சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Britain’s prime minister whips up anti-Muslim sentiment

பிரிட்டிஷ் பிரதமர் முஸ்லீம் விரோத உணர்வைத் தூண்டி விடுகிறார்

Julie Hyland
9 February 2011

Use this version to print | Send feedback

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரோன் சென்ற வார இறுதியில் ஜேர்மனியில் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பிரிட்டனில் தாயகத்தில் வளரக்கூடிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு பெரும்-மாற்றத்தைப் பிரகடனப்படுத்தினார்.

டோரிக் கட்சியின் தலைவரது கருத்துகள் ஆழமாய் ஜனநாயக விரோதமானவை ஆகும். ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்கள், சமூகப் பேரழிவுக்கும் ஏகாதிபத்தியப் போருக்கும் முகம் கொடுக்கையில், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முனைகின்றன. அப்போது அவற்றால் பாதை காட்டப்படும் வலது-சாரி முஸ்லீம்-விரோத பிரச்சாரத்துடன் அடியொற்றி நடக்க காமரோன் நோக்கம் கொண்டுள்ளதையே இக்கருத்துகள் அறிவிக்கின்றன.

நமது சொந்த நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில், குறிப்பாக மிகப்பெரும் அச்சுறுத்தலான பயங்கரவாதத் தாக்குதல்களில் சில துயரமான வகையில் நமது சொந்த குடிமக்களால் நிகழ்த்தப்படுகின்றன என்பதில் ஐரோப்பா விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை பிரிட்டனின் அனுபவங்கள் நிரூபித்திருப்பதாய் காமரோன் அந்த மாநாட்டில் தெரிவித்தார். இந்த அச்சுறுத்தல் பெருமளவில் “இஸ்லாம் குறித்த முழுமையாய் பிறழ்வான, தவறான வடிவம் கொடுக்கப்பட்ட விளக்கத்தைப் பின்பற்றுகிற இளைஞர்களிடம்” இருந்து தான் வருவதாய் காமரோன் கூறினார்.

இத்தகைய ஆதரவுக்கான மூலக் காரணம் சமூக வறுமையோ அல்லது “மேற்கத்திய அயலுறவுக் கொள்கை”க்கான விரோதமோ அல்ல என்றார் அவர். ”பல்வேறு கலாச்சாரங்களையும் தனித்தனியான வாழ்க்கையை, ஒருவருக்கொருவர் தனிப்பட்டு பிரதான நீரோட்டத்தில் இருந்து தனித்து, வாழ்வதற்கு ஊக்கமளித்த அரச பல்கலாச்சார வாழ்முறை”யின் விளைபொருள் இது என்றார். “தாயகத்தில் வலிமையான அடையாளங்கள் வேண்டும்” என்றார் அவர். “வெளிப்படையாக, சமீப வருடங்களின் செயலற்ற சகிப்புத்தன்மை நமக்குக் குறைந்து இருந்தால் போதும், செயலூக்கத்துடனான வலிமையான தாராளவாதமே மிகக் கூடுதலாய் அவசியம்.

“சமீப வருடங்களின் செயலற்ற சகிப்புத் தன்மை” என்று காமரோன் குறிப்பிடுவதில் இதனை விடவும் வெறுப்பு உமிழப்பட முடியாது. தொழிற்கட்சி அது ஆட்சியில் இருந்த 13 ஆண்டு காலத்தில், சியோரா லியோனி, முன்னாள் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் பங்கேற்று இருக்கிறது. இவை எல்லாமே முதலில் “தார்மீக அயலுறவுக் கொள்கை” என்கிற சாக்கில் முன்னெடுக்கப்பட்டு பின் வெளிப்படையாக “தாராளவாத தலையீட்டுமுறை”யாக மாறியவை தான், அதாவது இப்போது காமரோன் கையிலெடுக்கிற அதே “மேற்கத்திய விழுமியங்கள்” தான் கபடவேடத்துடன் தூண்டப்பட்டன.

