WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்திய அரசாங்கம் சில்லறை வணிகத் துறை மறுகட்டமைப்பை
நிறுத்தி வைக்கிறது
By Deepal Jayasekera
8 December 2011
use this version to print | Send
feedback
சில்லறை
வணிகத்
துறையை
வெளிநாட்டு
சர்வதேச
நிறுவனங்களுக்கு
திறந்துவிடும்
அதன்
முக்கிய
கொள்கை
முடிவை
இந்திய
அரசாங்கம்
பரந்த
எதிர்ப்புக்கள்
மற்றும்
சில
கூட்டணிப்
பங்காளிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் பாராளுமன்ற
நடவடிக்கைகள்
தடுப்பிற்கு
உட்பட்ட
நிலையில்,
தற்காலிகமாக
நிறுத்தி
வைக்கும்
கட்டாயத்திற்கு
உள்ளாயிற்று.
ஓர்
அனைத்துக்
கட்சி
கூட்டத்தை
தொடர்ந்து,
நிதி
மந்திரி
பிரணாப்
முகர்ஜி
புதன்
அன்று
இத்திட்டம்
“பல
பங்குதாரர்களுடன்
கலந்து
ஆலோசிக்கப்படும்
வரை”
நிறுத்தி
வைக்கப்படும்
என்று
அறிவித்தார்.
இந்த
அறிவிப்பு
எதிர்க்கட்சிகளாலும் அரசாங்கத்தின்
முக்கிய
நட்புக்கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ்
(TMC),
திராவிட
முன்னேற்றக்
கழகத்தாலும்
(DMK)
வரவேற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து
அவை
பாராளுமன்றத்தை
தடைக்குட்படுத்துவதை
நிறுத்தின.
எதிர்ப்பை
எதிர்பார்த்து,
நவம்பர்
25ம்
தேதி
மந்திரிசபை முடிவு
பல
நிபந்தனைகளால்
நெருக்கடிக்கு
உட்பட்டிருந்தது.
இது
ஒற்றை
வணிக
முத்திரை கொண்ட சில்லறை
விற்பனையாளர்களான
Nike
போன்றவற்றை
100
சதவிகித
வெளிநாட்டு
உரிமை
கொண்ட
வணிகங்களை
நிறுவ
அனுமதித்தது,
ஆனால்
டெஸ்கோ
சிறப்புப்
பல்பொருள்
அங்காடிகள் போன்ற பன்முக-வணிக
முத்திரை
கொண்ட
சில்லறை
விற்பனையாளர்கள் உள்ளூர்
பங்காளியை
கொண்டிருக்கவேண்டும்
என்றும்
வெளிநாட்டு
உரிமை
51%
தான்
இருக்கலாம்
என்றும்
அனுமதித்தது.
இதைத்
தவிர
பன்முக
வணிக
முத்திரை
உடைய
சில்லறை
விற்பனையாளர்கள்
தங்களுக்குத்
தேவையான
பொருட்களில்
கிட்டத்தட்ட
30%
த்தை
சிறிய
மற்றும் மத்தியதர அளவிலான உள்ளூர்
விநியோகஸ்தர்களிடம்
இருந்து
வாங்க
வேண்டும்,
குறைந்தபட்சம்
அடுத்த
ஐந்து
ஆண்டுகளில்
அமெரிக்க
100
மில்லியன் டாலரை
முதலீடு
செய்ய
வேண்டும்;
அதில்
பாதிக்கும்
மேலாக
குளிரூட்டிய சேமகம்,
பொதி
கட்டுதல்,
திட்டமிடல் ஆகியவற்றிற்கு
செலவழிக்க
வேண்டும்.
மேலும்
அச்செயற்பாடுகள்
ஒரு
மில்லியன்
மக்களுக்கு
மேல்
வாழும்
நகரங்களுடன்
நிறுத்திக்
கொள்ளப்பட
வேண்டும்.
