WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரிட்டனை
தனிமைப்படுத்தியதுடன் பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு முடிவடைகிறது
By Stefan Steinberg
10 December 2011
use this version to print | Send
feedback
வியாழன் மற்றும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில்
நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஒரு பெரும் மோதலின்
ஆதிக்கத்தில் இருந்தது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால
விடயங்களில் கிட்டத்தட்ட பிரிட்டன் ஒதுக்கப்பட்டதுடன்
முடிவடைந்தது.
தீவிரமாகும் கடன் நெருக்கடியின் விளைவை ஒட்டி
யூரோப்பகுதியில் இருந்து சில அங்கத்துவ நாடுகள் விலகக் கூடிய
வாய்ப்பு பற்றி நிதிய மற்றும் அரசியல் வட்டங்களில்
அதிகரித்துள்ள ஊகத்தைத்தான் இந்த ஆண்டு கண்டுள்ளது.
இந்த
ஊகம் கண்டத்தின் மிகச்சிறிய,
மிகஅதிகக் கடன்பட்டுள்ள கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் போன்ற
நாடுகளின் மீது கவனத்தை காட்டியது.
ஐரோப்பாவில் மூன்றாம் பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின்
செயற்பாடுகளிலும் ஒழுங்கமைப்பிலும் எவ்விதமான தாக்கம்மிக்க
குரலை ஒலிப்பதில் இருந்து நடைமுறையில் ஒதுக்கப்பட்டதை அடுத்து
இந்த ஆண்டு ஒரு முடிவிற்கு வருகிறது.
வெள்ளிக்கிழமை உச்சமாநாட்டுக் கூட்டத்தில்
27
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில்
26
நாடுகள் ஐரோப்பா முழுவதும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி
முன்வைத்துள்ள புதிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரவு-செலவுத்திட்ட
இலக்குகளை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன.
ஒரே
எதிர்ப்புக் குரல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட்
காமெரோனுடையதாக இருந்தது.
11மணி
நேரம் பரபரப்புடன் நடந்த பேச்சுக்களின்போது பிரான்ஸ் மற்றும்
ஜேர்மனி முன்வைத்த மாற்றங்களை காமெரோனின் தடுக்கும்
முயற்சிகளால் மோதல்கள் வெளிப்பட்டன.
பிந்தைய இரு நாடுகளும் பல நிதிய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க
ஐரோப்பிய ஒன்றியம் இயற்றும் சட்டத்தின் விளைவுகளில் இருந்து
லண்டன் நகரத்தை தவிர்த்துக்கொள்ளும் முறைக்கு ஒப்புக்கொள்ள
மறுத்துவிட்டன.
தன்
நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் காமெரோன்,
“பிரிட்டிஷ்
தேசிய நலன்கள் எவை என்று உறுதியாக நான் முன்னெடுக்கவேண்டி
உள்ளது”
என்று
வாதிட்டார்.
ஸ்வீடன்,
செக்
குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய முன்று நாடுகள் பேர்லின்
மற்றும் பாரிஸ் முன்வைத்துள்ள திட்டங்களுக்குத் தாங்கள் உடன்பட
முடியாது என்றும் முதலில் தங்கள் தேசிய பாராளுமன்றங்களை
கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவித்தன.
வியாழன் மாலை,
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மாநாட்டில் பிரிட்டனின்
நிலைப்பாடு
“ஏற்கத்தக்கதில்லை”
என்று
செய்தியாளர்களிடம் கூறினார்.
யூரோ
நெருக்கடியை சமாளிக்க விதிகளை ஆணையிட முயற்சிக்கும்,
அதே
நேரத்தில் யூரோப்பகுதியில் சேர மறுக்கும் காமெரோனை அவர்
சாடினார்.
இதன்பின் சார்க்கோசி உச்சிமாநாட்டை
“வரலாற்றுத்தன்மை”
உடையது
என்று விவரித்தார்.
பொது
நாணயத்தை பயன்படுத்தும்
17
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,
மற்றும் உபயோகிக்காத
10
நாடுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர்,
“யூரோ+முகாம்”
(கிரேட்
பிரட்டனை ஒதுக்கி)
தோற்றுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றிப் பாராட்டினார்.