”பயங்கரவாதத்தின் மீதான போருக்கு”த் துணைநிற்பதான போர்வையில், தொழிற்கட்சி அரசாங்கம் மனித உரிமைகள் மீது அசுரத்தனமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. குறிப்பாக முஸ்லீம்களை குறிவைத்த இந்த நடவடிக்கைகளில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஒருபோதும் ஆளாயிராதவர்களின் மீதும் கட்டுப்பாட்டு உத்தரவுகள் (ஏறக்குறைய வீட்டுக் காவல் நிலை) பிறப்பிக்கப்படுவதும் அடங்கும். இந்த கொள்கைகளில் அநேகமானவை இப்போதைய டோரி-லிபரல் ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் பெருமளவு மாற்றமின்றி தொடர்ந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கங்கள் தாயகத்திலும் வெளிநாட்டிலும் நடந்து கொண்ட விதம் மில்லியன் கணக்கான மக்களுக்கு இவர் ஜனநாயகம் சுதந்திரம் என்றெல்லாம் வெற்றுப் பேச்சு பேசும் போது வெறுப்பூட்டியிருக்காது என்பதைப் போல, “மேற்கத்திய ஜனநாயகம் மற்றும் தாராளவாத விழுமியங்கள் ஆகியவற்றை நோக்கிய விரோதத்தை” ஒரு தீவிரவாதக் கண்ணோட்டமாய் காமரோன் அடையாளப்படுத்தினார்.  உண்மையில் அத்தகைய கோட்பாடுகளை எல்லாம் காலால் நசுக்குவது போல் தான் கேமரூனின் உரை இருந்தது.

அரசியல் அமைப்புகள் மீது சித்தாந்தரீதியாய் அமில சோதனைகளைத் திணிப்பதற்கான அடிப்படையை அவர் வகுத்தார்; இப்போதிருந்து, இஸ்லாமியக் குழுக்களுடனான அரசாங்க நிதியாதரவும் ஒத்துழைப்பும் அவை “தாராளவாத விழுமியங்களை” உறுதி செய்கின்றனவா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படும். அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுப் பணத்திலான ஸ்தாபனங்களுக்கு அணுகல் மறுக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாய் “வலிமைபடைத்த தாராளவாதம்” (ஒரு அரசு தனது குடிமக்களிடம் “நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வரை உங்களை நாங்கள் தனியாக விட்டு விடுவோம்” என்று கூறுகிற “செயலற்ற சகிப்புத்தன்மை”யின் அடிப்படையிலான ஒரு சமுதாயத்திற்கு மாற்றாக இதனை அவர் முன்நிறுத்தினார்) குறித்த காமரோனின் கருத்தாக்கம் உண்மையான ஜனநாயகத்திற்கு நேர்விரோதக் கருத்துடையதாய் இருக்கிறது.

குடிமக்கள் அவர்களிடம் கூறப்படுவதைச் செய்தால் மட்டும் போதாது அவற்றை நம்பவும் வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை காமரோன் முன்னெடுக்கிறார். பிரிட்டனை “ஒரு சமுதாயம்: இங்கே இருப்பது என்பது இந்த விடயங்களை நம்புவது” என்கிற வகையில் வரையறை செய்கிற “குறிப்பிட்ட விழுமியங்களை அரசு செயலூக்கத்துடன் ஊக்குவிக்க வேண்டும்” என்பது அவர் கருத்து. அதாவது, ஒரு சிந்தனைக் குற்றம் என்பது என்ன என்பதைத் தீர்மானிக்கும் உரிமை 10, டவுனிங் வீதிக்கு இருக்க வேண்டும்.

“மதச்சார்பின்மை” மற்றும் “தாராளவாத விழுமியங்கள்” என்பவை எல்லாம் மந்திரங்கள் போல் பிரயோகிக்கப்பட்டு அவற்றின் கீழ் ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்கள் அந்நியர் மீதான அச்சத்தைத் தூண்டி விடவும் போலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முனைகின்றன.

