World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Supreme Court intervention in Arizona anti-immigrant law poses threat to democratic rights

அரிசோனா மாநில குடியேறுவோருக்கு எதிரான சட்டத்தின் தலைமை நீதிமன்றக் குறுக்கீடு ஜனநாயக உரிமைகள் மீது அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது

By Tom Carter
14 December 2011
Back to screen version

தான் அரிசோனாவின் முன்னோடியில்லாத குடியேறுவோருக்கு எதிரான சட்டத்தின் விதிகளை நீக்கிய முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய இருப்பதாக அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் திங்களன்று அறிவித்துள்ளமை வரலாற்றுரீதீயாக தீர்க்கப்பட்டுவிட்ட விடயங்கள் எனப்படும் முழு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் மீது தனது நிழலைப் படரவிட்டுள்ளது.

அரிசோனாவின் பிற்போக்குத்தன எமது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அயலவரை பாதுக்காக்கும் சட்டமும் (Support Our Law Enforcement and Safe Neighborhoods Act -Arizona State Bill 2070) என்பது மாநிலச் சட்டமன்றத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Tea Party இனால் தேசியவாதம், தீவிர இனவாத உணர்வைத் தூண்டிய பிரச்சாரத்தின் நடுவே இயற்றப்பட்டிருந்தது. அதில் சில பகுதிகள் இந்த ஆண்டு முன்னதாக 9வது சுற்று முறையீட்டு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டன.

தலைமை நீதிமன்றம் இவ்வழக்கில் குறுக்கிடுவது என்பது அரசியல் நோக்கமுடையது  என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இதற்கு வலதுசாரி நீதிபதிகள் நால்வர் முகாமான ஆன்டாயின் ஸ்கேலியா, கிளாரன்ஸ் தோமஸ், சாம்வெல் அலிடோ மற்றும் தலைமை நீதிபதி ஜோர் ரோபர்ட்ஸ் ஆகியோர் முனைப்புக் காட்டியுள்ளனர். பல விமர்சகர்கள் ஒரு ஜனாதிபதித் தேர்தல் ஆண்டில் தற்போதைய வரைகாலத்தில் ரோபர்ட்ஸின் நீதிமன்றம் தலையிட்டுள்ளது போல் மிக விவாதத்திற்குரிய, அரசியல் வெடிப்புத் தன்மைத்திறன் உடைய வழக்குகள் பலவற்றில் நீதிமன்றம் அபூர்வமாகத்தான் தலையிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அரிசோனாவிற்கு எதிர் அமெரிக்கா என்னும் இந்த வழக்கில் நீதிமன்றம் தனது சொந்த முயற்சியிலேயே தலையிடுகிறது. கீழ் நீதிமன்றங்களில் SB 1070 ன் இறுதித் தீர்பிற்காகக் காத்திருக்கவில்லை. மூன்று நாட்கள் முன்புதான், டிசம்பர் 9ம் திகதி, நீதிமன்றம் குடியரசு மாநிலச் சட்டமன்றம் இயற்றியிருந்த திட்டத்திற்கு பதிலாக மத்திய நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்த காங்கிரஸ் தொகுதிகள் மறுசீரமைப்புத் திட்டம் டெக்சாஸில் செயல்படுத்துவது குறித்து தடுப்பு ஆணையை வெளியிட்டது. கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்ட திட்டத்தின் மீதான முறையீட்டைக் கேட்பதற்கு தலைமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருந்தது. இது மாநிலத்தின் முன்மொழிவைவிட ஜனநாயகக் கட்சியினருக்கு இன்னும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த மாதம் நீதிமன்றம் ஒபாமா நிர்வாகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முழுமை மாற்றம் குறித்த சட்டத்திற்கு வந்துள்ள சவால்களைக் கேட்க ஒப்புக் கொண்டது.

குடியேறியவர் பற்றிய வழக்கில் தலைமை நீதிமன்றத்தின் குறுக்கீடு அரிசோனா சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் வலதுசாரிகளிடையே களிப்பிற்குக் காரணமாயிற்று. மாநிலத்தின் குடியரசுக்கட்சி ஆளுனர் ஜான் ப்ரூவர் ஓர் அறிக்கையில் தலைமை நீதிமன்றம் குறுக்கிடுவதற்குத் தன் ஆதரவை அறிவித்தார்: “உயர்நீதிமன்றம் அரிசோனாவின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பு, பொதுநலன் ஆகியவற்றைக் பாதுகாக்கும் தன்மையை நிலைநிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.”

