சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

The rape of Libya

லிபியா மீதான சூறையாட்டம்

By Bill Van Auken 
26 August 2011

use this version to print | Send feedback

நேட்டோவின் குண்டுத் தாக்குதலின் பாதுகாப்பிலும் மற்றும் வெளிநாட்டுச் சிறப்புப் படைகள் தலைமையில் திரிப்போலியினுள் எழுச்சியாளர்கள் நுழைந்து ஐந்து நாட்களுக்குப் பின், லிபியாவை ஏகாதிபத்தியம் இழிந்த குற்றத்தன்மையுடன் ஆக்கிரமித்துள்ளமை பெருகிய முறையில் தெளிவாக தெரிகின்றது.

லிபியத் தலைநகர் முழுவதும் போர் தொடர்கிறது ஆயுதமேந்திய குண்டர்கள் மற்றும் மேற்கத்தைய சிறப்புப் படைத் துருப்புக்கள் நகர தெருக்களின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கையில், இங்கு வசிக்கும் இரு மில்லியன் மக்கள் பணயகைதிகளைப் போல் உள்ளனர்.

நேட்டோ நடவடிக்கைகளின் முக்கிய கவனமானது நாட்டை 42 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முயம்மர் கடாபியை வேட்டையாடிக் கொலைசெய்தல் என்னும் ஒரு வெறிபிடித்த முயற்சியாகியுள்ளது. அவருடைய தலைக்கு கொடுக்கப்பட்ட விலையானது 2 மில்லியன் டொலர்களாக உள்ளது; பிரிட்டிஷ் செய்தி ஊடகமானது இப்பொழுது வெளிப்படையாக SAS சிறப்புப் படைத் துருப்புக்கள் அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது. ஏராளமான ஆயுதமேந்திய ஆளற்ற விமானங்களான பிரிடேட்டர் ட்ரோன்கள், அவாக்ஸ உளவு விமானங்கள் மற்றும் பிற கண்காணிப்புக் கருவிகள் இந்த மனித வேட்டைக்கு உதவுவதற்காக வட ஆபிரிக்க நாட்டில் குவிக்கப்பட்டுள்ளன.

.நா.பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தில் கூறப்பட்ட அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளும் லிபியாவில் குடிமக்களையும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக தலையிடுகின்றன என்னும் போலிக்காரணம் முற்றாக  கைவிடப்பட்டுவிட்டது. இந்த தீர்மானத்தின் மூடுதிரையின்  பின்னணியிலேயை போரின் ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ தன்மை வெளிப்பட்டது.

தரைப் படைகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்ற பாதுகாப்புச் சபையின் விதிகள் மற்றும் ஒரு ஆயுதம் வழங்குவதற்கான தடையை நடைமுறைப்படுத்தியது மற்றும் கூலிப்படையினர் லிபியாவிற்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்ற அனைத்தும் எண்ணெய்வளம் மிகுந்த முன்னாள் காலனியின் மீது கட்டுப்பாடு, அதன் இருப்புக்களைக் கொள்ளையடித்தல் என்ற இக்குற்றம் சார்ந்த நடவடிக்கையினால் பரிகாசத்திற்குள்ளாகியுள்ளது. சிறப்புப் படைகள், உளவுத்துறை முகவர்கள் மற்றும் கூலி இராணுவ ஒப்பந்தக்காரர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு எழுச்சியாளர்களுக்கு தலைமை தாங்குகின்றனர் என்பதை மறைக்க எந்த முயற்சியும் மேற்கோள்ளப்படவில்லை. நேட்டோ போர் விமானங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளை முற்றிலும் அழிப்பதற்கு முன்பு எழுச்சிப் படைகளால் சிறியளவுகூட முன்னேற முடியவில்லை.

ஐந்து மாத காலம் நேட்டோ குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்டபின், திரிப்போலி மக்கள் இப்பொழுது திடீர் மரணத்தையும் பெரும் மனிதாபிமானப் பேரழிவையும் எதிர்நோக்குகின்றனர்; இவை குடிமக்களைப் பாதுகாத்தல் என்னும் நேட்டோ நடவடிக்கைகளின் விளைவு ஆகும்.

