WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The ex-left and the British riots
முன்னாள் இடதும் பிரிட்டிஷ் கலவரங்களும்
Chris Marsden
25 August 2011
Back to
screen version
இம்மாதம் முன்னதாக லண்டன் மற்றும் பிற நகரங்களில் பரவியிருந்த
கலகங்கள் பிரிட்டனில் சமூக உறவுகளின் உண்மைத் தன்மை பற்றிக் கசப்பாக
எடுத்துரைக்கின்றன.
எந்த அளவிற்கு இங்கிலாந்து,
தீர்க்கப்பட முடியாத வர்க்கப் பிளவுகளால் பிளவுற்றிருக்கும் நாடாக இங்கிலாந்து
உள்ளது என்பதையும்,
இதில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சற்றும் குறையாத வறுமையான
வாழ்வில் இருந்து தப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும்,
அதே நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் இணையற்ற ஆடம்பர வாழ்வை நடத்துவதை காணும்
கட்டாயத்திற்கு உட்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
தங்கள் குறைகளை வெளிப்படுத்தவோ,
ஒரு நல்ல வாழ்விற்கான விழைவை அடையமுடியவில்லை என்பதை வெளிப்படுத்தவோ வேறு வாய்ப்பு
ஏதும் இல்லை என்பதை ஒட்டித்தான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலவரம் செய்தனர்—
அதுவும் தொழிற் கட்சி,
தொழிற்சங்கங்கள் மூலம் கருத்துக்களைக் கூறமுடியவில்லை,
அவையும் ஆளும் கன்சர்வேடிவ்கள் மற்றும் லிபரல் டெமக்ராட்டுக்களைப் போலவே நிதிய
உயரடுக்கின் ஊழல் மிகுந்த விளையாட்டுப் பொருட்களாக உள்ளன என்ற நிலையில்.
அவர்களுடைய தாழ்ந்து செல்லும் நிலைமை,
எந்த மாறுதலுக்கும் உட்படாமல் ஓவ்வொரு ஆண்டும் தொடர்கிறது அல்லது மாறக்கூடிய
வாய்ப்பு கூடத் தோன்றுவதில்லை;
இதற்கு காரணம் முழுச் சமூக மற்றும் அரசியல் ஒழுங்கும் பெரும் செல்வந்தர்களுடைய
நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றன.
அரசு,
அரசியல் நடைமுறை மற்றும் செய்தி ஊடகம் அனைத்துமே கலகங்களை எதிர்கொண்ட விதம் ஆளும்
உயரடுக்கு மற்றும் அதன் கைக்கூலிகளிடம் இருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கப்பட
முடியாது என்பதைத்தான் உறுதிபடுத்தியது.
மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறை,
பெருமளவில் கைதுகள் செய்யப்பட்டது,
மிகச் சிறு குற்றங்களுக்கு பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டவை ஆகியவற்றுடன் கலகங்களில்
நெறியான சமூகக் குறைபாடுகள் பங்கு பெற்றிருந்தன என்பதும் மொத்தமாக
மறுக்கப்பட்டுவிட்டது.
உத்தியோகபூர்வ விளக்கங்களின்படி,
கலகங்கள்
“கீழ்த்தர
மக்களின்”
குற்றம் சார்ந்த தன்மையின் விளைவாகத்தான் முற்றிலும் இருந்தன.
இக்காரணத்தால்,
கலகங்கள்,
இன்று சமூகம் என்னவாக உள்ளது என்பது பற்றிய வெளிப்பாடாக மட்டுமின்றி,
வருங்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவை தொழிலாள வர்க்கம் மற்றும் இளந்தலைமுறையினர் இருக்கும்
அமைப்புமுறையை ஒரு புரட்சிகர முறையில் அகற்றினால் ஒழிய எதுவும் அவர்களுக்காக
சாதிக்கப்பட முடியாது என்பதையும் நிரூபணம் செய்துள்ளன.
அவை மற்றொரு முக்கியமான அரசியல் செயற்பாட்டிற்கும் பணியாற்றின—ஏராளமான
போலி இடது குழுக்கள்,
தங்களை
“சோசலிஸ்ட்”,
“கம்யூனிஸ்ட்”,
ஏன்
“ட்ரொட்ஸ்கிஸ்ட்”
என்று சித்தரித்துக்கொள்ளும் அமைப்புக்கள்கூட முதலாளித்துவ
“சட்டம்
மற்றும் ஒழுங்கை”
பாதுகாப்பதில் முன்னணி செயற்பாட்டாளர்களாக இருந்திருக்கின்றன என்பதும்
வெளிப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான மார்னிங்
ஸ்டார்,
“வீடுகளும்
வணிகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்—இதன்
பொருள் போலிஸிடம் வன்முறை வெடிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான
இருப்புக்கள் தேவை”
என்று இடி போல் முழங்கியது.
