WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
Deadly
crackdown against Egyptian protesters
எகிப்தில் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரமான அடக்குமுறை
By
Patrick O’Connor
3 February 2011
Back
to screen version
நேற்று
எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்,
ஆயிரக்கணக்கான
ஆட்சிக்கு ஆதரவு தரும் குண்டர்கள்,
ஆத்திரமூட்டுபவர்கள்
மற்றும் சாதாரண உடையிலிருந்த பொலிஸார் ஆகியோரை சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கக்கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டார்.
குறைந்த பட்சம்
ஐந்து பேராவது கொல்லப்பட்டனர்.
இறுதி எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்து இருக்கும்.
நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.
பலரும் ஆபத்தான
நிலையில் உள்ளனர்.
இத்திட்டமிட்ட தூண்டுதல் செயல் இராணுவத்தின் உதவியுடன் நடந்தது.
இது நாள் முழுவதும்
வன்முறைத் தாக்குதல்களை நடத்த அனுமதித்தது.
முபாரக்கிற்கு ஆதரவு
கொடுக்கும் சக்திகள் திறமையுடன் இராணுவத்தால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு மத்திய
கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
இங்குதான் ஆட்சிக்கு
எதிரான எதிர்ப்புக்களுக்கு குவிப்பு மையம் ஆகும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது எதிர்ப்பை நிறுத்தி
“இயல்பான வாழ்வை
மீட்க வேண்டும்”
என்று இராணுவத்
தலைவர்கள் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்தில் இது நடந்தது.
இந்த வன்முறை
எகிப்தில் புரட்சிகர சக்திகளை மிரட்டிப் பிரிக்கும் நோக்கம் கொண்டது என்பதுடன்,
இராணுவம் இன்னும்
நேரடியாகத் தலையிடுவதற்கான சூழ்நிலையையும் தோற்றுவிக்கிறது.
செப்டம்பர்
வரை அதிகாரத்தில் முபாரக் தொடர்வதற்கான தங்கள் ஆதரவை மூத்த தளபதிகள் அடையாளம்
காட்டியுள்ளனர்.
இது
இராணுவத்திற்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அமெரிக்க இராணுவம்,
உளவுத்துறையுடன்
இணைந்து துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் அல்லது
“வேறு ஒரு
பாதுகாப்பான கரங்களில்”
முபாரக்கிற்குப்
பின்னர் பதவியை ஒப்படைப்பதற்கு வாக்குச்சீட்டுப் பதிவில் தில்லு முல்லுகள்
தயாரிப்பிற்குப் போதிய அவகாசத்தை கொடுக்கும்.
முபாரக்கின்
குருதி கொட்ட வைத்த வன்முறைத் தாக்குதலுக்கு ஒபாமா நிர்வாகம் முற்றிலும் உடந்தையாக
உள்ளது.
நேற்றைய
நிகழ்வுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகையின் ஆலோசனை பெறப்பட்டது,
அது பச்சை விளக்கைக்
காட்டியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
முபாரக்
சார்பில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றும் தன்னெழுச்சியுடன்,
இயல்பாக
நடைபெறவில்லை.
பல பொதுத்துறைத்
தொழிலாளர்கள் அதில் சேருமாறு உத்தரவிடப்பட்டனர்.
தேசிய
பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தொழிலாளர்கள்
CNN நிருபர்களிடம்
அவர்கள் தெருக்களுக்கு செல்லுமாறு உத்திரவிடப்பட்டதாக கூறினர்.
தலைநகரில் இருந்த
மற்றவர்களுக்கு இதற்குப் பணம் கொடுக்கப்பட்டது.
முபாரக் ஆதரவைத்
தாங்கிய அட்டைகளை ஏந்துவதற்கு மக்களுக்கு
50 எகிப்திய
பவுண்டுகள் (கிட்டத்தட்ட
$8-50)
கொடுக்கப்பட்டது என்று
நியூ யோர்க் டைம்ஸ்
தகவல் கொடுத்துள்ளது.
கெய்ரோவின்
சில மிகச் செல்வக்கொழிப்புடைய பிரிவினர் விரும்பிப் பங்கு பெற்றனர் என்று சில
தகவல்கள் கூறுகின்றன.
