WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
புதிய நிதியியல் கரைவு பற்றி
தலைவர் எச்சரிக்கிறார்
By
Barry Grey
29 August 2011
use
this version to print | Send
feedback
IMF
எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டைன் லாகர்ட்,
சனிக்கிழமை அன்று மத்திய வங்கியாளர்கள்,
பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சர்வதேச நிதிய அதிகாரிகளுக்கு,
Wyoming
இன்
ராக்கி மலை சுற்றுலாத்தலத்தில் ஜாக்சன் ஹோலில் கன்சாஸ் நகர மத்திய
வங்கிக்கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒரு புதிய பூகோள நிதியியல்
நெருக்கடி வரும் வாய்ப்பு பற்றி எச்சரித்தார்.
சமீபத்திய போக்குகளைப் பற்றிக் குறிப்பிட்ட—அமெரிக்காவிலும்
ஐரோப்பாவிலும் பொருளாதார வளர்ச்சியில் தீவிரச்சரிவு,
ஐரோப்பாவில் பெருகிவரும் அரசாங்கக் கடன் நெருக்கடி,
இத்தாலி,
பிரான்ஸ் இன்னும் மற்ற நாடுகளில் முக்கிய வங்கிகளின் நிலைப்பாடு குறித்த நம்பிக்கை
அரிக்கப்பட்டுள்ளது—
லகார்ட்,
“இக்கோடையின்
நிகழ்வுகள் நாம் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தில் உள்ளோம் என்று குறிப்பிடுகின்றன.
இதில் உள்ள பணயங்கள் தெளிவு:
சிறிய அளவில் வந்துள்ள மீட்பையும் நாம் இழக்கும் நிலையில் உள்ளோம்.
எனவே நாம் இப்பொழுது செயல்பட வேண்டும்.”
என்றார்.
விரைவான,
ஒருங்கிணைந்த,
உறுதியான நடவடிக்கை வளர்ச்சிக்கு ஏற்றம் கொடுக்கும் வகையிலும்,
மிக அதிக அளவில் கடன்பட்டுள்ள அரசாங்கங்கள் மற்றும் அதிர்விற்கு உட்பட்டுள்ள
வங்கிகளை நிலைநிறுத்த எடுக்கப்படவில்லை என்றால்,
உலக நிதிய முறை
2008
செப்டம்பர் வோல் ஸ்ட்ரீட் சரிவைத் தொடர்ந்து வந்த நிதியக் கரைப்பைப் போல் ஒரு புதிய
கரைப்பை அனுபவிக்க நேரிடலாம் என்று லகார்ட் தெரிவிப்பது போல் இருந்தது.
“உலகப்
பொருளாதாரத்திற்குக் கீழ்நோக்கு இடர்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன,
நம்பிக்கையில் சரிவைத் தொடர்ந்து இவை கூடுதலாகியுள்ளன”
என்று அவர் வலியுறுத்தினார்.
கட்டுப்பாட்டிற்குட்படாத கீழ்நோக்குச் சரிவு என்னும் கட்டத்தை பொருளாதாரம்
அடைந்துகொண்டிருக்கிறது என்று உட்குறிப்பாகக் குறிக்கும் வகையில்,
அவர்
“வளர்ச்சி
அதன் வேகத்தைத் தொடர்ந்து இழந்தால்,
இருப்புநிலை பிரச்சினைகள் மோசமாகிவிடும்,
நிதியப் பொறுப்பளித்தல் அச்சுறுத்தப்படும்,
பத்திரக் கருவிகள் மீட்பைத் தக்கவைக்கும் அவற்றின் திறனை இழுந்துவிடும்”
என்று அறிவித்தார்.
ஐரோப்பா பற்றிப் பேசுகையில்,
அவர் கூறியது:
“வங்கிகளுக்கு
உடனடியாக மறுமூலதனங்கள் தேவைப்படுகின்றன.
அரசாங்கக் கடன்கள் மற்றும் வலுவற்ற வளர்ச்சியின் இடர்களைச் சமாளிக்கும் அளவிற்கு
அவை வலிமையாக இருக்க வேண்டும்.
இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால்,
நாம் முக்கிய நாடுகளுக்கும் பொருளாதார நலிவு இன்னும் பரவுவதைக் காண்போம்,
ஏன் நாணய நீர்மை நலிந்து போவதையும் கூடக் காண்போம்.”
