WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
செல்வந்தர்களின் பிரலாபம்
Alex Lantier and David North
22 December 2011
use this version to print | Send
feedback
அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியூட்டும் சமூக
சமத்துவமின்மைத் தரங்கள் குறித்த மக்கள் சீற்றம் வெடித்துள்ளதை
சமீபத்திய மாதங்கள் கண்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு
எதிர்ப்புக்கள் பரந்த மக்களின் பரிவுணர்வையும் ஆதரவையும்
பெற்றுள்ளது.
செய்தி ஊடகத்தால் எதிர்பார்க்கப்படாத,
வழிநடாத்தப்படாத இப்போக்கு வோல் ஸ்ட்ரீட்டின்
“உலக
எஜமானர்களை”
பணத்தில் கொழிக்க வைத்துள்ளது மட்டுமின்றி, தம்மையே
பரிதாபப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் தள்ளியுள்ளது. இளகிய
மனத்துடன் தனியார் முதலீட்டு நிதியை இயற்ற வழிவகுத்தவர்கள்,
கடன் கடமைகளுக்கு கூட்டு உத்தரவாதம் வழங்க வைத்தவர்கள்,
இன்னும் பலவகைப்பட்ட நிதிய மோசடி செய்த இத்தகையோர் தாம்
இகழ்வைப் பெறத் தான் என்ன செய்தோம் என்று புகார் கூறுகின்றனர்.
புதன் அன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் பைனான்சியல் டைம்ஸ்
வலைத் தளம் செல்வந்தர்கள்
“எரிச்சலில்
உள்ளனர்”,
பொது எதிர்ப்புக்களில் கேட்கும்
“வர்க்கப்
போர்”
என்னும் சொல்லாட்சி குறித்துச் சினந்துள்ளனர்
என்று தகவல் கொடுத்துள்ளது.
உயர்ந்த வரிவிதிப்பு மற்றும் சொந்தச் சொத்துச்
சேமிப்பில் வரம்புகளை விதிப்பது தேசியக் கடனில் கணிசமான
பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் தவறாக
நம்புவதற்கு வழிகாட்டப்பட்டுள்ளனர் என்று இவர்கள்
வாதிடுகின்றனர். கோபத்தில் உள்ள செல்வந்தர்கள் தங்களுடைய பல
மில்லியன், ஏன் பில்லியன் டாலர்கள் ஆண்டு வருமானங்கள்கூட
எந்தச் சிறிய பொருளாதார நியாயப்படுத்தலும் இன்றி கூடுதல் கவனம்
செலுத்தப்படுகின்றன என்று இந்த எரிச்சலுள்ள செல்வந்தர்கள்
கூறுகின்றனர்.
போர்பெஸ் ஆல்
$4.7
பில்லியன் சொத்துடையவர் என மதிப்பிட்டிருக்கும் (ப்ளாக்ஸ்டோன்
குழுவின் தனிப்பங்குகள்/பெருநிறுவனக் கொள்ளையர், தலைமை நிர்வாக
அதிகாரியுமான) ஸ்டீவன் ஷ்வார்ஸ்மன் கருத்துப்படி,
“உதாரணமாக
மிகப் பெரும் செல்வம் உடைய 2% இனரின் வரிகளை உயர்த்துவது ஆண்டு
ஒன்றிற்கு $1.3 பில்லியன் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம்
நிதியச் சமசீர்நிலையை மீட்பதற்கு உதவாது.”
வோல் ஸ்ட்ரீட்டில் இவர் ஈட்டியுள்ள
பில்லியன்களை கணக்கில் கொண்டால், சிறு கணக்கில்
திரு.ஷ்வார்ஸ்மன் விந்தையான முறையில் எண்கணிதத்தில் போதிய
திறனற்றவர் போல் உள்ளார். 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு
முன்பு, மக்களில் மிக அதிகச் சொத்து கொண்ட 1% அமெரிக்க நிதியச்
சொத்துக்களில் கிட்டத்தட்ட 19 டிரில்லின்
டாலர்களைக்
கொண்டிருந்தனர். ஒரு நிதானமான 30%இனை துணைவரியாக வைத்துக்
கொண்டால், அமெரிக்க பற்றாக்குறைகளில் மட்டும் இல்லாமல் உலகப்
பற்றாக்குறைகளிலும் கூட கணிசமான தாக்கத்தை கொண்டிருக்கும்.