அரிசோனா எஸ்.பி.1070 என்பது இராணுவ வழி வார்த்தைப்பிரயோகமாக உள்ளது.அரிசோனாவில் உள்ள அனைத்து மாநில, உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுக் கொள்கையை செயல்படுத்துவதின் மூலம் குறைப்பை செய்ய முற்படுவதாக அது கூறுகிறது. இவ்வகையில் சட்டத்தின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள நோக்கம், மாநிலத்தின்சட்டவிரோத வெளிநாட்டவர்கள் என அழைக்கப்படுவபவர்களை அகற்றுவதற்கு, அரிசோனாவில் குடியேறியுள்ள மக்களைத் துன்பப்படுத்துல், மிரட்டுதல், அச்சுறுத்துதல் என்று உள்ளது.

சட்டவரைவின் விதிகள் குடியேறுவோரின் ஜனநாயக உரிமைகளை மட்டுமின்றி, மக்கள் அனைவருடைய உரிமைகளுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இச்சட்டவரைவு பொலிஸ் அதிகாரிகளுக்கு வரலாற்றில் முன்னோடியில்லாத அதிகாரங்களைக் கொடுக்கிறது; அதன் பின் சட்டம் அவர்களை அதைச் செயல்படுத்துமாறு கூறுகிறது.

எஸ்.பி.1070ன் கூடுதல் கடுமையான விதிகள் பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் ஆவணமற்ற குடியேறுவோர் எனச்சந்தேகிக்கும் எந்த நபரையும் அடையாள ஆவணங்களைக் காட்டுமாறு கோரும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளன. இத்துகைய அப்பட்டமான பாகுபாடு காட்டும், இனவழி விதி நீண்டகாலமாகவே வலதுசாரி மற்றும் வெள்ளையின மேலாதிக்கக் குழுவின் முக்கிய கோரிக்கையாக இருந்துவருகிறது.

அரிஜோனா எஸ்.பி.1070 ஒரு வாடிக்கையான போக்குவரத்து சோதனையில் என்றாலும் கூட தாங்கள் எதிர்கொள்ளும் எவரையும் குடியேற்ற அந்தஸ்து குறித்து விசாரணையை பொலிஸ் அதிகாரிகள் நடத்த வேண்டும் என்று கூறுகிறது.

வேண்டுமென்ற தெளிவற்ற, படாடோபமான வார்த்தைகளால் நிறைந்து, எஸ்.பி.1070 ஆவணமற்ற குடியேறுவோரைமறைத்தல், வசதியளித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றையும் ஒரு குற்றம் ஆக்குகிறது. அமெரிக்க மத்திய ஆட்சியின் தெளிவற்றபயங்கரவாதத்திற்குப் பொருள்சார் ஆதரவு சட்டங்கள் மற்றும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டம் ஆகியவற்றின்  வார்த்தைகளை பிரதிபலித்து மக்களின் பரந்த பிரிவினரைக் குற்றவாளிகளாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இத்தகைய பொலிஸ்-அரச நடவடிக்கைகள் உரிமைகள் சட்டத்தில் உள்ள வரலாற்றுரீதியான ஜனநாயகப் பாதுகாப்புக்களை மீறுகின்றன என்பதைக் கூறுத் தேவையில்லை. 1791ல் இசைவுபெற்ற அமெரிக்க அரசியலின் நான்காம் திருத்தம், “மக்கள் தங்கள் உடல்கள், வீடுகள், ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றில் நியாயமில்லாத சோதனைகள், பறிமுதல்கள் இவற்றிற்கு எதிராகக் கொண்டுள்ள உரிமை ஒருபொழுதும் மீறப்படக்கூடாது என்று அறிவிக்கிறது. மேலும்ஓரளவு காரணம் இல்லாமல் எந்தவிதப் பிடி ஆணையும் பிறப்பிக்கப்படக்கூடாது என்றும் அது கூறுகிறது. அரிசோனா எஸ்.பி.1070 பிடி ஆணை இல்லாமல், நியாயமான காரணம் இல்லாமல் ஒருதலைப்பட்ச சோதனைகள், பறிமுதல்கள் ஆகியவற்றைச் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது; இதில் எந்த நபர், குடிமகன், மற்றும் எவ்வகையாயினும், வெறும்சந்தேகத்தின் பேரில்” “அடையாள ஆவணங்களைக் காட்டுமாறு கோரும் அதிகாரமும் அடங்கியுள்ளது.

