WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
Police besiege village land protest in China
சீனாவில்
கிராம
நில எதிர்ப்பை பொலிஸ் முற்றுகையிடுகிறது
By John Chan
16 December 2011
குவாங்டோங்
மாநிலத்தில்
உள்ள
வுகான்
கிராமத்தில்
ஆயிரக்கணக்கான
கிராமவாசிகள்
இந்த
வாரம்
உள்ளூர்
தலைவர்
ஒருவர்
காவலில்
இருந்த
போது
இறந்துவிட்டதை
எதிர்த்து
எதிர்ப்புக்களை
நடத்தினர்.
திங்கள்
மற்றும்
செவ்வாயன்று
கிட்டத்தட்ட
6,000
விவசாயிகள்
“வுகானைக்
காப்பாற்றுக”,
“எங்கள்
விவசாய
நிலங்களைத்
திருப்பிக்
கொடுக்கவும்”
என்ற
கோஷங்களை
முழக்கினர்.
வுகான்
தற்பொழுது
ஆயிரக்கணக்கான
பொலிஸ்
துணைப்படை அதிகாரிகளால்
சூழப்பட்டுள்ளது.
வுகான்
கம்யூனிஸ்ட்
கட்சிக்
குழு
சீனாவின்
மிகப்
பெரிய
வளர்ச்சி
நிறுவனமான
கன்ட்ரி
கார்டனுடன்-
Country Garden-
கொண்ட
ஒரு
ஊழல்
மிகுந்த
உடன்பாடான
கூட்டு
உரிமை
நிலங்கள்
வணிக
வளர்ச்சிக்கு
விற்பது
குறித்து
செப்டம்பர்
மாதம்
ஆர்ப்பாட்டங்கள்
முதலில்
தொடங்கின.
விவசாயிகள்
பொலிஸ்
வாகனங்களைக்
கவிழ்த்து,
அரசாங்க
அலுவலகங்களை
முற்றுகையிட்டனர்.
நவம்பர்
மாதம்
4,000
பேர்
நிலங்கள்
மீண்டும்
திருப்பித்தர
வேண்டும்
என்றும்,
ஊழல்
அதிகாரிகள்
தண்டிக்கப்பட
வேண்டும்
என்றும்
கிராமத்தின்
நிதிய
ஆவணங்கள்
பகிரங்கமாக்கப்பட
வேண்டும்
என்றும்
கோரினர்.
கண்ணீர்ப்புகைக்
குண்டைப்
பயன்படுத்தி
பொலிசார்
கூட்டத்தைக்
கலைத்தனர்.
முதலில் டிசம்பர்
12ம்
திகதி
தொடக்கப்பட
இருந்த
மனு
ஒன்று
செப்டம்பர்
மாத
ஆர்ப்பாட்டங்களுக்கு
தலைமை
வகித்தனர்
என்ற
சந்தேகத்தின்பேரில்
காவலில்
வைக்கப்பட்ட
ஐந்து
பேரில்
ஒருவரான
ஜுயூயி
ஜின்போ
மரணத்தை
ஒட்டி
ஒத்திப்போடப்பட்டது
கடந்த
ஞாயிறன்று
ஜுயுயி
மூன்று
நாட்கள்
பொலிஸ்
காவலில்
இருந்தபின்
இறந்து
போனார்.
உள்ளூர்
லுபெங்
அரசாங்கம்
அவர்
மாரடைப்பினால்
இறந்து
போனார்
என்று
வலியுறுத்தியும்,
சடலத்தைப்
பார்த்த
உறவினர்கள்
அவர்
சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு
இறந்தார்
என்று
உறுதியாகக்
கூறினர்.
அரசாங்கத்துடன்
பேச்சு
வார்த்தைகள்
நடத்தியவர்களில்
ஒருவரும் கிராமக்குழுவின்
பெயர்குறிப்பிடாத உறுப்பினர்
ஒருவர்
South
China Morning Post
இடம்
பின்வருமாறு கூறினார்:
“அவருடைய
முதுகிலும்
மார்பிலும்
கறுப்புச்
சிராய்ப்புக்கள்
இருந்தன.
அவருடைய
கைக்
கட்டைவிரல்களில்
ஒன்று
முறிந்திருந்தது,
கழுத்தைச்
சுற்றி
நெரிக்கப்பட்டதற்கான
அடையாளங்கள்
இருந்தன.”