இன்னும் தீவிரமான தற்போதுள்ள நிலையில்
முற்றிலும் நியாயமான வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்,
அமெரிக்கர்களில் மிக அதிகத் தனிப்பட்ட சொத்தைக் கொண்டுள்ள 0.1
சதவிகிதத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது
பற்றாக்குறைகளைச் சமாளிக்க பாரிய வழங்களை உடனே கொடுக்கும்
என்பது மட்டுமின்றி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பாரிய
சமூக நெருக்கடியைச் சமாளிக்கவும் உதவும்.
அமெரிக்காவில் சொத்துக் குவிப்பிலுள்ள இழிந்த
தரம் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த வீழ்ச்சியின்
தீமையான வெளிப்பாடு ஆகும். பெரும் செல்வம் படைத்த முதலீட்டு
வங்கியாளர்கள், வோல் ஸ்ட்ரீட் வணிகர்கள், தனியார் நிதிச்
செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த வீழ்ச்சியில் இருந்து
வெளிப்பட்டுள்ள பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் உருவகமே ஒழியே
வேறு ஒன்றும் இல்லை. இந்த ஒட்டுண்ணித்தனத்தின் சாராம்சம்
உற்பத்தி வழிவகை, உண்மையான மதிப்பைத் தோற்றுவித்தல் என்பதில்
இருந்து மிக அதிகம் பிரிக்கப்பட்ட முறையில் தனிச் சொத்துக்கள்
குவிக்கப்படுதல் ஆகும்.
உள்நாட்டுப் போருக்குப் பின் துவங்கிய அமெரிக்க
முதலாளித்துவத்தின் வெடிப்புத்தன்மை வாய்ந்த வளர்ச்சிச்
சகாப்தத்தில்
“கொள்ளைப்
பிரபுக்கள்”
குவித்த பெரும் செல்வங்கள் அமெரிக்காவில்
தொழில்துறை மற்றும் சமூக உள்கட்டுமானத்தின் மாபெரும்
வளர்ச்சியுடன் தொடர்பைக் கொண்டிருந்தன. ராக்பெல்லர், கார்னகி,
மோர்கன் இன்னும் பிறர் பேராசையும், இரக்கமற்றவர்களாகவும்
இருந்தனர். ஆனால் அவர்கள் தனிச் சொத்தைக் குவிக்கும்
முயற்சியில் ஈடுபட்டது ஓரளவு முன்னேற்றகர சமூக நோக்கத்துடன்
தொடர்பு கொண்டிருந்தது என்பதையேனும் அவர்கள் கூறிக்கொள்ள
முடியும்.
அத்தகைய சகாப்தம் நீண்டகாலத்திற்கு முன்னரே
முடிந்துவிட்டது. இன்றைய பெரும் செல்வந்தர்களின் செல்வம்
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் என்று இல்லாமல் தகர்ப்புடன்
பிணைந்துள்ளது. இந்த மிகச் சிலருடைய செல்வங்கள்
நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை வறிய நிலைக்குத் தள்ளுவதை
நம்பியுள்ளது. உண்மையில், கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ்
“இரண்டாம்
உலகப் போருக்குப் பின் மிக மோசமான அளவைத்தான்
முதலீட்டாளர்களுக்கு இலாபங்கள் வட்டி என்பதைவிட
தொழிலாளர்களுக்குச் செல்லும் வருமானங்கள் அடைந்துள்ளன”
என்று
குறிப்பிட்டுள்ளது. தேசிய வருமான அளவில் தொழிலாளர்களின் பங்கு
போருக்குப் பிந்தைய சராசரியில் மிகக் குறைவானதாக உள்ளது என்ற
பெரும் சரிவின் பொருள் 2011ல் ஆண்டின் கூட்டு வருமான இழப்பு
$740 என்பதைக் கொடுக்கும்—அதாவது
ஒரு தொழிலாளிக்கு $5,000 ஆண்டிற்கு என. இத்தகைய அதிர்ச்சிதரும்
தொகை பெரும் செல்வந்தர்களின் ஊதியங்கள் மற்றும் முதலீட்டுக்
கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டு விட்டது.
