WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
அமெரிக்க ஏயர்லைன்ஸ் திவாலும் பொதுச்சொத்துடைமைக்கான வாதமும்
Barry Grey
1 December 2011
use this version to print | Send
feedback
செவ்வாயன்று அமெரிக்க ஏயர்லைன்ஸ் திவாலுக்குப்
பதிவு செய்துள்ளமை ஏயர் லைன்ஸ் தொழில்துறை மற்றும் அவற்றிற்கு
நிதி அளிக்கும் வங்கிகள் தனியார் உடைமையில் இருந்து
அகற்றப்பட்டு பொதுச்சொத்துடமையாக்கப்பட வேண்டும் என்ற சோசலிச
கொள்கைக்கான ஒரு வலுவான வாதம் ஆகும்.
இந்த தசாப்தத்தில் நீதிமன்ற மேற்பார்வையில்
தொடர்ச்சியாக ஏயர்லைன் தொழில்துறை மறுசீரமைப்புக்களில்
கடைசியாக வந்துள்ள இந்த நடவடிக்கை நிறுவனத்தின்
78,000
ஊழியர்களுக்கு எதிரான வெளிப்படையான
யுத்தச்செயல் என்பதுடன்,
தொழிலாள வர்க்கம் முழுவதற்குமே கடுமையான
தாக்கங்களையும் கொண்டுள்ளது.
விமான நிறுவனத்தின் தாய் நிறுவனமான
AMR Corporation
உடைய புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாக
அதிகாரி தோமஸ் ஹோர்ட்டன் நிறுவனம் அத்தியாயம்
11
பாதுகாப்பின்கீழ் திவால்தன்மையை பதிவு
செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்தினார். இது தற்பொழுதுள்ள
தொழிலாளர்களுடனான ஒப்பந்தகளைக் கிழித்தெறியவும்,
வேலைகள்,
ஊதியங்கள்,
பணிநிலமைகள் மற்றும் ஓய்வூதியங்களில் கடுமையான
வெட்டுக்களை சுமத்துவதற்கும் வழிவகுக்கும்.
அமெரிக்காவின் தொழிலாளர்கள் செலவினங்கள் அதன்
போட்டியாளர்களுடையதைவிட ஆண்டிற்கு
$800
மில்லியன் அதிகம் என்று கூறிய ஹோர்ட்டன்
“ஒரு
போட்டித்தன்மை உடைய செலவினக் கட்டமைப்பு”,
திவால் வழிவகையில்
“இன்றியமையாதது”
என்றும்
“நம்
தொழிற்சங்கங்கள் அனைத்துடனும் தொழிலாளர் செலவினங்களை
குறைப்பதற்கான பேச்சுக்களை தொடக்க”
திட்டங்களையும் அறிவித்தார்.
ஒரு நட்புடனான கூட்டாட்சித் திவால் நீதிமன்றம்
ஊழியர்களின் ஊதியங்கள்,
வேலைகளில் வெட்டுக்களை சுமத்துவதற்கு
நம்பப்படலாம்,
நிறுவனம் அதன் ஓய்வூதியத் திட்டங்களை
மூடிவிடும் முடிவிற்கும் ஒப்புதல் கொடுக்கும் வகையில்
ஒப்புதலளிக்க நம்பப்படலாம் என்று நன்கு தெரிந்தே அவர் அவ்வாறு
அறிவித்தார்.
யுனைட்டட்,
டெல்டா மற்றும் யுஎஸ் ஏயர்வேஸ் ஆகியவற்றில்
நீதிமன்றம் மேற்பார்வையிட்டு மறுசீரமைத்த திவால் தன்மையின்
விளைவு மாபெரும் வேலை இழப்புக்கள்,
ஊதியக் குறைப்புக்கள் கிட்டத்தட்ட
30%,
மற்றும் கிட்டத்தட்ட
50%
ஓய்வூதிய நலனக் குறைப்புக்கள் என்றுதான்
இருந்தன.
