World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The anti-socialist politics of Tunisia's official opposition

துனிசியாவின் உத்தியோகபூர்வ எதிர்ப்பின்”  சோசலிச-எதிர்ப்பு அரசியல்

By Kumaran Ira
1 February 2011
 

Back to screen version

ஜனவரி 28ம் திகதி எட்டஜ்டிட் (புத்துயிர்ப்பு) இயக்கம் பாரிசில் துனிசியாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜைன் எல் அபிடைன் பென் அலியை அகற்றிய சமீபத்திய எழுச்சி பற்றி ஒரு பொது விவாதத்தை நடத்தியது. முன்னாள் ஸ்ராலினிச துனிசியக் கம்யூனிஸ்ட் கட்சியான எட்டஜ்டிட் துனிசியாவிலுள்ள உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளில் ஒன்றாகும். இதன் தலைவர் அஹ்மத் ப்ராஹிம் இடைக்கால ஆட்சியில் உயர் கல்வி மந்திரியாகப் பணிபுரிகிறார்

டிசம்பர் 17 அன்று திகைப்பிற்குரிய சமூக நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு இளம் துனிசியத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டபின் தொடங்கிய வெகுஜன எழுச்சியில் இருந்தே, எதிர்க்கட்சிகள்வெகுஜனத்துடன் ஒற்றுமையுடன் இருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு வருகின்றனர். உண்மையில் அவர்கள் துனிசிய ஆளும் உயரடுக்கு மற்றும் பென் அலியின் பழைய எடுபிடிகளின் கருவிகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவை முயன்று, துனிசிய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகளின் நலன்களுக்காக அரசாங்கத்தை உறுதி செய்யவும் முற்பட்டுள்ளன

பாரிஸ் கூட்டத்தில் பேசியவர்கள் இடைக்கால அரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி, சமீபத்திய மந்திரிசபை மாற்றத்தையும் மேற்கோளிட்டனர். இடைக்கால அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிறுவ இயலும் என்று அவர்கள் அறிவித்தனர்

பென் அலியின் ஆட்சியில் எஞ்சியிருப்பவர்களுக்கு தங்கள் நிலைமையை மறைக்கும் வகையில், கூட்டத்தில் பேசியவர்கள் அறிவித்தனர்: எட்டஜ்டிட் ஜனவரி 16ம் திகதி அன்று இடைக்கால அரசாங்கத்தில் பங்குபெற்றபோது அஹ்மத் இப்ரஹிம் இயற்றிய நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு  
ஜனநாயக மாற்றத்தைக் கொடுக்கும் அரசியல் வழிவகைக்கு ஆதரவு கொடுப்பதுடன் அவருடைய மந்திரிசபைச் செயற்பாடுகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது.

தங்கள் விசுவாசத்தை உலக நிதியப் பிரபுத்துவத்திற்குச் சிறிதும் வெட்கமின்றி அறிவித்த இவர்கள், அரசியல் நிலைமையை அமைதிப்படுத்தவும் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கும் அழைப்பும் விடுத்துள்ளனர். அரசாங்கத்தில் பரந்த முறையில் அரசியல் கட்சிகள் பங்கு பெறுவது மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பொருளாதாரச் செயற்பாடுகள் உறுதியான போக்கில் திரும்புவதை உதவுவதற்கும் நாட்டின் உறுதிப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் பயன்படும்என்று விளக்கினர். இத்தகைய சொல்லாட்சி எதாவது அமெரிக்க அரசாங்கத்திற்கு சேவை செய்யும் வேலையாளால் பயன்படுத்தப்படுவதாகும்

துனிசிய எழுச்சி வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பரவி, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் சர்வாதிகாரங்களுக்கும் இழிந்த சமூக நிலைமைகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கடந்த சில தினங்களாக எகிப்து அமெரிக்க ஆதரவைக் கொண்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான ஒரு சமூக எழுச்சியினால் பெரும் அதிர்விற்கு உட்பட்டுள்ளது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை, பேச்சாளர்கள் எகிப்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பற்றிக் குறிப்பிடவில்லை. அதேபோல் எகிப்திய தொழிலாளர்களுடன் ஒன்றுபட வேண்டும் என்ற அழைப்பீட்டையும் கொடுக்கவில்லை. ஒரே ஒருமுறைதான் எகிப்து பற்றிக் கூறப்பட்டது. கூட்டத்தலைவர் முந்தைய கூட்டத்தில் வந்தவர்களைவிடக் குறைவானவர்கள்தான் பங்கு பெறுகின்றனர், இதற்குக் காரணம் ஒரு எகிப்து சார்புடைய ஆர்ப்பாட்டம் நடப்பதால், இது ஒரு துரதிருஷ்டவசமான ஒரேநேர நிகழ்வுகள் ஆகும்என்றார்

