WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Mass layoffs in Germany highlight new stage in global slump
உலகப்
பொருளாதாரச்
சரிவின் புதிய கட்டத்தை ஜேர்மனியின்
ஏராளமான வேலைநீக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன
Christoph Dreier and Barry Grey
29 November 2011
கடந்த வாரம் இரு முக்கிய ஜேர்மன் தொழில்துறை
நிறுவனங்கள் ஏராளமான வேலைநீக்கங்களை அறிவித்தன;
மூன்றாவது நிறுவனம் திவால்தன்மைக்குப்
பதிவு செய்தது.
ஜேர்மனியின் மிகப் பெரிய எரிசக்தி வழங்கும் நிறுவனமான
Eon
தான் அதன் உலகெங்கிலுமுள்ள
80,000
வேலைகளில்
11,000
பேர் நீக்கப்படுவார்கள்,
அதில் ஜேர்மனியில்
6,500
பேரும் அடங்குவர் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்நிறுவனம் எரிசக்தி உற்பத்திக்கு அணுசக்தியைப்
பயன்படுத்தப்படுவதைப் படிப்படியாக அகற்றும் ஜேர்மன்
அரசாங்கத்தின் முடிவை மேற்கோளிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய தொலைப்பேசி வலையமைப்பு
வழங்கல் நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ்,
தான் அதன் தொழிலாளர் தொகுப்பில்
25
சதவிகிதத்தைக் குறைப்பதாவும்,
அதையொட்டி
17,000
வேலைகளைச் சர்வதேச அளவில் குறைப்பதாகக் கூறியுள்ளது;
இதில் ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானவர்கள்
உள்ளடங்குவர்.
அச்சடிக்கும் கருவிகளை உலகில் உற்பத்தி
செய்வதில் மூன்றாவது இடத்திலுள்ள மான்ரோலாந்து
(Manroland)
நிறுவனம் வெள்ளியன்று திவால்தன்மைக்குப் பதிவு செய்தது;
இதன் முக்கியப் பங்குதாரர்கள் வெளியேறி புதிய முதலீட்டாளர்களை
நிறுவனம் பெறமுடியாத நிலையை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.
திவால்பதிவு நடவடிக்கை நிறுவனத்தை மூடிவிடவோ அல்லது வேலைகளைக்
குறைத்து,
ஊதியங்கள் மற்றும் நலன்களைக் குறைத்து நிறுவனத்தை
மறுகட்டமைத்தல் என்னும் முறையிலோ செய்யப்படும்.
அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தித்
தகவலில்,
மான்ரோலாந்த் தன் திவால்தன்மை அறிவிப்பதற்கு வழிவகுத்த பரந்த
பொருளாதார நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
“ஜூலை
மாத நடுவிலிருந்து காணப்படும் உற்பத்தி செயலாணைகளில்
(Incoming orders )
பாரிய வீழ்ச்சி,
இன்னும் விரைவாகிவிட்டது”
என்று மேற்கோளிட்டுள்ளது.
மேலும்,
“வாடிக்கையாளர்கள்
நிதிய நெருக்கடிக்குப் பின் தேவையான நிதியைப் பெறுவதில் பெரும்
இடர் கொண்டுள்ளனர்”
அதன் பொருட்களின்
“சந்தை
அளவு இப்பொழுது
2008ல்
நெருக்கடி துவங்கியபோது இருந்த நிலையில்
50
சதவிகிதம்தான் உள்ளது”
என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
ஐரோப்பாவின் மிக வலுவான பொருளாதாரத்தில்
இத்தகைய போக்குகள் ஒரு முழு-அளவு
மந்தநிலைத் திசையைச் சுட்டிக்காட்டும் உலகப் பொருளாதாரத்தின்
தீவிரச் சரிவு பற்றிய அப்பட்டமான அடையாளமாகும். 2008
மற்றும்
2009
ஆண்டுகளில் வங்கிகளுக்கு அரசாங்கங்கள் மிகப் பெரிய பிணை
எடுப்புக்களைக் கொடுத்து வெற்றுத்தன
“மீட்பை”
காட்டியது உலக முதலாளித்துவ முறையில் ஆழ்ந்த நெருக்கடியில் ஒரு
கட்டம்தான் என்பதை இவைகள் காட்டுகின்றன.
நெருக்கடியில் இருந்தும் மிருகத்தனமான
முதலாளித்துவக் கொள்கையான ஏராளமான வேலைநீக்கங்கள்,
சிக்கனங்கள் ஆகியவற்றினால் எந்த நாடும் விதிவிலக்கு பெறவில்லை
என்பதையும் இது காட்டுகிறது.
