செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
அரசர் அப்துல்லா ஜோர்டானின் மந்திரிசபையை
மாற்றியமைக்கிறார்
By Patrick Martin
2 February 2011
Use this version to print | Send
feedback
ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவருடைய
தற்போதைய பிரதம மந்திரி சமிர் ரிபையை (43)
பதவியில் இருந்து நீக்கம் செய்து செவ்வாயன்று அவருக்குப்
பதிலாக
2005
முதல்
2007
வரை
பிரதமராக இருந்த மருப் பகிட் (64)
ஐ நியமித்ததானது எழுச்சியடைந்துவரும் மக்களின்
பெரும் அதிருப்தியை திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக
மோதலுக்கான தயாரிப்பு என்பதுதான் தோன்றியிருக்கிறது.
2007
பாராளுமன்றத் தேர்தல்களில் அப்பட்டமாகத் தில்லுமுல்லு செய்தவர்
என்று பகிட் அடையாளம் காணப்பட்டார்.
அத்துடன் அதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருக்கையில்
ஜோர்டானில் ஏற்பட்ட தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களில்
இருந்த பாதுகாப்புக் குறைபாடுகளுடனும் அடையாளம் காணப்பட்டார்.
அவர்
ஜோர்டானின் மிகச் சக்தி வாய்ந்த அண்டை நாடான இஸ்ரேலில்
தூதராகவும் செயல்பட்டிருந்தார்.
அரண்மனையில் இருந்து வெளிவந்த அறிக்கை ஒன்று,
“பகிட்டின்
பணி நடைமுறைக்கேற்ற,
விரைவான,
இயலக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து உண்மையான அரசியல்
சீர்திருத்தங்களை தொடக்குதல்,
ஜோர்டானின் ஜனநாயக உந்துதலை விரிவுபடுத்துதல் மற்றும் எல்லா
ஜோர்டானியர்களுக்கும் ஒரு பாதுகாப்பு நிறைந்த கௌரவமான
வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துதல் என்று இருக்கும்”
என
அறிவிக்கிறது.
ஜோர்டனில் முக்கிய முதலாளித்துவ
எதிர்க்கட்சியான இஸ்லாமிய செயற்பாட்டு முன்னணி
(Islamic Action Front -IAF)
பகிட்
நியமனத்தை கண்டித்துள்ளது.
IAF
செய்தித் தொடர்பாளர் ஒருவர்
“பகிட்
ஒன்றும் சீர்திருத்தவாதி அல்ல”
“ஜோர்டானில்
மிக மோசமான பாராளுமன்றத் தேர்தல்களைத்தான் அவர்
2007ல்
நடத்தினார்.
தற்போதைய நிலையில் செயல்களைப் புரிய அவர் சரியான நபர் அல்ல,
நெருக்கடியிலிருந்து ஜோர்டானை அகற்றவும் முடியாது”
என்றார்.
IAF
அம்மானுடன் அதிக கருத்து வேறுபாட்டைக் கொண்டிராத அமைப்பாகும்.
முடியாட்சிக்கு விசுவாசமாக உள்ளது,
புதிய
தேர்தல்களில் பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஒரு
பிரதம மந்திரியும்,
காபினெட்டும்தான் வேண்டும் என்று கோருகிறது.
தற்போதைய ஆட்சி
1999ல்
அவருடைய தந்தை ஹுசைன் அரசருக்குப் பின் ஆட்சிக்கு வந்த
அப்துல்லா மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
IAF
தலைவர்
ஹம்ஜே மன்சூர் திங்களன்று,
“எகிப்திற்கும்
ஜோர்டானுக்கும் ஒப்பீடு ஒன்றும் கிடையாது.
அங்குள்ள மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர்.
இங்கு
அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும்
அரசாங்கம் தேவை என்று கோருகிறோம்”
என்று
அறிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் அம்மானில் பல பெரிய
ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
இவை
உயர் வேலையின்மை,
வறுமை
மற்றும் குறைந்த ஊதியங்கள் பற்றிய மக்களின் பெரும் அதிருப்தியை
வெளிப்படுத்துகின்றன.
ஜோர்டானில் வேலையின்மை உத்தியோகபூர்வமாக
14
சதவிகிதம் என்றாலும்,
பெரும்பாலான அரபு நாடுகளைப் போல்
30
வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையானது சனத்தொகையில்
பெரும்பான்மையாக
70
சதவிகிதமாக உள்ளனர்.
ஹஷேமைட் முடியாட்சியானது அதன் ஆட்சியை பல
காலமாக நடைமுறையிலுள்ள பிரித்தாளு-வெற்றிபெறு
என்னும் வழிமுறையின் கீழ் ஆள்கிறது.
இவ்வழிமுறையானது முன்னாள் தலைமை வழிகாட்டியான பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தால் பூரணமாக்கப்பட்டிருந்தது.
