செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
இராணுவ ஆட்சிக்கு எதிராக கெய்ரோவில் ஆயிரக்கணக்கான மகளிர்
அணிவகுப்பு
By Barry Grey
21 December 2011
use this version to print | Send
feedback
இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறைத்
தாக்குதலை எதிர்த்தும் கடந்த பெப்ருவரியில் ஹொஸ்னி முபாரக்
அகற்றப்பட்டதில் இருந்து நாட்டை ஆளும் இராணுவக்குழு இராஜிநாமா
செய்ய வேண்டும் என்று கோரியும் செவ்வாயன்று கெய்ரோ நகர
மையத்திற்கு ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்துச் சென்றனர்.
ஆண் எதிர்ப்பாளர்களால் பாதுகாப்பளிக்கப்பட்ட பெரும்பாலான
மகளிரைக் கொண்ட கிட்டத்தட்ட 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்
தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து பிரஸ் சிண்டிகேட்டிற்கு
“எகிப்திய
மகளிர் ஒரு சிவப்புக் கோடு”,
“இராணுவ
ஆட்சி வீழ்க”
என்று கோஷமிட்டு அணிவகுத்துச் சென்றனர். மகளிரை
இராணுவத்தினர் தாக்கும் படங்களை பலர் சுமந்து சென்றனர். அதில்
ஒரு குறிப்பிடத்தக்க படம் மறைப்பு அங்கி அணிந்திருந்த பெண்
ஒருவர் படையினரால் இழுத்துச் செல்லப்படுவது, அவருடைய உடைகள்
பாதி களையப்பட்ட நிலையில் படையினர் அவரைத் தாக்க முயற்சித்தல்
என்பதாக இருந்தது.
வலைத் தளத்தின் மூலம் பரந்த அளவில் வெளிப்பட்டுள்ள வார
இறுதியில் சில செய்தித்தாட்களாலும் வெளியிடப்பட்ட
அந்தப்படமும், ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் அடித்தல்,
உண்மையான தோட்டாக்களை சுடுதல் ஆகியவற்றைக் காட்டும் ஏனைய
படங்களும் மக்களிடையே பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன.
குறைந்தப்பட்சம் 14 பேராவது இராணுவம் மற்றும் பொலிசாரால்
கொல்லப்பட்டனர், 850 பேருக்கும் மேலானவர்கள் ஆட்சி எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வெள்ளி முதல் நடத்தப்படும்
தொடர் தாக்குதல்களில் காயமுற்றுள்ளனர்.
இரண்டாம் நாள் தொடர்ச்சியாக செவ்வாயன்று நான்கு இறப்புக்கள்
ஏற்பட்டன. இவை தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்துள்ள
எதிர்ப்பாளர்கள்மீது துருப்புக்களும் பொலிசும் நடத்திய
அதிகாலைத் தாக்குதல்களின் விளைவு ஆகும். இறந்தவர்கள் அனைவரும்
சுடப்பட்டிருந்தனர். மார்பில் குண்டுத் துளைப்பின் விளைவாக ஒரு
15 வயதுச் சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளான்.
SCAF
எனப்படும்
ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவின் கூற்றான துருப்புக்கள்
உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தவில்லை,
ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் வன்முறையைத் தூண்டுகின்றனர் என்பது
செவ்வாயன்று எகிப்தின் தலைமை மருத்துவத் தடய வைத்தியர்
வெளியிட்ட அறிக்கையினால் சிதறிப்போனது. உத்தியோகபூர்வ
MENA
செய்தி அமைப்பின்
கருத்துப்படி, வெள்ளி முதல் கொல்லப்பட்ட 10 முதல் 13 மக்களின்
சடலங்கள் மீது பிரேத விசாரணை நடத்திய டாக்டம் எசன் கமில்
ஜோர்ஜி
“9 பேர்
துப்பாக்கித் தோட்டாக்களினால்”
காயமுற்றனர் என்று முடிவுரையாகத்
தெரிவித்துள்ளார்.
“குற்றவிசாரணைக்கு
வழங்கப்படமுன் தென் கெய்ரோ நீதிமன்றத்தில் மற்றொருவர்
இறந்துபோனார்”
என்று
அறிக்கை கூறுகிறது.
“இறப்பின்
காரணம் தலையில் அதிர்வு தரக்கூடிய காயம் ஏற்பட்டது, அது
உள்ரத்தக் கசிவை ஏற்படுத்தியது.”
என்றும் அறிக்கை தொடர்ந்து கூறுகிறது.
வாஷிங்டன் அதன் ஆண்டு இராணுவ உதவி நிதியான 1.3 பில்லியன்
டாலரின் ஒரு பகுதியாகக் கொடுத்துள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகளை
பயன்படுத்தும் இராணுவத்தின் கொலை வெறி வன்முறை, இப்பொழுது
நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக வெடித்த புதிய
வெகுஜன எதிர்ப்பு அலைக்கு விடையிறுப்பு ஆகும். இதன் இறுதி
நோக்கம் ரமழான் முடிந்தவுடன் தொடங்கிய 750,000 தொழிலாளர்கள்
உள்ளடங்கிய தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை முடிப்பதுதான்.
