சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian protesters face mounting violence and repression               

எகிப்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருகிய வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்கொள்கின்றனர்

By Patrick Martin
8 February 2011

Use this version to print | Send feedback

கெய்ரோவின் மத்திய தஹ்ரிர் சதுக்கத்தில் திங்கள் இரவும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் முபாராக் சர்வாதிகாரத்தின் இரகசிய பொலிசார் அலையென கைதுசெய்வதையும் மீறி முகாமிட்டுள்ளனர்.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தை சூழ்ந்திருந்த இராணுவ டாங்குகள் நகரும் பாதையில் அவைகள் நகர்ந்து செல்லுவதைத் தடுக்கும் வகையில் கீழே படுத்தனர். ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தை ஒட்டியுள்ள அரசாங்க அலுவலகங்களை கொண்ட மொகம்மா வளாகத்தை முற்றுகையிட்டு அவற்றை அதிகாரிகள் மீண்டும் திறப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அழுத்தத்தை முபாரக் தீவிரப்படுத்தும் வகையில் சதுக்கத்தில் சிறிய பகுதிகளுக்குள் அவர்களைத் தள்ளும் முயற்சியில் எகிப்திய இராணுவம் ஈடுபட்டது. அதே நேரத்தில் தற்காலிகமாக உணவுப் பொருட்கள் வருவதையும் தடுத்தது.

Qusr Al Nil பாலத்திற்கு அருகேயுள்ள தெருவில் ஒரு உள்ளிருப்பு எதிர்ப்பு நடத்தப்பட்ட பின்னர்தான் இந்த முற்றுகை கைவிடப்பட்டது. அதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவைக் கொண்டுவந்த டஜன் கணக்கான ஆதரவாளர்கள் உணவுப் பொட்டலங்களை அசைத்து காட்டினர். அந்தச் சம்பவம் பற்றி வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுவதாவது: “இந்த இரண்டாவது கட்ட எதிர்ப்பில்  இருந்த கூட்டம் பல நூறு பெருகிய அளவில் சீற்றம் அடைந்து, கோஷம் இடுவதாக மாறியது. இதேபோன்ற காட்சிகள் சதுக்கத்திற்குள் நுழையும் மற்ற இடங்களிலும் நடத்தப்பட்டன. இது அமைதியின்மையை நகரத்திற்குள் ஏற்படுத்திவிடும் அபாயத்தைக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், எந்த விளக்கமும் தராமல், இராணுவம் விட்டுக் கொடுத்ததையடுத்து உணவுப் பொருட்கள் உள்ளே சென்றன.”

அமைதியான அரசியல் இடைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சுவார்த்தை வழிவகை நடைபெறுகிறது என்னும் ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, அனைத்து அடையாளங்களும் முபாரக் சர்வாதிகாரம் பேச்சுக்களை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி தஹ்ரிர் சதுக்கத்தில் இராணுவத் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துவதைத்தான் காட்டுகின்றன.

இந்த வாரம் பின்னர் திட்டமிடப்பட்டுள்ள இன்னும் அதிக வெகுஜன எதிர்ப்புக்களை எதிர்நோக்கி அழுத்தங்கள் உயர்ந்து வருகின்றன. இராணுவம் தன் கட்டமைப்பைக் காட்டக்கூடியமாதிரி தெளிவாகத் தெரிகிறது. டாங்குகள் தங்கள் துப்பாக்கி முனைகளை எதிர்ப்பாளர்களின் முகாம் களத்தை நோக்கி வைத்துள்ளன. பக்கத் தெருக்களில் முள்வேலிகள் மற்றும் மண் அடைப்பு நிறைந்த சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

இராணுவப் பிரிவுகள் தஹ்ரிர் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் தங்கள் நிலைநிறுத்தலை அதிகரித்துள்ளன, டாங்குகள் ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று கார்டியன் கூறியுள்ளது. “இராணுவ அதிகாரிகள் படிப்படியாக தடைகளைச் சுமத்தியுள்ளனர்கூடுதலான சோதனைச் சாவடிகளை அமைத்தல், கூர்முனை வேலிகளுக்கு கூடுதல் தளவாடங்கள், தொலைக்காட்சி புகைப்படக்கருவிகளுக்கு வரம்பு என்ற வகையில்ஆர்ப்பாட்டக்காரர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.”

