சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Bonn conference on Afghanistan dominated by crisis and pessimism

ஆப்கானிஸ்தான் பற்றிய பொண் மாநாட்டில் நெருக்கடியும் அவநம்பிக்கையும் மேலாதிக்கம் செலுத்துகின்றன

By Bill Van Auken
6 December 2011

use this version to print | Send feedback

பொண் நகரில் ஆப்கானிஸ்தான் குறித்த முதல் சர்வதேச மாநாடு நடத்து ஒரு தசாப்தம் கடந்த பின், முந்தைய மேற்கு ஜேர்மனியின் தலைநகருக்கு பிரதிநிதிகள் திங்களன்று மீண்டும் பெருகும் பிராந்திய நெருக்கடி மற்றும் பத்தாண்டுக் கால போர் தோற்றுவித்துள்ள பெருகிய அவநம்பிக்கைத்தன்மை ஆகியவற்றுடன் கூடுகின்றனர்.

பொண் II என்று அறியப்பட்டுள்ள மாநாட்டில், 2001 இல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படையெடுப்பை அடுத்து நிறுவப்பட்ட ஜனாதிபதி ஹமித் கர்சாயியின் ஆட்சிக்கு தொடர்ந்த ஆதரவளிப்பதை உறுதி செய்ய இது கூடியுள்ளது. 2014ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க-நேட்டோ போர் நடவடிக்கைகள் முறையாக நிறுத்தப்படும் என்று கடந்த வருடம் நேட்டோ மாநாட்டில் பொதுவாக அறிவிக்கப்பட்டதை அடுத்தும் ஆதரவு தொடரும் என்பதுதான் முக்கிய நோக்கம்.

ஆனால் ஒரு புறம் கர்சாயுடன் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், இராணுவத் தளங்களை ஆப்கானிஸ்தானில் அனுமதிக்கும் மூலோபாயப் பங்காளித்தனம் குறித்த பேச்சுக்களை நடத்த வாஷிங்டன் முயல்வது மற்றும் மறுபுறம் அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே அழுத்தங்கள் என்பவற்றின் முன்னிழல்கள் மாநாட்டின்மீது படர்ந்துள்ளன.

ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லையில் இருந்த இரு இராணுவச் சாவடிகளை நவம்பர் 26ம் திகதி அமெரிக்க விமானத் தாக்குதல் இரண்டு டஜன் பாக்கிஸ்தானிய படையினரை கொன்றதை அடுத்து பாக்கிஸ்தான் இம்மாநாட்டைப் புறக்கணித்தது. இந்த நிகழ்வை வாஷிங்டன் சோகம் ததும்பிய விபத்து என்று விவரித்தாலும், பாக்கிஸ்தானிய இராணுவம், இது வேண்டுமேன்றே நடத்தப்பட்ட ஆக்கிரோஷச் செயல் என்று கூறியுள்ளது. மாநாட்டிற்கு பிரதிநிதியை அனுப்ப மறுத்துள்ளதுடன், இஸ்லாமாபாத் பாக்கிஸ்தான் மூலம் செல்லும் பொருள் விநியோகப் பாதைகளை மூடிவிட்டு, அமெரிக்கா அதன் CIA ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல்களை ஏவும் பலுச்சிஸ்தானில் உள்ள விமானத் தளத்தை காலி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

பாக்கிஸ்தான் வராமற்போனது அந்நாட்டில் இராணுவச் செயற்பாடுகளை  ஆப்கானிஸ்தானுக்கு கட்டுப்பாட்டை மாற்றுவது குறித்த முக்கியக் கூறுபாட்டில் ஒரு தோல்வி என்று அடிக்கோடிடப்படுகிறது: அத்தகைய சமாதானப்படுத்தும் முறை வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தாலிபன் இன்னும் பிற சக்திகளின் எதிர்ப்பிற்கு முடிவு கட்டும்.

அமெரிக்க-நேட்டோ மூலோபாயம் நாட்டின் தெற்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியான எழுச்சிகள்மீது குவிப்பைக் காட்டுகிறது; அத்துடன் பாக்கிஸ்தானுக்குள்ளும் இடைவிடா ட்ரோட் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்தும்; இது தாலிபனை வீழ்த்தி அதை பலவீனமான நிலையில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வைக்க வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கம் தாலிபன் தலைமை மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் முற்படுகிறது. அத்தலைமை பாக்கிஸ்தான் நகரமான க்வெட்டாவில் தளம் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது; ஆப்கானிய எல்லையில் பழங்குடிப் பகுதிகளில் இருக்கும் எழுச்சியாளர்களுக்கு எதிராகப் பாக்கிஸ்தானிய இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்த வேண்டும், தாலிபன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்ற அழுத்தங்களும் இதில் உள்ளன.