உள்ளூர் அரபு மக்களை பாலஸ்தீனிய அகதிகளுக்கு எதிராகத்
தூண்டிவிடும் வகையில் ஆட்சி செயற்படுகிறது.
பாலஸ்தீனியர்கள் நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையில்
உள்ளனர்.
பொருளாதார அளவில் மிருகத்தனமாகச் சுரண்டப்படுகின்றனர்,
அனைத்து அரசியல் உரிமைகளையும் பெரிதும் இழந்தவர்கள்.
ஜோர்டானிய இராணுவமும் பாதுகாப்புப் பிரிவுகளும் பாலஸ்தீனியர்
அல்லாதவர்கள் நிரம்பிய உறுப்பினர்களைத்தான் கொண்டுள்ளன.
Rifai
க்கு
பதிலாக பகிட் வந்துள்ளமையானது,
மத்திய
கிழக்கு முழுவதும் முற்றுகைக்குட்பட்டுள்ள சர்வாதிகாரங்களும்
முடியாட்சிகளும் காலம் கடந்து எடுக்கும் ஒருதலைப்பட்சமான தொடர்
நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மிக
அதிக மக்கள் கொண்ட எகிப்தை இப்பொழுது வாட்டுவதும்,
துனிசியாவில் முதலில் தொடங்கிய வெகுஜன இயக்கமும் பரவுவதைத்
தடுக்க அரபு ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் இது
ஒன்றாகும்.
யேமனில்
32
ஆண்டுகளாகப் பதவியிலிருக்கும் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே
(Ali Abdullah Saleh),
புதன்
கிழமையன்று பாராளுமன்றத்தின் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்து,
ஒரு
ஆலோசனைக் குழுவான
Shoura council
யும்
கூட்டியுள்ளார்.
தேசிய
அளவில் ஞாயிறன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இக்கூட்டத்
தொடருக்கான அழைப்பை அவர் விடுத்தார்.
தன்னுடைய மகனைத் தனக்குப்பின் வாரிசாக நியமிக்க உள்ளதாக
வந்துள்ள தகவல்களை அவர் மறுத்து,
“ஒரு
மாற்றத்திற்கு”
தானே
ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார்.
வருமான வரிகளில் வெட்டுக்களை முன்வைக்க
இருப்பதாகவும்,
சமூகப்
பாதுகாப்பு நிதியுதவிகளில் தேவையான குடும்பங்களுக்கு
அதிகரிப்பு,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டண விலக்குகள் இவற்றுடன்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்கும் ஏற்பாடு செய்ய
இருப்பதாகக் கூறினார்.
இராணுவ படையினர்களின் ஊதியங்களையும் அவர்
உயர்த்தியுள்ளார்
தலைநகரான சானாவில் கடந்த வாரம் நடைபெற்ற
தொடர்ச்சியான அணிவகுப்புக்கள்,
மற்றும் மாநில மையப் பகுதிகளில் இருந்த அமைதியின்மை
ஆகியவற்வறையடுத்து இந்த அறிவிப்புக்கள் வந்துள்ளன.
திங்களன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு யேமனிலுள்ள டைஸ்
மாநிலத்தின் மவேயா சிறுநகரத்தில் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு
செய்தனர்.
அங்கு
வடக்கு யேமனும் தெற்கு யேமனும்
1990ல்
இணைக்கப்பட்டதிலிருந்து பிரிவினை இயக்கம் தீவிரமாக உள்ளது.
மற்றும் ஒரு
1,500
பேர்
நாட்டின் மையப் பகுதியான தம்மர் மாநிலத்தில் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
முதலாளித்துவ எதிர்ப்புக் கூட்டணியானது
கட்சிகளின் கூட்டுக் கூட்டம்
(JMP)
என்பதற்கு அழைப்பு விடுத்து வியாழனன்று தலைநகர் உட்பட பல
இடங்களில் மேலதிக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறது.
JMP
என்னும் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் சலே அகற்றப்பட வேண்டும்
என்று கோரவில்லை,
ஆனால்
பகிரங்கமாக ஆளும் கட்சி சலே அதிகாரத்தை விட்டு
2013ல்
விலக வேண்டும் என்று கோரும் பதவிக்கால வரம்புகளை,
ஆளும்
கட்சி திருத்தும் திட்டங்களை எதிர்த்துள்ளது.
அமெரிக்கக் கமாண்டோத் தாக்குதல்கள் மற்றும்
பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்கள் கிராமப்புற யேமனில் அல்
கெய்தா இலக்குகள் என்று கருதப்படுவதின் மீது தாக்குதல்கள்
நடத்த அனுமதித்த முக்கிய அமெரிக்க நண்பராவார் சலே.
