WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
மேர்க்கெலும் சார்க்கோசியும் ஒரு சிக்கன ஐரோப்பாவிற்கு
திட்டமிடுகின்றனர்
By Peter Schwarz
7 December 2011
use this version to print | Send
feedback
நிதியச் சந்தைகளில் யூரோ பற்றிய நம்பிக்கையை
மீட்பதற்காக திங்களன்று ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலே
மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் ஒரு
கூட்டுத்திட்டத்தை
முன்வைத்தனர்.
இது இன்று அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும்
அனுப்பி வைக்கப்படும். இது பற்றி வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில்
நடக்க இருக்கும் நாடுகள், அரசாங்கங்களின் தலைவர்களுடைய
உச்சிமநாட்டில் முடிவு எடுக்கப்படக்கூடும்.
“இந்த
உச்சிமாநாட்டில் ஒரு முடிவை எப்படியும் கொண்டுவருவதில் நாங்கள்
உறுதியாக இருக்கிறோம்”
என்று சார்க்கோசி வலியுறுத்தினார்.
இத்திட்டத்தில் இரண்டு கூறுபாடுகள் உள்ளன.
முதலாவதாக, இது சர்வதேச முதலீட்டாளர்கள் இனி ஒரு கடன்பட்ட
யூரோப்பகுதி நாட்டின் கடன் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள
வேண்டியதில்லை. முதலீட்டாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணத்தில்
50% தள்ளுபடி என்று கிரேக்கத்தில் இருந்தது போன்ற கடன்
“தள்ளுபடி”,
இனி நடக்காது என்று மேர்க்கலும் சார்க்கோசியும்
உறுதியளித்தனர்.
இரண்டாவதாக, இது யூரோப்பகுதி நாடுகளை மிக
உறுதியான வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்களை அறிமுகப்படுத்த கட்டாயப்படுத்தும். இதனால்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் மேல்
ஆண்டு வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை அதிகமாக இருக்கும் நாடுகள் தானியக்க
முறையில் தண்டனைக்கு உட்படும். 17 யூரோ நாடுகளும்
அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படும் முறையில் ஜேர்மனிய
முன்மாதிரியில் சமப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்
திட்டம் ஒன்றை சுமத்தும் (“தங்க
விதி”).
இது ஐரோப்பிய நீதிமன்றத்தினால் கண்காணிக்கப்படும்.
இதைத்தவிர, தற்காலிக
ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பிற்கு
-EFSF-
பதிலாக
ESM
என்னும் ஒரு நிரந்தர ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு
அமைப்பு என்பது ஓராண்டிற்குள் 2012 கடைசிக்குள்
கொண்டுவரப்படுவதற்கு சட்டம் இயற்றப்படும்.
இன்னும் கடுமையான வரவு-செலவுத்
திட்ட கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கு, மேர்க்கெலும்
சார்க்கோசியும் ஐரோப்பிய உடன்பாடுகளை மார்ச் 2012க்குள் மாற்ற
விரும்புகின்றனர். முடிந்தால், அவர்கள் இதை ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளின் வடிவமைப்பிற்குள் கொண்டுவர
விரும்புகின்றனர். ஆனால் பிரிட்டன் போன்ற நாடுகள் இதை
எதிர்த்தால், அவர்கள் இதைத் தனியாகச் செய்யும் வாய்ப்பையும்
ஒதுக்கவில்லை.
“அப்பொழுது
நாம் 17 நாடுகளிடையே ஓர் உடன்பாட்டைக் காண்போம், பின்னர்
சேரவிரும்பும் நாடுகள், விருப்பப்படி சேரட்டும்”
என்று சார்க்கோசி அச்சுறுத்தியுள்ளார்.
