செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
Tunisian uprising continues
துனிசிய எழுச்சி தொடர்கிறது
By Ann Talbot
2 February 2011
Use this version to print | Send
feedback
பென் அலி ஆட்சியின் சில பழைய முகங்களை
அரசாங்கம் அகற்றியதைத் தொடர்ந்து தெருக்களில் எதிர்ப்புக்கள்
சற்று குறைந்தாலும்கூட,
துனிசிய எழுச்சி தொடர்கிறது.
மேலும்
கூடுதலாக தொழிலாள வர்க்கத் தன்மையையும் இது அடைந்துவருகிறது.
அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்துறைகள்,
அமைச்சரகங்கள் மற்றும் ஹோட்டல்களில் அவ்வப்பொழுது திடீரென
வேலைநிறுத்தங்கள் நடக்கின்றன.
துனிசிய விமான நிலையத்தை செயலிழக்கச் செய்த
சமீபத்திய வேலைநிறுத்தத்தில்,
விமான
நிலைய தொழிலாளர்கள் கூடுதல் ஊதியம் கோரியுள்ளனர்.
வேலைநிறுத்தம் திடீரென வெடித்தது.
தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வமாக தயாரிக்கப்படாமலேயே இது
நடந்தது.
நிறுவனத்தின் தலைவர்
Montassar Wali
குறிப்பிடப்படாத காரணங்களுக்காக இந்த வாரம் இராஜிநாமா செய்தார்.
துனிசியத் தொலைத்தொடர்பு தொழிலாளர்களும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நிறுவனத்தை
Paris Bourse
ல்
இணைக்கப்படும் திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.
சாதாரண
தொழிலாளர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையேயுள்ள ஊதிய
இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள்
விரும்புகின்றனர்.
குறைந்த பட்சம் ஒரு பெரிய ஹோட்டலின்
ஊழியர்களாவது வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.
மேலாளர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
உயர்கல்வி அமைச்சரகத்தின் ஊழியர்களும் எதிர்ப்பு
வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.
செவ்வாயன்று புதிய மந்திரிசபை கூடி பாதுகாப்பு
நிலைமையை விவாதித்ததுடன்,
ஊரடங்கு உத்தரவைத் தொடர முடிவெடுத்தது.
அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர்,
“நிலைமை
இன்னும் உறுதிப்படவில்லை”
என்றார்.
சமீபத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
அவை
பழைய ஆட்சியின் குற்றவாளிக் கும்பலின் கொள்ளைச் செயல்களாக
இருக்கும் அல்லது மக்களை அச்சுறுத்தும் வகையில்
திட்டமிடப்பட்டு நடந்த செயல்களாக இருக்கும்.
இவை
எழுச்சியை இராணுவ வன்முறையைப் பயன்படுத்தி அடக்குவதற்கான
சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் இலக்கு கொண்டவை.
செவ்வாயன்று இளைஞர்களின் கூட்டம் ஒன்று செல்வம்
மிக்க துனிஸ் புறநகரான
Carthage
ல்
தோன்றி,
பள்ளிகளைத் தாக்கியது.
இராணுவம் அவர்கள் தலைக்கு மேல் சுட்டு,
அவர்களைக் கலைத்தது.
திங்களன்று பொதுக் கட்டிடங்கள் தாக்கப்பட்டு
கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம்
நடந்தது.
UGTT
யின்
உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகள் இதற்குப் பொறுப்பானவர்களை
முன்னாள் ஆளும் கட்சியான
RCD
உறுப்பினர்கள் என்று அடையாளம் கண்டனர்.
திங்கள் இரவன்று தீ வைப்பவர்கள் கேப்ஸ்
நகரத்தில் ஒரு யூதர் வழிபாட்டு தலத்திற்கு நெருப்பு வைத்தனர்.