தன்னுடைய பங்கிற்குத் தாலிபன் பேச்சுவார்த்தைகளின் மூலமான உடன்பாட்டிற்கான அணுகுதல்களை உதறித்தள்ளியுள்ளது; இந்த வாரம் பொண் மாநாடு பற்றிய அறிக்கையில் அத்தகைய உடன்பாட்டிற்கு முன்னிபந்தனை நாட்டில் இருந்து அனைத்து வெளி இராணுவச் சக்திகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பொண் மாநாடு ஆப்கானிஸ்தானத்தை ஆக்கிரமிப்பு நெருப்புகளுக்குள்தான் இன்னும் சிக்க வைக்க உதவும் என்றும் தாலிபன்கள் எச்சரித்துள்ளனர்.

தாலிபன் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபின் உடனடியாக நடந்த முதல் பொண் மாநாடு, வேண்டுமென்றே தாலிபன் பங்கு பெறுதலை ஒதுக்கியது. வடக்குக் கூட்டின் போர்ப்பிரபுக்களை முக்கியமாகக் கொண்ட ஒரு காலனித்துவ வகை ஆட்சியை ஒன்றாக இணைக்கும் முறையிலும், ஜனாதிபதியாக இருத்தப்பட்ட வாஷிங்டனின் கைப்பாவை கர்சாயையும் சேர்க்கும் வகையிலும்-- பிற போர்க்குற்றங்களை நடத்துவதற்கும்தான் அது நடைமுறைக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இன்னும் காபூலில் ஊழல் மிகுந்த அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். இதை பெரும்பாலான ஆப்கானிய மக்கள் சட்டபூர்வமற்ற அரசு என்று காண்கின்றனர். ஜேர்மனிய ஊடகத்தில் வந்துள்ள தகவல்களின்படி, அவர் இரண்டாம் பதவிக்காலம் 2014ல் முடிந்தபின்னும் அதிகாரத்தில் இருக்கத்தான் விரும்புகிறார்.

2001ல் போர் தொடங்கியதில் இருந்து, 2,823 அமெரிக்க, பிரிட்டஷ் இன்னும் மற்ற வெளிநாட்டுத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த  ஆப்கானிய மக்களின் இறப்பு எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உள்ளது. ஒரு சமீபத்திய ஐ.நா.அறிக்கை 2011ல் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,462 ஆப்கானியக் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளன என்று கூறுகிறது. இது கடந்த ஆண்டின் இதேகாலத்திய இறப்பு எண்ணிக்கையைவிட 15% அதிகம் ஆகும். சந்தேகத்திற்கு இடமில்லாமல் உண்மை இறப்புக் கணக்கைவிடக் குறைவான இந்த எண்ணிக்கை எந்த அளவிற்கு போர் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் வன்முறை அளவு அதிகரித்துக் கொண்டுவருகிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

பொண் மாநாட்டில் வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளன்டன், அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் நம் நண்பர்களுடன் தொடர்ந்து செயல்பட விரும்புகிறது என்றார். ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே இதேபோன்ற கருத்தைத்தான் கூறினார்: ஆப்கானிஸ்தான மக்களுக்குத் தெளிவான செய்தியை அனுப்புகிறோம். உங்களைப் பாதுகாப்பின்றி விட்டுவிட மாட்டோம். சங்கடத்தில் உங்களை விட்டுவிட மாட்டோம் என்றார்.

இதேபோக்கில் செல்வது, ஆப்கானியர்களை சங்கடத்தில் விட்டு நீங்கமாட்டோம் என்றெல்லாம் பேசுவது அமெரிக்காவும் நேட்டோவும் உத்தியோகபூர்வ 2014 காலக்கெடுவையும் தாண்டி அந்நாட்டில் நிரந்தரமான இராணுவ நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளத்தான் முறபடுகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் தன் உண்மையான  மூலோபாய நோக்கங்களை தொடர்வதை வாஷிங்டன் இன்னமும் கொண்டுள்ளதுஅதாவது எரிசக்தி வங்கள் உடைய மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இராணுவ நிலைப்பாட்டை நிலைகொள்ளச்செய்தல், அதே நேரத்தில் சீனாவிற்கு எதிராக அமெரிக்க பலத்தை உயர்த்திக் காட்டுதல் என்பதை.