அரசாங்கமும்,
வெளிநாட்டு
நிறுவனங்களும்
இந்திய
உற்பத்தியாளர்கள்
மற்றும்
நுகர்வோருக்கு
“சீர்திருத்தத்தின்”
நலன்கள்
பற்றி
சிறப்பாகக்
கூறிய
ஒருங்கிணைந்த
பிரச்சாரத்தை
நடத்தினாலும்,
இந்த
முடிவு
தாங்கள்
அழிந்துவிடுவோம்
என்ற
அச்சத்திற்கு
உட்பட்ட
சில்லறை
வணிகர்களிடம்
பெரும்
எதிர்ப்பைத்
தோற்றுவித்தது.
நடவடிக்கையை
எதிர்த்து,
டிசம்பர்
1ம்
தேதி
நாடு
முழுவதிலும்
உள்ள
வணிகர்கள்
வேலைநிறுத்தம்
செய்தனர்.
மற்றொரு
நாடுதழுவிய
போராட்டம்
டிசம்பர்
14ம்
திகதி
அன்று
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
பெருவணிகக்
குழுக்கள்,
நிதியப்
பகுப்பாய்வாளர்கள்
மற்றும்
வெளிநாட்டு
நிறுவனங்கள்
ஆகியவை
இப்படி
நிறுத்தி
வைத்துள்ளதை
இன்னும்
பரந்த
சந்தைச்சார்பு
வாய்ப்பு
இழக்கப்பட்டுவிட்டது
என்று
கண்டித்துள்ளன.
பிரதம
மந்திரி
மன்மோகன்
சிங்
ஏற்கனவே
பெருநிறுவன
உயரடுக்கில்
இருந்து
பொருளாதார
மறு
கட்டமைப்பை
தாமதப்படுத்துவதினால்
அழுத்தம்
கொண்டுள்ளார்.
இதன்
விளைவாக,
சில்லறை
வணிகச்
சீர்திருத்தம்
ஆளும்
காங்கிரஸ்
கட்சிக்கு
ஒரு
முக்கிய
பரிசோதனை
என்று
கருதப்பட்டிருந்தது.
இந்திய
வணிகத்,
தொழில்துறைக்
கூட்டமைப்பின்
தலைவரான
ஹர்ஷ்
மாரிவாலா
இப்படிப்
பின்வாங்கியுள்ளது
“பெரும்
ஏமாற்றத்தை
தருகிறது”,
“மிகப்
பிற்போக்குத்தனமானது”
என்று
அறிவித்தார்.
இந்திய
தொழில்துறைக்
கூட்டமைப்பின்
பொது
இயக்குனரான
சந்திரஜித்
பானர்ஜி
தற்காலிக
நிறுத்தம்
“ஒரு
முற்றான கைவிடப்படல்”
என்பதை
குறிக்காது என
நம்புவதாகத்
தெரிவித்தார்.
இங்கிலாந்தில்
உள்ள
டெஸ்கோ
கூறியது:
“வெளிநாட்டு
நேரடி
முதலீடு
பற்றிய
முடிவை
ஒத்திவைத்துள்ளது,
இந்திய
உற்பத்தியாளர்கள்,
விவசாயிகள்
மற்றும்
நுகர்வோருக்கு
ஓர்
இழக்கப்பட்டுவிட்ட
வாய்ப்பு.”
ஓக்சஸ்
முதலீடுகள்
நிறுவனத்
தலைவர்
சுர்ஜித்
பல்லா
கசப்புடன்
வாஷிங்டன்
போஸ்ட்டிடம்
“இத்தகைய
அரசியல்
தற்கொலைக்கு
இணையானதாக
நான்
எதையும்
காணவில்லை.
அரசாங்கத்தின்
நம்பகத்தன்மை
பூஜ்யத்திற்கும்
குறைந்து
செல்ல
முடியும்
என்றால்,
இப்பொழுது
அதுதான்
நடந்துள்ளது.