தேர்தல்களின் மோசடித் தன்மை மற்றும் ஆயுதப்படைகளின்
தலைமைக்குழுவின் கீழ் ஜனநாயகத்திற்கான மாற்றம் எனக்
கூறப்படுவதின் ஏமாற்றுகரமான தன்மையைத்தான் இராணுவ
வன்முறைத்தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்களின்
பரந்த பிரிவுகள் சிலவற்றில் இன்னும் எஞ்சியிருக்கும்
இராணுவத்தைப் பற்றிய போலித்தோற்றங்களுக்கும் இது
குழிபறிக்கின்றது. தாராளவாதிகள் மற்றும் முபாரக்கின் போலி இடது
எதிர்ப்பாளர்கள் புரட்சியை இராணுவம் பாதுகாக்கும் என்று
கூறினர்.
தற்பொழுது நடத்தப்படும் இராணுவ வன்முறை ஐக்கிய நாடுகள் சபையின்
அதிகாரிகள் மற்றும் ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து கடந்த சில
தினங்களாக உத்தியோகபூர்வக் குறைகூறலைத் தூண்டியுள்ளது.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் கான் கி-மூன் இராணுவத்தின்
“மிகையான
வன்முறை”
என அவர்
கருதியதைக் கண்டித்துள்ளார். அமெரிக்காவின் வெளிவிவகாரச்
செயலர் ஹில்லாரி கிளின்டன் ஞாயிறன்று ஒரு வழக்கமான அறிக்கையை
வெளியிட்டுத் தான் வன்முறை குறித்து
“ஆழ்ந்த
கவலையைக் கொண்டுள்ளதாகவும்”
பாதுகாப்புப் படைகள்
“அனைத்து
எகிப்தியர்களின் பொதுவான உரிமைகளை மதித்துக் காக்க வேண்டும்”
என்று வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் திங்கட்கிழமையளவில் வலைத் தளத்தில்
ஒளிப்படபதிவுகள் பரவியதையடுத்து எகிப்தில் அதிகரித்த
கலகங்களின் அடையாளங்களுக்கு பதிலளிக்குமுகமாக கிளிண்டன் அதிகம்
கவனம்கூடிய அறிக்கை ஒன்றினை வெளிவிட நிர்ப்பந்திக்கப்பட்டு,
மகளிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இராணுவத்தின் அணுகுமுறையை
“அதிர்ச்சியூட்டுவதாகவும்,
வெறுக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார். வாஷிங்டன்
முதலாளித்துவ அரசின் முதுகெலும்பாகவும் மற்றும்
அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கான முக்கிய
பாதுகாவலனுமான எகிப்திய இராணுவத்திற்கு முழு ஆதரவையும்
கொடுக்கையில் இத்தகைய அனைத்து கண்டித்தல்களும்
போலியானவையாகும்,
எகிப்திய இராணுக்குழுவிற்கு வாஷிங்டனின் ஆதரவு, லிபியாவில்
ஆட்சி மாற்றத்திற்கான அதன் போர், சிரியாவில் அசாத்தை
அகற்றுவதற்கான அதன் முயற்சிகள் ஆகியவற்றில் வாஷிங்டனின்
இரட்டைத் தரங்களுடைய நிலைப்பாடு, அதுவும் மனிதாபிமான, ஜனநாயக
அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது என்று கூறப்படுவது நன்கு
வெளிப்படையாகிறது. முபராக்கிடம் இருந்து ஆட்சியைப் பெற்றதில்
இருந்தே ஆயுதப்படைகளின் தலைமைக்குழு 80க்கும்மேற்பட்ட
எதிர்ப்பாளர்களைக் கொன்றுள்ளது, பல ஆயிரக்கணக்கானவர்களை
காயப்படுத்தியுள்ளது; அதே நேரம் 12,000 குடிமக்களுக்கு மேல்
கைதுசெய்யப்பட்டு வழக்குகள் நடக்கின்றன. இவர்களில் பலர்
சித்திரவதைக்கு உட்பட்டுள்ளனர். எகிப்திய இராணுவ
ஆட்சிக்குழுவிற்கு கிளின்டன் ஒரு சிறு தாக்குதல் கொடுத்த அன்றே
அமெரிக்க வெளிவிவகாரத்துறை டமாஸ்கஸில் உள்ள ஆட்சி கீழிறங்க
வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.
குடிமக்களை சுட்டுவீழ்த்தப் பயன்படுத்தப்படும் சிறு ஆயுதங்கள்
வெடிமருந்துக்கள் என்று வெளிநாட்டு அரசாங்கங்கள் கொடுப்பது
தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை
கொடுத்த அழைப்பை ஒபாமா நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.