தன்னுடைய தொடர்ந்த ஆக்கிரமிப்பிற்கு ஒரு சட்டபூர்வ மூடுதிரையை வழங்க காபூல் ஆட்சியுடன் ஒரு மூலோபாய கூட்டு உடன்பாட்டைக் காண வாஷிங்டன் முற்பட்டுள்ளது. தன்னுடைய பங்கிற்கு கர்சாய் ஒரு பெரும் குழுவை லோயா ஜிர்கா அமெரிக்கத் துருப்புக்கள் 10 ஆண்டுகள் இன்னும் நீடித்திருப்பதற்கான உடன்பாட்டிற்கு ஆதரவைப் பெறுவதற்கு கூட்டியுள்ளார். இந்த நடவடிக்கை ஆக்கிரமிப்பு தொடர்பிற்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது. அதே நேரத்தில் பலர் இக்கூட்டம் கர்சாயியின் விசுவாசிகளால் நிரப்பப்பட்டிருந்த்தது, எந்த வகையிலும் ஆப்கானிய மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். Spiegel Online க்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கர்சாய் போர் நடவடிக்கைகள் முறையாக முடிந்தபின்னரும் 20,000 அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்தில் நீடிக்கும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிதான் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் 2014க்குப் பின்னரும், படைகள் மீண்டும் திரும்ப வேண்டும் என்னும் காலக்கெடுக்குப் பின்னரும், ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனியத் துருப்புக்கள், ஆப்கானியப் படைகளுக்குப் பயிற்சியாளர்களாக செயல்புரிய நீடிக்கலாம் என்று கூறினார்.

லோயா ஜிர்கவில் எழுப்பிய, பொண்ணில் கர்சாய் வலியுறுத்திய ஒரு நிபந்தனை அமெரிக்கச் சிறப்புப் படைகள் ஆப்கானிய வீடுகளின் இரவு நேரங்களில் சோதனை இடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வாஷிங்டனுடன் ஒப்பந்தம் காண்பதைப் பற்றியதாகும். அத்தகைய சோதனைகள் பல பொதுமக்கள்  இறப்புக்களை ஏற்படுத்தி, ஆப்கானிஸ்தான் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, மற்றும் அவருடைய ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பைத் திசை திருப்பும் வகையில்தான் கர்சாய் இக்கோரிக்கையை முன்வைத்தார் என்றாலும், ஆப்கானிஸ்தானத்தில் தன் மிருகத்தன தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று அமெரிக்க இராணுவம் தெளிவாக்கிவிட்டது. உண்மையில் அமெரிக்கத் தளபதிகள் தாங்கள் மற்றொரு விரிவாக்கத்திற்கு தயார் செய்து கொண்டிருப்பதாகக் குறிப்புக் காட்டியுள்ளனர்; இதில் மீண்டும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் ஹெல்மாண்ட் மற்றும் காந்தகார் மாநிலங்களில், பாக்கிஸ்தான் எல்லைக்கு கிழக்கே அமெரிக்கத் துருப்புக்கள் பழையபடி நிலைநிறுத்துதல் அடங்கியிருக்கும். 2012 மற்றும் 2013 முழுவதும் அப்பகுதியில் பெரும் மோதல்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இதைத் தவிர பாக்கிஸ்தானில் எல்லை கடந்து ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களின் இலக்குகளிலும் விரிவாக்கம் இருக்கும். பிரிட்டிஷ் நாளேடான கார்டியனில் வந்துள்ள ஒரு தகவல்படி, பாக்கிஸ்தானுக்குள்ளும் இலக்குகளுக்கு எதிரான அமெரிக்கச் சிறப்புப் படைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானத்துடன் ஒரு நீண்ட கிழக்கு எல்லைப் பகிர்ந்துகொள்ளும் ஈரான் ஆப்கானிஸ்தானத்தில் நிரந்தரத் தளங்களைக் கொள்ள விரும்பும் அமெரிக்க முயற்சிகளுக்குத் தன் எதிர்ப்பை வலியுறுத்தியுள்ளது. சில மேலை நாடுகள் ஆப்கானிஸ்தானத்தில் 2014க்கும் அப்பால் தங்கள் இராணுவத் தளங்களை அங்கு தக்க வைத்துக் கொள்வதற்கு இராணுவ நிலைப்பாட்டை விரிவுபடுத்த முயல்கின்றன என்று ஈரானின் வெளியுறவு மந்திரி அலி அம்பர் சலேஹி மாநாட்டில் கூறினார். அத்தகைய அணுகுமுறை ஆப்கானிஸ்தானத்தின் பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் நீடிக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு முரணானது ஆகும்.