நியூ யோர்க் டைம்ஸ்
Avondale Partners
ல் விமானத்துறை பகுப்பாய்வாளராக இருக்கும்
Bob McAdoo,
“இது
ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல,
ஒரு தாக்குதலுள்ள திவால்,
இவர்கள் தங்கள் தொழிலாளர்கள் தொகுப்பிற்கு
எதிராகச் செலவுகளை குறைக்க முயல்கின்றனர்.
இவர்களுக்கு நிறைய தனியுரிமைகளும் நிறைய பணமும்
உள்ளன.
இவர்கள் ஒன்றும் இங்கு திவால்தன்மைக்குக்
கட்டாயப்படுத்தப்படவில்லை.
அவர்களுடைய செலவுக் கட்டமைப்பில் பிரச்சினையை
கொண்டுள்ளனர்,
அதைச் சமாளிக்க விரும்புகின்றனர்”
என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
கூட்டாட்சியின் ஓய்வூதிய நலன்களுக்கான உத்தரவாத
அமைப்பின்
(Pension Benefit Guaranty Corporation)
ஜோஷ் கோட்பாமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
மேற்கோளிட்டுள்ளது:
“ஊழியர்களும்
ஓய்வு பெற்றவர்களும் கவலைப் படுகிறார்கள்—அவர்கள்
கவலைப்படத்தான் வேண்டும்.
எங்கள் மதிப்பீடுகளை ஒட்டி,
அமெரிக்கன் நிறுவனம் தன் திட்டங்களை முடிவிற்கு
கொண்டுவந்தால் அமெரிக்க ஏயர்லைன்ஸ் ஊழியர்கள் ஓய்வூதிய
நலன்களில் பில்லியன் டாலர்களை இழக்க கூடும்.”
தங்கள் பங்கிற்கு,
அமெரிக்கன் ஏயர்லைன்ஸ் நிர்வாகிகள் பல
மில்லியன் இழப்பீட்டுத் தொகுப்பாக தொடர்ந்து பெறுவர்.
பதவியை விட்டு விலகும் தலைமை நிர்வாக அதிகாரி
ஜேராட் ஆர்பே ஓய்வுதிய நலன்கள்
$4.7
மில்லியனுடன் செல்கின்றார்.
திவால்தன்மைப் பதிவு போட்டியிடும் நிறுவனங்கள்
உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக செலவுகளைக்
குறைக்கவும் இலாபத்தை தக்க வைக்கவும் விமானத்துறை தொழிலாளர்கள்
மீது ஒரு சர்வதேசத் தாக்குதலை நடத்துவதின் ஒரு பகுதிதான்.
கடந்த மாதம்,
அமெரிக்காவின்
OneWorld Alliance
உடைய பங்காளி குவான்டாஸ்
–Qantas-
தன் முழு விமானங்களையும் கீழிறக்கி
தொழிலாளர்களிடம் இருந்து ஆழ்ந்த விட்டுக்கொடுப்புகளை பெற
அழுத்தம் கொடுத்தது.
பிரிட்டிஷ் ஏயர்வேஸ் மற்றும் ஜப்பான்
ஏயர்லைன்ஸ் போன்ற பிற முக்கிய விமானப் போக்குவரத்து
நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான வேலைகளைத் தகர்த்துள்ளன.
அமெரிக்க தொழிலாளர்களுக்கு சொல்லவொணாத்
துன்பங்களை கொடுப்பதுடன்,
மறுசீரமைப்பு என்பது பணியில் இன்னும்
வெட்டுக்களை கொடுக்கும்,
சாதாரண பயணிகளுக்கு நெரிசல் சூழலை ஏற்படுத்தும்,
பாதுகாப்பில் இன்னும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு ஏற்கனவே தொழில்துறையில்
இலாபத்திற்கான வெறிகூடிய உந்துதல், விமானப் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலையில் தூக்கத்தில் ஆழ்ந்துவிடும்
அளவிற்கு கூடுதலாக உழைக்கும்,
கூடுதல் அழுத்தங்களுக்கு உட்படுவது
அதிகரித்துள்ளதைத்தான் காட்டுகிறது.
முந்தைய நீதிமன்ற மேற்பார்வையில் நடந்த
மறுசீரமைப்புக்கள் தொழில்துறையில் கூடுதல் குவிப்பு,
ஏகபோக உரிமை ஆகியவற்றைத் தோற்றுவித்துள்ளன.
