World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா China’s property bubble reaches explosive levelsசீனாவின் நிலச் சொத்துக்கள் குமிழி வெடிப்பு மட்டங்களை நெருங்குகின்றன
By John
Chan வானளாவளவில் உயர்ந்துள்ள வீடுகளின் விலைகள் கடந்த வாரம் சீன அரசாங்கத்தை கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட இரு முயற்சிகளை தொடர்ந்து சொத்துக்கள் மீதான ஊகத்தைக் குறைப்பதற்கான ஒரு புதிய சுற்று நடவடிக்கைகளை அறிவிக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தின. சமீபத்திய திட்டத்தில் குவிப்பாக இருப்பது இரண்டாவது வீட்டிற்கு முதலில் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச பணத்தின் அளவானது விலையின் 50 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதம் என்று இருந்ததை அகற்றியுள்ளது ஆகும். உயரும் சொத்து விலைகளை வரம்பிற்கு உட்படுத்த நிர்ணயம் செய்யாத, அதை அடையாத உள்ளூர் அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் வென் ஜியாபோ அச்சுறுத்தியுள்ளார். இதைத் தவிர, ஒரு பரிசோதனை முறையிலான சொத்துவரி ஷாங்காயிலும் சோங்கிங்கிலும் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது வீட்டின் மதிப்பில் ஷாங்காயில் 0.6 சதவிகித வரி கொடுக்க வேண்டும், சோங்கிங்கில் விலையுயர்ந்த வீடுகள் மீது 0.5 சதவிகித வரி சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இரு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டபின், சீன மத்திய வங்கி முதலாவது, இரண்டாவது காலாண்டுக் காலங்களில் இன்னும் கூடுதல் விகிதங்களை பணவீக்கம் மற்றும் வீடுகள் விலையுயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த வார அறிவிப்பு சொத்துக் குமிழி வெடித்தால் இன்னும் அதிக வெடிப்புத் தன்மை உடைய பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்னும் ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள அச்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. China Economic Weekly யில் ஜனவரி 25 அன்று வந்த கட்டுரை ஒன்று பெய்ஜிங்கில் 2010ல் சராசரி வீட்டு நில விலை சதுர மீட்டருக்கு 8,000 யுவான் என்று வந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டுகிறது. மொத்த நிலப்பரப்பு 16.41 பில்லியன் சதுர மீட்டர்கள் என்று இருக்கையில், பெய்ஜிங்கில் நிலத்தின் மதிப்பு 130 டிரில்லியன் யுவான் அல்லது 19.85 டிரில்லியன் டொலர் என்று அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட உயர்வாக 2010ல் இது இருந்தது. இது பெய்ஜிங்கின் நில மதிப்பு “அமெரிக்காவை விலைக்கு வாங்கப் போதுமானதை விட” அதிகமானது என்ற பொருளைத்தரும் என்று கட்டுரை கூறுகிறது. மொத்தத்தில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் கடந்த ஆண்டு நிலத்தின் மதிப்பு 199 டிரில்லியன் யுவான் ($30.3 டிரில்லியன்) என்று இருந்தது. இது உலகின் மிக அதிக வளர்ச்சியுற்ற ஐந்து நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் 2009ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம் ஆகும். ஜப்பான் ஒரு நீடித்த பொருளாதாரத் தேக்க நிலைக் காலத்தை சொத்துக் குமிழிச் சரிவிற்குப் பின்னர், குறிப்பாக நிலச் சொத்து என்று1990 களில் ஏற்பட்டதையடுத்து கொண்டிருப்பதாக China Economic Weekly எச்சரித்துள்ளது. அதிக பட்சமாக, “ஜப்பானியத் தலைநகரம் டோக்கியோவில் மட்டும் நிலத்தின் மொத்தச் சந்தை விலை “அமெரிக்காவை” வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. சீனா இப்போது அதே நெருக்கடியிலுள்ளது. நில அமைச்சரக அறிக்கை ஒன்றின்படி, சீனா முழுவதும் நகர்ப்புற நிலத்தில் விலை கடந்த ஆண்டு நான்காவது காலாண்டுப் பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு 2,882 யுவான் என்று ஆயிற்று. இது 2009ல் இதே