சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian revolution turns against the military

எகிப்திய புரட்சி இராணுவத்திற்கு எதிராக திரும்புகிறது

Johannes Stern
28 November 2011

use this version to print | Send feedback

2011ம் ஆண்டு வட ஆபிரிக்காவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் நீண்ட கால அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடத்திய சக்தி வாய்த்த போராட்டங்களுடன் தொடங்கி, பெப்ருவரி 11ம் திகதி எகிப்தின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் கட்டாயமாக இராஜிநாமா செய்ததில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆண்டு முடிவை நெருங்குகையில் எகிப்தை ஒரு புதிய ஆர்ப்பாட்ட அலை அதிர்விற்கு உட்படுத்துகிறது; இது அவருக்குப் பதிலாக வந்த இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக இயக்கப்படுகிறது.

புதிப்பிக்கப்பட்ட புரட்சிகர எழுச்சி ஜனநாயக மாற்றத்திற்குத் தலைமை தாங்குவதாக கூறிக்கொள்ளும் எகிப்திய இராணுவத்தின்மீது தொழிலாள வர்க்கத்தின் தீர்ப்பு ஆகும். இன்னமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் நிதி ஆதரவைக் கொண்டுள்ள இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிராக நாடெங்கிலும் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், ஒரு மிருகத்தனமான அரச தாக்குதலை எதிர்கொள்கின்றன; இதில் ஏற்கனவே பல டஜன் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர்.

இராணுவக் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் இன்று தேர்தல்களை நடத்தும் முயற்சிகள் வெகுஜன கோஷங்களான "இராணுவ ஆட்சி வீழ்க!" என்பவற்றை எதிர்கொண்டன. முபாரக்கின்கீழ் 1996 முதல் 1999 வரை பிரதம மந்திரியாக பணிபுரிந்த கமால் எல் கான்ஜௌரியைப் பிரதம மந்திரியாக அரசாங்கத்தை அமைக்குமாறு ஆட்சிக்குழு வியாழனன்று கேட்டுக் கொண்டபோது, எதிர்ப்பாளர்கள் அதற்கு உடனே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இத்தகைய வெகுஜனப் போராட்டங்களூடாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் இராணுவக்குழு ஜனநாயக மாற்றத்திற்காக உள்ளது என்ற நிலைப்பாட்டைத் தாங்கள் மோசடி எனக் கருதுவதாக நிராகரித்துள்ளதை தெளிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய தேர்தல்கள், இராணுவ ஆட்சிக்குழு மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சட்டமன்றத்தைத்தான் தோற்றுவிக்கும், முபாரக்கின் பழைய எடுபிடிகளின் வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தவும், இன்னும் கூடுதலான அடக்குமுறைக்கு போலிப் பாராளுமன்ற நெறிப்படுத்தலைக் கொடுக்கும் முயற்சிகளாகத்தான் இருக்கும்.

வெகுஜன எதிர்ப்பை இராணுவம் முகங்கொடுக்கையில், பல அரசியல் சக்திகள் தங்கள் சேவைகளை இருக்கும் நிலையைத் தக்கவைப்பதற்கு அளிக்க முற்படுகின்றன. சில இளைஞர் குழுக்களும், தன்னைத்தானே புரட்சி இயக்கங்கள் என்று கூறிக் கொள்பவையும், தாராளவாத அரசியல்வாதி மஹ்மத் எல்பரடேயின் கீழ் ஒரு தேசிய புனருத்தாரண அரசாங்கம் நிறுவப்பட்டால், அது மாறுபட்ட வகையில் இருக்கும் என்று கூறுகின்றன. இது ஒரு பொய் ஆகும். இராணுவ ஆட்சிக்குழுவினால் நிறுவப்படும் எல்பரடேயின் அரசாங்கம் எகிப்திய ஆளும் வர்க்கம், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் காக்கும் வேறு ஒருவகைக் கைப்பாவையாகத்தான் இருக்கும்.