சனிக்கிழமையன்று இளைஞர் கூட்டம் ஒன்று துனிசில் பல இடங்களை
சூறையாடி,
பெண்ணுரிமைவாதிகள் இயக்கத்தின் அணிவகுப்பு ஒன்றையும் கலைத்தனர்.
தடிகளையும்,
கத்திகளையும் கொண்டிருந்த உள்ளூர்க் கடைக்காரர்கள் அவர்கள்
அனைவரையும் விரட்டியடித்தனர்.
இத்தகைய ஆத்திரமூட்டும் தன்மையுடைய செயல்களை
செய்வதற்கான
RCD
ஆதரவாளர்களின் திறன் தொழிலாளர்களும் கிராமப்புற வறியவர்களும்
துனிசிய எழுச்சியிலிருந்து தங்கள் சுயாதீன தலைமையை நிறுவிக்
கொள்ளாததுதான்.
21
வயதான
ஐமென் பென் பெல்கசிம் சனிக்கிழமையன்று தெற்கு துனிசியப்
பகுதியான காப்சாவிலுள்ள எல்-குட்டரில்
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.
இத்திகைப்பிற்குரிய செயலை அவர் செய்ததற்குக் காரணம் வறுமை
நிலைமைகள்,
வேலையின்மை மற்றும் இந்த பாஸ்பேட் சுரங்கப் பகுதியிலிருக்கும்
அடக்குமுறை ஆகியவைதான்.
அவர்
துனிசில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அவருடைய நிலைமை ஆபத்திற்கு இடமாக உள்ளது.
இத்தகைய பெருந்திகைப்புத்தரும் செயல் மல்லிகைப் புரட்சி என்று
அழைக்கப்படுவதற்குப் பின்னரும் மறுபடியும் நேர்ந்துள்ளது
என்பது உண்மையான அரசியல்,
பொருளாதார அல்லது சமூக முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதைத்தான்
சுட்டிக்காட்டுகிறது.
பென்
அலியின் கீழ் பிரதம மந்திரியாக இருந்த மஹ்மத் கன்னொச்சியின்
கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது.
பென்
அலியுடன் மிகப் பகிரங்கமாக தொடர்பு கொண்டிருந்த சில
அமைச்சர்களை அவர் பதவி நீக்கம் செய்யும் கட்டாயத்திற்கு
உட்பட்டார்.
அதில்
வெளியுறவு மந்திரி கமெர் மோர்ஜனேயும் அடங்குவார்.
ஆனால்
இப்படி மாற்றி அமைக்கப்பட்ட காபினெட் கடந்த காலத்திலிருந்து
ஒரு முறிவைப் பிரதிபலிக்கவில்லை.
சமீபத்தில் நடந்த சில வன்முறை சம்பவங்கள் பழைய
ஆட்சியின் கூறுகளின் வேலை என்று கூறினால் அது வியப்பைத் தராது.
ஏனெனில் பென் அலி நம்பியிருந்த அனைத்துப் பாதுகாப்பு
பிரிவுகளும்—இராணுவம்,
பொலிஸ்
மற்றும் இரகசியப் பொலிஸ் ஆகியவை—அப்படியே
இன்னும் செயல்படுகின்றன.
அவற்றைக் கலைக்க முயற்சி ஏதும் செய்யவில்லை அல்லது
எதிர்ப்புத்தரப்பினர் இறப்பிற்குப் பொறுப்பானவர்களை நீதியின்
முன் நிறுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
குறைந்தபட்சம்
219
பேராவது எழுச்சியின் போது கொல்லப்பட்டனர்,
மற்றும்
510
பேர்
காயமுற்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.
நாட்டின் சிறைகளில் மட்டும்
72
பேர்
இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர்களில்
48
பேர்
மொனஸ்டிர் சிறையில் இருந்தவர்களாவர்.
