சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Thousands protest against Kremlin regime

கிரெம்ளின் ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்

By Andrea Peters
12 December 2011

use this version to print | Send feedback

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களில் சனிக்கிழமை அன்று மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ரஷ்ய நகரங்கள் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்தனர்.

அண்ணளவாக 50,000 பேர் என மதிப்பிடப்பட்ட ஒரு கூட்டம் மாஸ்கோவில் போலோட்நையா சதுக்கத்தில் குழுமி, டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் பரந்த முறையில் மோசடிகள் நடந்தது எனப்படும் குற்றச்சாட்டுக்ள் பற்றிய  சீற்றத்தை வெளிப்படுத்தினர். மற்றொரு 10,000 பேர் ரஷ்யாவின் இரண்டாம் மிகப் பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சொச்சி, முர்மன்ஸ்க், சிட்டா, விலாடிவொஸ்டோக், கஸான், நிஜ்னி நோவோகோரோட், ஒம்ஸ்க் மற்றும் ஏழு நேரப்பிரிவுகளில் உள்ள மற்ற டஜன் கணக்கான நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிறு ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட கடந்தவார நிகழ்வுகளை அடுத்து சனிக்கிழமை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் துணை இராணுவபடையினர் இந்த வார இறுதியில் போலோட்நையா சதுக்கத்தில் இருந்துபோதிலும், எவரும் கைது செய்யப்படவில்லை. இன்னும் பரந்தமுறையில் மக்கள் சீற்றம் வெளிப்படுவதைத் தூண்டிவிடும் என்பதால் பொலிசாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க வேண்டாம் என்று கிரெம்ளின் கூறியதாகத் தெரிகிறது. செயின்ட்  பீட்டர்ஸ்பேர்க்கில் ஒரு சிலரே கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் பிரதம மந்திரி விளாடிமிர் புட்டினுடைய அரசாங்கம் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது; ஆர்ப்பாட்டங்களும் சமீபத்திய தேர்தல்களும் ஒரு அமைதியான மக்கள் ஆதரவு கொடுக்கும் உறுதியானது என்றும் போற்றப்பட்ட ஓர் ஆட்சியின் ஸ்திரமற்ற தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன.

ஆளும்  ஐக்கிய ரஷ்யா (UR) கட்சிக்கு ஆதரவு டிசம்பர் 4ம் திகதி தேர்தல்களில் வியத்தகு முறையில் சரிந்தது. இது 2007ல் அது பெற்ற 315 இடங்களுடன் ஒப்பிடுகையில் அதன் வேட்பாளர்கள் மொத்தம் உள்ள 450 பாராளுமன்ற இடங்களில் 238ல்தான் வெற்றி பெற்றனர். வாக்குப்பதிவில் தில்லுமுல்லுக்கள் இருந்தும்கூட (உதாரணமாக ரோஸ்டோவ் நகரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களைவிட 140% அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன) ஐக்கிய ரஷ்ய கட்சியுடைய ஆதரவு 14% ஆக குறைந்து 49.5% என வந்துவிட்டதைக் கண்டுள்ளது.

தேர்தல் மோசடிகள் குறித்து பரந்த தகவல்களால் பரவியதை அடுத்து தேர்தல்கள் முடிந்த உடனேயே எதிர்ப்புக்கள் பெருகின. தாராளவாத எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களை முக்கியமாக வழிநடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி, Just Russia  கட்சி இன்னும் பல சக்திகள் மக்கள் சீற்றத்தின் பரப்பு தெளிவான பின்னர் தங்கள் ஆதரவை அளித்தன. காரி காஸ்பரோவின்  அமெரிக்க சார்பு, சந்தை சார்பு செயற்திட்டத்தை கொண்டுள்ள Solidarnost  கட்சி வார இறுதியில் மாஸ்கோவில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

சனிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசியல் உரிமைகள் மீதுதான் முற்றிலும் கவனத்தைக்காட்டின. நாட்டின் மக்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பொறுத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை நிலைமைகள் பற்றியோ அல்லது கிரெம்ளின் பெரும் செல்வந்தர்களை பாதுகாப்பது ஆகியவை குறித்தோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

போலோட்நையா சதுக்கத்தில் ஏற்கப்பட்ட தீர்மானங்கள் பாராளுமன்றத் தேர்தல்கள் செல்லுபடியாகாதவை, புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், மத்திய தேர்தல் குழுத் தலைவர் விளாடிமிர் சூரோவ் இராஜிநாமா செய்யவேண்டும், எதிர்க்கட்சிகள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் எல்லா அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பவற்றை அடக்கியிருந்தன. தன் கோரிக்கைகளை ஏற்க அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் அவகாசம் உள்ளது என வலியுறுத்தி மற்றொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 24ம் திகதி நடத்தப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாஸ்கோ கூட்டத்தில் பல பிரமுகர்கள் உரையாற்றினர்; இவர்களில் உத்தியோகபூர்வ பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் தாராளவாதக் கட்சிகளில் இருந்து பல உயர்மட்ட அரசியல்வாதிகள் ஆகியோர் அடங்குவர். தீவிர தேசியவாத தேசிய போல்ஷிவிக் கட்சியின் எடுவர்ட் லிமோனோவ் போன்ற மிகத்தீவிர வலதுசாரி நபர்கள் மற்றும்இடதுகள் இருந்தனர் என்று செய்தித்தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் அனைவருமே ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஆதரவை வெளியிட்டனர்.

பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் இணைந்துள்ள ரஷ்ய சோசலிச இயக்கம் அதன் வலைத் தளத்தில் விமர்சனமற்று தாராளவாதிகளை புகழ்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பின்யோசனையாக சோசலிச கோரிக்கைகளை போராட்டத்தினுள் கொண்டுவரும் தேவை வந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்திலும், சர்வதேசச் செய்தி ஊடகத்திலும், தாராளவாத வலைப் பதிவாளர் அலெக்சி நாவல்னி இயற்றிய கோஷமானஐக்கிய ரஷ்யா ஒருஏமாற்றுபவர்கள், திருடர்களின் கட்சி என்பது பரந்த அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. உத்தியோகபூர்வ ரஷ்ய அரசியல் குறித்து பல மக்களின் கருத்தை இது எதிரொலிக்கிறது.

ஆனால் கிரெம்களின்மீது குறைகூறுபவராக இருந்தும்கூட, நாவல்னி தீவிரவலதுசாரி நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுப்பதுடன் ஆக்கிரோஷமான முறையில் குடியேறுவோர்-எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கொண்டவர் ஆவார். அவர் சமீபத்திய பொது நிகழ்வுகளில் நவ-நாஜிக்கள் கூட்டத்தில் தோன்றியவர். வார இறுதியில் நாவல்னி குறித்து நீண்ட கட்டுரையை எழுதிய நியூ யோர்க் டைம்ஸ் கூற்றுப்படி, அவர்ஒரு முறை ஒளிப்பதிவு காட்சி ஒன்றில் கறுப்புத் தோல் கொண்ட காகசஸ் எழுச்சியாளர்களை கரப்பான்பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.”

சனிக்கிழமை எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற பலர் நிகழ்வுகளை வழிநடத்திய எந்த அரசியல் சக்திகளுடனும் இணைந்திருக்கவில்லை, ஆதரவு சமூக இணைய தளங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு இருந்தது என்று செய்தி ஊடகத் தகவல்கள் குறிப்புக் காட்டுகின்றன. மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பல செய்தி நிறுவனங்கள் கூட்டங்களில் பெரும்பகுதி மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மக்கள் முக்கியமாக கிரெம்ளின் ஆட்சியின் அடக்குமுறைத்தன்மை குறித்து ஆழ்ந்த அதிருப்தியினால் உந்தப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளன.

அதே நேரத்தில் முழு அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்தும் தீவிர அந்நியப்படுதல் குறித்த அடையாளங்களும் காணப்பட்டன. Kommersant நாளேடு மாஸ்கோ ஆர்ப்பாட்டத்தில் உயர்த்திக் காட்டப்பட்ட கோஷங்களில் ஒன்றுஇந்த இழிமகன்களுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை. வேறு இழிமகன்களுக்கு நாங்கள் வாக்களித்திருந்தோம். வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்கூறியதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இதுவரை நகர்ப்புற மத்தியதரவகுப்பின் தட்டுக்களை அதிகம் ஈர்த்தபோதிலும்கூட, ஆளும் உயரடுக்கு இதேபோன்ற அதிருப்தித் தரங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதிகளிடையேயும் உள்ளது என்பதை நன்கு அறியும். அவ்வர்க்கத்திடையே சரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கத்தரங்கள் மற்றும் உயர்ந்த அளவு சமூக சமத்துவமின்மை குறித்து ஆழ்ந்த சீற்றமும், கிரெம்ளினின் ஊழல் நலிந்த ஆட்சி குறித்த வெறுப்பும் இணைந்துள்ளன என்பதையும் ஆளும் உயரடுக்கு அறியும்.

உணவு மற்றும் அடிப்படை பயன்பாட்டு வசதிகளின் விலைகள் வானளாவ உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தை கடுமையாகத் தாக்கியுள்ளன. 2 மில்லியனுக்கும் மேலான மக்கள் உத்தியோகபூர்வ வறுமை நிலைக்கு 2010 முதல் 2011க்குள் தள்ளப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல்களில் ஐக்கிய ரஷ்யாவிற்கு ஆதரவுச் சரிவு என்பது சமூகம் முழுவதைப் பற்றியும் பெரும் ஏமாற்றம் இருப்பதைக் குறிக்கிறது.

எகிப்தில் ஜனவரி மாதம் எற்பட்ட நிகழ்வுகளைப் போல் ரஷ்யாவிலும் ஏற்படலாம் என்று புட்டினின் ஆட்சி அஞ்சுகிறது. எகிப்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைந்தது, உத்தியோகப்பூர்வ எதிர்த்தரப்புக் கட்சியின் போராட்டத்தை முபாரக் ஆட்சி அகற்றுவதில் முடித்தது.