இலாபமுறை முறிவினால் ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு ஆளும்
வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று
விரும்புகிறது,
இதையொட்டி முந்தைய நூற்றாண்டில் பெறப்பட்ட அனைத்துச் சமூக
வெற்றிகளும் திரும்பப் பெறப்படுகின்றன.
ஜேர்மனி
2010
மற்றும்
2011
ஆகிய ஆண்டுகளில் சுருக்கமான,
நிதானமான மீட்பை
3.6
சதவிகித வளர்ச்சியுடன் பெற்றது,
அதே போல்
3.0
சதவிகித வளர்ச்சி வரும் என்றும் மதிப்பிடப்பட்டது;
ஆனால் உலகச் சரிவு மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரிதும்
நம்பியுள்ள ஏற்றுமதியில் சுருக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து
மதிப்பிடப்பட்ட வளர்ச்சி அடையப்பட முடியவில்லை.
கிரேக்கம்,
அயர்லாந்து,
போர்த்துக்கல்,
இத்தாலி ஆகிய அதிகம் கடன்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின்
தொழிலாளர்களுக்கு எதிராக ஜேர்மனிய அரசாங்கம் கோரிவந்த அதே
தாக்குதல்கள் இப்பொழுது ஜேர்மனியத் தொழிலாளர்களுக்கு
எதிராகவும் சுமத்தப்பட உள்ளன.
கடந்த வாரம் ஜேர்மனிய அரசாங்கப்
பங்குப்பத்திரங்கள் விற்பனையில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த
ஏராளமான வேலைநீக்கங்கள் பற்றிய அறிக்கை வந்துள்ளது. இந்த
பத்திர விற்பனைத் தோல்வி கொள்கை இயற்றுபவர்களைப் பெரும்
அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளதுடன்,
ஐரோப்பியக் கடன் நெருக்கடியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய
நாடுகளிலும் பரவிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
இத்தாலி,
ஸ்பெயின்,
பிரெஞ்சு அரசாங்கங்களின் பங்குப்பத்திரங்கள் வட்டிவிகிதங்களில்
தொடர்ந்து ஏற்றம் பெற்றுள்ளதுடன்,
மற்ற யூரோப்பகுதி நாடுகள் அனைத்தின் வட்டிவிகிதங்கள்
உயர்ந்துள்ள நிலையில்,
ஜேர்மனியப் பங்குப்பத்திரத்தின் விற்பனைத் தோல்வியானது அனைத்து
ஐரோப்பிய அரசாங்கப் பங்குப்பத்திரங்களின் சரிவும் சந்தையில்
ஏற்பட்டுள்ளதைத்தான் அடையாளம் காட்டுகிறது.
அதே சமயம் முக்கிய தனியார் வங்கிகள் ஐரோப்பா
முழுவதும் நிதியளிக்கும் சந்தைகளில் எவ்விதமான செயற்பாடுமற்று
நிற்கின்றன.
“யூரோப்
பகுதி உண்மையில் சரிவைத் தவிர்க்க சில நாட்களையே கொண்டுள்ளது”
என்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸில் விமர்சகர்
வொல்ப்காங் முன்சௌ,
“வங்கித்
துறையும் முறிந்துவிட்டது…..யூரோப்பகுதி
இப்பொழுது உலக முதலீட்டாளர்களால் நடத்தப்படுகிறது,
குடிமக்கள் அதிக சத்தமின்றி வங்கிகளில் இருந்து கணக்கை
முடித்துப் பணத்தை எடுக்கின்றனர்”
என்று எழுதியுள்ளார்.
இச்சரிவில் உலகளாவிய தன்மை கடந்த வாரம் சீன
உற்பத்தித்துறை பற்றிய அறிக்கை ஒன்றில் அடிக்கோடிட்டுக்
காட்டப்பட்டது;
அதில் நவம்பர் மாதம் உண்மையான சுருக்கம் மூன்று ஆண்டுகளில்
மிகவும் குறைவான எண்ணிக்கை என்று காட்டப்பட்டுள்ளது.
திங்களன்று பாரிசைத் தளமாகக் கொண்ட திங்களன்று பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பு
(OECD),
அதனுடைய ஈராண்டு உலகப் பொருளாதாரப் பார்வையை வெளியிட்டது:
இது அதன்
34
உறுப்பினர் நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை கடந்த மே மாதம்
கொடுத்த அறிக்கையில் இருந்த வளர்ச்சி விகிதத்தைவிடத்
தீவிரமாகக் குறைத்துள்ளது.