இராணுவ ஆட்சி அடக்குமுறையின் காட்டுமிராண்டித்தனம் பற்றிய புதிய சான்றுகளும் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. திங்களன்று, 300 பேர் இருவார அரசாங்க எதிர்ப்புக்களின் போது கொல்லப்பட்டனர் என்று ஆவணப்படுத்திய அறிக்கை ஒன்று மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கெய்ரோ, அலெக்சாந்திரியா, சூயஸ் ஆகிய பகுதிகளிலுள்ள 7 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள், பிரேதக் கிடங்குத் தொழிலாளர்களை பேட்டி கண்டவைகளிலிருந்து திரட்டப்பட்டவை ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் ஆவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் கெய்ரோவில் முதல் வாரம் நடந்த எதிர்ப்புக்களின் போது இறந்தவர்கள். இந்த எண்ணிக்கை ஜனவரி 25 ல் இருந்து ஜனவரி 30 முடியும்வரை 217 பேர் என்றும் பெப்ருவரி 2-3 திகதிகளில் 15 பேர் என்றும், இதற்குக் காரணம் ஆட்சிச் சார்பு குண்டர்கள் தஹ்ரிர் சதுக்கத்திலிருந்த கூட்டத்தை தாக்கியது ஆகும். அலெக்சாந்திரியாவில் 52 இறப்புக்களும் தொழில்துறை நகரான சூயசில் 143 பேராகவும் இருந்தன.

உண்மையான இறப்பு எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் நாடெங்கிலும் எதிர்ப்புக்கள் நடைபெற்றன, மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (HRW) அறிக்கை மூன்று நகரங்களைப் பற்றி மட்டுமே கூறுகிறது. .நா. மனித உரிமைகள் குழு அதிகாரி ஒருவர் எதிர்ப்புக்களின் முதல் வாரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பர் என்று மதிப்பிட்டுள்ளார். எகிப்தின் சுகாதார அமைச்சரகமே குறைந்தபட்சம் 5,000 மக்கள் பெப்ருவரி 4 வெள்ளியன்று காயமுற்றனர் என்று அறிவித்துள்ளது.

அல்ஜசீரா தொலைக்காட்சி இணையம் பொலிஸ் மற்றும் ஆட்சிச் சார்பு உடைய குண்டர்கள் கடந்த வாரம் பெப்ருவரி 2-3 திகதிகளில் மத்திய கெய்ரோவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் வீடியோக் காட்சிகள் சிலவற்றை, எப்படி மிருகத்தனமான வன்முறை நிகழ்ந்தது எனக் காட்டுபவற்றைப் பெற்று ஒளிபரப்பியது.

எகிப்திய மனித உரிமைகளுக்கான அமைப்பு குறைந்தபட்சம் 1,275 பேர் எதிர்ப்புக்கள் துவங்கியதில் இருந்து பொலிசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. பலரும் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சிலர் தாக்கப்பட்ட பின்னரும் மற்றும் சிலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் என்ன ஆயிற்று என்று மறைந்தவர்கள் அல்லதுகாணாமல்போனவர்கள் பற்றிய பட்டியல் பெருகி வருகிறது.

வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இது தஹ்ரிர் சதுக்கத்தில் முகாமிட்டுள்ள மிகப் போராளித்தன மாணவர்கள், தொழிலாளர்கள் இன்னும் பிற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவரும் குருதி கொட்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பற்றிய சாட்சியங்களைக் குறைக்கும் நோக்கத்தை உடையது. இரு அல்ஜசீரா நிருபர்கள் ஞாயிறன்று காவலில் வைக்கப்பட்டனர். இதில் கெய்ரோப் பிரிவின் அல்ஜசீரா ஆங்கில மொழிப் பிரிவுத் தலைவர் அய்மன் மொஹ்யெல்டின் என்னும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரும் அடங்குவார். ஞாயிறு இரவில் மொஹ்யெல்டின் விடுவிக்கப்பட்டார். மற்றய சிறைபிடிக்கப்பட்டவர்கள் படையினரால் தாக்கப்படும் ஒலியைத் தான் கேட்டதை அவர் விவரித்தார்.

எகிப்தியச் செய்தியாளர்களும் சுற்றிவளைத்துப் பிடிக்கப்படுகின்றனர். ஆனால் அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஏனெனில் பெரும்பாலானவர்கள் இன்னும் காவலில் உள்ளனர். தங்கள் கதையைக் கூறமுடியவில்லை. மனித உரிமைகள் குழுக்கள் மீதான சோதனைத் தாக்குதல்களும் தொடர்கின்றன.

எதிர்ப்பு இயக்கத்திற்கு பரந்த மக்கள் பரிவுணர்வு எகிப்தியச் செய்தி ஊடகத்தின் பெரும் சலுகை பெற்றுள்ள தட்டுக்களில் கூட தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. முக்கியச் செய்தி அளிக்கும் அரச தொலைக்காட்சியின் பெண்மணி ஒருவர் திங்களன்று தன் வேலையை விட்டு நீங்கினார். உத்தியோகபூர்வப் பிரச்சாரத்தை தான் தொடர்ந்து வழங்க முடியாது என்று அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்போடு இராணுவச் சர்வாதிகாரம் முதலாளித்துவ எதிர்ப்புப் பிரிவுகளின் அரசியல் தந்திரங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளது. ஞாயிறன்று துணை ஜனாதிபதி உமர் சுலைமான் நீண்ட காலம் சட்டவிரோதமாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட ஒரு குழுவுடன் பேச்சுக்களை நடத்திய சில மணி நேரத்திற்குப் பின் இது அதிகமாயிற்று. இந்த விவாதங்களின் நோக்கம் இன்னும் உறுதியான தாக்குதலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்துவதற்குத் தயாரிப்புக்களை மேற்கொள்வதாகும். அதே நேரத்தில் ஒருஇடைமருவு அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இதுவோ முபாரக் போலவே அமெரிக்க, எகிப்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் முனைப்புடனே உள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முபாரக் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற தன் நீண்ட கால முன்நிபந்தனையைக் கைவிட எடுத்த முடிவு ஆட்சிக்கு முக்கிய சரணடைதல் ஆகும். மேலும் இது ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பரந்துபட்ட குறைகூறலையே விடையிறுப்பாகக் கொண்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் மூன்று உயர்மட்டத் தலைவர்கள் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். இங்கு அவர்கள் தாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட இருப்பது பற்றி நியாயப்படுத்த முயன்றனர். குழுவின் வழிகாட்டுப் பிரிவின் உறுப்பினரான Mohammed Saad Ek-Katatni, “நாங்கள் ஜனாதிபதி பதவியிறங்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் இப்பொழுது இந்த ஏற்பாட்டை ஏற்கிறோம். நிகழ்வுகளைத் துரிதப்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரும் வரை ஜனாதிபதி இருப்பது தான் பாதுகாப்பு. ஏனெனில் அவரிடம்தான் முறையான பாதுகாப்பு அரசியலமைப்பு அதிகாரங்கள் உள்ளன என்றார்.

பாதுகாப்பு என்பது எதைத் துல்லியமாகக் குறிக்கிறது? திட்டவட்டமாக, தஹ்ரிர் சதுக்கத்தில் குருதி வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலை வீரம் செறிந்த வகையில் மீறுவதற்கு தயாராக உள்ளவர்களின் உயிர் பற்றி அல்ல. இது முதலாளித்துவ சொத்துக்களின்பாதுகாப்பு பற்றியதாகும். இதில்தான் எகிப்திய வணிக, பிரபுத்துவ மற்றும் இராணுவ அதிகாரத்துவ உயரடுக்கினரின் பிரதிநிதிகளுடைய அக்கறைகள் அனைத்தும் அடங்கியுள்ளன.