ஐக்கிய
நாடுகள் சபையின் விசாரணை இன்னும் நடைபெறுகிறது,
இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
சர்வதேசளவில்,
பென்
அலியின் சொத்துக்களை முடக்க அல்லது கைப்பற்றும் விதத்திலான சில
முகத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
அவருடைய மருமகன்களில் ஒருவருடைய விமானம் ஒன்று பிரான்ஸில்
Le Bourget
விமான
நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.
சுவிஸ்
அதிகாரிகளும் ஒரு விமானத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
ஐரோப்பிய மந்திரிகள் பென் அலி மற்றும் அவருடைய மனைவி லெய்லா
ட்ராபெல்சியன் சொத்துக்களை முடக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால்
துனிசிய கருவூலத்திலிருந்து
56
மில்லியன் டொலர் மதிப்புடைய
1.5
டன்
எடையுள்ள தங்கத்துடன் தம்பதிகள் ஒரு ஆடம்பரமான வகையில்
வெளிநாட்டில் உள்ளனர்.
மொத்தத்தில் குடும்பத்தின் சொத்துக்கள்
$10
முதல்
$12
பில்லியன் வரை இருக்கலாம்,
அவை பல
நாடுகளில் பரவிக்கிடக்கின்றன என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் தொடர் ஹோட்டல்கள்,
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்,
கார்த்
தயாரிப்பு ஆலைகள்,
துனா
மீன்பிடிப்புத் தொழில்,
தொலைத்தொடர்புகள்,
வங்கி,
காப்பீட்டு முறை நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.
துனிசியப் பொருளாதாரத்தில்
30
முதல்
40
சதவிகிதம் வரை குடும்பம் கட்டுப்படுத்துவதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களில் கிட்டத்தட்ட
30
பேர்
கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு அவர்கள் அகற்ற முயன்ற
மதிப்புடைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆனால்
கடந்த
23
ஆண்டுகளாக பென் அலி மற்றும் அவரின் பெரும் குடும்பம்
கொள்ளையடித்துச் சேகரித்த செல்வங்களில் பெரும்பாலானவை எங்கு
உள்ளன என்பது பற்றித் தெரியவில்லை.
பிரான்ஸ்,
சுவிஸ்சர்லாந்து மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்துள்ள
அறிக்கைகள் வெறும் பெயரளவுத் தன்மையைத்தான் கண்டுள்ளன.
பல
ஆண்டுகள் பென் அலியுடன் இணைந்து செயல்பட்ட அரசாங்கங்கள் தங்களை
இந்தச் சரிந்துவிட்ட சர்வாதிகாரியிடமிருந்து ஒதுக்கி வைத்துக்
கொள்ளும் கால தாமதமான முயற்சியைத்தான் அவை பிரதிபலிக்கின்றன.
உலகின் பிரதான சக்திகள் தங்களைத் தம் முன்னாள்
நண்பரிடமிருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ளக் காட்டும் முயற்சிகள்,
இடைக்கால அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை
துனிசிய எழுச்சி மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து பரவிவருவதும்,
(எகிப்து,
ஜோர்டான் இன்னும் பல இடங்களில்)
அதன்
விளைவாக ஏற்பட்டுள்ள அவற்றின் கவலைகளையும் பிரதிபலிக்கின்றன.
அவர்கள் நடத்திய ஆட்சியை திணறடிக்கும்
எழுச்சிக்கு,
காபினெட் மந்திரிகளை மாற்றுவது,
சீர்திருத்தம் பற்றி வெற்றுத்தன உறுதிகளை அளிப்பது,
அதே
நேரத்தில் அடக்குமுறைக்கு இராணுவ,
உளவுத்துறைப் நபர்களை முன்னிறுத்துவது என்பது வட ஆபிரிக்க
மற்றும் மத்திய கிழக்கிலுள்ள உயரடுக்கின் பொதுவான
விடையிறுப்பாக உள்ளது.
மக்களின் பெரும்பாலானோரின் ஜனநாயகக் கோரிக்கைகள் அல்லது
பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவை இயலாதவை.