அலபாமா, தென் கரோலினா, உதா, ஜோர்ஜியா மற்றும் இந்தியானா ஆகிவற்றில் உள்ள மாநிலச் சட்டமன்றங்கள் சமீபத்தில் எஸ்.பி.1070க்கு இணையான தத்தம் சட்டங்களை இயற்றி ஆவணமற்ற குடியேறுவோர்களைத் தாக்கியுள்ளன.

கடந்த ஆண்டு ஜூலையில் எஸ்.பி.1070க்கு ஒபாமா நிர்வாகம் ஒரு சட்டப்பூர்வ சவாலைக் கிளப்பியது. அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்ற அடிப்படையில் அது ஒன்றும் சட்டத்தினை எதிர்க்கவில்லை.

எஸ்.பி.1070 நாடுதழுவிய குடியேற்றக் கொள்கை என்று ஜனாதிபதி கொண்டுள்ள தனிப்பட்ட அதிகாரங்களில் தலையிடுகிறது என்று நிர்வாகம் வாதிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மிகக் குறைந்த அடிப்படையிலேயே ஒன்பதாவது சுற்றுமுறையீட்டு நீதிமன்றம் எஸ்.பி.1070ல் இருக்கும் பல கடுமையான விதிகள் அகற்றப்பட்டன, செல்லுபடியாகாதவை என்று உறுதிபடுத்தியது.

ஒபாமா நிர்வாகம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கு மாறாகஒவ்வொரு வகையிலும் நிர்வாகத்துறைக்கு அது வரையற்ற அதிகாரத்தைச் சேகரிக்க முயல்கிறதுகுடியேற்றம் மற்றும் குடியுரிமை பின்னர் தருதல் என்பது வரலாற்றுரீதியாக மத்திய சட்டமன்றத்திடம்தான் உள்ளதே தவிர ஜனாதிபதியிடம் அல்ல. காங்கிஸிற்கு மட்டும்தான்நாடு முழுவதும் ஒரே சீரான இயல்பான குடியுரிமையை பெறுதலை நிறுவதலுக்கான அதிகாரத்தை அரசியல் அமைப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசின் சட்டத்தின்கீழ் எஸ்.பி.1070 செல்லத்தக்கது அல்ல என்பது வரலாற்று, சட்டத் தளத்தின் அடிப்படையில் விவாதத்திற்கு உரியது அல்ல. ஒரு அரசிலமைப்பு விற்பனரும், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பற்றி செல்வாக்குடைய பல நூல்களை எழுதியிருப்பவருமான எர்வின் கெமிரின்ஸ்கி எஸ்.பி.1070 “தலைமைநீதிமன்ற முன்னோடித் தீர்ப்புக்களின் கீழ் மத்திய அரசின் சட்டத்தை தெளிவாக ஒதுக்கி வைக்கிறது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிமன்றத்தில் சேர்வதற்கு முன் ஒபாமா நிர்வாகத்தின் நீதித்துறையில் பணிபுரிந்த ஒபாமா நியமித்துள்ள எலினா காகன், இந்த வழக்கில் தான் நீதிபதியாக இருப்பதற்கில்லை என்று அறிவித்துவிட்டார். இவர் இவ்வகையில் நீங்கியது உரிமைகள் சட்டத்தைக் கிழித்தெறிய ஆர்வம் காட்டும் நான்கு நீதிபதிகள் கொண்ட வலதுசாரி முகாமிற்கு வலுவைக் கூட்டுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப் பிரிவினை குறித்த பிரச்சினையில் அமெரிக்காவில் ஒரு வரலாறே உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன், தெற்கு மாநிலங்கள், மாநிலங்கள் என்ற முறையில் கறுப்பின அடிமை முறையைச் செயல்படுத்தும்உரிமைகளை கொண்டிருந்தனவா என்பது ஒரு போரில் முடிவிற்கு வந்தது. அப்போரில் மூன்று மில்லியன் மக்கள் பங்கு பெற்றனர், 640,000 பேர் இறந்து போயினர்.

இருபதாம் நூற்றாண்டில் கணிசமான ஜனநாயக நடவடிக்கைகள் மத்திய அரசின்  சட்டத்தின் வடிவமைப்பின்கீழ் பெரிதும் செயல்படுத்தப்பட்டன. மாநிலச் சட்டமும்மாநிலங்களின் உரிமைகள் என அழைக்கப்பட்டவையும் ஜனநாயக விரோதச் சட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றைக் பாதுகாக்கும் அரணாகப் பயன்படுத்தப்பட்டன.