“உயர்-வர்க்க
புறநகரான மொகன்டிசீனிலிருந்து”
வந்த தகவல்களை
அளிக்கையில்
Associated Press, “எப்படி
சிறப்புக் கறுப்புக் கண்ணாடிகள் அணிந்து,
பெண்கள் ஆடம்பரமான
தலையலங்காரத்துடன் அரசாங்க ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில்
எப்படி சில டஜன் செவிலியர்கள் வெள்ளைச் சீருடையில் கால்களில் ஸ்டாக்கிங்க்ஸ்
அணிந்திருந்தனர்,
எப்படி அவர்கள்
மகிழ்ச்சியுடன் “உங்களை
நேசிக்கிறோம்,
முபாரக்!”
என்று கூவினர் என்று
தெரிவித்துள்ளது.
எகிப்தில்
பெரிதும் வெறுக்கப்படும் பொலிஸ் படையினர் கடந்த வாரம் தெருக்களில் அதிகம்
காணப்படவில்லை—ஆனால்
நேற்று முழு ஆற்றலுடன் வெளிப்பட்டனர்.
சிலர் சீருடையில்
இருந்தனர்,
முபாரக்கின்
குண்டர்களால் வீரர்கள் என்று பாராட்டப்பட்டனர்.
பலரும் சாதாரண
உடையில் இருந்தனர்.
சிலர் அரசாங்க
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்களுடைய பொலிஸ் அடையாள அட்டையுடன்
பிடிக்கப்பட்டனர்.
செய்தியாளர் ரெஹம்
சயித் பொலிஸ் சீருடை அணிந்த நபர்கள் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அருகே இருந்த உணவு
விடுதிகளில் நுழைந்து பின்னர் சாதாரண உடையில் வெளியே வந்ததைப் பார்த்ததாகக்
கூறியுள்ளார்.
பல அரசாங்க
சார்பு கைபேசித் தகவல்கள்
“எகிப்தை
நேசிப்பவர்களுக்கு”
தஹ்ரிர்
சதுக்கத்தில் கூடுமாறு நேற்று அனுப்பப்பட்டது உட்பட,
மொத்தமாக பல
அனுப்பப்பட்டன.
கார்டியன்
மேலும் குறிப்பிடுவதாவது:
“எகிப்திய அரசாங்கத்
தொலைக்காட்சியானது வெளிநாட்டினர் முபாரக் எதிர்ப்புத் துண்டுபிரசுரங்களை
வினியோகித்தபோது பிடிபட்டனர்.
இது வேண்டுமென்றே
வெளிநாட்டார் தூண்டிவிட்டது என்று சித்தரிக்க முயல்வதற்காகச் செய்யப்பட்டது.”
CNN
கருத்துப்படி,
ஒரு அரசாங்கத்
தொலைக்காட்சி கூறியது:
“இராணுவம் பொறுப்பை
எடுத்துக் கொண்டு உங்களையும் எகிப்தையும் பாதுகாக்கட்டும்…
சில தீவிரபோக்குச்
சக்திகள் உள்நாட்டு மோதல்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு
உறுதியான தகவல்கள் வந்துள்ளன.
அவர்களிடம்
நெருப்புக் கோளங்கள் உள்ளன,
அவர்கள் தஹ்ரிர்
சதுக்கத்தில் தீ வைக்கத் தொடங்க விரும்புகின்றனர்.”
விரைவான
அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கைகள்,
“வெளிநாட்டு
கட்சிகளிடம்”
இருந்து வருபவை,
“எகிப்தில்
உள்நாட்டுக் குழப்பதைத் தூண்டும் நோக்கம் கொண்டுள்ளது”
வெளியுறவு
அமைச்சினால் விநியோகிக்கப்பட்டது எனக்கூறிய அறிக்கையை எகிப்திய செய்தி ஊடகம்
சுட்டிக்காட்டியது.
நாடு
மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்னும் தோற்றத்தைக் காட்டும் முயற்சியில்,
ஆட்சி இணையதள மூடலை
அகற்றியுள்ளதுடன்,
மாலை
3 மணியில் இருந்து
காலை 8
மணி வரை என்று இருந்த
ஊரடங்கு உத்தரவை,
மாலை
5 மணியில் இருந்து
காலை 7
மணி வரை என்று
குறைத்துள்ளது.
