World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

EU summit lines up with Washington on Egypt

எகிப்து பற்றிய வாஷிங்டனின் நிலைப்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு துணை நிற்கிறது

By Ulrich Rippert
5 February 2011

Back to screen version

கிப்திய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முபாரக் ஆட்சியின் மிருகத்தன எதிர்த்தாக்குதலின் நிழலில் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. தன் பங்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வெறுக்கத்தக்க இரட்டை பந்தையத்தை மேற்கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிக்கைகளில், ஐரோப்பிய ஒன்றியம் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும்ஜனநாயகத்திற்கு அமைதியான முறையில் மாற வேண்டும்என்றும் கூறுகிறது. அதே நேரத்தில் முபாரக்கின் சர்வாதிகாரம் மற்றும் இராணுவ ஆட்சிக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து அளிக்கிறது.

சமீபத்திய நாட்களில் நடைபெறும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், செவ்வாயன்றுமில்லியன் கணக்கானவர்களின் ஆர்ப்பாட்ட அணிவகுப்புஎன்று கெய்ரோவில் நடைபெறுவது உயர்கட்டத்தை அடைந்தமையினால், ஐரோப்பிய சக்திகளைப் பெரும் கவலையில்  ஆழ்த்தியுள்ளன. இயக்கத்தின் உறுதிப்பாடு மற்றும் புரட்சிகரத் தன்மை அவற்றை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. முழங்கால் நடுங்கும் நிலையில், அவை மிக வலுவான ஏகாதிபத்திய அரசாங்கமான வாஷிங்டனின் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிவர முற்பட்டுள்ளன.

ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர்வெல்லே (FDP-சுதந்திர ஜனநாயகக் கட்சி), எகிப்திய செங்கடலின் அற்புதமான கடலோரச் சுற்றுலாத் தலத்தில் தன் கிறிஸ்துமஸ் விடுமுறையை சில வாரங்களுக்கு முன் கழித்தவர், ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு காலை நிகழ்வில் வியாழனன்று கலந்துகொண்டு கூறியது: “ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இப்பொழுது நெருக்கமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனஅதன் பொருள் ஜேர்மனிய அரசாங்கமும் ஐரோப்பிய நிறுவனங்களும் முன்னதாகவே அமெரிக்க நிர்வாகம் முபாரக்கின் குண்டர்களுடைய மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கத் தயார் என்பது பற்றித் தகவல் கொடுக்கப்பட்டன என்பதாகும்.

இதே பேட்டியில் வெஸ்டர்வெல்லே எகிப்தில் வன்முறை இன்னும் தீவிரமாவதற்கு எதிராகவும் எச்சரித்து, “நிலைமை மோசமாகக்கூடும்என்று தான் அஞ்சுவதாகவும் கூறினார். இந்த இருண்ட குறிப்புக்களின் பின்னணியில் என்ன உள்ளது? வாஷிங்டனுடன் என்ன விவாதிக்கப்பட்டது? வன்முறை கைவிடப்பட வேண்டும் என்று பலமுறை விடப்படும் அழைப்புக்கள் மற்றும் சுதந்திர வெளிப்பாடுகள் தேவை மற்றும் எதிர்ப்புக்கள் பற்றிய கருத்துக்கள் எகிப்திய மக்களுக்கு ஆதரவு என்ற பொருளல்ல என்பது நன்கு தெளிவு. மாறாக ஐரோப்பிய அராசங்கங்கள் பல தசாப்தங்களாகத் தாங்கள் நைல் மற்றும் பிற மத்திய கிழக்கு சர்வாதிகாரங்களை ஆதரித்து வந்ததை, கவனத்தைத் திசைதிருப்ப முற்படுகின்றன என்பதுதான் உண்மை.

திங்கள் மற்றும் செவ்வாயன்று இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU, கிறிஸ்துவ ஜனநாய ஒன்றியம்) எகிப்தில்ஜனநாயக இயக்கத்திற்குத் தான் காட்டும் ஆதரவுதவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அவரிடம் கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய நிருபர்கள் முபாரக்கைக் கைவிடுகிறார் என்று குற்றம் சாட்டியதை இகழ்வுடன் அவர் நிராகரித்தார். பேர்லினுக்கும் கெய்ரோவிற்கும் இடையேயுள்ள பல ஆண்டுகள் பொருளாதார, இராணுவ ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்.

பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுகளுக்கான உயர் பிரதிநிதி கத்தரின் ஆஷ்டன், முபாரக் எகிப்திய மக்களின் விருப்பத்தை மதித்துவிரைவில் செயல்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இதேபோன்ற கருத்துக்கள் தற்பொழுது லண்டனிலுள்ள ஐ.நா. தலைமைச் செயலர் பான்கி மூனிடம் இருந்தும் வந்துள்ளன.

புதன்கிழமையன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் பாராளுமன்றத்தில் ஒரு பாசங்குத்தன உரையை அளிக்கும் வகையில், “அந்நாட்டில் சுதந்திரத்திற்காக உறுதியுடன் நிற்பவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள் என்று உலகம் முழுவதும் விரும்புவர்கள் பக்கத்தில் நாங்கள் உள்ளோம்என்று அறிவித்தார். ஜனநாயக மாற்றம்இப்பொழுதேதொடங்கவேண்டும், ஒரு தொலை வருங்காலத்திற்கு ஒத்திப்போடக்கூடாது என்றும் காமரோன் வலியுறுத்தினார்.

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நிலைப்பாடானஜனநாயகத்திற்கான மாற்றம் என்பது கெய்ரோ அல்லது எகிப்தின் மற்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் கூட்டங்களால் முடிவெடுக்கப்பட மாட்டாது என்பதை காமரோன் கூறவில்லை. மாறாக இது ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாட்டின் கீழ்ச்  செயல்படுத்தப்பட வேண்டும்.

பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டு விவாதம், ஆகவே முற்றிலும் 82 வயதான முபாரக்கிற்குப் பதிலாக பதவிக்கு யார் சிறப்பாக இருக்கும் என்பதைத்தான் குவிப்பாகக் கொண்டிருந்தது. அதேபோல் தற்பொழுதுள்ள மிருகத்தனமான அதிகார சக்தியை எப்படித் தக்கவைத்துக் கொள்ள இதை உறுதி செய்யவேண்டும், மக்கள் இதில் தீவிரத் தொடர்பு மற்றும் பங்கு பெறுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் குவிப்பு இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்களின் முக்கிய அக்கறை இதுதான். இதையொட்டி அப்பகுதியில் தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்கலாம் என்று அவைகள் நம்புகின்றன.

பிரஸ்ஸல்ஸின் பார்வையில் இப்பங்கு எதிர்ப்பு இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் என்று அதிகம் பாராட்டப்படும் பல புள்ளிகளில் ஒருவர் மீது விழக்கூடும். இதில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் மஹ்மத் எல்பரடெய் ஆவர். இவர் சர்வதேச அணுசக்தி அமைப்பின் முன்னாள் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துபவராக இருந்தவர். புதனன்று இந்த ராஜதந்திர அதிகாரியாக இருந்தவர் தொலைபேசியில் பல மணிநேரம் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர்வெல்லேயுடன் பேசினார். அதற்கு முந்தைய தினம் அவர் ஏற்கனவே பிரிட்டன் மற்றும் அமெரிக்கத் தூதர்களுடன் முபாரக்கிற்கு மாற்றீடு பற்றிய தன் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

சமீபத்தில் முபாரக்கால் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் இடைக்கால ஜனாதிபதியாகப் பணியாற்றலாம் என்று எல்பரடெய் கூறியுள்ளார். “அவர் பதவிக் காலத்தில் பாராளுமன்றத்தில் இரு பிரிவுகளும் கலைக்கப்பட்டு, அரசியலமைப்புத் திருத்தப்பட்டு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு தயாரிப்புக்கள் நடத்தலாம்என்பதுதான் எல்பரடெயின் கருத்துக்கள் என்று Spiegel Online சுருக்கமாகக் கூறியுள்ளது. தெஹ்ரானிலுள்ள ஆட்சியுடன் நல்ல தொடர்புகளை எல்பரடெய் கொண்டாலும், அவர் ஐரோப்பிய அரசியல் உயரடுக்கின் நன்மதிப்பையும் கொண்டுள்ளார். ஆனால் எகிப்தில் அவருக்கு வெகுஜன ஆதரவு அதிகம் இல்லை.

