WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Tripoli faces humanitarian
crisis
திரிப்போலி
மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது
By Bill
Van Auken
30 August 2011
Back to
screen version
நேட்டோத்
தலைமையிலான
“எழுச்சியாளர்கள்”
லிபியத் தலைநகரான
திரிப்போலியின் மீது படையெடுத்து ஒரு வாரத்திற்குப் பின்,
நகரத்தில் வசிக்கும்
2 மில்லியன் மக்கள்
ஆழ்ந்த மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்றர். குடிநீர்,
மின்சாரம்,
போதுமான உணவு
விநியோகங்கள்,
அவசியமாகத்தேவைப்படும் மருத்துவப்பராமரிப்பு ஆகியவற்றை இழந்துள்ளனர்.
42
ஆண்டு கேர்னல் முயம்மர் கடாபி நடத்திய ஆட்சியின் விழ்ச்சி எங்கும்
பாராட்டப்பட்டுள்ள நிலையில்,
கடாபி எங்குள்ளார்
என்பதே இப்பொழுது இன்னும் தெரியவில்லை.
லிபியாவின்
சட்டபூர்வமான அரசாங்கம் என்று முக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பெங்காசியைத்
தளமாகக் கொண்ட தேசிய இடைக்கால குழு
(NTC) இன்னமும்
திரிப்போலியில் காலெடுத்து வைக்கவில்லை.
தலைநகரில்
அவ்வப்பொழுது மோதல்கள் தொடர்வதாக தகவல்கள் வந்துள்ளன. நேட்டோவும் அது ஆதரவு
கொடுத்துள்ள எழுச்சி சக்திகளும் சிர்ட்டே நகரை முற்றுகையிடத் தயார் செய்கின்றன. இது
கடாபியின் தாயகம் என்பதுடன்
100,000
மக்களைக் கொண்ட கடலோர
நகரமான அவருடைய குடியினமான கடாபாக்களின் மையம் ஆகும்.
நேட்டோ
போர்விமானங்கள் சிர்ட்டே மீது டஜன்கணக்கான வான்தாக்குதல்களை நடத்தியுள்ளன;
மேற்கே
திரிப்போலியில் இருந்து கிழக்கே லிபியாவின் இரண்டாம் பெரிய நகரான பெங்காசிக்குச்
செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்நகரம் உள்ளது.
இத்தகைய
வான்வழிப் போர் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின் பேரில் லிபியக் குடிமக்களை
காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகிறது என்று கூறப்படும் போலிக்காரணம் அதிகரித்தளவில்
கேலிக்கூத்தாகி வருகிறது. ஏனெனில் அமெரிக்க,
பிரிட்டிஷ்,
மற்றும் பிரெஞ்சு
போர்விமானங்கள் குடிமக்கள் வசிக்கும் மையங்களை தாக்குவதற்கும்
“எழுச்சியாளர்களின்”
படைகள்
படையெடுப்பதற்கு வழிவகுக்கவும்தான் பயன்படுத்தப்படுகின்றன.
தன்னைத்தானே
நியமித்துக் கொண்டுள்ள இடைக்காலத் தேசியக் குழுவின் தலைவரான முஸ்தாபா அபெல் ஜலில்
திங்களன்று கட்டாரில் நேட்டோ தூதர்களுடன் நடத்திய பேச்சுக்களின்போது,
“கடாபி இன்னமும்
கடைசிக் கணங்களில் பெரிதாக ஏதும் செய்யலாம் என்பதால்”
குண்டுத்தாக்குதல்கள் தொடர வேண்டும் என்றார்.
அகற்றப்பட்ட லிபியத்
தலைவர் “கூட்டணிப்
படைகளிடம் பணிய மறுப்பது லிபியாவிற்கு மட்டும் இல்லாமல்,
உலகிற்கே இன்னமும்
ஆபத்தைக் கொடுப்பது,”
என்று அவர்
சேர்ந்துக் கொண்டார்.
இதற்கிடையில் ஐ.நா.கண்காணிப்பு
வலைத் தளம் ஒன்று கசியப்பட்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது;
இதில் ஐ.நா.வின்
“சமாதானப்படை”
லிபியாவில்
நிலைநிறுத்தப்படுவதற்கான வரைவுத் திட்டங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான
வெளிநாட்டு இராணுவ அவதானிகள்,
பொலிஸ் ஆகியோர்
லிபியாவிற்கு அனுப்ப உள்ளது அடங்கும்.
