WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்சில் கடன் நெருக்கடி பரவுகையில் தொழிற்சங்கங்கள் அடையாள எதிர்ப்பிற்கு
அழைப்பு விடுகின்றன
By Kumaran Ira and Alex Lantier
18 August 2011
use
this version to print | Send
feedback
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் பிரெஞ்சு தொழிற்சங்க
அதிகாரத்துவத்தினரும் ஐரோப்பியக் கடன் நெருக்கடி பிரான்சிலும் பரவுகையில் நிதியச்
சந்தைகளைத் திருப்தி செய்வதற்கு ஆழ்ந்த புதிய வெட்டுகளுக்குத் தயாரிப்பை
செய்கின்றனர்.
அமெரிக்காவின் கடன் தரத்தை ஸ்டாண்டர்ட்
&
பூவர்ஸ்
குறைத்தபின்,
பிரான்ஸ்தான்
AAA
தரத்தை
இழக்கக்கூடிய அடுத்த பொருளாதாரமாக இருக்கக்கூடும் என்ற ஊகம் பெருகியுள்ளது.
பிரான்சின் வங்கித்துறையானது உலக நிதியச் சந்தைகளில் இப்பொழுது ஊகவகைத் தாக்குதலை
எதிர்கொண்டுள்ள ஸ்பெயின் மற்றும் இத்தாலியக் கடன் தொகுப்பில் நூற்றுக்காணக்கான
பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
ஆகஸ்ட்
24ம்
திகதி ஒரு ஆரம்பமாக செலவுக் குறைப்புக்களில்
10
பில்லியன் யூரோக்களை அறிவிக்கவுள்ள நிலையில்,
பிரான்சின் ஆளும் உயரடுக்கு இப்பொழுது இக்குறைப்புக்கள் முதலாளித்துவத்திற்கும்
தொழிலாள வர்க்கத்திற்கும் இடையேயுள்ள ஒரு தேசிய ஒருமித்த உணர்வை பிரதிபலிக்கிறது
என்று காட்டும் தந்திரோபாயத்தை மேற்கொண்டுள்ளது.
பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின்
(CFDT)
தலைவர்
François Chérèque
நேற்று
இந்த அமைப்பு
“தொழிலாளர்கள்,
முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின்”
பிரதிநிதிகளை ஒன்றாகக் கொண்டுவரும்
“ஒரு
சமூக உச்சிமாநாட்டிற்கு”
அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதம மந்திரி பிரான்சுவா ஃபியோன் நேற்று அவருடைய அரசாங்கம் அத்தகைய
கூட்டம் ஒன்றை
“வரவிருக்கும்
நாட்களில்”
கூட்ட இருப்பதாகவும்,
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருடன் ஒன்றாகச் செயல்பட்டு பொருளாதாரக் கொள்கையை
“முழுமையாக
கணக்கெடுக்கும்”
கொள்கை பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.
பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு
—முன்னாள்
ஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு
(CGT)-
கடந்த
ஆண்டு எண்ணெய்துறை வேலைநிறுத்தம் தொடங்கி அது காத்து வந்த மௌனத்தை கைவிட்டு தேதி
குறிப்பிடாத ஒரு நாளன்று,
ஒரு நாள் அடையாள எதிர்ப்பு,
பாடசாலை ஆண்டுத் தொடக்கத்தை ஒட்டி நடைபெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது.
அதன் அறிக்கை,
“நிதியச்
சந்தைகளின் சர்வாதிகாரத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
என்ற தலைப்பைக் கொண்டது,
தொழிற்சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகள்
“பற்றித்
தகவல் கொடுக்கும் அமைப்பாகச் செயல்பட”
அனுமதிக்கும் எனக் கூறியுள்ளது.
CGT
இன்
வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை கொடுக்கும் தீர்மானம்,
சந்தேகத்திற்கு இடமின்றி பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சமீபத்திய நிதியச் சரிவை
எதிர்கொள்ளும் வகையில் வங்கிகள் கோரும் தாக்குதல்களுக்கு எதிராக அதிகரித்துவரும்
மக்கள் சீற்றத்தைத்தான் பிரதிபலிக்கிறது.
ஆனால் தொழிற்சங்கங்கள் இத்தகைய எதிர்ப்பை
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்னும் கூற்றுக்கள் பொய் ஆகும்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் சார்க்கோசியையும் ஃபியோனையும் அரசாங்கத்தின்
திட்டமிடப்படும் குறைப்புக்களை நிறுத்தவோ அல்லது வரம்பிற்கு உட்படுத்தவோ
சந்திக்கவில்லை;
மாறாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை எவ்வாறு ஒருநாள் எதிர்ப்புக்களின் மூலம் பயனற்றதாக
வரம்பு கட்டிவிடலாம் எனத் தீர்மானிப்பதற்குத்தான்.
