use this version to print | Send
feedback
குவாங் மாநிலத்தில் வுகான்
கிராமவாசிகள் தங்கள் கூட்டு நிலத்தை நில அபிவிருத்தியாளருக்கு
ஊழல்ரீதியாக விற்பனை செய்வதை எதிர்த்து நடத்தும் உறுதியான
போராட்டம், சீனக் கிராமப்புற மக்கள் என்று மட்டும் இல்லாமல்
நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்திடமும் இனி என்ன வரவுள்ளது
என்பதற்கான அடையாளத்தைக் காட்டுகிறது.
சீனாவிலுள்ள கடுமையான சமூக அழுத்தங்கள் பல
நேரமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈடுபாடு கொள்ளும் கணக்கிலா
எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றில் தங்கள்
வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஆனால் வுகானில் நடக்கும் எதிர்ப்பு
போல் வெகுசிலவே நீடித்து நடக்கின்றன. இது பொலிஸ்-அரசாங்கத்தின்
கடுமையான நடவடிக்கைகளை மீறி பல மாதங்களாக நடைபெறுகின்றது.
இதில் கைதுகள் மற்றும் 20,000 மக்கள் இருக்கும் ஒரு சமூகத்தை
ஆயுதமேந்திய முற்றுகை ஆகியவை உள்ளன. இரு வாரங்களுக்கு முன்
எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரான ஜியூ ஜின்போ
சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பொலிஸ் காவலில் இருக்கும்போது
இறந்து போனார்.
செப்டம்பர் மாதம் விவசாயிகள் உள்ளூர்
கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளை விரட்டி அடித்தனர். அவர்கள் ஒரு
வெற்று பொலிஸ் நிலையம் மற்றும் அரசாங்க அலுவலகங்களை விட்டு
நீங்கினர்; கிராமவாசிகள் தங்கள் சொந்த பிரதிநிதிகள் குழுவைத்
தேர்ந்தெடுத்தனர். ஜியூவின் மகன் விளக்கினார்:
“நிர்வாகத்தில்
நாங்கள் திறமையுடன் இருக்கிறோம் என்று கண்டுள்ளோம். பழைய
அதிகாரிகள் அலுவலகத்தில் கணக்குகள் ஏதும் வைத்திருக்கவில்லை,
அவர்கள் எங்களை மோசடி செய்து வந்திருக்க வேண்டும்.”
ஊழல் மிகுந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அகற்றி
அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் ஜனநாயக அமைப்புகளால்
பதிலீடுசெய்யப்படவேண்டும் என்ற பிரச்சினையை வுகான் எதிர்ப்பு
எழுப்பியுள்ளது. கிராமவாசிகளின் நிலைப்பாட்டிற்கு
நகர்ப்புறங்களிலும் அண்டையில் உள்ள உற்பத்தி மையங்களிலும்
பரந்த தொழிலாளர்களிடையே பரிவுணர்வுடைய கூட்டினை
ஏற்படுத்தியுள்ளது.
வுகானின் போராட்டதினால் ஊக்கம் பெற்று,
செவ்வாயன்று ஷான்டௌ நகரத்திற்கு அருகே ஹைமென் என்னும் இடத்தில்
கிட்டத்தட்ட 50,000 மக்கள் அருகிலுள்ள நிலக்கரிமூலம் எரிசக்தி
உற்பத்தி செய்யும் ஆலையின் மாசுபடுத்தலால் உள்ளூர்
மீன்பிடிக்கும் தளங்களில் அதன் பாதிப்பு ஆகியவை குறித்து
எதிர்ப்புத் தெரிவித்தனர். பொலிசாரின் கலகப்பிரிவினர்
கண்ணீர்ப்புகையை செலுத்திக் கலைக்குமுன் நகரவை அலுவலகங்களை
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். கடுமையான நடவடிக்கை
இருந்தபோதிலும்கூட, அவர்கள் மறுநாள் ஒரு முக்கிய நெடுஞ்சாலையை
தடைக்கு உட்படுத்த மீண்டும் திரும்பினர்.
குவாங்ஜௌ மாநிலத் தலைநகரில் வுகான்
கிராமவாசிகளுக்கு ஒற்றுமை காட்டும் வகையில் சிறு
எதிர்ப்புக்கள் நடைபெற்றன. இவற்றுள் வுகான் கிராமத்திற்கு
வெகுஜன ஆதரவு கோரிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியவர்கள்
தொழிலாளர்களின் சிறு பிரிவினராவர்.