நாணயப் புழக்க நெருக்கடி பற்றிய பேச்சு,
செப்டம்பர்
15, 2008ல்
லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்குப் பின் ஏற்பட்ட நிலைமை பற்றிய குறிப்பு ஆகும்;
அப்பொழுது வங்கிகளும் பெருநிறுவனங்களும் நடைமுறைச் செயல்பாடுகளுக்குக் கூட
நிதியத்தைப் பெற முடியாமல் போய்விட்டது;
அதற்குக் காரணம் நிதியச் சந்தைகளில் நம்பிக்கை சரிந்துவிட்டதுதான்.
ஐரோப்பிய வங்கிகளுக்கு கட்டாயமாக மறுமூலதனத்திட்டம் ஒன்றிற்கு
லகார்ட் அழைப்பு விடுத்தார்;
இது தேவைப்பட்டால் பொதுநிதியில் இருந்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு வசதி என்று
440
பில்லியன் யூரோக்களுக்கு,
கிரேக்கத்தையும் மற்ற அதிகக் கடன்கள் கொண்ட ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து,
போர்த்துக்கல் போன்றவற்றை பிணை எடுப்பத்கு நிறுவப்பட்டது,
17
நாடுகள்
கொண்ட யூரோப் பகுதியிலுள்ள வலுவற்ற வங்கிகளுக்கு நிதியத்தை உட்செலுத்தப்
பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் பிரான்ஸில் இரண்டாம் மிகப் பெரிய வங்கியான
Société Générale,
இத்தாலியின்
UniCredit
உட்பட
முக்கிய வங்கிகள் நிதி பெறுவதில் துயருற்றுள்ளன;
இதற்குக் காரணம் அவை அதிக அளவில் அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் கிரேக்கம் இன்னும்
இடர் கொண்டுள்ள மற்ற நாடுகளின் தனியார் வங்கிக் கடன்களுக்கும் பெரிதும் ஈடுபாட்டைக்
கொண்டுள்ளன.
இதையொட்டி இக்கடன்கள் திரும்பிவராமற்போனால் அவை நீடித்திருக்க முடியாது என்ற அச்சம்
வந்துள்ளது.
இவற்றின் பங்கு விலைகளும் பெரிதும் சரிந்துவிட்டன.
ஞாயிறன்று பைனான்ஸியல்
டைம்ஸ்
சமீபத்திய மோர்கன் ஸ்டான்லி பகுப்பாய்வு ஒன்று வங்கி நிதியங்கள் கணிசமாகக் கடந்த
மூன்று மாதங்களில் சரிந்துவிட்டன என்றும்
“வங்கிகளுடைய
செலவுகள் செப்டம்பர் மாதம் சந்தைகள் மீண்டும் திறக்கும்போது குறிப்பிடத்தக்க அளவில்
அதிகமாக இருக்கும்”
என்று கூறப்பட்டதைத் தெரிவித்துள்ளது.
ஒரு மத்திய வங்கியாளர்,
“சில
நாடுகளில் வங்கிகள் சமீப வாரங்களில் நாணயப் புழக்க நிலை அடையத் தொந்திரவுகளை
கொண்டுள்ளன,
இந்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்”
என்று கூறியதாக அச்செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
அமெரிக்காவைப் பற்றிக் குறிப்பிடுகையில் லகார்ட் அமெரிக்கப்
பொருளாதார வளர்ச்சியின் இரத்தச்சோகை போன்ற விகிதத்தைக் கண்டித்து,
நீண்ட கால வேலையின்மை விகிதம் குறைக்கப்படுவதற்கு நடவடிக்கை வேண்டும் என்றும்
வீடுகள் விலை தொடர்ந்து சரிவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தினார்.
“வீடுகள்
விலைகள் சரிதல் இன்னும் நுகர்வைக் குறைத்து வைத்துள்ள நிலையில்,
பொருளாதார உறுதியற்ற தன்மையை தோற்றுவித்திருக்கையில்,
அரைகுறை நடவடிக்களுக்கோ,
தாமதப்படுத்துவதற்கோ இடம் இல்லை”
என்று அவர் அறிவித்தார்.
