WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
விக்கிலீக்ஸ்
ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின்
தாயார்
உலக சோசலிச
வலைத்தளத்துடன் பேசுகிறார்
By Richard Phillips
26 November 2011
use this version to print | Send
feedback
கிற்ஸ்டின் அசான்ஜ்
கடந்த வாரம்
அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமா
ஆஸ்திரேலியா விஜயம்
செய்திருந்த அதேவேளையில்,
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
ஜூலியன் அசான்ஜின் தாயார்
கிற்ஸ்டின் அசான்ஜ் உலக
சோசலிச
வலைத்
தளத்துடன்
உரையாடினார்.
ஜூலியன்
அசான்ஜ் மீது ஜோடிக்கப்பட்ட
பாலியல் மற்றும் கற்பழிப்பு
குற்றச்சாட்டு வழக்குகளுக்காக,
ஸ்வீடனிடம் ஒப்படைப்பதற்கு
எதிரான
அவரின் ஒரு முறையீட்டை
இம்மாதத்தின் தொடக்கத்தில்
பிரிட்டன் உயர்நீதிமன்றம்
நிராகரித்தது.
அசான்ஜிற்கு
எதிரான
வழக்கானது ஒபாமா
நிர்வாகத்தாலும் மற்றும்
விக்கிலீக்ஸை அழிக்கும்
நோக்கத்தோடும் முன்னெடுக்கப்படும்
ஒரு
சர்வதேசரீதியாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக
உள்ளது.
விக்கிலீக்ஸ்
வலைத்தளம் ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகளின்
குற்றவியல் குணாம்சத்தையும்,
அமெரிக்க மற்றும்
அதன்
கூட்டாளிகளின் ஏனைய
சதிகளையும் அம்பலப்படுத்தி
உள்ளதால்,
அமெரிக்க
ஊடகத்தின் பிரிவுகளும்,
பிரதான
அரசியல்
பிரபலங்களும் அசான்ஜை கொலைசெய்யவேண்டுமென்றும்,
விக்கிலீக்ஸை ஒரு
பயங்கரவாத அமைப்பென்று
அறிவிக்க வேண்டுமென்றும்
அழைப்புவிடுத்துள்ளனர்.
ஓர் ஆஸ்திரேலிய
குடிமகனான அசான்ஜ்,
தாம்
ஸ்வீடனிடம்
ஒப்படைக்கப்பட்டால் அங்கிருந்து
அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு,
அங்கே
வேவு பார்த்த
குற்றங்களின்மீது ஓர் அமெரிக்க
குற்றவியல் நீதிவிசாரணைக்
குழுவின்
முன்னால்
கொண்டு
நிறுத்தப்படலாமென்றும்,
அது
மரண தண்டனையில் முடியலாம் என்றும்
எச்சரித்துள்ளார். (பார்க்கவும்:
“Oppose
the extradition of Julian Assange”)
கடந்த ஆண்டு
ஆஸ்திரேலிய பிரதம மந்திரி
ஜூலியா
கில்லார்ட்,
இரகசிய
அமெரிக்க
இராஜாங்க விவரங்களை விக்கிலீக்ஸில்
பதிப்பித்தது
"முற்றிலும்
பொறுப்பற்றதனமும்", “சட்டவிரோதமானதுமாகும்"
என்று
அறிவித்து,
அசான்ஜிற்கு கண்டனம்
தெரிவித்திருந்தார்.
தலைமை
நீதிபதி ரோபர்
மெக்கெல்லெண்ட்,
அசான்ஜிற்கு எதிராக
எடுக்கப்படும் எந்தவொரு
சட்டமீறல் நடவடிக்கையையும்
ஆதரிப்பதாக சாடியிருந்தார்.
அத்தோடு அசான்ஜின்
கடவுச்சீட்டையும் இரத்து
செய்ய
வேண்டுமென
குறிப்பிட்டிருந்தார்.
கில்லார்டும்,
மெக்கெல்லெண்டும்
அசான்ஜ் குற்றஞ்சாட்டப்படுவதற்கு
அல்லது
விசாரணைசெய்யப்படுவதற்கு
முன்னதாகவே உண்மையில் அவரை குற்றவாளியென்று
குறிப்பிட்டனர்.
கிற்ஸ்டின்
அசான்ஜ் தம்முடைய மகன் மீது
நடந்துவரும் வழக்கு குறித்தும்,
அவர்
முகங்கொடுத்திருக்கும்
தீவிர
அபாயங்கள் குறித்தும்,
விக்கிலீக்ஸ் மற்றும்
அசான்ஜின் ஜனநாயக உரிமைகளுக்கு
எதிரான
பிரச்சாரத்தில்
தொழிற்கட்சி அரசாங்கத்தின்
உடந்தை
குறித்தும் உலக
சோசலிச
வலைத்
தளத்தோடு
உரையாடினார்.
ரிச்சாரிட்
பிலிப்ஸ்:
ஜூலியனை
ஸ்வீடனிடம் ஒப்படைப்பதை
உறுதிப்படுத்தும் சமீபத்திய பிரிட்டிஷ்
உயர்நீதிமன்ற தீர்ப்பைக்
குறித்து நீங்கள் கூற முடியுமா?