குவாங்டோங்கில் உள்ள ஏற்றுமதி ஆலைகள் உலகப்
பொருளாதார நெருக்கடிக்கு முதலாளிகள் பதிலளிக்கும் வகையில்
சமீபத்திய வாரங்களில் ஊதியங்கள், வேலைகள், பணிநிலைகள்
ஆகியவற்றை குறைப்பதற்கு எதிரான தொடர்ச்சியான
வேலைநிறுத்தங்களால் அதிர்விற்கு உட்பட்டன. டிசம்பர் 10ம் திகதி
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஷென்ஜென் ஹைலியங் சேமிப்பு
பொருட்கள் ஆலையை ஆக்கிரமிப்பு செய்தவர்களை முறிக்க அனுப்பி
வைக்கப்பட்டு இருந்த பொலிஸ் கலகப் பிரிவுடன் மோதினர்.
டோன்குவான் அடிப்படை காகிதத்தாள் விளைபொருட்கள் ஆலையில் இருந்த
தொழிலாளர்கள் டிசம்பர் 17ல் இருந்து 24 மணி நேர உள்ளுருப்புப்
போராட்டத்தை நடத்துகின்றனர். இது நிர்வாகம் திடீரென ஆலையை
முடிவிட்டு ஊதியங்களையும் கொடுக்காமல் தலைமறைவாகிய நிலையில்
வந்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குக்
குறிப்பிடத்தக்க வகையில் பிரச்சனைக்குள்ளாக்குவது நாடு
முழுவதும் தேர்தல்கள் வேண்டும் என்று வுகான் கிராமவாசிகள்
விடுத்த அழைப்பு ஆகும். நாட்டின் உயர்மட்டத் தலைமைக்கும்
தேர்தல் வேண்டும் என்று கூறுப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும்
ஆட்சிக்கு எதிராக பரந்த வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு
அரசியல் மையப்புள்ளியை கொடுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
லுபெங்கிலுள்ள கிராமப்புற அரசாங்கத்
தலைமையகத்திற்கு ஒரு அணிவகுப்பு நடாத்தப்போவதாக வுகான்
கிராமவாசிகள் அறிவித்த உடன், குவாங்டோக் மாநில அதிகாரிகள்,
குறைந்தபட்சம் தற்காலிகமேனும் பின்வாங்கினர். காவலில்
வைக்கப்பட்டுள்ள நான்கு கிராமப் பிரதிநிதிகளை விடுதலை செய்ய
அவர்கள் ஒப்புக் கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமக் குழுவை
சட்டபூர்வமாக்கவும், எதிர்ப்புத் தலைவர் ஜியி பொலிஸ் காவலில்
இறந்தது குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவும் ஒப்புக்
கொண்டனர்.
ஆனால் வுகான் எதிர்ப்பிற்கு வழிவகுத்த பரந்த
சமூக அழுத்தங்கள் ஒன்றும் தளர்ந்துவிடவில்லை. 2007-08 உலகளாவிய
நிதிய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பெய்ஜிங் அரசாங்க
வங்கிகளை மிகக் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்குமாறு
உத்தரவிட்டது. இதில் பெரும்பகுதி சொத்துப்பிரிவு ஊகத்திற்கு
பாய்ந்துவிட்டது. உள்ளூராட்சிகள் சொத்து வளர்ப்பவர்களுடன்
கூட்டுச் சேர்ந்து கூட்டாக உரிமை பெற்றிருந்த நிலங்களை
அபகரித்து, பெரும் இலாபம் தரக்கூடிய கட்டிடச் சொத்துத்
திட்டங்களுக்கு வழிவகுப்பதற்காக விவசாயிகளையும் மற்றும் அங்கே
வசிப்பவர்களையும் கட்டாயமாக விரட்டியடித்தனர்.
இப்பொழுது, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும்
ஜப்பானுக்கான ஏற்றுமதியைப் பெரிதும் நம்பியிருக்கும் சீனப்
பொருளாதாரத்தின் வேகம் குறைந்துவிட்டது. ஆலைச் சொந்தக்காரர்கள்
மிகக்குறைந்த இலாபங்களை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையில்,
தொழிலாளர்களைப் பெரிதும் சுரண்டுவதுடன், இன்னும் குறைந்த
தொழிலாளர் செலவு இருக்கும் பிராந்தியங்களுக்கு நகர்கின்றனர்,
அல்லது முற்றிலும் ஆலைகளை மூடிவிடுகின்றனர். சொத்துக்களின்
விலைகளில் ஏற்பட்ட குமிழ் வெடித்துவிடும் அச்சுறுத்தலைக்
கொடுத்துள்ளது; இது குறிப்பாக பெரும் கடன் சுமையில் ஆழ்ந்துள்ள
உள்ளூராட்சிகளுக்கு பெரும் நிதியப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் ஒரு
பொது விரோதியை முகங்கொடுக்கின்றனர். 1978 முதல் முதலாளித்துவ
மீள்புனருத்தானத்தை தோற்றுவித்த பெருநிறுவன உயரடுக்கின்
நலன்களை பிரதிபலிக்கும் ஓர் ஒட்டுண்ணித்தன அதிகாரத்துவத்தை.