பிரதம
மந்திரி
மன்மோகன்
சிங்
எதிர்க்கட்சிகளால்
மட்டும்
இன்றி,
தன்
கட்சியினராலேயே
குழிபறிக்கப்பட்டுள்ளார்
என்பதைத்தான்
இது
காட்டுகிறது”
எனக்கூறினார்.
இந்தக்
கடைசிக்
கருத்து
பெருவணிகத்தின்
ஒரு
பிரிவு
அரசியல்
உறுதியற்ற
தன்மைக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம் அல்லது
சிங்
அரசாங்கத்தை
வீழ்த்தும்
நடவடிக்கையைக்
கூட
ஆரம்பிக்கலாம்
என்பதைத்தான்
குறிக்கிறது.
அப்படி
இருந்தாலும்,
இல்லாவிடினும்,
ஆளும்
கூட்டணி
கணிசமாக
வலுவிழந்துள்ளது
என்பது
உண்மை.
தங்கள்
சமூகத்
தளத்தின் மீது
அரசியல்
தாக்கம்
குறித்துப்
பெரும்
பீதி
அடைந்த
மேற்கு
வங்கத்தின்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும்
தமிழ்நாட்டில்
திராவிட முன்னேற்ற கழகமும் இம்முடிவு
குறித்து
எதிர்ப்புத்
தெரிவிக்கும்
கட்டாயத்திற்கு
உட்பட்டன.
அதேநேரத்தில்
அரசாங்கத்திடம்
இக்கட்சிகள்
கூட்டணியில்
இருந்து
தாங்கள்
விலகவில்லை
என்று
உறுதியளித்தன.
சிங்கின்
காங்கிரஸ்
கட்சிக்குகள்ளேயே
எதிர்ப்பு
வெளிப்படுத்தப்பட்டது.
உத்தரப்
பிரதேசத்தில்
பரேலி
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
வரவிருக்கும்
மாநிலத்
தேர்தல்களில்
கட்சிக்கு
வாய்ப்புக்கள்
பாதிக்கப்படும்
என்ற
கவலையைத்
தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI),
இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி
(CPM)
எனப்படும்
இரு
ஸ்ராலினிசக்
கட்சிகளும்,
பாரதிய
ஜனதாக்
கட்சியுடன்
சேர்ந்து
உடனடி
இப்பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி தங்கள்
சரிந்து
கொண்டிருக்கும்
அரசியல்
செல்வாக்கை
மாற்ற
முற்பட்டன.
இவை
அனைத்தும் வார்த்தைஜாலத்துடன் வெளிநாட்டு
முதலீடு
குறித்து
தங்கள்
எதிர்ப்பை
அறிவித்து,
இந்திய
மக்களைப்
பாதுகாப்பதாக
உறுதிமொழி
அளித்தன.
இத்தகைய
பின்வாங்குதலை
அடுத்து,
பாரதிய
ஜனதாக்
கட்சியின்
பாராளுமன்றத்
தலைவர்
சுஷ்மா
ஸ்வராஜ்
“இது
ஜனநாயகத்திற்கு
ஒரு
வெற்றியாகும்”
என்று
அறிவித்தார்.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
தலைவர்
குருதாஸ்
தாஸ்குப்தா,
இம்முடிவு
“கிட்டத்தட்ட
பின்வாங்கல்”
என்றும்
“ஒரு
நோக்கத்திற்காகப்
போராடும்
ஜனநாயக
சக்திக்கு
ஒரு
வெற்றி”
என்னும்
அறிவித்தார்.
ஆனால்
இத்தகைய
“எதிர்ப்பிற்கு”
எந்த
நம்பிக்கையும் வைக்கவேண்டியதில்லை.
இக்கட்சிகள்
எதுவுமே
அரசாங்கத்தின்
திட்டங்களுக்கு
கொள்கையளவு
வேறுபாடும்
கொண்டிருக்கவில்லை,
அனைத்துமே
இதேபோன்ற
சந்தைச்சார்பு
நடவடிக்கைகளைப்
பதவியில்
இருக்கும்போது
நடத்தியுள்ளன.