மேற்கிற்கும் ஈரானுக்கும் இடையே உள்ள அழுத்தங்களும் ஈரானிய அணுச் சக்தித் திட்டம் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி உறுதியாக பெருகியுள்ளன. இத்தகைய ஆபத்தான மோதல் ஆப்கானிய போருக்குள்ளும் சிதறலாம், இந்த வாரம், ஞாயிறன்று ஆப்கானிய எல்லைக்கு அருகே அமெரிக்க ஒற்று ட்ரோன் விமானம் ஒன்றை தெஹ்ரான் சுட்டுவீழ்த்தியதாக தகவல் கொடுத்துள்ளதை அடுத்து இன்னும் வெளிப்படையாகிறது.

மாநாட்டில் தன்னுடைய உரையில், கர்சாய் வாஷிங்டனால் இருத்தப்பட்டுள்ள ஆப்கானிய ஆட்சிக்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு கணிசமான பொருளாதார, இராணுவ ஆதரவு தேவை என்று வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிய அரசாங்கத்திற்குக் குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றிற்கு உதவித்தொகையாக $10 பில்லியன் தேவைப்படும் என்றும் $6 பில்லியன் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளை உறுதிப்படுத்த தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆப்கானியப் படையில் 350,000 படையினர் இருப்பர்.

மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்  மேலை இராணுவ மற்றும் பொருளாதார உதவி தொடர்ந்து பாய்வதற்கு ஈடாக, ஆப்கானிய ஆட்சி ஊழலை எதிர்த்து நிற்கும், ஆட்சியை சிறப்பாக்கும் என்ற உறுதி உள்ளது.  

 “அனைத்து மட்டங்களிலும் ஆப்கானிய அரசாங்க அமைப்புகள் ஆப்கானிய மக்களின் பொது, பொருளாதாரத் தேவைகளுக்கான பொறுப்பை அதிகரிக்க வேண்டும், முக்கிய பணிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்நிலையில், குடிமக்கள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி வலியுறுத்தப்படுல், அனைத்துவகை ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்று ஆவணம் கூறுகிறது.

அவை அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத்தின் மதிப்பைவிட இத்தகைய உறுதிகளின் மதிப்பு பயனற்றவை ஆகும். குறிப்பாக கர்சாயியிடம் இருந்து வரும்போது; ஏனெனில் அவருடைய நெருக்கமான நண்பர்களும் குடும்பமுமே பெரும் தவறான ஊழல் செயல்களில் நெருக்கமான தொடர்பை உடையவை. அதில் காபூல் வங்கி ஊழல், போதை மருந்து வணிகம் ஆகியவை உள்ளன.

ஆப்கானிஸ்தானத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து மிக அதிக நம்பிக்கையற்ற கருத்துக்கள் அந்நாட்டிலுள்ள ஒரு முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தோமஸ் ருட்டிக் இடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. Spiegel Online இடம் தோமஸ் ருட்டிக் கூறினார்: நாம் இப்பொழுது காண்பது போட்டியிடும் போராளிக்குழுக்கள் கட்டுப்பாடின்றிப் பெருகுவதுதான். மேலும் கூடுதல் எண்ணிக்கை படைத்த இராணுவப் படைகள்; இவர்களுடைய விசுவாசங்கள் காபூல் அரசாங்கத்திற்கு என்பதற்கு மாறாக அவர்களுடைய முன்னாள் தளபதிகளிடம்தான் உள்ளதுஅவர்களை ஒன்றாக இணைக்கும் சக்தி ஏதும் இல்லாத நிலையில், அதிலும் மேலைத் துருப்புக்கள் பின்வாங்கப்பட்ட நிலையில் (இது அதிகமாகும்). இதுதான் ஒரு உள்நாட்டுப் போர் தோன்றுவதற்குக் காரணக்கூறுபாடுகள் ஆகும்.