சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Oppose US-backed “transition” in Egypt

எகிப்தில் அமெரிக்க ஆதரவுடனான  “மாற்றத்தை எதிர்

Patrick Martin
5 February 2011

Use this version to print | Send feedback

முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எகிப்திய உழைக்கும் மக்களின் பாரிய இயக்கம், முபாரக்கை ஒரு இராணுவ-ஆதிக்கத்துடனான இடைக்கால அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்க்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முன்முயற்சியை எதிர்க்கவும் நிராகரிக்கவும் வேண்டும். இந்த சூழ்ச்சித் தந்திரம் ஏகாதிபத்தியத்தின் மற்றும் எகிப்திய ஆளும் உயரடுக்கின் நலன்களை பாதுகாப்பதையும், எகிப்திய புரட்சியைக் கருக்கலைப்பதையும் நோக்கமாய் கொண்டுள்ளது.

வெள்ளியன்று விருந்தினராக வந்திருந்த கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பை வாய்ப்பாய் பயன்படுத்திக் கொண்டு ஒபாமா எகிப்தில் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சரியான முடிவை மேற்கொள்ள முபாரக்கிற்கு மிக வெளிப்படையான அழைப்பினை விடுத்தார்.

துணை ஜனாதிபதி ஜோசப் பிடேன் எகிப்தின் துணை ஜனாதிபதியான ஓமர் சுலைமானுடன் தொலைபேசியில் பேசினார். உளவுத் துறையின் தலைவராய் வெகுகாலம் இருந்த சுலைமான் தான் முபாரக்கின் இடத்தில் அமர்வதற்கு அமெரிக்காவால் இப்போது ஆதரவளிக்கப்பட்டு வருகிறார். எகிப்திய மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு எகிப்து உருமாறுவதற்கு அவசியமான நம்பகமான அனைத்துத்தரப்பையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளை உடனடியாய் ஆரம்பிக்க சுலைமானிடம் பிடேன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.  

சுலைமான், கூட்டு தளபதி முகமது தந்தாவி, பாதுகாப்பு அமைச்சர், மற்றும் பிற முபாரக்கின் தலைமை உதவியாளர்கள் ஆகியோரது தலைமையில், கறைபடிந்த கூலிக்குமாரடிக்கும் எகிப்திய முதலாளித்துவ எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளான ஐநா அணு ஆயுதப் பரிசோதனைத் திட்டத்தின் முன்னாள் தலைவரான முகமது எல்பரடேய், அரபு லீக்கின் செயலரான ஆம்ரு மவுசா, மற்றும் பெரு வணிகத்தின் பேச்சாளராக திகழும் வப்து கட்சி போன்றோரை சேர்த்துக் கொண்டு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் ஒரு ஆட்சியைத் தான் ஒபாமா நிர்வாகம் சிந்தனை செய்கிறது.

முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு (Muslim Brotherhood) ஒரு பாத்திரத்தையும் வெளியுறவுத்துறையின் பேச்சாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். எகிப்தில் வெகுகாலமாய் சட்டவிரோதக் கட்சியாய் அறிவிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய முதலாளித்துவக் கட்சியாகும் இது. ஆயினும் இதன் வேட்பாளர்கள் 2005 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சைகளாய்ப் போட்டியிட்டு 20 சதவீத இடங்களை வென்றனர். பல வருட காலம் முபாரக்கின் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதற்கான காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலைப் பயன்படுத்திய பின் இப்போது அமெரிக்கா, பிரதான அபாயமான சோசலிசப் புரட்சிக்கு எதிராக ஒரு அரணாக இஸ்லாமியவாதிகளை வளர்த்தெடுக்க முடிவு செய்துள்ளது.  

முபாரக்கிற்கு அடுத்து பதவியில் அமரும் விவகாரத்தில் இவ்வகையில் கைப்புரட்டு செய்வது குறித்து 2007 ஆம் ஆண்டில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில் நிழலாடியது. இக்கட்டுரை குறிப்பிட்டது: "முபாரக் எப்போதும் அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளியாய்த் திகழ்ந்தவர் என்று சொல்ல முடியா விட்டாலும் அவரது வரலாற்றுரீதியான முன்னோக்கிற்காகவும் அமெரிக்காவுடனான உறவுக்கும் இஸ்ரேலுடனான அமைதிக்கும் அவர் அளிக்கும் முக்கியத்துவத்திற்காகவும் மதிப்புமிக்கவராய் அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள். அமைதிக்கும் அமெரிக்காவுடனான உறவுக்கும் அதே வரலாற்று மதிப்பை பராமரிக்கக் கூடிய ஒருவர் தான் இறுதியாய் முபாரக்கிற்கு அடுத்தபடியாகவும் வருவார் என்றே நம்புவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் இங்கே கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முபாரக்கின் அடுத்தவரும் அவரைப் போலவே ஒரு அமெரிக்காவின் தலையாட்டியாய் இருப்பார்.

