WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Obama
administration and Egypt
ஒபாமா நிர்வாகமும்,
எகிப்தும்
Barry Grey and David North
31 January 2011
Use this version to print | Send
feedback
எகிப்தில்,
அதிகரித்துவரும்
ஒரு
புரட்சிகர
போராட்டத்தை
ஒபாமா
நிர்வாகம்
முகங்கொடுத்து
வரும்
வேளையில்,
அதன்
தந்திராபாயங்கள்
பிரிக்கமுடியாமல்
இருக்கும்
இரண்டு
மூலோபாய
நோக்கங்களிலிருந்து
உருவாகி
வரக்கூடும்:
ஒன்று
எகிப்திய
முதலாளித்துவ
அரசை
காப்பாற்றுவது,
மற்றது
மத்தியதரைக்கடல்,
வட
ஆபிரிக்கா
மற்றும்
மத்தியகிழக்கு
முழுவதிலும்
அமெரிக்க
ஏகாதிபத்திய
நடவடிக்கைகளின்
அச்சாணியாக
அந்த
நாட்டை
தக்கவைப்பது.
எகிப்திய
தொழிலாள
வர்க்கமும்,
போர்குணமிக்க
மக்களோடிருக்கும்
அதன்
கூட்டாளிகளும்
ஜனாதிபதி
ஒபாமாவின்
நோக்கங்கள்
மற்றும்
திட்டங்களில்
நப்பாசை
வைப்பதற்கு
சிறிதும்
இடம்
கொடுத்துவிடக்
கூடாது.
ஜனாதிபதியும்,
பெண்டகன்
மற்றும் CIAஇல்
உள்ள
அவருடைய
ஆலோசகர்களும்
புரட்சிகர
போராட்டத்தை
அடக்கவும்,
தணிக்கவும்,
முடிவாக
அதை
நசுக்கவும்
துணிந்துள்ளனர்.
கடந்த
வாரம்
நடந்த
நிகழ்வுகள்
நிர்வாகத்தை
ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது.
அது
வாஷிங்டனின்
நீண்டகால
சொத்தான
முபாரக்கிற்கு
எதிராக
இந்தளவிற்கு
பெருந்திளரான
எழுச்சி
இருக்குமென்று
எதிர்பார்த்திருக்கவில்லை.
கடந்த
வியாழனன்று
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களும்,
இளைஞர்களும்
பொலிஸ்
வன்முறையை
எதிர்த்து
கொண்டிருந்த
போது,
அமெரிக்க
வெளிவிவகாரத்துறை
செயலர்
ஹிலாரி
கிளிண்டன்
அந்த
ஆட்சியின்
ஸ்திரப்பாட்டிற்கு
உறுதி
மொழி
வழங்கிக்கொண்டிருந்தார்.
முபாரக்கின்
ஆட்சியில்
அமெரிக்கா
பாரியளவில்
அரசியல்ரீதியாகவும்,
பொருளாதாரரீதியாகவும்,
மற்றும்
இராணுவரீதியாகவும்
முதலீடு
செய்துள்ளது.
சுருக்கமாக,
சர்வாதிகாரியைக்
கைவிடுவதில்
அதற்கிருக்கும்
தயக்கம்,
ஓர்
உணர்ச்சிப்பூர்வ
வெளிப்பாடல்ல.
மாறாக,
முபாரக்கிற்கு
வேகமாக
குழிபறிப்பதென்பது,
CIA
பட்டியலில்
இருக்கும்
மற்ற
சர்வாதிகாரிகள்
வாஷிங்டன்
மீது
கொண்டிருக்கும்
நம்பகத்தன்மைக்கு
குழிபறிப்பதாக
போய்
முடியும்
என்று
அது
அஞ்சுகிறது.
எவ்வாறிருப்பினும்,
பகுப்பாய்வின்
இறுதியில்,
முபாரக்கின்
எதிர்காலம்
இரண்டாவதுபட்சம்
தான்.
முதலாளித்துவ
ஆட்சி
எதைச்
சார்ந்திருக்கிறதோ
அந்த
எகிப்திய
இராணுவம்
மற்றும்
பாதுகாப்பு
சேவைகளை
காப்பாற்றுவது
தான்
வாஷிங்டனுக்கு
ஒப்பிடமுடியாதபடிக்கு
மிகப்
பெரிய
கவலையாக
உள்ளது.