வெள்ளியன்று ஸ்வீடன்,
செக்
குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகியவை 23 அங்கத்துவநாடுகளுடன்
சேர்ந்து சார்க்கோசி-மேர்க்கெல்
திட்டத்திற்கு ஆதரவு தருவதற்குத் தங்கள் வேறுபாடுகளைக் கைவிட
முடிவெடுத்தன. இது காமெரோனைத் தனிமைப்படுத்தியது.
முந்தைய ஐரோப்பிய ஒன்றிய விவாதங்களில் பிரிட்டிஷ் பிரதம
மந்திரி போலந்து,
ஸ்வீடன்,
டென்மார்க் போன்ற யூரோ நாடுகள் அல்லாதவற்றின் ஆதரவை ஐரோப்பியக்
கொள்கை பற்றிய ஆதரவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தார். இப்பொழுது
பிரெஞ்சு-ஜேர்மனிய
முன்னெடுப்பு இந்த அரசியல் முட்டுக் கொடுக்கும் தன்மையை
கிட்டத்தட்ட அகற்றிவிட்டது.
பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டின் பிளவுகளின்
மையத்தானத்தில் பிரிட்டிஷ் நிதிய மூலதனம் மற்றும் ஐரோப்பிய
வங்கிகளின் இணைப்புக்களின் மாறுபட்ட நலன்கள் உள்ளன.
வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் லண்டன் நகரத்தில்
குவிந்துள்ளன. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியப் பணிச்
சந்தைகள்மீது ஆதிக்கம் செலுத்தி,
நீண்டகாலமாகவே பாரிஸ் மற்றும் பிராங்க்பேர்ட்டில் மையம்
கொண்டுள்ள ஐரோப்பிய வங்கிகளின் நலன்களுக்கு இடையூறாக உள்ளன.
ஒரு வாரம் முன்புதான்,
பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டில் தன்னுடைய
முக்கிய பணி பிரிட்டிஷ் நிதியச் சந்தைகளின் இறைமையை
காப்பாற்றுதலாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
“நாம்
அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்”
என்று
பிரிட்டிஷ் மக்கள் மன்றத்தில் அவர் கூறினார்.
பிரிட்டனுக்குப் பணயமாக உள்ள பிரச்சினைகள்
சமீபத்திய
Open Europe
சிந்தனைக்குழுவின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளன;
இதுதான் பிரிட்டனின் வங்கித் துறைக்கு ஆலோசனை கூறும் அமைப்பு
ஆகும்.
இந்த
அறிக்கையின்படி,
ஐரோப்பிய ஒன்றியம் லண்டன் நகருக்கு எதிர்முறை விளைவுகளைக்
கொடுக்கக் கூடிய குறைந்தப்பட்ச
49
புதிய
கட்டுப்பாட்டுத் திட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறது.
“1990களிலும்
2000
தொடக்க
ஆண்டுகளிலும்,
ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளும் கொள்கை இயற்றுபவர்களும்
பொதுவாக
(ஆனால்,
எப்பொழுதும் அல்ல),
இங்கிலாத்தின்மீது நிதியக் கட்டுப்பாட்டைச் சுமத்துவதின்
தடுப்பை உணர்ந்திருந்தன,
இது
இப்பொழுது இல்லாமற் போய்விட்டது.”
என்று
Open Europe
குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிற்குமான
நிதியச்செயற்பாடுகள் மீதான வரி,
குறைந்தகால விற்பனைமீது தடைகள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி
நிதியச் செயற்பாடுகளை லண்டனில் இல்லாமல் யூரோப்பகுதிகளுக்குள்
நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருப்பது இங்கிலாந்திற்கு ஓர்
அடிப்படைச் சவாலாகும் என்று அறிக்கை குறிப்பாகத்
தெரிவித்துள்ளது.
அதன்
கண்டுபிடிப்புக்களின் தளத்தில் இந்த அறிக்கை பிரிட்டிஷ் பிரதம
மந்திரி பிரஸ்ஸல்ஸில் காமெரோன் எடுத்த அதே நடவடிக்கைக்கு
ஆலோசனை கொடுத்தது.
பிரிட்டிஷ் வங்கிகளின் நலன்களுக்கும் பிற
ஐரோப்பிய வங்கி நலன்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த பிளவை
பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு அம்பலப்படுத்தினாலும்,
ஐரோப்பிய அங்கத்துவ நாடுகள் வங்கிகள் அதிகாரத்தைக்
கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளன என்ற முடிவிற்கு வருவது
தவறாகிவிடும்.