ஒரு சுலைமான் அரசாங்கம் அதன் தலைமையில் முழுக்க முழுக்க குற்றவியல் தன்மை கொண்டதாகவே இருக்கும். எகிப்தின் துணை ஜனாதிபதி (இப்பதவிக்கு சென்ற வாரத்தில் முபாரக்கினால் நியமிக்கப்பட்டவர்) எகிப்தின் படுபயங்கர மிருகத்தனமான பாதுகாப்பு எந்திரத்தின் தலைவராகவே அதிகம் அறியப்படுபவர். ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்ததற்கு அவர் நேரடியாக பொறுப்பானவர். இந்த பாத்திரத்திற்காக அவர் சிஐஏவின் பெருமதிப்பைப் பெற்றவராய் இருந்தார். குவாண்டானோமோ வளைகுடாவில் அல்லது சிஐஏவின் இரகசிய சிறைகளின் வலைப்பின்னலிலேயே நிர்வகிக்க முடியாத கைதிகளை எகிப்துக்கு அனுப்புவதை சிஐஏ தொடர்ந்த வழக்கமாய்க் கொண்டிருந்தது.

பத்திரிகையாளரான ராபர்ட் ஃபிஸ்க் சுலைமான் குறித்து கிண்டலாகக் கூறுகையில் அவர் இஸ்ரேலுடனான முபாரக்கின் பேச்சுவார்த்தையின் தலைமைப் பிரதிநிதி, அத்துடன் அவரது மூத்த உளவுத் துறை அதிகாரியும் கூட, 75 வயதான இவர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமுக்கு பல வருடங்கள் பயணம் செய்திருப்பதோடு நான்கு மாரடைப்புகளையும் தாங்கியிருக்கிறார் என்றார். சுலைமானின் வழிகாட்டலின் கீழ் தான் காஸா பகுதியில் ஹமாஸ் பதவிக்கு வந்த பின்னர், அந்தப் பகுதி திட்டமிட்டு முற்றுகைத்தடை செய்யப்பட்டு பட்டினி போடப்பட்டது. சுலைமான் இஸ்ரேலிய ஆட்சியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மோசாட் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் கண்களில் மிகவும் மரியாதைக்குரிய எகிப்தியர். 

எல்பரடேய் போன்ற தனிநபர்களின் வடிவில் சுலைமானுக்கும் இராணுவத்திற்கும் ஒரு பொது மூடிமறைப்பாக இருப்பதோடு, கெய்ரோ, அலெக்சாண்டிரியா மற்றும் பிற நகரங்களின் வீதிகளிலான புரட்சிகர இயக்கத்திற்கு இந்த நபர்களும் சம அளவு குரோதம் படைத்தவர்களாகவே உள்ளனர். முபாரக் நிர்ணயித்துள்ள செப்டம்பர் தேதிக்கும் இன்னும் பின்னால் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்கும் எல்பரடேய்  வாதிட்டு வந்திருக்கிறார். தேர்தல் அமைப்புமுறை சீர்திருத்தப்படுகிற சமயத்தில் குறைந்தது ஒரு வருட காலத்திற்கேனும் ஒரு மூன்று உறுப்பினர் குழு (அநேகமாக அவர், சுலைமான் மற்றும் ஒரு உயர் இராணுவ அதிகாரி கொண்டதாய் இருக்கும் என அனுமானிக்கலாம்) அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி வருகிறார்

முபாரக்கிற்கு எதிரான வெகுஜன இயக்கத்தை சீர்திருத்த நப்பாசைகளை கொண்டு மனம் குழம்பச் செய்வதும், பின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதும், இதில் அமெரிக்கா ஏற்பாடு செய்யும் ஒரு இடைக்கால ஏற்பாட்டை ஒரு உண்மையான ஜனநாயக அபிவிருத்தியாக ஏற்க முறையாய் மறுப்போரை உடலியல்ரீதியாக ஒடுக்குவதும் அடங்கிய இத்தகையதொரு இடைக்கால ஆட்சியின் பிரதான பணியாய் இருக்கும்.

அந்த அர்த்தத்தில், ஒபாமாவின் வெள்ளியன்றான வார்த்தைகள் அபாய சகுனத்தைக் கொண்டுள்ளன. அரசாங்கமோ ஆர்ப்பாட்டக்காரர்களோ வன்முறையைப் பயன்படுத்துவதை அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பதாகக் கூறும் தனது முந்தைய வசனங்களை அவர் மறுபடியும் வலியுறுத்தினார். ஏதோ, உடல்முழுக்க ஆயுதம் தரித்த, அத்துடன் சித்திரவதை மற்றும் கொலையில் ஒரு நெடிய வரலாற்றைக் கொண்ட மிருகத்தனமான இராணுவ சர்வாதிகாரமும், தரிர் சதுக்கத்தில் தங்களது வெறும் கைகளைக் கொண்டும் தங்களது எண்ணிக்கை வலிமையைக் கொண்டுமே தங்களை வெற்றிகரமாய்ப் பாதுகாத்துக் கொண்ட எகிப்திய மக்களும் சமமாய்ப் பாவிக்கப்பட வேண்டியவர்கள் என்பது போல்.