கிறிஸ்டென்
அசான்ஜ்:
ஸ்வீடனிடம்
ஒப்படைப்பதற்கு எதிரான
தம்முடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட வேண்டுமென
பிரிட்டிஷ் உயர்நீதிமன்றத்திற்கு
ஜூலியன் ஒரு முறையீடு
செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம்
அதன்
தீர்ப்பை டிசம்பர்
4இல்
அறிவிக்கும்.
ஆனால்
அவருடைய முந்தைய முறையீட்டை
நிராகரித்த அதே இரண்டு
நீதிபதிகளால் தான் இதுவும்
விசாரிக்கப்படுகிறது.
அத்தோடு
"பொது
நலன்"
அடிப்படையில்
அவர்
உச்சநீதிமன்றத்திடம்
முறையிடலாமா என்பதையும்
அவர்கள் முடிவு செய்வார்கள்.
இந்த வழக்கு
முற்றிலும் அரசியல்ரீதியாக
இருந்தாலும் கூட,
அதற்கு
முக்கிய "பொது
நலன்"
அடித்தளத்தில் இருக்கிறதென்று
நான்
நம்புகிறேன்.
அதில்
பேச்சு
சுதந்திரம் குறித்து
பிரச்சினைகள் உள்ளன;
இரண்டாவதாக,
ஐரோப்பிய
கைது
ஆணை முறை
(European Arrest Warrant system)
அதன்
அநீதிகளுக்காக
நீண்டகாலமாகவே விமர்சிக்கப்பட்டு
வருகிறது.
அமெரிக்க
9/11
சம்பவத்திற்குப்
பின்னர் பயங்கரவாதிகளைக்
கண்காணிப்பதற்காக,
ஐரோப்பிய
கைது
ஆணை முறையிலிருந்து
பல்வேறு
சட்டப்பாதுகாப்பு முறைகள் நீக்கப்பட்டன.
ஆனால்
இப்போது அது
பரவலாக
பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
எந்தளவிலான
சிறிய
குற்றங்களுக்காகவும்
கூட,
இந்த
முறையைப்
பயன்படுத்தி,
வெளிப்படையாகவே
ஒரு
நாளைக்கு மூன்று நபர்கள்
இங்கிலாந்திலிருந்து
வெளிநாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டு
வருகின்றனர்.
ஜூலியனை
அமெரிக்க மண்ணிள்கு கொண்டுவருவதற்கான
அமெரிக்காவின் முயற்சிகளுக்கு
இந்த
முறை சரியாக பொருந்தியுள்ளது.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
அவர்
நாடுகடத்தப்பட்டால் அதில்
என்னென்ன அபாயங்கள் உள்ளன?
கிற்ஸ்டின் அசான்ஜ்:
ஜூலியன் ஸ்வீடனுக்குச்
சென்றால்,
அவர்
உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்.
அங்கே
வெளிநாட்டினருக்கு
பிணை
அளிக்கப்படுவதில்லை.
ஆகவே
அவர்மீது
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு
முன்னதாகவே அவர் காலவரையின்றி
சிறையில் இருக்க வேண்டியதிருக்கும்.
அவர்
வழக்கறிஞர்களை
அல்லது
குடும்பத்தினரை சந்திக்கவும் அனுமதிக்கப்பட
மாட்டார்.
அத்தோடு
கோத்தன்பெர்க் சிறைசாலையின்
தனியறையில் அடைக்கப்படுவார்.
ஐரோப்பாவிலேயே அந்த
சிறைச்சாலை தான் மிகவும்
மோசமான
சிறைச்சாலையென்று
Fair Trials International
என்ற
அமைப்பு கூறியுள்ளது.
ஸ்வீடன்
மிகவும் சகோதரத்துவமான நாகரீகமான ஜனநாயகமான நாடு என்ற கருத்து
உண்மையில் நிஜமல்ல.
சாட்சிகளை
சேகரிக்கும் அனைத்து
நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.
அத்தோடு
ஜூலியன்-தரப்பு
குழுவிற்கு
ஆதாரங்களை
அளிக்கவும் அவர்கள் மறுத்துள்ளனர்;
ஆகவே
சாட்சிகளின்
அடித்தளத்தில் ஜூலியனுக்கு
அங்கே
ஒரு நியாயமான வழக்கு
கிடைக்குமென்பதற்கு
உத்தரவாதமளிக்க முடியாது.
அங்கே
நான்கு நீதிபதிகள்
இருப்பர்—ஒருவர்
நிஜ நீதிபதி,
இதர
மூன்று நீதிபதிகளும்
அரசியல் கட்சிகளால்
நியமிக்கப்படுபவர்கள்.
அவர்களுக்கு
எவ்விதமான பயிற்சியும் இல்லை.
ஒரு
நீதிமன்ற
விசாரணையினாலோ அல்லது
அரசியல்ரீதியாக சம்பந்தப்படாத
பார்வையாளர்களிடமிருந்து
பிரயோசனமோ ஜூலியனுக்கு
கிடைக்காது என்பதையே அது
குறிக்கிறது.
ஈராக்கிற்காக
அமெரிக்காவிடமிருந்து
ஸ்வீடன் நிறைய,
நிறையவே,
ஆயுத
ஒப்பந்தங்களைச்
செய்துள்ளது.