துன்பத்தில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு,
அடைமான அசலில் குறைப்பு மூலம் அல்லது அடைமானக் கடன் வீடுகளின் சந்தை மதிப்பை விட
அதிகம் இருப்பவர்களுக்கு மீண்டும் நிதியளிப்பதின்மூலம்,
இப்பொழுது நிலைவும் பேர அடிப்படை விகிதத்தில் கொடுக்கும் வகையில் உதவ வேண்டும்
என்று அவர் ஒபாமா நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளுகிறார்.
வங்கிகள் பிணை எடுப்பிற்கு இன்னும் வரிசெலுத்துபவர் உதவ வேண்டும்
என்று அழைப்பு விடுகையில்,
சுகாதாரத்துறையில் தீவிர வெட்டுக்கள் மற்றும் ஓய்வூதிய நலன்களில் இடைக்கால,
நீண்டகாலக் கணக்கில் வெட்டுக்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள லகார்ட்
குறுகிய காலத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் தேவை என்றும்,
நுகர்வோர் தேவைக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் நிதானமான ஊக்க நடவடிக்கைகளுக்கு
ஆதரவாகவும் வாதிட்டுள்ளார்.
“dual focus”
தேவை
என்ற அவர்,
“இதன்
பொருள் இன்னும் கூடுதான,
கடுமையான சிக்கனம் என்பதில்லை.
நீண்டகால நிதிய இடர்களான உயரும் ஓய்வூதியச் செலவுகள் அல்லது சுகாதாரப் பாதுகாப்புச்
செலவுகளை நாடுகள் நல்ல முறையில் தீர்த்தால்,
குறுகிய காலத்திற்கு வளர்ச்சி,
வேலைகள் வளர்ச்சிக்கு அவர்களால் கூடுதலாகச் செய்ய இயலும்”
என்றார்.
லகார்டின் கருத்துக்களுடைய தீவிரத் தன்மை வரவிருக்கும் வாரங்கள்
நிதியச் சந்தைகளின் நிலைமையில் இன்னும் கூடுதலான சரிவைக் கொண்டுவரும் என்ற நிதிய
நடைமுறைக்குள் இருக்கும் கவலைகளைப் பிரதிபலிக்கிறது.
உலக வங்கியின் தலைவரான ரோபர்ட் ஜோயில்லிக் இந்த இலையுதிர்கால நிகழ்வுகள்
“மூன்று
சிறிய நாடுகளுக்கும் அப்பால் சந்தைக்கு அறைகூவல்களைத் தூண்டலாம்,
பெரிய நாடுகளிலோ அல்லது ஐரோப்பிய வங்கிகளுக்கோ,
என்பது பற்றித்தான் கவலைப்படுவதாக”
தெரிவிக்கையில் லகார்டின் கருத்துக்களுக்கு வழிமொழிவது போல் உள்ளது.
குரல் முறை,
கருத்து இரண்டிலுமே லகார்டின் கருத்துக்கள் பெடரல் ரிசர்வின் தலைவர் பென்
பர்னன்கேயுடைய கருத்துக்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டிருந்தன.
பிந்தையவர் வெள்ளியன்று மாநாட்டில் பேசினார்;
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஜோன் குளோட் திரிஷே சனிக்கிழமை அன்று பேசினார்.
இந்த வசந்தகாலம் மற்றும் கோடையில் எதிர்பாராத குறைந்த போக்கு
இருந்தபோதிலும்கூட,
அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியாகத்தான் உள்ளது,
வரவிருக்கும் காலத்தில் விரைவாக வளர்ச்சி அடையும் என்று பெர்னன்கே உத்தரவாதம்
அளிக்க முற்பட்டார்.
ஓரளவிற்குச் சிறந்த முறையில் செய்படும் என்ற தன் கருத்தைத்தான் அவர் அளிக்க
முற்பட்டார்;
ஆனால் உலகச் சுருக்கத்தின் அடையாளத்தை இது புறக்கணிக்கிறது;
மோசமாகி வரும் அரசாங்கக் கடன்கள் மற்றும் ஐரோப்பாவில் வங்கி நெருக்கடிகளைப் பற்றி
கருத்திற்கொள்ளப்படவில்லை.
