சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Fierce fighting continues in Tripoli

திரிப்போலியில் கடுமையான மோதல்கள் தொடர்கின்றன

By Bill Van Auken 
23 August 2011

use this version to print | Send feedback

திங்களன்று இரவும் கடுமையான மோதல் திரிப்போலியில் நடைபெற்றது; அதே நேரத்தில் முக்கிய மேற்கத்தையச் சக்திகளின் தலைவர்கள் 42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் ஆட்சி முடிந்துவிட்டது என்று பிரகடனம் செய்து லிபியாவின் எண்ணெய் வளத்திற்கான போட்டியில் உரிய இடத்திற்காக தந்திரோபாயங்களை தொடங்கினார்கள்.

லிபியத் தலைநகர் நோக்கி ஆச்சரியமான முறையில் விரைவாக முன்னேறிய பின், நேட்டோ ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் படைகளின் கடும் எதிர்ப்பை முகங்கொடுத்தன. “எழுச்சியாளர்கள் எனப்பட்டவர்களை முதலில் வரவேற்ற கூட்டம் கலைந்துபோயிற்று; தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தன; இருசாராரும் இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிக் குண்டுகள், விமான எதிர்ப்பு  ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தின.

கடாபியின் கோட்டையான ஜனாதிபதி வளாகமான பாப் அல்-அஜிஜியாவைச் சுற்றிக் கடும் சண்டைகள் நிகழ்ந்தன; நகரத்தின் பல பகுதிகள் மேலாக வெண்புகைகள் படர்ந்தன. பெங்காசியைத் தளமாகக் கொண்டுள்ள, நேட்டோ ஆதரவுடைய மாற்றுக்காலத் தேசியக் குழுவின் (TNC) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கோட்டை போன்ற வளாகம் எளிதில் வீழ்ந்துவிடும், ஆனால் அங்கு மோதல்கள்கடுமையாக இருக்கும் என்று கணித்தார். மிகப் பெரிய திரிப்போலி வளாகம் நேட்டோ போர் விமானங்களின் பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.

TNC லிபியத் தலைநகரில் 80 முதல் 90 சதவிகிதம் வரைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கையில், நகரத்திலுள்ள நிருபர்கள் நிலைமை பற்றிஇன்னும் உறுதியாகவில்லை”, தெருக்களைப் பாதுகாக்க அதிக சாவடிகள் நிறுவப்படவில்லை என்று விளக்கியுள்ளனர்.

BBC நிருபர் Orla Guerin திரிப்போலிக்கு கிழக்கேபோர் இன்னமும் முடியவில்லை என்று கூறினார்; மேலும் பெங்காசியை தளமாகக் கொண்ட குடிப்படைகள் தலைநகருக்கு 80 மைல்கள் கிழக்கேயுள்ள கடலோர நகரான ஜிலிடனுக்கு அருகே நெடுஞ்சாலைக் கட்டுப்பாடு கொண்டிருக்கும் விசுவாசமான படைகளால் தலைநகருக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். TNC படைகளால் வெள்ளியன்று கைப்பற்றப்பட்ட போதிலும்கூட, இச்சிறுநகர் அரசாங்கத் துருப்புக்களின் பதிலடியின் கீழ் திங்களன்று வந்தது.

லிபிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மௌசா இப்ரஹிம் ஞாயிறு பின்னிரவில் செய்தியாளர்களிடம் 1,300 லிபியர்கள் கடந்து 24 மணி நேரத்தில் தலைநகரில் இறந்துவிட்டனர்; போர் மற்றும் நேட்டோ வான் தாக்குதல்களின் விளைவு இது என்றார். மற்றும் ஒரு 5,000 பேர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

கடாபி ஆட்சியின் அடக்குமுறையில் இருந்து குடிமக்களைக் காத்தல் என்னும் போலிக்காரணத்தால் தொடக்கப்பட்ட இந்த அமெரிக்க-நேட்டோ நடத்தும் போர் இதுவரை கடாபியின் படைகளால் அச்சுறுத்தப்பட்டவர்களைவிட அதிகமாக குடிமக்களைக் கொன்றுள்ளன; இதன் இறுதிக் கட்டத்தில் பல முக்கிய போர்க் குற்றங்கள் நடந்துள்ளன; 2 மில்லியன் மக்கள் வசிக்கும் திரிபோலி மீது Apache ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு குண்டுத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

