சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Opposition to mass sackings of People welfare workers by AIADMK government

பெருமளவில் மக்கள் நலப்பணியாளர்கள் அதிமுக அரசாங்கத்தினால் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

சசி குமார் மற்றும் நந்த குமார்
18  December 2011

use this version to print | Send feedback

அவரது முந்தைய ஆட்சியை நினைவுபடுத்தும் விதத்தில் ஜெயல்லிதா தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) அரசாங்கம் 13,500 மக்கள் நலப் பணியாளர்களை நவம்பர் 8 ல் பணிநீக்கம் செய்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் வேலை நீக்கப்பட்டதன் உடனடி விளைவாக, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்துபோனார் மற்றும் இன்னொரு ஊழியர் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.

மக்கள் நலப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் முந்தைய திராவிட முன்னேற்ற கழக (திமுக) ஆட்சியின் கீழ் பணியமர்த்தப்பட்டனர். மக்கள் நல பணியாளர்கள்களின் ஒப்பந்த காலம் மே 31 2012 வரை நீடிக்கப்பட்டு இருந்தபோதிலும் அதிமுக அரசாங்கம் எதேச்சதிகாரப்போக்கில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. மேலும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள் என்பதனால் எந்த நேரத்திலும் அரசாங்கம் அவர்களை வேலையிலிருந்து நீக்கலாம் அதற்கு எந்த காரணமும் வழங்க தேவையில்லை என்று அதிமுக அரசாங்கம் ஆணவத்துடன் வாதிட்டது.

தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ஒன்றின் மேல் நடவடிக்கை எடுக்கும்முகமாக தொழிலாளர்களின் பணியை நீக்கிய அரசாங்க ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியது, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படியும் மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.  

இடைக்கால ஆணைக்கு எதிராக அதிமுக அரசாங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு அனுமதி மனு (special leave petition- SLP) போடப்பட்டது. உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தமிழ் நாட்டின் கூடுதலான வக்கீல் ஜெனரல், குரு கிருஸ்ணகுமாரின் வாதத்தில் அங்கே ஏற்கனவே கிராமங்களில் 12,000 பஞ்சாயத்து தொழிலாளர்கள் சமூக நல சேவைகளை பராமரிக்க இருப்பதாகவும்அவர்களை விட கூடுதலாக 5,200  தொழிலாளர்கள் அவர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமையில் மக்கள் நல பணியாளர்களை வைத்திருப்பது அரசாங்கத்திற்கு கூடுதலான நிதிச்சுமையையாக இருக்கும்’’ என்றும் கூறினார்.

இதன் அர்த்தம் ஜெயலலிதா அரசாங்கம் மக்கள் நல பணியாளர்களின் வேலைகளை அழிப்பது மட்டுமின்றி பஞ்சாயத்து தொழிலாளர்களின் மீது அதிக சுமையையும் திணிக்கிறது, அதேசமயம் மக்கள் நல பணியாளர்கள் செய்து வந்த வரம்புக்குட்பட்ட சமூக சேவைகளையும் பலவீனப்படுத்துகிறது. தற்போது பஞ்சாயத்திலுள்ள தொழிலாளர் சக்தி சமூக சேவைகளை பராமரிக்க போதுமானதல்ல என்று தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சுட்டிக்காட்டியது.

நவம்பர் 29ல் இதன் மீதான விசாரணையில் ‘’ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை அரசாங்கத்தில் மாற்றம் வரும் போதெல்லாம் சமூக சேவை தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர், அரசாங்கத்தில் மாற்றம் வரும்போது மீண்டும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது? அங்கே சட்ட விதி கிடையாதா? மாநிலத்தில் சில சட்ட விதி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.’’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. விசாரணை டிசம்பர் 12க்கு தேதியிடப்பட்டது, பிறகு தேதி குறிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால ஆணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் குறிப்புகள், ஜெயலலிதா அரசாங்கத்தின் இப்படியான எதேச்சாதிகார நடவடிக்கைகளினால் தூண்டப்படக்கூடிய சமூக வெடிப்புகள் பற்றிய கவலைகளை சுட்டிக்காட்டுகிறது.