ஆர்ப்பாட்டங்கள் பெருகக்கூடும் என்பது குறித்த கிரெம்ளினின் பதட்டத்தின் அடையாளமாக சனிக்கிழமை பள்ளி நேரம் பிற்பகலுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதையொட்டி இளைஞர்கள் எதிர்ப்புக்களின் தொடக்கத்தில் பங்கு பெறுவது தடுக்கப்பட்டது. இதைத்தவிர, எதிர்ப்பு முதலில் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து போலோடநையா சதுக்கத்திற்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் இருந்து அதிகாரிகள் கூட்டத்தைக் கண்காணிப்பது எளிதாகும்.

ஞாயிறன்று ஜனாதிபதி மெட்வெடேவ் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்துத் தான் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த விசாரணை மக்கள் சீற்றத்தைத் தணிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் விரிவடைவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.

கிரெம்ளினின் கவலைகள் அதற்கு எதிராக இருக்கும் அனைத்துஎதிர்த்தரப்புச் சக்திகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ரஷ்யாவின் தாராளவாத நடைமுறை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளது. அதன் முக்கியத் தலைவர்களில் பலர் வலதுசாரி, சந்தைச் சார்புடைய யெல்ட்சின் நிர்வாகத்தின் கொள்கைகளை இயற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கைக் கொண்டவர்கள். புட்டின் குறித்த முக்கிய குறைகூறல்களில் ஒன்று அவர் சமூகநலத் திட்டங்களில் போதுமான வெட்டுக்களைச் செயல்படுத்தவலில்லை என்பதாகும்.

தொழிலாள வர்க்கத்திற்கு பரிவு காட்டுவதாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியும் ரஷ்ய முதலாளித்துவத்திற்கு முற்றிலும் அடிபணிந்ததாகும். சோவியத் ஒன்றியம் அதிகார வர்க்கத்தால் அழிக்கப்பட்டதை அடுத்து அரசாங்க இருப்புக்களைக் கொள்ளையடித்ததில் அதிகம் வெற்றிபெறாத முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சில பிரிவுகளை இது பிரதிபலிக்கிறது. முஸ்லிம் அல்லது யூத எதிர்ப்பு  எதிர்ப்புணர்வுகளை பெரிதும் வளர்க்கும் முறையில் தேசியவாத கோரிக்கைகளை விடுப்பதில் தன்னை அடித்தளமாக கொண்டுள்ளது.

கிரெம்ளினின் வரவு-செலவுத் திட்ட கொள்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இவைதான் பொதுநல அரசாங்கம் மற்றும் அடிப்படைப் பொதுக் கட்டுமானத்தில் எஞ்சியிருப்பதையும் சரியவைப்பதில் முனைந்து செயல்பட்டவை ஆகும்.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் வாக்குப்பதிவு தில்லு முல்லுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியபின், பிரதம மந்திரி புட்டின் அமெரிக்காதான் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிடுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். தாராளவாதக் கட்சிகள் பல அமெரிக்க சார்புடையதாக இருந்து, அமெரிக்க வெளிவிவகாரத்துறையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கையில், வாஷிங்டன் தன்னுடைய சொந்த மூலோபாய நலன்களுக்காக எதிர்ப்புக்களை சூழ்ச்சிசெய்ய முற்படுகையில், எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற பலரின் உணர்வுகள் ரஷ்யாவில் பரந்திருக்கும்  சமூக அதிருப்தியை பற்றிய உண்மையான உணர்வுகளைத்தான் பிரதிபலித்தன.

மக்களின் பரந்த பிரிவினர் பெரிதும் மத்தியதர வர்க்கத்தின் எதிர்ப்புக்களில் உடனடியாகப் பங்கு பெற வேண்டாம் என்ற முடிவு சோவியத் ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்டவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் இருந்துதான் அதிகம் விளைந்துள்ளது. அப்பொழுது ஜனநாயகப் புரட்சி பற்றிய பேச்சு அரசாங்க தொழில்துறையைக் கொள்ளையடிப்பதற்கு ஒரு மறைப்பாகத்தான் போயிற்று. மேலும் அது வேலைகள், சமுகப் பாதுகாப்புக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றில் பாரிய தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவு மாஃபியா போன்ற நிதியத் தன்னலக்குழுவின் தலைமையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார துருவமுனைப்படுத்துல் உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் அரசியல் நடைமுறைக்குள் மோதல் தீவிரமாகையில், தொழிலாள வர்க்கம் தவிர்க்கமுடியாமல் புட்டின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈர்க்கப்படும். இது நடந்துவிட்டால், தொழிலாளர்கள் விரைவில் ரஷ்யாவில் இருக்கும் மேலை ஏகாதிபத்தியத்தின் சார்பு அமைப்புக்கள் உள்ளடங்கலான உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியினருடனும் தாங்கள் மோதல் நிலையிலிருப்பதை கண்டுகொள்வர்.