இந்த பிரெஞ்சு-ஜேர்மனிய திட்டம் சர்வதேச
சந்தையின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது. அதிக கடன்பட்டுள்ள
யூரோப்பகுதி நாடுகள் பொது மக்கள் இழப்பில் தங்கள் வரவு-செலவுத்
திட்டங்களை சமப்படுத்த வேண்டும், எந்த அபாயத்திலிருந்தும்
முன்பு அதிக வட்டிவிகிதங்களினால் அவை இலாபங்கள்
பெற்றிருந்தாலும்கூட தனி முதலீட்டாளர்கள் விலக்கு அளிக்கப்பட
வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.
கிரேக்கத்தை பொறுத்தவரை, சான்ஸ்லர் மேர்க்கெல்
தனி முதலீட்டாளர்கள் ஒரு கடன்
“தள்ளுபடியை”
ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது
வங்கிகள்மீது கொண்டுள்ள விரோதப் போக்கினால் அல்ல, ஆனால்
ஜேர்மனிக்கு அது எளிதாக இருக்கும் என்பதாலாகும். மேர்க்கெலும்
சார்க்கோசியும் ஓராண்டிற்கு முன் யூரோவை மீட்கும் முந்தைய
திட்டத்திற்கு உடன்படுவதற்காக, பிரான்சின் சிறுநகரான டோவில்
இல் கூடியபோது, இத்திட்டம் குறித்து மேர்க்கெலின் கருத்துதான்
வெற்றி பெற்றது.
இதை எதிர்கொள்ளும் வகையில் ஐரோப்பிய அரசாங்கப்
பங்குப்பத்திரங்களின் வட்டி விகிதங்களை மிகப் பெரிதாக
உயர்த்திய வகையில் ஏற்றம் கொடுத்தன. இது ஒவ்வொரு நாடாக யூரோ
மீட்பு வசதியைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தியது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் பிரதிநிதி கடன்
“தள்ளுபடியில்”
தனியார் பங்கு பெற்றது
“பெரும்
தவறு”
என்றார். ஏனெனில் முதலீட்டாளர்கள் தாங்கள்
யூரோப் பகுதி நாடுகளுக்குக் கொடுத்த கடனை இனி திரும்பப்
பெறமுடியாது.
இப்பொழுது மேர்க்கெல் வழிவிட்டு மற்ற நாடுகளில்
தனி முதலீட்டாளர்கள் தள்ளுபடியில் பங்கு பெறுவதை
ஒதுக்கிவிட்டார். இப்படித் தான் மாறியதை நியாயப்படுத்தும்
வகையில்,
“யூரோக்
கடன்கள் உலகில் மற்ற பத்திரங்களவிட குறைந்த பாதுகாப்பைக்
கொண்டிருக்க கூடாது”
என்று கூறினார்.
தன் பங்கிற்கு சார்க்கோசி பற்றாக்குறை வரம்பை
மீறும் நாடுகளுக்கு தானியக்க அபராதங்கள் குறித்துக் கருத்தை
மாற்றிக் கொண்டார். டோவில் இல் அவர் அத்தகைய அணுகுமுறையை
நிராகரித்திருந்தார். ஏனெனில் அது அரசாங்கங்கள் பொருளாதார
மாற்றங்கள் அல்லது சமூக அழுத்தங்களுக்கு ஏற்ப நிதிய உத்திகளைக்
கையாள இயலாமல் செய்துவிடும், தானியக்க அபராதங்கள் மற்றும் ஒரு
“தங்க
விதி”
என்பது கடுமையான மந்த நிலை மற்றும் சமூக
அமைதியின்மையை ஏற்படுத்தினாலும் அவற்றை பொதுச் செலவுகளில்
பாரிய வெட்டுக்களை ஏற்படுத்த வைக்கும்.