அரசாங்கத்
தொலைக்காட்சியில் ஒரு இராணுவச் செய்தித் தொடர்பாளர் முபாரக் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்கிறார்:
“நாம் தெருக்களில்
பாதுகாப்பாக நடக்க முடியுமா?
நாம் மீண்டும்
பணிக்கு ஒழுங்காகச் செல்லுவோமா?
தெருக்களில் நம்
குழந்தைகளுடன் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நாம் செல்ல முடியுமா?
நம் கடைகளை,
ஆலைகளை,
விடுதிகளைத்
திறக்கலாமா?
இயல்பான வாழ்விற்கு
மீண்டும்
செல்லும் நேரம்
வந்துவிட்டது.
எகிப்தில் இயல்பான
வாழ்விற்குத் திரும்ப அனுமதிக்கும் சக்தி உங்களுக்கு உண்டு.
… உங்கள் தகவல்
கிடைத்துள்ளது,
உங்கள் கோரிக்கைகளை
அறிவோம்.”
இதைத்
தொடர்ந்து உடனே செய்தி ஒளிபரப்பு ஒரு தகவலை வெளியிடுகிறது:
“இராணுவப் படையினர்
உறுதியான நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு எதிர்ப்பாளர்களை வீடுகளுக்குச்
செல்லுமாறு அழைப்புவிடுகிறது.”
இதைத்தொடர்ந்து பிற்பகல்
2 மணிக்கு
ஆயிரக்கணக்கான மனிதர்கள்,
கத்திகள்,
மொலடோவ் கலவைத்
திரவங்கள்,
கற்கள்,
மட்டைகள் மற்றும்
பிற ஆயுதங்களை ஏந்தி தஹ்ரிர் சதுக்கத்தில் வேகமாக நுழைந்தனர்.
அவர்கள் அங்கு
செவ்வாய் வெகுஜன ஆர்ப்பாட்டம் மற்றும் பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர்
தெருக்களில் எஞ்சியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக
இருந்தனர்.
அமைதியான முபாரக்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உட்பட்டபின்,
தங்களைக் காத்துக்
கொள்ள முயன்ற அளவில்,
கடுமையான மோதல்கள்
நிகழ்ந்தன.
ஒரு கட்டத்தில்
அரசாங்கச் சார்புக் குண்டர்கள் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏறி
எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதலை நடத்தினர்.
கார்டியன்
செய்தியாளர் முஸ்தபா கலிலி,
ஒரு கல் அவரைத்
தாக்கிய நிலையில் காயமுற்று இருந்தவர்,
தஹ்ரிர்
சதுக்கத்தில் நிறுவப்பட்ட பல தற்காலிக மருத்துவ மையங்களில் ஒன்றில் நடந்த காட்சியை
விளக்குகிறார்:
“50 பேருக்கும்
மேலான காயமுற்றவர்கள் இருந்தனர்.
சில காயங்கள்
கொடூரமானவை.
ஒரு மனிதருடைய இடது
கண்கள் இரத்தம் சிந்திக் கொண்டு இருந்ததை நான் பார்த்தேன்,
சிலர் முறிந்த
கைகளுடன்,
சிலர் உடைபட்ட பற்களுடன்
இருந்தனர்.
இவர்கள் முகத்தில்
கற்கள் வீசப்பட்டிருந்தன.”
மற்றய தீவிர
மோதல்கள் கெய்ரோவிலுள்ள எகிப்திய அருங்காட்சியகத்திற்கு வெளியே நடந்தது என்று
தகவல்கள் வந்துள்ளன.
அதேபோல்
அலெக்சாந்திரியாவிலும் திட்டமிடப்பட்ட தூண்டுதல் தன்மை உடைய தாக்குதல்கள் முபாரக்
ஆட்சியால் செய்யப்பட்டன.
பல செய்தியாளர்கள்
குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காயினர்.
CNN உடைய ஆண்டர்சன்
கூப்பரும் அவருடைய இரு சக ஊழியர்களும் தாக்கப்பட்டனர்.
அதே போல்
Associated Press
நிருபர்களும் தாக்கப்பட்டனர் ஒரு பெல்ஜிய நிருபர் உதைக்கப்பட்டு,
தடுத்துவைக்கப்பட்டு
அவர் ஒற்று வேலை செய்கிறார் என்னும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார்.
