கட்டங்களையும் குறிப்பிட்ட சுலைமான் மூன்று குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளது பற்றி அறிவித்தார்.
நாட்டின் சர்வாதிகார
அரசியலமைப்பிற்கு தேவையான திருத்தங்களை ஒன்று ஆராயும்.
இரண்டாவது
“தேசிய சமரசம்”
பற்றிய
கருத்துக்களைத் தொடரும்.
மூன்றாவது சீருடைய
அணியாத பொலிஸ் மற்றும் ஆளும் கட்சியின் குண்டர்கள் கட்டவிழ்த்துவிட்டு முறையாக
வழிநடத்திய வன்முறை பற்றிய
“உண்மைகளை ஆராயும்”
இவை
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை காயப்படுத்தின.
இந்த
நடவடிக்கைகள்
“சமாதானமான முறையில்
முறையாக அதிகார மாற்றத்தை அடைவதற்கு காலக்கெடுவை”
தோற்றுவிக்கும்
என்று சுலைமான் கூறினார்.
ஆனால் யார்
இக்குழுக்களில் இருப்பார்கள்,
அவர்கள் எப்படித்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் எக்குறிப்பையும் காட்டவில்லை.
ஆட்சிதான் அவர்களைத்
தேர்ந்தெடுக்கும் என்பது தெளிவாகிறது.
எதிர்கட்சிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிக் குழுக்கள்,
ஆட்சியுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்த ஒப்புக்கொண்டவை,
முபாரக் விலக
வேண்டும் என்று கோரும் மக்களின் ஆதரவைப் பெறவில்லை.
இவற்றுள்
முக்கியமானவை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பாகும்.
இது இந்த வழிவகையில்
இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது.
முன்பு முபாரக்
சர்வாதிகாரம் மற்றும் வாஷிங்டனால் அரக்கத்தனமாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியவாதக்
கட்சி இப்பொழுது முதலாளித்துவ ஒழுங்கிற்கு நம்பகமான காப்பாளர் என்று
வெளிப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ந்த
மக்கள் எதிர்ப்பை அடுத்து,
முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தான் முபாரக்கிற்கு இன்னும் ஒருவார அவகாசம்
இராஜிநாமா செய்வதற்குக் கொடுப்பதாகவும் அதன் பின் சுலைமானுடனான பேச்சுக்களில் பங்கு
பெறுவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.
செவ்வாயன்று
சுலைமானுக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையேயுள்ள உடன்பாடு பற்றியத் துல்லியமான
சுருக்கத்தை
நியூயோர்க் டைம்ஸ்
தெளிவாகக் கொடுத்தது.
“எகிப்தின் துணை
ஜனாதிபதி ஒமர் சுலைமான்
30 ஆண்டுக் கால
நெருக்கடியை அகற்ற இன்னும் நேரம் வரவில்லை என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.
இதையொட்டித்தான்
மக்கள் அடக்குமுறைக்குட்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில்
அடைக்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி ஹொஸ்னி
முபாரக் செப்டம்பர் மாத இறுதியில் அவருடைய பதவிக்காலம் முடியும் வரையில் இராஜிநாமா
செய்யவேண்டிய தேவையில்லை என்றும் இவர் நினைக்கிறார்.
மேலும் நாடு இன்னும்
ஜனநாயகத்திற்குத் தயாராக இல்லை என்றும் நினைக்கிறார்.
ஆனால் வேறு
விருப்புரிமை இல்லாத நிலையில்,
அமெரிக்கா அவரை
எகிப்தில் உறுதியற்ற மாற்று வழிவகைக்கான பேச்சுக்களை நடத்த ஊக்கம் அளித்துள்ளது.”
செய்தித்தாள்களை வெளியிடுபவர்களுடன் செவ்வாயன்று நடத்திய பேச்சுக்களில்,
சுலைமான்
“ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி வராது”
என்றும் வெகுஜன
எதிர்ப்புக்களை “இனியும்
பொறுத்திருக்காது”
என்றும் கூறினார்.
தொழில்நேர்த்தியுடைய
சித்திரவதைக்காரர்
“எகிப்திய
சமூகத்தைப் பொலிஸ் கருவிகளின் மூலம் அடக்க விரும்பவில்லை”
என்று இருண்ட
முறையில் கூறினார்.
சுலைமான்
எகிப்து ஜனநாயகத்திற்குத் தகுதி அற்றது என்று கூறியதை வெள்ளை மாளிகை
“ஏற்கத்தயாரில்லை”
என்று குறிப்பிட்டது.
ஆனால் முன்னாள்
உளவுத்துறைத் தலைவரின் நடவடிக்கைகளைத் தான் ஏன் எதிர்க்கவில்லை அல்லது ஆட்சிக்கு
எதிரான புரட்சிகர
சவாலை அவர் நசுக்க
முற்பட்டால் அவருக்கு ஆதரவு நிறுத்தப்படும் என்று ஏன் கூறவில்லை என்பது பற்றி அது
குறிப்புக் காட்டவில்லை.
அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் செவ்வாயன்று எகிப்திய
இராணுவத்திற்குக் கொடுக்கும் வாஷிங்டனின் ஆதரவை வலியுறுத்தினார். அதுதான் முபாரக்
ஆட்சிக்குப் பின் உண்மையான சக்தியாக உள்ளது. இது “மிகச் சிறந்த முறையில்”
நடந்துவருகிறது என்றார். இது குண்டர்கள் படை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது
கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு முற்றிலும் உடந்தையாக இராணுவம் இருந்தது
என்பதற்கான போதிய சான்றுகள் உள்ளன என்றாலும், கொள்ளப்பட்டுள்ள நிலைப்பாடு ஆகும்.
“நாம் எகிப்தில் காணும் ஜனநாயகத்திற்கான வளர்ச்சிக்கு இராணுவத்தினர் நல்ல
பங்களிப்புக்களைக் கொடுத்துள்ளனர்” என்றார் அவர்.
“ஜனநாயகம்”
பற்றிய இத்தகைய
பாசாங்குத்தன வனப்புரையின் பின்புலத்தில் ஒபாமா நிர்வாகம் எகிப்திய இராணுவத்தின்
ஆட்சியைத் தக்க வைக்க முயல்கிறது.
அதற்கு ஆண்டு
ஒன்றிற்கு 1.3
பில்லியன் டொலர்
உதவி நிதியாக அளிக்கப்படுகிறது.
அப்பகுதியில்
அமெரிக்க நலன்களைத் தக்க வைப்பதற்காக,
இறுதியில் எகிப்தில்
குருதிப்பாதைக்கு ஆதரவுக்கூட இது தரத்தயார்.
எகிப்திய
நெருக்கடி பெருகிய முறையில் புரட்சி மற்றும் எதிர்புரட்சி-நடவடிக்கை
ஆகியவற்றிற்கு இடையேயான கத்திமுனையில் நிற்கிறது.
தொழிலாள வர்க்கத்தை
ஒரு சர்வதேசிய,
சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர புதிய தலைமையாகக் கட்டமைப்பது முக்கியமான
தேவையாகும்.
தஹ்ரிர்
சதுக்கத்தில் இன்னும் நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும்,
சமூக
சமத்துவத்திற்காகவும் வேலைகளுக்காகவும்,
வேலைநிறுத்தம்,
ஆர்ப்பாட்டம்
நடத்திக் கொண்டிருப்பவர்களுடைய கோரிக்கைகள் தொழிலாள வர்க்க அரசாங்கம் மற்றும்
சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் மூலம்தான் அடையப்பட முடியும். |