WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
ஒரு
மில்லியன் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினர்
By
Arun Kumar
18 August 2011
use
this version to print | Send
feedback
அரசு
வங்கிகளை இணைப்பது,
வங்கித் துறையை தனியார் வங்கிகளுக்கு திறந்து விடுவது மற்றும் பெரும்
எண்ணிக்கையிலான வேலைகளை அழிப்பது ஆகிய விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடிய சந்தை
ஆதரவுச் சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஆலோசித்து வருவதற்கு
எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 5ம் தேதியன்று ஒரு மில்லியனுக்கும்
அதிகமான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினர்.
அரசுத்
துறை வங்கிகளையும் மற்றும்,
சில தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளையும் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இந்த
வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வங்கிகளுக்கு இடையிலான மற்றும் வங்கிக்குள்ளான
பரிவர்த்தனைகள்,
காசோலை ஏற்புகள் மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் ஆகியவை பெருமளவில்
பாதிக்கப்பட்டன. புது டெல்லியில்,
இந்திய ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளைக்கு வெளியே வேலைநிறுத்த ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள்,
பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நாடெங்கும் நடைபெற்றன.
இந்தியாவும் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக இருக்கும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின்
ஆழமடையும் நெருக்கடியால் தூண்டப்பட்டு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும்
எழுந்திருக்கும் வர்க்கப் போராட்டங்களின் ஒரு பாகமே இந்த வேலைநிறுத்தமாகும்.
உலகெங்கிலுமான தனது சக நாடுகளைப் போலவே,
இந்திய அரசாங்கமும் ஒரு புதிய சுற்று தனியார்மயமாக்கங்களை அமல்படுத்துவதற்கும்,
தொழிலாளர் விரோதச் சட்டங்களைத் திணிப்பதற்கும் மற்றும் சமூகச் செலவினங்கள் மற்றும்
மானியங்களை வெட்டுவதற்கும் சர்வதேச நிதி மூலதனத்திடம் இருந்து நெருக்குதலை
சந்தித்து வருகிறது.
வங்கித்
துறை சீர்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குள்ளாக தாக்கல்
செய்யவிருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)
அறிவித்துள்ளது. பொதுத் துறை வங்கிகளை இணைப்பது,
அரசாங்கத்தின் பங்கு அளவைக் குறைப்பது மற்றும் வங்கி நடவடிக்கைகளில் அதிகமானவற்றை
ஒப்பந்த முறையில் கொள்முதல் செய்து கொள்வது ஆகியவை இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில்
அடங்கும். இந்த மசோதா அரசு வங்கிகளை ஒட்டுமொத்தமாய் தனியார்மயமாக்குவதற்கும்
வேலைகள்,
ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் முக்கிய வெட்டுகளை செய்வதற்குமே வழிவகை
செய்யும்.
கடந்த
இரண்டு தசாப்தங்களாக பணி நியமனம் செய்யப்படாமல் பொதுத் துறை வங்கிகளில் 300,000
பணியிடங்களுக்கும் அதிகமாய் நிரப்பப்படாமல் உள்ளன. வங்கிச் சேவை பணிநியமன வாரியம் (BSRB)
மூலமாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில்
கொள்முதல் செய்து கொள்ளக் கூடாது என்றும் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
வேலையிடத்தில் மரணமடையும் ஊழியர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை அளிக்கும்
“வாரிசு/குடும்பத்தினர் வேலைத் திட்ட”த்தின் கீழ் நியமனம் செய்வதற்கு இரண்டு வருட
காலம் தாமதம் செய்வதற்கு எதிராகவும் அவர்கள் போராடுகின்றனர்.
ஒரு
வங்கி ஊழியர் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்: “இளம் பட்டதாரிகளை குறைந்த
ஊதியங்களுக்குப் பணியமர்த்திக் கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் வங்கிகள் பல [வகை]
வேலைகளைக் கொள்முதல் செய்து கொள்கின்றன. வங்கியின் ஒரு நிரந்தர ஊழியருக்குக்
கிடைக்கும் அதே வேலைப் பயன்கள் இந்த ஒப்பந்த ஊழியர்களுக்குக் கிடையாது. ஏறக்குறைய
இரண்டு பத்தாண்டு காலமாக,
வங்கிகள் புதிதாக ஊழியர் நியமனத்தையே நிறுத்தி விட்டன. பெரும் எண்ணிக்கையிலான வங்கி
ஊழியர்கள் - ஏறக்குறைய 80 சதவீதம் பேர் - ஒரு சில வருடங்களில் ஓய்வு பெற்று
விடுவார்கள். இவ்வாறாக எந்த உத்தியோகப்பூர்வ ஆட்குறைப்பும் இல்லாமலேயே,
ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாய் குறைக்கப்பட்டு விடும்!
”சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்ட”த்தை அமல்படுத்துவதில் முடக்கம் கண்டிருப்பதாக
பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் பெருவணிகத் தலைவர்களிடம் இருந்து பெருகும் விமர்சனத்தை
பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் சந்தித்து வருகிறது. ஆகஸ்டு 1 அன்று நாட்டின்
பிரதானப் பெருநிறுவனத் தலைவர்களுடன் நடந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில்,
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்கித் துறை உள்ளிட அனைத்துத் துறை சீர்திருத்த
மசோதாக்களையும் நிறைவேற்ற தீவிர கவனம் செலுத்த வாக்குறுதியளித்தார்.
இந்தியாவில் 26 அரசு வங்கிகள்,
21 தனியார் வங்கிகள் மற்றும் 34 அயல்நாட்டு வங்கிகள் உள்ளன. ஆனால் நாட்டின் வங்கி
வர்த்தகத்தின் பெரும்பகுதியில் பொதுத் துறை தான் மேலாதிக்கம் செலுத்துகிறது.
வங்கித் துறையின் மிகவும் இலாபகரமான பிரிவுகளை இந்திய மற்றும் அயல்நாட்டு
முதலீட்டாளர்களுக்குத் திறந்து விடுவது தான் இந்த மசோதாவின் நோக்கமாகும்.
அரசுடைமை வங்கிகளில் அரசின் பங்கினை 51 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாகக்
குறைப்பது,
மூலதனச் சந்தையில் முதலீட்டைத் திரட்டிக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்கு
அனுமதிப்பது மற்றும் பங்குதாரர்களது உரிமைகளை விரிவுபடுத்துவது ஆகியவை
பரிந்துரைக்கப்படும் மாற்றங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
Icra
Ltd
என்கிற
தரமதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நரேஷ் தக்கார் ஊடகங்களிடம்
கூறினார்: “பங்குரிமையையும் முடிவுகளைத் தீர்மானிக்கும் திறனையும் ஓரணியில்
கொண்டுவருவதென்பது அரசாங்கத்தின் தரப்பில் மிக நம்பிக்கை தரும் விடயமாகும்,
இங்கே முதலீட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கும் அயல்நாட்டு
முதலீட்டாளர்களுக்கும் இது மிகவும் நம்பிக்கையூட்டுவதாய் அமையும்.”
ஒன்பது
தொழிற்சங்கங்களின் குடையாக செயல்படும் ‘வங்கி ஊழியர்கள் ஐக்கிய மன்றம்’ (UBFU)
அமைப்பு ஆகஸ்டு 5 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆயினும் அதன் நோக்கம்
அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பரப்புரையைத் தொடங்குவது அல்ல மாறாக சிறு சலுகைகள்
வேண்டி அழுத்தம் கொடுப்பதும் மற்றும் வங்கி ஊழியர்களிடையே பெருகி வரும் கவலை
மற்றும் கோபத்தைத் தணிப்பதுமே ஆகும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடருடன்
சமகாலத்தில் நிகழ்வதற்காக இந்த சங்கங்கள் முந்தைய ஒரு வேலைநிறுத்தத்தை ஜூலை 7 இல்
இருந்து ஆகஸ்டு 5க்கு தள்ளி வைத்தன. ஆகஸ்டு ஆரம்பத்தில் மூத்த அரசாங்க
அதிகாரிகளுடன் நடந்த தொழிற்சங்கங்களால் “சமரசக் கூட்டங்களாக” வர்ணிக்கப்பட்ட
பேச்சுவார்த்தைகளில் எந்தப் பலனும் கிட்டவில்லை.
