World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

demand deeper cuts following EU summit

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வங்கிகள் ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றன

By Barry Grey
20 December 2011
Back to screen version

டிசம்பர் 10ம் திகதி புருஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக்கால உச்சிமாநாடு தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளின் சுமைகளை ஏற்றுவதின் மூலம் யூரோவைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்கங்களும் தங்கள் வரவுசெலவுத்திட்டங்களை சமன்படுத்த அரசுகளுக்கு இடையேயான அரசியலமைப்புரீதியாகக் தேவைப்படும்  உடன்பாடு ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தை அடிப்படையில் ஒரு மிகப்பெரிய சிக்கன நடவடிக்கைப் பிராந்தியமாக மாற்றுவதுடன், பல மில்லியன் தொழிலாளர்கள் நம்பியிருக்கும் வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மற்றும் சமூகநலப் பணிகள் மீது தாக்குதலுக்கான அரங்கினை நிர்ணயித்துவிட்டது.

பிரிட்டன் உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்த மறுத்து ஒரு திருத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின் வடிவத்தைப் பெறத் தடுப்பதற்கு அதன் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தியதின் மூலம் உச்சிமாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பெருகியுள்ள பிளவுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வெளிப்படையாக அதன் லண்டன் நகரத்தில் குவிந்துள்ள வங்கித் தொழில்துறையின் நலன்களுக்கு முற்றிலும் அக்கறை காட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடைய அரசாங்கம் பிரிட்டினில் போருக்குப் பிந்தைய சமூகநல அரசில் எஞ்சியுள்ள நலன்களை அழித்துவிடும் அதன் சொந்த உந்துதலைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்துகிறது. மேலும் பிற ஐரோப்பிய அரசியல் ஆளும்தட்டினுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவநாடுகள் முந்தைய நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கம் போராடிப்பெற்ற சமூக நலன்கள் மீது தாக்குதல் செய்யாதவை அபராதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதற்கும் முழு ஆதரவைக் கொடுக்கிறது.

புருஸல்ஸ் உடன்பாட்டிற்கு நிதிய மூலதனத்தின் விடையிறுப்பு விரைவாகவும் தவிர்க்கமுடியாத தன்மையையும் கொண்டிருந்தது. அனைத்து நாடுகளிலும் என்பதில் தங்கள் அரசியலமைப்புக்களில் கடன் தடைகளை உட்புகுத்தவேண்டும் என்ற தேவையை வரவேற்று, தங்கள் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% இற்கு மேலாகபோகாமல் வைத்திருக்காத நாடுகளுக்குப் பகுதி தானாகவே அபராதம் வேண்டும் என்பதை நிறுவுவதையும் வரவேற்று, வங்கிகள், பத்திரம் வைத்திருப்போர் மற்றும் கடன் தர நிர்ணய நிறுவனங்கள் பெருமளவில் பொதுநிதிகளை செலுத்தமுடியாத கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குக் கொடுத்துப் பயன்படுத்துவதற்கு உடன்படாததற்காக  தாக்குதலை நடத்தியுள்ளன.

குறிப்பாக ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவற்றின் வலியுறுத்தலின்பேரில் ஐரோப்பிய மீட்பு நிதியில் அதிகரிப்பு, யூரோப் பத்திரங்களைத் தோற்றுவித்தல், ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கக் கடன்களுக்கு இறுதிவரை உத்தரவாதம் தராதது ஆகியவை குறித்து அவை கண்டித்துள்ளன. சுருங்கக் கூறின், முக்கிய சர்வதேச வங்கிகள் இன்னும் பெரிய பொதுக்கடன் பிணையெடுப்பு தொழிலாளர் வர்க்கத்தின்மீது கூடுதல் தாக்குதல்கள், வெட்டுக்கள் மூலம் ஈடுகட்டப்பட வேண்டும் என்று கோருகின்றன. இக்கொள்கைக்கு சர்வதேச அளவில்  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை ஊக்கம் கொடுக்கின்றன.

தங்கள் பங்கிற்கு ஜேர்மனியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தத்தான் செய்கின்றன. ஆனால் அவை பணவீக்கம் மற்றும் ஜேர்மனியத் தொழில்துறை, தொழில்துறை ஏற்றுமதிகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அச்சம் குறித்து உந்துதல் பெறுகின்றன. மறுபுறம் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் தொழில்துறைத் தளங்களைப் பெரிதும் தகர்த்து விட்டன. அவற்றின் தொழில்துறைக் கொள்கைகள் இப்பொழுது நிதிய உயரடுக்கு அதன் ஊக நடவடிக்கைகளின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றிற்கு முற்றிலும் தாழ்த்தப்பட்டுள்ளன.