இந்த
10 பக்க
ஆவணத்தின்படி ஐ.நா.பணியின்
உந்துதல், “நம்பிக்கையைக்
கட்டமைத்தல்,
மற்றும் ஒப்புக்
கொள்ளப்பட்ட இராணுவப் பணிகளைச் செயல்படுத்துவது”
என இருக்கும்.
“நம்பிக்கை
கட்டமைத்தல்”
என்பது
“விரோதச் சக்திகளின்
கட்டுப்பாட்டின்கீழ் வரும் கடாபியின் அரசாங்க துருப்புக்களுக்கு அவசியமானது”
என்று அது
கூறியுள்ளது.
வேறுவிதமாகக் கூறினால்,
முக்கிய சக்திகள்
கடாபி ஆட்சியின் அடக்குமுறைக் கருவியை ஒரு புதிய,
இன்னும்
வளைந்துகொடுக்கும் என்ற நம்பிக்கைத் தன்மையுடைய நிர்வாகத்தின்கீழ் மீண்டும்
கொண்டுவருதல் என்பதுதான் முக்கிய பிரச்சினை எனக் கருதுகின்றன.
“உடன்படும் இராணுவக்
கடமைகள்”
என்பதை பொறுத்தவரை,
அவற்றுள் முக்கியமாக
இருப்பது மக்களை நிராயுதபாணிகளாக ஆக்குதல் ஆகும்.
200
ஆயுதமற்ற இராணுவ அவதானிகள் மற்றும்
190 ஐ.நா.
பொலிஸ் அதிகாரிகள்
லிபியாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஆவணம் அழைப்புவிடுகிறது.
ஆனால் திரிப்போலியை
ஸ்திரப்படுத்துவதற்கு
“இன்னும் வலுவான
சர்வதேச உதவி”
தேவை என்றால் இந்த
எண்ணிக்கை ஐ.நா.வின்
திறனை மீறியதாக இருக்கும்.
அப்பொழுது,
“திரிப்போலியில்
பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தக் கூடியவர்கள் இடைக்காலக் குழுவின் அதிகாரிகளேதான்—ஏற்கனவே
அவர்களுக்கு உதவுபவர்கள் மற்றும் ஆலோசனை கூறுபவர்களை கொண்டு அதை அவர்கள் உத்தரவாதம்
அளிக்க வேண்டும்.”
என ஆவணம் கூறுகிறது.
ஆவணம்
தொடர்கிறது:
“ஐக்கிய நாடுகள் சபை
பாதுகாப்புக்குழுவின்
‘குடிமக்களைக்
காப்பாற்றவேண்டும்’
என்னும்
அறிவுறுத்தல் நேட்டோப்படைகளினால் செயல்படுத்தப்படுவது,
கடாபி ஆட்சி
வீழ்ச்சியுடன் முடிவதில்லை,
அங்கு நேட்டோ
தொடர்ந்து சில பொறுப்புக்களைக் கொள்ளும்.”
இதன்
தெளிவான தாக்கங்கள் நேட்டோ லிபியாவிற்கு
“ஒழுங்கை மீட்கும்”
நோக்கத்திற்காக
தரைப்படைகளை நிலைநிறுத்தும் தேவையை உணர்ந்தால்,
ஐ.நா.பாதுகாப்புக்
குழு தீர்மானமான “குடிமக்களைக்
காப்பது”
என்பதைப் பயன்படுத்தி அதைச்
செயல்படுத்துவதாக நேட்டோ கூறமுடியும். அதே நேரத்தில் அது புதிய மேற்கு ஆதரவுடைய
கைப்பாவை ஆட்சிக்கு எதிரான பொதுமக்கள் எதிர்ப்பையும் அடக்க முடியும்.
இத்தகைய
இழிந்த செயல் அரபு நாடுகளான கட்டார் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள்
போன்றவற்றால் செய்வதற்கு விடப்பட வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.
அவற்றின் படைகளுக்கு
இராணுவ ஒப்பந்தக்காரர்கள் மூலம் கொடுக்கப்படும் கூலிப்படைகள் வலுக்கொடுக்கும்.
CNT இன் ஜலில்
வெளிநாட்டுத் துருப்புக்கள்
“அரபு அல்லது
இஸ்லாமியர்களாக”
இருக்க வேண்டும்
எனக் கூறியுள்ளார்.
