WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
துனிசியா
Tunisian regime seeks emergency powers
against mass protests
துனிசிய ஆட்சி வெகுஜன எதிர்ப்புக்களை அடக்குவதற்கு
நெருக்கடிக்கால அதிகாரங்களைக் கோருகிறது
By Alex Lantier
8 February 2011
Use this version to print | Send
feedback
நேற்று துனிசியப் பாராளுமன்றத்தின் கீழ் பிரிவு
177
க்கு
16
என்ற
அடிப்படையில் ஜனவரி
14ம்
தேதி மக்கள் எதிர்ப்பை ஒட்டி நாட்டை விட்டு ஓடும்
கட்டாயத்திற்கு உட்பட்ட ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் அலி சென்ற
பின் பிரதம மந்திரியாக இருக்கும் முஹ்மட் கன்னூச்சியின்
ஆட்சிக்கு நெருக்கடிக்கால அதிகாரங்களைக் கொடுத்துள்ளது.
இச்சட்டவரைவின் மீது செனட் மன்றம் புதன்கிழமையன்று
வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்
பின் இச்சட்டம் இடைக்கால ஜனாதிபதி பௌவத் மெபாஜாவின் ஒப்புதலைப்
பெறும்.
பென் அலியின் கீழ் உயர்மட்ட நிதிய அதிகாரியாக
இருந்து துனிசியாவின் நிதிய உயரடுக்கிற்கு நலன்களைக் கொடுத்த
தனியார்மயமாக்கும் கொள்கைகளுக்கு வடிவமைப்பு கொடுத்த கன்னூச்சி
சட்டவரைவைப் பாராட்டியுள்ளார்.
“துனிசியாவிற்கு
இப்பொழுது ஆபத்துக்களை அகற்றுவதற்கு ஆணையின் மூலம் ஆட்சி நடத்த
வேண்டிய தேவை வந்துள்ளது.
துனிசியா பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்று சிலர்
விரும்புகின்றனர்.
ஆனால்
நம் சுதந்திரத்திற்காக உயிர்துறந்த தியாகிகளை நாம் கட்டாயமாக
கௌரவிக்க வேண்டும்”
என்றார்.
சட்டவரைவின் மீது சட்டமியற்றுபவர்கள்
விவாதிக்கையில்,
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் மன்றத்திற்கு வெளியே கூடிக்கோரினர்—இது
பென் அலி ஓடிப்போன பின் கலைக்கப்படவில்லை.
பென்
அலியின் ஆளும் கட்சியான
RCD
எனப்படும் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி இன்னமும்
பாராளுமன்றத்தில்
80
சதவிகித இடங்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்த மக்கள் எதிர்ப்புக்கள் மற்றும்
தெருக்களில் மக்களுக்கும் துனிசிய சர்வாதிகார பொலிஸ்
பிரிவுகளுக்கும் இடையே தெருக்களில் மோதல்கள் நடப்பதற்கும்
இடையே கன்னூச்சி நெருக்கடிக்கால அதிகாரங்களைப் பெறும்
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
நான்கு
பேர் கொல்லப்பட்டு,
டஜன்
கணக்கானவர்கள் சனிக்கிழமையன்று எல் கெப்பில் பொலிஸாருடன்
மோதியதில் காயமுற்றபின்
—ஊழல்
நலிந்த பொலிஸ் தலைவர் விலக வேண்டும் என்று மக்கள்
கோரியிருந்தனர்—
எல்
கெப்பில் பொலிஸ் நிலையம் ஞாயிறன்று எரிக்கப்பட்டது.
மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரும் கொல்லப்பட்டார்.
தெற்கு துனிசியாவில் கெபிலியில் ஒரு இளைஞர்
பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் கண்ணீர்ப்
புகைக்குண்டுத் தாக்குதலையடுத்து இறந்து போனார்.
பழ விற்பனையாளர் மஹ்மத் பௌவாஜிஜி தன்னைத்
தீக்கிரையாக்கிக் கொண்டு எதிர்ப்புக்களைத் தூண்டிய சிடி பௌஜிட்
நகருக்கான தேசிய அணிவகுப்பு ஒன்றில்
7,000
பேர்கள் ஒன்றுகூடினர்.
ஆட்சிக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன.
பெப்ருவரி
4ம்
திகதி,
பல
தொழில்துறை பிரிவுகளில் ஏராளமான போக்குவரத்துத் தொழிலாளர்கள்,
துனிசிய விமானத் தற்காலிக தொழிலாளர்கள்,
அரசச்
செய்தி ஊடக ஊழியர்கள் என்று பலரும் வேலைநிறுத்தம் செய்துள்ளதாக
Le
Monde
தகவல்
கொடுத்துள்ளது.
ஆனால்
“பொதுவான
பொருளாதார வாழ்க்கை மீண்டும் திரும்பிவிட்டது,
குறிப்பாக துனிசின்
Radès
துறைமுகத்தில்.
