WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The gutting of the US Postal Service
அமெரிக்காவில் அஞ்சல் பணிகள் அழிக்கப்படுதல்
Barry Grey
7 December 2011
அமெரிக்க அஞ்சல் சேவைத்துறை
(USPS)
திங்களன்று தான் அதன் அஞ்சல் செயலாக்க மையங்களில் பாதிக்கும்
மேலானவற்றை மூட இருப்பதாகவும், 28,000 வேலைகளை அகற்ற
இருப்பதாகும், ஒரே இரவில் முதல் வகுப்பு அஞ்சல் விநியோகிப்பதை
நிறுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பெரும் செலவுக்
குறைப்புக்கள் மற்றும் வேலைக் குறைப்புக்கள் திட்டத்தின் ஒரு
பகுதியான இத்திட்டம் அடுத்த மார்ச் மாதத்தில் இருந்தே
நடைமுறைக்கு வர உள்ளது; 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக உரிய
நேரத்தில் அஞ்சல்களை விநியோகிக்கும் தரங்களை இது
அகற்றிவிடுகிறது.
அஞ்சல் பணிகளில் மொத்தம் உள்ள 461 செயலாக்க
மையங்களில் 252 மூடப்படும். இதையொட்டி பெரும்பாலான அஞ்சல்கள்
ஒன்றில் இருந்து இரு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் நடைமுறை
மாறி, முதல் வகுப்பு அஞ்சல் விநியோகிக்கப்படுவது இரண்டில்
இருந்து மூன்று நாட்கள் பிடிக்கும். வாராந்திர, மாதாந்திர
ஏடுகள் முகவரியை அடைவதற்கு 9 நாட்கள் பிடிக்கும்.
வால் மார்ட்டை அடுத்து, அமெரிக்காவின் இரண்டாம்
மிகப் பெரிய வேலை கொடுக்கும் நிறுவனமான அமெரிக்க அஞ்சல்
சேவைத்துறை
–USPS-
மத்திய அரசாங்கத்தின் ஒரு சுயாதீன நிறுவனம் ஆகும். இது ஒரு
வணிகம் போல் நடத்தப்படுகிறது, வரிவசூலிப்பு டாலர்கள் எதையும்
பெறுவதில்லை. 1971ம் ஆண்டு அது அமெரிக்க அஞ்சல் துறையின்
பின்தோன்றலாயிற்று. அதுவோ அமெரிக்க அரசாங்கத்தின் மந்திரிசபை
தகுதி பெற்ற துறையாக இருந்து, காங்கிரஸ் ஒதுக்கிய நிதியையும்
பெற்றுவந்தது.
அஞ்சல் துறையை அமெரிக்க அஞ்சல் சேவையாக
மாற்றியது நாடெங்கிலும் 1970 மார்ச்சில் அஞ்சல் தொழிலாளர்கள்
நடத்திய திடீர் வேலைநிறுத்தத்தை அடுத்து வந்தது.
அந்த வேலைநிறுத்தம் ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை
நியூயோர்க் நகர அஞ்சல் முறைக்குள் ஈடுபடுத்திய பின்னரே
முடிவிற்கு வந்தது. அஞ்சல் தொழிலாளர்களுக்கு எதிராக என்று
முதலில் நடத்தப்பட்ட இந்த மாற்றம் அஞ்சல்துறை
தனியார்மயமாக்கப்பட்ட திசையில் முக்கிய கட்டம் ஆகும்.
திங்களன்று அஞ்சல் விநியோகிக்கும் முறையைக் தரமிறக்கியமை
மத்திய நிறுவனத்தை குழிபறிப்பிற்கு உட்படுத்தும் நிகழ்போக்கு,
அதனை துண்டுதுண்டாக்கும் வழிவகையை விரைவுபடுத்தப்படுதலைத்தான்
குறிக்கிறது. இது சந்தைமீது தாங்கள் கொண்டிருக்கும்
கட்டுப்பாட்டின்கீழ் பொறுத்துக்கொள்ள முடியாத குறுக்கீடு,
தங்கள் இலாபங்களை உயர்த்த முடியாத தடை என்று பெருநிறுவன
நலன்கள் நீண்ட காலமாகக் கருதின.
அஞ்சல் விநியோகம் தரக்குறைப்பிற்கு
உட்படுத்தப்பட்டமை,
சில அஞ்சல் அதிகாரிகளின் கருத்துப்படி நிறுவனத்திற்கு ஆண்டு
ஒன்றிற்கு $2.1 பில்லியன் சேமிப்பைத் தரும். 220,000 அஞ்சல்
துறை வேலைகளைக் குறைத்தல், 3,700 உள்ளூர் அஞ்சல் நிலையங்களை
மூடுதல், சனிக்கிழமை அஞ்சல் விநியோகத்தை நிறுத்துதல் என்னும்
பரந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. அஞ்சல் அதிகாரிகளின்
கருத்துப்படி இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் ஆண்டுச் செலவுகளை
2015 ஐ ஒட்டி $20 பில்லியனைக் குறைத்துவிடும்.