OECD
இந்த ஆண்டு
1.9
சதவிகிதமாக இருக்கும் வளர்ச்சி,
2012ல்
இன்னும் தேய்ந்து
1.6
சதவிகிதம்தான் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
யூரோப்பகுதி ஏற்கனவே
“சிறியளவு”
மந்தநிலைக்கு உட்பட்டுவிட்டது என்று கூறும் இந்த அமைப்பு,
அடுத்த ஆண்டு வெறும்
0.2
சதவிகித வளர்ச்சியைத்தான் காணும் என்றும் கணித்துள்ளது.
ஐரோப்பியப் பொது நாணயம் சிதைந்துவிடக்கூடிய வாய்ப்பு பற்றியும்
அது எச்சரித்துள்ளது.
2012
க்கு ஜேர்மனிய வளர்ச்சி பற்றிய தன் திருத்தப்பட்ட
கீழ்நோக்கியபடியான கணிப்பு
0.6
சதவிகிதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது.
இது சமீபத்திய யூரோஸ்டாட் அறிக்கை ஒன்று ஜேர்மனியில் புதிய
தொழிற்துறை விற்பனைத் தேவை ஆகஸ்ட்டிலிருந்து செப்டம்பருக்குள்
4.4
சதவிகிதம் குறைந்துவிட்டது,
இது
2009
மந்தநிலைக்குப்பின் மிகக் குறைவானது என்பது
காட்டப்பட்டதையடுத்து வெளிவந்துள்ளது.
ஐரோப்பாவை அதன் மந்தநிலையில் இருந்து மீட்கும்
“இயந்திரம்”
என்று பயன்படுவதற்குப் பதிலாக,
ஜேர்மனியே இப்பொழுது ஆழ்ந்து போகும் உலக நெருக்கடிச் சரிவில்
இழுக்கப்பட்டுவிட்டது.
ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பியத் தொழிலாளர்களை கிரேக்கம்
மற்றும்
“சுற்றுவட்டத்தில்”
உள்ள ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அவர்களுடைய வர்க்கச் சகோதர,
சகோதரிகளிற்கு எதிராக நிறுத்துவதற்கான பிற்போக்குத்தன,
போலி முயற்சிகளின் உள்ளடக்கத்தைதான் அம்பலப்படுத்துகிறது.
வங்கிகளும் அவற்றிற்கு அடிமைபோலுள்ள அரசாங்கங்களும் கிரேக்கம்,
ஸ்பெயின்,
இத்தாலி மற்றும் போர்த்துக்கலில் சுமத்திய பேரழிவு தரும்
அடிகள் இதேபோன்ற தாக்குதல்கள் ஐரோப்பா முழுவதும்,
மற்றும் அமெரிக்கா,
சர்வதேச அளவில் ஏற்படுவதற்கான அரங்கைத்தான் அமைத்துள்ளன.
தங்கள் வேலைகள்,
வாழ்க்கைத் தரங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு,
தொழிலாளர்கள் அனைத்து ஸ்தாபனக் கட்சிகளின்
— “இடது”
மற்றும் வலது”—தேசியவாதக்
கொள்கைகளையும்,
தொழிற்சங்கங்களின் சோவனிசக் கொள்கைகளையும் நிராகரிக்க வேண்டும்.
ஒரு புரட்சிகர சோசலிசத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்
வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட தாக்குதலுக்குப் போராட வேண்டும்.
ஐரோப்பா முழுவதும் மற்றும் கண்டங்களுக்கு
இடையேயான ஒருங்கிணைந்த தொழில்துறை நடவடிக்கைகளால்
வங்கியாளர்களின் அரசாங்கங்களை வீழ்த்தி அவற்றிற்குப் பதிலாக
தொழிலாளர் அரசாங்கங்களை அமைக்கும் போராட்டத்துடன் இணைக்கப்பட
வேண்டும்;
இவைகள்தான் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள்
தேசியமயமாக்கப்பட்டு,
தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வர உறுதியளிக்கும்.
அத்தகைய சோசலிச முன்னோக்கு ஒன்றுதான் தனியார் இலாபம் என்று
இல்லாமல் சமூகத் தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமிட்ட
உலகப் பொருளாதாரத்திற்கான நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். |