இத்தாலியின்
வெளியுறவு மந்திரி இக்னாசியோ லா ரூசா சமீபத்தில் அதே போன்ற கருத்துக்களைக் கூறும்
வகையில், “ஐ.நா.
துருப்புக்கள் அவை
அரபு அல்லது ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருமானால் அவற்றை நிலைநிறுத்தப்படுவதை
நிராகரிக்கவில்லை”
என்றார்.
திங்களன்று
டைம்ஸ் ஆப் லண்டன் திரிப்போலியில் தற்பொழுதுள்ள நிலை பற்றி கீழ்க்கண்டவாறு
விவரித்துள்ளது.
”தலைநகரில்
70% விடுகளில்
குடிநீர்க்குழாய்கள் இல்லை…
நகரத்தின்
பெரும்பகுதிகளில் மின்சாரம் இல்லை, அல்லது மிகக்குறைவாகத்தான் உள்ளது.
புதிய பொருட்கள்,
பால்,
சமையலுக்கான எரிவாயு
போன்றவை அநேகமாகப் பெற முடியாதவை.
…மிருகக்காட்சி
சாலையில்,
பாதுகாவலகர்கள் மரங்களில்
இருந்து கிளைகளை வெட்டி நீர்யானைகள்,
குரங்களுக்கு
உணவாகப் போடுகின்றனர்;
நீர்ப்பற்றாக்குறை
பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர்.
“பிராணிகள்
இப்பொழுது ஆபத்திற்குட்பட்டுள்ளன”
என்று அலி அப்துல்லா
கொன்டி கூறினார்.
“மருத்துவமனைளில்
ஆக்ஸிஜன் சிலண்டர்கள்,
எலும்பு
முறிவுகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான கட்டுக்கள் மற்றும் நீரிழிவு
போன்றவற்றிற்கான மருத்துகள் ஆகியவை இல்லை….
நகரம் முழுவதும்
குப்பையின் துர்நாற்றம்தான் படர்ந்துள்ளது.
ஆங்காங்கே
வெப்பத்தில் அழுகிய சடலங்களும் காணப்படலாம்.
அவ்வப்பொழுதுதான்
தொலைபேசிகள் வேலைசெய்யும்.
பெரும்பாலான வணிக
வாழ்வு பல மாதங்கள் முன்னரே நின்றுவிட்டது.
பலரிடமும் பணம்
இல்லை;
ஏனெனில் வங்கிகள்
மூடப்பட்டுள்ளன, ஊதியங்கள் வழங்கப்படவில்லை.”
படுகொலைகள்
உடனடி மரணதண்டனை நிறைவேற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சடலங்கள்
தொடர்ந்து கண்டறியப்படுவது திரிப்போலி முழுவதும் அச்சம்,
பயங்கரம் ஆகிய
சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன.
ராய்ட்டரின் நிருபர்
பீட்டர் கிராவ் படுகொலைகளை
“ஒரு உள்ளத்தை
உருக்கும் எச்சரிக்கைகள்,
இன்னும் பல
கொடூரங்கள் வரவிருக்கக்கூடும்”
என்றார்.
“தலைநகரில்
இவ்வாரம் தெருக்களில் சடலங்கள் துர்நாற்றம் வீசும் குவியல்களாக இருக்கையில்,
லிபிய மக்கள்
2003ல்
ஈராக்கியர்கள் எதிர்கொண்டது போல்,
ஒரு சர்வாதிகாரியின்
வீழ்ச்சி என்பது போரின் மிக வன்முறைக்கட்டத்திற்கு முடிவு என்னபதைவிட தொடக்கம்
என்பதைக் குறிக்கலாம் என்று உணர்கின்றனர்”
என்று கிராவ் தகவல்
கொடுத்துள்ளார்.
கடந்த
வாரத்தின் அச்சம்தரும் கண்டுபிடிப்பான டஜன் கணக்கான கடாபி ஆதரவாளர்களான
படுகொலைக்குட்பட்டவர்களின் சடலங்கள் லிபிய ஆட்சியாளரின் வளாகத்திற்கு வெளியே உள்ள
போக்குவரத்து வட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட கிராவ்,
“அப்பொழுது முதல்
ராய்ட்டர்ஸ் மற்றும் பிற செய்தி அமைப்புக்களும் தலைநகரத்தில் பிற இடங்களிலும்
ஏராளாமான சடலங்களை,
குறிப்பாக பல கடாபி
அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் வாழும் அபு சலீமில்
கண்டுள்ளனர்.