கிட்டத்தட்ட அரை பில்லியன் சீனர்கள் நாள் ஒன்றிற்கு அமெரிக்க 2
டாலர்,
அல்லது அதற்கும் குறைவான பணத்தில் திணறிக்கொண்டிருக்கையில்,
நாட்டின் 535,000 டாலர் மில்லியனர்கள் வைத்துள்ள முதலீடு
செய்யக்கூடிய மூலதனம் கடந்த ஆண்டு 2.66 டிரில்லியன் என்று
ஆயிற்று. இது அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி ஆகியவற்றிற்கு
அடுத்த நான்காம் இடத்தில் இவர்களை இருத்தியுள்ளது.
முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த ஏற்றம்
விவசாயத்தில் கூட்டுமுறையில்லாதொழித்தல் மற்றும் தொழிலாளர்கள்,
விவசாயிகள் இழப்பில் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்களை
விற்றல் அல்லது திருடுதல் ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ளது.
1998க்கும் 2002க்கும் இடையே 60 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள்
வேலைகளை இழந்தனர். இதில் 20 மில்லியன் பேர் கூட்டு உரிமையுடைய
கிராமப்புற சிறுநகரங்களில் இருக்கும் நிறுவனங்களில்
வேலைபார்த்தவர்கள் ஆவர். கிராமப்புற மக்களில் ஒரு மிகச் சிறிய
பகுதியினர் செல்வந்தர்களாக இருக்கையில், பெரும்பாலான மக்கள்
இழிந்த வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது
மில்லியன்கணக்கானவர்களை ஏற்கனவே பரந்த விரிவாக்கம் கொண்ட,
பெரும் சுரண்டலுக்கு உட்பட்ட தொழிலாள வர்க்கம் நிறைந்துள்ள
நகரங்களுக்கு குடிபெயரச் செய்தது.
வுகான் கிராமவாசிகளைப் போலவே, நிர்வாகத்திற்கு,
அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு
எதிராக ஓர் கிளர்ச்சி இல்லாமல் தொழிலாளர்கள் தங்கள் நலன்களைக்
பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதற்கு அடிமட்டத்தில் இருந்து
பிரதிநிதிகளை நியமிக்கும் முறை நிறுவப்பட வேண்டும். அத்துடன்
பணியிடங்கள் ஆக்கிரமிக்கப்பட வேண்டும், தொழிலாளர்களின் மற்ற
பிரிவுகள் மற்றும் கிராமப்புற மக்களின் ஆதரவை நாட வேண்டும்.
நகர்ப்புறத் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் விவசாயிகளுக்கு
அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் தலைமையைக் கொடுக்க
முடியும். அது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிஸ் அராசங்கத்தை
சீர்திருத்துவதற்கு அல்ல, மாறாக உண்மையான சோசலிச முன்னோக்கின்
அடிப்படையில் அதை இல்லாதொழிப்பதற்காகத்தான்.
இத்தகைய போராட்டம் சர்வதேச தன்மையுடையதாகத்தான்
இருக்க வேண்டும். பெய்ஜிங் ஆட்சிக்கு எதிரான எந்தத் தொழிலாள
வர்க்கத்தின் இயக்கமும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற
முன்னேறியுள்ள முதலாளித்துவ மையங்களில் இருக்கும் நிதியப்
பிரபுத்துவத்தால் எதிர்க்கப்படும். சீனத் தொழிலாளர்கள்
தவிர்க்கமுடியாமல் ஆசியா இன்னும் சர்வதேச அளவில் உள்ள தங்கள்
வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கி திரும்பும் கட்டாயம் ஏற்படும்.
இந்த அரசியல் போராட்டத்திற்குத் தவிர்க்க முடியாத தத்துவார்த்த
வழிகாட்டி லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு
ஆகும். இதுதான் பின்தங்கிய மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ள
முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த
ஓர் ஒருங்கிணைந்த மூலோபாயத்தை வழங்கின்றது.
வரவிருக்கும் எழுச்சிகளுக்குத் தயாரிப்புக்களை
நடத்த, சீனாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஸ்ராலினிசம்
மற்றும் மாவோயிசத்திற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச
இயக்கத்தின், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முக்கிய மூலோபாய
அனுபவங்களில் இருந்து பெறப்படும் படிப்பினைகளை உய்த்து
உணரவேண்டும்—இதில்
1925-27 மற்றும் 1949 சீனப்புரட்சிகளும் அடங்கியுள்ளன. இதன்
பொருள் சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய புரட்சிகரத்
தலைமையை கட்டமைத்தல் ஆகும்; அது நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக இருக்கும்.