இப்போதைய
நிலையில்,
போராட்டக்காரர்களை
ஒடுக்க
இராணுவத்தைப்
பயன்படுத்தும்
ஒரு
முயற்சியானது
இராணுவ
பொறிவிற்கு
இட்டுச்
செல்லக்கூடும்
என்று
ஒபாமா
நிர்வாகம்
அஞ்சுகிறது.
கெய்ரோ,
அலெக்சாண்டிரியா
மற்றும்
போர்ட்
செய்டு
மற்றும்
ஏனைய
நகரங்களின்
வீதிகளில்
இறங்கியிருக்கும்
குடிமக்களைத்
துருப்புகள்
சுட்டுத்தள்ளுவதை
அது
ஏற்றுக்கொள்ளும்
என்பது
நிச்சயமில்லை.
ஆனால்
முபாரக்கைக்
காப்பாற்றுவதற்கு
இது
மட்டும்
தான்
ஒரேவழியாக
உள்ளது.
அமெரிக்க
கொள்கை
வகுப்பாளர்கள்,
இதற்கு
முன்னர் 1979
ஈரானிய
புரட்சியால்
துரத்தப்பட்டுள்ளனர்.
அப்போது
ஷாவிற்கு
ஓர்
அரசியல்
மாற்றீட்டை
வாஷிங்டன்
தயாரித்திருக்கவில்லை
என்பதுடன்,
ஈரானிய
இராணுவம்
புரட்சியின்
அழுத்தத்திற்கு
இடையில்
உடைந்துபோனது.
அதன்
விளைவு,
பாரசீக
வளைகுடாவில்
ஒரு
முக்கிய
துணை-அரசை
இழக்க
வேண்டியதானது.
வாஷிங்டனில்
உருவாக்கப்பட்டு
வரும்
குறுகிய
கால
கொள்கை,
இரண்டு
நோக்கங்களைக்
கொண்டுள்ளது:
எகிப்திய
இராணுவம்
மற்றும்
உளவுபார்க்கும்
அமைப்புகளை
கூர்மையாக்குவது
-இதற்காகத்தான்
உளவுத்துறை
தலைவரும்
முன்னாள்
தளபதியுமான
ஒமர்
சுலெய்மானின்
துணை
ஜனாதிபதி
நியமனம்-
அடுத்தது,
முபாரக்கின்
நீக்கம்
அவசியமானால்,
அவருக்கு
ஓர்
அரசியல்
மாற்றைத்
தயாரிப்பது.
ஆனால்
வாஷிங்டனால்
காட்டப்படும்
எந்த
மாற்றீடும்,
ஒரு
புதிய
இராணுவ
ஆட்சிக்கு
ஒரு
போலி-ஜனநாயக
மூடுதிரையை
வழங்கும்
ஒரு
கைப்பாவை
ஆட்சிக்கு
மேல்
வேறெதுவுமாக
இருக்கப்போவதில்லை.
அந்த
வேலைக்கான
ஒரு
வேட்பாளர்
தான்,
அமெரிக்க
ஊடகங்களால்
தூக்கிவிடப்பட்டு
வரும்
மொஹமெத்
எல்பராடே.
எகிப்திய
முதலாளித்துவத்தின்
ஒரு
நம்பகமான
பிரதிநிதியான
எல்பராடே,
தலைதூக்கிவரும்
ஒரு
புரட்சியைத்
தூக்கியெறிந்து,
முதலாளித்துவ
ஆட்சியை
காப்பாற்றும்
வெளிப்படையான
நோக்கில்
கடந்த
வாரம்
வியன்னாவிலிருந்து
அவருடைய
நாட்டிற்குப்
பறந்தார்.
வாஷிங்டனிடமிருந்து
ஆதரவைப்
பெற
அதன்
சொந்த
பேரத்தைச்
செய்துவரும்
முஸ்லீம்
சகோதரத்துவம் (Muslim
Brotherhood),
அதன்
பங்கிற்கு
எல்பராடேயை
ஆதரிக்க
உடன்பட்டுள்ளது.
