WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் எடுபிடி:
NPA
யின் ஒலிவியே பெசன்ஸநோவின் துனிசியாவிற்கான
பயணம்
By Alex Lantier
31 January 2011
Use this version to print | Send
feedback
பிரெஞ்சு ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஜைன்
எல் அபிடைன் பென் அலி ஜனவரி
14ம்
திகதி பதவியிலிருந்து விலகி ஓடுமாறு வெகுஜன எதிர்ப்புக்களால்
கட்டாயத்திற்குள்ளான துனிசியாவிற்கு ஜனவரி
25-26
திகதிகளில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின்
(NPA)
ஒலிவியே பெசன்ஸநோ கடமையைச் செய்வதற்கு பிரான்சிலிருந்து
சென்றிருந்தார்.
அங்கு.
பிரான்சின்
“இடது”
ஸ்தாபனத்தின் ஏனைய நபர்கள்—
பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின்
(PCF)
தலைவர்
பியர் லொரோன்ட் மற்றும் பசுமைவாதக் கட்சியின் ஈவா ஜோலி
ஆகியோரும் துனிசியாவிற்கு பயணிக்கும் திட்டங்களை கொண்டுள்ளனர்.
NPA
செய்தி
ஊடகத்திற்கு கொடுத்துள்ள அறிக்கையில் பெசன்ஸநோ
“14
வது
ஜனவரி முன்னணியின் அமைப்புக்களை சந்திக்க இருப்பதாக”
கூறியுள்ளது.
இது
சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஐக்கிய இடது குழுவாகும்.
PCOT
யின்
[துனிசிய
தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி]
தலைவர்
ஹம்மா ஹம்மாமி,
இடது
தொழிலாளர்கள் லீக்கின் தலைவர்கள்,
அஞ்சல்
துறைத் தொழிலாளர் சங்க அதிகாரிகள்,
மனித
உரிமைகள் அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்கும்
திட்டமுள்ளது.
ஜனவரி
14
முன்னணி என்பது தொழிற்சங்கங்களும் மற்றும்
PCOT,
நாசரிசவாத தொழிற்சங்கங்கள்,
பாத்திச சிந்தனைப் போக்கு,
ஜனநாயக
தேசியவாதிகள் மற்றும் தேசபக்த,
ஜனநாயக
தொழிற் கட்சி ஆகியவை அடங்கியுள்ள அரசியல் கட்சிகளின்
கூட்டாகும்.
இது
ஜனவரி
20ம்
தேதி ஒரு சுருக்கமான ஸ்தாபித ஆவணத்தை வெளியிட்டது.
துனிசில் பெசன்ஸநோ ஒரு இரவு நேர
ஆர்ப்பாட்டதையும் பார்த்தார்.
துனிசியாவில் பரந்த முறையில் பிரெஞ்சு மொழி பேசப்படுகிறது
என்றாலும் அவர் பகிரங்கமாகப் பேசியதாக தகவல்கள் ஏதும் இல்லை.
இந்தப் பயணங்கள்
NPA, PCF,
பசுமைவாதிகள் மற்றும் பிரான்சின் முக்கிய முதலாளித்துவ
“இடது”
கட்சியான சோசலிஸ்ட் கட்சி
(PS)
ஆகியவற்றிற்கு இடையேயான ஒருங்கிணைப்பில் வந்த உயர்மட்டக்
கொள்கையின் ஒரு பகுதியாகும்.
துனிசை
விட்டு பென் அலி ஓடிய பின் இவை
“ஒரு
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்றம் தேவை”
என்று
இவை ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன.
பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை போல்,
PS
ம்
உத்தியோகபூர்வ
“இடது”
கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டணி ஒன்றை அமைத்து
பென் அலியின் ஆட்சிக்குப் பின்னர் வந்துள்ளதற்கு ஒரு
“ஜனநாயக”
அத்தி
இலை மறைப்பைக் கொடுக்க முற்பட்டு,
மக்களின் எதிர்ப்பை தடுத்துநிறுத்த முயல்கின்றன.
பென்
அலியின் எடுபிடிகளான மஹ்மத் கன்னொச்சி,
பௌவட் மெபஜா போன்றவர்களின் தலைமையில் நடைபெறும்
தற்போதைய ஆட்சியை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன
Journal du Dimanche
க்குக்
கொடுத்த பேட்டியொன்றில்,
துனிசிய எழுச்சிகளை சமூக ஜனநாயக,
தொழிற்சங்க அரசியலுக்கு வெற்றி போல் காட்டுவதற்கு பெசன்ஸநோ
முற்பட்டார்.