சனிக்கிழமையன்று எல்பரடேயும் முன்னாள் அரபு லீக் தலைவர் அமர் மௌசாவும் இராணுவக் குழுவின் தலைவரான பீல்ட் மார்ஷல் மஹ்மத் ஹுசைன் தந்தவியைச் சந்தித்தனர். அவர்களிடம் தந்தவி பிரதம மந்திரி கான்ஜௌரியை ஆதரிக்குமாறு கூறியதுடன், இராணுவம் ஒரு புதிய அரசியலமைப்பின் கீழ் அதன் அதிகாரங்களை விட்டுக்கொடுக்காது, அழுத்தங்களுக்கும் தாழ்ந்து நிற்காது என்றும் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையேயுள்ள பெரும் இடைவெளியை புதுப்பிக்கப்பட்டுள்ள வெகுஜன எதிர்ப்புக்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. அரசியல் ஸ்தாபனமானது, இராணுவக்குழு சீர்திருத்தங்களை செய்யக்கூடும் என்னும் போலித்தோற்றங்களை வளர்க்க முற்படுகின்றன. வெள்ளியன்று எந்த அரசியல் கட்சிகளையும் தஹ்ரிர் சதுக்கத்தில் அரங்கு அமைப்பதற்கு எதிர்ப்பாளர்கள் அனுமதிக்கவில்லை; ஏனெனில் அவைகள் இராணுவக் குழுவின் கருவிகள் என்றுதான் பரந்த முறையில் பார்க்கப்படுகின்றன.

இஸ்லாமியவாத முஸ்லிம் பிரதர்ஹுட்டுக்கு (MB) ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்கள் பலத்த அடியைக் கொடுத்துள்ளன; அது இராணுவ ஆட்சிக்குழுவிற்கு மத்தியதர வர்க்க இடது கட்சிகளுடைய ஆதரவு குறித்த மக்கள் ஏமாற்றத்தின் மூலம் இலாபம் அடைந்து இன்றைய தேர்தல்களில் வெற்றிபெற்று அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று நம்பியது. இன்னும் பகிரங்கமாக MB இராணுவ ஆட்சிக்குழுவை எதிர்ப்பவர்களைக் குறைகூறியது. இப்பொழுது அது அமெரிக்காவுடன் பிணைந்துள்ள எதிர்ப்புரட்சிச் சக்தி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதர்ஹுட்டின் தலைவர் மஹ்மத் எல் பெல்டகி திங்களன்று தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து எதிர்ப்பாளர்களால் வெளியேற்றப்பட்டார்.

இராணுவ ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தும் மையப் பங்கு பல குட்டி முதலாளித்துவ போலி இடது குழுக்களான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), சோசலிஸ்ட் மக்கள் கூட்டணிக் கட்சி (SPAP) மற்றும் எகிப்திய சோசலிஸ்ட் கட்சி (ESP) ஆகியவைகளால் செய்யப்படுகின்றன. முபாரக்கின் தளபதிகள் அழுத்தத்திற்கு உட்படுவர், எகிப்தியப் புரட்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், அதற்கு சுயாதீன தொழிற்சங்கங்கள் கட்டமைக்கப்பட வேண்டும், அவைகள் முதலாளித்துவ சார்பு இஸ்லாமியவாதிகள், எல் பரடேய் மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவுடனேயே இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களுடைய முன்னோக்கு RS உறுப்பினர் முஸ்தபா ஒமரினால், மே 31 வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் சுருக்கமாகக் கூறப்பட்டது; அதில் அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தாலும், ஆயுதப்புடைகளின் தலைமைக்குழு, அதாவது இராணுவக்குழு ஜனவரி 25 எழுச்சி சில வகைகளில் எகிப்தை முற்றிலும் மாற்றிவிட்டது என்பதை அறிந்துள்ளது என்று கூறப்படுகிறது. இராணுவக்குழு அரசியல், பொருளாதார முறையைச் சீர்திருத்தும் நோக்கம் கொண்டது, அதையொட்டி அது இன்னும் ஜனநாயக முறைச் செயல்பட்டை கொள்ளும், குறைவான அடக்குமுறையையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