எதிர்ப்புரட்சி
மூலோபாயத்திற்கான
அடிப்படை
வடிவத்தை
வெள்ளை
மாளிகை
தயாரித்து
வருவதாக,
ஞாயிறன்று
ஒரு
தொடர்ச்சியான
தொலைக்காட்சி
நேர்காணல்களில்
அமெரிக்க
வெளிவிவகாரத்துறை
செயலளர்
ஹிலாரி
கிளிண்டன்
தெளிவாக
குறிப்பிட்டார்.
முபாரக்
ஆட்சியைத்
தொடர்ந்து
கொண்டிருப்பது
குறித்து
கருத்து
கூற
மறுத்ததுடன்,
அவரின்
இராஜினாமாவிற்கு
அழைப்புவிடுப்பதையும்
அந்த
பெண்மணி
தவிர்த்தார்.
எகிப்தில்
ஜனநாயக
சீர்திருத்தத்திற்கான
ஒபாமா
நிர்வாகத்தின்
குற்றத்தன்மைவாய்ந்த
வேண்டுகோள்களுக்கு
ஒத்தவகையில்,
கிளிண்டனும்
ஏளனமான
அறிக்கையை
வெளியிட்டார்: “எகிப்திய
மக்களின்
நியாயமான
விருப்பங்களுக்குப்
பிரதிபலிப்பு
காட்டுமாறும்,
அமெரிக்கா
30
ஆண்டுகளாக
செய்ததுபோல்
ஜனநாயக
மற்றும்
பொருளாதார
சீர்திருத்தங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு
ஸ்திரமான
நடவடிக்கைகளை
எடுக்கத்
தொடங்குமாறும்
நாங்கள்,
எகிப்திய
அரசாங்கத்தைக்
கேட்டுக்கொள்கிறோம்.”
[அழுத்தம்
சேர்க்கப்பட்டது]
எகிப்தில்
ஜனநாயக
சீர்திருத்தத்திற்கான
இந்த
30-ஆண்டுகால
சிலுவையுத்தம்
எவற்றை
கொண்டுள்ளது? 35
பில்லியன்
டாலர்
உதவியுடன்
முபாரக்கை
வலுவூட்டியது,
இராணுவத்தைப்
பலப்படுத்தியது,
மற்றும்
ஈராக்கிற்கு
எதிராகவும்,
இஸ்ரேலின்
பாதுகாப்பு,
மற்றும் “பயங்கரவாதத்திற்கு
எதிரான
யுத்தம்"
ஆகியவற்றில்
ஓர்
உறுதியான
கூட்டாளியாக
முபாரக்கை
மெச்சியது
ஆகியவற்றைத்
தான்
கொண்டுள்ளது.
அந்த
ஆட்சியின்
அரசியல்
எதிரிகளின்
படுகொலை
மற்றும்
சித்திரவதையில்
அமெரிக்கா
இரகசியமாக
சதிசெய்தது
மட்டுமில்லாமல்,
சட்டவிரோத
பயங்கரவாதிகளை
கடத்துதல், “ஒப்படைத்தல்"
ஆகியவற்றில்
வாஷிங்டனின்
கொள்கைக்கு
முபாரக்கின்
உளவுத்துறை
மற்றும்
பொலிஸை
வாடகை-சித்திரவதையாளர்களாக
அது
பயன்படுத்தியுள்ளது.
கிளிண்டன்
தொடர்ந்து
கூறியது, “தேவை
பூர்த்தி
செய்யப்பட
வேண்டிய
அமைதியான
போராட்டக்காரர்களுக்கும்,
அங்கிருக்கும்
நிலைமைகளைப்
பயன்படுத்தி
கொள்ளையடிப்பதையும்,
ஏனைய
குற்றவியல்
நடவடிக்கையில்
ஈடுபடுபவர்களுக்கும்
இடையில்
அவர்கள் [எகிப்திய
இராணுவம்]
செயல்பட்டு
வருவதற்காக,
அவர்களை
நாம்
பாராட்டியாக
வேண்டும்.”
இங்கே
கிளிண்டன் "நியாயமான"
மற்றும் "அநியாயமான"
போராட்ட
வடிவங்களுக்கு
இடையில்
வேறுபடுத்திக்
காட்டுகிறார்-முந்தையவர்கள்
அமெரிக்க
நலன்களுக்கு
சவால்விடாதவர்கள்,
இரண்டாவது
வகையினர்
அவ்வாறு
செய்பவர்கள்.
