WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
West Bengal government orchestrates murder of top Maoist
leader
உயர்மட்ட மாவோயிச தலைவர் படுகொலை செய்யப்படலை
மேற்கு வங்க அரசாங்கம் ஒழுங்கமைக்கின்றது
By Deepal Jayasekera
5 December 2011
திட்டமிட்ட அரசியல் இரக்கமற்ற தன்மையைக்
காட்டும் வகையில், மேற்கு வங்கத்தின் முதல் மந்திரியும்,
வலதுசாரி திரிணாமூல்
[அடிமட்ட] காங்கிரஸ்
[TMC]
தலைவருமான மமதா பானர்ஜி தடைக்குட்பட்டுள்ள இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிச-CPI)
தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்.
பானர்ஜியும் அவருடைய திரிணாமூல்
காங்கிரஸ் உம் மேற்கு வங்கத்தின் ஸ்ராலினிச தலைமையிலான
முன்னாள் இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக பல மக்கள்
ஆதரவுடைய கிளர்ச்சிகளை மாவோயிஸ்ட்டுக்களுடன் இணைந்து
நடத்தியுள்ளன. ஆனால் இப்பொழுது திரிணாமூல்
காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கையில், எதிர்பார்த்தபடி
பானர்ஜி தன் முன்னாள் கூட்டு அமைப்புக்களுக்கு எதிராக நடந்து
கொள்கிறார்.
கிஷன்ஜி என்று அதிகமாக அறியப்பட்டிருந்த 58
வயதான மல்லோஜுலா கோடேஸ்வர ராவ் நவம்பர் 24ம் திகதி
பாதுகாப்புப் படைகளால் சட்டத்திற்கு புறம்பான கொலைத்
தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று சுட்டிக்காட்டும்
வகையிலுள்ள சூழ்நிலையில் கொல்லப்பட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(மாவோயிஸ்ட்டுக்கள்) யின் மூன்றாம் மூத்த தலைவர் எனக்
கருதப்படும் கிஷன்ஜி பாதுகாப்புப் படைகளுடன் நடத்திய 30 நிமிட
மோதலில் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால்
மனித உரிமைகள் அமைப்புக்கள், கிஷன்ஜியின் உறவினர்கள், மற்றும்
சில திரிணாமூல்
காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்ப்பாளர்களே
“உத்தியோகபூர்வ
விளக்கத்தில்”
உள்ள பல ஓட்டைகளை சுட்டிக் காட்டுகின்றனர்—மாவோயிசத்
தலைவரை கொன்ற தோட்டா அவருடைய தலைக்கு நேரே குறிவைக்கப்பட்டது
என்ற உண்மையில் தொடங்கும் பலவும் தெரியப்படுத்தப்படுகிறது.
ஜனநாயக உரிமைகள் ஒருங்கிணைப்பு அமைப்பின்
(CDRO)
செயலர்கள், கிஷன்ஜியின் பிரேதத்தை அது எரிக்கப்படுவதற்குமுன்
பார்த்தவர்கள் அவருடைய ஆடைகள் ஒப்புமையில் இரத்தகறையை
அதிகமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் உடல் முழுவதும் புது
வெட்டுக்கள், தீக்காயங்கள், தோலில் தழும்புகள் ஆகிவற்றைக்
கொண்டிருந்தன,
அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை இவை
குறிக்கின்றன என்று கூறுகின்றனர்.
இவற்றில் அவருடைய பாதங்களில் தீக்காயங்கள்,
ஒரு விரல் அகற்றப்பட்டது,
தொண்டையில் கத்திக் காயங்கள் இன்னும்
“அவருடைய
உடலின் முன்பகுதியில்
30
துப்பாக்கிக் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களுக்கும் மேல்”
ஆகியவை அடங்கும்.
மாவோயிஸ்ட்டுக்களால் ஆரம்பிக்கப்பட்ட
துப்பாக்கி மோதலில் மூன்று பிற எழுச்சியாளர்களும்
கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன. ஆனால்
அவர்கள் இறந்த உடல்கள் எதையும் காட்டவில்லை.