இந்த அறிவிப்பு முதலாளித்துவ எதிர்க்கட்சி குழுக்களின் வர்க்க நிலைப்பாட்டை நன்கு வெளிப்படுத்துகிறது அவை இஸ்லாமியவாதமாக இருந்தாலும், மதச் சார்பற்று இருந்தாலும் சரி. இறுதிப்பகுப்பாய்வில், இராணுவம் மற்றும் முபாரக்கைத்தான் தங்கள் சொத்து நலன்களுக்கு கீழிருந்து வரும் கட்டுப்பாடற்ற புரட்சிகர வெடிப்பிற்கு எதிரான உத்தரவாதம் அளிப்பவர்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.

திங்களன்று ஒரு முறையான காபினெட் கூட்டத்தில், ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பொதுத்துறை ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்விற்கு ஒப்புதல் அளித்தார். அதே போல் ஓய்வூதியங்கள் அதிகரிக்கப்படுவதற்கும் ஒப்புதல் கொடுத்தார். இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புப் பிரிவுகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. அவைதான் ஆட்சிக்கு முக்கிய ஆதரவு கொடுப்பவை. மேலும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பிற்கு ஒரு திருப்தி அளிக்கும் வகையிலும் உள்ளவை.

எகிப்திலுள்ள பெரும் சமூகத் துருவமுனைப்படுத்துதல்தான் புரட்சிகர எழுச்சிக்கான உந்து சக்தியாக இருப்பதை, அதே தினம் எதிர்க்கட்சி செய்தித்தாளான Al-Masr al-Youm னால் கொடுக்கப்பட்டுள்ள முன்னாள் அரசாங்க மந்திரிகள், முபாரக்கின் எடுபிடிகள் அடங்கிய குழுவின் தனிச்சொத்துக்கள் பற்றிய மதிப்பீட்டிலிருந்து அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

அவைகள் பின்வருமாறு:

அஹ்மத் எஜ், ஒரு எஃகு தொழிலதிபர், முன்னாள் ஆளும் கட்சியின் அமைப்புச் செயலாளர்: 3 பில்லியன் டொலர்.

முன்னாள் வீட்டுத்துறை மந்திரி அஹ்மத் அல்-மகரபி: 1.8 பில்லியன் டொலர்

முன்னாள் சுற்றுலாத்துறை மந்திரி ஜுஹைர் காரனா: 2.2 பில்லியன் டொலர்

முன்னாள் வணிக, தொழில்துறை மந்திரி ரஷித் மஹ்மத் ரஷிட்: 2 பில்லியன் டொலர்.

முன்னாள் உள்துறை மந்திரி ஹபிப் அல்-அட்லி: 1.3 பில்லியன் டொலர்.

இந்த ஊழல் நலிந்த அதிகாரிகளின் பெயர்கள் செய்தி ஊடகத்தில் குறிக்கப்பட முடிந்தது. ஏனெனில் முபாரக் ஆட்சி இப்பொழுது அவர்களை மக்கள் கருத்தை சாந்தப்படுத்துவதற்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களுள் மூன்று பேருக்கு நாட்டைவிட்டு நீங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது முறையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

எகிப்திய அல்லது மேற்கத்தைய செய்தி ஊடகத்தால் தெரிவிக்கப்படாத, அவர்களால் பாதுகாக்கப்படும் முபாரக் குடும்பம் மற்றும் எடுபிடிகளால் இன்னும் பெரிய வகையிலான சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் சராசரி எகிப்திய தொழிலாளி ஒருவர் வீட்டிற்கு நாள் ஒன்றிற்கு 10 டொலர் எடுத்துச் செல்லுவதே அபூர்வம் என்று அரசாங்கப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.