சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Outrage spreads in Pakistan over NATO bombings

நேட்டோ குண்டுவீச்சுக்களைத் தொடர்ந்து பாக்கிஸ்தானில் கலகம் பரவுகிறது

By Alex Lantier
29 November 2011
use this version to print | Send feedback

சனிக்கிழமையன்று பாக்கிஸ்தானின் இரண்டு எல்லைச் சாவடிகளில் நேட்டோ குண்டுத் தாக்குதல்கள் பற்றி பாக்கிஸ்தான் மக்கள் மற்றும் இராணுவத்தின் கலகம் பெருகியதையடுத்து அமெரிக்க மற்றும் பாக்கிஸ்தானிய அதிகாரிகள் நேற்று தீவிர பேச்சுக்களை நடத்தினர். பாக்கிஸ்தானின் இறைமையை அப்பட்டமாகத் தாக்கிய இத்தாக்குதல் ஆப்கானிய-பாக்கிஸ்தான் எல்லையில் பாக்கிஸ்தானிலுள்ள சலாலாவிற்கு அருகே 24 பாக்கிஸ்தானிய சிப்பாய்களை கொன்றது.

பாக்கிஸ்தான் நகரங்கள் முழுவதும் ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கள் இருந்தது பற்றி தகவல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கராச்சியிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு வெளியே கூடினர். “பயங்கரவாதத்தின் மீதான போரில் இருந்து வெளியேறு என்று கோஷமிட்டதோடு, பேஷாவரில் மாணவர்கள் சாலைகளைத் தடுப்பிற்கு உட்படுத்தினர். தாக்குதல் நடந்த மாவட்டமான மஹ்மாண்டில் பழங்குடி மக்கள் ஓர் ஆர்ப்பாட்டத்திற்காகக் குழுமினர். லாகூர், தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பாக்பட்டான், மூல்டான் மற்றும் பேஷாவர் உட்பட நாடெங்கிலும் பல நகரங்களில் வக்கீல்கள் வேலைநிறுத்தம் செய்தனர் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி காருடன் பேசினார்; தாக்குதல் குறித்து பாக்கிஸ்தானிய மக்கள்உணர்ந்த ஆழ்ந்த சீற்றத்தை ஹினா ரப்பானி கார் எடுத்துரைத்தார். அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சியும் பாக்கிஸ்தானிய இராணுவத் தளபதியான ஜெனரல் அஷ்டக் பர்வேஸ் காயானியுடன் பேசினார்.

தாக்குதலின்போது என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் விவாதத்திற்கு உரியதாகத்தான் உள்ளது. நேட்டோ மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகம் இரண்டும் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. ஒரு கூட்டு நேட்டோ-ஆப்கானிய ரோந்து நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் நடைபெற்றவேளை பாக்கிஸ்தானிய எல்லையில் இருந்து தாக்குதலுக்கு உட்பட்டபோது அது வான்தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதுதான் எல்லைச் சாவடிகளைத் தாக்கியது எனக்கூறியதாக நேற்று பெயரிடாத ஆப்கானிய, மேற்கத்தைய அதிகாரிகளை மேற்கோளிட்டுச் செய்தி ஊடக ஆதாரங்கள் நேற்று தகவல் கொடுத்துள்ளன.

இதற்கு பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் கோபத்துடன் மறுப்புக்களை வெளியிட்டு, நேட்டோத் தாக்குதல்கள் தூண்டுதலின்றி நடைபெற்றன என்றும் பாக்கிஸ்தான் தரப்பில் இருந்து ஒரு தாக்குதல் என்பதை கற்பனை செய்து கூறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினர். மேஜர் ஜெனரல் அத்தர் அப்பாஸ், “இது உண்மையல்ல, அவர்கள் காரணங்களைக் கற்பனை செய்து கூறுகின்றனர். அப்படியானால், அவர்களுடைய இழப்புக்கள், உயிரிழப்புக்கள் எவ்வளவு பேர் என்று வினவினார்.