நேற்று பின்
மாலையில்—எகிப்திய
நேரப்படி—துணை
ஜனாதிபதி சுலைமான் இராணுத்தின் கோரிக்கையான ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி
வேண்டும் என்பதுடன் தன் குரலையும் சேர்த்துக் கொண்டார்.
எதிர்க்கட்சிகளுடன்
“உரையாடலுக்குத்”
தயார் என்று அவர்
தெருக்களில் முபாரக் எதிர்ப்பு இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை
விதித்தார்.
அரசாங்கச்
சார்பு சக்திகள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை
இரவும் தொடர்ந்தனர்.
சில தகவல்களின்படி
கூட்டத்திற்குள் ஐந்து சுற்றுக்கள் வெடிமருந்துகள் வெடிக்கப்பட்டன.
அல்ஜீசிரா நடத்தும்
தொடர்ச்சியான இணைய தளத்தில் உள்ளுர் நேரம் அதிகாலை
1.47க்கு,
“டஜன் கணக்கான
முபாரக் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும்
[தஹ்ரிர்
சதுக்கத்தையொட்டி]
தடுப்புக்களை நிறுவி,
அரசாங்க
எதிர்ப்பாளர்களை பொறியில் சிக்க வைத்தனர்.
அவர்கள் கற்களைச்
சேகரித்து,
தெருவிளக்குகளை
உடைத்து,
தலை,
கழுத்து ஆகியவற்றை
மறைத்துக் கொண்டு,
முகங்களை
மூடிக்கொண்டு,
அரசாங்க எதிர்ப்புச்
சக்திகளுடன் புதிய மோதலுக்குத் தயாராயினர்.
சிலர் எமது
நிருபரிடம் மோதலுக்குத் தயாரிப்பு நடத்துபவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறினர்.”
3.15
அதிகாலையில்
blog
கூறியது:
“அரசாங்க எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் தஹ்ரிர் சதுக்கத்தின் நுழைவுகளில் இரண்டிற்கு அருகே கற்களைச்
சேகரிக்கின்றனர்.
இது தாக்குதலுக்குத்
தயாரிப்பு ஆகும்.
அநேகமாக
சதுக்கத்தில் இருப்பவர் அனைவரும் காயமுற்றுள்ளனர்,
கை கால்களில்
கட்டுக்கள் போடப்பட்டுள்ளன,
நகர்வதற்குச்
சிரமப்பட்டுத்தான் நடக்கின்றனர் என்று எமது வலைத் தள ஒழுங்கமைப்பவர்களில் ஒருவர்
தகவல் அளித்தார்.”
முபாரக்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுகையில்,
இராணுவம் தொடர்ந்து
வெறுமனே நிற்கிறது.
தொழிலாளர்கள்
மற்றும் இளைஞர்களிடையே இராணுவத்தைப் பற்றியப் போலித்தோற்றத்தை விதைக்க முற்பட்ட
எகிப்திலுள்ள அரசியல் சக்திகளின் போலித்தன,
குற்றம் சார்ந்த
தன்மையைத்தான் இராணுவத்தின் உடந்தைத் தன்மை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மஹ்மத்
எல்பரடெய் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ இரு பிரிவினருமே இராணுவப் படைகள்
“நாட்டின் பாதுகாவல்
அமைப்பு”, “ஆட்சி
எதிர்ப்பு எழுச்சியின் நட்பு”
என்று
பாராட்டியவர்களில் இருந்தனர்.
முபாரக் எதிர்ப்புச்
சக்திகள் மிருகத்தனமாக இராணுத்தின் பார்வையில் தாக்கப்படும்போது,
நேற்று எல்பரடெய்
இராணுவத்திற்குப் பரிதாபகரமான முறையில்
“இப்படுகொலையை
நிறுத்த உறுதியாகத் தலையிடவும்”
என்ற
முறையீட்டைத்தான் விடுத்தார்.
சமீபத்திய
நிகழ்வுகள் தொழிலாள வர்க்கம் தன் சொந்த சுயாதீன தலைமையை அபிவிருத்திசெய்து,
போராட்டத்திற்கான
புதிய ஜனநாயக வடிவம் கொண்ட அமைப்புக்களை நிறுவ வேண்டியதின் எரியும் தேவையை
நிரூபிக்கின்றன.