மேலும்
அமெரிக்காவிடம் யாரையும்
ஒப்படைக்க மாட்டோமென்று
அது
ஒருபோதும் மறுத்துரைக்கவும்
இல்லை.
அமெரிக்காவும்,
ஸ்வீடனும் ஒரு பிரத்யேக
இருதரப்பு உடன்படிக்கையைக்
கொண்டுள்ளன,
அது
அவர்களை சாதாரண பாதுகாப்பு
முறைமைகளை மாற்றியமைக்க
அனுமதிக்கிறது—அது
அமெரிக்காவிற்கு
அனுப்புவதற்கான ஒரு நேரடி
வாய்ப்பாக உள்ளது.
ஒரு மறைமுக
நடவடிக்கை மூலமாக அவரை
சட்டவிரோதமாக ஒப்படைத்துவிடக்
கூடிய
அபாயமும் இருக்கிறது.
அவர்
ஸ்வீடனின்
இரகசிய
பொலிஸான SAPOவினால்
வீதியில் கடத்திச்செல்லப்பட்டு,
மயக்கமருந்து ஏற்றப்பட்டு உணர்ச்சியற்றவராக்கி பின்னர்
உடலைமூடும் அங்கிகள் அணிவிக்கப்பட்டு ஐரோப்பின்
ஓர்
மறைமுகமான இடத்தில்
CIA
சித்திரவதைக்காக கொண்டுசெல்லப்படலாம்.
அதில்லையென்றால்,
சித்திரவதை சட்டப்பூர்வமாக
இருக்கும் மற்றும் மேற்கத்திய
ஊடகங்களின் பாதைக்கு
வெளியிலிருக்கும்,
எகிப்து
போன்ற,
ஒருமூன்றாவது
நாட்டிடம் அவர் ஒப்படைக்கப்படலாம்.
அவர் இருதரப்பு
உடன்படிக்கையினூடாக செல்கிறார்
என்றால் அது நேராக அமெரிக்காவிற்குத்
தான்
போகும்.
அங்கே
தற்போது ஒரு
குற்றவியல் நீதிவிசாரணை (Grand Jury)
ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.
வெர்ஜீனியாவில்
நடைபெறவுள்ள அந்த நீதிவிசாரணையில்,
இராணுவ
உளவுத்துறை மற்றும் அமெரிக்க
ஒப்பந்ததாரர்களின்
குடும்பங்களிலிருந்து வந்த
நபர்கள் இடம் பெற்றிருப்பர்
என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.
இந்த
வழக்கில் அமெரிக்க-நீதிமுறை,
சாட்சிகளைச் சமர்பிக்க
நான்கு
வழக்கறிஞர்களை
அனுமதிக்கிறது.
ஆனால்
பிரதிவாதியின் வழக்கறிஞர்கள்
இதில்
சாட்சியங்களைச் சமர்பிக்க
அனுமதி
கிடையாது.
[அமெரிக்க
சிப்பாய்]
பிரட்லி
மேனிங்
சித்திரவதை
செய்யப்பட்டு வருவதால் விரக்தியிலும்,
வலியினாலும் அவர் ஜூலியனுடன்
சம்பந்தப்பட்டிருந்ததைப்
போன்ற
வாதங்களோடு ஜோடிக்கப்படுவார்.
நிச்சயமாக அது
உண்மையல்ல.
மேலும்
இதற்காக தான்,
ஒவ்வொருவரும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக
தான்
விக்கிலீக்ஸ்,
ஒரு
அனாமதேயர் தகவல் பெட்டியை
(anonymous drop box)
வைத்துள்ளது.
மேனிங் மிகவும்
தைரியமான மனிதர்,
ஆனால்
அவர்
கொடூரமான நிலைமைகளில்—எட்டு
மாதங்கள் தனிமையான
தடுப்புக்காவலிலும்,
நாளொன்றுக்கு
23
மணிநேரங்கள் ஒரு
குறுகிய சிறைக்கூடத்திலும்
அடைக்கப்பட்டு,
நான்கு
பாதுகாவலர்கள் சுற்றிச்சூழ்ந்து நடமாடவிடப்பட்டுள்ள நிலையில்,
ஒரு
மணிநேரம் மட்டுமே
உடற்பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவர்
அவருடைய
மூக்குக்கண்ணாடியையோ அல்லது
எதுவும் வாசிப்பதற்கோ கூட
வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை.
தொலைக்காட்சி,
ரேடியோவை கூட அணுக
முடியாது,
மேலும்
மிகமிக
கட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்-சந்திப்பு
மட்டுமே உள்ளது.
மேனிங் தன்னைத்தானே
காயப்படுத்திக்கொள்ளும் அபாயத்தில்
இல்லையென்று சிறைக்கூட
மனோவைத்தியர் கூறியிருந்த
போதினும்,
அவர்களின்
சித்திரவதையைத் தீவிரப்படுத்துவதற்காக
அவர்கள் அவரை
தற்கொலை-தடுப்பு
கண்காணிப்பின்கீழ்
வைத்தனர்.
