World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

WikiLeaks cables expose Washington’s close ties to Gaddafi

கடாபியுடனான வாஷிங்டனின் நெருக்கமான உறவுகளை விக்கிலீக்ஸ் தகவல் ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன

By Bill Van Auken 
27 August 2011

Back to screen version

புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகரத் தகவல் ஆவணங்கள் அமெரிக்க அரசாங்கமும், உயர்மட்ட அமெரிக்க அரசியல்வாதிகளும் மற்றும் முயம்மர் கடாபிக்கும் இடையே இருந்த ஒத்துழைப்பை அம்பலப்படுத்துகின்றன; இவரைத்தான் இப்பொழுது வாஷிங்டன் வேட்டையாடிக் கொல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் இப்பொழுது லிபிய ஆட்சியை நொருக்குவது என்பதில் உறுதியாக உள்ளன; இது லிபிய மக்களைவிடுவிப்பதற்கான நலன்களுக்கானது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பம் வரையில் கூட கடாபி சற்றும் நம்பகத்தன்மை அற்ற ஆனால் ஒரு மூலோபாய நண்பர் என்று கருதப்பட்டதானது ஒரு சங்கடமான உண்மை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.

பெருநிறுவனச் செய்தி ஊடகங்களால் தகவல் ஆவணங்கள் கிட்டத்தட்ட இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டன; இவை நேட்டோவுடன் உறுதியான சொத்தாகத்தான் செயல்பட்டு இயங்கும் எழுச்சி சக்திகளுக்கும் பெரும் ஆதரவைக் கொடுத்தது. விக்கிலீக்ஸ் தகவல் ஆவணங்களை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து மறுநாள் இணைய தளப் பாவணையாளர்கள் பயன்படுத்த முடியாதவாறான தாக்குதல் பெரும் அளவில் நடத்தப்பட்டது மற்றும் தேசபக்தி சட்டத்தை ஒரு அமெரிக்க நீதிபதி பயன்படுத்திஉடனடியான உத்தரவு ஒன்றை இரகசிய எதிர்ப்பு அமைப்பின் கலிபோர்னியத் தளமான Dynadot ல் உள்ள Domain Name Server க்கு எதிராக  மறுநாள் அனுப்பியதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

இத்தகவல் ஆவணங்களின் மிகவும் பாதிக்கின்ற நினைவுக் குறிப்புக்களானது ஆகஸ்ட் 2009ல் லிபியத் தலைவரான முயம்மர் கடாபியும், அவருடைய மகனும் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான முயடசிம் ஆகியோர்கள் அமெரிக்கக் குடியரசுக் கட்சி செனட்டர்களான அரிசோனாவின் ஜோன் மக்கெயின் மற்றும் தென் கரோலினாவில் லிண்டே கிரஹாம், மைனின் சூசன் கோலின்ஸ் மற்றும் கனக்டிக்கட்டின்சுயேட்சை செனட்டர் ஜோ லிபர்மன் ஆகியோரிடம் நடத்திய பேச்சுக்கள் ஆகும்.

2008ல் குடியரசுக் கட்சியின் ஜனதிபதி வேட்பாளரான மக்கெயின், சமீபத்திய பேச்சுக்களில் கடாபியைஉலகிலுள்ள இரத்தவெறி மிகவும் பிடித்த சர்வாதிகாரர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டு ஒபாமா நிர்வாகம் லிபியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக  “நம் வான் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருந்ததாக குறைகூறியுள்ளார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நடைபெற்ற கூட்டத்தில் கடாபிக்களுடன் ஆதரவை நாடி நிற்பதில் மெக்கெயின் முன்னணியில் நின்று வழிகாட்டினார் தூதரகத் தகவல் ஆவணங்கள் தெரிவித்துள்ளபடி, அவர்அமெரிக்காவானது லிபியாவிற்கு பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்களை அவர்களுக்கு அளிக்க விரும்பியது”, “காங்கிரசில் இதற்காகத் தான் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதாகவும் உறுதியும் கொடுத்தார்.”

மெக்கெயினின் கருத்துக்களைப் பற்றி தகவல் தந்திகள் தொடர்கின்றன: “இருதரப்புப் பாதுகாப்பு உடன்பாட்டின் நீண்ட கால முன்னோக்கை எப்பொழுதும் மனதில் கொள்ளுமாறு முவடிசிம்மிற்கு அவர் ஊக்கம் அளித்தார்; மேலும்அவ்வப்பொழுது சிறு தடைகள் வரக்கூடும், ஆனால் அவை கடக்கப்பட வேண்டும் என்றும் நினைவிற்கொள்ளச் சொன்னார். இருதரப்பு இராணுவ உறவு வலுவானது என்று அவர் விவரித்து அமெரிக்காவிலுள்ள லிபிய அதிகாரிகளுக்கான பயிற்சியைச் சுட்டிக்காட்டினார்; கட்டுப்பாடு, அதிகாரிகள், போர்க் கல்லூரிகள் அனைத்தும் லிபிய இராணுவத்தினர் பங்கு பெறுவதற்கான சிறந்த திட்டங்கள் என்றும் கூறினார்.