அந்த கிராமிய மக்கள் நலப் பணியாளர்கள் முதலில் 1989இல் அப்போதைய  திமுக ஆட்சியின்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துக்களுக்காக  நியமிக்கப்பட்டனர் அவர்கள் முதியோர் கல்வியை ஊக்குவிப்பது, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை நன்றாக விளக்குவது, தெரு விளக்குகளை பராமரிப்பது, சத்துணவு கூடங்களை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மூன்று தடவை அதிமுக ஆட்சியின் கீழ் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதிமுக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கான அரசியல் காரணம் இந்த தொழிலாளர்கள் திமுக விசுவாசிகள் என்று கருதப்படுவதாக இருக்கலாம். நடந்தது என்னவென்றால் திமுக அரசாங்கம் அவர்களை நியமித்தது, அதன் பகையாளியான அதிமுக ஆட்சிக்கு வந்தபோது அவர்களை பணி நீக்கம் செய்தது, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது அவர்களை நியமித்தது. அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக திமுக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர், அதனால் அவர்கள் எந்த சமயத்திலும் பணி நீக்கத்திற்கு ஆளாக கூடிய பலவீனமான நிலையில் இருந்தனர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் 2003ல், 200,000 அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை நசுக்க ஒரு கொடூரமான தொழிலாளர் விரோத ‘’அத்தியாவசிய சேவைகள்’’ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது, பரந்தளவில் வேலை நீக்கங்கள், கைதுகள் செய்யப்பட்டன, மற்றும் கருங்காலிகள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் பல வருடங்களாக அரசாங்க குடியிருப்புகளிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் குடும்பங்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால் அதிமுக, 2001 இலும் இந்த வருடத்திலும் இரண்டு ஸ்ராலினிச கட்சிகளுடன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M), ஒரு அரசியல் கூட்டணியை அமைத்துத் தான் ஆட்சிக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக அதிமுக மாநில அரசாங்கம் தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கு சார்பாக இருக்கும் என்று ஸ்ராலினிச கட்சிகள் அபத்தமான கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நவீன தாராளவாத கொள்கையுடன் அதிமுக உண்மையில் மாறுபாடில்லாத கட்சியாகும். அதிமுக மற்றும் திமுக  இரண்டுடனும் சந்தர்ப்பவாத கூட்டணிகளை ஏற்படுத்திய பதிவு ஸ்ராலினிஸ்டுகளுக்கு உண்டு.   

கடந்த நவம்பரில் அதிமுக தலைவர் ஜெயலலிதா அறிவித்தார், அதாவது காங்கிரஸ், திமுக-உடன் முறிக்குமாயின் அதே நாளில் அதிமுக, காங்கிரஸ் உடன் கூட்டணியை ஏற்படுத்தும் என்றார். அதிமுகவுக்கு இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியுடனும் தொடர்பு உண்டு.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் சிலருடன் பேசியது. குமார் 46 WSWS-யிடம் கூறினார்; ‘‘நான் 1990களிலிருந்து பணிபுரிகிறேன். அதிமுக ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் எங்களை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். நான் இந்த வேலைக்கு வரும்பொழுது ரூ 200 வாங்கினேன். படிப்படியாக என்னுடைய சம்பளம் உயர்ந்து தற்பொழுது ரூ 5130 (US $ 103) பெறுகிறேன். நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் இந்த அரசாங்கம் எங்களை இன்னும் வேலை செய்ய அனுமதிக்கவில்லை.

‘‘எனக்கு இரண்டு பிள்ளைகள். இந்த வயதில் வேறொரு வேலையை தேட முடியாது. நாங்கள் எல்லோரும் திமுக என்று அரசாங்கம் குறிப்பிட்டு எல்லோரையும் பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களது ஆட்சியின் கீழ் எங்களை வேலை செய்ய அனுமதித்திருந்தால் நாங்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருப்போம். ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் எங்களை வேலையை விட்டு நீக்கினால் எப்படி நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போம்.’’

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்க விரோத அதிமுக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது பற்றி கேட்டபொழுது. ‘’தொழிலாள நலன்களுக்காக அவர்கள் நிற்கவில்லை. மாறாக அவர்கள் முதலாளித்துவக் கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் இந்த கட்சிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக தான் இருக்கின்றன’’ என்றார்.

கோதண்டன் 42 WSWS-யிடம் குறிப்பிடும்பொழுது ’’நான் 22 வருடமாக பணிபுரிகிறேன். நான் அதிமுக ஆட்சியில் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. என்னுடைய வருமானம் என்னுடைய வேலையை நம்பிதான் உள்ளது. நாங்கள் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர ரூ 20 செலவிடவேண்டியுள்ளது. அதன் தூரம் 5 கிலோ மீட்டர் தான்.