திரிப்போலியில் வசிப்பவர் ஒருவர் நேட்டோ ஆதரவுடைய கெரில்லாக்கள்மக்களின் வீடுகளில் நுழைகின்றனர், அனைத்தையும் திருடுகின்றனர் எனக்கூறியதாக BBC மேற்கோளிட்டுள்ளது. தலைநகரத்தை முற்றுகையிடுவதுலிபியாவிற்கும் நேட்டோவிற்கும் பேரழிவு தரும் என்று அவர் கணித்ததாகவும் கூறப்படுகிறது.

நேட்டோ ஆதரவுடைய படைகள் திரிப்போலிக்குள் நுழைந்த வேகம் கடாபியின் ஊழல்மிகுந்த சர்வாதிகார ஆட்சியின் உட்சரிவினால் எளிதாயிற்று என்றாலும்கூட, திங்கள் அன்று வெளிவந்துள்ள தகவல்கள், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டிலும் வந்தவை, “எழுச்சியாளர்கள் முன்னேறியது வட ஆபிரிக்க எண்ணெய் வளம் மிக்க நாட்டில் மேற்கத்தைய சக்திகள் தரை, வானில் கொடுத்த ஆதரவினால் இயக்கம் பெற்றது என்பதைத் தெளிவாக்கியுள்ளன.

திரிப்போலி முற்றுகை வெற்றி பெற்றது என்பதுபிரிட்டிஷ், பிரெஞ்சு, கட்டார் சிறப்புப் படைகள் தரையில் இருந்து செயல்படுத்திய மூலோபாயத்தின் விளைவு மற்றும்ஒபாமா நிர்வாகம் லிபிய அரசாங்கப் படைகளின் நிலைகள் பற்றிய கூடுதல் உளவுத் தகவலைப் பகிர்ந்துகொள்ள எடுத்த முந்தைய முடிவு ஆகியவற்றினால் ஏற்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோளிட்டு, போஸ்ட் முயம்மர் கடாபியின் விசுவாசப் படைகளை கத்திக்கு இடையே அகப்பட்டுக் கொள்ளுவது போல் அனைத்துத் திசைகளில் இருந்து திரிப்போலியை பாதுகாக்கச் செய்யப்பட்ட முயற்சியின் விளைவு ஆகும். இந்த வகையில் அரசாங்கத் துருப்புக்கள் நேட்டோ வான் தாக்குதலுக்கு தெளிவான இலக்குகளாக மாறும், சாலைகள் எழுச்சியாளர்கள் முன்னேறுவதற்குத் தடையின்றி இருக்கும் எனக் கூறியுள்ளது.

ஆட்சியின் படைகள் பின்வாங்கின, கடந்த நான்கைந்து நாட்களாக திரிப்போலி மீது இலக்கு வைக்கப்பட்டது; தலைநகரில் வைக்கப்பட்ட இலக்குகள் பெரிதாயின என்று ஒரு மூத்த நேட்டோ அதிகாரி போஸ்ட்டிடம் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், “எழுச்சியாளர்களின் செயல்பாடு கடாபிப் படைகளை வானில் இருந்து தாக்குவதற்கு எளிதான வகையில் தள்ளி நிறுத்துவது என இருந்தது.

இந்த அறிக்கை அமெரிக்கா ஒரு முக்கிய பங்கை இந்த வழிவகையை கையாளும் விதத்தில் நேட்டோ போர் விமானங்கள் அளித்ததைத் தெளிவுபடுத்துகிறது; அதேபோல் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் சிறப்பு நடவடிக்கைகள் தரையில் நடத்தப்படுவதற்கு விரிவான செய்மதிப் படக்காட்சிகளின் உதவி, உளவுத்துறைத் தகவல்கள் தேசியப் பாதுகாப்பு அமைப்பில் இருந்து வந்தன; இவை அனைத்தும் லிபிய அரசாங்கத் துருப்புக்கள் மீது இலக்கு கொள்ளத் துல்லியமாக, விரைவாக உதவின.