அவர்
கூறியது:
“அமைப்பு,
இயக்கத்தின் வழிமுறைகள் பற்றிய குறிப்புக்களை நான்
எடுத்துவருகிறேன்.
இது
மிகவும் ஈர்ப்புடையதாக உள்ளது.”
ஆனால்
துனிசியாவில் எந்த அமைப்பு பற்றிய குறிப்புக்களை அவர் கற்றார்
என்பது பற்றி அவர் கூறவில்லை.
துனிசியாவின்
“கூட்டு
மலர்ச்சி”
பற்றிக் குறிப்பிட்ட பெசன்ஸநோ
“தொழிற்சங்கங்கள்
மிகத் தீவிர அணிதிரள்வு
“புதிய”
அரசாங்கத்தின் இராஜிநாமாவை கோரியுள்ளதை”
காண்பதற்கு
“ஆர்வம்
மிகுந்துள்ளது”
என்றார்.
அவர் மேலும் கூறியது:
“பிரான்சில்
எங்கள் வேலை எமது அரசாங்கத்தையே,
எங்கள்
சொந்த ஏகாதிபத்தியத்தையே தோற்கடித்தல் என்பதாகும்.
பிரான்சின் தற்போதைய ஆளும் கட்சியான வலது இதைச் செய்யாது,
அது
உறுதி….
PS
ம் அது
பற்றி எதுவும் செய்யாது!
சில
நாட்களுக்கு முன்பு,
சோசலிஸ்ட் இன்டர்நேஷனலில்
[PS
ஐ
உள்ளடக்கிய சமூக ஜனநாயகக் கட்சிகளின் கூட்டணி]
உறுப்பினராக பென் அலி இருந்தார் என்பதை நான் நினைவு கூர
விரும்புகிறேன்.
பென்
அலி ஆட்சியை அரசாங்கம் மட்டும் ஆதரிக்கவில்லை.”
துனிசிய எழுச்சிகள்
PS
உட்பட
ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஒரு
சர்வாதிகாரியை அகற்றினாலும்,
துனிசிய நிகழ்வுகள் ஒரு
“சமூக
ஜனநாயகப் புரட்சிதான்”
என்று
பெசன்ஸநோ கூறினார்.
“நமக்கு
ஒரு சமூக ஜனநாயகப் புரட்சியும் தேவை”
என்றார் அவர்.
பெசன்ஸநோவின் அறிக்கைகள் பொய்கள்,
அரை
உண்மைகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும்.
“மிகத்தீவிர”
அணிதிரள்வை நடத்திய தொழிற்சங்கங்களுக்கு அவர் பாராட்டுத்
தெரிவித்தாலும்,
UGTT
எனப்படும் துனிசியாவின் ஒரே தொழிற்சங்கம் சர்வாதிகாரத்தின்
நிலையான பகுதியாக இருந்தது அனைவரும் அறிந்ததே ஆகும்.
UGTT
யின்
தேசியத் தலைமை முதலில் பென் அலிக்கு எதிரான எதிர்ப்புக்களை
கண்டித்தது.
பின்னர் செல்வாக்கற்ற மெபாஜாவின் இடைக்கால அரசாங்கத்தில் பங்கு
பெறுவதற்குத் தன் அதிகாரிகளை அனுப்பி வைத்தது.
ஆனால்
எதிர்ப்புக்கள் மெபாஜாவிற்கு எதிராக தொடரும் என்பது
தெளிவானவுடன் தன் உறுப்பினர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஏகாதிபத்தியம் பற்றிய அவருடைய கருத்துக்களைப்
பொறுத்தவரை,
அவை
கொடுக்கும் விடைகளை விட வினாக்களைத்தான் அதிகம் எழுப்பியுள்ளன.
NPA
யின்
தலைமை
PS
ஆனது
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காவலர்,
கொலைக்கார பென் அலி சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கிறது
என்பதை அறிந்திருந்தால்,
ஏன்
அவர்கள் துனிசியாவின்
PS
ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்?
அவர்கள் ஏன்
PS
அல்லது
PCF
அல்லது
பசுமைவாதச் செயற்கோள்களுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள
வேண்டும்?
அத்தகைய முயற்சிகள் வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை
பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்ட முயற்சிகள் என்று ஏன்
கண்டிக்கவில்லை?
துனிசியா தொடர்பான
NPA
இன்
நிலைப்பாடு ஒரு தெளிவான அடையாளத்தை காட்டுகிறது
—அதாவது
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அது ஆதரவு தருகிறது என்பதுதான்.