இவர்களுடைய விவாதங்கள் முற்றிலும் இருக்கும் துனிசிய அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதில் குவிப்புக் காட்டின. இடைக்கால அரசாங்கம் எப்படி நிலைமையைச் சமாளிப்பது என்பது பற்றிய விவாதம்தான் இருந்தது. எட்டஜ்டிட்டின் பங்கு ஜனநாயக மாற்றத்திற்கானதீர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை முன்வைப்பது என்று அவர்கள் அறிவித்தனர்

துனிசிய பரந்த தொழிலாள வர்க்க எழுச்சி, சோசலிசக் கொள்கைகளுக்குப் போராட வேண்டும் என்ற முன்னோக்கை அவர்கள் வெளிப்படையாக எதிர்த்தனர். ஒரு பேச்சாளர் அப்பட்டமாகக் கூறினார்: துனிசியாவில் நாம் ஒன்றும் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியை எதிர்கொள்ளவில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும், தொழில்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று நாம் கோர முடியாது. ஆனால் இது ஜனநாயகத்திற்கான ஒரு மாற்றம் ஆகும். நாம் சரியான திசையில் செல்லுகிறோம். இப்பொழுது போல் விடயங்கள் தொடர வேண்டும்.

 இயக்கத்திற்கான ஒரு முன்னோக்கு இப்பொழுதுள்ள அரசியலமைப்பைச் சீர்திருத்தம் செய்வதுதான்என்று அவர்கள் வலியுறுத்தினர்

தங்கள் எதிர்ப் புரட்சி கறைகளை புரட்சிகர சோசலிசத்திலிருந்து பிரிக்கும் பெரும் இடைவளியை மறைக்க பேச்சாளர்கள் பெரிதும்  சிரமத்துடன் முற்பட்டனர். அக்டோபர் 1917 ஷ்யப் புரட்சியின் தன்மையை அபத்தமான முறையில் தவறாக்கிப் பேசிய அவர்கள், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போல்ஷிவிக் கட்சி நடத்திய புரட்சியானது முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் எஞ்சிய செயற்பாடுகளைத் தளமாகக் கொண்டு நிறுவினர் என்று கூறினர்

துனிசியாவின் தொழிற்சங்கமான UGTT எனப்படும் துனிசியப் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்கள் ஆதரவு கொடுத்தனர். பென் அலியின் நீண்ட கால நட்பு அமைப்பாக UGTT செயல்பட்டு பென் அலியின் தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்களையும் ஆதரித்தது என்பது பரந்த முறையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்தாகும். உண்மையில் UGTT ஆரம்பத்தில் வெகுஜன எழுச்சியை எதிர்த்தது, பின்னர் இப்பொழுது இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கிறது, ஏனெனில் இது தொடரும் எதிர்ப்புக்களை அடக்க முற்படுகிறது

எட்டஜிட்டின் பேச்சாளர்கள் UGTT யின் முந்தைய பென் அலி ஆட்சியுடனான ஒத்துழைப்பு பற்றியும் சில குறிப்புக்களை கொடுத்தனர். ஏனெனில் இந்த உண்மையை அவர்கள் மறைக்க முடியாது. ஆனால் UGTT இப்பொழுது தனது மனதை மாற்றிக் கொண்டுவிட்டது, மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறி, துனிசிய அரசியலில் அது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதுஎன்றனர்

எட்டஜிட்டின் திவாலாகிவிட்ட கொள்கைகள் ஒரு ஸ்ராலினிச, மார்க்சிச-எதிர்ப்புக் கட்சி என்ற அவர்களுடைய வரலாற்றின் வேர்களைக் கொண்டுள்ளன. 1934ல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவாக நிறுவப்பட்ட துனிசிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எட்டஜிட் இயக்கம் வளர்ச்சியுற்றது. அப்பொழுது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஜோசப் ஸ்ராலின் மற்றும் கிரெம்ளின் அதிகாரத்துவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது

பென் அலிக்கு முன் பதவியில் இருந்த ஹபிப் போர்கிபாவின் ஆட்சி, இக்கட்சியை 1962ல் சட்டவிரோதம் என அறிவித்தது. ஆனால் 1981ல் மீண்டும் சட்டத்திற்கு உட்பட்டது என அறிவித்தது. ஸ்ராலினிச இரு கட்டக்கோட்பாடான தேசிய முதலாளித்துவத்தை வளரும் நாடுகளில் ஆதரிப்பது என்ற கொள்கையையொட்டி, துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி தன்னை ஒரு தேசிய-ஜனநாயக அமைப்பு என்றும், அனைத்து தேசபக்த வர்க்கங்களுக்குஇடையே ஐக்கியத்தை வளர்க்க விரும்புவது என அடையாளம் காட்டிக் கொண்டது. 1988ல் அது பென் அலியின் தேசிய உடன்பாட்டிலும் கையெழுத்திட்டது

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்தபின், இக்கட்சி கம்யூனிசத்துடன் எத்தொடர்பையும் நிராகரித்தது. 1993ல் இது எட்டஜ்டிட் இயக்கமாயிற்று. பென் அலியின் கீழ் எட்டஜிட் 2009 சட்டமன்றத் தேர்தல்களில் இரு இடங்களில் வெற்றி பெற்றது. ஜனவரி 14ம் திகதி நாட்டை விட்டு ஓடிவிட்ட பென் அலியின் ஆட்சி மக்கள் எழுச்சியால் அகற்றப்பட்டபின்,  எட்டஜ்டிட் ஜனவரி 17 அன்று அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் சேர்ந்தது

அலிக்கு எதிரான எழுச்சி தொடங்கியதிலிருந்து எட்டஜ்டிட் தன் முழு ஆதரவையும் இடைக்கால அரசாங்கத்திற்கு அறிவித்தது. அதே நேரத்தில் இழிந்த முறையில் குறைகூறல்களையும் வெளியிட்டது. இதற்குக் காரணம் ஒரு குறைந்தபட்ச எதிர்ப்புவண்ணத்தை அளிப்பதாகும். பென் அலி ஓடிய பின்னர், இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்ட நேரத்தில், எட்டஜிட்டின் பிரான்சிலிருந்த ஒருங்கிணைப்பாளர் ரபெ அர்பௌபி Le Monde இடம் இடைக்கால அரசாங்கத்திடம் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார். நாங்கள் வெற்று நாற்காலிக் கொள்கை அரசியலுக்கு எதிரானவர்கள். இடைக்கால அரசாங்கத்தின் நாணயத்தை மதிக்கிறோம். இது ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் எப்படிச் செயல்புரிய வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளது. இதன் பணி ஆறு அல்லது ஏழு மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்வது. எனவே, இப்பொழுது நாம் முன்னேறுவோம். 

வெகுஜன எதிர்ப்புக்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராகப் பெருகியவுடன், எட்டஜிட் பின்வாங்கி, இழிந்த முறையில் மந்திரிசபையிலிருந்து RCD கட்சி மந்திரிகளை வெளியேற்றாவிட்டால் அதன் தலைவர் இப்ரஹிமை இடைக்கால அரசாங்கத்தில் இருந்து அது வெளியேறும் என்று அச்சுறுத்தியது. இது வெறும் வார்த்தைஜாலம்தான். RCD மந்திரிகள் காபினெட்டைவிட்டு விலகாதிருந்தபோதும், இப்ரஹிம் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடிவெடுத்தார்

ஜனவரி 28ம் திகதி எட்டஜ்டிட் இடைக்கால அரசாங்கத்தை தங்கள் திறைமைக்கும் நேர்மைக்கும் புகழ்பெற்ற தேசிய நபர்களைஉள்ளடக்கியதற்குப் பாராட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது. இடைக்கால அரசாங்கம் நிலைமை மீண்டும் பிற்போக்குத்தன கடந்தகால நிலைக்கு செல்லாத வகையில், எந்தவொரு முயற்சியையும் தடுக்கும்என்று தான் நம்புவதாகவும் கூறியது