எழுச்சியாளர்களின் விமானப் படைபோல் நேட்டோ செயல்படுகிறது, இது ஐ.நா.தீர்மானத்தை மீறுவது போல் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்கப்பட்டதற்கு நேட்டோ அதிகாரிஎங்கள் செயற்பாடுகளின் விளைவு மாறுபட்டிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

அமெரிக்க நேட்டோ அதிகாரிகள்தலைநகரிலும் அதைச்சுற்றியும் அமெரிக்க வான் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்று கூறியதை நியூ யோர் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது; “இதுதான் பல மாதங்கள் கேர்னல் முயம்மர் எல் கடாபியின் முறையான மறைவைத் தொடர்ந்து எஞ்சியுள்ள நிலையில் முக்கிய காரணியாக இருந்து எங்களுக்கு உதவியது.” “நேட்டோ  மற்றும் எழுச்சியாளர்களுக்கு இடையே நடந்துள்ள ஒருங்கிணைப்புஇன்னும் நவீனமயமாகவும் பேரழிவு கொடுப்பதாகவும் அண்மைய வாரங்களில் மாறியது என்று செய்தித்தாள் கூறியுள்ளது. மேலும்பிரிட்டன், பிரான்ஸ் இன்னும் பிற நாடுகள் லிபியாவிற்குள் சிறப்புப் படைகளை ஈடுபடுத்தின என்றும் பாராட்டிக் கூறியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவம் அதன் லிபியா மீதான வான் தாக்குதல்களைக் கடந்த 12 நாட்களில் இருமடங்காக்கிவிட்டது என்பதற்கான புள்ளிவிபரங்களை பென்டகன் வெளியிட்டது. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமெரிக்கப் போர் விமானங்கள் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1.7 தாக்குதலை நடத்தியது; இப்பொழுது அது 3.1 வான்தாக்குதல்கள் என உயர்ந்து அவற்றில் பாதிக்கும் மேலானவை விமானியற்ற பிரிடேட்டர் ட்ரோன்களால் நடத்தப்படுகின்றன.

வட ஆபிரிக்க நாட்டில் அமெரிக்க இராணுவத் தலையீட்டின் செலவு 12 பில்லியன் டொலரை விரைவில் அடைந்த கொண்டிருக்கிறது என்று திங்களன்று CNN கூறியுள்ளது.

தொலைக்காட்சி செய்தி இணையத்தால் நடத்தப்பட்ட மிகச் சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க மக்களில் 35 சதவிகிதத்தினர்தான் போருக்கு ஆதரவு கொடுக்கின்றனர். 60 சதவிகிதத்தினர் லிபியாவில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்க்கின்றனர்.

மாசாச்சுசட்ஸில் மார்த்தா வைன்யார்டில் தன் விடுமுறைக்காலத்தில் இருந்தவாறே ஜனாதிபதி பராக் ஒபாமா திரிப்போலி நிகழ்வுகள்கடாபியின் ஆட்சி முடிந்துவிட்டது என்பதைத் தெளிவாக்குகின்றன என்று பறைசாற்றினார், “ஒரு ஜனநாயக லிபியாவிற்கு வழிவகுக்கும் அனைத்தும் அடங்கிய மாற்றுக்கால நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.

வாஷிங்டன் லிபியாவின்நட்பு நாடாகவும் ஒரு பங்காளியாகவும் இருக்கும் என்று ஜனாதிபதி உறுதிமொழி கொடுத்தார். “நட்பு நாடுகளுடனும் பங்காளிகளுடனும் இணைந்து லிபிய மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நடவடிக்கைகளை தொடர்வோம் என்றார். அவருடைய நிர்வாகம் நேட்டோ மற்றும் ஐ.நா. வுடன் பேச்சுக்களை நடத்துகின்றது, “வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்தவை அவை என்றும் தெரிவித்தார்.

திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்க இராணுவத் தளபதிகளை மேற்கோளிட்டு தாங்கள் லிபியாவிற்கு ஒருசர்வதேச அமைதிப்படை தேவை என நம்புவதாகக் கூறினர் என்று தெரிவித்துள்ளது. “ஒபாமா நிர்வாகம் அதன் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கத் துருப்புக்கள் பங்கு பெறும் என எதிர்பார்க்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.”