இண்டிபென்டன்டனின் கிம் சென்குப்தா வியாழனன்று திரிப்போலிக்கு அருகேயுள்ள அபு சலிம் என்ற இடத்தில் இருந்து தகவல் கொடுத்துள்ளார்; இந்த இடத்தை எழுச்சியாளர்கள் நேட்டோ வான் தாக்குதலின் உதவியுடன் சூறாவளிபோல் கைப்பற்றினர். கடாபி விசுவாசப் பகுதி என அறியப்பட்டுள்ள இப்பகுதியில் மக்கள் பயங்கர ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அபு சலிமில் வசிப்பவர்களுக்கு தப்பிப் பிழைக்கும் வழி இல்லை; அவர்களைச் சுற்றிலும் மோதல்கள் நிகழ்கின்றன, அவர்கள் பொறியில் அகப்பட்டது போல் உள்ளனர் என்று சென்குப்தா கூறியுள்ளார். “ஒரு தெரு மூலையில், எதிரெதிர் துப்பாக்கிச் சண்டையின் இடையே சுடப்பட்ட ஒரு மனிதர், அவருடைய நீலச் சட்டையின் பின்புறம் குருதியில் நனைந்திருக்கையில், மூன்று பேரால் தூக்கிச் செல்லப்பட்டார். எனக்கு அவரைத் தெரியும், அவர் ஒரு கடைக்காரர் என்றும் அவர்தான் சமா அப்தேஸ்சலாம் பஷ்டி என்றும் அப்பொழுதுதான் தன் வீட்டிற்குச் செல்ல சாலையைக் கடந்தார் என்று கூறினார். “எழுச்சியாளர்கள் எங்கள் வீடுகளைத் தாக்குகின்றனர் இவ்வாறு நடைபெறக் கூடாது’’.

இங்கு அரசாங்கத் துருப்புக்களுடன் போரிடுவதாக எழுச்சியாளர்கள் கூறுகின்றனர், ஆனால் காயம் அடைந்தவர்கள் அனைவரும் சாதாரணக் குடிமக்கள்தான்; உள்ளூர்வாசிகளின் வீடுகள்தான் நாசப்படுத்தப்பட்டுள்ளன. எழுச்சியாளர்கள் கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகின்றனர். மக்களைத் தேடுவதற்கு வீடுகளுக்குள் நுழைகின்றனர், பின் பொருட்களை எடுத்துச் செல்லுகின்றனர். அவர்கள் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்?”

நகரத்தை நேட்டோத் தலைமையிலான படைகள் எடுத்துக் கொள்வதை உள்ளூர்வாசிகள் ஏன் எதிர்க்கின்றனர் என்று கேட்கப்பட்டதற்கு, 38 வயது பொறியியலாளரான முகம்மது சலீம் முகம்மத் இண்டிபென்டெனிடம் : “ஒருவேளை அவர்களுக்கு எழுச்சியாளர்களை பிடிக்காமல் இருக்கலாம். திரிப்போலிக்கு வெளியில் இருந்து வருபவர்கள் இங்குள்ளவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்?” என்றார்.

இதற்கிடையில் நேட்டோ மற்றும் அதன் உள்ளூர் முகவர்கள் திரிப்போலிப் பகுதியில் நடத்திய போர்க் குற்றங்களை மற்றய தகவல்கள் அப்பட்டமாகத் தெரிவிக்கின்றன. அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆகியவை கடாபி ஆதரவாளர்களுக்கு எதிராக செவ்வாயன்று சூறையாடப்பட்ட ஜனாதிபதி வளாகத்திற்கு அருகேயுள்ள சதுக்கத்தில் நடத்திய படுகொலை பற்றி ஆவணப்படுத்தியுள்ளன.

பாப் அல்-அஜிஜியாவில் முயம்மர் கடாபியின் வளாகத்திற்கு அருகேயுள்ள ஒரு புல்தரை சதுக்கத்தில் சடலங்கள் சிதறிக்கிடந்தன. பலர் உறங்குவது போல் புல்தரையில் கிடத்தப்பட்டுள்ளனர், கூடாரங்களில் பரவிக்கிடக்கின்றன. சில சடலங்களில் மணிக்கட்டுக்கள் பிளாஸ்டிக் வயரினால் கட்டப்பட்டிருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் கூறுகிறது.

இறந்தவர்களின் அடையாளங்கள் தெளிவாக இல்லை; ஆனால் இவர்கள் அனைவரும் கடாபிக்கு ஆதரவு தெரிவித்து உடனே நிறுவப்பட்ட ஒரு கூடார நகரத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர்களாக இருந்திருக்கலாம்; நேட்டோ குண்டுத் தாக்குதல்களையும் மீறி கடாபிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்.”