அதேபோல் அமெரிக்காவில் ஒரு புதிய வங்கி நெருக்கடிக்கான அடையாளங்கள் இருப்பது
பற்றியும்,
அமெரிக்க கடன் தரத்தை ஸ்டாண்டர்ட்
&
பூர்
இம்மாதம் முன்னதாக குறைத்துவிட்டதின் உட்குறிப்புக்கள் பற்றியோ எந்த
அடையாளங்களையும் அவர் உரை காட்டவில்லை.
திரிஷே அவருடைய தயாரித்துப் பேசப்பட்ட உரையில் ஐரோப்பாவில் உள்ள
தற்போதைய நெருக்கடியைப் பற்றி நேரடிக் குறிப்பை தவிர்த்திருந்தார்.
ஆனால் ஒருவேவளை நாணயப் புழக்க நெருக்கடி வரக்கூடும் என்னும் லகார்டின் எச்சரிக்கையை
அவர் பகிரங்கமாக மறுக்கும் வகையில்,
“ஐரோப்பாவில்
நாம் நாணயப் புழக்க பிரச்சினையைக் கொள்ள நேரிடும் என்னும் கருத்து முற்றிலும்
தவறாகும்”
என்றார்.
லகார்டின் உரை ஏற்கனவே ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் மத்திய
வங்கியாளர்களிடம் இருந்து கண்டத்தைத் தூண்டியுள்ளது.
ஞாயிறன்று
“ஐரோப்பிய
அதிகாரிகள் லகார்டின் மீது பாய்கிறார்கள்”
என்ற தலைப்பில் பைனான்ஸியல்
டைம்ஸில்
வந்துள்ள கட்டுரை ஒன்று,
“ஞாயிறன்று
கிறிஸ்டின் லகார்ட் மீது ஐரோப்பிய அதிகாரிகள் பாய்ந்து,
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரை ஐரோப்பிய வங்கிகளின் ஆரோக்கிய நிலை
பற்றி
“குழப்பமான”,
“தவறாகச்
செலுத்தும் தாக்குதலை”
கூறியுள்ளார் எனக் குற்றம் சாட்டினர்”
என்று எழுதியுள்ளது.
பெயரிடப்படாத
“அனுபவமிக்க
ஒரு மத்திய வங்கியாளரை”
இக்கட்டுரை
“மூலதனத்தைப்
பற்றிப் பேசுவது குழப்பமான தகவல்.
அனைவரும்—அரசியல்வாதிகள்,
கட்டுப்பாட்டு அதிகாரிகள்,
மற்ற அதிகாரிகள்—மிகவும்
கவலைப்படுகின்றனர்”
என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
IMF
ன்
தலைவருடைய கவலை தரும் மதிப்பீடு வங்கி முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை இழக்கச்
செய்யும் என்ற அச்சங்களால் இக்குறைகூறல்கள் ஓரளவு வெளிப்பட்டுள்ளன;
இத்தகைய நிலை வங்கிப் பங்குகள் மீண்டும் விற்பனைக்கு வர வழிவகுக்கும்;
இதையொட்டி கடன்செலவுகளில் இன்னும் ஏற்றம் ஏற்படும்;
முக்கிய வங்கிகள் கடன் திருப்பித்தராத நிலைக்கு எதிராகச் செய்யும் காப்பீட்டுச்
செலவுகள் அதிகரிக்கும்.
ஐரோப்பிய வங்கிக்கடன் திரும்பிவராமற்போகக் கூடிய கடன்களுக்காக கொண்டுள்ள
காப்பீட்டுச் செலவுகள் ஏற்கனவே இதுகாறும் இல்லாத அளவிற்கு,
2008
நிதியச்
சரிவிற்கு முந்தைய காலத்தில் இருந்த செலவுகளையும் விட மிக அதிகமாக உயர்ந்துவிட்டன.
இந்தப் பொது விவாதம் உலக நிதிய உயரடுக்கிற்குள் மோசமாகிக்
கொண்டுவரும் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்த தீவிரக் கருத்து
வேறுபாடுகளையும் பிரதிபலிக்கிறது.