தாக்குதல் இரண்டு மணி நேரம் நீடித்ததாக அப்பாஸ் கூறினார். பாக்கிஸ்தானிய அதிகாரிகள் நேட்டோ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுமுதலில் இத்தாக்குதலை நிறுத்தங்கள் என்று கோரினர், அப்படியும் அது தொடர்ந்தது என்றார்.

வாஷிங்டனுடன் இராஜதந்திர, உளவுத்துறைத் தொடர்புகளை முறித்துக் கொள்ளுவதாக அச்சுறுத்தலை இஸ்லாமாபாத் கொடுத்து, பாக்கிஸ்தான் நகரமான ஷம்சியிலுள்ள ஒரு விமானத் தளத்தை காலி செய்யுமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது; இத்தளத்தில் இருந்துதான் CIA பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்களை பாக்கிஸ்தானுக்குள் நடத்துகிறது. பாக்கிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையேயுள்ள எல்லைச் சாலைகளையும் அது மூடியது; இவற்றின் வழியேதான் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புக்களுக்கு தேவையான விநியோகங்கள் பெரிய வாகனங்கள் மூலம் செல்கின்றன.

பாக்கிஸ்தானின் முக்கிய நட்பு நாடான சீனா தாக்குதல் குறித்துத் தான்ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியது. வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சி, “சீனா, பாக்கிஸ்தான் தனது தேசிய சுதந்திரம், இறைமை, நிலப்பகுதி ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்கும் இத்தீவிர சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், சரியாகக் கையாளப்பட வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்கப் போர்களில் பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஒத்துழைப்பது குறித்த பாக்கிஸ்தானிய வெகுஜனங்களின் சீற்றம் நாட்டில் ஒரு அரசியல் வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்னும் தன் கவலையை வாஷிங்டனுக்கு பாக்கிஸ்தானிய அரசாங்கம் அடையாளம் காட்டுகிறது. பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி நேற்று CNN க்கு கொடுத்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ நடத்தும் போருக்கு செல்வாக்கற்ற இஸ்லாமாபாத்தின் பங்கு கொள்ளுதல் எதிர்ப்பைத் தூண்டுகிறது என்று எச்சரிக்கை விடுத்தார். “எந்தப் போரையும் மக்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் வெற்றிகொள்ள முடியாது, மக்கள் ஆதரவு நமக்குத் தேவை. இத்தகைய நிகழ்ச்சிகள் மக்களை அந்நிலையில் இருந்து வெளியே தள்ளிவிடும் என்று அவர் பேட்டியை ஆரம்பித்தார்.

ஆனால், பாக்கிஸ்தான் அமெரிக்காவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளுமா என்று CNN கேட்டதற்கு, கிலானி மழுப்பினார். “எங்கள் உறவுகள் மறுபரிசீலனை செய்யப்படுவது குறித்து சிந்திக்கிறோம் என்றார் அவர். “பரஸ்பர மரியாதை, நலன்களை ஒட்டித்தான் உறவுகள் தொடரமுடியும் என்று சேர்த்துக் கொண்டார். பாக்கிஸ்தானின் பாராளுமன்ற தேசியப் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளுக்கு தான் காத்திருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பாக்கிஸ்தான் தாக்குதல் குறித்துக் கூறிய குறைகூறல்களை அமெரிக்கச் செய்தி ஊடகம் அதிகம் குறிப்பிடவில்லை; இஸ்லாமாபாத் வாஷிங்டனுடன் அதன் ஒத்துழைப்பைத் தொடரும் என்று மட்டும் எழுதியுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ், “தாக்குதல்கள் தற்காப்பிற்கு என நியாயப்படுத்தப்படுகின்றனவா அல்லது பேரழிவுத் தவறு என ஒப்புக் கொள்ளப்படுகிறதா என்பது முக்கியமில்லை…. அமெரிக்க மூலோபாயத்திற்கு ஏற்கனவே சேதம் விளைவிக்கப்பட்டுவிட்டது, இப்பொழுது பிரச்சினை இன்னும் எத்தனை காலம் இரு நாடுகளிலுமுள்ள அதிகாரிகள் தங்கள் நலன்களுக்கு உகந்த செயலான ஒத்துழைப்பை மீண்டும் தொடர்வர் என்பதுதான் என்று எழுதியுள்ளது.