அவர்
ஐந்து
நிமிடத்திற்கொரு முறை
எழுப்பப்பட்டார்,
இரவில்
நிர்வாணமாக்கப்பட்டு,
மிகவும் கரடுமுரடான துணியினால் போர்க்கப்படுவார். அது அவருடைய
தோலையே
உரித்துவிட்டது.
மேலும்
ஒவ்வொரு நாள் காலையிலும்
அனைவரின் முன்னாலும் அவர்
நிர்வாணமாக நிறுத்தப்பட
வேண்டும்,
இது
முற்றிலும் மனிதாபிமானமற்ற
செயலாகும்.
பெண்டகன் ஆவணங்களைப்
பகிரங்கமாக வெளியிட்ட டேனியல்
எல்ஸ்பெர்க் குறிப்பிடுகையில்,
இவையனைத்தும் பாரம்பரிய
CIA
அணுகுமுறைகளாகும்,
இவை
"தொடாமல்
செய்யும்"
சித்திரவதை
என்று
அழைக்கப்படுகின்றன
என்று
குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின்
தொடக்கத்தில் குடியரசு
கட்சியின் காங்கிரஸ் அங்கத்தவர்
டேரென்
இஸ்ஸா கூறுகையில்,
வேவுபார்த்த
குற்றங்களுக்காகவோ அல்லது
பயங்கரவாத குற்றங்களுக்காகவோ
ஒபாமாவினால் ஜூலியன் அசான்ஜை
பெற
முடியவில்லையென்றால்,
பின்னர் அமெரிக்கா
அவரை
குற்றவியல் குற்றச்சாட்டுக்களின்கீழ்
பெற
வேண்டும். “அப்படியில்லையென்றால்,
நாம்
காகித புலி நிலைக்கு
மாறியுள்ளதை கண்டு உலகமே
நகைக்கும்,”
என்றார்.
ஜூலியனுக்கு எதிரான
அமெரிக்க பிரச்சாரமானது
விக்கிலீக்ஸின் எவ்வித
சட்டமீறலுக்காகவும் அல்ல,
மாறாக
உலகளவில்
அமெரிக்கா பலவீனமாக
பார்க்கப்படுகிறது
என்பதற்காகவேயாகும் என்பதையே
இது
குறிக்கிறது.
அமெரிக்காவிலோ
அல்லது
ஆஸ்திரேலியாவிலோ
ஜூலியன் எந்த குற்றவியல் நடவடிக்கைக்காகவும் குற்றவாளியாக
ஆக்கப்படவில்லை.
உண்மையில்
ABC News 24இன்
ஆண்ட்ரூ
க்ரீன்,
இரண்டு
மாதங்களுக்கு முன்னால்,
ஆஸ்திரேலிய பாதுகாப்பு
மற்றும் உளவுத்துறை அமைப்பான
ASIOஇன்
தலைவர் டேவிட்
இர்வினிடம்,
விக்கிலீக்ஸை
அவர்
எவ்வாறு குணாம்சப்படுத்துகிறார்
என்று
கேள்வி எழுப்பினார்.
இர்வின் பதிலளிக்கையில், “அதுவொரு
நவீன
இயல்நிகழ்வு.
ஏதோவொரு
வடிவத்தில் அதனோடு வாழ்வதற்கு பயிற்றப்பட வேண்டியவர்களாக
இருக்கிறோம்,”
என்றார்.
இதுவொரு நவீன-தொழில்நுட்ப
பயங்கரவாத அமைப்பைப் போன்ற
ஒன்றல்ல,
மாறாக
கில்லார்டு அரசாங்கம் இதை
கேட்பதாகவும் இல்லை.
அது
அதிருப்தியடைந்த அமெரிக்க
அரசியல்வாதிகளின் வெடிப்புகளை
மட்டுமே கேட்கிறது.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
தொழிற்கட்சி அரசாங்கத்தின்
(Labour government)
விடையிறுப்புகள்
குறித்து மேற்கொண்டு கூற
முடியுமா?
கிற்ஸ்டின் அசான்ஜ்:
அவர்
ஒரு குற்றவியல் நடவடிக்கை
செய்துவிட்டதாக தவறாக
குறிப்பிட்டும்,
அதனால்
அவரது
கடவுச்சீட்டை அவர்கள் எடுத்து
வைத்திருப்பதாக அல்லது
அவர்மீது தேசதுரோக குற்றச்சாட்டை
சுமத்தி ஒரு நியாயமான வழக்கிற்கான
ஜூலியனின் உரிமையை அது எவ்வாறு
கெடுத்தது என்பதன் மீது
சில
தருணத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டலாம். அமெரிக்க எதை
விரும்புகிறதோ அதை செய்ய
அவர்கள் தயாராக இருந்தனர்.
எனது மகனுக்கு
ஏதாவது
நேரிட்டால்,
ஜூலியா
கில்லார்டின் கரங்களில்
இரத்தம் படிந்திருக்கும்.
ஏனென்றால் ஒரு நியாயமான
விசாரணையை தடுத்த ஒரு சூழலுக்கு
அவரும்
உடந்தையாய் இருந்தார்.
உண்மையான
சட்டரீதியான நிலைமையை
காணும்
வரையில்
அவர்
வாய் மூடி இருந்திருக்க
வேண்டும்.