செவ்வாயன்று மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியின்
திட்டங்களுக்கு நிதியச் சந்தைகள் நேரிய விடையிறுப்பைக்
கொடுத்தன. இத்தாலிய மற்றும் ஸ்பெயின் அரசாங்க
பங்குப்பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைந்து,
பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. ஆனால் உயர்மட்ட நிதி
அதிகாரிகளை பொறுத்தவரை, திட்டம் போதியஅளவானதாக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின்
லகார்ட் இத்திட்டம் குறித்து வாஷிங்டன் ஐரோப்பிய
கல்விக்கூடத்தில் ஓர் உரை நிகழ்த்துகையில்
“மிக
முக்கியமானது”,
“ஆனால்
இது போதாது”
என்று குறிப்பிட்டார்.
“முழு
நிலைமையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சந்தைகளில்
நம்பிக்கை மீள்வதற்கு இன்னும் அதிகம் தேவை”
என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
செவ்வாயன்று, தரம் நிர்ணயிக்கும் நிறுவனமான
Standard & Poor’s,
வரவிருக்கும் ஐரோப்பிய உச்சிமாநாட்டின்மீது அழுத்தத்தை
அதிகரிக்கும் வகையில், ஜேர்மனி உட்பட, அனைத்து யூரோ நாடுகளின்
தரத்தையும் குறைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில்
பொருளாதார வலிமை பெற்ற நாடுகள் உயர்மட்ட
“AAA”
தரத்தை இழந்தால், அது யூரோ மீட்பு நிதியின்
செலவினங்களை அதிகரித்து, கடன் நெருக்கடிகுறித்து முன்னதாக
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகள்மீதும்
கேள்விக் குறியை சுமத்திவிடும்.
முக்கிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
Standard & Poor’s
இன் செயல் குறித்து சீற்றம் கொண்டனர் என்பது கண்கூடு. இது
அமெரிக்க நிதிய நலன்களின் குரல் என்று அவர்கள் கருதுகின்றனர்.
யூரோக் குழுவின் தலைவர்
Jean-Claude Juncker, Standard & Poor’s
இன் முடிவு
“தங்கள்
வரவு-செலவுத்திட்ட
பற்றாக்குறைகளை குறைக்க முற்படும் எல்லா நாடுகளுக்கும்
கொடுக்கப்படும் வீழ்த்திவிடும் தாக்குதல்”
என்றார். அது
“நியாயமற்றது”,
“முற்றிலும்
மிதமிஞ்சியது”
என்று லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி கூறினார். ஒரு முக்கிய
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்பு இத்தகைய கருத்து
வெளிவந்துள்ளது குறித்துத் தான்
“வியப்பு
அடைந்துள்ளதாகவும்”
அவர் கூறினார்.
தரம் நிர்ணயிக்கும் அமைப்பின் இந்த அறிவிப்பை
எதிர்கொள்ளும் வகையில் மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி இருவரும்
நிதியச் சந்தைகளுக்கு தங்கள் முழு விசுவாசத்தை உறுதியளித்தனர்.
“முழு
ஒற்றுமையுடன் பிரான்ஸும் ஜேர்மனியும் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும், தங்கள் பங்காளிகள் மற்றும் ஐரோப்பிய
நிறுவனங்களின் பிணைப்புடன் யூரோப் பகுதியின் உறுதிப்பாட்டை
நிலைப்படுத்த எடுக்கும்”
என்று ஒரு கூட்டறிக்கையில் அவர்கள்
எழுதியுள்ளனர்.
ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய
தொழிலாள வர்க்கம் வெற்றிகண்டுள்ள அனைத்து சமூக நலன்களும்
அழிக்கப்படும் வரை நிதியச் சந்தைகள் அமைதியாக இருக்காது.
அவர்களுடைய கருத்தின்படி, ஐரோப்பாவில் நலன்களும்
ஓய்வூதியங்களும் இன்னமும் மிக அதிகமாக உள்ளன; ஊதியங்கள் மிக
அதிகம், பணி நிலைமைகள் மிகவும் வளைந்து கொடுக்காத தன்மையில்
உள்ளன; சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி மிகச் செலவுடையவை,
பொதுத்துறை பெரிதும் வீங்கியுள்ளது. அவற்றின் இலாபத்திற்கான
தீராப்பசியை தீர்க்காத எந்த நடவடிக்கையும் குறைக்கப்பட
வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும்.
