சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK unemployment rises, with youth badly hit

பிரிட்டனில் வேலையின்மை உயர்கிறது, இளைஞர்கள் மோசமான பாதிப்பிற்கு உட்படுகின்றனர்

By Joe Mount
22 August 2011

use this version to print | Send feedback

இந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் பிரிட்டினில் வேலையின்மை 7.9 சதவிகிதம் சமீபத்திய மாதங்களில் உயர்ந்து விட்டதைக் காட்டுகிறது; ஏனெனில் பரந்த முறையில் பொதுத்துறை வேலை இழப்புக்கள் மற்றும் தனியார்துறைத் தேக்கங்கள் அவற்றின் பாதிப்பைக் காட்டியுள்ளன.

இங்கிலாந்தில் லண்டனிலும் பிற நகரங்களிலும் இளைஞர் எழுச்சிகள் நடந்து சில நாட்களுக்குள் இந்தப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் ஸ்தாபனமும் செய்தி ஊடகமும் இணைந்த வகையில் கலவரங்களில் சமூக இழப்புக்களும் வேலையின்மையும் இதற்கான பங்கைக் கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்தும் நேரத்தில், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வேறுநிலையைத்தான் நிரூபிக்கின்றன.

பிரிட்டனில் வேலையின்மை 1.8 சதவிகிதம் உயர்ந்து இந்த ஆண்டு ஜூன் முடிவிலான மூன்று மாதங்களுக்கு 2.49 மில்லியன் என உயர்ந்துள்ளது; இதன் பொருள் இன்னும் கூடுதலாக 154,000 பேர் வேலையின்றி உள்ளனர் என்பது ஆகும்.

இளைஞர் வேலையின்மை 1 மில்லியன் எண்ணிக்கையை எட்டுகிறது, கடந்த சில மாதங்களில் 950,000 என, அதாவது 20.2 சதவிகிதம்ஐந்தில் ஒருவர் 16 முதல் 24 வயதிற்குள் இருப்பவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 100,000 நபர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான காலமாக வேலையின்றி உள்ளனர்.

பள்ளியை விட்டு நீங்குபவர்களில், 16 மற்றும் 17 வயதினர்கள், கிட்டத்தட்ட வேலைதேடும் இருவரில் ஒருவருக்கு வேலை கிடைப்பதில்லை. இளைஞர்களிடையே இத்தகைய வேலையின்மை நிலை 1980 களின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடத்தக்கது; இளம் தொழிலாளர்களுக்கு அது மோசமான காலம் ஆகும்; ஆனால் இதுவோ இன்னும் மோசமாகப் போக உள்ளது.

 

பெண்களிடையே வேலையின்மை என்பது இப்பொழுது 1986க்குப் பின் மிக அதிகம் ஆகும்; இது 21,000 என்னும் எண்ணிக்கையில் இருந்து 1.05 மில்லியன் என உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கள் பிரிட்டினின் பொருளாதாரம் ஏறத்தாழ தேக்க நிலையில் இருப்பதின் விளைவு ஆகும். பிரிட்டினின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), இந்தக் காலாண்டில் 0.2 சதவிகிதம்தான் உயர்ந்தது. 2008 நிதியச் சரிவைத் தொடர்ந்து, குறிப்பாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அதிர்வுகளினாலும், ஐரோப்பாவில் பெருகிவரும் கடன் நெருக்கடியினாலும் ஏற்பட்ட மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்னும் அச்சுறுத்தல் பெருகிய முறையில் தவிர்க்க முடியாததாகி உள்ளது.

வடமேற்குப் பகுதி குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளது; வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 13 சதவிகிதமாக உயர்ந்து 300,000 பேர்கள் வேலையின்றி உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இப்பிராந்தியத்தின் முக்கிய நகரங்களான மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் இரண்டும் சமீபத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.

29 வயது மார்க் டக்கனைப் பொலிசார் சுட்டுக்கொன்றதால் தூண்டுதல் பெற்ற பதட்டங்கள் ஏற்பட்ட லண்டனும் மோசமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வேலையின்மை இப்பொழுது தலைநகரில் 406,000 என உள்ளது; 15 ஆண்டுகளில் இது முதல் தடவையாக 400,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இது லண்டனில் பொருளாதார அளவில் ஈடுபட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும்இந்த எண்ணிக்கை வடகிழக்குப் பகுதியில்தான் கூடுதலாக உள்ளது; அங்கு இது 10 சதவிகிதம் என்று உள்ளது. கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள் கலகங்களில் தொடர்புடையவர்கள் என்று முக்கியமாக இளைஞர்கள் விசாரணைக்குட்பட்டவர்களில் 1000 பேரில் ஐந்தில் இரு பகுதியினர் பிரிட்டினில் மிக வறிய பகுதிகளில் வசிப்பதாகக் காட்டுகின்றன.

தொழிற் சங்க காங்கிரஸ் (TUC) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று லண்டனில் கலகத்தால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில்ஹாக்னி, டோட்டன்ஹாம் மற்றும் லெவிஷாம்நாட்டில் வேலை கிடைப்பது அரிது என உள்ள 10 இடங்களில் உள்ளன என்று கூறுகிறது.

ஹாக்னியில் ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் சராசரியாக 22 விண்ணப்பதாரர்கள் போட்டி இடுகின்றனர். டோட்டன்ஹாம் உள்ள ஹாரிங்கேயில் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு காலியிடத்திற்கும் 29 விண்ணப்பதாரர்கள் என்று உள்ளது; லெவிஷாமில் ஒரு காலியிடத்திற்கு 21பேர் விண்ணப்பிக்கின்றனர்.

