WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Biden’s visit to China underscores America’s decline
பிடெனின் சீனாவிற்கான விஜயம் அமெரிக்காவின் சரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
John Chan
24 August 2011
Back to
screen version
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பிடென் கடந்த வாரம் சீனாவிற்குப்
பயணித்தது முக்கியமாக அமெரிக்காவின் மிகப் பெரிய கடன் கொடுத்த நாட்டிற்கு,
ப்ளூம்பெர்க்.காம்
சொற்களில்,
“உங்கள்
பணம் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது”
என்று உத்தரவாதம் அளிக்கத்தான்.
அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில்
1.6
டிரில்லியன் டொலர்களை வைத்துள்ள பெய்ஜிங் சமீபத்திய முன்னோடியில்லாத அளவிற்கு
S&P
அமெரிக்காவின் கடன் தரத்தை தாழ்த்தியுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்பது
தெளிவு.
ஞாயிறன்று
Sichuan
பல்கலைக்கழகத்தில் கொடுத்த முக்கிய உரையில்,
பிடென் அமெரிக்கக் கடனில் சீனாவின் முதலீட்டைப் பாதுகாப்பதில்
“பெரும்
அக்கறையை”
வாஷிங்டன் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.
“அமெரிக்கா
ஒருபொழுதும் கடனைத் திருப்பித் தராமல் போனதில்லை,
ஒருபோதும் அப்படிப் போகாது”
என்று தன் பார்வையாளர்களிடம் அவர் கூறினார்.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி அத்தகைய அறிக்கையை வெளியிடுகிறார் என்ற
உண்மையே சீனாவிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க நிதிய முறை மற்றும்
அமெரிக்காவிற்கும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனாவிற்கும்
இடையே மாறிவரும் உறவுகள் பற்றிய உளைச்சலைப் பற்றி நிறையக் கூறுகிறது.
பல தசாப்தங்களாக அமெரிக்க டாலர் சீன மொழியில்
“மெய்ஜின்”
என்று அழைக்கப்பட்டது;
தங்கத்தைப் போன்றது என்ற பொருளை அது தரும்.
இப்பொழுது அது வினாவிற்கு உட்பட்டுவிட்டது.
அமெரிக்கா திருப்பித்தருவதில் தாமதம் காட்டுமா என்பது பிரச்சினை
அல்ல;
ஆனால் வாஷிங்டன் வேண்டுமென்றே டாலரை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் சீனா
டாலர்களில் கொண்டுள்ள முதலீடுகளின் மதிப்பீட்டை அரிக்கிறது.
“எளிதான,
நிறைய டாலர்கள்”
என்னும் அமெரிக்கக் கொள்கை திறமையுடன் பில்லியன் கணக்கான டாலர்களை அச்சிடுவதுடன்
தொடர்பு கொண்டது.
மற்ற அமெரிக்க அதிகாரிகளைப் போலவே பிடெனும்,
சீனா அதன் நாணயத்தை மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஆனால் இது ஒரு பெயரளவு அறிக்கை ஆகும்.
எளிதான நிறைய டாலர்கள் முறை மூலம்,
அமெரிக்கா அதன் விருப்பப்படி யுவானை மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்துகிறது.
சீனத் துணை ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பிடென் சந்தித்தார்;
கடந்த வாரம் ஐரோப்பியக் கடன் நெருக்கடி மற்றும் ஐரோப்பிய,
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு பற்றி ஆழ்ந்த கவலைகளால் ஏற்பட்ட பங்குச்
சந்தைக் கொந்தளிப்பிற்கு இடையே இச்சந்திப்பு நடைபெற்றது.
ஐரோப்பிய,
அமெரிக்கப் பொருளாதாரங்களோ சீனாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகள் ஆகும்.
இருவரும் கொந்தளிப்பு நிறைந்த சந்தைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் வெற்றுத்தன
உறுதிகளை அளித்தனர்.