எல்பரடெய்க்கு முற்றிலும் மாறாக, அரபு லீக்கின் தலைமைச் செயலரான  அமர் மூசா, எகிப்தின் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று விவரிக்கப்படுகிறார். இவ்வாரம் முன்னதாக, அமெரிக்க ஒளிபரப்பு நிலைய CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் எகிப்தின் ஜனாதிபதிப் பதவிக்கு நிற்கப்போவதாக அறிவித்திருந்தார். ஜேர்மனிய அரசாங்கம் சில காலமாக அவருடனும் தொடர்பைக் கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அவர் பேர்லினுக்கு மத்திய கிழக்கில் அமைதி வழிவகைகள் பற்றி விவாதிக்க வந்திருந்தார். அதன் பின் ஜேர்மனிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்வெளிப்படையான, நட்புரிமையுடன் நடத்திய பேச்சுக்களுக்காகஅவருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

ஜேர்மனியின் வெளியுறவுக் குழுவின் மத்தியதரைகடல் பகுதிப் பிரச்சினைகள் பற்றிய ஒரு ஐரோப்பிய ஒன்றிய வல்லுனரான அல்முட் மோலர், “அமர் மூசா சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ள நபர், இவர் மேலைத்தேய முறையின் மதிப்புகளில் கைதேய்ந்தவர்என்று கூறியதாக Spiegel-Online மேற்கோளிட்டுள்ளது. மூசா அரபு லீக்கின் தலைமைச் செயலர் என்ற பங்கில் நம்பகமான பங்காளியாக இருந்தார் என்பதை மேற்கு நன்கு அறியும். “எகிப்தில் மூசா ஒரு முக்கிய அரசியல் பங்கைக் கொண்டால், ஜேர்மனிய அரசாங்கத்திற்கு தொடர்பு வாய்ப்புக்கள் விரைவில் நிறுவப்படும்என்று மோலர் கூறினார்.

எகிப்தில் மேலைத்தேய அரசாங்கங்களுக்கு மூன்றாவது முக்கிய பங்கு பெறக்கூடும் என்று பேசப்படுபவர் ஐமன் நூர் ஆவார். இந்தத் தாராளவாத வக்கீல்  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கட்சியை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தேர்தல்களில் பதிய வைப்பதற்காக தவறான உண்மைகளை உரைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேற்கில் நன்கு அறியப்பட்டார். அரசியல் செயல்களுக்காக இவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் அகற்றப்படவில்லை. இதன் பொருள் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் பங்கு பெறுவது இயலாதது ஆகும்.

எகிப்தில்ஜனநாய மாற்றீடுகள்என்பது பற்றிய விவாதங்கள், ஐரோப்பிய உச்சமாநாட்டிற்கு முன்னதாக நடைபெறுபவை, ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களும் அமெரிக்காவும் கெய்ரோவில் ஒரு ஏகாதிபத்திய சார்புடைய ஆட்சியாளரை நியமிக்கும் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன, அந்த ஆட்சியாளர் அவைகளின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாப்பார், தேவையானால் முபாரக்கை விடச் சற்றும் குறைவற்ற வன்முறையைப் பயன்படுத்தி என்பதை மிகவும் தெளிவாக்குகிறது.

புதன்கிழமை துனிசியாவிற்குச் சென்றிருந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை பிரிவுத் தலைவர் கத்தரின் ஆஷ்டன் நாட்டின் புதிய இடைக்கால அரசாங்கத் தலைவரிடம் ஐரோப்பிய நலன்கள் அவருடைய நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரினார்---குறிப்பாக பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் ஐரோப்பாவிற்கு வறிய துனிசியர்கள் குடியேறுவதைத் தடுத்தல் ஆகியவற்றையாகும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த பெரும் ஒலிக்குறிப்புடைய சொற்றொடர்கள், ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க ஆலோசனையுடன் எகிப்திய மக்கள் என்றில்லாமல் தாம்தான் கெய்ரோவில் வருங்கால அரசாங்கம் பற்றி முடிவெடுப்பர் என்பதை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.