இந்த
வாரம் பிரஸ்ஸல்ஸில் பிரான்ஸும் ஜேர்மனியும் பிணைத்துள்ள
உடன்பாட்டை ஒட்டிய ஒப்பந்தத்தின் மிகக்கணிசமான கூறுபாடுகளில்
ஒன்று வருங்காலத்தில் எந்தத் தனியார் வங்கிகள் அல்லது
பங்குப்பத்திரம் வைத்திருப்போரும் ஐரோப்பியப் பொருளாதாரப் பிணை
எடுப்பின் விளைவாக இழப்புக்களை எதையும் ஏற்கவேண்டும் எனக்
கூறப்படமாட்டா என்பதாகும்.
வங்கிகளின் மோசமான முதலீடுகளுக்கான முழுசெலவையும் ஈடுகட்டும்
பொறுப்பு தொழிலாள வர்க்க்தினால் சுமக்கப்பட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக,
ஜேர்மனிய நிதியக் கொள்கையின் முக்கிய கருத்து,
அரசாங்கங்கள் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் ஏற்படும்
இழப்புக்கள் தனி முதலீட்டாளர்களாலும் ஏற்கப்படவேண்டும் என்பதாக
இருந்தது.
சர்வதேச வங்கிகள் மற்றும் கடன்தர நிர்ணய நிறுவனங்களின் இடைவிடா
அழுத்தங்களை ஒட்டி
(இந்தவாரம்
முன்னதாக
Standard & Poor’s
ஜேர்மனி உட்பட பெரும்பாலான யூரோப்பகுதி நாடுகளின் தரத்தை
குறைப்பதாக அச்சுறுத்தியது)
அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம் அக்கோரிக்கையை அவர்
சார்க்கோசியுடனான உச்சிமாட்டிற்கு முன்னரே
தயாரிக்கப்படுவதற்கான பொதுத் திட்டத்தைப் பற்றிய
பேச்சுக்களுக்கு முன் கைவிட்டார்.
சார்க்கோசி-மேர்க்கெல்
திட்டம் கையெழுத்திடப்படுவதற்கு முன் நாடுகளிடையே தீவிர
வேறுபாடுகள் இருந்தன.
அதில்
பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையே இருந்த கருத்து
வேறுபாடுகளும் அடங்கும்.
பிரஸ்ஸல்ஸில் இருந்து சற்று தளர்ந்த செல்வாக்கு,
ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து கூடுதலான வரிவாக்கக் கொள்கை
என்பதை பிரான்ஸ் கடினத் தேவையை உடைய ஐரோப்பிய வங்கிகளுக்கு
எளிதான யூரோக்களை முதலில் பிரெஞ்சு வங்கிகளுக்கு வழங்க
விரும்பியது. ஜேர்மனியோ இன்னும் மத்தியப்படுத்தப்பட்ட கருவி
ஒன்று தேசியப் பாராளுமன்றங்களை மீறி, மேலும் ஐரோப்பிய ஒன்றியம்
முழுவதும் நிதியக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தவும், ஐரோப்பிய
மத்திய வங்கிகளுக்கு இன்னும் அதிகமான மட்டுப்படுத்தப்பட்ட
பங்கைத்தான் விரும்புகிறது.
ஆனால் பிரிட்டன் உட்பட அனைத்துமே சர்வதேச நிதிய
உயரடுக்கு ஆணையிடும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டன.
இந்த
நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கம் விலைகொடுக்க வேண்டும் என்ற
பிரச்சினையில் லண்டன்,
பாரிஸ்,
பேர்லின் ஆகியவற்றிற்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை.
ஐரோப்பியக் கடன் நெருக்கடியைக் குறைப்பதற்கான
முயற்சிகளில்
“வெட்டுக்களை
ஏற்றுக்கொள்ளும்”
ஒரு
பகுதியை வங்கிகள் ஏற்க வேண்டும் என்ற அழைப்பைக்
கைவிட்டுள்ளதுடன்,
பிரஸ்ஸல்ஸில்
26
நாடுகளும் ஒப்புக் கொண்ட திட்டத்தின் முக்கிய கூறுபாடுகளில்
தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதிய,
வரவுசெலவுத்திட்ட கொள்கைகளை மேற்பார்வையிட,
ஆணையிட
பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்திற்கு பகுதி சர்வாதிகார அதிகாரங்கள்
கொடுக்கப்படுதலும் அடங்கும்.