யுனைட்டட் மற்றும் கான்டினென்டல் ஆகியவை
ஒருங்கிணைந்தன,
டெல்டாவும் நோர்த்வெஸ்ட்டும் ஒருங்கிணைந்தன.
அமெரிக்க ஏயர்லைன்ஸின் திவால்தன்மை
விமானத்துறைமீது கட்டுப்பாடுகளை
30
ஆண்டுகளுக்கும் மேலாக தளர்த்தியதின் விளைவு
ஆகும்.
விமானப் போக்கு வரத்து நிறுவனங்கள் மீது
அரசாங்க மேற்பார்வை கிட்டத்தட்ட முழுமையாக அகற்றப்பட்டதை
நியாயப்படுத்த பல காரணங்கள் கூறப்பட்டன—சந்தைதான்
திறமைக்கு சிறந்த உத்தரவாதம் கொடுக்கும்,
தரம்,
பாதுகாப்பு,
ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றிற்கும் எனக்
கூறப்பட்டது. இவை அனைத்தும் பொய்கள் என்று நீண்டகாலம் முன்னரே
அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன.
கட்டுப்பாட்டு தளர்த்தலை நோக்கிய மாற்றம்,
விமானங்களில் தொடங்கி ட்ரக்குகளுக்கும் நிதியத்
துறைக்கும் வந்தது,
பிற முக்கிய கொள்கைகள் முன்முயற்சியைப் போலவே,
இதுவும் அடித்தளத்திலுள்ள சமூக வழிவகைகள்,
வர்க்க நலன்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும்
வகையில்தான் வெளிப்பட்டுள்ளன.
1978ல்
ஆரம்பிக்கப்பட்ட விமானத்துறைக் கட்டுப்பாடு தளர்த்தப்படல்,
அமெரிக்க ஆளும் வர்க்கம் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிராக மிருகத்தன தாக்குதலை தொடங்கியதைக்
குறிக்கிறது.
இதன் நோக்கம் போருக்குப் பிந்தைய சட்டப்பூர்வ,
கட்டுப்பாடுகள் நிறைந்த,
சமூக உறவுகள் என்னும் கட்டமைப்பை மறைத்து
அதற்குள் இருந்த ஆளும் வர்க்கத்தின் ஒப்புமையில் தொழிலாள
வர்க்கத்துடன் கொண்டிருந்த வர்க்க சமரசத்தை அகற்றுதலாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகப் பொருளாதார விரிவாக்கமும்
அமெரிக்க பொருளாதார மேலாதிக்கமும் அத்தகைய சமரசத்தை உருவாக்க
காரணமாகவிருந்தன.
ஏற்றம் மறைந்து,
அமெரிக்கப் பொருளாதாரம் சரியத் தொடங்கியபோது,
அமெரிக்கப் பெருநிறுவன-நிதிய
உயரடுக்கு வர்க்கப் போர்க் கொள்கைகளுக்குத் திரும்பியது.
இது ஜனநாயகக் கட்சியிராயினும் சரி,
குடியரசுக் கட்சியினராயினும் சரி இரு பெரிய
வணிகக் கட்சிகளாலும் தழுவப்பட்ட இருகட்சிக் கொள்கையாக
இருந்ததுடன்,
இன்றுவரை அப்படித்தான் உள்ளது.
விமானப் போக்குவரத்துக்கள் மீதான
கட்டுப்பாடுகள் தளர்த்தல் ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயக
நிர்வாகத்தின் கீழ் தொடங்கி,
அவருடைய போக்குவரத்து மந்திரி ஆல்பிரெட்
கானினால் அறிவிக்கப்பட்டு,
முக்கிய ஜனநாயகத் தாராளவாதி எட்வார்ட்
கென்னடியினால் ஆர்வத்துடன் ஆதரிக்கப்பட்டது.
கார்ட்டர் நிர்வாகம் விமானப் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்கமான
PATCO
வை நசுக்கும் திட்டங்களை இயற்றியது. இவை
ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரதிநிதிகள்
மன்றத்தின் ஆதரவுடன் ஆகஸ்ட்
1981ல்
ரோனால்ட் ரேகனால் செயல்படுத்தப்பட்டன.