வெள்ளியன்று கைவிடப்பட்ட
அபு சலிம் மருத்துவக் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது;
கட்டில்கள்
முழுவதும் சடலங்கள்தான் இருந்தன.
“கொலைகள்
பற்றிய சரியான சூழ்நிலை இன்னும் தெளவாகத் தெரியவில்லை. ஆனால் இவை போர்க்களத்தில்
கொல்லப்பட்டபின் கைவிடப்பட்ட போராளிகளின் சடலங்கள் அல்ல.
கடாபியின்
ஆதரவாளர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இத்தகைய பெரிய அளவிலான பழிவாங்கும் கொலைகளை
நடத்தியதற்கு எழுச்சியாளர்களை குறைகூறுவர்”
இன்னும்
டஜன்கணக்கான சடலங்கள் அரசாங்கச்சிறை அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டது,
கடாபியின்
பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இது பழிவாங்கலுக்கான
உந்துதலுக்கு எரியூட்டியுள்ளது.
சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கம்
(ICRC)
திங்களன்று திரிப்போலிக்கு
அப்பாலும் -கிழக்கில்
மிஸ்ரடாவில் இருந்து மேற்கே துனிசியா எல்லை வரை—
படர்ந்துள்ள
குடிநீர் பற்றாக்குறை ஆபத்தான சுகாதாரம் பற்றிய நெருக்கடியை தோற்றுவிக்கும் என்று
எச்சரித்துள்ளது.
சர்வதேச
செஞ்சிலுவை சங்கம் குடிநீர் வழங்குவதைத்தவிர,
“இறந்த சடலங்களை
நிர்வகிக்க”
பயிற்சியாளர்கள் மற்றும்
அதற்குரிய பைகளை வழங்குதலை ஒரு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.
திங்களன்று
ஆபிரிக்க ஒன்றியம் தேசிய இடைக்கால குழு லிபியாவின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று
அங்கீகாரம் கொடுப்பதை அது நிறுத்திவைக்கும்,
ஏனெனில்
“எழுச்சியாளர்கள்”
எனப்படுவோர் கறுப்பு
ஆபிரிக்க தொழிலாளர்களை தவறாக நடத்துகின்றனர்,
பரந்த அளவில்
கொல்கின்றனர் என்று அறிவித்துள்ளது.
திரிப்போலி
நெருக்கடியின் கூறுபாடுகளில் ஒன்றான நகரத்தின் தெருக்களில் குப்பைகளைக் குவிப்பது
என்பது,
இத்தகைய குற்றம்
சார்ந்த இனக்கொலகளை ஒட்டி வந்தவை என்று கூறலாம்.
நகரத்தின்
பெரும்பாலான சுகாதாரத்துறை ஊழியர்கள் துணை சகாரா ஆபிரிக்க பகுதியில் இருந்து வந்து
குடியேறியவர்களாவர் இப்பொழுது தங்கள் உயிருக்குப் பயந்து அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
நேட்டோ
ஆதரவுடைய படைகள் பொறுப்பின்றி ஆபிரிக்கக் குடியேறியவர்களை அவர்களுடைய தோலின் நிறம்
கறுப்பாக இருப்பதால் கைதுசெய்து கொல்கின்றனர் என்று ஆபிரிக்க ஒன்றியம் குற்றம்
சாட்டியுள்ளது.
பல ஆயிரக்கணக்கான
குடியேறிய தொழிலாளர்களின் உயிர்கள் ஆபத்திற்குட்பட்டுள்ளன என்று அது
எச்சரித்துள்ளது. ஏனெனில்
“எழுச்சியாளர்கள்”
இந்த கறுப்புத் தோல்
கொண்டவர்கள் “கூலிப்படையினர்”
என முத்திரையிட்டு
அடித்துக் கொல்கின்றனர்.
“எங்களுக்கு
தெளிவுபடுத்தல் வேண்டும்,
ஏனெனில் தேசிய
இடைக்கால குழு கறுப்பினத்தவரை கூலிப்படையினருடன் குழப்புவது போல் தோன்றுகிறது.