ஜியிடம் பிடன் கூறினார்:
“சீனாவுடன்
ஒரு நெருக்கமான உறவு என்பதைத்தவிர அமெரிக்காவிற்கு மிக முக்கியமான உறவை நிறுவுதல்
வேறு ஒன்றுமில்லை என்று நான் தெரிவிப்பேன்.”
உலகப் பொருளாதார உறுதிப்பாடு
“அமெரிக்கா,
சீனா ஆகியவற்றிற்கு இடையேயுள்ள ஒத்துழைப்பில் தளம் கொண்டுள்ளது;
இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும்”
என்றார் அவர்.
அமெரிக்கப் பொருளாதாரம்
“நிலைமைக்கு
ஏற்பச் சமாளித்து மீண்டும் ஊக்கம் பெறும்,
புதிய மலர்ச்சி பெறும் திறன் அதற்குரியது”
என்ற தன் நம்பிக்கையை ஜி வெளியிட்டார்.
இத்தகைய வெற்று அறிக்கைகள் உலகின் இரு பெரும் பொருளாதாரங்களின்
வலுவற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அமெரிக்கா இப்பொழுது உலகிலேயே மிக அதிகம் கடன் வாங்கியுள்ள நாடாக உள்ளது;
ஒரு மந்தநிலையை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது.
எளிதாக புழக்கத்தில் டாலரை விட்டு,
தன் கடன் சுமையைக் குறைக்கவும்,
ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் அது தனக்குக் கடன் கொடுத்தவர்கள்,
போட்டியாளர்களின் இழப்பை நம்பியுள்ளது.
உலக நிதியச் சந்தைகளில் அமெரிக்க டாலர்களை உட்செலுத்துதல் என்பது சீனா போன்ற
நாடுகளில் பணவீக்க அழுத்தங்களுக்கு உதவுகிறது;
அந்நாட்டின் பொருளாதார,
சமூக உறுதிப்பாட்டையும் அச்சுறுத்துகிறது.
தன்னுடைய பங்கிற்கு பெய்ஜிங் அதன் மலை போன்ற அமெரிக்கக் கடன்,
மதிப்பில் குறைவதை அச்சத்துடன் கண்காணிக்கிறது.
சீன அதிகாரிகள் அமெரிக்கா கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு கடனைக் குறைக்க
வேண்டும் என்று முறையிடுகையில்,
பெய்ஜிங்கிற்கு இன்னும் அதிக அமெரிக்கப் பத்திரங்களை வாங்குவதைவிட மாற்றீடு ஏதும்
இல்லை.
அமெரிக்க ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும் டாலர்களை அமெரிக்கப் பத்திரங்களாக
மாற்றுவதின் மூலம் சீனா யுவானின் மதிப்பு இன்னும் விரைவாக உயர்வதைத் தடுக்கிறது;
இதையொட்டி அதன் ஏற்றுமதிப் போட்டித்தன்மையையும் தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சீனா பயப்படுவது ஒரு புதிய சுற்று ஆலை மூடல்கள்,
வேலை இழப்புக்கள் ஆகியவைதான்—இவை
2008-09
நிதிய
நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் நடந்தன;
அதே போல் தொழிலாள வர்க்க அமைதியின்மை பற்றியும் கவலை கொண்டுள்ளது.
சீனாவில் சமூகக் கொந்தளிப்பு என்பது,
அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஆழ்ந்த உட்குறிப்புக்களைக் கொடுக்கும்.
பிடென் மற்றும் ஜி அமெரிக்க,
சீன வணிகத் தலைவர்களுடன் நடத்திய முக்கியக் கூட்டம் சீனாவில் அமெரிக்கப் பெருநிறுவன
நலன்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியது.