“10 ஆண்டுகளுக்கு முன் நாம் திரிப்போலியில் அமர்வோம், முயம்மர் அல்-கடாபியின் மகனால் வரவேற்கப்படுவோம் என்று சிந்தித்திருக்கக்கூட மாட்டோம் என்று லிபர்மன் கூறியதாகத் தகவல் ஆவணங்கள் மேற்கோளிட்டுள்ளன. லிபியாபயங்கரவாதத்தின் மீதான போரில் ஒரு முக்கியமான நட்பு நாடாகும், சில நேரங்களில் பொது எதிரிகள் நல்ல நண்பர்களை உருவாக்குவார்கள் என்றும் கனக்டிக்கட் செனட்டர் கூறியதாகத் தகவல் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

லிபர்மன் குறிப்பிடும்பொது எதிரிகள் லிபியாவின் கிழக்குப் பகுதியில் குவிந்துள்ள இஸ்லாமியவாதப் படைகள்தான் என்பது துல்லியமாக இருந்தது; அப்பொழுது அவர்களை அடக்குவதற்கு கடாபிக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. ஆனால் இப்பொழுது அவர்களை ஒழுங்குபடுத்தி, ஆயுதமளித்து அவரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க வைத்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் கூறிய கருத்துகளின் சுருக்கம்: “முயம்மர் மற்றும் முவடசிம் அல்-கடாபியுடன் மெக்கெயினின் பேச்சுக்கள் நேரிய முறையில் இருந்தன; இருதரப்பு உறவுகளில் செய்யப்பட்டுள்ள உறவில் முன்னேற்றம் உயர்த்திக் காட்டப்பட்டது. இப்பேச்சுக்கள் லிபியா விரிவான பாதுகாப்புப் பிரிவு ஒத்துழைப்பை விரும்பியதையும் வலியுறுத்தி, பாதுகாப்பு ஆயுதங்களைப் பெறுவதற்கு கூடுதலான உதவியை நாடியது, C130 பிரச்சினைக்கு தீர்வும் கண்டது (முந்தைய பொருளாதாரத் தடைகளால் இவை தீர்க்கப்படாமல் இருந்தன.)

மற்றொரு தகவல் ஆவணம், அதே கூட்டத்தைப் பற்றி வெளியிடப்பட்டதானது, கடாபிக்களுக்கு ஸ்கொட்லாந்து சிறையிலிருந்து அப்டெல்பசெட் அல்-மெக்ரஹி விடுவிக்கப்படுவது பற்றி மக்கெயின் கொடுத்த ஆலோசனையைத் தெரிவிக்கிறது; மெக்ரஹி ஸ்கொட்லாந்தில் லோக்கர்பி பான் ஆம்  103 குண்டுத் தாக்குதல் குறித்து 1988ல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இப்பொழுது கடாபிஅமெரிக்க இரத்தத்தைத் தன் கைகளில் கொண்டிருக்கிறார் என்று குமுறும் மக்கெயின் அப்போது லிபியத் தலைவரிடம் இந்த விடுவிப்பு ஒருஉணர்ச்சிகரப் பிரச்சினையாக அமெரிக்காவில் உள்ளதென்றும், அவர் அதை கவனத்துடன் கையாளவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். “இம்முறை நம் இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், முன்னேற்றத்தைத் தடை செய்வதற்குப் பதிலாக என்றார். இறுதியில் கடாபியும் மற்ற முக்கிய லிபிய அதிகாரிகளும் மெக்ரஹிக்கு ஒரு பெரும் வீரருக்கு உரிய வரவேற்பைக் கொடுத்தனர்; அவர் தான் நிரபராதி என்று அறிவித்து, அவர் முறையீடு பற்றி விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தபோது, ஸ்கொட்லாந்து அரசாங்கம் அவரை விடுவித்துவிட்டது.