கிராம
மக்கள்
உடல்
திருப்பிக்
கொடுக்கப்பட
வேண்டும்,
ஒரு
சுயாதீன
பிரேதப்
பரிசோதனை
நடத்தப்பட
வேண்டும்
என்று
கோரினர்;
ஆனால்
அது
நிராகரிக்கப்பட்டது.
கிராமப்
பிரதிநிதிகள் அதிகாரிகள்
தொடர்பு
கொள்வதற்கு
ஒரு
தற்காலிகக்
குழு
ஒன்று
அமைக்கப்பட
வேண்டும்
என்று
கோரினார் என செய்தித்தாளிடம் கூறினர். ஆனால்
இது
எதிர்ப்புத்
தலைவர்களை
அடையாளம்
காண்பதற்குத்தான்.
“ஜுயுயி
மிகத்
தீவிரமான,
திறமை
மிகுந்த
பிரதிநிதியாக
இருந்தார்”
என்று
குழு
உறுப்பினர்
போஸ்ட்டிடம்
கூறினர்.
ஜுயுயின்
சந்தேகத்திற்குரிய
இறப்பு
குறித்து
பெருகிய
சீற்றம்
வந்துள்ளது
என்பதை
நன்கு
அறிந்து,
கிட்டத்தட்ட
100
கலகப்
பிரிவுப்
பொலிசார்
மற்றும்
பொலிஸ்
வாகனங்கள்
திங்கள்
முதல்
கிராமத்திற்கு
நுழையும்
பாதையைத்
தடுத்தனர்.
உணவு
மற்றும்
குடிநீர்
விநியோகங்கள்
வெட்டப்பட்டுவிட்டன.
“பொலிசாரிடம்
ஒப்புதல்
கொடுப்பது
ஒன்றுதான்
நீங்கள்
தப்பக்கூடிய
வழி”
என்று
அறிவித்த
சுவரொட்டிக்
கோரிக்கையை
அதிகாரிகள்
ஒட்டி
வைத்தனர்.
இதைத்
தொடர்ந்து
பொலிசாரின்
எண்ணிக்கை
ஆயிரக்கணக்கில்
அதிகமாயிற்று.
இணையத்தள
அணுகல்
வெட்டப்பட்டது.
நீர்பாய்ச்சியடிக்கும் கருவிகள்
“உறுதியை
உத்தரவாதம்
அளிப்பதற்கு”
பயன்படுத்தப்பட்டது.
கிராமவாசி
ஒருவர்
Agence France-Presse
இடம்
தொலைபேசி
மூலம்:
“கிராமத்திற்கு
எவரும்
வரமுடியாது,
கிராமத்தில்
இருந்து
எவரும்
வெளியேறவும்
முடியாது....
இந்த
நிலை
நீடித்தால்,
உணவு
இல்லாத
காரணத்தால்,
நாங்கள்
தப்பிப்
பிழைக்க
இயலாது.”
என தெரிவித்தார்.
20,000
மக்களையே
கொண்ட
ஒரு
சமூகத்திற்கு
எதிராக
மிகப்
பெரிய
அளவில்
பொலிஸ்
குவிக்கப்படுதல்
என்பது
சிறுநகர,
நகர
அல்லது
மாநில
அளவு
அதிகாரிகள்
முடிவால்
ஏற்படக்கூடியது
அல்ல.
எதிர்ப்பாளர்களைத்
தீய
முறையில்
சித்தரித்துக்
காட்டும்
பிரச்சார
முயற்சி
பெய்ஜிங்
நேரடித்
தொடர்பைக்
கொண்டுள்ளது
என்பதைத்
தெரிவிக்கிறது.
ஜுயுயி
காவலில்
வைக்கப்படுவதற்கு
சில
நாட்கள்
முன்பு,
பல
ஆயிரக்கணக்கான
கிராமவாசிகள்
தெருக்களுக்கு
வந்து
ஆர்ப்பரித்தனர்.
சிலர்
உள்ளூர்
சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின்
செயலரினதும் அவரின் கூட்டினரதும்
“சர்வாதிகாரத்தை
எதிர்க்கவும்”
என்று
அறிவித்த
கோஷ
அட்டைகளை
எடுத்துச்
சென்றனர்.
இந்தக்
கோஷம்
மாநிலம்
முழுவதும்
உள்ள
அதிகாரத்துவத்தினரிடையே
பெரும்
கவலையைத்
தூண்டியது.