முழு
நனவுடன் இது வேலைசெய்து ஏகாதிபத்தியக் கட்சிகளான
PS
போன்றவற்றிற்கு ஆதரவை கொடுக்கிறது.
அதே
நேரத்தில் வெற்றுத்தன,
இழிந்த
சொற்றொடர்களை
“சமூக
ஜனநாயக புரட்சி”,
“எங்கள்
சொந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்க முயலுதல்”
போன்றவற்றை பயன்படுத்துகிறது,
இக்கொள்கையில் ஆழ்ந்த புறநிலை வேர்கள் உள்ளன.
பிரெஞ்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு குறைவூதியத்
தொழிலாளர் தொகுப்பின் பெரும் ஆதரமாக துனிசியா வெளிப்பட்டுள்ளது
(see “France:
Continental offers €137-a-month jobs in Tunisia“);
மேலும்
பிரான்சிலேயே குடியேறி வாழும் தொழிலாளர்களில் பெரும் பங்கைக்
கொண்டுள்ளது.
இங்குள்ள மக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின்
கொள்கைகளைப் பெரிதும் எதிர்க்கின்றனர்:
அதாவது
ஆப்கானிய,
ஈராக்
ஆக்கிரமிப்புக்கள்,
உலகம்
முழுவதும் பலரைச் சித்திரவதைக்கு உட்படுத்துதல்,
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போரின் போது”
தோற்றுவிக்கப்பட்டுள்ள சிறை வலையமைப்புக்கள்,
மற்றும் இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனியர்கள்
அடக்கிவைக்கப்பட்டுள்ளது போன்றனவாகும்.
PS
அல்லது
மற்றய ஏகாதிபத்தியக் கட்சியின் ஆதரவு பெற்ற ஒரு துனிசிய
ஆட்சியின் பணிகள் ஊதியங்களை மிகக் குறைந்த அளவிற்கு வைத்தல்,
ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பை
அடக்குதல் என்பவை ஆகும்.
இத்தகைய கொள்கைகள் சமாதான முறையில் அல்லது ஜனநாயக வழிவகையில்
தொடரப்பட முடியாதவை.
பென்
அலியின் பொலிஸ்-அரச
வழிமுறைகள் அவருடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் வர்க்க
நலன்களில் இருந்துதான் நேரடியாக வெளிப்பட்டன.
துனிசியாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம்
மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டம்
ஆகியவற்றிற்கு இடையேயுள்ள ஆழ்ந்த தொடர்பை காட்டுகிறது
—அதாவது
துனிசியாவிலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள ஏகாதிபத்திய
நாடுகளிலும்.
WSWS
சுட்டிக் காட்டியுள்ளபடி,
இப்பொழுது தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முக்கிய பணி
சர்வதேச அளவில் புரட்சிகர கட்சிகளைக் கட்டமைத்து
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துவதாகும்.
(see “The
mass uprising in Tunisia and the perspective of permanent
revolution)
பெசன்ஸநோவின் பயணம் புரட்சிகர கம்யூனிஸ்ட்
லீக்கின்
(LCR) 2009
ஆண்டு
NPA
ஆக
மாற்றமடைந்ததின் சரியான தன்மை பற்றிய
WSWS
உடைய
பகுப்பாய்வையும் நிரூபிக்கிறது.
LCR
தன்னை
மறுமுத்திரையிட்டுக் கொள்ளுதல் என்பது பகிரங்கமாக அதன்
முன்னாள் அமைப்பிலிருந்து வெட்டிக் கொள்ளும் ஒரு முயற்சிதான்
என்று
WSWS
கூறியது—அதாவது
ட்ரொட்ஸ்கிச அரசியலில் இருந்து.
LCR
க்கு
பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் மார்க்சிச சர்வதேசியம் ஆகிய
லியோன் ட்ரொட்ஸ்கியுடன் பிணைந்துள்ள மரபுகளுக்கு தன்
ஏகாதிபத்திய சார்பு கொள்கைகள் முரண்பாடு உடையனவாக இருக்கும்
என்பது நன்கு தெரியும்.
இப்பொழுது
NPA
இழிந்த
முறையில் பென் அலியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு மக்கள்
எழுச்சியின் நடுவே
“சமூக
ஜனநாயகப் புரட்சியை”
இழிந்த
முறையில் வளர்க்கும் வகையில் வெளிப்பட்டுள்ளது.
இதற்காக பலவித சிண்டிகலிச,
தேசியவாதக் கூறுகள் மற்றும்
“உத்தியோகபூர்வ”
எதிர்க் கட்சிகளிற்கு ஆதரவைக் கொடுக்கிறது.