1998ல்
அரசாங்கத்தில்
இருக்கும்போது,
பாரதிய
ஜனதாக்
கட்சி
வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு
சில்லறை
வணிகத்
துறையைத்
திறந்து
விட
முயற்சித்தது.
ஆனால்
பரந்த
மக்கள்
எதிர்ப்பை
ஒட்டி
அது
தோல்வியில்
முடிந்தது.
2004
தேர்தலில்
இக்கட்சி
தோற்றதற்கு
முக்கிய
காரணம்
அதன்
சந்தைச்
சார்பு
செயல்பட்டியல்தான்.
இதேபோல்
இந்த
ஆண்டு
மேற்கு
வங்க
மாநிலத்
தேர்தலில்
இந்திய
மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி
அதன்
வணிக
சார்பு
நடவடிக்கைகளுக்கு
ஆழ்ந்த
எதிர்ப்பை
ஒட்டி
பதவியை
இழந்தது. அதன்
நடவடிக்கைகளில்
பெருநிறுவனங்களுக்கு
நிலம்
ஒதுக்கப்படுவதற்காக
இரக்கமற்ற
முறையில்
விவசாயிகளை
அவர்கள்
நிலங்களில்
இருந்து
அகற்றியதும்
அடங்கியிருந்தது.
அரசாங்கமும்
பெருவணிகமும்
சில்லறை
வணிகக்
கொள்கைக்கு
ஆதரவு
தரும்
முயற்சியில்
இதையொட்டி
10
மில்லியன்
வேலைகள்
தோற்றுவிக்கப்படும்,
விவசாயிகள்
நல்ல
விலைகளை
தம்
விளைபொருட்களுக்கு
பெறுவர்,
வீணாதல்
தவிர்க்கப்படுவதால்
நுகர்வோர் பொருட்களை
மலிவாகப்
பெறுவர்
என்று
கூறின.
எதிர்க்கட்சிகள்
மில்லியன்
கணக்கான
சில்லறை
வணிகர்களின்
முறையான
அச்சங்களைப்
பயன்படுத்தும்
முறையில்,
மற்றும்
தேசிய
பொருளாதாரம்,
காப்புவரிகள்
முறை
ஆகியவற்றின்
அடிப்படையில்
வெளிநாட்டு
முதலீட்டைத்
தடை
செய்வதுதான்
தீர்வு
என
வலியுறுத்தின.
இந்த
“விவாதத்தில்”
இருபிரிவினருமே கூறாதது
இதுதான்:
விவசாயிகள்,
சிறு
வணிகர்கள்
மற்றும்
தொழிலாள
வர்க்கம்
முகங்கொடுக்கும்
பொருளாதார,
சமூக
நெருக்கடி
தோற்றுவிட்ட
சமூக
ஒழுங்கு முறையான இலாப
முறையின்
தோல்வியின்
விளைவுதான் என்பதை கூறவில்லை.
டெஸ்கோ,
வால்-மார்ட்,
கார்பூர்
மற்றும்
அவற்றின் சாத்தியமான
இந்திய
பங்காளிகள்
சாதாரண
உழைக்கும்
மக்கள்
மீது
கொண்டுள்ள
அக்கறையினால்
ஒன்றும்
பெரும்
அங்காடிச்
சங்கிலிகளை
நிறுவுவதற்கு
வரிசையில்
நிற்கவில்லை. மாறாக
மிகப்
பெரிய,
அதிகம்
பயன்படுத்தப்படாத
இந்தியச்
சில்லறை
சந்தையில்
அதிக
இலாபம்
உள்ளது
என்று
அவர்கள்
கருதுவதைத்தான்
பயன்படுத்த
முற்பட்டுள்ளன.