வரவிருக்கும் கூட்டத்தின் தன்மையை ஒட்டி,
“தொழிலாளர்களின்
பிரதிநிதிகள்”
என்று செயல்படுவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு இயலாத ஒரு செயல் ஆகும்.
CGT
அறிக்கையிலுள்ள ஒரு சில உண்மைகூறும் பத்திகளில்,
அது சார்க்கோசியின் கொள்கை சந்தைகளுக்கு உறுதியளிக்கும்
“நெருக்கடியை
ஆழப்படுத்தும்,
கிரேக்கத்தின் உதாரணம் இதைத்தான் காட்டியுள்ளது”
என்று குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ்,
இத்தாலி,
ஸ்பெயின் இன்னும் அப்பாலும் அரசாங்கங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன்களை
தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து சுரண்டப் போட்டியிடுகையில்,
அவை தொடரவுள்ள கொள்கைகள் எல்லாவற்றிற்கும் மேலாக கிரேக்கம் அல்லது அமெரிக்கா
தொடரும் கொள்கைகளைத்தான் ஒத்திருக்கும்.
கிரேக்கத்தில் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட தங்கள் ஊதியங்களின் சராசரி வாங்கும்
திறனில்
30
சதவீதத்தை இழந்துவிட்டதாக மதிப்பிடப்படுகிறது.
இது வேலைகள்,
ஓய்வூதியங்கள்,
ஊதியங்கள் மற்றும் போனஸ்கள் இவற்றில் நடத்தப்படும் ஆழ்ந்த வெட்டுக்களுக்கு இடையே
வந்துள்ளது.
அமெரிக்காவில் கார்த் தொழிலாளர்கள்
50
சதவிகிதம் ஊதியக் குறைப்புக்களை ஏற்றுள்ளனர்;
இதைத்தவிர,
ஒபாமா நிர்வாகம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களையொட்டி ட்ரில்லியன்
கணக்கான டாலர்கள் பொதுநலச் செலவுகளிலிருந்து குறைப்பதற்கான தயாரிப்புக்களை
செயல்படுத்த உள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு உண்மையான பிரதிநிதியும் இத்தகைய
கொள்கைகளுக்கு ஒப்புதல் தரமாட்டார்.
CGT, CFTD
ஆகியவை
செல்வாக்கிழந்துள்ள சார்க்கோசி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தக் காட்டும்
பரபரப்பு
—பேச்சுக்களில்
நேரடிப் பங்கு மூலம் அல்லது சார்க்கோசிக்கு ஒரு நாள் தெரு எதிர்ப்புக்கள் மூலம்
“அழுத்தம்’
கொடுக்கப்படலாம் என்னும் போலித் தோற்றங்களை வளர்ப்பதின் மூலமோ—
அவர்கள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது.
சமூகநல வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தின் தலைமை,
தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களான புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி போன்ற போலி இடது கட்சிகளுடைய கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட
வேண்டும்.
முக்கிய அரசியல் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்தின் சமீபத்திய
போராட்டங்களில் இருந்து பற்றி எடுக்கப்பட வேண்டும்;
இவைகள் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவை.
CGT
யின்
அறிக்கை,
“கடந்த
மூன்று ஆண்டுகளாக பின்பற்றப்படும் நிதியச் சந்தைகளைப் பிணை எடுக்கும் கொள்கை,
தேசிய நலனுக்கு நலன் அளிக்காது,
எதிரிடையானது”
என்று கூறியுள்ளது.
பிரான்சில் சமீபத்திய வெட்டுக்கள் சார்க்கோசிக்கும்
CGT
உட்பட
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கும் இடையே நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளின்
விளைவுகள் ஆகும்.
சார்க்கோசி
2007ல்
ஓய்வூதிய வெட்டுக்களை அறிமுகப்படுத்தியபோது
CGT
ஒரு
நாள் எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்தது;
அதேபோல்
2008
இல்
ஓய்வூதியக் குறைப்புக்கள்,
2009ல்
சார்க்கோசியின் வங்கி பிணை எடுப்புக்கள்,
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வகை ஆகியவற்றிற்கு எதிராகவும் ஒரு நாள்
வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது.
CGT
யே
கூறும் கிரேக்க உதாரணம்,
CGT
யின்
கொள்கையான தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தக் கொள்கை பற்றிக் கடுமையாகச்
சாடுவது ஆகும்.
கிரேக்கத்தில் பல ஒரு நாள் எதிர்ப்புக்கள்,
GSEE
தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்டன;
இச்சங்கம் ஆளும் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக
PASOK
கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இவை பாப்பாண்ட்ரூ கட்டாயமாகச் செயல்படுத்தியுள்ள பல வெட்டுக்களில் எவ்வித
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இக்கொள்கைகளை தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன;
இது ஒரு தவறினால் நிகழ்வதல்ல;
அவை தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு முழு நனவுடன் விரோதமாக உள்ளன
—இந்த
நிலைமை உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி மேலும் தீவிரமாகியுள்ளது.
