World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Army hearing begins against accused whistleblower Bradley Manning

குற்றச்சாட்டிற்கு தகவல் வழங்குனர் பிராட்லி மான்னிங்கிற்கு எதிராக இராணுவ விசாரணை ஆரம்பமாகிறது

By Naomi Spencer
17 December 2011
Back to screen version

வெள்ளியன்று பிராட்லி மான்னிங் விசாரணைக்கு முந்தைய நடவடிக்கைகளுடன் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தன. அமெரிக்க இராணுவத்தினரான மான்னிங் தகவல் வழங்கும் அமைப்பு விக்கிலீக்ஸிற்கு போர்க்குற்றங்கள் மற்றும் பிற அரசாங்க இரகசியங்களை கசியவிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

19 மாதங்களுக்கு முன் காவலில் வைக்கப்பட்டதில் இருந்து 32வது விதியின்படியான விசாரணையின் கீழ் மானிங்கின் முதல் தடவை பொதுமக்களுக்கு தோற்றமளித்துள்ளார். நீதிபதி வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வக்கீல்கள் விடுத்த கோரிக்கையை தலைமை தாங்கும் இராணுவ நீதிபதி நிராகரித்தபின், நீதிமன்றம் பிற்பகல் 3.30 க்கு நடவடிக்கைகளை ஒத்தி வைத்தது.

தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமான மேரிலாந்தில் உள்ள போர்ட் மேட் என்னும் இடத்தில் விசாரணை நடைபெறுகிறது. இராணுவரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு இது சான்றுகளையும் குற்றச் சாட்டுக்களையும் பரிசீலிக்கும். இது ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிலீக்ஸிற்கு நூறாயிரக்கணக்கான இரகசிய இராணுவ, இராஜதந்திர ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் வழங்கியுள்ளதாக மான்னிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றும் 22 குற்றச்சாட்டுக்களில், உளவுத்துறைச் சட்டத்தின்கீழ்விரோதிக்கு உதவுதல் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இக்குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அரசாங்க வக்கீல்கள் மரண தண்டனை கோரப்போவது இல்லை என்றும் பிணையில்லாத ஆயுட்கால தண்டனை கோரப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

மான்னிங்கை நடத்தும் முறையும், அவர் அம்பலப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றங்களும் ஒபாமா நிர்வாகத்தின் முழுப் பிற்போக்குத்தனத் தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்நிர்வாகம் ஏற்கனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது ஆளும் வர்க்கம் நடத்திவரும் தாக்குதல்களை விரிவாக்கியுள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் உட்பட, குற்றச்சாட்டு, விசாரணை ஏதுமின்றி காலவரையற்று இராணுவக் காவலில் வைக்கப்பட அனுமதிக்கும் சட்ட வரைவைச் சட்டமாக்கும் வகையில் ஜனாதிபதி கையெழுத்திட உள்ளார். அமெரிக்கப் போர்க்கருவிக்கு நிதியம் அளிக்கும் தேசியப் பாதுகாப்பு இசைவுச் சட்டம் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ள இச்சட்டம் ஒரு போலிஸ்-அரசுக்கான சட்டபூர்வ தளத்தை அமைக்கிறது. (See “Obama, Congress back legalization of a police state”)

பல தசாப்தங்கள் சிறை என்று மான்னிங்கிற்கு தண்டனை அளிக்கப்படாவிட்டாலும், புதிய சட்டவரைவின்படி அவர் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டு எந்தச் சட்ட விசாரணையுமின்றி இராணுவக் காவலில் வைக்கப்படலாம். இவர் மீது நடத்தப்படும் குற்றவிசாரணை, இராணுவவாதத்தின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு இடையே பிரிக்கமுடியாமல் இருக்கும் பிணைப்பைத்தான் நிரூபணம் செய்கிறது.

மான்னிங் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆவணங்களில் இருக்கும் உள்ளடக்கம் வெளிப்படுவதில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இரக்கமின்றி குடிமக்களையும் செய்தியாளர்களையும் கொலை செய்தது, சர்வதேச தூதர்களின் இரகசிய உடன்பாடுகள், மற்றும் துனிசியா, எகிப்து இன்னும் பிற இடங்களில் உள்ள பரந்த ஊழல்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை உள்ளன. இத்தகவல்கள் வெளிவந்தமை, மத்திய கிழக்கு முழுவதும் புரட்சிகரப் போராட்டங்கள் வெடிப்பதற்கு உதவி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்பில் இருந்த குற்றம் சார்ந்த தன்மையை அம்பலப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களை அவற்றின் குடிமக்கள் பார்வையில் அவமதிப்பிற்கு உட்படுத்தி விட்டன.

சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு மான்னிங் பொறுப்பு ஏன்றால், அவர் ஒரு குற்றவாளி அல்ல, ஒரு மாபெரும் வீரர் ஆவார். ஆக்கிரமிப்புப் போர்கள், சித்திரவதை, படுகொலை என்பவற்றை இயக்கியவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் ஆவர். இதில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்குவர். இவர்கள் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களையும், எதிர்ப்பையும் நசுக்க முற்படுகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெருகும் எதிர்ப்புக்களை அச்சுறுத்துவதற்குத்தான் மான்னிங் மீதான குற்றவிசாரணை பயன்படுத்தப்படுகிறது. போர் எதிர்ப்பு மற்றும் சமூக அமையிதியின்மை வெடிப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்கு தன் செயல்களைப் பற்றிய தகவல்களை அடக்கிவிடுவது முக்கியம் என்று வெள்ளைமாளிகை கருதுகிறதுஅதுவும் அது இராணவ ஆக்கிரமிப்பு செய்துள்ள நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவிற்கு உள்ளேயே நடத்தும் செயல்களிலும். இக்காரணத்தினால், ஒபாமா நிர்வாகம் அரசாங்கம் பற்றிய தகவல் வெளியிடுபவர்களை ஆக்கிரோஷத்துடன் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, ஏராளமான தகவல்களை இரகசியமானவை என்றும் அறிவித்துவிட்டது.

மான்னிங்கின் தண்டனைக்கும் அப்பால், வாஷிங்டன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயுடன் அவரைப் பிணைக்க முற்படுகிறது. போலியாகத் தயாரிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை ஒட்டி இந்நிர்வாகம் அசாஞ் பிரிட்டனில் இருந்து ஸ்வீடனுக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முயல்கிறது. இறுதியில் இராணுவ நீதிமன்றத்தை சந்திக்க அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்படுவார்.

வெள்ளி காலை விசாரணை தொடங்கியபின், மான்னிங்கின் வக்கீல் உடனடியாக இந்த வழக்கில் நீதிபதியாகச் செயல்படும் அதிகாரி, லெப்டினென்ட் கர்னல் போல் அல்மன்சா, விலகிக் கொள்ள வேண்டும் என்று கோரினார். “விசாரணை அதிகாரி என்று வக்கீல் டேவிட் கூம்ப்ஸ் நீதிமன்றத்திடம் கூறி, அல்மன்சா 2002ல் இருந்து நீதித்துறையின் வக்கீலாகப் பணியாற்றியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டார். கூம்ப்ஸ் நீதிமன்றத்திடம், இந்த நிலைப்பாடு நலன்களின் மோதல் என்பதற்குச் சமம் என்றும் அசாஞ்க்கு எதிரான இத்துறையின் குற்றவிசாரணையை ஒட்டி அது உறுதியாகிறது என்றும் அவர் கூறினார்.

நீங்கள் நீதித்துறையில் 2002ல் இருந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒப்புக் கொண்டுள்ளபடியே 20 வழக்குகளுக்குமேல் விசாரணை வக்கீலாக இருந்துள்ளீர்கள். நீதித்துறை இந்த வழக்கில் விசாரணையை நடத்துகிறது... அதனால் முடியும் என்றால், இந்த வழக்கில் அது தேவையானதைப் பெறமுடியும், என்னுடைய கட்சிக்காரரை ஜூலியன் அசாஞ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான சாட்சிகளில் ஒருவராக அழைக்கமுடியும் என்று அல்மன்சாவை நோக்கி கூம்ப்ஸ் கூறினார்.

உண்மையில் மான்னிங் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டதும், தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணையும் அந்த இளைஞரை மன, உடல்ரீதியாக தளரவைக்கும் முயற்சி, விக்கிலீக்ஸிற்கு எதிரான வழக்கில் அவரை வளைந்து கொடுக்கும் சாட்சியாக மாற்றும் முயற்சி ஆகும்.

அவர் காவலில் உள்ள காலம், வழக்குக் காலம் முழுவதும் இராணுவம் மான்னிங்கின் அரசியலமைப்பு, மனித உரிமைகளை மீறியுள்ளது. முறையான வழிவகைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளன; நீண்டகாலம் தனிமைக் காவலில் வைக்கப்பட்டு உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை பற்றிய சிறப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புசபை-Amnesty International- மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புக்களும் பலமுறை மான்னிங்கின் நிலைமை குறித்தும் ஒபாமா அரசாங்கத்தின் பொருட்படுத்தாத்தன்மை மற்றும் எரிச்சலைப் பற்றியும் கவலைகளைக் காட்டியுள்ளன

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் இந்த வழக்கில் சாட்சியளிப்பதற்காக வேண்டியிருந்த சாட்சிகளை அனுமதிக்க இராணுவம் மறுத்துவிட்டது என்றும் நீதிமன்றத்திற்கு கூம்ப்ஸ் சுட்டிக்காட்டினார். 48 சாட்சிகள்  விசாரிக்கப்பட வஏண்டும் என்று கூம்ப்ஸ் கோரியிருந்தார், ஆனால் அவர்களில் 2 பேருக்குத்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. செய்திக்கசிவுகளால் சேதம் விளைந்தது என்று குற்றம் சாட்டியவர்களில் சாட்சியம் அளிக்கக் கோரப்பட்டவர்களில் ஜனாதிபதி ஒபாமா மற்றும் வெளிவிவகாரச் செர் ஹில்லாரி கிளின்டன் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