கிராமவாசிகளின்
உள்ளிருப்புப்
போராட்டத்தை
எதிர்கொள்ளும்
வகையில்,
லுபெங்
அரசாங்கம்
அறிக்கை
ஒன்றை
வெளியிட்டு,
பிரச்சார
நடவடிக்கை
“சட்டவிரோதம்”,
“மறைமுகச்
செயற்பட்டியலைக்
கொண்ட
ஒரு
சிலரால்
தூண்டப்பட்டுப்”
பயன்படுத்தப்படுகிறது
என்று
எச்சரிக்கை
விடுத்தது.
மற்றொரு
கிராமப்
பிரதிநிதியான
ஜுவாங்
லைஹோங்
மாநிலப்
பாதுகாப்பு
அலுவலகத்தால்
(பெய்ஜிங்கின்
இரகசியப்
பொலிஸ்)
டிசம்பர்
தொடக்கத்தில்
ஷென்ஜேன் நகரில் ஒரு
திருமணத்தில்
கலந்து
கொள்ளச்
சென்றிருந்தபோது,
காவலில்
வைக்கப்பட்டார்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி
ஆட்சியைப்
பொறுத்தவரை,
வுகான்
நிகழ்வு
சிறிய
அளவில்,
ஆனால்
பயங்கரமான
முறையில்
1989
தியனென்மன்
சதுக்க
எதிர்ப்புக்களை
நினைவுபடுத்துவது
ஆகும்.
அது
“ஒரு
கட்சி
ஆட்சி”
முடிவிற்கு
வரவேண்டும்
என்ற
மாணவர்கள்
கோரிக்கையுடன்
தொடங்கி,
தொழிலாள
வர்க்கமும்
பங்குகொண்ட
பரந்த
அமைதியின்மையைக்
கட்டவிழ்த்தலில்
முடிவுற்றது.
பொருளாதாரம்
விரைவாக
இயங்காத
நிலையில்,
நாடு
பெரிய
சமூக
எழுச்சிகளின்
விளிம்பில்
நிற்கிறது
என்பது
குறித்து
சீனக்
கம்யூனிஸ்ட்
கட்சி
தீவிர
கவலையைக்
கொண்டுள்ளது.
நாட்டுப்
பாதுகாப்பிற்குப்
பொறுப்புக்
கொண்ட
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழுவின்
நிரந்தரகுழு
உறுப்பினரான
ஜௌ
யோங்காங்
கடந்த
வாரம்
அரசாங்கத்தின்
அனைத்துத்
தரங்களையும்
சமூக
அமைதியின்மை
வெடிக்கக்
கூடிய
தன்மையைச்
சமாளிக்கத்
தயாராக
இருக்கும்படி
அழைப்பு
விடுத்துள்ளார்.
ஐரோப்பா
மற்றும்
அமெரிக்காவிற்கு
அனுப்பப்படும்
ஏற்றுமதிகளை
மிக
அதிகமாக
நம்பியிருக்கும்
குவாங்டோங்
மாநிலம்
ஆழ்ந்த
உலகக்
கொந்தளிப்பிற்கு
நடுவே
பெரும்
பொருளாதார
இடர்களை
முகங்கொடுக்கிறது.
இம்மாநிலம்
சமீபத்திய
வாரங்களில்
கைக்கடிகாரம்,
காலணிகள்,
மின்னணுப்
பொருட்கள்
தயாரிப்பு
ஆலைகள்
ஆகியவற்றில்
வேலைநிறுத்த
வெடிப்புக்களை
கண்டுள்ளது.
கடந்த
வாரம்,
ஹிட்டாச்சியுடன்
இணைந்துள்ள
ஷென்ஜென்
ஹைலியங்
ஸ்டோரேஜ்
உற்பத்திப்
பொருட்கள்
ஆலையில்
4,500
தொழிலாளர்களும்,
தொழில்நுட்ப
வல்லுனர்களும்
அமெரிக்க
உரிமையான
வெஸ்டர்ன்
டிஜிடலுக்கு
விற்பனை
செய்யும்
திட்டத்திற்கு
எதிராக
வேலைகள்,
பணிநிலைமைகள்
ஆகியவற்றை
இழக்கும்
நிலையை
எதிர்கொள்ளும்
வகையில்
வேலைநிறுத்த
நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.
