World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

WikiLeaks: Cables reveal connivance of US government with Mubarak dictatorship

விக்கிலீக்ஸ்: முபாரக் சர்வாதிகாரத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் மறைமுக உதவிகளைக் கசிவுகள் காட்டுகின்றன

By David Walsh
5 February 2011

Back to screen version

வியாழனன்று விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளிவிவகாரத்துறை கசிவுகள், தற்போது ஒரு போர்குணமிக்க மக்களால் முற்றுகையிடப்பட்டிருக்கும் ஹோஸ்னி முபாரக்கின் எகிப்திய ஆட்சியுடன் உத்தியோகபூர்வ அமெரிக்க தொடர்புகள் குறித்த விவகாரத்தில் இன்னும் கூடுதல் விபரங்களை சேர்த்துள்ளது.

ஜனாபதி பராக் ஒபாமா, வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்க அரசாங்க பெரும்புள்ளிகள் கூட்டம் என்னமாதிரியானவற்றை முறையிட்டாலும், விக்கிலீக்ஸ் கசிவுகள், எகிப்திய ஆட்சியால் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒடுக்குமுறையை அமெரிக்க அரசாங்கம் முற்றிலுமாக அறிந்திருந்தது என்பதை அம்பலப்படுத்துகிறது. சம்பிரதாய குறைகூறுல்களை ஒருபுறம் வைத்துக்கொண்டு, வாஷிங்டன் எகிப்திய ஆட்சியின் குற்றங்களில் அலட்சியமாக இருந்தது.

புஷ் மற்றும் ஒபாமா இரண்டு நிர்வாகங்களின் கீழும், ஜூன் 2006லிருந்து ஜனவரி 2010வரையில் தேதியிட்ட ஏழு கசிவுகள், நிர்வாக மாற்றம் அமெரிக்க அரசாங்க அல்லது எகிப்திய அரசாங்க கொள்கையில் எந்த தாக்கத்தையும் அளிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

முதல் கசிவில், ஜூன் 21, 2006இல் தூதர் பிரான்ஸிஸ் ஜெ. ரிக்கியார்டோனே குறிப்பிடுகிறார், “கடந்தகால வழிமுறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகி, எகிப்திய அரசாங்க வழக்கறிஞர்கள் ஒரு வெளிவிவகாரத்துறை பாதுகாப்பு அதிகாரியை சித்திரவதைக் குற்றச்சாட்டுக்களில் தண்டிக்க முனைகிறார்கள். இந்த நடவடிக்கையானது, மக்களை வெறியூட்ட முபாரக் அரசாங்கத்தால் இரகசிய பொலிஸிற்கு அளிக்கப்படும் சுதந்திர அதிகாரம் குறித்து மனித உரிமைகள் கழகங்கள் குறைகூறுவதற்கு போலிக்காரணத்தைப் பெற நோக்கம் கொண்டிருந்தது.

"அரசு பாதுகாப்பு புலனாய்வுத்துறை சேவைகளின் பிரத்யேக பணிகள் இதற்குமுன்னர் கைதிகளை துன்புறுத்தியமைக்காக வழக்கை முகங்கொடுக்கவில்லை. இது Human Rights Watch மற்றும் ஏனைய மதிப்பார்ந்த பார்வையாளர்களை, புலனாய்வு, வழக்கு, சித்திரவதை மற்றும் அவமானப்படுத்தலுக்காக யாரையும் தண்டித்தல் போன்றவற்றிற்காக எகிப்திய பாதுகாப்பு சேவைகளின் மேற்தட்டிற்குள் 'ஒரு விதிவிலக்கு கலாச்சாரத்தை' குறைகூறுவதற்கு இட்டுச் சென்றுள்ளது,” என்று ரிக்கியார்டோனே குறிப்பிடுகிறார்.