வங்கிகளும் கடன்தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை இன்னும் பிணை எடுப்பு ரொக்கத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்று உறுதியாகக் கூறுவற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. புருஸல்ஸ் உச்சிமாநாடு முடிந்த பின் மறு வணிக தினமான டிசம்பனர் 12, திங்கள் அன்று, Moody’s Investors Service மற்றும் Fitch Ratings ஆகியவை புருஸல்ஸ் உடன்பாடு அரசாங்கக் கடன் மற்றும் வங்கி நெருக்கடிகள் தீவிரமாவதைத் தடுக்க முடியாது என்று அறிவித்தன.

அனைத்து ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கக் கடன்களின் தரத்தைப் பரிசீலித்து ஒருக்கால் குறைக்கப்படுவதை 2012  முதல் காலாண்டு வரை ஒத்தி வைக்கப்போவதாக Moody’s கூறியுள்ளது. முந்தைய வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் “Moody’s முன்பு தெரிவித்த கருத்தான நெருக்கடி தீவிரமாக உள்ளது, கொந்தளிப்பு நிலையில் உள்ளது, அரசாங்க, வங்கிக் கடன் சந்தைகள் பெரும் முறிவிற்கு உட்படக்கூடும், இதைக் கட்டுப்படுத்த கொள்கை இயற்றுபவர்கள் அதிகரித்தளவில் இடர் கொண்டுள்ளனர் என்ற கருத்தை மாற்றவில்லை என்று அது எழுதியுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பங்குகள் சரிந்தன. புதன் கிழமை யூரோ $1.30க்கும் கீழே போய், 11 மாதங்களில் டாலருக்கு எதிரான மிகக் குறைந்த நிலையை அடைந்தது.

புதன்கிழமை, டென்மார்க், பில்லாந்து, பிரான்ஸ் மற்றும் நெர்லாந்தின் ஐந்து பெரிய வங்கிகள் உடைய கடன் தரத்தைக் Fitch குறைத்தது. மறுநாள் உலகின் மிகப் பெரிய வங்கிகள் பாங்க் ஆப் அமெரிக்கா, மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மன் சாஷ்ஸ், பார்க்கிளேஸ், சொசைட்டி ஜேனரேல், பின்பி பாரிபஸ் டிட்ஷ் வங்கி, கிரெடின் சூஸ் ஆகியவற்றின் தரங்களையும் குறைத்தது. வெள்ளியன்று இதைத் தொடர்ந்து அது ஆறு யூரோப்பகுதி நாடுகள், ஸ்பெயின், இத்தாலி உட்படத் தரங்களைக் குறைப்பதற்கான பரிசீலனையில் இருக்கும் என்றும், ஐரோப்பிய கடன் நெருக்கடி தொழில்நுட்பரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஒரு விரிவான தீர்விற்கு உட்படாது என்றும் அறிவித்தது.

வெள்ளியன்று Moody’s பெல்ஜியத்தின் தரமதிப்பை இருபடிகள் குறைத்து அதற்கு ஒரு எதிர்மறை நிலையைக் கொடுத்தது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒருபுறம் பரந்த தொழிலாளவர்க்க எதிர்ப்பின்  வெடிப்பைக் கண்டு அஞ்சுகின்றன, மறுபுறம் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்கள் தேவை என்னும் இடைவிடாமல் அழுத்தம் கொடுக்கும் வங்கிகளைக் காண்கின்றன. பெருகிய முறையில் இவை அனைத்துமே ஒவ்வொரு தேசிய முதலாளித்துவமும் அதன் நலன்கள் அண்டை நாட்டவரின் இழப்பில் ஈடு செய்யும் முயற்சியில் ஈடுபடுகையில் மோதலுக்கு வருகின்றன.

Standard & Poor’s பிரெஞ்சுக் கடன் தரத்தைத் தவிர்க்கமுடியாமல் குறைத்துவிடும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த வாரம் தரம் நிர்ணயிக்கும் நிறுவனம் பிரிட்டனுடைய தரத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். பிரான்ஸ் வங்கியின் தலைவரான கிறிஸ்தியன் நோயர் வியாழனன்று பிரிட்டனுக்குக் கூடுதல் பற்றாக்குறைகள் உள்ளன, கூடுதல் கடன்கள், அதிக பணவீக்கம், எங்களைவிட மிகக் குறைவான வளர்ச்சி ஆகியவை உள்ளன. அங்கு கடன்வசதியும் சுருக்கம் காண்கிறது என்று கூறினார்.

இதற்கு அடுத்த நாள் பிரான்ஸின் நிதி மந்திரி François Baroin தாக்குதலைத் தொடரும் வகையில், இந்தக்கட்டத்தில் ஒருவர் பொருளாதார மட்டத்தில் பிரிட்டிஷ்காரராக இருப்பதை விட பிரெஞ்சுக்காரராக இருப்பதைப் பொதுவாக விரும்புவர் என்றார்.