பொலிஸ் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை
2,000
ஐ விட
உயர்ந்தவுடன் மார்னிங்
ஸ்டார்
அதன் ஆகஸ்ட்
11
பதிப்பில் பிரதம மந்திரி டேவிட் காமெரோன்
“பொலிஸ்
வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்களை பற்றி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற புகார்களை
பிடிவாதமாக உதறித்தள்ளினார்”
என்று கசப்புடன் புகார் கூறியது.
டோரி-லிபரல்
கூட்டணி அரசாங்கம்
“1980
களில்
இருந்த மார்கரெட் தாட்சரின் அரசாங்கத்தைவிட மோசம்”
என்று அது கூறியது;
“ஏனெனில்
வரவு-செலவுத்
திட்ட குறைப்புக்களின் மூலம் இது பொலிஸுடன் எதிர்த்துக் கொள்ளக்கூட விருப்பத்துடன்
இருந்தது.”
சோசலிஸ்ட் கட்சி
(SP),
ஸ்ராலினிஸ்ட்டுக்களின் நீண்டகால அரசியல் நட்பு அமைப்பு,
இந்த சட்டம் மற்றும் ஒழுங்கு என்னும் வனப்புரையைத்தான் எதிரொலித்தது.
துணைப் பொதுச் செயலாளரான ஹானா செல்,
குழுவின் செய்தித்தாளான த
சோசலிஸ்ட்டில் எழுதியபோது,
“காலந்தாழ்த்தி,
அரசாங்க மந்திரிகள் தங்கள் விடுமுறைகளில் இருந்து திரும்பி
‘ஒழுங்கை
மீட்பது’
என்பதில் ஈடுபட்டுள்ளனர்”
என்று புகார் கூறியுள்ளார்.
சாரா சாஷ்ஸ்-எல்ட்ரிட்ஜ்,
“மக்களுடைய
வீடுகளையும் உள்ளுர் சிறுவணிகங்கள் மற்றும் கடைகளை காப்பதற்கு பொலிஸ் திறமையுடன்
செயல்படவில்லை என்று பரந்த முறையில் சீற்றம் உள்ளது”
என்று எழுதினார்.
மெட்ரோபொலிட்டன் பொலிஸ் கூட்டமைப்பின் போல் டெல்லர் கூறியுள்ள
கருத்துக்களை இவர் பரிவுணர்வுடன் மேற்கோளிட்டுள்ளார்.
அவர்
“நிகழ்வு
பற்றிச் செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முழுப் பொலிஸ் படையினரிடையே உள்ளத்
தென்பு மிகக் குறைந்துதான் உள்ளது;
இதற்குக் காரணம் உள்துறைச் செயலர் மற்றும் அரசாங்கம் அவர்கள் மீது இடைவிடாமல்
தொடுத்த தாக்குதல்கள்தான்;
பொலிஸின் ஊதியமும் நிலைமைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.”
என்று கூறியிருந்தார்.
சோசலிஸ்ட் கட்சி
“உள்ளூர்
கடைக்காரர்கள் தங்கள் வணிக இடங்களையும் வீடுகளையும் பல பகுதிகளில் கலகத்தின்போது
காப்பாற்றுவதற்கு திரட்டிய நடவடிக்கைகள் பற்றி”
புகழாரம் சூட்டியது.
“…கலகங்கள்
நீடித்திருந்தால் இம்முயற்சிகள் ஜனநாயக முறையில் ஒருங்குபடுத்தப்பட்ட,
பெரும் சமூகப் பாதுகாப்பு ஒன்றியங்களாக,
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைக்கும் குழுக்களைக் கொண்டதாக விளங்கியிருக்கும்”
இந்த முன்னோக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்துடன் தொடர்புடையது என்பதை விட
பாசிசத்துடன்தான் அதிக தொடர்பைக் கொண்டதாகும்.
இதே நிலைப்பாடுதான் பல குழுக்கள் மற்றும் வெளியீடுகளாலும்
எடுக்கப்பட்டது.
இளைஞர்கள்
“வேண்டுமென்றே
அழித்தலில் ஈடுபட்டனர்”,
“நம்
நகரவை வீடுகளை தாக்க அலையும் சமூக விரோதக் கும்பல்கள்”,
என்று
Weekly Worker
புகார்
கூறியுள்ளது.
சிறு கடைக்காரர்கள்
“கலகக்காரர்களை
விரட்டியதையும்”
அது புகழ்ந்தது;
“கலகக்காரர்கள்,
கொள்ளையடிப்பவர்கள்,
இங்கிலீஷ் டிபென்ஸ் லீக்கின் குண்டர்கள் அத்தோடு
-ஆம்-
பொலிஸ் அட்டூளியங்கள்”
ஆகியவற்றிற்கு எதிராக ஒரு நிரந்தர தற்காப்பு பிரிவுகளை அமைக்க
“இடதிற்கு”
ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
“பொலிஸ்
அட்டூளியங்கள்”
என்று வக்காலத்து வாங்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒழுங்கை மீட்க வேண்டும்
என்று விடுக்கும் அழைப்பை,
அரசியலளவில் வனப்புரையாகக் கூறுவதாகும்.