அன்றே கோக்கோ கோலா சீனாவில் இன்னும்
4
பில்லியன் டொலர்களை
2012ல்
முதலீடு செய்யப்படும் என அறிவித்தது;
உலகின் கனரக இயந்திரங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும்
Caterpillar
சீனாவில்
“ஆக்கிரோஷத்துடன்”
விரிவாக்கம் செய்யும் எனத் திட்டமிட்டுள்ளது;
இது ஏற்கனவே அது கொண்டுள்ள தற்போதைய
16
நிறுவனங்களைத் தவிர.
உலகின் மிகப் பெரிய நிறுவனம் என்று பங்குச் சந்தை மூலதனக் கணக்கில்
Exxon Mobil
ஐயும்
கடந்து நிற்கும்
Apple,
சீனாவிலுள்ள
Foxconn
உடைய
பெரும் விலங்கடிமை தொழிலாளர் ஆலைகளைத்தான் அதன்
iPhones, iPads
ஆகியவற்றிற்கு நம்பியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அழுத்தங்கள் குறைதல் என்பதற்கு முற்றிலும்
மாறாக,
அவற்றின் பொருளாதார ஒன்றையொன்று தங்கியிருப்புத்தன்மை ஒவ்வொரு துறையிலும் அவை
கொண்டிருக்கும் போட்டியைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.
தொடக்கத்தில் இருந்தே ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் ஆக்கிரோஷமாக தலையிட்டு
பெய்ஜிங்கின் பெருகும் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றுவருகிறது.
அமெரிக்க பொருளாதார ஆற்றல் சீனாவுடன் ஒப்பிடுகையில் சரிந்துவரும் நிலையில்,
வாஷிங்டன் தன் மூலோபாய மேலாதிக்கத்தை மறு உறுதி செய்வதற்குத் தன் பெரும் இராணுவ
வலிமையைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை.
Sichuan
பல்கலைக்கழகத்தில் நடத்திய உரையில்,
பிடென் குறிப்பாக அறிவித்தார்:
“அமெரிக்கா—இது
சில நேரங்களில் மனக் களைப்பைக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன்—ஆனால்
அமெரிக்கா ஒரு பசிபிக் சக்தி,
நாங்கள் குறிப்பிட்ட சக்தியாக,
பசிபிக் சக்தியாக எப்பொழுதும் இருப்போம்.”
பசிபிக் பகுதியில்
60
ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மேலாதிக்க பங்கைக் குறிப்பிட்டு அவர்
தொடர்ந்தார்:
“இது
சீனாவிற்கு நன்மை கொடுத்துள்ளது என்பதை நான் உரிய பெருமையுடன் கூற விரும்புகிறேன்;
இதையொட்டி சீனா உள்நாட்டு வளர்ச்சியில் குவிப்பைக் காட்ட முடிந்தது,
பெருகும் சந்தையில் இருந்து பயனடைய முடிந்தது.”
பெய்ஜிங் நன்கு அறிந்துள்ளபடி,
அமெரிக்கா பெருந்தன்மையுடன் ஆசியப் போட்டி நாடுகளுக்கு பாதுகாப்பை உத்தரவாதம்
செய்கிறது என்பது உண்மை நிலையில் இருந்து அப்பாற்பட்டதாகும்.
ஒபாமா நிர்வாகம் இப்பொழுதுதான் பெய்ஜிங்கிற்கு ஒரு கசப்பான படிப்பினையை லிபியாவில்
கொடுத்துள்ளது;
அங்கு அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இராணுவ வழிவகையைப் பயன்படுத்தி
ஒரு வாடிக்கை ஆட்சியை நிறுவியுள்ளன;
இது திறமையுடன் சீனாவை லிபியாவின் எண்ணெய் சந்தைகளில் இருந்து அகற்றிவிட்டது;
பில்லியன் கணக்கான சீன முதலீட்டு டாலர்களையும் இல்லை என ஆக்கிவிட்டது.