வாஷிங்டனுடைய ஆதரவால் ஊக்கம் பெற்றுள்ள எகிப்திய இராணுவக்குழு,
எதற்கும்
விடையிறுக்கத் தேவையில்லாமல் தான் கொலை செய்யலாம்,
உறுப்புக்களைத் துண்டிக்கலாம் என்று நம்புகிறது. திங்களன்று
எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவின் உறுப்பினர் ஒருவரான ஜெனரல்
அடெல் எமரா ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தை
நடத்தினார்; இதில் அவர் முழு வன்முறைக்கும் காரணம்
எதிர்ப்பாளர்கள்தான் என்று கூறி,
“நாட்டை
அழிக்க அவர்கள் முற்படுகின்றனர்”
என்று
கண்டித்தார். செய்தி ஊடகத்தையும் தாக்கிய அவர் ஒரு கட்டத்தில்,
“மறுபுறத்தில்
உள்ளவர்கள் பயன்படுத்தும் மிக அதிக வன்முறை குறித்து நீங்கள்
ஏன் பேசுவதில்லை”
என்று கேட்டார்.
இராணுவத் தலைவர்களின் பொது கருத்தும் அவர்களுடைய இறுதி
விருப்பமும் ஒரு இராணுவ ஆலோசகராகப் பணிபுரியும் ஓய்வு பெற்ற
தளபதி அப்துல் மொனீம் மடோ பகிரங்கமாகக் கூறிய கருத்தில்
சுருக்கமாக உள்ளது. எதிர்ப்பாளர்கள்
“ஹிட்லரின்
அடுப்புக்களில்”
எறியத் தகுதி பெற்றவர்கள் என்று அவர்
அறிவித்தார்.
மகளிரணியினால் எச்சரிக்கை அடைந்து, தன் ஆத்திரமூட்டல் தன்மை
கொண்ட அறிக்கைகள் வெகுஜன எழுச்சியைத் தூண்டிவிடுகின்றன என
அஞ்சும் இராணுவக்குழு—வாஷிங்டனுடன்
ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்—செவ்வாய்
பின்பகுதியில்
“வன்முறைகள்”
குறித்து
மன்னிப்புக் கேட்பதாக ஓர் அறிக்கையை வெளியிட்டு,
“எகிப்தின்
பெரும் மகளிருக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்”
என்று கூறினர். மகளிர் மீது தாக்குதல்
நடந்ததற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாகவும்
உறுதியளித்துள்ளனர்.
இராணுவ ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பெருகிய நெருக்கடி தாராளவாத
எதிர்த்தரப்பின் பிரதிநிதிகளை முஸ்லிம் சகோதரத்துவத்துடன்
சேர்ந்து கொண்டு, பொது அரசாங்கத்திற்கு அதிகாரத்தை
மாற்றுவதற்கு இராணுவம் அதன் அட்டவணையைத் துரிதப்படுத்த
வேண்டும் என்று கோர வைத்தது. தாராளவாதப் பிரமுகர் அமர் ஹம்ஜாவி
இன்னும் பல புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற
உறுப்பினர்கள் திங்களன்று முஸ்லிம் சகோதரத்துவத்தின் முகமத்
பெல்டகி இன்னும் பிற அரசியல் தலைவர்களுடன் உயர்நீதிமன்ற
படிக்கட்டுக்களில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து
கொண்டனர். அவர்கள் இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தைப்
பாராளுமன்றத்தில் கீழ்பிரிவிடம் ஒப்படைக்க வேணடும் என்றும் இது
தேர்தல் அப்பிரிவிற்கு நடந்து முடிந்தவுடன் நடத்தப்பட வேண்டும்
என்றும் கோரியுள்ளனர். அம்மன்றத்தில் வலதுசாரி முதலாளித்துவ
சகோதரத்துவம் இன்னும் பிற இஸ்லாமிய சக்திகளின் மேலாதிக்கம்தான்
உள்ளது. இக்குழு ஜனவரி 25ம் திகதியை ஒரு காலக்கெடுவாக
நிர்ணயித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்குழுவை நெறிப்படுத்த
முயன்று, அதற்கு ஜனநாயகச் சான்றுகளையும் அளிக்க முன்வந்த
இச்சக்திகள் இப்பொழுது தேவையானால் முதலாளித்துவ
அரசாங்கத்தைக் பாதுகாக்கவும் தொழிலாள வர்க்கத்தின்
எதிர்ப்பை நசுக்கவும் ஒரு மாற்றீட்டைத் தயாரிக்க
முற்படுகின்றன. இவற்றிற்கு பல மத்தியதர மற்றும் போலி இடது
அமைப்புக்களின் ஆதரவு உள்ளது. கடந்த ஞாயிறன்று புரட்சிகர
சோசலிஸ்ட்டுக்களின் தலைவர் கமால் கலீல் 170
அரசியல்வாதிகள், அறிவுஜீவிகளுடன் இணைந்து
“தேசிய
புனருத்தாரண”
அரசாங்கம் ஒன்று தேவை என்று கூறிய
அறிக்கையில் கையெழுத்திட்டார்.
|