புதிய உடன்பாடுகள் முக்கியமான அரசியல் மற்றும்
சட்டவகை கண்ணிவயலாகும்.
உடன்பாட்டின் இறுதி உள்ளடக்கம் அடுத்த ஆண்டு வசந்தகாலத்தில்
திட்டமிடப்பட்டுள்ள புதிய உச்சமாநாட்டிற்கு முன்னதாகவே இறுதி
வடிவம் பெற்றுவிடும்.
வெள்ளியன்று பெரும்பாலான பங்குச் சந்தைகள்
உச்சிமாநாட்டை எதிர்கொள்ளும் வகையில் ஏற்றம் பெற்றன;
இதற்கு
முக்கிய காரணம் ஐரோப்பிய அரசாங்கக் கடன் துறையில்
“வெட்டுதல்கள்”
வங்கிகளுக்குக் கைவிடப்பட்டது என்பதும் ஐரோப்பிய
ஸ்திரப்படுத்தல் அமைப்பை
(European Stability Mechanism-
ESM)
ஓராண்டு முன்கூட்டி,
ஜூலை
மாதத்திலேயே கொண்டுவருதல் என்னும் உச்சிமாட்டின் முடிவும்
ஆகும்.
ஆனால் அமெரிக்கா,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல ஐரோப்பிய அரசாங்கங்கள்
ஐரோப்பிய ஸ்திரப்படுத்தல் அமைப்பின் இருப்புக்களை பெரிய அளவில்
உயர்த்த வேண்டும்,
அதை
சந்தைகளுக்கு எளிய கடன்களை வெள்ளமெனக் கொடுக்கும் வங்கியாக
மாற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட திட்டங்கள்
ஜேர்மனியினால் தடுக்கப்பட்டுவிட்டன.
ஐரோப்பிய நெருக்கடியில் வந்துள்ள ஓய்வு குறுகிய
வாழ்க்கை காலத்திற்குத்தான் இருக்கக்கூடும்.
ஐரோப்பா ஏற்கனவே மந்தநிலையில் மூழ்கிவிட்டது. அமெரிக்கப்
பொருளாதாரம் சரிவு என்னும் சகதியில் சிக்கித்திணறுகிறது. சீனா,
இந்தியா,
பிரேசில் போன்ற
“எழுச்சி
பெறும் பொருளாதாரங்களில்”
பொருளாதர வளர்ச்சி குறைந்துவிட்டது.
கிரேக்கம்,
போர்த்துக்கல்,
அயர்லாந்து,
ஸ்பெயின்,
இத்தாலி போன்ற நலிந்த ஐரோப்பிய நாடுகளில் சுமத்தப்படுகின்ற
சிக்கன நவடிக்கைகள் ஏற்கனவே அந்நாடுகளை மந்தநிலையில் தள்ளி,
அவற்றின் கடன் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன;
இதேபோன்ற கொள்கைகள் இப்பொழுது பிரான்ஸ்,
பிரிட்டன் இன்னும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்
தீவிரப்படுத்தப்படும்.
இக்கொள்கைகள் தொழிலாள வர்க்க எதிர்ப்பு
வளர்ச்சிக்கு எரியூட்டுவதுடன் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே
உள்ள விரோதப் போக்குகளை தீவிரப்படுத்தும்.
யூரோ
நெருக்கடி ஒரு மோசமான திருப்பத்தை அடைவது என்பது குறுகிய
காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைதான்.
புதிய கட்டமைப்புக்கள்,
முடிவெடுக்கும் பிரிவுகள் ஆகியவற்றில் இருந்து பிரிட்டன்
ஒதுக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியமே சிதைவதில் முக்கிய
நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
நெருக்கடியின் தாக்குதல்களின்கீழ்,
50
ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த முதலாளித்துவ முறையிலான
ஐரோப்பிய ஒருங்கிணைப்பு வழிவகை இப்பொழுது விரைவில் சரியத்
தொடங்கிவிட்டது. |