பசிபிக்கில் அமெரிக்க கடற்படை மூலோபாயம் இயற்றுபவர்கள் இரண்டாம்
உலகப் போருக்குப் பின் முக்கிய மூலோபாய நெரிப்புப் பகுதிகளான மலாக்கா ஜலசந்தி
போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது;
இவ்வகையில் அது பொருட்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது;
குறிப்பாக சீனாவின் பெரும் உற்பத்தித்துறை விரிவாக்கம் மிக அதிகமாக எரிசக்தி
இறக்குமதி மற்றும் மூலப் பொருட்கள் இறக்குமதியை நம்பியுள்ள நிலையில்,
குறிப்பாக மத்திய கிழக்கு,
ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து.
எனவே பெய்ஜிங் அதன் முக்கிய வழங்கல் பாதைகளை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ்
விடுவதற்குத் தயாராக இல்லை என்பதில் வியப்பு ஏதும் இல்லை;
அது தனது ஆழ்கடல் கடற்படையை அவற்றைப் பாதுகாக்கக் கட்டமைத்து வருகிறது.
இதன் விளைவாக அமெரிக்க சீன அழுத்தங்கள் கடந்த ஆண்டு தென்சீனக்கடல்
மற்றும் கிழக்குச் சீனக் கடலில்—அதாவது
சீன நிலப்பகுதிக்கு வெகு அருகே—வெடித்துள்ளன.
அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் சொற்களில்,
“அமெரிக்கா
மீண்டும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ளது.”
வாஷிங்டனுடைய ஆதரவுடன் வியட்நாம்,
பிலிப்பைன்ஸ் ஆகியவை சீனாவுடன் தங்கள் தென்சீனக்கடல் உரிமைகள்,
போட்டிநிலப் பகுதி உரிமைகள் பற்றி ஆவேசமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
வியட்நாம் ஒரு உதாரணம்தான்.
பிடென் வருகைக்கு முன்பு,
அமெரிக்கா அதன் முதல் இராணுவ உடன்பாட்டை ஹனோயுடன் வியட்நாம் போர் முடிந்ததில்
இருந்து கையெழுத்திட்டுள்ளது.
மருத்துவ ஒற்றுமை பற்றிய ஏற்பாடுகள் பெரும்பாலும் அடையாளத் தன்மை என்ற நிலையில்,
இது சீனாவின் இழப்பில் அமெரிக்கா நெருக்கமான தொடர்புகளை வியட்நாமுடன்
கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் மூத்த வியட்நாம் அதிகாரிகள்
USS George Washigton
என்னும்
அணுசக்தியால் இயங்கும் விமானத் தளத்தைக் கொண்ட போர்க் கப்பலுக்கு ஆகஸ்ட்
14ம்
திகதி வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு விடையிறுக்கும் வகையில் சீனா ஒரு பயனற்ற அமெரிக்க வியட்நாம்
பங்காளித்தனத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதன் வியட்நாமுடனான தெற்கு எல்லையில்
ஆகஸ்ட் தொடக்கதில் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியை நடத்தியது.
சீனாவில் பிடெனின் பகிரங்க அறிக்கைகள் அமைதியான ஒத்துழைப்பு என்ற
இராஜதந்திர சொல்லாட்சியில் வெளிப்பட்டிருந்தன.
ஆயினும்கூட,
இரு திறத்தாரும் நன்கு அறிந்துள்ளபடி,
மோசமாகி வரும் உலக நிதிய நெருக்கடியால் விரிவடைந்துள்ள பொருளாதார அழுத்தங்கள்
மற்றும் போட்டிகள் மோதலுக்கும் இறுதியில் பூசல்கள்,
போர் ஆகியவற்றை நோக்கியும் செல்கின்றன.
இத்தகைய பேரழிவிற்கு ஒரே முற்போக்கான மாற்றீடு சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன்
அமெரிக்க,
சீனத் தொழிலாளர்கள் புரட்சிகரமாக ஐக்கியப்படுவதுதான்;
அதுதான் இடர்களுக்கும் போர்களுக்கும் மூலகாரணமாக இருக்கும் இலாபமுறையை அகற்றும். |