இவை நோக்கம் பற்றிய அறிக்கைகளுடன் திருப்தி
அடையவில்லை, அவற்றிற்கு நடவடிக்கை தேவை. கிரேக்கத்திலும்
இத்தாலியிலும் உள்ள தொழில்நுட்பவாதிகள் தலைமையிலான
அரசாங்கங்கள் இதை இப்பொழுது செய்யத் தொடங்கிவிட்டன. இந்த மாதம்
முன்னதாக, கிரேக்க அரசாங்கம் முதலில் 16,000 பொதுத்துறை
ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அரசாங்கத்திற்கு சொந்தமான
நிறுவனங்களில் ஊதியங்களையும் கடுமையாகக் குறைத்து விட்டது.
வரவிருக்கும் நாட்களில் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சிக்கன
வரவு-செலவுத்திட்ட
சமர்ப்பிக்கப்படும். இத்தாலிய அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக்களை
விரைந்து செயல்படுத்தியுள்ளது; அதன் முன்னோடி அரசாங்கங்கள்
அவற்றை செயல்படுத்துவதில் 20 ஆண்டுகளாக வெற்றிபெற முடியவில்லை.
ஐரோப்பா பெருகிய முறையில் 1930களைத்தான்
நினைவிற்குக் கொண்டுவருகிறது. அப்பொழுதும் இதேபோன்ற கடுமையான
சிக்கன நடவடிக்கைகள் வெகுஜன வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போரை
விளைவித்தன. சில முதலாளித்துவ அரசியல் வாதிகளும்,
விமர்சகர்களும் கூட இப்பொழுது இத்தகைய இணைய நிலைபற்றிப்
பேசுகின்றனர்.
“1930களின்
நீண்ட நிழல்கள்”
என்ற தலைப்பில் பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரையாளர்
கிடியன் ராஷ்மன், நவம்பர் 28ல் எழுதினார்:
“ஐரோப்பாவில்
தீவிர பொருளாதார நெருக்கடி மிகக் கடுமையாக உள்ளது.
அரசாங்கங்களின் கடன் திருப்பித்தரா தன்மை, ஐரோப்பிய ஒற்றை
நாணயத்தின் முறிவு ஆகிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிவிட்டன.
அவற்றுடன், வங்கிகள் சரிதல், பொதுமக்கள் பீதி, ஆழந்த
மந்தநிலைகள் மற்றும் வெகுஜன வேலையின்மை ஆகிய அச்சறுத்தல்களும்
உள்ளன... 1930 களின் படிப்பினை ஓர் உலக மந்தநிலை ஜனநாயகங்களை
வலுவிழக்கச் செய்யும், புதிய தீவிரவாத அரசியல் சக்திகளின்
எழுச்சிக்கு வழிவகுக்கும், மற்றும் அதையொட்டி சர்வதேச மோதல்கள்
என்ற அபாயத்தையும் அதிகரிக்கும்.”
92 வயதான முன்னாள் ஜேர்மன் சான்ஸ்லர் ஹெல்முட்
ஷ்மித் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட அண்மைய சமூக ஜனநாயக்
கட்சி மாநாட்டில் மீண்டும் ஐரோப்பா ஆயுத மோதல்களில் ஈடுபடும்
ஆபத்து குறித்துப் பேசியுள்ளார்.
“உலகளாவிய
வங்கித்துறை செல்வாக்குக்குழு”
மற்றும்
“ஐரோப்பா,
அமெரிக்காவிலுள்ள சில ஆயிரம் நிதிய வணிகர்கள்”
இன்னும் தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்கள்
ஆகியவை அரசியல் அளவில் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ள
ஐரோப்பிய அரசாங்கங்களை எதிர்த்து நிற்பது குறித்து அவர்
கடுமையாக தாக்கினார்.