“48 பேரில் இருவர்!” என்று அவர் வியந்து கூறினார்: “மான்னிங் எதிரிக்கு உதவியதாகக் குற்றத்தை அரசாங்கம் சுமத்தியுள்ள வழக்கில், இப்பொழுது மரண தண்டனை அதிகப்பட்சமாக விதிக்கப்படலாம் என்று உள்ள வழக்கில்!”. குற்றவிசாரணை வக்கீல்கள் கேட்ட 20 சாட்சிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “விசாரணை அதிகாரி ஒருதலைப்பட்சக் கருத்துடையவர் என்பதை நியாயமான எவரும் காணலாம் என்று முடிவுரையாகக் கூறினார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் போர்க்களத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தினரை ஆபத்திற்கு உட்படுத்தும் என்ற கூற்றிற்கு சவால்விடும் சாட்சியங்களின் தகமையை முன்வைக்க குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் விக்கிலீக்ஸ் பற்றிய பிரமாணம் செய்யப்படாத அறிக்கைகளை அல்மன்சா அறிவித்துள்ளார். இந்த முடிவு விசாரணையைக் கட்டுப்படுத்தும் 32 வது விதியை மீறுவதாகும் என்று கூம்ப்ஸ் கூறினார்.

பாதுகாப்பு வக்கீல் விலக வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையில் தீர்ப்புக் கூறுவதற்கு முன் தொடர்ந்த பல முறைகள் இடைவெளிகளை அல்மன்சா அறிவித்தார். இதன்பின் வழக்குத்தொடர் கூம்ப்ஸ் இராணுவ குற்றப்பிரிவு முறையீடுகள் நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கலாம் என்பதற்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு மனுமீது முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்புக் கூறும் வரை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கூம்ப்ஸின் கோரிக்கையை அல்மன்சா நிராகரித்தார்.

விசாரணையின்போது ஏராளமாகக் கூடியிருந்த சர்வதேசச் செய்தியாளர் கூட்டத்தை குறைத்து, நீதிமன்ற அறைக்குள் 10 செய்தியாளர்களைத்தான் இராணுவம் அனுமதித்தது. மற்றவர்கள் ஒரு தனி அறையில் இருந்து தொலைக்காட்சித் தொடர்பு மூலம் காண அனுமதிக்கப்பட்டனர். பிராட்லி மான்னிங் ஆதரவாளர் இணையத்தை அமைத்த ஜெப் பாட்டெர்சன், “கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு முன் வார இறுதியில் விசாரணையை நடத்துவது என்பது செய்தி ஊடகம் தகவல் சேகரித்தல், பொது எதிர்ப்புக்கள் ஆகியவற்றைக் குறைக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது என்பது தெளிவு என்று சுட்டிக் காட்டினார்.

அல்ஜசீராவில் ஆங்கிலமொழி நிருபர் காமில்லே எல்ஹசானி ஓர் இடைவெளி நேரத்தில் டிவிட்டரில் கூறினார்: “மான்னிங் விசாரணை மீண்டும் தொடங்கியபின், நான் என்னுடைய கணினியை மூடிவிட வேண்டும். இராணுவ விதிகள். பார்த்தால் வெளிப்படை எனத் தோன்றும், ஆனால் போலித்தனம்தான்.” கார்டியன் செய்தியாளர் எட் பில்கிங்டன் நீதிமன்றம் செயல்படும்போது டிவிட்டரில் கூறினார்; செய்தியாளர்கள் அவ்வப்பொழுது நடப்பது குறித்த தகவல்களை அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டது; நீதிமன்றத்திற்கு வெளியே இருக்கும் எவருடனும் தொடர்பு கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் அணுகுதலும் இன்னும் கடுமையான வரம்புகளுக்கு உட்பட்டது; அதிகாலையில் இருந்து வாயிற்கதவிற்கு வெளியே காத்திருந்த ஒரு சில ஆதரவாளர்களும் குடும்ப உறுப்பினர்களும் முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். “மான்னிங்கின் ஆதரவாளர்கள், அமைதியாக தொடக்கத் தொடரில் பொது இடத்தில் அமர்ந்துள்ளனர். விசாரணையில் குறுக்கிட்டால், விசாரணை அதிகாரியால் அவர்கள் அகற்றப்பட்டுவிடுவர் என்று எச்சரிக்கப்பட்டனர்.” என்று கார்டியனின் பில்கிங்டன் குறிப்பிட்டுள்ளார்.

போர்ட் மேடேயின் கதவுகளுக்கு வெளியே டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடி நின்று, மான்னிங் படத்தையும், ஆதரவு அடையாளங்களையும் உயர்த்திப் பிடித்திருந்தனர். எதிர்ப்பாளர்களில் மூத்த இராணுவத்தினரது பிரிவு ஒன்றும் இருந்தது. வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்ஸில் பயணித்து வெள்ளி பிற்பகல் எதிர்ப்பில் கலந்து கொண்டனர். இவர்கள் மான்னிங்கின் 24வது பிறந்த நாளான சனிக்கிழமை நடக்க இருக்கும் அணிவகுப்பிலும் கலந்து கொள்கின்றனர்.