கடந்த வாரம் ஆயுதமேந்திய மோதல் நடந்ததாகக்
கூறப்படும் இடத்திற்குச் சென்ற ஜனநாய உரிமைகள் ஒருங்கிணைப்பு
அமைப்பின் உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள், ஒரு
துப்பாக்கிச் சண்டையும் நடந்ததற்கான தடயம் ஏதும் இல்லை என்று
கூறுகின்றனர்.
ஜனநாய உரிமைகள் ஒருங்கிணைப்பு அமைப்பின் உண்மை
அறியும் குழு உறுப்பினர் கௌதம் நவ்லேகா கிஷன்ஜியின் மரணத்தை
ஒட்டிய சூழ்நிலை
“ஆசாத்தை
ஒட்டிய சூழ்நிலையை அப்படியே ஒத்திருந்தன”
என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மாவோயிச
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(CPI
-Maoist)
உறுப்பினரான செர்குரி ஆசாத் ராஜ்குமார் ஜூலை
2010ல் பாதுகாப்பு படைகளால், கட்சியின் சார்பில்
எடுத்துரைப்பவராக மத்திய அரசாங்கத்துடன் சமாதான வழிவகைப்
பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
“இரு
தலைவர்களுமே சமாதானப் பேச்சுக்கள் அரசாங்கத்துடன்
நடைபெறும்போது கொல்லப்பட்னர். ஒரே வேறுபாடு ஆசாத்தின் உடலில்
ஒரு தோட்டா காய அடையாளம் இருந்தது, கிஷன்ஜியின் உடலில்
சித்திரவை அடையாளங்களும் உள்ளன”
கிஷன்ஜியின் மருமகனை அவருடைய உடலத்திற்கு அருகே
கொண்டு சென்ற புகழ் பெற்ற தெலுங்கு மொழிக் கவியும் ஒரு
தீவிரமான செயலருமான வரவர ராவ் நிருபர்களிடம் கூறினார்:
“கடந்த
43 ஆண்டுகளில் மறைமுகமான போலிக்கொலைகள்
(encounters)
என்ப்படுபவை பலவற்றை நான் கண்டுள்ளேன்,
ஆனால் இந்த உடலைப் போல் கண்டதில்லை
….
உடலில் காயமில்லாத பகுதி இல்லை.”
இந்தியாவின் பாதுகாப்புப் படைகள்,
மாவோயிஸ்ட்டுக்கள்,
காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் இந்திய அரச
எதிர்ப்பாளர்களுக்கு எதிராக
“மறைமுகமான
போலிக்கொலைகளை”
பயன்படுத்துவதில் இழிபுகழ் பெற்றவை ஆகும்.
பாதுகாப்புப் படைகள் எதிர்ப்பாளர்களை கைப்பற்றி உடனே
கொன்றுவிடுவர்;
பின் மறைமுகமான போலிக்கொலைகள் என்றழைக்கப்படும் துப்பாக்கிச்
சண்டைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டதாகக் கூறுவர்.
மேற்கு வங்க முதல் மந்திரி பானர்ஜி பலமுறையும்
ஆக்கிரோஷமாக கிஷன்ஜி கொலைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
நவம்பர்
27ம்
திகதி நடந்த கூட்டம் ஒன்றில் அவர் கிஷன்ஜியும் அவருடைய
சகாக்களும் சரணடையுமாறு கோரப்பட்டனர்,
ஆனால் மாறாக அவர்கள்
1,000
சுற்றுக்கள் தோட்டாக்களை பாதுகாப்புப் படையினர்மீது
செலுத்தினர் என்றார் அவர். “அதை
எதிர்ப்பதற்கும் நூற்றுக்கணக்கான நிரபராதியான கிராம மக்களைக்
காப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு வேறு மாற்றீடு ஏதும்
இல்லை.”
என்று பானர்ஜி கூறினார்.
பாதுகாப்புப் படைகளின் நடத்தை குறித்து
சந்தேகத்தை கிளப்பும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு
எதிராகவும் பானர்ஜி சாடினார்.
“மாவோயிஸ்ட்டுக்களால்
நிரபராதியான மக்கள் கொல்லப்படுகையில்…..
இவர்கள் எங்கே இருந்தனர்?”
என்றார்.
மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான ஒரு உடனடி
தாக்குதல் பானர்ஜி மற்றும் அவருடைய அரசாங்கத்தில் இருந்து
வரும் என்னும் பெருகிய அச்சுறுத்தல்கள் பலவாரமாக வந்ததை
அடுத்து கிஷன்ஜியின் மரணம் நிகழ்ந்துள்ளது.
2009
முதல் மேற்கு வங்கத்தின் ஜங்கள்மகால்
(காட்டுப்பகுதி
என்ற உண்மைப் பொருள்)
பகுதியில் வறிய பழங்குடி மக்களின் பிரிவுகள் சிலவற்றின்
ஆதரவுடன் மாவோயிஸ்ட்டுக்கள் ஒரு பரந்த எழுச்சியை நடத்தி
வருகின்றனர்.
ஜங்கள்மகால் பகுதியில் கூட்டம் ஒன்றில்
அக்டோபர்
15
அன்று பேசிய பானர்ஜி மாவோயிஸ்ட்டுக்களை
“காட்டுப்பகுதி
மாபியாக்கள்”
என்று விவரித்து,
“சுபாரி
(ஒப்பந்த)
கொலை செய்பவர்கள்”
என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின் அவர் மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களைக் களைந்து
“சமாதானப்
பேச்சுக்களை”
நடத்துவதற்கு ஏழுநாட்கள் கெடு விதித்து,
அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால்,
தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தான் உத்தரவிடப்போவதாகவும்
தெரிவித்தார்.
இதன்பின்,
திரிணாமூல்
காங்கிரஸ் மாவோயிச எழுச்சிகள் தீவிரமாக இருக்கும் பகுதிகளில்
உள்ள சிறுநகரங்கள்,
கிராமங்களில் மாவோயிச எதிர்ப்பு அரசியல் கூட்டங்களை நடத்தியது.
பானர்ஜியும் அவருடைய திரிணாமூல்
காங்கிரஸும் கடந்த மே மாத மாநிலத் தேர்தல்களில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட்)
தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள்
எதிர்ப்பை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்தனர். இடது முன்னணி
“முதலீட்டாளர்
சார்புக் கொள்கைகளை தொடர்ந்தனர்”
என்று மமதா பானர்ஜி கூறினர்.
திரிணாமூல்
காங்கிரஸ் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அதிருப்திக்கு
அழைப்புவிடும் திறனில் இருந்த முக்கிய கூறுபாடு பெருவணிக
அபிவிருத்தித்திட்டங்களுக்கு அரசாங்கம் விவசாயிகளின் நிலங்களை
அபகரித்தபோது வந்த மக்கள் இயக்கங்களில் அது பங்கு பெற்றதுதான்.
மாவோயிஸ்ட்டுக்கள் திரிணாமூல்
காங்கிரசினால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏமாற்றும்
தோற்றமான தாம் மேற்கு வங்கத்திற்கு வறிய விவசாயிகளின்
பாதுகாப்பு அமைப்பு என்பதை வரவேற்று,
சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் நடந்த போராட்டங்களில் திரிணாமூல்
காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டனர். மேலும் இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின்
(மார்க்ஸிஸ்ட்)
“சமூக
பாசிசக் கொள்கைகளுக்கு”,
பானர்ஜி ஒரு
“முற்போக்கான”
மாற்றீடு என்று பலமுறையும் புகழ்ந்தனர்.
பெருவணிகக் காங்கிரசில் இருந்து பிளவுற்றுவந்த அமைப்பான திரிணாமூல்
காங்கிரஸ் ஒரு வலதுசாரி மற்றும் பலமுறையும் இந்து மேலாதிக்க
பாரதீக ஜனதா கட்சியுடன் (BJP)
ஒன்றாகச் செயல்பட்டமோதும்,
2009ல்
இருந்து இந்திய தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் காங்கிரசின் மிக
முக்கிய கூட்டணி அமைப்பாக உள்ளது.