அதில் வேலைநிறுத்தம்
செய்பவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆகியோர் முபாரக்கின் குண்டர்களிடம் இருந்து
தம்மைக் காத்துக்கொள்ள ஆயுதமேந்திய பாதுகாப்புக் காவலர்களும் அடங்கும்.
தொழிலாள
வர்க்கம்,
முபாரக் எதிர்ப்பு
இயக்கத்தில் இன்னும் முக்கியமான பங்கைக் கொள்ள முற்படும் அதே நேரத்தில் வன்முறை
மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடப்பது ஒரு
தற்செயல் நிகழ்வு அல்ல.
நேற்று
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்,
தொழில் நகரமான
சூயஸ்ஸில் இருந்து ஏற்கனவே
30 பேர்
கொல்லப்பட்டுவிட்டதாகத் தகவல் கொடுத்துள்ளது.
“பல
ஆண்டுகளாக பொலிஸ் ஊழல்,
உதைகள் மற்றும்
மிரட்டல்கள் விளைவித்துள்ள அடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வு
நகரத்தை விந்தையான முறையில் அமைதியாகச் செய்து,
இப்பொழுது புயல்
வீசத் தொடங்குகிறது.
பல செல்வந்தர்கள்
ஓடிவிட்டனர்,
தொழிலாளர்கள்
தெருக்களுக்கு வந்துவிட்டனர்,
வறியவர்கள் ஊரடங்கு
உத்தரவிற்கு முன் சந்தைகளுக்கு விரைகின்றனர்”
என்று செய்தித்தாள்
எழுதியுள்ளது.
வேலைநிறுத்தம் செய்துவரும் இரசாயன ஆலைத் தொழிலாளி கர்மல் பன்னாவிடம் நிருபர்கள்
பேசினர்.
அவர் கூறியது:
“எங்களை
வறியவர்களாகவே அரசாங்கம் வைத்திருந்தது.
நாங்கள் அரசியல்
பற்றி பேசுவதில்லை,
காரணம் தப்பி
வாழ்வதற்கே கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இதன்பின் நாங்கள்
அரசியல் பேசத் தொடங்கியவுடன் அவர்கள் எங்களைக் கொல்கிறார்கள்.
இப்பொழுது
திரும்பிச் செல்லவும் இயலாது.
முபாரக் கண்டிப்பாக
விலக வேண்டும்.
பொலிஸ் மீண்டும்
வந்தால்,
அவர்கள் பழிதீர்க்க
முற்படுவர்.”
எல்பரடெய்,
முஸ்லிம்
சகோதரத்துவம் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பின் மிஞ்சிய பிரிவுகளைப் பொறுத்தவரை,
வாஷிங்டனுடன்
நெருக்கமாக ஒத்துழைத்து,
முதலாளித்துவ
ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
அதே நேரத்தில்
இராணுவம் உட்பட அரசாங்க அடக்குமுறைக் கருவியின் மையக் கூறுகளின் தன்மையையும்
மாற்றாமல் வைத்திருப்பதாகும்.
ஆனால்
மறுபுறம் தொழிலாளர்களும் இளைஞர்களும்,
அவர்களுடைய ஜனநாயக
விழைவுகள் மற்றும் கௌரவமான வேலைகள்,
ஊதியங்கள்,
பணி நிலைமைகள்,
கல்விக்கான
வாய்ப்புக்கள் மற்றும் பிற அடிப்படை சமூகப் பணிகள் அனைத்தையும் இருக்கும் இலாப முறை
மற்றும் எகிப்திய முதலாளித்துவ அரச ஸ்தாபனங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாது.
தொழிலாள
வர்க்கத்தின் பணி சுயாதீனமாக அணிதிரண்டு எழுதல் ஆகும்.
கிராமப்புற
மக்களையும் நகர்ப்புற மத்தியதர வர்க்கக் கீழ்த்தட்டு வகுப்புக்களையும் ஒரு
புரட்சிகர தொழிலாளர்கள் அரசாங்கத்தின் போராட்டத்திற்காக ஒன்றிணைக்க வேண்டும்.
அந்த அரசாங்கம் ஒரு
சர்வதேசிய,
சோசலிச
வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். |