அந்த விடயத்தில், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் யூத விரோதம் ஆற்றியதைப் போன்றதொரு பாத்திரத்தை ஐரோப்பாவில் இன்று இஸ்லாமிய அச்சம் ஆற்றிக் கொண்டிருக்கிறது. வஞ்சத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் அரசு-ஒப்புதலுடனான இலக்கினை இது வழங்குவதோடு, எதிரான அரசியல் அல்லது மத நம்பிக்கைகளை குற்றவியல் தன்மையுடையதாக்க தயாரிப்பு செய்கிற ஆளும் உயரடுக்கு தனது போர்களையும் நிதிக் கொள்கைகளையும் தொடர்வதற்கு அனுமதிக்கிறது.

பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து இந்த நாடுகள் அனைத்தும் வெளியில் பர்தா அணிவதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை ஒன்று நிறைவேற்றி விட்டன அல்லது நிறைவேற்றும் பணியில் உள்ளன. சொல்லப் போனால், சென்ற அக்டோபரில் ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கேல், ஜேர்மனியில் ஒரு பல்கலாச்சார சமூகத்தைக் கட்டுவதான முயற்சிகள் “முற்றுமுதலாய் தோல்வி”யடைந்து விட்டதாகவும் புலம் பெயர்ந்த மக்கள் ஒருங்கிணைய அவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அறிவித்தபோது காமரோனின் கருத்துகளை அவர் முன்கணித்திருந்தார்.

ஆளும் வர்க்கம், அது தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு முன்கண்டிராத தாக்குதலை முன்னெடுத்துக் கொண்டிருக்கிற நிலைமைகளின் கீழ், இத்தகைய நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்ய குறிப்பாக மிகவும் கவலையுடனான அக்கறையை கொண்டுள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் கண்டமெங்கிலுமான வங்கிகளைப் பிணையெடுக்கவும் ஒற்றை நாணயமதிப்பிற்கு முட்டுக் கொடுப்பதற்கும் டிரில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கி விட்டு அந்த சுமையை தொழிலாள வர்க்கத்தின் தலையில் கட்டுகின்றன, பொதுச் செலவினத்தில் அதிரடியான வெட்டுகளைத் திணிப்பதன் மூலமும், ஊதியங்களை வெட்டுவது மற்றும் மில்லியன்கணக்கானோருக்கு வேலையில்லாமல் செய்வது ஆகியவற்றின் மூலமும்.

இது பரந்துபட்ட எதிர்ப்பை உருவாக்குகிறது என்பது பிரிட்டனில் 1930களுக்குப் பிந்தைய மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் தீவிரமாய் இருக்கும் கூட்டணி அரசாங்கத்திற்குத் தெரியும். தொழிலாளர்களை இன, மத மற்றும் தேசிய அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலமாக இத்தகைய எதிர்ப்பிற்கு முட்டுக்கட்டை போடுவது தான் இதுபோன்ற வெளிநாட்டவர் அச்சத்தை வளர்த்தெடுப்பதன் நோக்கம். இந்த விடயத்தில், பிரிட்டனின் ஆட்சியாளர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எந்த படிப்பினைகளும் அவசியப்படவில்லை. 1968ல் Enoch Powell இன் குடியேறுவோர் விரோத ”இரத்த ஆறுகள்” உரையின் வகையில், காமரோன் டோரிக் கட்சியின் ஆயுதக் கிடங்கில் ஒரு பழமையான நம்பகமான ஆயுதத்தைத் தான் எடுக்க முயலுகிறார்.

ஆங்கிலேயர் பாதுகாப்பு கழகம் (EDL) முதன்முதல் தேசியப் பேரணியை நடத்திய அதேசமயத்தில் (இப்பேரணியில் 3,000 பேர் பங்குபெற்றிருந்தனர்) காமரோனின் உரையும் நிகழ்ந்ததென்பது வெறும் தற்செயலானது அல்ல. இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு மற்றும் பிரிட்டனின் “ஜனநாயக விழுமியங்கள்” மீதான அதன் பின்விளைவுகளின் அச்சுறுத்தலுக்கு எதிரான “அடிமட்ட மக்களின்” எழுச்சியாக இக்கழகம் தன்னை காட்டிக் கொள்கிறது. உண்மையில், முஸ்லீம் விரோத பரப்புரையில் முன்னிலை வகிக்க உதவியிருக்கும் ஐரோப்பாவெங்கிலுமான தீவிர-வலதுகளுடன் இணைப்புகள் கொண்ட பாசிஸ்டுகள் மற்றும் கால்பந்து வெறியர்கள் தான் இந்த அமைப்பில் பெரும்பான்மையினராய் உள்ளனர்.   