1,000
தொழிலாளர்கள்
ஹாங்காங்
தளத்தைக்
கொண்ட
டாப்சேர்ச்
இண்டஸ்ட்ரிஸ்
என்று
சர்க்யூட் அடித்தளம் அமைப்புத்
தயாரிக்கும்
நிறுவனத்தின்
1,000ஷென்ஜென்
தொழிலாளர்கள்
இந்த
ஆலை
தொழிலாளர்களுக்கு
ஊதியம்
குறைந்த ஷாவோகுவானுக்கு
உற்பத்தியை
மாற்றத்
திட்டமிட்டுள்ளதற்கு
எதிராக
வேலைநிறுத்தம்
செய்தனர்.
வணிக
நலன்களைக்
பாதுகாப்பதற்காக
குவாங்டோங்
மாநில
அரசாங்கம்
அடுத்த
ஆண்டு
திட்டமிடப்பட்டிருந்த
குறைந்தபட்ச
ஊதியத்தில்
20
சதவிகித
உயர்வு
என்பதை
நிறுத்தி
வைத்துள்ளனர்—இந்த
நடவடிக்கை
இன்னும்
கூடுதலான
வேலைநிறுத்தங்களையும்
எதிர்ப்புக்களையும்தான்
தூண்டும்.
வேலைநிறுத்தங்கள்
மற்றும்
அதிகரிக்கும்
நிலம்
குறித்த
மோதல்கள்
ஆகியவை
மீண்டும்
வெளிப்பட்டுள்ளது
ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையதாகும்.
சீனா
2008ல்
இருந்து
பொருளாதாரத்தில்
ஊக்க
நடவடிக்கைகள்
குறைந்த
வங்கிக்
கடன்
ஆகியவற்றின் மூலம்
டிரில்லியன்
கணக்கான
டாலர்களை
உட்செலுத்தியதின்
மூலம்தான்
சரிவைத்
தவிர்க்க
முடிந்தது.
அது
உள்ளூர்
அரசாங்கங்கள்
மற்றும்
நிலச்சொத்து
அபிவிருத்தி செய்வோரின்
கடன்வாங்கும்
ஆர்வத்திற்கு
எரியூட்டியதுடன்
நிலச்சொத்து
ஊகங்களை
அதிகப்படுத்தவும்
செய்தது.
2010ல்
மட்டும்,
உள்ளூர்
அரசாங்கங்கள்
நில
விற்பனையில்
இருந்து
2.9
டிரில்லியன்
யுவானைத்
திரட்டியுள்ளன.
இதில்
கிட்டத்தட்ட
கால்பகுதி
கடனை
திருப்பிக்
கொடுத்தலைச்
செய்வதற்கு
இன்னும்
கூடுதலான
நில
விற்பனையை
நம்பியிருந்தது.
சொத்துக்கள்
குமிழ்
இப்பொழுது
விரியும்
அடையாளங்களைக்
காட்டுகிறது.
அக்டோபர்
இறுதியில்,
3.6
பில்லியன்
சதுர
மீட்டர்
சொத்துக்கள்
கட்டுமானத்தின்கீழ்
இருந்தன.
இது
ஆண்டின்
முதல்
10
மாதங்கள்
கட்டுமானத்தில்
இருந்த
709
மில்லியன்
சதுர
மீட்டர்கள்
விற்பனையுடன்
ஒப்பிடத்தக்கது.
இந்த
வேறுபாடு
சந்தையை
தாக்கக்கூடிய
மிகப்
பெரிய
சொத்துக்களை
சுட்டிக்காட்டுகிறது,
இது
விலைச்
சரிவைத்
தூண்டும்
சாத்தியத்தை கொண்டுள்ளது.
இந்த
வழிவகைகள்
சமீபத்திய
வாரங்களில்
உற்பத்தித்
தொழிலில்
தீவிர மெதுவாதல்
ஏற்பட்டுள்ளதை
அடுத்து
வங்கி
கடன்
கொடுத்தலைத்
தளர்த்துதல்
என்னும்
பெய்ஜிங்கின்
முடிவினால்
விரைவாகி
வருகின்றன.
மலிவான
கடன்
என்பது
லுபெங்கில்
நடப்பது
போல்
உள்ளூர்
அரசாங்கங்களை
நில
விற்பனையை
விரைவுபடுத்தவும்
புதிய
ஊக
நடவடிக்கைகளில்
நுழையவும்,
அதையொட்டி
தங்கள்
நிதிய
இடர்பாடுகளைக்
குறைக்கும்
வழிவகையாகத்தான்
ஊக்குவிக்கப்படுகின்றன.