பென்
அலியின் கீழ் சட்டவிரோத அமைப்பாக இருந்த
PCOT
உடன்
NPA
நடத்தும் பேச்சுக்கள்,
இப்பிரச்சினைகளை
“ஜனநாயகம்”
பற்றிய
தெளிவற்ற உறுதிமொழிகளின் கீழ் மறைக்கப்படுகின்றன.
பிரான்சில்
NPA
கொண்ட
பங்கைத்தான் துனிசியாவில்
PCOT
கொண்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட
“எதிர்த்தரப்பின்”
இடது
புறம் என்ற வகையில்.
மறைந்த
அல்பானிய ஸ்ராலினிச சர்வாதிகாரி என்வர் ஹோக்ஸாவின்
கருத்துக்களை வளர்த்த ஒரு மாவோயிசக் கட்சியான
PCOT
ஆனது
அரசியலமைப்பு நிர்ணய மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் தேவை
என்று அழைப்பு விடுத்துள்ளது.
14
ஜனவரி
முன்னணியில் சேர்வதற்கு முன்னதாக,
இது
18
அக்டோபர் கூட்டணி என்று
2005ல்
அமைக்கப்பட்ட குழுவில்,
PDP
என்னும் ஜனநாயக முற்போக்குக் கட்சி தலைமையில் உருவானதில்
சேர்ந்திருந்தது.
பென்
அலியின் கீழ் முக்கிய அங்கீகாரம் பெற்றிருந்த
“எதிர்க்
கட்சியாக”
PDP
விளங்கியது.
தற்பொழுது துனிசிய இராணுவம் மக்களைப்
பாதுகாக்கும் என்ற கருத்தைப்
PCOT
பரப்புகிறது.
இப்பொய் மக்களை தூங்குவதற்குப் பாடலாக ஆபத்தான முறையில்
இருக்கும்.
இது
துனிசிய இராணுவம் இறுதியில் ஏகாதிபத்திய நலன்களுக்காக
எதிர்ப்புக்களை நசுக்குவதையும் தேசிய முதலாளித்துவ ஆட்சியின்
நலன்களைப் பாதுகாப்பதையும் எளிதாக்கும்.
PCOT
போன்ற
“எதிர்ப்புச்”
சக்திகள் தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு துனிசிய மக்கள்
தொடர்ந்து அடக்குமுறைக்கு சமரசம் செய்துகொள்வதற்கு,
“ஜனநாயகம்”
என்ற
வெற்று ஆடையில் தொடர முயற்சிப்பதற்கு துல்லியமாக பயன்படும்.
ஆனால்,
இந்த
தந்திரோபாயத்தை தொடர பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முக்கிய
அரசியல்வாதிகள் முயல்கையில்,
அவர்கள் பென் அலியுடன் கொண்டிருந்த தொடர்புகள் நன்கு தெரிந்தவை
என்ற நிலையை எதிர்கொள்கின்றனர்.
பென்
அலியுடனான தொடர்பை
Socialist International
மூலம்
PS
வைத்திருந்தது அனைவரும் அறிந்ததுதான்.
பெசன்ஸநோவே அது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும்
கன்சர்வேடிவ்கள் என்ற வகையில்,
வெளியுறவு மந்திரி
Michele Alliot Marie
மக்கள்
எதிர்ப்புக்களை பென் அலிக்காக அடக்குவதற்கு உதவ பிரெஞ்சு
பொலிசை அவர் துனிசில் இருந்து ஓடுவதற்கு சற்று முன்னதாக
அறிவித்திருந்தார்.
அவர்கள் துனிசியாவிற்கு வந்திருந்தால்,
மக்கள்
எதிர்ப்பை அது தூண்டியிருந்திருக்கும்.
ஒரு புதிய ஏகாதிபத்திய சார்புடைய அரசாங்கத்தை
துனிசில் ஒருங்கிணைப்பது என்னும் முயற்சி
B
நிலை
அணிக்குக் கிடைக்கிறது
—கீழ்
நிலையுடைய அரசாங்க நபர்களான
Laurent
மற்றும்
Joly
போன்றோர்களுக்கு.
ஆனால்
முதலில் பெசன்ஸநோ இந்த விவகாரத்திற்கு ஒரு இளம் தலைமுறையின்
“எதிர்ப்பு”ப்
பார்வையை கொடுக்க வேண்டும்.
இப்பணியை எடுத்துக் கொள்வதில் பெசன்ஸநோ ஆளும் வர்க்கம்
அவருக்கு ஒதுக்கிய பணியைத்தான் செய்துவருகிறார்:
அதாவது
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் எடுபிடி. |