Children & Young People Now என்னும் அமைப்பு நடத்தியுள்ள ஆய்வு இப்பகுதிகளில் Connexions வேலை ஆலோசனைப் பணிகள் என்பதற்கான இளைஞர் பணிகளுக்கான வரவு-செலவுத் திட்ட செலவுகள் சமீபத்திய ஆண்டுகளில் வியத்தகு அளவில் குறைக்கப்பட்டுவிட்டதை காட்டுகிறது. இன்னும் வெட்டுக்கள் வர உள்ளன. ஹாரிங்கேயில் இந்த ஆண்டு 61 சதவிகிதம் வெட்டுக்கள் இருந்தன; அடுத்த ஆண்டு 30 சதவிகித வெட்டுக்கள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் பணிகள் இந்த ஆண்டு கலகத்தால் பாதிக்கப்பட்ட சால்போர்டில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டன; இன்னும் 18 சதவிகிதம் வெட்டுக்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன. லண்டனிலுள்ள லாம்பெத் பிரிவு அதன் இளைஞர்களுக்கான நிதிய ஒதுக்கீடு அடுத்த ஆண்டு 8.9 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 6.2 மில்லியன் பவுண்டுகள் எனக் குறைக்கப்பட உள்ளதைக் காட்டுகிறது.

இப்புள்ளிவிபரங்கள் பிரிட்டன் முழுவதும் வாய்ப்புக்கள் பெருகிய முறையில் அரிதாக வருவதைத்தான் இளைஞர்கள் முகங்கொடுக்க நேரிடும் என்னும் இருண்ட வருங்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டணி அரசாங்கம் சமீப காலத்தில் முன்னோடியில்லாத வகையில் இன்னும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்த இருக்கையில் இளைஞர்கள் எதை எதிர்பார்க்க முடியும் என்பதின் குறிப்பு ஆகும்.

வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை இப்பொழுது வேலைச் சந்தையில் நுழைய முற்படும் ஏராளமான பல்கலைக்கழக பட்டதாரிகளினால் அதிகமாகும். பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலையின்மை என்ற நிலையில் இருப்பவர் எண்ணிக்கை 2008 நிதியச் சரிவிற்குப் பின் இரு மடங்காக அதிகரித்துவிட்டது.

இதைத்தவிர, இந்த ஆண்டு பல்கலைக்கழத்தில் நுழைய வேண்டும் என்ற நம்பிக்கை உடையவர்கள் அங்கு இடம் இல்லாத நிலையைக் காண்கின்றனர். அடுத்து ஆண்டு பயிற்சிக் கட்டணங்கள் 9,000 பவுண்டுக்கள் என்று மூன்று மடங்கு ஆவதால் சேர விருப்பம் உள்ள திறனுடைய மாணவர்களிடையே பெருந்திகைப்பிலான போட்டி உள்ளது. தாங்கள் விரும்பும் கல்விநிலையங்களில் இடம் கிடைக்காமல் இடர்ப்படுவோர் வேறு இடங்களில் படிக்க ஒதுக்கப்படும் clearing process என்பதின் மூலம், 192,000 மாணவர்கள் 29,500 இடங்களுக்குப் போட்டியிடுகின்றனர்.

பல தொழிலாளர்கள் பகுதி நேரம் அல்லது சுய வேலை அடிப்படை என்பதைத் தேர்ந்தெடுக்கின்றனர்; இதற்குக் காரணம் முழுநேர வேலைகள் கிடைக்கவில்லை என்பதுதான். பகுதி நேரம்/சுய வேலை ஆகியவற்றில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 83,000 உயர்ந்தது. இப்பொழுது இப்பிரிவில் மொத்தம் 1.26 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு முழுமையாக எந்த வேலை ஒப்பந்தங்களும் கிடைக்காது, நோய்க்கால ஊதியம் மற்றும் பிற விடுமுறைநாட்கள் நலன்களும் கிடைக்காது.

பெருகும் வேலையின்மையைப் பயன்படுத்தி முதலாளிகள் ஊதியங்களைக் கடுமையாகக் குறைக்க முற்படுகின்றனர். சராசரி வாராந்திர வருமானங்கள் கடந்த காலாண்டில் 2.2 சதவிகிதம் என்று மட்டுமே உயர்ந்தன. இதைவிடப் பணவீக்கம் இரு மடங்காக இருப்பதால், இது உண்மையில் உண்மை ஊதியங்களின் சரிவைத்தான் காட்டுகிறது. சில்லறை விற்பனைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் பொதுத்துறைகளில் ஆண்டு ஊதிய வளர்ச்சி, இதே காலகட்டத்திற்கு அளவிட்டபோது 2 சதவிகிதம் குறைந்துவிட்டதைத்தான் காட்டியது.

இத்தகைய பொருளாதாரப் பாதுகாப்பின்மை மற்றும் வேலையின்மை ஆகியவை, குறிப்பாக அடிப்படைத் தேவைகளான பொதுசேவை வசதிகள், போக்குவரத்து, உணவுப் பிரிவுகளில் விலைவாசி உயர்ந்துள்ள காலத்தில் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம்தான் பிரிட்டிஷ் எரிவாயு நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிவாயுவின் விலைகளை முறையே 16 மற்றும் 18 சதவிகிதம் உயர்த்தும் என அறிவித்துள்ளது; அதே நேரத்தில் இரயில் பயணக் கட்டணங்களும் அடுத்த ஆண்டு சராசரியாக 8 சதவிகிதம் உயரவுள்ளது.