வங்கிகளின் பொறுப்பற்ற ஊகங்களால் ஏற்பட்டுள்ள ட்ரில்லியன் கணக்கான இழப்புக்களை
தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என வங்கிகளும் செல்வந்தர்களும் வலியுறுத்துகையில்,
அரசாங்கங்கள் திட்டமிடும் வெட்டுக்களுக்கு வரும் எந்த எதிர்ப்புக்களையும்
பொறுத்துக் கொள்ள மாட்டா.
இச்சூழ்நிலையில்,
தொழிற்சங்கங்கள் வெட்டுக்களைச் சுமத்த உதவுவதற்கு விரைகின்றன,
புரட்சிகர தாக்கங்களை கொண்ட தொழிலாளர்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்துகின்றன.
இவ்வகையில் பிரான்சில் சார்க்கோசி அரசாங்கம் கடந்த
இலையுதிர்காலத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொழில்துறை போராட்டத்தால் அதிர்விற்கு
உட்பட்டது;
ஏனெனில் அப்பொழுது வெளிவந்த சார்க்கோசியின் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிரான
எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளிலும் துறைமுகங்களிலும் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்
நாடு முழுவதும் பெட்ரோல் வினியோகத்தை குறைத்துவிட்டன.
மக்களில் பெரும்பாலானவர்கள் சார்க்கோசிக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவு கொடுத்தாலும்,
CGT,
அரசாங்கம் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு ஆதரவைக் கொடுத்தது.
சார்க்கோசி
CRS
கலகப்
பிரிவுப் பொலிசாரை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள்,
பெட்ரோல் நிலையங்கள் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கு அனுப்பி வைத்தபோது இச்சங்கம்
“அடையாள”
எதிர்ப்புக்கள் மட்டும்தான் காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் புரட்சிகரப்
போராட்டங்களின் வெடிப்பு,
துனிசியா மற்றும் எகிப்தில் சர்வாதிகார ஆட்சிகளை அகற்றியது,
சார்க்கோசி அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இன்னும் கூடுதலான
அச்சங்களைக் கொடுத்துள்ளது.
எகிப்து மற்றும் துனிசியாவில் மக்கள் எதிர்ப்புக்கள் நடைபெற்றது போலவே
ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டம் நடைபெற்றால்,
அரசாங்கமும்
CGT
அதிகாரத்துவமும் தொழிலாளர் எதிர்ப்பின் இலக்குகள் ஆகக்கூடும்—எகிப்தில்
நடைபெற்றது போல்.
மறுபுறம்,
அத்தகைய நிகழ்விற்குத் தயாரித்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் மைய அரசியல் பணி
ஆகும்.
ஐரோப்பாவில் தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் எதிர்ப்பு
வேலைநிறுத்தங்களின் இருப்புநிலைக் குறிப்புக்கள் பேரழிவு தந்த விளைவுகள்தான் என்று
காட்டியுள்ளன.
தொழிலாள வர்க்க எதிர்ப்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும்;
ஐரோப்பா முழுவதும் போராட்டதின் மூலம் அரசாங்கங்களை தூக்கியெறிந்து அவைகளுக்குப்
பதிலாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்களின் அரசாங்கங்கள் நிறுவப்பட
வேண்டும்.
ஆனால் ஒரு புதிய அரசியல் தலைமை தொழிலாள வர்க்கத்திற்காக
அமைக்கப்பட்டால்தான் அத்தகைய போராட்டம் வெற்றி பெற முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
(ICFI)
தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பாதுகாத்து திருத்தல்வாதத்திற்கு எதிராக
ட்ரொட்கிசத்தின் தொடர்ச்சியை பாதுகாத்து வருவதால்தான் முதலாளித்துவத்திற்கு எதிரான
சர்வதேசப் போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்திச் செயல்பட அதனால்தான்
முடியும்.
பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உடனடியாக தொழிலாள வர்க்கத்தை
எதிர்கொண்டுள்ள பணி அரசியல் ரீதியாக மீள்ஆயுதபாணியாதலாகும்;
அது
ICFI
ன்
முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்;
தொழிலாள வர்க்கத்தை ஒரு புதிய பொறியில் அடைக்க முற்படும் தொழிற்சங்க
அதிகாரத்துவமும்,
அதன் அரசியல் வக்காலத்து வாங்குபவர்களுக்கும் எதிராக சமரசத்திற்கு இடமில்லாத
போராட்டத்தை நடத்த வேண்டும். |