அவருடைய கட்சி,
JMP
ஐ
காபினெட்டிற்குள் இணைத்துக் கொண்டு சில அமைச்சரகங்களை
கொடுக்கத் தயாராக உள்ளது.
மேலும்
பதவிக் கால வரம்புகளைப் பற்றிப் பேசவும் தயாராக உள்ளது.
ஆனால்
JMP
ஆனது
அரசாங்கத்துடன் முறையான பேச்சுக்கு இன்னும் ஒப்புக்
கொள்ளவில்லை.
ஏப்ரல்
மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அல்ஜீரியாவில் ஆளும் முதலாளித்துவ தேசியவாத
FLN
அனைத்து ஆர்ப்பாட்டங்களையும்
“பாதுகாப்பு”
காரணங்களுக்காக தடை செய்துள்ளது.
ஏனெனில் கடந்த மாதம் அண்டை நாடான துனிசியாவில் எதிர்ப்புக்கள்
வெடித்துள்ளன.
ஜனாதிபதி
Abdelaziz Bouteflika
அரசாங்கம்,
இராணுவ
சர்வாதிகாரத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசாங்கம் ஆகும்.
அச்
சர்வாதிகாரம்தான்,
பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிராக எட்டு ஆண்டுகள் நடந்த
கெரில்லாப் போருக்குப் பின்னர்,
1962ல்
FLN
பதவியை
எடுத்துக் கொண்டதிலிருந்து ஆண்டு வருகிறது.
முதலாளித்துவ எதிர்ப்புக் கூட்டணியாக புதிதாக
உருவாகியுள்ள மாற்றத்திற்கும் ஜனநாயகத்திற்குமான தேசிய
ஒருங்கிணைப்பு
(National Co-ordination for Change and Democracy)
என்னும் அமைப்பு பெப்ருவரி
12ம்
திகதி சனிக்கிழமையன்று அல்ஜீயர்ஸில் அணிவகுப்பு ஒன்றிற்கு
அழைப்பு விடுத்துள்ளது.
இது
“ஆட்சி
அகற்றப்பட வேண்டும்”
என்பதற்காக என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை
அல்ஜீரியாவில் தெரு ஆர்ப்பாட்டங்கள்,
விலை
உயர்வுகள் மற்றும் வேலையின்மைக்கு இயல்பான தன்னெழுச்சியாக
வெளிப்பட்டவை அல்லது துனிசியச் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியைக்
கொண்டாடியவையாகும்.
40
ஆண்டுகளாக இராணுவ ஆதரவைக்கொண்டு ஆட்சி நடைபெற்று வரும்
சிரியாவில்,
துனிசிய எழுச்சியைத் தொடர்ந்து மக்களுக்கு பல சிறிய
பொருளாதாரச் சலுகைகளை அரசாங்கம் கொடுத்துள்ளது.
அவற்றுள் வீடுகளில் குளிர்காய்வதற்குக் கூடுதல் உதவித்
தொகையும் அடங்கும்.
2000ம்
ஆண்டின்
அவரது
தந்தை ஹபிஸுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி பஷிர் அசாட்
சிரியப் பொருளாதாரத்தை வெளிநாட்டு மூலதனம் மற்றும் சந்தைக்கு
திறந்துவிடும் நோக்கம் கொண்ட கொள்கைகளைத்தான் தொடர்ந்து
வருகிறார்.
ஜனாதிபதி அசாட் திங்கன்று வெளிவந்த
வோல்
ஸ்ட்ரீட் ஜேர்னலில்
பேட்டி ஒன்றை அபூர்வமாகக் கொடுத்துள்ளார்.
இது
மேலைத்தேய முதலீட்டாளர்களுக்கு சிரியாவானது அரபு நாடுகளைப்
பெரிதும் பற்றிக்கொண்டுள்ள மக்களின் தீவிரமயமாதலால்
பாதிக்கப்படாது என்ற உத்தரவாதம் அளிக்கும் முயற்சியாக உள்ளது.
“பல
அரபு நாடுகளைவிட கடினமான நிலையில் இருந்தாலும்”
தன்
நாடு அரசியலளவில் உறுதிப்பாடு கொண்டது என்று அவர் கூறினார்.
இதற்குக் காரணம் தன் அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு
எதிரான மக்கள் எதிர்ப்புடன் தொடர்பு கொண்டுள்ளதுதான் என்றார்
அவர்.
வணிக செய்தித்தாளிடம் அசாட் அவருடைய அரசாங்கம்
பொருளாதாரச்
“சீர்திருத்தக்”
கொள்கைகளை தொடரும் என்று உறுதியளித்தார்.
அதாவது,
துனிசியா,
எகிப்து இன்னும் பிற இடங்களில் மக்களின் வெகுஜன எதிர்ப்பைத்
தூண்டியுள்ள அதே தடையற்ற சந்தைக் கொள்கைகளை தொடரும் என்பதுதான். |