காலத்தில் இருந்ததைவிட 10 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த தசாப்தத்தில் வீட்டு நிலங்களின் விலைகள் முக்கிய நகரங்களில் இருமடங்காகிவிட்டன. சமீபத்தில் சீன சமூக விஞ்ஞான உயர்கல்விக்கூடம் 2010ல் விலை அதிகரிப்புக்கள் 2009விடக் குறைந்தவை என்றாலும்கூட, “நகர்ப்புற, கிராமப்புற மக்களின் வருமான வளர்ச்சியைவிட இன்னும் அதிகமாகத்தான் இருந்தது. சீனக் குடும்பங்களில் 85 சதவிகிதம் பேர் வீடு வாங்க இயலாத நிலையில்தான் உள்ளனர்” என்று தகவல் கொடுத்துள்ளது. முதலாளித்துவ சந்தையின் அப்பட்டமான அறிவுபூர்வமற்றநிலை நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஒரு வீடு வாங்கமுடியாத நிலையில் இருக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட ஏராளமான அடுக்கு மாடி வீடுகள் “பேய் நகரங்கள்” எனப்படுபவைகள் காலியாக உள்ளதாக இருக்கிறது. அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் முதலீட்டாளர்கள் அவற்றை விற்காமல், அதிக விலைக்கு விற்பதற்குக் காத்திருக்கும் முறையில் இருப்பில் வெறுமையாக வைத்துள்ளனர். சீனாவின் “பேய் நகரங்களின்” அளவு சீனாவின் தேசிய மின்சார அதிகார அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரம் ஒன்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. 660 நகரங்களில் கிட்டத்தட்ட 65.4 மில்லியன் வீடுகள் தொடர்ந்து 6 மாத காலமாக மின்சார வசதியைப் பயன்படுத்தாதவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத ஒவ்வொரு வீடும் ஊகக்காரருக்குச் சொந்தம் என்று இல்லாவிடினும், இப்புள்ளிவிபரம் பொருளாதார வல்லுனர்களால் காலி அடுக்கு மனைகள் 200 மில்லியன் மக்கள் வசிக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்ட உபயோகிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான குறைவூதிய, கிராமப்புற குடியேறும் தொழிலாளர்கள், இச்சொத்துக்களைக் கட்டுவதற்கு உழைப்புச் சக்தியை கொடுப்பவர்கள், தற்காலிகமான சேரிகளிலும், முகாம்களிலும் வாழ்கின்றனர். விண்ணுயர நிற்கும் சொத்து விலைகள் பொருளாதாரத்தின் மற்றய துறைகளில், குறிப்பாக உற்பத்தித் துறையில், குறைந்த இலாபத்தின் ஒரு விளைவு ஆகும். இது ஏற்கனவே சீனாவின் இரு பெரிய ஏற்றுமதிச் சந்தைகளிலுள்ள கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஐரோப்பிய அரசாங்கக் கடன்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோர் தேவைச் சரிவும் காரணம் ஆகும். சொத்து வளர்ச்சியுடன் தொடர்பு இல்லாத வணிகங்கள்கூட, தொழில்துறை மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் போன்றவை, நிலச் சொத்து ஊகத்தில் அதிக அளவு தொடர்பு கொண்டுள்ளன. சொத்துச் சந்தை கிட்டத்தட்ட 30 சதவிகிதம் ஆதாயத்தை தருகிறது. ஆனால் உற்பத்திப் பிரிவு அதிகாமாகப் போனால் 5 சதவிகிதம் இலாபம்தான் கொடுக்கும். பெய்ஜிங்கின் CBD பகுதியில் மிக விலையுயர்ந்த விலையுடைய நிலம் China Weapon Equipment Corp. என்பதால் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது. இத்தகைய ஊகச் செயல்களுக்கு அரசாங்கம் நேரடியாக எரியூட்டியது. 2008 உலகளாவிய நிதியச் சரிவிற்குப்பின், பெய்ஜிங் அரச வங்கிகள் பொருளாதாரத்தை இலகுவான கடன் என்பதை வெள்ளமென அளிக்குமாறு உத்தரவிட்டது. இது உயரும் வேலையின்மை சமாளிக்கும் முயற்சியாகக் காணப்பட்டது. 