பென்டகன்ஒரு புதிய லிபியாவில் பாதுகாப்பு உதவி நிலைப்பாட்டை நிறுவ விரும்புகிறது. இதில் இராணுவத் தொடர்பு அதிகாரிகளும் லிபியப் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்படும் அமெரிக்கப் பயிற்சியாளர்களும் இருப்பர் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியதாக ஜேர்னல் மேற்கோளிட்டுள்ளது.

கடாபி வெளியேறிய பின் அமெரிக்க இராணுவம்லிபியத் தரையில் கால் ஊன்றலாம் என்று அழைப்பு விடுத்தவர்களில் முன்னாள் வெளிவிவகார அலுவலக அதிகாரியும் இப்பொழுது வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் உள்ள ரிச்சர்ட் ஹாஸ் உள்ளார்; இவர் தொடக்கத்தில் அமெரிக்கத் தலையீடு பற்றி குறைகூறியிருந்தார். லண்டன் பைனான்சியல் டைம்ஸில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஹாஸ் எழுதுகிறார்: “நேட்டோவின் விமானங்கள் எழுச்சியாளர் வெற்றிக்கு உதவின. இந்தமனிதாபிமான தலையீடு அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்த உயிர்களைக் காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்டது; உண்மையில் ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் தலையீடும் அறிமுகமாகியுள்ளது.”

இப்பொழுது நேட்டோ அதன் வெற்றியைச் சமாளிக்க வேண்டும். ஏதோ ஒருவித சர்வதேச உதவி, அநேகமாக ஒரு சர்வதேசப் படை ஒன்று சிலகாலத்திற்கு அங்கு ஒழுங்கை மீட்டு நிலையாட்டத் தேவைப்படலாம் இன்னும் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கப் படைகள் தரையில் இறங்காது என்று கூறியிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒதுங்கி நின்று பங்கு பெறுவதில் தலைமை உறுதிப்பாட்டைக் கொள்ள முடியாது.”

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் லிபியாவில் சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். “தற்பொழுதைய நிலைமையில் இருந்து அமைதியான, ஜனநாயக, சுதந்திர சமுதாயத்திற்கு மாற்றம் காண்பதற்கு நாம் விரைவில் அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

.நா .பாதுகாப்புத் தீர்மானம் லிபியாவில்பறக்கக் கூடாத பகுதியை சுமத்த இசைவு கொடுத்தபோது ஜேர்மனி அதற்கு வாக்களிக்க மறுத்து, வான் தாக்குதல்களுக்கு விமானங்களைத் தரவும் மறுத்தது; நாட்டின் பாதுகாப்பு மந்திரி Thomas de Maiziere மேர்க்கெல் அரசாங்கம் கடாபி பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்அமைதி காப்பதற்கான செயற்பாடுகளுக்கு துருப்புக்கள் அனுப்புவது பற்றிப் பரிசீலிக்கும் என்று Rheinische Post இடம் கூறினார். Bundeswehr சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டால், அத்தகைய வேண்டுகோளை ஆக்கபூர்வமாக நாங்கள் பரிசீலிப்போம் என்றார் அவர்.

தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தேசிய மாற்றுக்காலக் குழுவின் (TNC)  தலைவர் முஸ்தபா அப்டெல் ஜலீலை பாரிசுக்கு கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்; வெளியுறவு மந்திரி அலன் யூப்பே பிரான்ஸ் லிபியாவின்தொடர்புக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டும் என்று அறிவித்தார். அதில் பிரிட்டன், அமெரிக்கா, கட்டார் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள், பிற சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

லண்டனில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் 10 டௌனிங் தெருவின் வெளியே பிரிட்டன்லிபிய மக்களுடைய விருப்பத்திற்கு ஆதரவு தரும் வகையில் அனைத்தையும் செய்யும், ஒரு சுதந்திர ஜனநாயக, அனைத்தும் அடங்கிய லிபியாவிற்கு திறமையான மாற்றத்திற்கு ஆவன செய்யும் என்று அறிவித்தார். முதல் முன்னுரிமைதிரிப்போலியில் பாதுகாப்பை நிலைநாட்டல் என்றார் அவர்.