 ‘’ஒரே இரவில் வேலையை விட்டு நீக்கப்பட்டதை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் குறைந்த சம்பளம் என்றாலும் இதை தேர்ந்தெடுத்த்தற்கு காரணம் இது ஒரு அரசாங்க வேலை. நாங்கள் குறைந்த சம்பளம் பெற்றாலும் நாங்கள் ஒய்வூக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுவோம்.’’அரசியல் கட்சி பற்றி கேட்டதற்கு கருத்து தெரிவித்த அவர்’’எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்களுடைய குறைகளை கவனிக்க தவறுகிறார்கள். யார் வேலை தருகின்றார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும். வேலையை விட்டு நீக்கினால் பெரும்பான்மையானவர்கள் தற்கொலையை தவிர வேறு வழி கிடையாது.

‘’அதிமுக ஆட்சிக்கு வந்ததே முந்தையாட்சியின் ஊழலும் விலைவாசி அதிகளவில் உயர்ந்ததும் தான் காரணம். ஆனால் இந்த அம்மா (ஜெயல்லிதாவை குறிப்பிடுகின்றனர்) ஆரம்பத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவேன் என்று குறிப்பிட்டார்கள் ஆனால் தற்பொழுது மத்திய அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். எந்த ஒரு கட்சியும் மக்களுக்காக இல்லை’’ என்றார்.

ரமணி வயது 38 WSWS-யிடம் கூறினார்; ’நான் 21 வருடமாக பணிப்புரிந்து வருகிறேன். நான் ரூ 5000  மாத (US $ 100)  சம்பளமாக பெறுகிறேன். என்னுடைய கணவருக்கு தொடர்ந்து வேலை கிடையாது. தினக்கூலிக்கு போனால் ஒரு நாளைக்கு சம்பளமாக 100 ரூபாய் பெறுவார். ஆனால் அதுவும் அடிக்கடி கிடையாது. ஆறு பேர் என்னுடைய சம்பளத்தை நம்பி உள்ளனர்.

‘’நான் போக்குவரத்துக்கு 20 லிருந்து 30 ரூபாய் செலவிடுவேன். தற்பொழுது கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பின்னர் ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவிடவேண்டியுள்ளது. வீட்டு வாடகைக்கு 2500 ரூபாய் (US $ 50) கொடுக்கிறேன். பால் விலை உயர்வால் எங்களுடைய குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்கமுடியாது. ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசியை குழந்தைக்கு உணவாக வழங்குகிறோம்.

‘’மக்கள் நலப்பணியாளர்களாகிய நாங்கள் கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்தை கண்காணிப்பதில் மட்டும் ஈடுபடவில்லை. ஆனால் இரவு தெரு விளக்கு எரிவது, குடி தண்ணீர், வீட்டு வரி, சிறு சேமிப்பு, சுகாதார திட்டம் கழிப்பறைவசதி திட்டம் போன்றவற்றை பராமரிக்கிறோம். இதனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது’’.

துளசி 40 வயது குறிப்பிடும்பொழுது ‘’வேலையை விட்டு நீக்கிய பின்னர் அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலை தேடினேன். எனது வயது அதிகமாகிவிடவே எந்த வேலையும் எடுக்க முடியவில்லை.’’

அரசியல் கட்சிகள் பற்றி கருத்து தெரிவித்த அவர் ‘’இரண்டு கட்சிகளையும் வெறுக்கிறேன். ஏனென்றால் முந்தைய அரசாங்கம் நிரந்தர பணி நியமனம் வழங்கியிருந்தால் இந்த நிலைமை தற்பொழுது வந்திருக்காது’’ என்றார்.

‘’அரசாங்கம் மாற்றம் அடைந்த பின்னரும் விலைவாசி குறையவில்லை. நான் வாங்கும் குறைந்த சம்பளத்தில் இரண்டு வேலை உணவை அருந்துவது கடினமாக உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி கிடையாது.

‘’நாங்கள் வேலையை விட்டு நீக்கிய பின்னர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை சென்று பார்ப்பதற்கு கூட பண வசதி கிடையாது. நீதிமன்றங்கள் தீர்ப்பு உடனடி வழங்குவது என்பது அரிதான ஒன்றுதான். அப்படி தீர்ப்பு வழங்கினாலும் மாநில அரசாங்கம் மேல்முறையீடு செய்து வழக்கை நீடித்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுகின்றனர். சில நேரங்களில் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று பங்குபெறக்கூட பணம் இல்லாமல் கலந்து கொள்ள முடியாது அவஸ்தைக்குள்ளாகிறோம். எவ்வாறாயினும் நாங்கள் உறுதியுடன் இறுதி வரை போராடுவோம்’’.