அமெரிக்க அஞ்சல் பணி பணிநீக்கம் கூடாது என்று
தொழிற்சங்க ஒப்பந்தங்களில் நிரந்தர ஊழியர்களுக்கான விதியை
நீக்கும்படியும், கூட்டாட்சி சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியத்
திட்டங்களில் இருந்து திரும்பப் பெறுதல், ஓய்வு பெற்றோருக்கான
சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நிதிகளில் பணம் செலுத்துவதை
நிறுத்துதல், பிற சலுகைக் குறைப்புக்களை அதன் தொழிலாளர்
பிரிவின் மீது சுமத்துதல் ஆகியவற்றிற்கு உடன்படும் வகையில்
சட்டம் இயற்றுமாறு காங்கிரசை கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு இரவு முடிந்த நிலையில் முதல் வகுப்பு
அஞ்சலை விநியோகித்தல் முடிவு அடைதல் என்பது மில்லியன் கணக்கான
அமெரிக்கர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும்; அவர்கள் இதைத்தான்
தாங்கள் கொடுக்க வேண்டிய கட்டணங்கள் மற்றும் சமூகப்
பாதுகாப்பு, மற்ற நலன்கள் தரும் காசோலைகளை பெறுவதற்கு
நம்பியுள்ளனர். இதைத்தவிர பயன்படுத்த வேண்டிய மருந்துக்
குறிப்புக்கள், செய்தித்தாட்கள், ஏடுகள் போன்றவற்றை பெறவும்
நம்பியுள்ளனர். குறிப்பாக இது முதியோர்களையும் கிராமப்புற
மக்களையும் பாதிக்கும்.
வணிகச் செயற்பாடுகளிலும் இது பாதிப்பைக்
கொடுக்கும்; அஞ்சல் பணியைத் தங்கள் கட்டண வசூலுக்காக
அனுப்புதல், காசோலைகள் பெறுதல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தும்
மில்லியன் கணக்கான சிறு நிறுவனங்களும் பாதிக்கப்படும். டிவிடி
வாடகைக்குவிடும் நெட்பிக்ஸ் எனப்படும் பெரு நிறுவனங்களையும்
இது பாதிக்கும்; அவற்றின் வணிகம் நாடு முழுவதும் விரைவில்
பொருட்களை விநியோகித்தலை சுற்றியுள்ளது.
அஞ்சல் தொழில்துறை தொழிற்சங்கங்கள் அமெரிக்க
அஞ்சல் பணியின்மீதான தாக்குதல்களுக்கு எத்தீவிர எதிர்ப்பையும்
காட்டவில்லை. ஒவ்வொரு சலுகை இழப்பிலும் அவர்கள்
கையெழுத்திட்டுள்ளனர்; நிறுவனம் 1999ல் கொண்டிருந்த 909,000
வேலைகளில் இருந்து இன்று 612,000 என்று 29% குறைப்பு
ஏற்படுவதற்கு அவை துணை நின்றுள்ளன. இது ஒபாமவின் கீழும்
தொடர்கிறது. இவருடைய மூன்றாண்டு பதவிக்காலத்தில் அமெரிக்க
அஞ்சல் பணி, செலவினங்களில் $12 பில்லியன் குறைக்கப்பட்டதையும்,
நிரந்தரப் பணியாளர் தொகுப்பில் 11,000 வேலை இழப்புக்களையும்
கண்டுள்ளது.
ஒபாமா நிர்வாகம், பெரும்பாலான ஜனநாயகக்
கட்சியினர் மற்றும் குடியரசுக் காங்கிரஸ் உறுப்பனர்களுடைய
ஆதரவுடன் அஞ்சல் பணி நிர்வாகம் அதன் பணிக் குறைப்புக்கள்
மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் பொருளாதாரத் தேவையின்
ஆணைக்குட்பட்டுள்ளன என்று கூறுகிறது. நிதிய ஆண்டு 2011ல் $5.1
பில்லியன் இழப்பு ஏற்பட்ட, புது ஆண்டில் $14 பில்லியன் இழப்பு
ஏற்படக்கூடிய, இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளின்
ஏற்றத்தால் அஞ்சல் அனுப்புதலின் மொத்த அளவு தீவிரமாகக்
குறைந்துவிட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அஞ்சல் பணியை அகற்றுவதால் ஏற்படக்கூடிய
உண்மையான பிரச்சினைகளை இழிந்த முறையில் தவிர்ப்பதுதான் இது.
அஞ்சல் பணியைத் தக்க வைத்து, விரிவாக்கவோ, அதன் தொழிலாளர்
பிரிவின் நிலைமையை முன்னேற்றுவிக்கவோ
“பணம்
இல்லை”
எனக் கூறப்படுவது, போர்பஸ் ஏட்டின் கருத்துப்படி, 400
உயர்மட்ட செல்வந்தர்கள் மொத்தம் $1.53 டிரில்லியன்கள்
வைத்துள்ள நாட்டில், கடந்த ஆண்டைவிட 12% அது அதிகம் என்றுள்ள
நிலையில், நம்பகத்தன்மையை பெற்றிருக்கவில்லை.
அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர் பில்
கேட்ஸ் சொந்தச் சொத்துக்களை $59 பில்லியன் எனக்
கொண்டுள்ளமையும் இது அஞ்சல் துறையின் செலவுக்
குறைப்புத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைப் போல்
கிட்டத்தட்ட மூன்று மடங்கு என்பதில் இருந்து அமெரிக்க
முதலாளித்துவத்தின் சமூக முன்னுரிமைகள் நன்கு தெரியவரும்.
பொருளாதாரத்தின் முழு ஒட்டுண்ணித்தனத் தன்மை பணக்காரர்
பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் தனியார் முதலீட்டு நிதி
மேலாளர் ஜோன் பௌல்சன் சொந்த வருமானமாக கடந்த ஆண்டு $4.9
பில்லியனைக் கண்டார் என்பதில் எடுத்துக்காட்டப்படுகிறது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் அமெரிக்க மக்கள் வோல்
ஸ்ட்ரீட் பிணை எடுப்பு பற்றி மக்கள் மறந்து விட்டனர் என்று
உண்மையிலேயே நினைக்கின்றனரா? கடந்த வாரம் ப்ளூம்பேர்க்
நியூஸ் தன்னுடை சொந்த அறிக்கையை 2008-09 கடன்
நெருக்கடியின்போது வங்கிகளுக்கு மத்திய வங்கிக்கூட்டமைப்பு
அள்ளிவழங்கிய பணம் தொடர்பாக நடத்திய விசாரணையின் விளைவுகளை
வெளியிட்டது. மத்திய வங்கிக்கூட்டமைப்பில் இருந்து குறிப்பிட்ட
ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக அது நீண்ட சட்டப் போராட்டத்தை
நடத்த வேண்டியிருந்தது.
மார்ச் 2009 வரை,
மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிதிய
தன்னலக்குழுவின் சொந்த பைத்தியகாரத்தனமான,
குற்றம் சார்ந்த செயல்கள் மூலம் ஏற்பட்ட உடைவை தொடர்ந்து
அமெரிக்க நிதிய தன்னலக்குழுவை மீட்க $7.7 டிரில்லியனை
ஒதுக்கீடு செய்ததை
ப்ளூம்பேர்க்
கண்டுபிடித்துள்ளது.
21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்த்தத்தில்
அமெரிக்கா அதன் அடிப்படை அஞ்சல் விநியோக முறையை, முந்தைய
நூற்றாண்டில் இருந்ததை, தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை
என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் அழுகிப் போன தன்மையின்
அதிர்ச்சி தரும் வெளிப்பாடு ஆகும். அஞ்சல் துறையை தகர்ப்பதில்,
அமெரிக்க ஆளும் வர்க்கம் 1775ம் ஆண்டு பெஞ்சமின்
பிராங்ளின் தலைமையில், அமெரிக்க அரசியல் அமைப்பில் பொதிந்துள்ள
இரண்டாம் கண்ட மாநாட்டில் நிறுவப்பட்டுள்ள அமைப்பு ஒன்றை
தகர்க்கின்றது.
அஞ்சல் துறை வீழ்ச்சியடைந்துள்ளமை அடிப்படை
சமூக உள்கட்டமானத்தின் இன்னும் பொதுவான சரிவின் ஒரு பகுதிதான்.
உலகில் மிகச் செல்வம் படைத்த நாடு என்பதில் அநேகமாக பாலங்கள்
வாடிக்கையாகச் சரிகின்றன, அணைக்கட்டுகள் உடைகின்றன, புயல்கள்
அல்லது பெரும் காற்று ஆயிரக்கணக்கான, ஏன் மில்லியன் கணக்கான
மக்களை இருளில் ஆழ்த்துகின்றன. அமெரிக்கா
மிகச் சமத்துவமற்ற நாடும்தான் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு
அல்ல.
தன்னுடைய இன்னும் கூடுதலான செல்வப் பேராசைக்காக
அனைத்துத் தேவைகளையும் தாழ்த்திவைக்கும் ஒரு இழிந்த செல்வம்
படைத்த தன்னலக்குழு சமூகத்தை மேலாதிக்கத்தில் வைத்திருப்பது
என்பது ஒரு தற்கால, பெரும்பாலானவர்களின் நலன்களுடைய சமூகத்தின்
அடிப்படைத் தேவைகளுடன் பொருந்தியிருக்க முடியாது என்பது
வெளிப்படை. அந்த ஆதிக்கமும், இன்னும் மிகப் பெரிய செல்வக்
குவிப்பும், வெகுஜன சமூக வறிய நிலையுடன் சேர்ந்து இருப்பது
என்பது, உற்பத்தி சாதனங்கள் தனியார் உடமையாக இருத்தல் மற்றும்
இலாபக் கொள்கை ஆகியவற்றை கொண்டுள்ள ஒரு அமைப்புமுறை
சமூகத்தேவைகளுடன் சமரசத்திற்கு இடமில்லாதவகையில் எதிராக
இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. |