கடந்த ஐந்து மாத காலமாக இடைவிடாமல் லிபியா மீது குண்டுத் தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ் விமானிகளின் பங்கைப் புகழ்ந்த பின், காமெரோன் ஒரு போலி அடக்கக் குறிப்பையும் வெளிப்படுத்தினார்: “இது நம் புரட்சி அல்ல; ஆனால் நம் பங்கைச் செய்துள்ளோம் என்பதில் பெருமை கொள்ளலாம்.”

மாறாக, “புரட்சி என்று அழைக்கப்படுவது உண்மையில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் பெருநிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரெஞ்சு இராணுவ, உளவுத்துறைகளுடன் ஆதரவு கொடுத்த ஒரு ஆட்சி மாற்றம்தான். அண்டைய எகிப்து மற்றும் துனிசிய எழுச்சிகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தி, “மனிதாபிமானப் பணி என்னும் போலிக்காரணத்தை முன்வைத்து, இச்சக்திகள் கடாபி ஆட்சியை அகற்றி இன்னும் வளைந்துகொடுக்கக் கூடிய வாடிக்கையாளர் ஆட்சியை திரிப்போலியில் நிறுவுவதற்காக காலனித்துவ போர் ஒன்றை தொடக்கின.

இப்படிஜனநாயகத்திற்கு உதவுதல் என்ற பேச்சுக்கள் இருந்தபோதிலும், உதவிகள் கொடுத்தபோதிலும், இச்சக்திகளும் அவை ஆதரவு கொடுக்கும் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் நலன்களும் இப்பொழுது லிபியாவின் எண்ணெய் இருப்புக்கள் புதிதாகத் தோண்டப்படுவதில் பங்கிற்குப் போட்டியிடுகின்றன இந்த இருப்புக்கள் ஆபிரிக்க கண்டத்திலேயே மிக அதிகம் ஆகும்.

ACOCO எண்ணெய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எழுச்சியாளர்களால் நேட்டோ ஆதரவுடன் தோற்றுவிக்கப்பட்டது திங்களன்று கடாபிக்குப் பிந்தைய ஆட்சி மேற்கத்தையச் சக்திகளின் நலனுக்காக மீண்டும் ஒப்பந்தங்களை அவற்றின் போட்டியாளர்களின் இழப்பில் செய்யும் என்று கூறினார்.

இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாட்டு நிறுவனங்களுடன் எங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றார் செய்தித்தொடர்பாளர் அப்டெல்ஜலில் மேயௌப். “ஆனால் ரஷ்யா, சீனா மற்றும் பிரேசிலுடன் சில அரசியல் பிரச்சினைகள் உள்ளன.” இப்பிந்தைய மூன்று நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுத் தீர்மான வலிமையைப் பயன்படுத்த இசைவு கொடுத்ததற்கு வாக்களிக்கவில்லை; மேலும் அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு எதிர்ப்பையும் தெரிவித்தன.

இந்த மூன்று நாடுகளும் லிபியாவில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன. அமெரிக்க-நேட்டோப் போருக்கு முன் லிபியாவில் சீனா 75 நிறுவனங்களைக் கொண்டு 36,000 தொழிலாளர்களை நியமித்து, 50 திட்டங்களில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ரஷ்ய நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களான Gazprom Neft, Tatneft உட்பட, நாட்டில் செயற்பாடுகளைக் கொண்டிருந்தன; பிரேசிலின் அரசாங்கத்திற்கு சொந்தமான எரிசக்திப் பெருநிறுவனம் பெட்ரோப்ராஸ் மற்றும் கட்டமைப்பு நிறுவனம் Odebrecht ஆகியவையும் பெரிய திட்டங்களை அங்கு கொண்டிருந்தன.

நாம் லிபியாவை முழுமையாக இழந்துவிட்டோம் என்று ரஷ்ய-லிபிய வணிகக் குழுவின் இயக்குனர் தலைவரான அரம் ஷெகுன்ட்ஸ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

எங்கள் நிறுவனங்கள் இங்கு பணிபுரிய பச்சை விளக்குக் கொடுக்கப்பட மாட்டாது. வேறுவிதமாக எவரேனும் நினைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்று பொருள். எங்கள் நிறுவனங்கள் அனைத்தையும் இழக்கும், ஏனெனில் நேட்டோ அவை லிபியாவில் பணிசெய்யாமல் தடுத்துவிடும் என்றார் அவர்.