அவை
அறிமுகப்படுத்தியுள்ள பொருளாதார நடவடிக்கைகள் ஆளும்
உயரடுக்கின் உறுப்பினர்களை செல்வக்கொழிப்பு உடையவர்களாக்கவும்,
மக்களில் பெரும்பான்மையினரை வறியவராக்கவும்தான் உதவும்.
மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் சர்வதேச
முதலாளித்துவ வர்க்கத்தின் இடையேயும்,
தங்கள்
தனியார்மயமாக்கிய திட்டங்கள்,
குறைவூதிய தொழிலாளர் தொகுப்பில் முதலீட்டு வாய்ப்புக்களை
பயன்படுத்தியதையொட்டி ஆளும் உயரடுக்கினர் ஈட்டியுள்ள
செல்வங்களை உண்மையான ஜனநாயகத்தினால் தவிர்க்க முடியாமல்
அச்சுறுத்தலுக்குள் உள்ளாக்கும்.
துனிசிய சர்வாதிகாரி செல்வத்தை சேமித்து வைத்திருந்த வங்கிகள்
அவற்றின் ஆதராத்தைப் பற்றி அறியாமல் ஒன்றும் இல்லை.
பென்
அலிக் கூட்டம் மட்டுமின்றி,
உலக
நிதியப் பிரபுத்துவமும்,
துனிசியக் கொள்ளையிலிருந்து நலன்களைப் பெற்றுள்ளது.
துனிசிய தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற
வறியவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றிலும்
தேசியத்தன்மை கொண்ட விடைகள் கிடையாது.
பென்
அலியும்,
எஞ்சியுள்ள மற்ற துனிசிய முதலாளிகளும் சர்வதேச நிதிய
மூலதனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மேற்கத்தைய அரசாங்கங்கள் ஒருவர்க்கு ஒருவர் நலன்தரும் உறவுமுறை
கொண்ட ஆட்சியை மீண்டும் நிறுவ நீண்ட நேரம் செலவளித்து
செயல்படுகின்றன.
தேசிய
ஐக்கியத்திற்கு முறையீடுகள் செய்யும்
UGTT
இந்த
வழிவகையில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே அது ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்ப வைப்பதில்
வெற்றுபெற்றுள்ளது.
பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளில் வெடித்துள்ள
வேலைநிறுத்தங்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு
விரைவில் முற்றுப்புள்ளி வைக்க முயலும்.
அது
பழைய ஆட்சியின் கருவியான இராணுவத்தைப் போன்றதுதான்.
இராணுவம் இடைவிடாது தேசிய ஐக்கியத்தின் உருவகம் என்று இதனால்
பாராட்டப்படுகிறது.
துனிசிய எழுச்சி தொடரப்பட வேண்டும் என்றால்,
தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் முன்னோக்குத் தேவை,
அது
சர்வதேசிய முன்னோக்காக இருக்க வேண்டும்.
அவர்கள் இராணுவம் அல்லது இருக்கும் எந்த அரசியல் கட்சியையும்
நம்ப முடியாது.
முன்னாள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட கட்சிகள் கூட விரைவில்
கன்னொச்சியின் இடைக்கால அரசாங்கத்துடன் சமரசம் செய்து
கொண்டுவிட்டன.
உத்தியோகபூர்வ எதிர்ப்பு என்னும் நிலைப்பாட்டைக் கொள்ள அவை
ஆர்வம் காட்டுகின்றன.
அதையொட்டி ஜனநாயகத் தோற்றத்தை காட்டிக் கொள்ள முடியும்.
ஆனால்
நாடோ செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆழ்ந்த
பிளவுகளைக் கொண்டுள்ளது.
பென்
அலிக்குப் பின் பதவிக்கு வந்துள்ளவர்கள்,
பெரும்பான்மையினரின் இழப்பில் தங்கள் நலன்களை அடைவதற்காக ஆள
முற்படுகின்றனர். |