முன்னாள் இடது குழுக்கள்,
டோரி வலது மற்றும் முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் இருந்து வேறுபடுவது
தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கலகத்திற்கு முறையான மாற்றீடாகக் கிடைப்பது
தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும்தான் என்று
கூறுவதுதான்.
“தொழிற்சங்கத்
தலைவர்கள்”
செலவுக் குறைப்புக்களுக்கு எதிராக
“ஒருங்கிணைந்த
ஒருநாள் நடவடிக்கையை”
ஒழுங்குபடுத்துவதுதான் என்றும் சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய அறிக்கைகள் முழு நனவுடனான ஏமாற்றுத்தனம் ஆகும்.
இளைஞர்கள் ஒன்றும் தொழிற்சங்கங்களின் சமீபத்திய செயலற்ற தன்மையினால்
எழுச்சி அடையவில்லை.
கிட்டத்தட்ட
20%
என்று
தேசிய அளவில் உள்ள தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை,
இன்று இளைஞர்களிடையே ஏறத்தாழ இல்லை என்றே கூறலாம்;
அவர்களில் பலருக்கு ஒரு வேலைகூடக் கிடைக்காது.
தற்போதைய கூட்டணி அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள்
ஏதும் செய்யவில்லை என்பதால் மட்டும் இந்நிலை இல்லை.
1984-1985
ல்
ஓராண்டு நடைபெற்ற தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை அவர்கள்
காட்டிக்கொடுத்த பின்னர்,
ஒரு கணிசமான தொழில்துறை போராட்டத்தைக் கூட அவை நடத்தவில்லை.
ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாக தொழிற்சங்கங்கள் சமூகச்
சொத்துக்கள் வறியவர்களிடம் இருந்து செல்வக்கொழிப்பு உடைய,
குறுகிய செல்வம் மிக்க மத்தியதர வர்க்க உயரடுக்கிற்கு வரலாற்றுத் தன்மையில்
மாற்றப்படும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.
பிந்தைய பிரிவு சலுகை பெற்றுள்ள சமூக அடுக்கு ஆகும்;
“தொழிற்சங்கத்
தலைவர்கள்”
இவர்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இந்த அடுக்கிற்காகத்தான் முன்னாள் இடது குழுக்கள் பேசுகின்றன.
பெரும்பாலும் அவற்றின் முக்கிய தலைவர்கள் தொழிற்சங்கக்
கருவிகளுக்குள் பொதிந்து உள்ளனர்—பல
நேரமும் மிக உயர்ந்த மட்டத்தில்—அல்லது
கல்விக்கூடம் பல உள்ளூராட்சித் துறைகளில் உள்ளனர்.
அவர்கள் தொழிற்சங்கங்கள் சமூக மாற்றத்திற்கு முகவர்கள் என்று உண்மையில் காணவில்லை;
வர்க்கப் போராட்டத்தை நசுக்கும்,
இருக்கும் ஒழுங்கைப் பாதுகாக்கும் வழிவகையாகத்தான் கருதுகின்றனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புக் கவச அமைப்பு முறை,
அரசியல் பிடி இவற்றிற்கு எதிர்ப்புக்காட்டி எந்த இயக்கமும் முறித்துக் கொள்ளும்
அச்சுறுத்தல் கொடுக்காமல் இருப்பதற்காகத்தான் சோசலிச சொற்றொடர்களை அவர்கள்
பயன்படுத்துகின்றனர்.
“தொழிற்சங்க
இயக்கம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூர் பொலிஸ் குழுக்களின் கீழ்
இருத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிட வேண்டும்”
என்று அவர்கள் வலியுறுத்திய நிலையில் சோசலிஸ்ட் கட்சியினர் இதைத்
தெளிவாக்கியுள்ளனர்.
அதேபோல்
“தொழிற்சங்கங்கள்
மற்றும் சமூக அமைப்புக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலகங்கள் பற்றி
விசாரணையை ஜனநாயக முறையில் மேற்கொள்ள முயலவேண்டும்;
அவை எத்தகைய குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கான அளவு கோலை நிர்ணயித்து,
ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள தண்டனைகள் பற்றியும் பரிசீலிக்க வேண்டும்”
என்றும் கோரியுள்ளனர்.
தெருக்களில் ரோந்து வருவது,
பொலிசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது,
தண்டனையை உறுதிப்படுத்துவது
–
இவைதான்
முன்னாள் இடதின் அரசியல் விழைவுகள் ஆகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இதுதான் ஒரு சில இரவுகளில் நடந்த கலகங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம்.
முதலாளித்துவத்திற்கு தீவிர புரட்சிகர அச்சுறுத்தல் வெளிப்பட்டால்,
இச்சக்திகள் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அடக்குமுறை அரச
கருவிகளுக்கு ஆதரவைக் கொடுக்கும் நிலைப்பாட்டையே எடுப்பர் |