இந்த உண்மையையும் மீறி, சினம் கொண்ட
செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைப் பாதிக்கச் செய்யும்
செயற்பாடுகள் பொருளாதார உணர்வு அற்றவை என்று வாதிடுகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும்,
அவர்களுக்குச் சொந்தமாக இருக்கும் செய்தி ஊடகம் மற்றும்
அவர்கள் இலஞ்சம் கொடுக்கும் அரசியல்வாதிகளும் ஊதியங்களில்
வெட்டுக்கள் மற்றும் அடிப்படை சமூகப் பணிகளுக்கு நிதியளிக்கும்
வரவுசெலவுத்திட்ட செலவுகள் வெட்டப்பட வேண்டும் என்பதைக்
கோருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள
பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி வரிவிகிதங்களில் மாற்றங்கள்
போன்ற சீர்திருத்தங்களால் தீர்க்கப்படமுடியாதவை. இவை
முதலாளித்துவத்தின் வடிவமைப்பிற்குள் தேசிய வருமானம்
பகுத்தறிவற்றத்தன்மைக்கும் குறைந்த அளவில் பங்கீடு செய்யப்பட
வேண்டும் எனக் கோருகின்றன. அத்தகைய நடவடிக்கை இன்னும் அடிப்படை
மாற்றங்களை நோக்கிய முதல் தப்படி எனக்கூறிய
நியாயப்படுத்தப்பட்டாலும்கூட, வோல் ஸ்ட்ரீட்டின் பிரபுக்கள்,
பெருநிறுவனங்கள் ஆகியவை வரம்பற்ற தனிச்சொத்துக்
குவிப்புக்களைத் தொடர்தல் மற்றும் அவர்களுடைய பொருளாதார
வாழ்க்கையில் இருக்கும் மேலாதிக்கம் ஆகியவற்றை அச்சுறுத்தும்
எச்சீர்திருத்தங்களையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். முழுச்
சமுதாயத்தின் தேவைகளுக்கும் விரோதப் போக்கு கொண்டுள்ள
நலன்களைப் பெற்றுள்ள அனைத்து ஆளும் வர்க்கங்களைப் போலவே,
அவர்களும் எந்தவிதத் தடை, இரக்கமும் இன்றி தங்கள் நலன்கள் எனக்
கருதப்படுவதைப் பாதுகாப்பர். இந்தச் சமூக உள்ளுணர்வுதான்
தொழிலாளர்கள் வாழ்க்கைத்தரங்களைக் குறைத்தல், ஜனநாயக உரிமைகளை
முறையாக இல்லாதொழித்தல் மற்றும் இன்னும் பொறுப்பற்ற முறையில்
ஆளும் உயரடுக்கின் உலகப் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும்
வழிவகையான போருக்கான முயற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவை
அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கடந்த ஆண்டின் போக்கில், அதிக எண்ணிக்கையில்
இளைஞர்களும் முதிர்ந்த தொழிலாளிகளும் சமூகத்தில் ஆழ்ந்த
மாற்றத்திற்கான கொழுந்துவிட்டு எரியும் தேவை உள்ளது என்பதை
உணரத் தொடங்கி விட்டனர். சமூகச் சமத்துவத்திற்கான அழைப்பு
விடுதலுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அடிப்படையில் பெருகும் சமூக
இயக்கத்திற்கு உந்துதல் கொடுக்கும் அடிப்படை சோசலிச உணர்விற்கு
நிரூபணமாக உள்ளது. இந்த உந்துதல் சோசலிசத்திற்கான முழு
உணர்வுடைய இயக்கம் என்ற வடிவத்தை இன்னும் பெறவில்லை என்பது
உண்மையே. ஆனால் சமூக இயக்கத்தின் அளவு மற்றும் பரப்பு ஆகியவை
விரிவடைகையில், உந்துதல் செயலுக்கான ஒரு வேலைத்திட்டமாக மாறும்.
வங்கிகள் மற்றும் முக்கியப் பெருநிறுவனங்கள்
தேசியமயமாக்கப்படல், பொருளாதார அளவில் பகுத்தறிவற்ற, சமூகத்தை
அழிக்கும் பெரும் சொந்த சொத்துக்குவிப்புக்களைப்
பறித்தெடுத்தல், தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதுடன்,
முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுதல், ஓர் உலக சோசலிச
சமூகத்தை தோற்றுவித்தல் ஆகியவை வெளிப்படும்.
பெரும் செல்வந்தர்கள் இந்த வர்க்க யுத்தத்தை
எதிர்கொள்வதாகக் குறைகூறுகின்றனர். ஆனால் அவர்கள் இன்னமும்
எதையும் காணவில்லை. |