இதுதான் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி
வணிகத்தில்
70
சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துகிறது”
என்று
கூறியுள்ளது.
இச்சூழ்நிலையில் ஆட்சி மக்களுக்கு எதிராக
பெரும் அடக்குமுறையை இன்னும் கையாள்வதற்குத் தைரியத்தைக்
கொள்ளவில்லை.
ஆனால்
நெருக்கடிக்கால அதிகாரங்கள் இறுதியில் துனிசிய ஆட்சி தொடர
இருக்கும் அத்தகைய கொள்கைகளைப் பற்றிய அடையாளங்களைக்
காட்டுகிறது.
தன்னை
அது சீர்திருத்திக் கொள்ளவில்லை,
ஆனால்
பென் அலி புறப்பட்டுச் சென்றதையடுத்து கால அவகாசம் பெறுவதற்கு
முயல்கிறது.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படமுடியும்
என்ற நம்பிக்கையை தனக்கு உருவாக்குவதற்கான சூழ்நிலைக்காக
அடக்குமுறை சக்திகளையும் வலுப்படுத்தி வருகிறது.
இந்த முடிவு துனிசியச் சர்வாதிகாரத்தை
அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல்,
அமெரிக்கா இன்னும் வட ஆபிரிக்காவிலுள்ள மற்றய ஏகாதிபத்திய
சக்திகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
எகிப்தில் வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கும் வகையில் அவை
ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி
“ஜனநாயக
மாற்றத்தைக்”
கொண்டுவரும் என்று கூறுகின்றன.
முபாரக் இறுதியில் பதவியை விட்டு நீங்குவதற்கான வகையில் நாடு
மாற்றப்படும் என்றும் கூறுகின்றன.
ஆனால் துனிசிய உதாரணம் காட்டுவதுபோல்,
உயர்மட்டத்தில் யார் சர்வாதிகாரி என்பதை மாற்றுவது ஒன்றும்
ஆட்சி மாற்றம் என ஆகிவிடாது.
உண்மையில்,
சர்வாதிகாரத்தை அகற்றி அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கத்தின்
சுயாதீன அமைப்புக்கள் சோசலிஸ்ட் கொள்கைகளைத் தொடர்வதின் மூலம்
என்ற வகையைத் தளமாகக் கொண்டுதான் அரசு அமைக்கப்பட வேண்டும்.
அதுதான் மக்களுக்கு ஜனநாயக வழியிலான முன்னேற்றப் பாதையைக்
கொடுக்கும்.
உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளும் ஆட்சிச்
சார்புடைய ஏடுகளும் இழிந்த முறையில் புரட்சியைப்
பாராட்டினாலும்,
அரசாங்கம் மக்களுடைய எதிர்ப்பைச் சார்பிழக்கச் செய்து
வலுவிழக்கச் செய்யவும்தான் முற்படுகிறது.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குருதி
கொட்டும் பணத்தைத்தான் ஆட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எதிர்ப்புக்களின் போது அரசாங்கத்தால் கொல்லப்பட்டவர்களின்
குடும்பங்களுக்கு இது
10,300
ஈரோக்களை அளிக்கும்.
காயமுற்றோருக்கு
1,546
ஈரோக்களை அளிக்கும்.
பெப்ருரி
1ம்
திகதி வரை
219
பேர்
கொல்லப்பட்டுள்ளனர்
510
பேர்
காயமுற்றுள்ளனர் என்று ஐ.நா.
கணக்கிட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி இழிந்த முறையில்
தன் நலன்களைக் காப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளை
RCD
ஐ
குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் என்று தம்பட்டம்
அடித்துள்ளது.
இடைக்கால அரசாங்கம் முழுவதும் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற
வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஜனவரி
29ம்
தேதி மந்திரிசபை மாற்றங்கள் மற்றொரு பென் அலிக்கு நெருக்கமான,
வெறுக்கப்பட்ட
RCD
நபர்
கமெல் மோர்ஜனேயை வெளியுறவு மந்திரிப் பதவியில் இருந்து
அகற்றியது.
உயர்மட்ட அதிகாரியும் முன்னாள் பிரான்ஸில்—அதுதான்
காலனித்துவ அதிகாரம் கொண்ட நாடாக இருந்தது--
பயிற்சி பெற்ற தூதருமான அஹ்மத் க்வெனைஸ்
அவருக்குப் பதிலாக பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்
“மக்கள்
புரட்சி அதன் பலன்களைப் பெறட்டும் என்பதற்காக”
தான்
பதவியில் இருந்து விலகுவதாக மோர்ஜனே கூறினார்.
கன்னூச்சி ஆட்சிக்கு இத்தந்திரோபாயத்தில்
துனிசியாவின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவும் உண்டு.