இக்கொடூரம் வெளிப்பட்டுள்ளதானது போரில் ஈடுபடாதவர்கள், காவலில் உள்ளவர்கள் மற்றும் காயமுற்றவர்கள்  ஏராளமான பேர் கொல்லப்பட்ட ஒரு குழப்பமூட்டும் தோற்றத்தைத்தான் எழுப்புகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களின் பலவற்றில் தலைகளில் சுடப்பட்டவை, கைகள் பின்புறமாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தவை காணப்பட்டன. ஒரு மருத்துவரின் பச்சை மருத்துவ மேலங்கி ஒரு நீர்க்கால்வாயில் காணப்பட்டது. சடலங்கள் நீரில் உப்பிப் போயிருந்தன என அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது.

இதே கொலைக் களத்திலிருந்து தகவல் கொடுக்கும் ராய்ட்டர்ஸ், “குண்டுகளால் துளைக்கப்பட்ட” 30 சடலங்களென கணக்கெடுத்தது. “இறந்தவர்களில் 5 பேர் அருகிலிருந்த மருத்துவமனையில் இருந்தவர்கள்; ஒருவர் அம்புலன்ஸில் அவருடைய கரங்களில் இரத்தக் குழாயில் ஏற்றப்பட்ட பாதுகாப்பு ஊசியுடன் காணப்பட்டார்.” சடலங்களில் இரண்டு அடையாளம் காணமுடியாதபடி எரிக்கப்பட்டிருந்தன.” என அது குறிப்பிட்டது.

கொலை, சித்திரவதை மற்றும் மிருகத்தனமாக மக்கள் எழுச்சியாளர்களால் கைது செய்யப்படுவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அவசர கவலைகளைத் தெரிவித்துள்ளது; குறிப்பாக ஆபிரிக்க குடியேறிய தொழிலாளர்கள் அவர்களுடைய தோலின் நிறத்திற்காக பழிவாங்குதலுக்குட்படுத்தப்படுவதற்கு குறிவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தற்காலிக முகாம், திரிப்போலிப் பாடசாலை ஒன்றில் நேட்டோத் தலைமையிலான படைகள் நிறுவியதிலிருந்து வந்துள்ள தகவலில் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுவது:

நெரிசல் நிறைந்த சிறை அறையில் 125 பேர் தூங்க, நகர, இடமில்லாத வகையில் அடைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச மன்னிப்புச் சபையிடம் ஒரு சிறுவன் அல்-கடாபி அரசாங்கம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தன்னார்வ படையினர் தேவை என்று வந்த அழைப்புக்களை எப்படி தான் எதிர்கொண்டேன் என்பது பற்றிக் கூறினான்.

இச்சிறுவன் தான் அஜ்-ஜவியாவிலுள்ள ஒரு இராணுவ முகாமிற்குள் கொண்டு செல்லப்பட்டு எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவன் ஒரு கலோஷிநிகோவ் துப்பாக்கியைப் பெற்றான் என்றும் கூறினான்.”

நேட்டோ 14 ஆகஸ்ட்டையொட்டி முகாம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியபோது, தப்பிப்பிழைத்தவர்கள் ஓடிப்போயினர். நான் என்னுடைய ஆயுதத்தைத் தரையில் போட்டுவிட்டு அருகில் இருந்த ஒரு இல்லத்தில் புகலிடம் நாடினேன். உரிமையாளர்களிடம் என்ன நடந்தது என்று கூறினேன்; அவர்கள் துவார் என்னும் புரட்சியாளர்களை அழைத்திருக்க வேண்டும் என கருதுகின்றேன். ஏனெனில் சற்று நேரத்தில் அவர்கள் வந்தனர்.” என சர்வதேச மன்னிப்பு சபையிடம் கூறினான்.

நான் சரணடைய வேண்டும் என அவர்கள் உரக்கக் கூவினர். நான் என் கைகளை உயர்த்தி நின்றேன். அவர்கள் என்னைத் தரையில் மண்டியிடச் செய்து கைகளையும் பின்புறம் வைத்திருக்கச் சொன்னார்கள். இதன்பின் ஒருவர் என்னை எழுந்திருக்கமாறு கூறினார். நான் எழுந்தவுடன் அவர் அருகில் நின்று என் முழங்காலில் சுட்டார். நான் தரையில் விழுந்தேன்; தொடர்ந்தும் அவர்கள் என்னை துப்பாக்கி பட்டையால் என் உடல், முகம் முழுவதும் அடித்தனர்.”

இதன் விளைவாக என்னுடைய இடது காதிற்குப் பின் மூன்று தையல்கள் போடப்பட்டன. தடுப்புக்காவலில், சில நேரம் அவர்கள் எங்களை அடித்து, கொலைகாரர்கள் என்றும் அழைத்தனர்.”