ஒரு
மதிப்பீடு
பெரிய
அங்காடிகள்
பிரிவு
இந்தியாவில்
அமெரிக்க
26
பில்லியன் டாலரில்
இருந்து
314
பில்லின் டாலருக்கு
அடுத்த
25
ஆண்டுகளில்
ஏற்றம்
பெறலாம்
என்று
குறிப்புக்
காட்டுகிறது.
அதே
நேரத்தில்
நேரடி
வெளிநாட்டு
முதலீட்டை
இந்திய
சில்லறை
வணிகப்
பிரிவில்
தடுப்பது
விவசாயிகள்,
சிறு
வணிகர்கள்
மற்றும்
தொழிலாள்கள்
முகங்கொடுக்கும்
பெரும்
பிரச்சினைகளை
தீர்க்க
ஏதும்
செய்யாது.
இந்தியப்
பொருளாதாரம்
ஏற்கனவே
உலகப்
பொருளாதார
நெருக்கடிக்கு
இடையே
தாமதப்படுத்தப்பட்டுவிட்டது,
உலக
முதலீட்டாளர்கள்
சிங்
அரசாங்கம்
அவர்களுடைய
கூடுதல்
சந்தைச்
சார்பு
மறுகட்டமைப்பு
தேவைகளை
நிறைவு
செய்ய
இயலாது
என்ற
முடிவிற்கு
வந்தால்,
இன்னும்
பாதிப்பை
அடையும்.
சில்லறை
வணிகத்
துறையை
திறக்கும்
முடிவை
நியாயப்படுத்திய
வகையில்,
பிரதம
மந்திரி
சிங்
கடந்த
மாதம்
பாராளுமன்றத்தில்
எச்சரித்தார்:
“உங்களுக்கு
தெரிந்துள்ளபடி,
உலகப்
பொருளாதாரம்
தீவிர
இடர்களை
முகங்கொடுக்கிறது,
எமது
செயற்பாடுகளை
சரிவர
நிர்வகிக்கவில்லை
என்றால்,
நாமும்
சரிய
நேரிடும்.”
நிதியத்
துறையிலும்
வெளிநாட்டு
முதலீட்டிற்கு
ஊக்கம்
கொடுக்கும்
திட்டத்தை
அரசாங்கம்
கொண்டுள்ளது.
ஏற்கனவே
இது
ஓய்வூதியத்
துறையில்
26%
பங்கை
அனுமதிக்க
ஒப்புதல்
கொடுத்துள்ளது. அரசாங்க,
பெருநிறுவன
பங்குப்பத்திரங்களில்
வெளிநாட்டு
முதலீட்டு
வரம்பையும்
அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின்
சந்தைச்
சார்பு
செயற்பட்டியலை
எதிர்க்கையில்,
தொழிலாள
வர்க்கம்
அதன்
வர்க்க
நலன்களை
பிற்போக்குத்தன
தேசியவாதம்,
காப்புவரிக்
கொள்கைகள்
மூலம்
பாதுகாக்க
முடியாது.
வேலைகள்,
கௌரவமான
வாழ்க்கைத்
தரங்கள்
ஆகியவற்றிற்கு
போராடுவதற்கு,
தொழிலாளர்கள்
ஆளும்
வர்க்கத்தின்
அனைத்துப்
பிரிவுகளில் இருந்தும்
பிரித்துக்
கொண்டு
சுயாதீனமாக
திரண்டு,
முதலாளித்துவ
முறைக்கு
எதிரான
போராட்டத்தில்
அடக்கப்பட்டுள்ள
மக்களையும்
தங்களுக்குப்
பின்னே
நிற்குமாறு
ஈர்க்க
வேண்டும்.
அதற்கு
ஆசியா
மற்றும்
உலகம்
முழுவதும்
உள்ள
தொழிலாளர்களை நோக்கி ஒரு சோசலிச சர்வதேச
வேலைத்
திட்டத்தின்
அடிப்படையில் திரும்பவேண்டும். |