2010ல் வங்கிகள் கொடுத்த கடன் 1.12 டிரில்லியன் டொலர் ஆகும். இது 2009ல் சாதனையளவான 1.4 டிரில்லியன் டொலரை விடச் சற்றே குறைவானதுதான். வங்கிகள் கொடுத்த கடன்களில் கால் பகுதிக்கும் மேலானவை நேரடியாக நிலச் சொத்து வளர்ச்சிப் பிரிவைச் சென்று அடைந்தன. சொத்துக்குமிழி நிலைமை டாலருக்கு எதிராக சீன யுவானின் மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று பெருகியுள்ள அமெரிக்க அழுத்தத்தினால் அதிகரித்துள்ளது. இது ஊக வணிகர்களை யுவான் ஆதிக்கம் கொண்ட சொத்துக்களை வாங்க ஊக்கம் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதம் என்று அமெரிக்காவில் உள்ளதும் சீனாவிற்கு ஊக நிதிகள் வருவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளன. இங்கு வட்டிவிகிதங்கள் இன்னும் அதிகமாகும். இக்காரணிகள் அனைத்தும் அமெரிக்க கூட்டாட்சி கருவூல அமைப்பின் “சுற்றில் விடப்படும் பணத்தின் அளவை அதிகரித்தல்” என்னும் கொள்கையானது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கி முறைக்குள் செலுத்தி டாலரின் மதிப்பைக் குறைத்தது. வெளிநாட்டு நாணய நிதி இருப்பாக 2.85 டிரில்லியன் டொலரைக் கொண்டுள்ள SAFE எனப்படும் State Administration of Foreign Exchange இன் இயக்குனர் ஒருவரான லியு வீய் சீனாவிற்குள் நுழையும் ''அதிக இலாபத்தை ஈட்டும் வெளிநாட்டு முதலீடுகள்'' (“hot money”) பற்றிய கவலைகளைக் குறைக்கும் வகையில் முயன்றுள்ளார். இம்மாதம் முன்னதாக “எந்த ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது பெரிய அளவில் hot money உள்நோக்கிய பாய்ச்சல் வரத்தைப் பெற்றுள்ளதை நாம் காணவில்லை” என்று அவர் அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் “சுற்றில் விடப்படும் பணத்தின் அளவை அதிகரித்தல்” என்பதைக் குறைகூறும் வகையில், “இது பணவீக்கம் மற்றும் சொத்துக்குமிழி அழுத்தங்களை உலகப் பொருளாதாரத்தில் கொண்டுவரக்கூடும், உலக மீட்பிற்கு இன்னும் புதிய உறுதியற்ற தன்மைகளைச் சேர்க்கக்கூடும்” என்றார். சீனாவின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் 2010ன் கடைசிக் காலாண்டில் மட்டும் 200 பில்லியன் டொலர் அதிகமாயின. அவற்றில் அதிக அளவு ஊக வகை மூலதனமாக இருக்கலாம் என்பதை இது குறிக்கிறது. சீன ஆட்சியானது சொத்து விலைகளைக் குறைக்க முற்படுகையில், இது அத்துறையில் சரிவைத் தூண்டுவதை ஏற்படுத்தும் செயலையும் செய்ய முடியாது. சீனாவின் சில்லறை விற்பனை வளர்ச்சி மற்றும் அரசாங்க வருவாய்கள் நிலச் சொத்துக்களால் “கடத்தப்பட்டுள்ளன, சீனப் பொருளாதார வல்லுனர்கள் சிலரின் சொற்களின்படி.” தேசிய புள்ளிவிபர அலுவலகக் குறிப்பின்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நவம்பர் வரை வசிப்பதற்கான வீடுகளின் மொத்த விற்பனை (4.23 டிரில்லியன் யுவான்) மொத்த நுகர்வோர் சில்லறைப் பொருளில் மொத்தத்தில் (13.9 டிரில்லியன் யுவான்) மூன்றில் ஒரு பகுதிதான். சீனாவில் 8.1 டிரில்லியன் யுவான்கள் வரிகள் மூலம் 2010ல் பெற்றுக் கொள்ளப்பட்டதில், மூன்றில் ஒரு பங்கு நிலத் தொடர்புடைய பரிமாற்றங்கள் மூலம் வந்தது. இது உள்ளூர் அரசாங்கங்களுக்கு, குறிப்பாக நிலச் சொத்து ஊகத்திற்கு ஊக்கமளித்து பங்குபெற உதவுகிறது. முக்கியமான தொழில்கள், குறிப்பாக எஃகு, சிமெண்ட், கட்டிடப் பொருட்கள் ஆகியவை நிலச் சொத்துக்களில் விரிவாகும் மூலதனத்தைத்தான் நம்பியுள்ளன. நிலச் சொத்து வளர்ச்சி ஏற்றம் விரைவான நகரமயமாக்குதல் மூலமும் உந்துதல் பெறுகிறது. 15 மில்லியன் கிராமப்புற குடியேற்றக்காரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வருவதுடன், பெருநிறுவன உயரடுக்குகளுக்கு குறைவூதிய உழைப்பையும் கொடுக்கின்றனர். பகுத்தறிவார்ந்த நகர்ப்புறத் திட்டத்தின் செலவில், “சந்தை வழிமுறை” மற்றும் தனியார்துறை முயற்சிகள் ஆகியவற்றை பெய்ஜிங் தழுவியுள்ளமையானது ஒரு மாபெரும் குமிழியை தோற்றுவித்துள்ளது. இது சீன மற்றும் உலகப் பொருளாதாரத்தை சூழும் ஆபத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உயர்ந்த விலைகள் மற்றும் கௌரவமான வீடுகளை அளிப்பதில் தோல்வி என்பது தவிர்க்க முடியாமல் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களிடையே அதிருப்திக்கு எரியூட்டும். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளும் உரிமைகளும் வாடிக்கையாக மிதித்துத் துவைக்கப்படுகின்றன. |
|