பத்து மாதங்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பின்னர், கடுமையான அடக்குமுறையை அடுத்து, 12,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டபின், இந்த முன்னோக்கின் திவால்தன்மை எகிப்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டங்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. RS, SPAP மற்றும் ESP போன்ற சக்திகள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக முதலாளித்துவ ஆட்சி, இராணுவம் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுடன் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள வசதி படைத்த ஒரு சிறிய மத்தியதர வர்க்கத்தைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில், புரட்சியை தொடர்கின்ற தேர்தல் கூட்டணி என்று அழைக்கப்படும் குழு, SPAP, ESP, தாராளவாத மற்றும் இஸ்லாமியவாதக் குழுக்களை உள்ளடக்கியது, தேர்தல்களில் அவைகள் பங்குபெற இருப்பதை அறிவித்து, தேர்தல்களை ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் முக்கிய ஒரு படி என்றும் பாராட்டியுள்ளது. எகிப்திய தேர்தல் கூட்டணி முகாமுடன் சேர்ந்து அவைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒரு தேசியப் புனருத்தாரண அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவையும் கொடுத்துள்ளது.

ஒரு ஜனநாயகத்திற்கான மாற்றம் என்னும் உறுதிமொழிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் நேரடிப் போராட்டம் வெளிப்பட்டுள்ளது பெரும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இப்போராட்டங்களின் தர்க்கம் இராணுவ ஆட்சியைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கம் கொண்டவை அல்ல; மாறாக அதை அகற்றும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது. மேலும் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் தலைமை குறித்த அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.

எகிப்தில் புதிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பு, ஆழமடையும் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருகிய போராட்டங்களின் பின்னணியில் நடைபெறுகிறது. உலகப் பொருளாதாரமானது ஒரு புதிய, இன்னும் மோசமான பேரழிவுதரும் கீழ்நோக்கிய விளிம்பில் உள்ளது, ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கம் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாட்டில் ஒற்றுமையாக உள்ளது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஒரே முன்னேற்றப்பாதை சோசலிசப் புரட்சிதான் என்பதை எகிப்திய நிகழ்வுகள் தெளிவாக்கிக்காட்டுகின்றன. மாபெரும் புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்ட நிகழ்வு என்றாலும், முபாரக்கின் வீழ்ச்சி வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் அரசியல், சமூகப் பிரச்சினைகளில் எதையும் தீர்க்கவில்லை.

அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளமையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கை சக்திவாய்ந்த முறையில் உறுதிப்படுத்துகிறது. WSWS அதனது பெப்ருவரி 14ம் திகதிப் பதிப்பில் விளக்கியதுபோல், புரட்சி தொடர்வது மற்றும் அதன் நலன்களுக்காகப் போராடுவது என்பது தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்டுள்ள வெகுஜனங்களையும் இன்னும் நேரடியான மோதலிற்கு இராணுவம், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டுவருகிறது.

எகிப்து போன்ற ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள முதலாளித்துவ வர்க்கமானது ஜனநாயகத்திற்கான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்க முடியாது, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் தலைமை தாங்க முடியாது என்று கூறும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தினால் வழிகாட்டப்படும் WSWS ஆனது தங்கள் சர்வதேச வர்க்க சகோதர, சகோதரிகளுடன் இணைந்து தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன, சோசலிச போராட்டத்தில் ஈடுபடுவது ஒன்றுதான் புரட்சிகளின் நோக்கங்களைச் சாதிப்பதற்கு ஒரே வழி என்று அறிவிக்கிறது.

அத்தகைய சோசலிசத்திற்கான சர்வதேசப் போராட்டத்திற்கான சூழல்கள் பெருகிய முறையில் சாதாகமாக உள்ளன. எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏற்கனவே சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் உறுதியான போராட்டத்திற்கான விலைமதிப்பற்ற முன்மாதிரி ஒன்றை அளித்துள்ளனர். அவர்களுடைய புரட்சியை முன்னேற்றுவிக்க, இப்பொழுது மிக உறுதியான பணி ICFI ன் பிரிவை எகிப்தில் கட்டமைத்து இராணுவ ஆட்சியை அகற்றுவதற்கான ஒரு சோசலிச முன்னோக்கிற்காகப் போராடுவது ஆகும்.