அந்த
பெண்மணி
எதிர்கால
மக்கள்
ஒடுக்குமுறையை
நியாயப்படுத்த,
அரசியல்
மற்றும்
போலித்தனமான-நீதிநெறி
கட்டமைப்பிற்கு
அஸ்திவாரமிடுகிறார்.
எந்த
அரசாங்கத்தை
அது
முன்மொழிந்தாலும்
அது
எகிப்தின்
அரசியல்
நெருக்கடியைத்
தீர்க்கப்
போவதில்லை
என்பது
வாஷிங்டனுக்கு
நன்கு
தெரியும்.
மக்களின்
சமூக
அல்லது
அரசியல்
கோரிக்கைகளான
வேலைகள்,
நகரங்களிலும்
கிராமப்புறங்களிலும்
வறுமையை
ஒழிப்பது,
மற்றும்
காட்டுமிராண்டித்தனமான
பொலிஸ்
முகமைகளின்
ஒடுக்குமுறையைக்
கைவிடுவது
என்ற
ஒன்றே
ஒன்றைக்கூட
எந்த
முதலாளித்துவ
ஆட்சியிலும்
தீர்ப்பது
சாத்தியமில்லை.
அல்லது
முபாரக்கிற்கு
முன்னாலிருந்த
ஜனாதிபதி
அன்வர்
சதாக்
1977இல்
ஜெருசலேமிற்கு
விஜயம்
செய்திருந்ததிலிருந்து,
மத்தியகிழக்கில்
அந்நாட்டின்
மூலோபாய
பாத்திரத்தில்
ஒரு
முக்கிய
உட்கூறாக
இருந்துவரும்
இஸ்ரேலுடன்
எகிப்தின்
கூட்டணியை
எந்த
முதலாளித்துவ
ஆட்சியும்
முடிவுக்குக்
கொண்டு
வந்துவிட
போவதில்லை.
இதுபோன்ற
கொள்கைகளைச்
செயல்படுத்த,
கைக்கூலி
எகிப்திய
முதலாளித்துவம்
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின்
ஒரு
முழுமையான
தொங்குதசையாக
உள்ளது.
ஆகவே
ஒபாமா
நிர்வாகத்தின்
மூலோபாயம்,
ஒரு
போலித்தனமான "சீர்திருத்த"
நிர்வாக
வேஷத்திற்குப்
பின்னாலிருந்து,
தொழிலாள
வர்க்கத்தின்மீது
ஓர்
எதிர்கால
காட்டுமிராண்டித்தனமான
ஒடுக்குமுறையைக்காக
இராணுவத்தை
தயார்
செய்வதாகும்.
இந்த
காட்சிகளுக்கெல்லாம்
பின்னால்,
முடிவெடுப்பதில்
எந்த
படைகளைச்
சார்ந்திருக்கலாம்
என்பதற்காக
ஒவ்வொரு
துணைப்படை,
படைப்பிரிவு
மற்றும்
எகிப்திய
இராணுவத்தின்
பிரிவுகளைக்
குறித்து
பெண்டகன்
விளக்கமான
கணக்கெடுப்பைச்
செய்து
கொண்டிருக்கிறது
என்பதிலும்
ஒருவர்
நிச்சயமாக
இருக்கலாம்.
புரட்சியின்
முன்நிற்கும்
எரியும்
பிரச்சினையாக
இருப்பது,
அரசியல்
தலைமையாகும்.
அமெரிக்க
ஆளும்
வர்க்கத்திற்கு
இந்த
உண்மை
மிகத்
தெளிவாக
தெரியும்.
ஞாயிறன்று
வெளியான
ஒரு
நேர்காணலில்,
வாஷிங்டனின்
மூலோபாய
மற்றும்
சர்வதேச
ஆய்வுகளுக்கான
மையத்தைச்
சேர்ந்த
ஜொன்
பி.
அல்டர்மென்
கூறியது, “துனிசியாவைப்
போன்றே,
போராட்டக்காரர்கள்
ஒரு
பெரிய
தலைமையில்லாத
போராட்டத்தை
எவ்வித
தெளிவான
திட்டமும்
இல்லாமல்
பிரதிநிதித்துவப்படுத்துவதாக
தெரிகிறது;
இதைக்
கொண்டு
அதிகாரத்தைக்
கைப்பற்றுவதற்கு
வழியே
இல்லை.”