"சட்டவிரோதமான சித்திரவதையால் காவலிலிருந்த மொஹம்மத் அப்துல் காதர் எல்-சயீத் மரணமடைந்ததற்காக ஒரு SSIS கேப்டன் மீது வழக்குத்தொடுக்க கிழக்கு கெய்ரோவிலுள்ள வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்ததாக அந்த தூதர் விளக்குகிறார். பத்திரிகை செய்திகள் மற்றும் மனித உரிமைகள் கழகங்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, செப்டம்பர் 16, 2003இல் தொடங்கப்பட்ட ஒரு விசாரணைக்குப் பின்னர் செப்டம்பர் 21இல்" அல்-சயீத் மரணமடைந்தார். “அல்-சயீதின் பிரேத பரிசோதனை அறிக்கை குறிப்புகளில், தலை மற்றும் உடலில் பலமான சிராய்ப்புகள், பிறப்புறுப்புகளில் மின்-நெருப்பு காயங்கள் உட்பட சித்திரவதைக்கான அடையாளங்கள் உள்ளடங்கியுள்ளன.”

அக்டோபர் 28, 2007இல் FBI துணை இயக்குனர் ஜோன் பிஸ்டலே கெய்ரோவிற்கு விஜயம் செய்யவிருந்த வேளையில், அவருக்கு பெயரிடப்பட்ட ஒரு பின்புல கசிவில், “FBIஇன் உலகளாவிய கைரேகை சேமிப்புகளஞ்சியத்தில் சேர்க்க, பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களின் [இவர்களில் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி சித்திரவதை அனுபவித்தவர்கள்] கைரேகை ஆவணங்களை நம்முடன் எகிப்து பகிர்ந்து கொள்ளும் முன்மொழிவை அவர் எழுப்ப வேண்டும்; இது நம்முடைய நடைமுறையிலுள்ள சட்ட-அமலாக்க ஒத்துழைப்பை இன்னும் அதிகப்படியாக முன்னேற்றக்கூடும்,” என்று ரிக்கியார்டோனே வலியுறுத்தினார். சட்ட-அமுலாக்கத்தை மட்டுமல்ல, வழக்கம் போல வியாபாரத்தையும் கூடத் தான்.

அந்த அமெரிக்க தூதர் விளக்கினார், “மே மாதம் 79 வயதை எட்டிய முபாரக், மத்தியகிழக்கில் ஒரு ஸ்திரப்பாட்டின் அடையாளமாக விளங்குகிறார். எப்போதும் போல, அவர் பயங்கரவாதம், ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், சூடான், ஈரான் போன்ற மிக முக்கிய பிராந்திய பிரச்சினைகளில் எகிப்திய நலன்களைக் கவனத்தில் கொள்கிறார்.”

ஆனால் அடுத்த பத்தியிலேயே, "அரசியல் சீர்திருத்ததின்மீது அவருடைய முந்தைய வாக்குறுதிகள் பலவற்றிலிருந்து முபாரக் பின்வாங்கியுள்ளார் என்பதை ரிக்கியார்டோனே ஒப்புக்கொள்கிறார். இதற்கிடையில், முன்னாள் எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் அய்மன் நூர் நோய்வாய்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் கோரும் காரியதாரிகளைக் கைது செய்யும் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த ஆண்டு பத்திரிகை ஆசிரியர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததன்மூலம் பேச்சு சுதந்திரத்தின்மீது இறுக்கிப்பிடியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு நோக்கத்தை முன்னெடுப்பதாக பொதுமக்களுக்குக் காட்டிக்கொள்வதை தற்போது முபாரக் குறைத்துக் கொண்டுள்ளார்,” என்ற ரிக்கியார்டோனே தொடர்ந்து குறிப்பிடுகையில், “எகிப்திய பொலிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகள் கைதிகள் மீதான துஷ்பிரயோகத்தின் உறுதியான, நம்பகமான குற்றச்சாட்டுக்களில் மாட்டிக் கொண்டுள்ளது,” என்றார்.