1960களின் குடிமை உரிமைச் சட்டம், சிறார் தொழிலாளர் சட்டங்கள், குறைந்தப்பட்ச ஊதியச் சட்டங்கள், இன்னும் கணக்கற்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மத்திய  சட்டமன்றத்தால் பலமுறையும் மாநில அரசாங்கங்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்பட்டன. இந்த வரலாற்றுப் பின்னணியில், அரிசோனா மாநிலச் சட்டமன்றத்தின் கூற்றான பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகளை இலக்கு வைக்கப்படும் குடியேறுபவர்களுக்கு எதிராகச் செயல்படுத்தும் சட்டத்தை இயற்றும்உரிமை என்பதுஅரிசோனா சட்டம் ஏற்கனவே நீக்கப்பட்டபின் அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் அதே விசாரிக்க இருப்பதாக உள்ளது என்பதும் நீண்டகாலப்போக்கில் முக்கியத்துவம் கொண்டவை.

அரிசோனா ஆளுனர் ஜான் ப்ரூயர் மேலே மேற்கோளிடப்பட்டுள்ள அவருடைய அறிக்கையில், “இந்த வழக்கு அரிசோனா பற்றியது மட்டும் அல்ல... இது மத்திய ஆட்சியின் அடிப்படைக் கொள்கை பற்றியது, அதன் அடிப்படையில்தான் தங்கள் மக்களைக் பாதுகாக்கும் உரிமையை மாநிலங்கள் பெற்றுள்ளன.” என்றார்.

நேற்றைய நியூ யோர்க் டைம்ஸில், செய்தியாளரும் வக்கீலுமான ஆடம் லிப்டாக், 2009 வழக்கு ஒன்றில், 1965 வாக்களிக்கும் உரிமை பற்றிய மோதல், டெக்சாஸ் மாநிலத்தில் அதன் விளைவு என்பதில், தலைமை நீதிபதி ஜோர் ரோபர்ட்ஸ் வெளிப்படையாக சட்டத்தைக் குறை கூறினார் என்று எழுதியுள்ளார். தலைமை நீதிபதி மத்திய நிதித்துறை தேர்தல் நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் என்று இனவழிப் பாகுபாடு உடைய தென்மாநிலங்களில் இருப்பதைக் கண்காணிக்கும் விதிமுறைகள், இனியும் பொருத்தமற்றவை என்ற கருத்தைத் தெரிவித்தார். ஆனால் வழக்கைப் பொருத்தவரை நீதிமன்றம் கூட்டாட்சியின் தன்மையின் வினா பற்றி உண்மையில் முடிவை அடையவும் இல்லை, எடுக்கவும் இல்லை.

டெக்சாஸ் சட்டமன்றத் தொகுதிகள் மறுபரிசீலனைத் திட்டத்தை அகற்றி, இப்பொழுது தலைமை நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு உத்தரவிட்ட மத்திய  நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் நடவடிக்கைகளுக்கு ரோபர்ட்ஸ் வினாவிற்கு உட்படுத்தும் வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தின் விதிகளின்படிதான் தளம் கொண்டுள்ளனர் என்று லிப்டக் சுட்டிக்காட்டுகிறார்.

வழக்கின் இறுதி விளைவு எப்படி இருந்தாலும், அரிசோனா குடியேற்ற எதிர்ப்புச் சட்டத்தின் முக்கிய கூறுபாடுகளை அகற்றிவிட்ட மத்திய நீதிமன்றத் தீர்ப்புக்கள் குறித்து ஒரு முறையீட்டைக் கேட்பத்தற்கு தலைமை நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது என்பது, வெளிப்படையான அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளுக்கு நம்பகத்தன்மை கொடுத்துள்ளது என்பதுடன், நாட்டிலுள்ள மிகப் பிற்போக்குத்தன அரசியல் சக்திகளுக்கு தைரியத்தையும் கொடுத்துள்ளது. ஒன்பதாம் சுற்று முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை தலைமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து எஸ்.பி.1070 ஐ அனுமதிக்குமேயானால், அதில் பரந்த தாக்கங்கள் இருக்கும். அதனால் 1960களில் இருந்து குடியுரிமைகள் குறித்த சட்டங்கள்மீதும், அதே போல் இன்னும் பொதுவான முறையில் இயற்றப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் மீதும்  தீவிரத் தாக்குதல்கள் நடத்த கதவுகள் திறக்கப்படும்.