சாதாரண தொழிலாளர்களை
அவர்கள் கொல்கின்றனர்”
என ஆபிரிக்க ஒன்றிய
ஆணையத்தில் தலைவரான ஜீன் பிங் திங்களன்று எத்தியோப்பியாவில் கூறினார்.
“எல்லா
கறுப்ப்பினத்தவரும் கூலிப்படையினர் என்று எழுச்சியாளர்கள் நினைக்கின்றனர்
[எனத் தோன்றுகிறது].
அதன் பொருள் லிபிய
மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்,
கறுப்பினத்தவராக
இருப்பவர்கள் கூலிப்படையினர் என ஆகும்.
அவர்கள் சாதாரண
மக்களை தவறாக நடத்துகின்றனர்,
கொல்லுகின்றனர்.”
தேசிய
இடைக்கால குழு இதற்கு வெற்றுத்தனமான மறுப்பை வெளியிட்டது;
அத்தகைய படுகொலைகளோ
தவறாக நடத்தப்படுவதோ நிகழவில்லை என்று மறுத்துள்ளது;
ஆனால் நாட்டின் பல
பகுதிகளில் இருந்து செய்தி நிறுவனத் தகவல்கள் அத்தகைய நிகழ்வுகளை உறுதிசெய்துள்ளன.
“இது ஒருபொழுதும்
நடக்கவில்லை.
அவ்வாறு நடந்திருந்தால்,
அது கடாபியின்
படைகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.”
என்று தேசிய
இடைக்கால குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
பெரும்
அழிவு தொடர்கையில்,
முக்கிய மேலை
எரிசக்தி பெருநிறுவனங்கள் நேட்டோத் தலைமையிலான
“ஆட்சி மாற்றம்”
லிபியாவில்
ஏற்பட்டுள்ளதை அடுத்து பெரும் இலாப மழை பொழியலாம்,
அதை பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றன.
தேசிய இடைக்கால குழு
திங்களன்று அரசாங்க ஆதரவுடைய இத்தாலிய நிறுவனமான
ENI
உடன் லிபியாவில்
நிறுவனத்தின் “விரைவான,
முழுமையான”
செயற்பாடுகள்
மீட்கப்படவேண்டும் என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
புரிந்துணர்வு
அறிக்கை எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பௌலோ ஷாரோனியினால்
பெறப்பட்டது. அவர் இதற்காக பெங்காசிக்கு கையெழுத்திடச் சென்றிருந்தார்.
நேட்டோப்
போருக்கு முன் லிபியாவில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் என
ENI இருந்தது.
இதன் பங்கு விலைகள்
அறிவிப்பை அடுத்து
3.1 சதவிகிதம்
உயர்ந்தன.
இதற்கிடையில் பிரெஞ்சு அரசாங்கம்,
CNT ஐ முதலில்
அங்கீகரித்தது,
திரிப்போலியில் தான்
தன் தூதரகத்தை மீண்டும் திறக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது;
வெளியுறவுச்
செய்தித் தொடர்பாளர் ஒருவர் லிபியா மறுகட்டமைக்கப்படுவதற்கு நேரத்தை வீணடிக்காமல்
உடனே செயல்பட வேண்டும் என்றார்.
ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசியின் அரசாங்கம்,
வியாழன் அன்று லிபிய
ஒப்பந்தக்குழுவை பாரிசில் வரவேற்கும். இந்நிகழ்வு குறிப்பாக பிரெஞ்சு பெரும்
எண்ணெய் நிறுவனம்
Total க்கு சாதகமான
நலன்களைப் பெறுவதற்கு என கருதப்படுகிறது. இது பிரான்ஸ் போரில் ஆக்கிரோஷத்தன்மை
காட்டியதைத் தளமாகக் கொண்டதால் வந்துள்ளது.
இத்தாலிய
நாளேடான
La Stampa
அதன்
ஞாயிறுப்பதிப்பில்,
பிரான்ஸ் லிபியா
மீதான இராணுவத் தாக்குதலை,
“யுத்தத்திற்கு
பின்னர்,
இத்தாலிய நிறுவனங்கள்
மீண்டும் ENI
னால் நிறுவப்பட்ட எண்ணெய்
கிணற்று வலைப்பின்னலில் முன்னுரிமை இடத்தைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் குளிர்
யுத்தத்தில் ஈடுபடுத்துகிறது”
என்று எச்சரித்துள்ளது. |