கெய்ரோ தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட டிசம்பர் 10, 2007 கசிவானது, சித்திரவதை மற்றும் அவமதிப்பைக் கவனிக்கும் மனித உரிமைகள் அமைப்புகளுடன் எகிப்திய ஆட்சி, அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்மறை உதவியுடன், விளையாடிய ஒருவகையான எரிச்சலூட்டும் விளையாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான Human Rights Watch இன் துணை இயக்குனர் ஜோய் ஸ்டோர்க்கிற்கும், SSISஇன் இயக்குனர் ஜெனரல் ஹசன் அப்தெல் ரஹ்மானுக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு சந்திப்பை விவரிக்கிறது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கசிவின்படி, அப்தெல் ரஹ்மானின் நிலைப்பாட்டை ஸ்டோர்க், “நாங்கள் (SSIS) தீமை செய்வதில்லை,” என்று பாத்திரப்படுத்தினார். அந்த இரகசிய பொலிஸ்காரர் ஸ்டோர்க்கிற்குக் கூறியது, “தாம் 40,000த்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாகவும் அவமதிப்பு செய்தவர்களை ஒரேகையில் விரல்விட்டு எண்ணிவிடலாம்,” என்றும் தெரிவித்தார். சித்திரவதை என்ற சொல் ஏதோவொருவகை "திட்டமிட்ட" விதத்தை உட்கிடக்கையாக கொண்டிருப்பதாக கூறி, அச்சொல்லின் பயன்பாட்டை நிராகரித்த அப்தெல் ரஹ்மான், எகிப்திய பாதுகாப்பு சேவைகள் "மிக மோசமாக" இருப்பதாகவும் முறையிட்டார். அரசுசாரா நிறுவனங்கள் அலைக்கழிக்கப்படுவது குறித்து கேட்டபோது, அத்தகைய அமைப்புகள் "அராஜகவாதிகளால்" நடத்தப்படுவதாலும், கைது நடவடிக்கைக்கு முன்னதாக அவர்களைக் கண்காணிக்க" வேண்டியுள்ளதாலும் அத்தகைய பொலிஸ் நடவடிக்கைகள் தேவைப்பட்டதாக அப்தெல் ரஹ்மான் வலியுறுத்தினார்.

தாம் "பிரத்தியேகமான நிகழ்முறை எதையும் செய்யவில்லை" என்று Human Rights Watch துணை இயக்குனர் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்குக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 13, 2009இல் FBI இயக்குனர் ரோபர்ட் முல்ளீருக்கு "களம் அமைத்தளித்த" புதிய அமெரிக்க தூதர் மார்கரேட் ஸ்கூபே, மழுப்பலாக வலியுறுத்தியது: “அரசியல் சுதந்திரம் மற்றும் பன்மைத்துவத்தை விரிவாக்குவது உட்பட, எகிப்தில் நாங்கள் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொணர முயல்கிறோம் என்பதுடன் மனித உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.”

"எகிப்திய பொலிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், கைதிகள் இழிவுபடுத்தப்படுவது குறித்த நம்பகமான, உறுதியான குற்றச்சாட்டுகளில் விடாப்பிடியாக உள்ளன,” என்று அந்த பெண்மணி குறிப்பிட்டார். ஆனால் இது முபாரக் ஆட்சியுடனான அமெரிக்க உறவுகளில் தடையாக இருக்கவில்லை. உண்மையில், எகிப்திய பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடனான அமெரிக்க உறவுகள் "திடமாக இருப்பதாக" ஸ்கூபெமுல்ளீர் இவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் எடுத்துக்காட்டினார்.

சித்திரவதை இருப்பதை மறுப்பதையும் கூட அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளது, மேலும் 2007இன் பிற்பகுதியிலிருந்து சித்திரவதை மற்றும் படுகொலைகளுக்காக நீதிமன்றங்கள் அண்ணளவாக 18 பொலிஸ் அதிகாரிகளைச் சிறை தண்டனைக்கு அனுப்பியுள்ளது. ஒரு பிரச்சினையில் மோட்டார் சைக்கிள்காரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டமைக்காக மார்ச்சில், ஒரு நீதிமன்றம் ஒரு பொலிஸ் அதிகாரியை 15 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது,” என்று ஸ்கூபெ குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சகம் அரசியல் எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு சமூகத்தை கண்காணிக்கவும், சிலவேளைகளில் அவற்றிற்குள் ஊடுருவவும் SSISஐ பயன்படுத்துகிறது. SSIS அரசியல் எதிர்ப்பை கைது, அலைக்கழித்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றின் மூலம் ஒடுக்குகிறது. காசா யுத்தத்தைத் தொடர்ந்து பெப்ரவரியில், சில பாலஸ்தீன ஆதரவு காரியதாரிகள் மற்றும் வலைப்பதிவர்களைக் கைது செயத SSIS, அவர்களை சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரையில் கைது செய்து வைத்திருந்தது.”