மற்றய தகவல் ஆவணங்கள் பெருகிய முறையில் இருந்ததான அமெரிக்க-லிபிய இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை உயர்த்திக் காட்டுகின்றன. பெப்ருவரி 2009ல் அனுப்பப்பட்ட ஒரு ஆவணம் லிபியாவைப் பற்றியஒரு பாதுகாப்புத் திட்டத்தை அளிக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் “ 5 பயிற்சித் திட்டங்களானது லிபியாவின் சட்டத்தைச் செயல்படுத்தும் பாதுகாப்புப் பிரிவினருக்கு அடுத்த மாதம் கொடுக்க இருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறது. லிபிய அரசாங்கம்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரிய வெற்றியை அடைய முடிந்ததா என்ற வினாவிற்கு தூதரகமானதுஅல்ஜீரியா மற்றும் ஈராக்கிற்கு தன்னார்வப் போராளிகளை அனுப்பிவைத்த வலையமைப்பு ஒன்றை கிழக்கு லிபியாவில் கடாபி ஆட்சி தகர்த்துவிட்டது என்றும் அந்த அமைப்புத்தான், லிபியப் பாதுகாப்பு இலக்குகளுக்கு எதிராக, சேகரித்து வைக்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாக இருந்தது என்றும் கூறியது. அச்செயல்பாட்டினால் 100 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.” இதே வலையமைப்புத்தான் இப்பொழுது நேட்டோ தலைமையில் ஆயுதம் கொடுக்கப்பட்டு எழுச்சியாளர்களின் முக்கியக் கூறுபாடாக உள்ளது.

உள்நாட்டு அமெரிக்க எதிர்ப்புப் பயங்கரவாதக் குழுக்கள் இருக்கின்றனவா என்று வெளியுறவு அலுவலகத்தால் கேட்கப்பட்டதற்கு, தூதரகம்ஆம் என்று விடையளித்து, லிபிய இஸ்லாமியவாதப் போராளிக் குழுவைச் LIFG சுட்டிக்காட்டியது. அது சமீபத்தில் இஸ்லாமியவாத மக்ரெப் நிலப் பகுதிகளிலுள்ள அல் கெய்டாவுடன் (AQIM) இணைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. மீண்டும் LIFG கூறுபாடுகள் எழுச்சியாளர்கள் எனக் கூறப்படுவோரின் தலைமையில் தீவிர செயலைப் புரிகின்றனர்.

ஏப்ரல் 2009 தகவல் ஆவணங்கள், வாஷிங்டனுக்கு அம்மாதம் முவடசிம் கடாபி விஜயத்திற்குத் தயாரிப்பை நடத்தியது, லிபிய இராணுவ அதிகாரிகளுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிக்கான திட்டங்கள் தேவை என வலியுறுத்தியது; அதேபோல் ஆயுத உடன்பாடுகளுக்கான திறன் பற்றியும் வலியுறுத்தியது. இதன் முடிவுரையாகத் தூதரகம் கூறுவதாவது: “இவ்வருகை லிபியாவில் சக்திவாய்ந்த மற்றும் வருங்காலத் தலைமைத் திறன் உடையவரைச் சந்திக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இந்த வருகையை நாம் அமெரிக்காவுடன்சீரான உறவுகள் பற்றி லிபியர்கள் கருதுகிறார்கள் என்று முவடசிம்மிடம் இருந்து தகவல் பெற வேண்டும்; ஈடாக எப்படி வருங்காலத்தில் நம் உறவுகள் இருக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். லிபியாவின் தேசிய பாதுகாப்புக் கருவியை அவர் மேற்பார்வையிடும் நிலையில் நமக்கு முக்கிய பாதுகாப்பு மற்றும் நம் நலன்களுக்கு உதவும் இராணுவச் செயல்களுக்கும் அவருடைய ஆதரவு நமக்குத் தேவை.”

மே 2009 தகவல் ஆவணம் ஒன்று ஒரு மணி நேரம் சுமுகமாக கடாபிக்கும் அப்பொழுது அமெரிக்க ஆபிரிக்கக் கட்டுப்பாட்டின் தலைவராக இருந்த ஜெனரல் வில்லியன் வார்டிற்கும் இடையே நடந்த பேச்சுக்கள் பற்றி விவரிக்கிறது.

ஆகஸ்ட் 2008 தகவல் ஆவணம் ஒன்று, வெளிவிவகாரச் செயலரான கொண்டலீசா ரைஸ் திரிப்போலிக்குவரலாற்றுத் தன்மை உடைய வருகைக்கு அரங்கு அமைக்கும் வகையில் உள்ளது, “லிபியா பயங்கரவாத்திற்கு எதிரான போரில் ஒரு வலுவான பங்காளியாக உள்ளது, பல உறவுத் தொடர்புகளின் அதன் ஒத்துழைப்பு மிகச் சிறந்து உள்ளது….பயங்கரவாத எதிர்ப்பிற்கான ஒத்துழைப்பு அமெரிக்க-லிபிய இருதரப்பு உறவில் ஒரு முக்கிய தூணாகும், பகிர்ந்து கொள்ளப்பட்ட மூலோபாய நலனாகும் என்று அறிவிக்கிறது.