இந்த
அரசியல்
வெற்றிடத்தைத்
தான்
அமெரிக்க
ஏகாதிபத்தியமும்,
எகிப்திய
ஆளும்
வர்க்கத்தில்
உள்ள
அதன்
துணைவர்களும்
சுரண்டப்
பார்க்கிறார்கள்.
எகிப்திய
தொழிலாள
வர்க்கம்
நம்பிக்கை
மற்றும்
அனுபவத்தைப்
பெற்று
வருகின்றன.
தற்போதிருக்கும்
அரசிடமிருந்து
சுயாதீனப்பட்டும்
அதற்கு
விரோதமாகவும்
மக்கள்
பிரதிநிதித்துவத்தின்
புதிய
வடிவங்கள்
அந்நாடு
முழுவதும்
எழுச்சி
பெறத்
தொடங்கியுள்ளன.
ஆனால்
வரலாற்று
பின்புலத்தில்,
சர்வதேச
சூழலில்,
எகிப்திலும்
மத்தியகிழக்கு
முழுவதிலும்
கட்டவிழ்ந்து
வரும்
புரட்சிகர
இயக்கத்தின்
வர்க்க
இயக்கவியலை
புரிந்துகொண்டதன்
அடிப்படையில்,
புரட்சிகர
சக்திகளின்
அபிவிருத்திக்கு
ஒரு
தெளிவான
அரசியல்
மூலோபாயம்
தேவைப்படுகிறது.
இத்தகைய
முக்கிய
சந்தர்ப்பத்தில்,
நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழு
எகிப்திய
தொழிலாள
வர்க்கத்திற்கும்,
மாணவர்கள்,
இளைஞர்கள்
மற்றும்
கிராமப்புற
ஏழைகள்
மத்தியில்
இருக்கும்
அவர்களின்
கூட்டாளிகளுக்கும்
இந்த
ஆழ்ந்த
மனப்பூர்வ
அழைப்பை
முன்வைக்கிறது:
இருபதாம்
நூற்றாண்டின்
வரலாற்று
அனுபவங்களிலிருந்து
பெறப்பட்ட
லியோன்
ட்ரொட்ஸ்கியின்
நிரந்தரப்
புரட்சி
தத்துவத்தின்
கோட்பாடுகள்,
தற்போது
கட்டவிழ்ந்து
வரும்
போராட்டத்திற்கு
மிக
ஆழமாக
பொருந்தி
நிற்கின்றன.
புரட்சியின்
வெற்றி
மற்றும்
ஜனநாயக
உரிமைகள்
மற்றும்
சமத்துவத்திற்கான
உங்களின்
விருப்பம்
ஒரு
சோசலிச
வேலைத்திட்டத்தின்
அடிப்படையில்,
அதிகாரத்திற்கான
போராட்டத்தில்
மட்டுமே
அடையப்படமுடியும்.
முதலாளித்துவ
வர்க்கம்
மற்றும்
அதன்
அமைப்புகளின்
எந்த
அரசியல்
பிரதிநிதித்துவம்
முன்னிருத்தப்பட்டாலும்
அதை
நம்புவதற்கில்லை.
போலி-ஜனநாயக
மற்றும்
தேசிய
முதலாளிகளோடு
சமரசப்பட்ட
பிரதிநிதிகளின்
மத்தியில்
அல்லாமல்,
மாறாக,
உலகமெங்கிலும்
உள்ள
தொழிலாள
வர்க்கத்தின்
மத்தியில்
கூட்டாளிகளை
காணுங்கள்.
ஒவ்வொரு
கண்டத்திலும்
உள்ள
தொழிலாளர்கள்
அவர்களின்
சமூக
நிலைமைகளிலும்,
ஜனநாயக
உரிமைகளிலும்
இன்னும்
இன்னும்
அதிகமான
காட்டுமிராண்டித்தனமான
தாக்குதல்களை
எதிர்கொண்டு
வரும்
நிலையில்,
அவர்கள்
வட
ஆபிரிக்காவில்
தொடங்கியுள்ள
புரட்சிகர
போராட்டங்களில்
இருந்து
புதிய
உட்தூண்டுதல்களைப்
பெற்று
வருகிறார்கள். |