பாக்கிஸ்தான் வாஷிங்டனிடம் கொண்டுள்ள மூலதன நிதியத் தேவைக்கான நம்பிக்கை அதை ஒழுங்கிற்குள் வைக்கும் என்று பாக்ஸ் நியூஸ் கூறியுள்ளது. “அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே உறவுகளில் முழு முறிவு என்பது வராது என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்க உதவிகளை பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிற்கு பாக்கிஸ்தான் நம்பியுள்ளது; சமாதானப் பேச்சுக்களில் ஆப்கானிய எழுச்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கு அமெரிக்கா பாக்கிஸ்தானின் தேவையைக் கொண்டுள்ளது.”

நேட்டோ பற்றி இஸ்லாமாபாத் பெயரளவிற்குத் தெரிவித்தல் என்னும் முறையில் குறைகளைக் கூறியிருப்பது குறித்தும் பாக்ஸ் கேலி செய்துள்ளது. “பாக்கிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்கள் செல்வாக்கற்றவை, பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் சிவில் தலைவர்கள் பகிரங்கமாக அமெரிக்கா தங்கள் அனுமதியின்றி இதைச் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் (ட்ரோன்) தாக்குதல்கள் தொடர அனுமதிக்கின்றனர், அவற்றில் சில இலக்குகளுக்கு உதவிகூடச் செய்கின்றனர்.”

அமெரிக்க ஆளும் வர்க்கமானது அமெரிக்க மூலோபாயமானஆப்கானிய-பாக் போருடன் பாகிஸ்தான் இணைந்து நிற்க வேண்டும் என்று கோருகிறது. ஆப்கானிஸ்தானிலுள்ள இஸ்லாமியவாதக் குழுக்களுடன் கொண்டுள்ள தொடர்புகளை பாக்கிஸ்தான் பயன்படுத்தி, அமெரிக்கா தாலிபனுடன் அமைதிக்கான உடன்பாட்டைக் காண உதவ வேண்டும் என்று அது விரும்புகிறது; அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் நிலப்பகுதிகளில் ஆப்கானிய எழுச்சியாளர்களை அமெரிக்கா தாக்குவதற்கு உதவுமாறும் கோருகிறது. இஸ்லாமாபாத் அமெரிக்க கோரிக்கைகளுக்கு இணங்கிச் செயல்படும் முயற்சிகள் பெருகிய முறையில் அதை அமெரிக்க, பாக்கிஸ்தானிய பொதுமக்கள் கருத்துக்களுடன் மோதலை ஏற்படுத்துகிறது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகள் பல வேளைகளில் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட எழுச்சியாளர்களிடம் இருந்து தாக்குதலை எதிர்கொள்கின்றன; உயர்மட்ட தாலிபன் தலைவர்கள் பாக்கிஸ்தானிலுள்ள க்வெட்டா நகரில் இருப்பதாகப் பரந்த முறையில் தகவல்கள் உள்ளன. இக்குழுக்களுடன் பாக்கிஸ்தானியத் தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் பொறுத்துக் கொண்டுள்ளனர்; இவை தாலிபானுடன் ஒரு உடன்பாட்டுத் திறன் ஏற்பட்டால், பேச்சுக்களில் பங்கு பெறும் வகையில் அமெரிக்காவிற்கு உதவி என்னும் உத்தரவாதம் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் வாஷிங்டன் ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபன் சக்திகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொண்டிருப்பது குறித்துக் கோபமாகத்தான் உள்ளது.

செப்டம்பர் மாதம், அமெரிக்கா, அதன் அதிகாரிகள் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஹக்கானி இணையத்தால் தாக்கப்பட்டபோது, இஸ்லாமாபாத்துடனான பூசலைத் தொடக்கியது. இதை அட்மைரல் மைக் முல்லன்பாக்கிஸ்தானின் ISI உளவுத்துறையின் கருவிதான் என்று அழைத்தார்.