PATCO
தகர்ப்பு ஊதியக் குறைப்பு,
வேலைநிறுத்த முறிப்பு,
தொழிற்சங்கங்களை உடைத்தல் என்று
பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறுவனங்கள் ஈடுபட்ட
வெள்ளம் போன்ற செயலைத் திறந்தது.
இதில் முக்கிய கவனத்திற்குரியதாக விமான
நிறுவனங்களாக இருந்தன. அங்கு சலுகைகள் குறைப்பிற்கு எதிரான
கடுமையான வேலைநிறுத்தங்கள் கான்டினென்டல் ஏயர்லைன்ஸ்
(1983),
யுனைட்டட் ஏயர்லைன்ஸ்
1985),
டிரான்ஸ் வேர்ல்ட் ஏயர்லைன்ஸ்
(1986).
ஈஸ்டர்ன் ஏயர்லைன்ஸ்
(1989)
ஆகியவற்றில் தோற்கடிக்கப்பட்டன.
1980, 1990
களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளச்
சின்னங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தபின்,
இவற்றுள் பல நிறுவனங்கள் இப்பொழுது இல்லை. இது
இலாப முறையின் சரிவு அதன் உலக மையத்தில் ஏற்பட்டுள்ளதைத்தான்
பிரதிபலிக்கிறது.
விமானப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மீதான
தாக்குதல் கார்தொழில்,
எஃகுத் தொழில்துறை தொழிலார்கள்,
டிரக் சாரதிகள்,
சுரங்கத்தொழிலாளர்கள்,
இறைச்சிப் பதனிடுத் தொழிலாளர்கள் என்று ஒவ்வொரு
தொழிலாளர் வர்க்கத்தின்மீதும் நடத்தப்பட்ட பரந்த தாக்குதலின்
ஒரு பகுதிதான்.
இது தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு,
உடந்தை ஆகியவற்றின் மூலம்தான் முடிந்தது.
PATCO
தொடங்கி ஒவ்வொரு போராட்டமும்
தனிமைப்படுத்தப்பட்டு,
வெளி ஊழியர்களைக் கொண்டுவந்து தகர்க்கவும்
பட்டது.
1980கள்
தசாப்தம் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கம் சரிவுற்றதையும்,
தொழிற்சங்களின் மாற்றத்தையும் கண்டது.
தொழிற்சங்கள் முதலாளித்துவ சார்பு,
தேசியவாத வேலைத்திட்டங்களை கொண்டு,
தொழிலாள வர்கத்தின் நலன்களை பாதுகாக்கும்
அமைப்பு என்பதில் இருந்து,
பெருநிறுவனங்களின் பின்னிணைப்புக்களாவும்,
பெருநிறுவன,
அரசாங்க முகமைகளாவும் மாறின.
கட்டுப்பாடு தளர்த்தப்படல்,
நிதிய ஊகம்,
ஒட்டுண்ணித்தனத்தின் பெரும் வளர்ச்சியை
ஏற்படுத்தியது;
அத்துடன் அமெரிக்க தொழில்துறையில் பல
பிரிவுகளும் அகற்றப்படுதலுக்கு உட்பட்டன.
இந்த வழிவகையின் இதயத்தானத்தில் தொழிலாள
வர்க்கத்தின் சமூக நிலைமை மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான
எப்பொழுதும் விரைவாக நடத்தப்படும் தாக்குதல் மற்றும்
கீழிருந்து மேலே செல்வம் மறுபங்கீட்டிற்கு உட்படல் ஆகியவை
இருந்தன.
விமானத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிரான
அரசாங்கத்தின் வேலைநிறுத்த முறிப்பு நடவடிக்கை ஜனநாயக,
மற்றும் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளால்
செயல்படுத்தப்பட்டது.
1997ல்
அமெரிக்க ஏயர்லைன்ஸ் விமானிகளுக்கு எதிராக பில் கிளின்டனும்,
வடமேற்கில் இயந்திர வல்லுனர்களுக்கு எதிராக
புஷ்ஷும் நடத்தினர்.