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் நலத்திற்கான வெளிவிவகாரத்துறை துணை-செயலர் மெக்கெல் போஸ்னருக்கான ஒரு "களத்தில்", ஜனவரி 2010இல், கெய்ரோவிலுள்ள அமெரிக்க குற்றவிவகாரத்துறையின் மாத்தீவ் ட்யூல்லெரால் எழுதப்பட்ட அந்த காட்சி, எகிப்திய நிலைமையின் ஒரு ஒட்டுமொத்த பிம்பத்தை அளிக்கிறது.

ட்யூல்லெர் மிகவும் கவனமாக, இராஜதந்திர மொழியை பயன்படுத்தினாலும் கூட, சில நிஜங்கள் வெளிவந்து விடுகின்றன, அதாவது ஒருவருடத்திற்கு முன்பே எகிப்தில் சமூக பேரெழுச்சி வெடித்திருக்கக்கூடும். அவர் எழுதுகிறார், “அரசாங்கம் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதையும், இதழாளர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு பதிலடி கொடுப்பதையும், மத சுதந்திரத்தை தடுப்பதையும் தொடர்கிறது. 2010 நாடாளுமன்ற மற்றும் 2011 ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அதிகாரத்தில் அவரின் பிடியைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்ப்பதையும், பாரத்தை சிறிது இழுத்துச்செல்லும் கணிசமான அரசியல் சீர்திருத்தங்களையும் ஜனாதிபதி முபாரக் தொடர்கிறார்,” என்று குறிப்பிட்டார்.

மத தீவிரவாதிகளோடு சண்டையிட வலுவான அதிகாரிகள் இல்லையென்றால், எகிப்திய ஸ்திரப்பாடு அபாயத்திற்குள்ளாகும் என்று, பிரத்யேக விவாதங்களில், முபாரக் மற்றும் ஏனைய மூத்த தலைவர்கள் விவாதித்தனர்" என்று குற்றவிவகாரத்துறை குறிப்பிட்டது. அதன் வாய்ஜாலங்களில், அமெரிக்க அரசாங்கம் இந்த கண்ணோட்டத்தை நிராகரித்தது. ஆனால் நடைமுறையில் அது அதை ஏற்றுக்கொண்டதுடன், அதற்கு துணைபோகவும் செய்தது.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு அர்பணிக்கப்பட்ட அவரது அறிக்கையின் பகுதியில், ட்யூல்லெர் குறிப்பிடுகிறார், “பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் அசாதாரணமானது, அது ஊடுருவி தொடர்வதாகவும், சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு அரசு பாதுகாப்பு அமைச்சக தலைமையிடங்களில் தினந்தோறும் நடப்பதாகவும் மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் நம்புவதாக எகிப்திய அரசாங்கமும், அதன் ஆதரவாளர்ளும் முறையிடுகின்றனர். துஷ்பிரயாகத்தை மறைத்தல், விஷயங்களை வெளியில் கொண்டு வராதபடிக்கு வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் அளித்ததன் மூலமாகவும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம்மீது பொலிஸ் மற்றும் SSIS ஊடகம் மற்றும் வலைப்பதிவுகளில் கவனத்தை அதிகப்படுத்தி இருப்பதாக காரியதாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.”

ட்யூல்லெர் மீது முக்கியத்துவம் இழந்த நிகழ்வுகள் குறித்த கருத்தில், அவர் "எகிப்தில் நடந்துவரும் போராட்ட அலை மற்றும் தொழிலாளர் அதிருப்தியைக் குறித்து அவர் குறிப்பெடுத்துக் கொண்டார். வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக எகிப்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற 'பொது தொழிற்சங்கத்தின்' ஒப்புதலை வேலைநிறுத்த தொழிலாளர்கள் பெறுவது எகிப்திய தொழிலாளர் சட்டத்தின்படி தேவைப்படுகிறது என்றபோதினும், இந்த நிபந்தனையை பெரும்பாலான வேலைநிறுத்தக்காரர்கள் புறக்கணித்தனர் என்பதோடு, வேலைநிறுத்தங்கள் பொதுவாக எகிப்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச தலையீட்டுடன் தொடர்ந்தன தொழிலாளர் நடவடிக்கைகள் பொருளாதார பிரச்சினைகளிலும் ஒருமுனைப்படுகிறது, மேலும் எகிப்திய தொழிலாளர் போராட்டம் இன்னும் பட்டவர்த்தனமாக அரசியல் பாத்திரத்தை எடுக்குமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.