எல்லா
வங்கி ஊழியர் சங்கங்களும் ஆளும் காங்கிரஸ் கட்சி,
எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP)
மற்றும்,
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (CPI)
மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (CPM)
ஆகிய இரண்டு பிரதான ஸ்ராலினிசக் கட்சிகள் உள்ளிட்ட இந்திய அரசியல் ஸ்தாபகத்தின்
பல்வேறு கட்சிகளுடன் இணைந்தவை ஆகும்.
வங்கி
ஊழியர்களின் வேலைகள் மற்றும் வேலைநிலைமைகள் என்பதை விட இந்திய அரசு வங்கிகளைப்
பாதுகாப்பதென்பது தான் ஊழியர் சங்கங்களின் தேசியவாதப் பரப்புரையின் மைய உந்துதலாய்
உள்ளது. “எங்களது வேலைநிறுத்தம் ஊழியர்கள் நலனுக்காக மட்டுமல்ல. மத்திய
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய-விரோதக் கொள்கைகளை எதிர்ப்பதும் நமது
வங்கிகள் அந்நியக் கட்டுப்பாட்டுக்குள் செல்வதில் இருந்து பாதுகாப்பதும் சேர்ந்தே
இதில் உள்ளது.”
இந்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் பத்திரிகையில் வெளிவந்த ஒரு
கட்டுரை,
வங்கி வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வெளியிலிருந்து கொள்முதல் செய்து கொள்வதானது
இந்திய வர்த்தகங்களுக்கான சேவைகளை தரமிழக்கச் செய்யும் என்று புகாரிட்டது. “இது
ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கு அபாயத்தை கொண்டு வருவது மட்டுமல்ல வங்கி
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வங்கிக் கணக்குகளின் விவரங்கள்,
பாதுகாப்பு,
மற்றும் இரகசியத்துக்கும் கூட ஆபத்தைக் கொண்டு வரும்” என்று அது அறிவித்தது.
அந்தக்
கட்டுரை வீராவேசமாய் வினவியது: “இந்த அரசாங்கம் யார் பக்கம் நிற்கிறது?
சாமானியனின் பக்கமா இல்லை பெருநிறுவனங்களின் பக்கமா?”
போதுமான நெருக்குதல் அளித்தால் அரசாங்கம் சாமானியனை ஆதரிக்கத் தள்ளப்படும் என்கிற
தொழிற்சங்கங்களால் வளர்த்து வரப்படும் பிரமைக்கு உரம் போடவே இந்தக் கேள்வி
பயன்படுகிறது. ஆனால்,
தனது அரசாங்கம் பெருநிறுவனங்களால் கோரப்படுகின்ற திட்டநிரலையே அமல்படுத்தவிருப்பதாக
மன்மோகன் சிங் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.
யதார்த்தத்தில்,
வங்கி ஊழியர்களால் எந்த அரசியல் போராட்டமும் நடத்தப்பட்டு விடாமல் தடுப்பதில்
அரசாங்கம் மற்றும் பெருவணிகங்களுக்கான தொழிற்துறைப் போலிசாரைப் போல்
தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன என்பதற்கு அதிகமாய் ஒன்றுமில்லை. ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் உழைக்கும் மக்களின் நலன்களைக் காவு கொடுத்து சந்தை
ஆதரவுச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி வந்த நிலையிலும் தேசிய நாடாளுமன்றத்தில் 2004
முதல் 2008 வரை அந்த அரசாங்கத்திற்கு இந்த
CPM
மற்றும்
CPI
இரண்டு
கட்சிகளும் முட்டுக் கொடுத்திருந்தன. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும்,
CPM
தலைமையிலான அரசாங்கங்கள் மே மாதத்தில் வெகுஜனக் கோபம் மற்றும் எதிர்ப்பினால்
தேர்தலில் தோல்வி காணும் வரை முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளையே தீவிரமாய்
அமல்படுத்தி வந்தன.
தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொண்டு தங்களை சுயாதீனமாக ஒழுங்கமைத்துக்
கொள்வதன் மூலம் மட்டுமே வங்கி ஊழியர்கள் தங்களது வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளைப்
பாதுகாக்க போராட இயலும். அரசாங்கத்திற்கும் மற்றும் ஸ்ராலினிச பக்கவாத்தியங்கள்
உள்ளிட்ட இந்திய ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிரான ஒரு சர்வதேசிய மற்றும்
சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு தீர்மானகரமான அரசியல் போராட்டம்
இதற்கு அவசியமாக இருக்கிறது. |