அமெரிக்கா, பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகள் ஆகியோருக்கு இடையே உள்ள முரண்பாடான உறவுகள் 1980களிலேயே தொடங்கியது; அப்பொழுது அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் சோவியத் ஆதரவைக் கொண்டிருந்த காபூல் ஆட்சிக்கு எதிராக, 1979-89 சோவியத்-ஆப்கானிய போர்க் காலத்தில், இஸ்லாமியவாத முஜாஹெதினை ஆதரித்தன. இதன் பின் அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவை கூட்டாக 1990களின் நடுப்பகுதியில் தாலிபானுக்கு ஆதரவைக் கொடுத்தன; அது ஆப்கானிஸ்தானை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, மத்திய ஆசியாவிலுள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளுடன் வணிகப் பாதையைத் திறக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

ஆனால் செப்டம்பர் 11, 2011 தாக்குதல்களுக்கு பின் தாலிபன் மற்றும் பாக்கிஸ்தானிடம் சீற்றம் காட்டி, தாலிபனை பாக்கிஸ்தான் கைவிட வேண்டும், இல்லாவிடின் அந்நாடுகற்காலத்திற்கு சென்றுவிடக்கூடிய அளவிற்கு குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியது; இச்சொற்கள் அப்பொழுது அமெரிக்க வெளிவிவகார அலுவலக உயரதிகாரியாக இருந்த ரிச்சர்ட் ஆர்மிடேஜுடையவை. பாக்கிஸ்தானிய இராணுவத்தின் கூறுபாடுகள் இன்னமும் ஆப்கானிய இஸ்லாமியவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன; இது இந்திய செல்வாக்கிற்கு எதிராகக் கனம் கொடுப்பதற்கும் மற்றும் பூசலுக்கு உட்பட்ட ஆப்கானிய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக என்பது குறித்து வாஷிங்டனும் நன்கு அறியும்.

ஆனால் இஸ்லாமாபாத்திற்கு எதிராக அமெரிக்கா திரும்பியுள்ளது; ஆப்கானிய போர் பாக்கிஸ்தானுக்குள்ளும் பரவுகையில் இஸ்லாமாபாத்தே ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொண்டது; நேட்டோவோ பெருகிய முறையில் ஆப்கானிய சகதியில் முழ்கியுள்ளது. நேற்று நியூ யோர்க் டைம்ஸ் சீனாவில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த ஜோன் ஹன்ட்ஸ்மன்அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவு துல்லியமாக எப்படி உள்ளது என்பது பற்றி நான் அறியமுடியும், இது ஒரு செயல்பாட்டை ஒட்டிய உறவுதான்….இந்த உறவில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய இலாபங்கள் குறித்து அவை மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்றுதான் நாம் எதிர்பார்க்க வேண்டும் எனக்கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

இந்த அழுத்தங்கள் ஆப்கானிஸ்தானிற்குள் இருக்கும் நேட்டோவிற்கான விநியோகங்களை நிறுத்தும்போது அதிகரிக்கும். 2009க்கு முன், பாக்கிஸ்தானுக்குள்ளேயே எழுச்சியாளர்கள் விநியோக வாகனங்களைத் தாக்கியபோது, 80 சதவிகித நேட்டோ விநியோகப் பொருட்கள் பாக்கிஸ்தான் மூலம் சென்றன. இப்பொழுது 31 சதவிகிதம் விமானங்கள் மூலம் செல்லுகின்றன, 63 சதவிகிதம் NDN  (Northern Distribution Network) என அழைக்கப்படும் வடக்குப் பங்கீட்டு வலையமைப்பின் மூலம் செல்லுகின்றன. இவைகள் சாலை மற்றும் இரயில் தொடர்பு என்று பால்டிக் மற்றும் கருங்கடல் துறைமுகங்கள் வழியே, ரஷ்யா, காகசஸ் வழியே வந்து பின்னர் மத்திய ஆசியக் குடியரசுகள் மூலம் ஆப்கானிஸ்தானை அடைகின்றன.