ஆஸ்திரேலிய
மத்திய
பொலிஸ்
[AFP],
அதில்
குற்றவியல் நடவடிக்கை எதுவும்
இல்லையென்று கூறிய போதும்
கூட,
கில்லார்டு
வருத்தம் தெரிவிக்கவில்லை
அல்லது
அவர் ஏற்படுத்திய
சேதாரத்தைத்
தீர்க்கவும் முயலவில்லை.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
உங்கள்
முறையீடுகள்
தொழிற்கட்சியின் செவிட்டு
காதுகளில் விழவில்லையே.
கிற்ஸ்டின் அசான்ஜ்
:
ஆமாம்.
உண்மை
நிகழ்வுகளை விவரித்து நான்
கெவின்
ரூட்டிற்கு ஓர் எட்டு
பக்க
கடிதம்
எழுதினேன்.
அதில்
இந்த வழக்கில்
இருக்கும் சட்டமீறல்கள்
மற்றும் மனித உரிமைமீறல்கள்
குறித்தும்,
மற்றும்
ஈராக்
ஒளிப்படத்திற்காக
(video)
அமெரிக்காவின்
முன்னாள் இராணுவ மற்றும்
உளவுத்துறை அதிகாரியிடமிருந்து
பெற்ற
2010
சாம்
ஆதாம்ஸ் விருது உட்பட ஜூலியன்
பெற்ற
அனைத்து விருதுகள்
குறித்தும்,
அதில்
நான்
எழுதியிருந்தேன்.
“ஒருவேளை
என்ன
நடந்துகொண்டிருக்கிறதென்று
அவர்களுக்கு தெரியவில்லையோ"
என்று
நினைத்து,
நான்
எல்லா விபரங்களையும்
ரூட்டிற்கு அனுப்பினேன்.
அதற்கொரு சம்பிரதாயமான
பதில்
தான் எனக்கு கிடைத்தது.
இதுவொரு இடது அல்லது
வலதுசாரி பிரச்சினையல்ல,
மாறாக
ஒரு ஜனநாயக
பிரச்சினை,
ஒருவரின்
மனித
உரிமைகள் மற்றும் பேச்சு
சுதந்திரத்தின் மீதான
பிரச்சினை என்பதால்,
ஒவ்வொரு செனட்டர்களும்,
நாடாளுமன்ற அங்கத்தவரும்
அவருடைய கட்சியின் அரசியல்
கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி
வைக்க
கோரி,
அவர்கள்
ஒவ்வொருவருக்கும் என்னுடைய
கடிதத்தை மின்னஞ்சலில்
அனுப்பினேன்.
கான்பெர்ரா
நாடாளுமன்ற மந்திரிமார்களின்
ஒரு
கூட்டம் மார்ச்
2இல்
நடத்தப்பட்டது.
ஜூலியனின்
அப்போதைய இங்கிலாந்து
வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன்,
ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள்
கூட்டமைப்பின் கிரெக்
பார்னெஸ்,
மற்றும்
ஒரு
உச்சநீதிமன்ற வழக்கறிஞரான
பீட்டர் கெம்ப் என மூன்று
வழக்கறிஞர்களையும்,
அனைத்து
சாட்சிகளையும் முன்வைத்த
முன்னாள்-ஆஸ்திரேலிய
இராஜாங்க விவகாரத்துறை
அறிஞர்
டோனி கெவினையும்
ஏற்பாடு செய்தேன்.
அனைத்து கட்சிகளையும் கொண்ட குழு
ஒரு
வழக்கமான இடைவெளியில்
சந்திக்குமென தீர்மானிக்கப்பட்டது.
ஆனால்
மேற்கொண்டு எந்த விபரமும்
கிடைக்காததால்,
அந்த
கூட்டத்தின் குறிப்புகளை
நான்
அனைத்து செனட்டர்களுக்கும்,
நாடாளுமன்ற
அங்கத்தவர்களுக்கும்
மின்னஞ்சலில் அனுப்பி
வைத்தேன்.
ஜூலியனின்
வழக்கு
அரசியல்ரீதியாக
உந்தப்பட்டதிருந்ததையும்,
ஐரோப்பிய மனித உரிமைகள்
கழகத்தின்
6ஆம்
பிரிவு
உட்பட அவருடைய மனித
உரிமைகள் தொடர்ச்சியாக
மீறப்படுவதையும்,
அவருடைய வாழ்க்கை
"தெளிவாக,
தற்போது அபாயத்தில்"
இருப்பதாக முடிவிற்குவந்த வழக்கறிஞர்கள் மற்றும்
முன்னாள்-இராஜாங்கத்துறை
அதிகாரிகளின் பரிந்துரைகளின்
மீது
நடவடிக்கை எடுக்குமாறு
அவர்களை நான் கேட்டுக்
கொண்டேன்.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
அதற்கு
என்ன விடையிறுப்பு
கிடைத்தது?
கிற்ஸ்டின் அசான்ஜ்:
எதுவும் இல்லை.
பசுமைக்கட்சியினர்
சுமார்
மூன்று வாரங்களுக்கு
முன்னர் அதை நாடாளுமன்றத்தில்
கொண்டு
வந்தனர்.