விமானத்துறைத் தொழிற்சங்கங்கள்
வேலைநிறுத்தங்கள் ஆயுதம் என்று பயன்படுத்துவதைக் கைவிட்டனர்;
அதையொட்டி ஒவ்வொரு சுற்று மிருகத்தன சலுகை
பறிப்புக்கள் நடைபெற்றன;
மேலும் தொழிற்சங்கங்கள் தங்களை இன்னும்
முழுமையாக பெருநிறுவன நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும்
இணைத்துக் கொண்டன.
ஒரே ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு
AFL-CLO
இல் இல்லாத இயந்திர வல்லுனர்கள்
நோர்ட்வெஸ்ட்டில்
2007ல்
நடத்திய வேலைநிறுத்தமாகும். இது விமானத்தில் மற்ற
தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் செயல்பட்டதின்மூலம்
நசுக்குப்பட்டது.
செவ்வாய் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில்
உள்ள தொழிற்சங்கங்கள் அவசர அவசரமாக இன்னும் சலுகைகளை
விட்டுக்கொடுக்க முன்வந்தனர். இதனால் அவை தங்கள்
அமைப்புக்களின் நலன்களையும் உறுப்பினர்களிடம் இருந்து பெறும்
கட்டணப் பாக்கியையும் திவால்தன்மை வழிவகைக்குள் தக்க வைத்துக்
கொள்ள முடியும்.
Allied Pilots Association
உடைய தலைவர் காப்டுன் டேவ் பேட்ஸ்,
தான் தொழிற்சங்க ஒப்பந்தத்தில்
“கணிசமான
மாற்றங்களை”
எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
American Professional Flight Attendants
தொழிற்சங்கத்தின் தலைவரான லாரா கிளாடிங்,
“விவாத
மேசையில் இருந்து விவாதங்களை நடத்த நாங்கள் முழுமையாக
விரும்புகிறோம்….
முன்னேற்றப் பாதையின் ஒரு பகுதியாக இருப்போம்.”
என்றார்.
விமானத்தொழில்துறை முதலாளித்துவத் தனியார்
உடைமையின்கீழ் இருப்பது மற்றும் நிதிய முறை ஆகியவற்றிற்கு
தொழிற்சங்கங்கள் கொடுக்கும் பாதுகாப்பின் விளைவு இதுதான்.
விமானத்துறைத் தொழிலாளர்களுக்கும்,
தொழிலாள வர்க்கம் முழுவதற்கும் ஒரு மாற்றீடு
உள்ளது—இது
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுடன் முற்றிலும் முறித்துக்
கொண்டு,
ஒரு புதிய,
உண்மையான,
ஜனநாயகப் போராட்டக் கருவிகளைக் கட்டமைப்பதின்
மூலம்தான் போராடப்பட முடியும்.
அந்த மாற்றீடு சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும்—இது
பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தேசியமயமாக்கி,
அவற்றை பொதுச்சொத்துடைமையில் இருக்கும்
பயன்பாட்டு நிறுவனங்களாக,
தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வருவதில்தான் தொடங்கும்.
தனியார் சொத்துடமை என்பது தொழிலாளர்களின் மிக
அடிப்படை நலன்களுடனும் பொதுமக்களின் நலன்களுடனும் மொத்தமாக
இயைந்துவராது என்பதை அனுபவம் காட்டுகிறது.
பொது உடைமைக்கான போராட்டம் பெருநிறுவன-நிதியத்
தன்னலக்குழு அவற்றின் கட்சிகள் மற்றும் நீதிமன்றங்கள்,
அனைத்து உத்தியோகபூர்வ முதலாளித்துவ
அமைப்புக்கள் ஆகியவற்றிற்கும் எதிரான போராட்டம் ஆகும்.
இதற்கு வெகுஜன,
சுயாதீன,
தொழில்துறை,
அரசியல் அளவில் தொழிலாள வர்க்கத்தை தொழிலாளர்
அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான போராட்டத்திற்குத் திரட்டுவது
முக்கியம் ஆகும். |