ஆனால் மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி பற்றிய
விமர்சிப்போரின் பதில்களில் நிதியச் சந்தைகள் கட்டுப்பாடு,
ஐரோப்பிய பத்திரங்கள், வரம்பற்ற ஐரோப்பிய மத்திய வங்கியின்
கடன்கள் போன்றவற்றில் நெருக்கடியை பற்றி மிக அதிகமாக
கூறுகின்றன அல்லது நடைமுறையில் இருக்கும் பொருளாதார, அரசியல்
உண்மைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
ஜேர்மனிய சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும்,
அத்துடன் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்களும் யூரோ மீது
அழுத்தத்தை அகற்றும் வகையில், நிதியச் சந்தைகளில் வெள்ளமென
புதிய பணங்கள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கொடுக்கப்பட
வேண்டும், யூரோப்பத்திரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று
அழைப்பு விடுகின்றன.
ஆனால் இத்தகைய போக்கைத்தான் அரசாங்கங்கள்
ஏற்கனவே 2008 நிதியச் சரிவின்போது எடுத்தன. அதுதான் தற்போதைய
நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. டிரில்லியன் கணக்கான
நிதியை அரசாங்கக் கருவூலங்களில் இருந்து வங்கிகளுக்கு
மாற்றியது, தற்போதைய கடன் நெருக்கடிக்கு கணிச அளிப்பைக்
கொடுத்துள்ளது. இப்பணத்தில் பெரும்பாலானது ஊக நடவடிக்கைகளுக்கு
சென்றுள்ளது, இப்பொழுது யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
எதிராக இயக்கப்படுகிறது.
நிதியச் சந்தைகளை கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவராமல், சமூகத்தின் உயர்மட்டத்தில் சேகரிக்கப்பட்டுவிட்ட
அவற்றின் மாபெரும் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாவிட்டால்,
இந்த நெருக்கடிக்கு தீர்வு ஏதும் இல்லை. ஆனால் ஐரோப்பிய
நடைமுறைக் கட்சிகள் எதுவும் இப்போக்கை எடுக்க விரும்பவில்லை,
அவற்றால் முடியாததும்கூட. அவை அனைத்தும் முதலாளித்துவ சொத்து
உறவுகள் மற்றும் அத்துடன் தொடர்புடைய சலுகைகளுடன் நெருக்கமாகப்
பிணைந்துள்ளவை.
பழைமைவாதிகள், சமூக ஜனநாயக வாதிகள்,
பசுமைவாதிகள் மற்றும்
“இடது”
கட்சிகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு மாற்றீடு
இல்லை என்பதில் உடன்படுகின்றனர். பொதுப் பணிகள் மற்றும்
பொருளாதார ஊக்கத்திட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் 1930களில்
பிராங்ளின் டி.ரூஸ்வெல்ட்டினால் செயல்படுத்தப்பட்டவை போன்றவை
இப்பொழுதெல்லாம் விவாதிக்கப்படுவதில்லை.
சர்வதேச முதலாளித்துவம் ஒரு ஆழமான
நெருக்கடியில் உள்ளது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச
திட்டத்தின்கீழ் அணிதிரட்டப்படுவதன் மூலம்தான் இது தீர்க்கப்பட
முடியும். முக்கிய நிதிய மற்றும் தொழிதுறை நிறுவனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவரப்பட்டு, அவற்றின் மகத்தான இருப்புக்கள் உயர்மட்ட ஒரு
சதவிகிதத்தினரை செல்வக் கொழிப்பு ஆக்குவதற்கு பதிலாக சமூகத்
தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுத்த வேண்டும். இதற்கு தொழிலாளர்
அரசாங்கமும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் நிறுவப்படுதலும்
தேவையாகும். |