அமெரிக்க-ஸ்வீடன்
இருதரப்பு உடன்படிக்கை
நெறிமுறைகளின்படி
தற்காலிக
சரணடைவு விதிகளிலிருந்து
ஜூலியன்
காப்பாற்றப்பட வேண்டுமென
கூறி,
செனட்டர்
ஸ்காட்
லூத்லாம் ஒரு சாதாரண
தீர்மானத்தை முன்வைத்தார்.
தொழிற்கட்சி அல்லது
தாராளவாத நாடாளுமன்ற
அங்கத்தவர்கள் எவருமே அதை
ஆதரிக்கவில்லை.
முன்னதாக
குறைந்தபட்சம் ஒரு டஜன்
இடதுசாரி தொழிற்கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூலியன்
வழக்கு
குறித்து அடிக்கடி
பேசி
வந்தனர்.
சில
தாராளவாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
அவர்களின் கவலையைக் குறிப்பிட்டு
எனக்கு
எழுதியிருந்தனர்.
ஆனால்
ஒபாமாவின்
விஜயம்
நெருக்கமாக வந்ததும்,
அவர்கள் மிகவும்
மௌனமாகிவிட்டார்கள்.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
இந்த
மௌனம் உங்களுக்கு
ஆச்சரியமாக இருந்ததா?
கிற்ஸ்டின் அசான்ஜ்:
ஒரு
ஆஸ்திரேலிய
பிரதம
மந்திரியை
தேர்ந்தெடுத்த
முதலாவது அரசியல் சதியில் கில்லார்டு சம்பந்தப்பட்டிருந்தார்.
அதற்காக அவர் ஒபாமாவிடம்
நிறைய
கடமைப்பட்டுள்ளார்.
மார்க் அர்பீப்
[முன்னாள்
தொழிற்கட்சி ஜனாதிபதி]
அமெரிக்க உளவுத்துறையோடு
சேர்ந்து வேலை
செய்திருந்து பற்றிய ஆஸ்திரேலியா
குறித்த விக்கிலீக்ஸின்
அமெரிக்க தூதரக ஆவணங்கள்
வெளியானபோது இதுபற்றி தொழிற்கட்சியின்
பல
உறுப்பினர்களுக்குத்
தெரியாது.
கில்லார்டு மிகவும்
"நடைமுறைவாதி"
என்று
அவர் அமெரிக்க
தூதரகத்திற்கு கூறியிருந்தார்.
கில்லார்ட் பிரதம மந்திரியாவது எவ்விதத்திலும் கொஞ்சமும்
நீதியானதில்லை என்று நான்
நினைத்துக் கொண்டேன்.
கெவின்
ரூட் அவரின்
சொந்த
ஆஸ்திரேலிய வெளியுறவுக்
கொள்கையோடு செல்ல விரும்பியதில்
அமெரிக்க தூதரகம் கவலை
கொண்டிருந்தது.
ஆப்கான் யுத்த
விபரங்கள் குறித்து விக்கிலீக்ஸில்
வெளியான சில வாரங்களுக்குள்ளேயே
அந்த
ஆட்சிசதி நடந்தது.
இது
ஏதோ
சந்தர்ப்பவசமாக நடந்ததா?
என்னால் அப்படி
நினைக்க முடியவில்லை.
அமெரிக்கா
எங்கெல்லாம் கைப்பாவை ஆட்சிகளை
நிறுத்தியுள்ளதோ அந்த ஏனைய
மூன்றாம்-உலக
சர்வாதிகாரங்கள் அனைத்துடனும்
ஆஸ்திரேலியாவும் இப்போது
சேர்ந்துள்ளது.
நம்முடைய
அரசாங்கம் நீண்டகாலமாகவே
அமெரிக்காவின் கைப்பாவையாக
இருந்து வருகிறதென கடந்தகாலத்தில்
நிறைய
பேசப்பட்டுள்ளன.
ஆனால்
விக்கிலீக்ஸ்
இரகசிய
ஆவணங்கள் மூலமாக
அவற்றிக்கான உண்மையான
ஆதாரங்களே இப்போது நம்மிடையே
இருக்கின்றன.
கில்லார்டு
ஒரு
கைப்பாவை,
அவர்
அவர்களின் கட்டளைகளை பூர்த்திசெய்ய
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து
யாருக்காவது சந்தேகம்
இருந்தால்,
அவர்கள்
அமெரிக்க காங்கிரஸிற்கு
அவர்
அளித்த
வெட்கக்கேடான,
வெறுக்கத்தக்க
உரையைக் குறித்து சிந்தித்து
பார்க்க வேண்டும்.
அப்போது
அவர்
முற்றிலும் தடுமாற்றத்தோடு
கூறினார், “நான்
சிறுமியாக இருந்த போது,
அமெரிக்காவால் எதையும்
செய்ய
முடியுமென நம்பியிருந்தேன்",
பின்னர்
"திரு.
ஜனாதிபதியின் கீழ்
உங்களுக்கு ஒரு நண்பர்
கிடைத்துள்ளார்.”