தன்னுடைய பங்கிற்கு பானர்ஜி நாடெங்கிலும்
மத்திய அரசாங்கத்தின் தலைமையில் நடத்தப்பட்ட மாவோயிச
எதிர்த்தாக்குதலான கிரீன் ஹன்ட்
(Green Hunt)
நடவடிக்கையை குறைந்தபட்சம் மேற்கு வங்கத்திலேனும்
எதிர்ப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கை,
கிட்டத்தட்ட
100,000
பாதுகாப்புப் படையினரும் இந்திய இராணுவத்தின் மூலோபாய,
விநியோக வசதிகளையும் கொண்டதாகும்.
இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி
[CPM]
மற்றும் அதன் இடது முன்னணி அரசாங்கமும் இதற்கிடையில் அவற்றின்
முழு ஆதரவையும் இந்திய அரசாங்கத்தின் எழுச்சி எதிர்ப்பு
நடவடிக்கைக்கு கொடுத்தன. பிரதம மந்திரி மன்மோகன் சிங்
இந்தியாவின் காட்டுப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளை
முதலாளித்துவ மூலவள அபிவிருத்தித் திட்டங்களுக்கு திறந்து
விடும் நோக்கத்தைக் கொண்டது என்பதை ஒப்புக் கொண்டார்.
உண்மையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பானர்ஜியுடன் அதன்
தேர்தல் உடன்படிக்கையை கைவிடுமாறு காங்கிரசை நம்பவைக்க
முற்பட்டனர். தாங்கள் கிரீன் ஹன்ட் செயற்பாட்டிற்கு முழு ஆதரவு
தருவதாகவும், மாவோயிஸ்ட்டுக்கள் இந்தியாவின்
“மிகத்தீவிர
உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்”
என்னும் அரசாங்கத்தின் கூற்றை ஏற்பதாகவும்
கூறினர்.
ஆகஸ்ட் 2010ல் பானர்ஜி,
பாதுகாப்புப் படையினர் மாவோவாதியான ஆசாத்தின்
மரணம் குறித்துக் கொடுத்த விளக்கம் முறையாக இல்லை என்ற
வெளிப்படையான கருத்தைக் கூறியபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அவரை இந்திய பாதுகாப்புப் படைகளின் நேர்மை
குறித்து அவதூறாகப் பேசுவதாகக் கண்டிக்கவும் செய்தனர்!
மாவோயிஸ்ட்டுக்கள் கடந்த ஜனவரியில் நடந்த
தேர்தல்களின்போது பானர்ஜி மற்றும் அவருடைய திரிணாமூல்
காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
பின்னர் பெயரளவிற்குத் தேர்தல் பகிஸ்கரிப்பை வெளியிட்டு,
அந்நிலையில் இருந்து பின்வாங்கினர். ஆனால் பகிஸ்கரிப்பை
செயல்படுத்த ஏதும் செய்யவில்லை. அவர்கள் பானர்ஜியின் தேர்தல்
வெற்றிக்குப் பொறுப்பு கொண்டிருந்ததுடன், அவரை வரவேற்றுப்
பாராட்டினர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பானர்ஜி தன்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
“முற்போக்கான
சான்றுகளை”
விளம்பரப்படுத்திக் கொள்ள முற்பட்டு, திரிணாமூல்
காங்கிரஸ் அரசாங்கம் மத்திய அரசாங்கப் பாதுகாப்புப் படைகள்
மாநிலத்தில் இருந்து வெளியேறவும் மாவோயிஸ்ட்டுக்களுடன்
“சமாதான
உடன்படிக்கை”
காணப்பட அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும்
லால்கர் மற்றும் ஜங்கல்மகாலின் பிற பகுதிகளிலும் மக்களுக்கு
கூறினர். (மாவோயிச எழுச்சி பரவுவதற்கு முக்கிய காரணங்களில்
ஒன்று பாதுகாப்புப் படைகள் பழங்குடி மக்களை தவறாக
நடத்தியதுமாகும்.)
ஆனல் அவருடைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன்,
எதிர்பார்த்தபடி இந்த உறுதிமொழிகளில் இருந்து அவர் பின்வாங்கத்
தொடங்கினார். மத்திய அரசாங்கத்தின் எழுச்சி-எதிர்ப்புப் படைகள்
திரும்பப் பெறவேண்டும் என்று அவர் அழுத்தமும் கொடுக்கவில்லை;
ஒரு சில மாவோயிச அரசியல் கைதிகளை விடுவித்து,
மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களைக் களையவேண்டும் என்று கோரினார்.