கடாபி ஆதரவுச் சிப்பாய் ஒருவரும் இதேபோன்ற நிகழ்வைத்தான் கூறினார்; ஆகஸ்ட் 19ம் திகதி தன்னுடைய படைப் பிரிவிற்கு பொருட்களைக் கொண்டுவரும்போது எப்படிப் பிடிபட்டார் என்பதைப் பற்றிக் கூறினார். “உடல் மற்றும் முகம் முழுவதும் துப்பாக்கிப் பட்டைகளால் தாக்கப்பட்டதாகவும், குத்தப்பட்டதாகவும், உதைக்கப்பட்டதாகவும் கூறினார். அவருடைய சாட்சியத்திற்கு ஒத்த வடுக்களைக் கொண்டிருந்தார்.”

தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டுக் கூலிப்படையினர், அதாவது சகாராத் துணைப் பகுதி ஆபிரிக்கர்கள் என எழுச்சித் தலைவர்கள் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. ஆனால் காவலிலுள்ள பலருடன் சர்வதேச மன்னிப்புச் சபை பேசியபோது, அவர்கள் குடியேறிய தொழிலாளர்கள் என்றனர். தங்கள் வீடுகள், பணியிடங்கள் மற்றும் தெருக்களிலிருந்து அவர்களின் தோலின் நிறத்தையொட்டி துப்பாக்கிமுனையில் அழைத்துவரப்பட்டதாகக் கூறினர். அவர்களில் சிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என அஞ்சுவதாகவும், காவலர்களால் அவர்கள் கொல்லப்படுவர் அல்லது மரணதண்டனை விதிக்கப்படுவர் எனக்கூறியதாகவும் தெரிவித்தனர்.”

காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஷாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட ஐந்துபேர் கொண்ட குடும்பம் இருந்தது; இவர்கள் ஒரு பண்ணையிலிருந்து விளைபொருட்களை சேகரிக்கச் சென்றிருந்த ஒரு டிரக்கில் இருந்து வெளியேற்றிக் கொண்டுவரப்பட்டனர். லிபியாவில் 5 ஆண்டுகளாக உழைத்து வரும் நைஜரிலிருந்து வந்த 24 வயதான ஒருவர் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் ஆயுதமேந்திய நபர்கள் அவரை வீட்டில் இருந்து பிடித்து, விலங்கிட்டு, அடித்துப் பின்னர் ஒரு காரின் பிற்பகுதியில் தள்ளினர். “இம்மோதலுடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நான் உழைத்து வாழ விரும்புகிறேன். ஆனால் என் தோலின் நிறத்தினால் இங்கு காவலில் உள்ளேன். எனக்கு இப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.”

மனித உரிமைகள் குழு ராய்ட்டர்ஸ் நிருபர் குழுவிடமிருந்து வந்துள்ள அறிக்கை ஒன்றையும் மேற்கோளிட்டுள்ளது. இக்குழு எழுச்சியாளர் ஒருவர் வாகனம் ஒன்றிலிருந்து பின்பிறத்தில் இருந்து மூன்று கறுப்பினத்தவரை  அழைத்துச்சென்றது. அவர்களில் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தான் ஒரு நைஜீரியன் என்றார். “அவர் அழுத வண்ணம் கூறியது: “எனக்குக் கடாபியைத் தெரியாது. எனக்கு கடாபியைத் தெரியாது. நான் இங்கு வேலை செய்பவன்.”

சர்வதேச உதவி அமைப்புக்களிலிருந்து வந்துள்ள செய்தித் தகவல்களும் அறிக்கைகளும் நகரத்தில் நேட்டோ முற்றுகையில் ஒரு மனிதாபிமான பேரழிவு நிகழலாம் என்று எச்சரித்துள்ளன. உள்ளூர் மருத்துவமனையிலிருந்து தகவல் கொடுத்த டெலிகிராப் கூறுகிறது: “திரிப்போலித் தெருக்களில் போர் முற்றியநிலையில், நூற்றுக்கணக்கான உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் அழைத்துவரப்பட்டனர், எழுச்சிப் படையினர்கள், கடாபியின் சிப்பாய்கள், துரதிருஷ்டவசக் குடிமக்கள், அனைவரும் அடுத்தடுத்த படுக்கைகளிலும், இரத்தம் உறைந்திருந்த தரைகளிலும் கிடத்தப்பட்டனர்; பலரும் வேதனையில் புலம்பினர், அழுதனர். சிகிச்சை பெறுவதற்கு முன்னரே பலரும் இறந்துவிட்டனர்.”

மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் மருத்துவர் மஹ்ஜௌப் ரிஷியை செய்தித்தாள் பேட்டிகண்டது. “முதல் சில மணி நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டுவரப்பட்டனர். இது நரகத்தில் ஒரு காட்சிபோல் இருந்தது. ஏவுகணைத் தாக்குதலுக்கு உட்பட்டோரின் நிலை பரிதாபமாக இருந்தது. மனித உடலுக்கு அவை இழைக்கும் சேதங்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சியை தந்தன. இத்தகைய காயங்களையே பார்த்துப் பழகிவிட்ட என் போன்றோருக்கும்.” அவசர உதவியை நாடியவர்கள் பலர் சாதாரண குடிமக்கள், போருக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டவர்கள்.

திரிப்போலியிலுள்ள மற்றும் இரு பெரிய மருத்துவமனைகளிலும் இதேபோன்ற தீவிரச் சிகிச்சையை நாடியவர்கள், மிகக் குறைந்த  மருத்துவப் பணியாளர்கள் என்ற நிலைதான் இருந்தது என்று டெலிகிராப் தகவல் கொடுத்துள்ளது. நகரிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான் இருந்தது.

எல்லைகளற்ற மருத்துவ உதவிக்குழு (MSF) நகரம் ஒரு பெரும் மருத்துவப் பேரழிவை முகங்கொடுக்கிறது என்று எச்சரித்துள்ளது.

இக்குழு ராய்ட்டரிடம் மருத்துவத் தேவைகள் உள்நாட்டுப் போரின் ஆறு மாதங்களில் குறைந்துவிட்டது [அதாவது நேட்டோ குண்டுத் தாக்குதல் தொடங்கி]. ஆனால் கடந்த வார முற்றுகையின்போது அவை முற்றிலும் இல்லாமற்போய்விட்டன. எரிபொருள் வழங்குதல் தீர்ந்து போய்விட்டது; மிச்சமுள்ள சில மருத்துவ ஊழியர்கள் பணியைச் செய்வதற்கு திணறுகின்றனர்.” எரிபொருள் கிடைக்கவில்லை என்றால் மருத்துவமனைகள் தங்கள் மின்சக்திக்கு ஜெனரேட்டர்களைத்தான் நம்ப வேண்டும்; ஆனால் இப்பொழுது அதுவும் முடியாது.

திரிப்போலியிலுள்ள சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைகளில் இரத்தம் கிடைப்பதில்லை என்றும் திரிப்போலியின் முழுப் பகுதிகளிலும் உணவு, குடிநீர் ஆகியவை கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் அல்ஜீரியா, வெனிசூலா, தென் கொரியா ஆகியவற்றின் அரசாங்கங்கள் திரிப்போலியிலுள்ள தங்கள் தூதரகங்கள் தாக்கப்பட்டு, “எழுச்சியாளர்களின் துப்பாக்கி ஏந்திய படைகளால் கொள்ளையடிக்கப்பட்டது என்று கூறியுள்ளன. அல்ஜீரிய, வெனிசூலா அரசாங்கங்கள் நேட்டோ படையெடுப்பை எதிர்த்து கடாபிக்கு ஆதரவைக் கொடுத்திருக்கையில், அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடான தென் கொரியா அத்தகைய நிலைப்பாட்டைக் எடுத்திருக்கவில்லை.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பரபரப்பான ஆர்வம், நேட்டோ, மற்றும் அதன் எழுச்சியாளர்களுடன் இணைந்துள்ளது என்பது மறைக்கப்பட முடியாதது ஆகும்; ஆனால் இது மனித உரிமைகளைப் பாதுகாத்தல், குடிமக்களைப் பாதுகாத்தல் என்ற போலித்தனத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு போரிலிருந்த மிருகத்தன உண்மையை மறைக்க முடியாது; அது பெரும் இறப்புக்கள், மனிதத் துன்பங்கள் மற்றும் அழிவைக் கொடுத்துள்ளன.

ஒரு புரட்சி அல்லது விடுதலைக்கான போராட்டம் என்பதற்கு முற்றிலும் மாறாக, உலகம் காண்பது ஏகாதிபத்தியச் சக்திகளின் கூட்டு ஒன்று லிபியாவை சூறையாடுவதைத்தான் இக்கூட்டானது நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் இன்னும் தலையீடுகளை மேற்கொள்ள அந்நாட்டின் பிரதேசங்களை ஒரு நவ காலனித்துவ முகாமாக்க தீர்மானித்துள்ளது.