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பிரெஞ்சு அரசாங்கத்தில் முன்பு நிதி அமைச்சராக
இருந்த லகார்ட்,
IMF
தலைவராக
கடந்த மாதம்தான் டொமின்க் ஸ்ட்ரஸ் கான் வலியுறுத்தப்பட்ட இராஜிநாமா செய்தபின்
வந்தார்;
பிந்தையவரோ பின்னர் கைவிடப்பட்டுவிட்ட பாலியல் குற்றச் சாட்டு வழக்கில் நியூ யோர்க்
நீதிமன்றத்தில் உட்பட்டிருந்தார்.
பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கட்டாயமாக மறு மூலதனத்தேவை பற்றிக்
கடுமையாக எதிர்ப்பைக் காட்டுகின்றன.
அமெரிக்க வங்கிகள் தங்கள் அடைமான அசலைக் குறைக்கும் படி வற்புறுத்தும் அல்லது
வீட்டுக் கடன்களில் வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கூறும்
சட்டம் வரக்கூடாது என்பதற்கும் வலுவாகச் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பாவிற்குள் ஜேர்மனி ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பில்
இருந்து வங்கிகளுக்கு மூலதனம் உட்செலுத்துல் போன்ற எந்த நடவடிக்கையும் எதிர்க்கிறது.
ஏனெனில் இவற்றை ஒட்டி ஜேர்மனி அதிக கடன்பட்டுள்ள நாடுகளுக்கு பிணை கொடுப்பதற்கோ,
தோல்விடையும் ஐரோப்பிய வங்கிகளைமீட்பதற்கோ ஆகும் செலவுகளில் பெரும் பகுதியைக்
கொடுக்க நேரிடும்.
இன்னும் சரிவு என்பது ஒரு முழு அளவு மந்த நிலையை அடையக்கூடாது
என்பதற்காக விரைவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்னும் லகார்டின் அழைப்பிற்கு
அதிக ஆதரவு இல்லை.
மேலும் அவர் கொடுக்கும் தீர்வுகள் இன்னும் உடனடியான கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
தேவை என்று கோருவோருடைய கருத்துக்களில் இருந்து அடிப்படையில் அதிகம் மாறுபடவில்லை.
நேரம்,
தந்திரோபாயம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கலாம்;
ஆனால் அனைவரும் நெருக்கடியின் செலவு தொழிலாள வர்க்கத்தால் ஏற்கப்பட வேண்டும்
என்பதில் உடன்பட்டுள்ளனர்.
செப்டம்பர்
2008
சரிவிற்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்,
எதுவும் தீர்க்கப்படவில்லை,
உண்மையான மீட்பு அடையப்படவில்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.
லகார்டே குறிப்பிட்டுள்ளபடி—“இன்று
இது பொதுத்துறை இருப்புநிலைக்குறிப்புக்கள்தான் பெரும் பாதிப்பில் உள்ளன”—தேசியக்
கருவூலங்களை வங்கிகளுக்கு பிணை எடுக்கக் கொள்ளையடிப்பது என்பது தேசிய அரசுகளைத்தான்
திவாலாக்கியுள்ளது.
இப்பொழுது அரசாங்கக் கடன் நெருக்கடி வங்கிகள் மீது திரும்பிப் பாய்ந்துவிட்டன;
வங்கிகளின் அடிப்படைத் திவால்தன்மை அரசாங்கத்தில் இருந்து ரொக்கமாக அளிக்கப்படும்
டிரில்லியன்கள் மூலம்தான் மறைக்கப்படுகிறது.
மேலும்,
வேலைகள்,
ஊதியங்கள்,
தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது முற்றுகை என்ற முறையில் நெருக்கடியை
பயன்படுத்துவது உண்மையான பொருளாதார வளர்ச்சி வரும் வாய்ப்பைக் குறைப்பது என்றுதான்
உள்ளது.
சர்வதேச ஆளும் வர்க்கம்,
மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகள்,
அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் உட்பட,
நெருக்கடியை எதிர்கொள்ளும் விதம் தொழிலாளர்களின் வாழ்க்கத்தரங்களின் மீதான
தாக்குதல்களை தீவிரப்படுத்துவது என்றுதான் உள்ளது.
இதற்கு ஒரே உண்மையான தீர்வு கீழிருந்துதான் வரமுடியும்—அது
முதலாளித்துவ முறை,
அதன் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட
நடவடிக்கை என்ற வகையில் இருக்க வேண்டும்;
அது ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை தளமாகக் கொள்ள வேண்டும். |