அது
இன்னும் கூடுதலான
நெருக்கமாகவரவேண்டாம் என்றால்,
அவர்கள் அனைவருக்கும் பொருத்தமானதல்ல என்னும் அடையாளத்தை
அமெரிக்காவின் முன் இட்டிருக்கவேண்டும்
என்று
நான் நினைத்தேன்.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
கடந்த
பெப்ரவரியில் ஜூலியன்
"Dateline”
தொலைக்காட்சி
நேர்காணல் ஒன்றில் கூறுகையில்,
இது
வெறுமனே அர்பீப்
அல்லது
கில்லார்டு சம்பந்தமானது அல்ல,
மாறாக
ஒட்டுமொத்த கட்சியுமே அவ்வாறு
இருக்கிறதென கூறியிருந்தார்.
கிற்ஸ்டின் அசான்ஜ்:
ஆமாம்,
அது
உண்மை
தான்.
அவர்கள்
அர்பீபைத் தவிர்க்க
பார்க்கிறார்கள்,
ஆனால்
அவர் முன்னுக்குக்
கொண்டு
வரப்பட்டார்.
அதேபோல
அவரை பிரதம
மந்திரியாக ஆக்குவதற்கு உடந்தையாக இருந்ததற்கு பில்
ஷோர்டெனையும் கூறலாம்.
உண்மையில்
என்ன
நடந்து கொண்டிருக்கிறதென
மக்கள்
சிந்திக்க வேண்டும்.
இது
அமெரிக்காவால்
ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசியல் சதி.
நம்முடைய அரசாங்கம்
நம்முடைய கட்டுப்பாட்டில்
இல்லை
என்பதையே இது காட்டுகிறது.
இது
நேற்றிரவு
அமெரிக்க
ஜனாதிபதியுடன் நடந்த நாடாளுமன்ற
இரவு
உணவு-விருந்தில்
கில்லார்டு
எல்லையற்ற பரிவோடு பார்க்கையில் [தாராளவாத
தலைவர்]
டோனி
அப்போட் "நீங்களே
உலக
ஜனாதிபதி"
என்று
கூறியபோது மீண்டும் நிரூபணமானது.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
ஆரம்பத்தில் நியூயோர்க்
டைம்ஸூம்,
பிரிட்டனின்
கார்டியன் இதழும் சில
இரகசிய
ஆவணங்களைப் பிரசுரித்தன.
ஆனால்
இப்போது அவை
ஜூலியன் மற்றும் விக்கிலீக்ஸிற்கு
எதிரான
பிரச்சாரத்தின்
பாகமாக
உள்ளன.
ஊடகங்கள்
வகிக்கும் பாத்திரம் குறித்து
நீங்கள் கூற முடியுமா?
கிற்ஸ்டின் அசான்ஜ்:
ஊடகங்கள்
தனிமனிதவியல்புகள் மற்றும் பரபரபூட்டல்களுக்கு கூடிய
முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர உள்ளடக்கங்களுக்கு அல்ல.
விக்கிலீக்ஸினால்,
நேர்மையான அரசியல்
தகவல்களையும்,
அம்பலப்படுத்துதல்களையும்
வேட்கையோடு எதிர்நோக்கும்
ஆஸ்திரேலிய மக்களை ஆஸ்திரேலிய
ஊடகங்கள் முற்றிலும்
குறைமதிப்பீடு செய்கின்றன.
ஊடகங்கள் நிஜமான
செய்திகளுக்கான
(செய்திகளுக்குப்
பின்னால் இருக்கும் நிஜமான
செய்திகளுக்கான)
தேடுதலை குறைமதிப்பீடு செய்கின்றன.
எனக்கு ஊடகங்களைக்
குறித்து நிறைய தெரியாது.
ஆனால்
சில செய்தியாளர்கள்
நிறைய
செய்ய விரும்புகிறார்கள்
என்று
எனக்கு தெரியும்.
ஆனால்
அவர்கள்
மேலிடத்திலிருந்து அமைதியாக
இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்களுக்கே தெரியும்,
ஆஸ்திரேலிய நாளிதழின்
ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து
விக்கிலீக்ஸை அரசாங்கம்
ஆதரிக்க வேண்டுமென முறையிட்டு
ஓர்
அறிக்கை வெளியிட்டனர்.
அதுவொரு
கூட்டுக்கலவையாக இருக்கலாமென்று
நான்
நினைக்கிறேன்.
ரிச்சாரிட் பிலிப்ஸ்
:
ஆனால்
அதன் பின்னர்
அவர்கள் மௌனமாக இருந்து
வருகிறார்களே.
கிற்ஸ்டின் அசான்ஜ்:
அது
கவனிக்க வேண்டியது
தான்.
செய்தியாளர்களை
சுதந்திரமாகவும்,
பாதுகாப்பாகவும்
பேச
அனுமதிக்கும் மற்றும்
காரியங்களை யார் நடத்துகிறார்கள்
என்று
கூற அனுமதிக்கும் ஒரு
நேர்மையான ஆணையம் இருக்க
வேண்டும்.
செய்தியாளர்கள்
தனிப்பட்ட முறையில் நிறைய
செய்ய
விரும்புகிறார்கள்,
ஆனால்
முடிவதில்லை
என்று
எனக்கு தெரியும்.
நான்
நிறைய செய்தியாளர்களுக்கு
நேர்காணல்கள் அளித்திருக்கிறேன்.