இந்த மனிதக் குப்பையை முதலாளித்துவம் ஊக்கப்படுத்துகிறது. பேரணிச் செய்திகள் செய்தித் தாள்களின் முதல் பக்கங்களில் இடம் பிடித்திருந்தன. அதன் செய்தித் தொடர்பாளர் பிபிசியின் “நியூஸ்நைட்” நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.

ஆளும் உயரடுக்கு முன்னாள் “இடதுகளிடம்” இருந்தும் மற்றும் தாராளவாதிகளாய் இருந்து நவ காலனித்துவ வலிந்து தாக்கும் போர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாக மாறிய நிக் கோஹென் போன்றவர்களிடம் இருந்தும் ஆதரவுக்கு சார்ந்திருக்க முடியும். ஆட்சி மாற்றத்தின் மூலமாக “மேற்கத்திய விழுமியங்களை” ஊக்குவிப்பதான பேரில் ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் ஆக்கிரமிப்பு நடத்துவதைப் பாதுகாத்துப் பேசிய “யூஸ்டன் அறிக்கை”க்கு (“Euston Manifesto”) பொறுப்பானவர்களில் இவரும் ஒருவர். கார்டியனில் கோஹென் எழுதும்போது காமரோன் “ஏறக்குறைய விடயத்தை துல்லியமாக”ப் பேசிய தனது உரையில் “அடிப்படைக் கோபாடுகளுக்கு துணிந்து நிற்கத் தயாராய்” இருந்ததற்கு அவரைப் பாராட்டினார்.

கோஹெனின் கூற்றுகள் காமரோனின் கருத்துகளில் சம்பந்தப்பட்டிருந்த இரண்டாவது நோக்கத்தை, அதாவது இனிவரும் போர்களுக்கு அங்கீகாரமளிப்பது என்கிற நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. எப்படி டோனி பிளேயர் ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை “ஜனநாயகத்திற்கான போர்” என்று நியாயப்படுத்தினாரோ அதேபோல காமரோனும் மத்திய கிழக்கு, காகசஸ் மற்றும் ஆபிரிக்காவில் புதிய மற்றும் இன்னும் கூடுதலாய் குருதிபாயச் செய்யும் தலையீடுகளுக்கான களத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

எகிப்து, துனிசியா மற்றும் பிராந்தியம் முழுவதிலும் எதேச்சாதிகார இராணுவ ஆட்சிகளுக்கு எதிரான பரந்த மக்களின் கிளர்ச்சிகள் மற்றறெங்கிலும் போலவே பிரிட்டனிலும் ஆளும் உயரடுக்கை உலுக்கியுள்ளது. இங்கு மக்களை ஒடுக்குவதற்கு பல தசாப்தங்களாய் ஏகாதிபத்தியம் இந்த ஆட்சிகளைத் தான் நம்பியிருந்து வந்திருக்கிறது. மேலும் உழைக்கும் மக்களிடையே எகிப்திய மற்றும் துனிசிய மக்களை நோக்கித் தோன்றும் அனுதாபத்தை அது எச்சரிக்கையுடன் காண்கிறது. ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டுப் போராடுவதற்கு அது சகுனமாய் தோன்றுவதாய் அது சரியாகவே அஞ்சுகிறது. 

அத்தகையதொரு அபிவிருத்திக்கு எதிராய் ஒரு முன்கூட்டிய தாக்குதலைத் தொடுப்பது தான் ஐரோப்பிய முதலாளித்துவம் வலது பக்கமாய் நடையைக் கட்டுவதும் “இஸ்லாமிய பயங்கரவாதம்” தான் “நமது பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல்” என்று வருணிப்பதும் நோக்கமாய் கொண்டிருக்கின்றன.