முபாரக் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தால் இடம்பெயர்க்கப்படுவாரேயானால், ஒபாமா நிர்வாகமும் சரி அமெரிக்க ஊடகங்களும் சரி புதிய ஆட்சியாளர்களின் பின்னால் அணிவகுத்துக் கொண்டு அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் பயங்கரவாதம் என்று தூற்றுவதோடு அரசு அடக்குமுறையின் இரத்தம் சிந்தச் செய்யும் நடவடிக்கைகளை வழிமொழியும்.

பரந்த மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான ஒரு சலுகையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து வெகு விலகி இத்தகையதொரு ஆட்சி ஒரு கவனமாய்க் கட்டமைக்கப்பட்ட முட்டுக்கட்டையாகவே நிற்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு சேவகனாக, இஸ்ரேலின் ஒத்துழைப்பாளராக, அத்துடன் பாலஸ்தீன மக்களுக்கும் மற்றும் எகிப்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமே கூட எதிரியாக எகிப்திய அரசாங்கத்தின் பாத்திரத்தை அது திடப்படுத்தும்.

முபாரக்கின் ஆட்சி என்பது வெறுமனே ஒரு குற்றவியல் சர்வாதிகாரி மற்றும் அவரது குண்டர் கூட்டம் ஆகியவற்றின் விளைபொருள் மட்டுமன்று. மாறாக எகிப்தின் ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்குமான கருவியாகும் அது. பரந்துபட்ட மக்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் எகிப்திய முதலாளித்துவ வர்க்கம் திறனற்றிருப்பதில் இருந்து இந்த ஆட்சி எழுகிறது. இது வெறுமனே தேர்தல் சம்பிரதாயங்கள் (இது எகிப்தில் ஏராளமாய் உள்ளது) சம்பந்தப்பட்டதல்ல, மாறாக நாட்டை ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்தும் அந்நிய முதலீட்டிற்கான எகிப்திய அடிமைகளின் பிடியில் இருந்தும் மற்றும் கிராமப்புறங்களில் இப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அரைப்பிரபுத்துவ நிலச்சுவாந்தர்களின் பிடியில் இருந்தும் விடுவிப்பது சம்பந்தமானதாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த நிரூபணத்தை எகிப்தின் நிகழ்வுகளின் பாதை  ஏற்கனவே வழங்கியிருக்கிறது. தேசிய முதலாளித்துவத்தின் எந்த பிரிவும் ஒரு முற்போக்கான பாத்திரத்தை ஆற்ற முடியாது என்பதை ஒரு நூற்றாண்டு கால கசப்பான அரசியல் அனுபவம் நிரூபித்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் மட்டுமே, தன் பின்னால் கிராமப்புற ஏழைகளின் பரந்த மக்களை அணிதிரட்டிக் கொண்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக, முன்நோக்கிய பாதையைக் காட்ட முடியும். எகிப்தில் காணப்படும் வர்க்கப் பிரிவினைகள் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் ஆதிக்கம் செலுத்தும் யதார்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில், எகிப்தில் ஒரு சக்திவாய்ந்த மிருகத்தனமான ஒடுக்குதலுக்கு ஆளான தொழிலாள வர்க்கம் பெருகியுள்ளதோடு போலிஸ்-அரசு ஆட்சியுடன் போர்க்குணமிக்க மற்றும் இரத்தம் பாயும் போராட்டங்களில் தொடர்ச்சியாய் ஈடுபட்டு வந்திருக்கிறது.

தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் சிறப்புரிமை பெற்ற உயரடுக்கினர் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளான முபாரக் மற்றும் சுலைமான் தொடங்கி எல்பரடேய் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்திற்கும் இடையில் ஒரு கடக்கமுடியாத சமூகப்பிளவு உள்ளது. நகரின் சுற்றுப்புறங்களில் ஒரு சில முதலாளித்துவ குடியிருப்புகளில் கும்பல் கலக அச்சுறுத்தலுக்கு எதிராய் பாதுகாத்துக் கொள்வதெனக் கூறி முபாரக்கின் குண்டர்களால் செய்யப்படும் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தொழிலாள வர்க்கப் பகுதிகளில் குடியிருப்பு குழுக்கள் தன்னிச்சையாய் அமைக்கப்பட்டுள்ளதில் இந்த பிளவுகள் ஏற்கனவே வெளிப்படையாக ஆகியுள்ளன.

முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து முகவர்கள் மற்றும் கட்சிகளில் இருந்தும் சுயாதீனப்பட்ட தொழிலாளர்களின் சுய-ஒழுங்கமைப்பு தான் அவசர அவசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கு சோவியத்துகளை ஒத்த எகிப்திய தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு குழுக்களை அமைப்பது என்பதே இதன் பொருளாகும்.

இந்தப் போராட்டத்தில், பரந்த மக்களின் இயக்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி செலுத்தி சமூகத்தை சோசலிச வழிகளில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்கான புரட்சிகர நோக்குநிலையை அந்த இயக்கத்திற்கு புகட்டுவதற்கான அரசியல் தலைமையை உருவாக்கும் அவசியமே மிக அவசரமான அவசியமாய் இருக்கிறது.