இதன்விளைவாக,
சீனக்
கம்யூனிஸ்ட்
கட்சி
அதிகாரத்துவத்தினர்
பெயரளவு
நிலக்
கூட்டுச்
சொந்தக்காரர்களை,
விவசாயிகளைக்
கலந்து
ஆலோசிக்காமல்,
நிலப்பயன்பாட்டை
தனியார்
பெருநிறுவன
நலன்களுக்கு
விற்பது
குறித்த எதிர்ப்புக்கள்
பெருகி
வருகின்றன.
சீன
சமூக
அறிவியல்கள்
உயர்கல்விக்கூடத்தைச்
சேர்ந்த
யு
ஜியாக்ரோங்
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னலிடம்
1990
கள்
முதல்
கிராமப்புறங்களில்
எதிர்ப்புக்கள்
அல்லது
“வெகுஜனப்
பங்கு
கொண்ட
நிகழ்வுகளில்”
65
சதவிகிதம்
நிலமோதல்கள் குறித்து
வந்தவை
என்று
குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர்
அரசாங்கங்கள்
16.6
மில்லியன்
ஏக்கர்கள்
கிராமப்புற
நிலங்களை
எடுத்துக்
கொண்டு
விவசாயிகளுக்கு
$340
பில்லியன்
இழப்பீட்டுத்
தொகை
இல்லாமல்
செய்துவிட்டனர்
என்றும்
யு
ஜியாக்ரோங் மதிப்பிட்டுள்ளார்.
ஏனெனில்
உள்ளூர்
அரசாங்கங்கள்
பல
நேரமும்
சந்தைவிலையைவிடக்
குறைவாகத்தான்
கொடுக்கின்றன.
உதாரணமாக
வுகான்
கிராமவாசிகள்
உள்ளுர்
கம்யூனிஸ்ட்
கட்சி
அதிகாரிகள்
ஒரு
பில்லியன்
யுவானுக்கு
நிலத்தை
விற்று
70%
பணத்தைத்
தாங்களே
வைத்துக்
கொண்டு
மிஞ்சியதைத்தான்
கிராம
நிதியில்
செலுத்தினர்
என்று
குற்றம்
சாட்டுகின்றனர்.
கிராமப்புறங்கள்
முழுவதும்
சீனக்
கம்யூனிஸ்ட்
கட்சி
ஆட்சியின்
கடந்த
மூன்று
தசாப்தங்களாக
நடந்துவரும்
முதலாளித்துவ
மீட்புக்
கொள்கையின்
விளைவாக
ஏற்பட்டுள்ள
பெருகிய
வர்க்க
அழுத்தங்களின்
அடையாளம்தான்
வுகான்
எதிர்ப்புக்களாகும்.
விவசாயிகளில்
ஒரு
மிகச்
சிறிய
தட்டு
தன்னை
செல்வக்கொழிப்பு
உடையாக
ஆக்கிக்
கொண்டு,
ஒரு
புதிய
கிராமப்புற
முதலாளித்துவமாக
ஆகிவிட்டது. பெரும்பாலான
மக்கள்
வறுமையில்
தள்ளப்பட்டுள்ளதுடன், மில்லியன்
கணக்கானவர்கள்
ஆலைகளில்
குறைவூதியத்
தொழிலாளர்களாகச்
சேர்ந்துள்ளனர்.
தொழிலாள
வர்க்கத்தைப்
போலவே,
அடக்கப்படும்
கிராமப்புற
மக்களும்
சீனக்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
பொலிஸ்-அரசுடன்
ஓர்
அரசியல்
மோதலுக்குத்
தள்ளப்படுகின்றனர்
என்பதற்கான
அடையாளம்தான்
வுகான்
எழுச்சி
ஆகும்.1989
எதிர்ப்புக்களைப்
போல்
அன்றி
(அப்பொழுது
விவசாயிகள்
பிரிவு
பெரும்பாலும்
பங்கு
பெறவில்லை)
நகர்ப்புறத்
தொழிலாளர்களின்
இயக்கம்
இப்பொழுது
கிராமப்
புறங்களில்
உள்ள
வெகுஜன
அதிருப்தியுடன்
விரைவில்
இணையும்.
அத்தகைய
நிலைமை
ஆட்சிக்குப்
பெரும்
அச்சுறுத்தலாக
இருக்கும். |