அவர்கள் பின்னர்
என்னிடம் திரும்பி வந்து, “நான்
உண்மையிலேயே
இந்த
கட்டுரையைக் கொண்டு
வர
விரும்புகிறேன்,
ஆனால்
அதை
நான் செய்யக்கூடாதென
தடுக்கப்பட்டுள்ளேன்,”
என்று
கூறினார்கள்.
ரிச்சாரிட் பிலிப்ஸ்:
நீங்கள் ஒரு
செங்குத்தான படிப்பினை போக்கில்
உள்ளீர்கள் என்று எங்கோ கூறியுள்ளீர்கள்.
கிற்ஸ்டின் அசான்ஜ்
:
ஆமாம்,
அமெரிக்கா
எந்தளவிற்கு உலகின்மீது
ஒருபிடியைக் கொண்டுள்ளதென்று
மக்கள்
கூறுவதை என்னால்
நினைத்துப் பார்க்க முடிகிறது.
நான்
அவர்களை நம்பவில்லை.
இஸ்லாமிய
பயங்கரவாதம் அல்லது அதைப்போன்ற
ஏதோவொன்று விஷயத்தில்
ஆஸ்திரேலியாவிற்கு பக்கபலமான
ஒரு
கூட்டாளியைக் கொண்டிருப்பது
நல்லதென நான் கருதினேன்.
ஆனால்
இப்போது அமெரிக்க
அரசாங்கமே உலகில் முதலிடத்திலிருக்கும்
பயங்கரவாத அமைப்புகளிலேயே
முதலிடத்தில் இருப்பதாக
நம்புகிறேன்.
விக்கிலீக்ஸ்
ஆவணங்களை வாசித்தும்,
உண்மைகளை ஆராய்ந்து, 12
மாத
ஆழ்ந்த புலனாய்வுகளோடு
என்னுடைய சொந்த ஆராய்ச்சியின்
மூலமாக
நான் இந்த தீர்மானத்தை
எட்டியுள்ளேன்.
இது
எந்த
கட்சியும் சார்ந்த
அரசியல் முடிவல்ல,
ஏனென்றால்
நான்
கட்சியிலும் இணைந்தில்லை.
அமெரிக்கா
ஒரு
போக்கிரித்தனமான
அரசைப்
போல செயல்படுகிறது.
அது
ஜனநாயகம் மற்றும்
மனித
உரிமைகள் குறித்து
பிரசங்கம் செய்கிறது,
ஆனால்
அதன்வழியில் நடந்துகொள்வதில்லை.
மேலும்
அது சம்பந்தப்பட்டுள்ள
அனைத்து நாடுகளிலும் அதே
உரிமைகளை அது
மறைமுகமாக மறுக்கிறது.
இதற்காக
நான்
அமெரிக்க மக்கள்மீது
நம்பிக்கை இழந்துவிட்டேன்
என்று
அர்த்தமல்ல,
ஆனால்
அவர்கள் என்ன நடந்து
கொண்டிருக்கிறதோ அதற்கு
எதிராக
போராட வேண்டியுள்ளது.
அவர்கள் ஸ்தாபக
தந்தைகளால் அஸ்திவாரமிடப்பட்ட
ஜனநாயக
உரிமைகளைக் காப்பாற்ற
வேண்டியுள்ளது.
அவர்கள்
அதை
செய்தால் அவர்கள் உலகம்
முழுமைக்கும் ஒரு ஒளிவிளக்காக
இருப்பார்கள்,
ஆனால்
பெருவணிகங்கள் இதை அனுமதிப்பார்களா
என்பதை
என்னால் உறுதியாக
கூறவியலாது.
இந்த பிரச்சாரத்தில்
நான்
ஈடுபட்ட போது நானொரு
சாதாரண
நபர் தான்.
ஆனால்
இந்நாட்டிலும்,
உலகம்
முழுவதிலும்,
இந்த
வழக்கு
ஜனநாயகத்திற்கு ஒரு
முன்னோடியாக உள்ளது என்பதை
மக்கள்
உணர வேண்டும்.
ஏனென்றால் நாம்
அனைவருமே இணையத்தைப்
பயன்படுத்துகிறோம்.
இணைய
தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும்
உள்ள
மக்களுக்கு இலவச தகவல்களைக்
கொண்டு
வந்துள்ளது.
நாம்
பெரும்ஊடகங்களின்
வழியாகத் தான் போக வேண்டுமென்பதில்லை.
நமக்கு
இப்போது குரல்
கொடுக்க முடியும்,
எல்லைக்கடந்து,
வயதைக்
கடந்து,
தொழில்களைக்
கடந்து
நம்மால் ஒருவரோடு
ஒருவர்
பேச முடியும்.
இந்த
பூமியின் நலனுக்காக தகவல்களைப்
பகிர்ந்து கொள்ள முடியும்.
ஜூலியன் என்னுடைய
மகன்
என்பதால் இது தனிப்பட்டமுறையில்
எனக்கு
மட்டுமல்ல,
மாறாக
எதிர்கால ஜனநாயகத்திற்காகவுமே,
இதுவொரு மிகவும்
முக்கியமான பிரச்சினையாக
உள்ளது. |