நடைமுறையில்
“சமாதானப்
பேச்சுக்களுக்கு”
முன்பு இது ஒரு முன்நிபந்தனை என ஆயிற்று.
இக்கோரிக்கையின் அப்பட்டமான நோக்கம் பேச்சுவாய்ப்புக்களை
தகர்த்து, அதையொட்டி தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதை
நெறிப்படுத்துவதாகும்.
தங்கள் பங்கிற்கு மாவோயிஸ்ட்டுக்கள் மேற்கு
வங்க அரசாங்கத்துடன் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுக்கள்
நடக்க உள்ளன என்றும், அவற்றின் கவனம் ஊழலுக்கு
முற்றுப்புள்ளி, பழங்குடி மக்களுக்கு வளரச்சியில் நியாயமான
பங்கு, செல்வாக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக
இருக்கும் என்றும் கூறினர். இது அவர்களுடைய அரசியல்
முன்னோக்கான
“தேசிய
ஜனநாயகத்தை”
அதாவது, முதலாளித்துவப் புரட்சியை முதலாளித்துவத்தில் உள்ள
“தேசப்பற்று
கூறுபாடுகளுடன்”
இணைந்து நடத்துவது என்பதுடன் முற்றிலும் இணைந்த
வகையில் இருந்தது.
பானர்ஜியுடனும்
அவருடைய திரிணாமூல்
காங்கிரஸுடனான மாவோயிஸ்ட்டுக்களின் கூட்டு,
தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு பொறி,
அவர்களுடைய பிற்போக்குத்தன அரசியல் எழுச்சியில்
ஈர்க்கப்பட்டுள்ள எந்த இளைஞர்களுக்கும் ஒரு தூக்குக்கயிறு போல்
என்று உலக சோசலிச வலைத்
தளம் பலமுறையும் எச்சரித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடைய
குற்றச்சாட்டான பானர்ஜி நடைமுறையில் மாவோயிஸ்ட்டுக்களுடன்
உடன்பாடு கொண்டிருக்கிறார் என்பதற்கு அவர் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியும்
(மார்க்சிஸ்ட்)
மாவோயிஸ்ட்டுக்களும்தான்
“சகோதரர்கள்”
எனக் கூறியதைக் குறிப்பிட்டு, நாம் எழுதினோம்:
“அவருடைய
முக்கிய போட்டியாளர்களான ஸ்ராலினிஸ்ட்டுக்களை
மாவோயிஸ்ட்டுக்களுடன் ஒன்றாக இணைத்துப் பேசிய வகையில், பானர்ஜி
இந்திய பெருவணிகத்திற்கும் அதன் காங்கிரஸ் கட்சியில் உள்ள
கூட்டாளிகளுக்கும் தான் மாவோயிஸ்ட்டுக்களை தனக்கு
“இடது”
மறைப்பு கொடுப்பதை பயன்படுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்)
தலைமையிலான இடது முன்னணியிடம் இருந்து மேற்கு வங்காளத்தில்
அதிகாரத்தைக் கைப்பற்றியபின், தன் முன்னாள் கூட்டாளிகளை
இரத்தம்தோய்ந்த வகையில் கூட கையாளமுடியும் என்பதற்கான
அடையாளத்தை காட்டியுள்ளார்.”
அவர் பதவிக்கு வந்து அரை ஆண்டிற்குள், பானர்ஜி
மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள், முழுமையான தனியார்மயம்
ஆக்குதல் மற்றும் பிற பெருவணிக நடவடிக்கைகளுக்கும் தளத்தை
அமைக்கிறார். தற்போதைய அவருடைய மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான
இராணுவத் தாக்குதல், அவருடைய அரசாங்கத்தின் வலதுசாரிச்
செயற்பட்டியலுக்கு சவால் விட முன்வர இருக்கும் தொழிலாள வர்க்க,
கிராமப்புற உழைப்பாளிகளின் தவிர்க்க முடியாத போராட்டங்களுக்கு
எதிராக அவர் கட்டவிழ்க்க உள்ள பரந்த அடக்குமுறைக்கு ஒரு
ஒத்திகையே.
|