பல தகவல் தந்திகள் அமெரிக்க எரிசக்தி மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வட ஆபிரிக்க நாட்டில்பண மழைகள் பெறும் வாய்ப்புக்களைப் பற்றிக் கூறுகின்றன; தனியார்மயமாக்கும் முயற்சிகள் அங்கு நடைபெறுவதைக் குறிப்பிட்டு, திரிப்போலியின் ஒரு பங்குச் சந்தை நிறுவப்பட இருப்பது பற்றியும் இசைவுடன் தெரிவிக்கிறது.

ஆனால் மற்றவை கடாபி ஆட்சியின் அடக்குமுறை பற்றிக் கவலை தெரிவிக்காமல், வெளியுறவுக் கொள்கை மற்றும் எண்ணெய்க் கொள்கை நடவடிக்கைகள், அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை பற்றித் தெரிவிக்கின்றன. இவ்வகையில் அக்டோபர் 2008 தகவல் ஆவணம் ஒன்றுஅல் கடாபி: ரஷ்யாவிற்கு, பிரியத்துடன்?” என்ற தலைப்காக இழிந்த முறையில் உள்ளது, கடாபி ஆட்சி இலாபம் அதிகம் கொடுக்கும் ஆயுதம் வாங்குதலை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதற்கான முயற்சி பற்றிக் கவலையை வெளிப்படுத்துகிறது; அதேபோல் ரஷ்யப் போர்க் கப்பல்கள் படை ஒன்று திரிப்போலி துறைமுத்திற்கு வருகை புரிவது பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு மாதம் கழிந்தபின், மாஸ்கோவிற்கு கடாபி சென்றிருந்தபோது அவர் புடின் ஆட்சியுடன் ரஷ்ய கடற்படை ஒரு மத்தியதரைக்கடல் துறைமுகத்தை பெங்காசி நகரத்தில் நிறுவும் வாய்ப்பு பற்றி விவாதித்தார்; இது பென்டகனில் எச்சரிக்கை மணியை அடித்தது.

2008, 2009 தகவல் ஆவணங்கள் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உள்கட்டுமான ஒப்பந்தங்களில்பில்லியன் கணக்கான டாலர்கள் வாய்ப்பைப் பெறாதது பற்றிக் கவலை தெரவிக்கின்றன; மேலும் கடாபி ஆட்சி லிபியத் தலைவரின் அச்சுறுத்தலான எண்ணெய்துறையைத் தேசியமயம் ஆக்குதல் அல்லது அந்த அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்களில் இருந்து இன்னும் சாதகமான ஒப்பந்தங்களைப் பெறக்கூடும் என்ற அச்சங்களையும் தெரிவிக்கிறது.

இத்தகவல் ஆவணங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றின் பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; இப்பொழுது அவைஆட்சி மாற்றத்திற்கான பிரச்சாரத்தை லிபியக் குடிமக்களைப் பாதுகாத்தல், “ஜனநாயகத்திற்கு ஊக்கமளித்தல் என்ற பெயரில் செய்கின்றன.

கடாபியை ஒரு குற்றவாளியென்றும்,  அவரை வேட்டையாடிக் கொலை செய்யவேண்டும் என்று கூறும் ஒபாமா, சார்க்கோசி, காமெரோன் மற்றும் பெர்லுஸ்கோனி போன்ற அனைவரும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடாபி ஆட்சியுடன் ஒத்துழைத்து அவருக்கு ஆயுதங்களையும் ஆதரவையும் கொடுத்தவர்கள்; அமெரிக்க, ஐரோப்பிய பெருநிறுவனங்கள் லிபியாவின் எண்ணெய் வளத்தில் இருந்து பெரும் இலாபங்களை ஈட்டியுள்ளன.

இறுதியில் இவை இப்பிராந்தியத்திலுள்ள எழுச்சிகளையும் லிபியாவில் கடாபி-விரோத எதிர்ப்புக்களையும் பயன்படுத்தி எரிசக்தி வளம் உடைய நாட்டின் மீது அப்பட்டமான அரைக் காலனித்துவ கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக போரைத் தொடக்குவதற்கான வாய்ப்பாகச் செய்துள்ளன. முற்றிலும் நம்பகத்தன்மை அல்லாதவர் அல்லது கணித்துக் கூற முடியும் என்றும் தன் புரவலர்களைக் கூடுதல் ஆதாயத்திற்காக கலங்கச்செய்யக்கூடியவர், ரஷ்யா, சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டவர், யூரோ, டாலர் ஆகியவற்றிற்குப் பதிலாகதங்கத் தினார் வேண்டும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்தவர் என்று கூறியவரை அகற்ற வேண்டும் என்பதற்கு வாய்ப்பாக இவர்கள் இதை எடுத்துக் கொண்டனர்.