UGTT
எனப்படும் துனிசியப் பொதுத் தொழிலாளர் சங்கம் அன்று
அறிவித்திருந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டது.
கன்னூச்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று தான்
விரும்புவதாகவும் கூறியது.
ஆனால்
கன்னூச்சியின் அரசாங்கத்தில் பங்குபெற அது மறுத்துவிட்டது.
துனிசியச் செய்தி ஸ்தாபனமானது ஆட்சியின் பல
மந்திரிகளையும் முற்போக்குக் கருத்துடையவர்கள் என்று பாராட்டத்
தொடங்கியுள்ளது.
LeTemps
ல்
கட்டுரையாளர் கலீட் குஜிமர் உள்துறைமந்திரி பர்ஹட் ரஜ்ஹியை—“இடது”
என்று
வளர்க்கப்படும் ஒரு மாஜிஸ்ட்ரேட்—அவருடைய
அலுவலகத்தை பழைய பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி அமைச்சரக
இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றியதற்கும்,
அரசின்
தொலைபேசி ஒற்றுக்கள் பற்றிய கேள்விகளைத் தவிர்த்ததற்கும்
பாராட்டியுள்ளார்.
குஜிமர் ரஜ்ஜியை இழிந்த முறையில் பாராட்டுகிறார்.
அடிக்கடித் தொலைக்காட்சியில் தோன்றும் இவரை
“மிகச்
சிறந்தவற்றை அளிக்கக்கூடிய மந்திரி என எதிர்பார்க்கப்படுபவர்”
என்றும் கூறியுள்ளார்.
RCD
இனிச்
செயல்படாது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
துனிசிய நாளேடான
Le
Presse,
“தீவிர
நெருக்கடி மற்றும் தந்தை நாட்டின் உயர் நலன்களைக் காக்கும்
இலக்கு இருக்கையில்,
உள்துறை மந்திரி நேற்று
RCD
யின்
நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்
உறுப்பினர்களுடைய கூட்டங்கள்,
அணிவகுப்புக்கள் ஆகியவை நடைபெறுவதையும் தடுத்துள்ளார்.
அதேபோல் இக்கட்சிக்குச் சொந்தமான அனைத்து உடைமைகள் அது
நிர்வாகம் செய்யும் அனைத்துச் செயல்களும் நிறுத்தப்படுகின்றன.
உரிய
நீதித்துறை அதிகாரிகள் முன்பு இது கலைக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கை முன்வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது”
என்று
விளக்கியுள்ளது.
இத்தகைய
“கலைப்பு”
முற்றிலும் பயனற்றது ஆகும்,
RCD
ஐ
எதிர்ப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பைக் கொண்டது.
RCD
மற்ற
எதிர்ப்பாளர்களைத் தாக்குவதைத் தடுக்கவில்லை.
இது
RCD
யின்
முக்கிய உறுப்பினர்களான கன்னூச்சி போன்றோர்,
அவர்
தான் நெருக்கடிக்கால அதிகாரங்களை விரும்புகிறவர்,
நேர்மையாக தங்கள் சொந்த ஆட்சியின் வரலாற்றுத்
தன்மை நிறைந்த கருவிகளை கலைக்க முற்படுகின்றனர் என்பது மக்களை
நம்ப வைக்கும் முயற்சியாகும்
பென் அலியின் ஆட்சிக் கருவியானது தலைவர் ஓடிய
பின்னரும் தொடர்ந்து செயல்படுவதற்கான காரணம்,
இத்தகைய இழிந்த பொய்யைக் கூறும் செய்தி ஊடகத்தினர் கூறுவது
போல்,
ஆட்சி
செல்வாக்கு படைத்துள்ளது என்பதாலோ செய்தி ஊடகத்தின் வாதங்கள்
சரி என்பதாலோ அல்ல.
துனிசியாவில் எந்தச் சக்தியும் பென் அலி சர்வாதிகாரத்தை
அகற்றுவதற்குத் தொழிலாள வர்க்கத்திற்குத் தலைமை தாங்க முழு
நனவோடு தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.
உலக சோசலிச வலைத் தளம் அதன்
“துனிசியாவின்
மக்கள் எழுச்சியும் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கும்”
என்னும் அறிக்கையில் கூறிய கீழ்க்கண்ட எச்சரிக்கைகளைத்தான் இது
உறுதிப்படுத்துகிறது:
“புரட்சிகர
வேலைத்திட்டம் மற்றும் தலைமை பற்றிய முக்கிய பிரச்சினை இன்னும்
தீர்வு காணப்படாமல் உள்ளது.
ஒரு
புரட்சிகரத் தலைமை வளர்க்கப்படாத நிலையில்,
மற்றொரு சர்வாதிகார ஆட்சிதான் தவிர்க்க முடியாமல் பென் அலியின்
ஆட்சிக்குப் பதிலாக இருத்தப்படும்.” |