Image source: CIA Factbook

ஆயினும்கூட, நேட்டோவிற்கான பொருட்களின் விநியோகங்களில் 25 சதவிகிதம் பாக்கிஸ்தான் மூலம் செல்லுகின்றன, பாக்கிஸ்தான் எல்லையில் நிறுத்தப்படும் என்று பொருளை இது தரும். ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம்அமெரிக்கத் தரப்பிலுள்ள அனைத்துத் தலைவர்களும் இதைத் தீவிரமாக எடுத்துள்ளனர். பொருட்களின் நிலைப்பாடுகள் குறித்து எப்பொழுதுமே எங்களிடம் பல மாற்று முறைகள் உள்ளன. இத்தடுப்பு எத்தனை நாட்கள் நீடிக்கும், நீண்டக்கால பாதிப்பு இருக்குமா என்பதை பொறுத்து அனைத்தும் இருக்கும் என்றார்.

இஸ்லாமாபத்தின் கொள்கைக்கு உந்துதல் கொடுக்கும் மையக் கூறுபாடுஅமெரிக்க மிரட்டலுக்கு தந்திரவகையில் செயல்படுதல், தாழ்ந்து நிற்றல் ஆகியவற்றின் கலவைபாக்கிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் புரட்சிகர எழுச்சி ஒன்றைச் செய்வார்களோ என்ற அச்சம் ஆகும். பெப்ருவரி மாதம் எகிப்தியப் புரட்சியின் முதல் வாரங்களில், பாக்கிஸ்தான் CIA  கொலையாளி ரேமண்ட் டேவிஸுக்கு எதிரான சில வெகுஜன எதிர்ப்புக்களைக் கண்டது; அவரைப் பின்பு பாக்கிஸ்தான் விசாரணை ஏதுமின்றி விடுவித்தது; அவரோ இரண்டு பாக்கிஸ்தானியர்களை லாகூர் அங்காடியில் சுட்டுக் கொன்றார். இச்சீற்றம் மே மாதம் அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குள்ளேயே தொலைதூரம் கடந்து ஒசாமா பின் லாடனை அப்போத்தாபாத் நகரில் கொலை செய்தபோது, மிகவும் அதிகமாயிற்று.

சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிய எல்லையை ஒட்டி முக்கிய இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது; இதையொட்டி பல மில்லியன் அகதிகள் பாக்கிஸ்தானுக்குள் வந்து விட்டனர். வெகுஜன வேலையின்மை, பெரிதும் அதிகரித்துவிட்ட மின் பற்றாக்குறைகள், மில்லியன் கணக்கான மக்கள் 2010 மற்றும் 2011ல் வெள்ளங்களால் வீடிழந்த நிலை ஆகியவற்றினால், ஏற்கனவே இருந்த பேரழிவுச் சமூக நிலை மோசமாகியது.

இப்பொழுது அரசாங்கம் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்திலும் உள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் கல்லூரியில் இருக்கும் ஹாசன் அப்பாஸ், ராய்ட்டர்ஸிடம், “பாக்கிஸ்தானிய இராணுவம் இப்பொழுது நிகழ்வுகள் குறித்துப் பெரும் கோபம் கொண்டுள்ளது; இராணுவத்தின் உயர்மட்டத் தலைமை மத்திய, இளநிலை அதிகாரிகளிடம் இருந்து செயலாற்ற வேண்டும் என்ற பெரும் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாக்கிஸ்தானின் தூதர் ஹுசைன் ஹக்கானி, அமெரிக்காவினால் பின் லாடன் கொலையுண்டதற்கு பின் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இராணுவ ஆட்சிக் கவுழ்ப்பை தடுத்து நிறுத்த உதவினார் என்று வந்த வதந்திகளை அடுத்து அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெறப்பட்டதற்கு பின் இந்நிலை வந்துள்ளது.