வியாழன் அன்று இங்கிலாந்து-விரோத அறிக்கை நோயரிடம் இருந்து வெளிப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டியான் லகார்ட் பொருளாதாரத் தேசியவாதத்தின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்து, நெருக்கடிக்கு விதிவிலக்கு பெற்று உலகில் எந்தப் பொருளாதாரமும் இல்லை என்று அறிவித்து, இந்த நெருக்கடி தொடர்ந்தும், விரிவடைந்தும் வருகிறது என்றார். ஒருங்கிணைந்த உலக பதிலளிப்பு தேவை என்று அழைப்பு விடுத்த இவர், உலகம் பொருளாதாரப் பின்னடைவு, உயரும் காப்புவரிக் கொள்கைகள், தனிமைப்படுத்தப்படல் மற்றும்... 30களில் நடந்ததை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறது என்று எச்சரித்தார்.

பிளவுகளின் பெருகுவதைப் பிரதிபலிக்கும் முறையில் அன்றே, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராகி ஸ்பெயின், இத்தாலி போன்ற அதிகம் கடன்பட்டுள்ள நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களை மத்திய வங்கி வாங்குவதில் பெரிய மாற்றத்திற்குத் தன் எதிர்ப்பை வலியுறுத்தினார். சர்வதேச நாணய நிதியம்  ஐரோப்பிய மத்திய வங்கி எப்படியும் கடைசியில் கடன் கொடுக்கும் என்று கூறியிருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பாத எந்த நாட்டிற்கும் வெளியில் இருந்து வந்து எவரும் காப்பாற்ற மாட்டார்கள் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையில் நிதியச் சந்தைகள் குறுக்கீடு மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தாலியில் மரியோ மோன்டியின் தொழில்நுட்பவாத அரசாங்கம் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் கீழ்பிரிவில் புதிதான  30 பில்லியன் யூரோ சிக்கனப் பொதி ஒன்றிற்கு ஒப்புதல் பெற்றது. இதில் ஓய்வூதியங்களில் வரலாற்றுத் தன்மை உடைய குறைப்புக்களும் தொடர்ச்சியான பிற்போக்குத்தன வரிகளும் உள்ளன. செல்வத்தின்மீதான வரி என்னும் முந்தைய திட்டம் ஒன்றை மோன்டி கைவிட்டுவிட்டார்.

இச்சட்டவரைவு தொழிலாளர்கள் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கும் உள்கட்டுமைப்புச் சீர்திருத்தங்கள் இல்லை அதாவது வேலைப்பாதுகாப்பு விதிகள் அனைத்தும் அகற்றப்படவில்லை என நிதியச் செய்தி ஊடகத்தில் முழுமையாகக் கண்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இத்தகைய நடவடிக்கைகளை இணைத்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மோன்டி உறுதியளித்தார்.

ஸ்பெயினில் புதிதாகப் பதவியில் இருத்தப்பட்ட மக்கள் கட்சியின் பிரதம மந்திரி மரியானோ ரஜோய் திங்களன்று அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் மிகப் பெரிய சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

கிரேக்கத்தில் வாழ்க்கத்தரங்கள் பெரிதும் சரிந்துவிட்டன. வேலையின்மை வங்கிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணைக்குட்பட்டு கொண்டுவந்த தொடர்ச்சியான வரவு செலவுத்திட்ட சிக்கன நடவடிக்கைகளை அடுத்து வேலையின்மை 20% என உயர்ந்துவிட்டது. ஓய்வூதியங்கள் ஜனவரிமாதம் இன்னும் 15% குறைக்கப்பட உள்ளன. 40,000க்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் கிட்டத்தட்ட 40% ஊதிய வெட்டுக்களினால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.

இப்பொழுது வங்கிகள் தேர்ந்தெடுக்கப்படாத பிரதம மந்திரி லூகாஸ் பாப்படெமோசின் அரசாங்கத்தில் இருந்து இன்னும் சலுகைகளைப் பெற முயல்கின்றன; கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை வைத்திருப்போர்கள் 50% முடிதிருத்துதலுக்கு ஒப்புக்கொண்டதற்கு உடன்பட்டதற்கு ஈடாக இன்னும் கடுமையான எதிர்பார்ப்புக்களைக் கோருகின்றன. பத்திரப் பணங்களைத் திருப்பிக் கொடுத்தல் குறித்த உடன்பாடு ஒன்று புதிய 130 பில்லியன் யூரோ மீட்பு நிதியின் முதல் தவணை அளிக்கப்படுவதற்கு முன்னிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது; இது ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் மேற்பார்வையில் கொடுக்கப்படும்.

கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் கிரேக்கத்தின் பொதுத் துறை இன்னும் அதிகமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரியது. தவிர்க்க முடியாமல், திறமையற்ற அரசாங்க நிறுவனங்களை மூடுதல், பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர் தொகுப்புக் குறைப்பு, தாராளமாக இருக்கும் பொது ஊதிய, ஓய்வூதியத் தரங்கள் திருத்தப்படுதல் ஆகியவை இதற்குத் தேவைப்படும் என்று அது கூறியுள்ளது.