இதற்கிடையில் முக்கிய ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குகளின் விலைகள் நேட்டோ அமர்த்தும் லிபிய ஆட்சியிடம் இருந்து மறு ஒப்பந்தங்கள் மூலம் பெரும் தொகையை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பில் மிக அதிகமாக உயர்ந்துவிட்டன. ENI என்னும் இத்தாலிய அரசாங்கம் தோற்றுவித்துள்ள சர்வதேச நிறுவனம் 7 சதவிகித உயர்வைக் கொண்டு மற்றவற்றிற்கு தலைமை தாங்குகிறது.

ENI பிரதிநிதி ஏற்கனவே லிபியாவை சென்றடைந்து நாட்டின் எண்ணெய் வளங்களின் மதிப்பீட்டு அளவுகளை மீள்தோரண்டப்படுவதற்கான திட்டங்களுக்காக சென்றுள்ளதாக இத்தாலியின் வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி கூறினார். போருக்கு முன் ENI லிபியாவில் இருந்த வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களில் அதிக செயற்பாடுகளைக் கொண்ட நிறுவனமாக இருந்தது. புதிய ஆட்சி நிறுவப்பட்டபின், இத்தாலிய நிறுவனங்களுக்குப்பெரும் வாய்ப்புக்கள் இருக்கும் என்று பிரட்டனி கணித்துள்ளார்.

1911 முதல் 1943 வரை லிபியா மீது மிருகத்தன காலனிதிதுவ ஆட்சியை இத்தாலி நடத்தியது. அந்நாட்டு மக்களில் பாதிப்பேர் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹூஸ்டனை  தளமாகக் கொண்ட மரத்தான் எண்ணெய் நிறுவனம் திங்களன்று தானும்எழுச்சியாளர்களுடன் லிபியாவின் சிர்ட்டேப் பகுதியிலுள்ள வஹா எண்ணெய் வயல்களில் பணிகளை தொடக்குவது பற்றிய பேச்சுக்களை நடத்துவதாகக் கூறியுள்ளது.

பிரிட்டிஷ் நாளேடு டெலிகிராப் திங்களன்றுடேவிட் காமரோன் மற்றும் ஜனாதிபதி சார்க்கோசியும் நேட்டோ வான் தாக்குதலுக்கு வெகுமதி பெறும் வகையில் ஆர்வம் கொண்டு பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய ஆட்சி சட்டம் ஒழுங்கை மீட்கவும் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கவும் உதவும் என்று தகவல் கொடுத்துள்ளது. இரு அரசாங்கங்களும் TNC உடன் உரையாடல் நடத்துகின்றன, இவை கட்டுமானத் திட்டங்கள் பற்றியவை, “கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஏலம் கேட்பதற்குத் தயாராக உள்ளன என்றும் செய்தித்தாள் கூறியுள்ளது.

லிபிய எண்ணெய் செல்வத்தை அடைவதற்கான போட்டி தொடங்குகிறது என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று அமெரிக்க நேட்டோமனிதாபிமானப் போர் பற்றிய வெளிப்படையான நியாயப்படுத்துதலை அளித்தது.

கேர்னல் கடாபி சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு பிரச்சினை கொடுக்கும் பங்காளியாகப் போனார்; அடிக்கடி கட்டணங்களையும் வரிகளையும் பிற கோரிக்கைகளையும் உயர்த்தினார். நேட்டோவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஒரு புதிய அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளுடன் தொடர்பில் எளிதான பங்காளியாக இருக்கும். தடையற்று சுதந்திரமாக எண்ணெய் நிறுவனங்கள் இருந்தால் லிபியாவில் அதிக எண்ணெயைக் கண்டறிவர்; கடாபி அரசாங்கம் நிறுவியிருந்த தடைகளின்போது அவற்றால் அவ்வளவு இயலவில்லை என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.