WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
NATO-backed forces move into Tripoli
நேட்டோ ஆதரவுபெற்ற படைகள் திரிப்போலியை சூழ்கின்றன
By Patrick Martin
22 August 2011
Back to
screen version
முயம்மர் கடாபியன் லிபிய ஆட்சி ஞாயிறு இரவு நேட்டோ ஆதரவு பெற்ற
மாற்றுக்காலத் தேசியக் குழுவின் தரைப்படைகள் மேற்கு,
தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து தலைநகரான திரிப்போலியில் நுழைந்த அளவில் சரிவின்
விளம்பில் நிற்பது போல் தோன்றுகிறது.
ஞாயிறு இரவு பொலிசும் கடாபி ஆட்சியின் படையினர்களும் ஓடிய நிலையில்,
திரிப்போலி புறநகர்ப் பகுதிகளிலிருந்து வந்துள்ள தொலைக்காட்சித் தகவல்கள் அங்கு
கடாபி-எதிர்ப்புச்
சக்திகளின் கட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது;
குறிப்பாக நகரத்தின் கிழக்குப் பகுதிகளில்.
அங்கு ஆட்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள்
இருந்தன.
நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்து போனார்கள்.
லிபிய இராணுவத்தின் பல பிரிவுகள் தங்கள் நிலையிலிருந்து போரிடாமல்
ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது;
இதில் லிபிய ஆட்சியாளரின் மகன் கமிஸின் கீழ் நீண்டகாலமாக இருக்கும் ஓர் உயர்
பிரிவான
32வது
பிரிகேடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் இராணுவப் பிரிவு,
திரிப்போலி மையப்பகுதி மற்றும் முயம்மர் கடாபியின் சொந்தப் பாதுகாப்பிற்கு
பொறுப்பைக் கொண்டிருந்தது ஏற்கனவே சரணடைந்து விட்டது என்று அசோசியேட்டட் பிரஸ்
தெரிவிக்கிறது.
எதிர்ப்புப் படைகள் க்ரீன் சதுக்கத்தை
(திரிப்போலியின்
மையம் மற்றும் ஆட்சியின் அடையாள வகையில் மையத்தானம்)
அடைந்துவிட்டதாக அதே அறிக்கை கூறியுள்ளது;
இங்கு கடாபியின் ஆதரவாளர்கள் கடந்த ஐந்து மாதங்களாக நேட்டோ குண்டுத் தாக்குதலையும்
மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தனர்.
Seif al-Islam
உட்பட
கடாபியின் இரு மகன்களை பிடித்துள்ளதாக
TNC
அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசியலில் மிகச் செல்வாக்கு படைத்தவரும் ஆட்சியின் முக்கிய பொதுச் செய்தித்
தொடர்பாளராகவும் உள்நாட்டுப் போர்க்காலம்
6
மாதம்
முழுவதும் இருந்த அவரும் அந்த இருவரில் ஒருவராவார்.
அதிகாரத்தில்
42
ஆண்டுகளாக இருந்த கடாபியின் ஆட்சி திரிப்போலிக்கு
30
மைல்கள்
மேற்கேயுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நகரான ஜவியாவீன் வீழ்ச்சிக்கு
48
மணி
நேரத்திற்குள்ளாகவே சரிந்து விட்டது போல் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக ஜவியா ஒரு போர்க்களமாக இருந்தது;
எதிர்ப்புப் படைகள் அதற்குள் மேற்கு,
தெற்கில் இருந்து நுழைந்தன;
அவற்றிற்கு நேட்டோ போர் விமானங்களின் தீவிரத் தாக்குதல் ஆதரவாக இருந்தது.
நகரத்தின் மையச் சதுக்கத்தைக் கைப்பற்றுவதற்கான முக்கிய இருநாள்
போர் வான்தாக்குதல்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது;
நகரத்தின் ஒரு மிகப் பெரிய ஹோட்டலின் மேல் தளங்களில் இருந்த ஆட்சிச் சார்புடைய
சக்திகளின் கடைசிக் கோட்டையையும் அது தகர்த்து எரித்தது.
ஜவியாவின் வீழ்ச்சி திரிப்போலிக்கு பண்டங்கள் மேற்கிலிருந்து வருவதை தடுத்தது;
அரசாங்கத்திற்கு எஞ்சியிருந்த கடைசி முக்கிய எரிபொருள் ஆதாரத்தின் இழப்பையும்
ஏற்படுத்தியது;
இது அதன் டாங்குங்கள் மற்றும் இராணுவ வாகனங்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது.
TNC
படைகள்
ஜவியா மீது தங்கள் கட்டுப்பாட்டை சனிக்கிழமையன்று ஒருங்கிணைத்து,
அன்றே திரிப்போலிக்கு கிழக்கே
85
மைல்
தூரத்திலுள்ள ஜிலிடனிலும் புகுந்தது;
அங்கு துருப்புக்கள் லிபியாவின் மூன்றாவது பெரிய நகரமான மிஸ்ரடாவில் இருந்து
முன்னேறி,
பெரும் எதிர்ப்பைக் கடந்தன;
திரிப்போலிக்கு
420
மைல்
தென்கிழக்கேயுள்ள மற்றொரு எண்ணெய்ச் சுத்திகரிப்பு நகரமான
ப்ரேகாவில் கடாபி ஆதரவுத் துருப்புக்கள் வெளியேற்றப்பட்டன.
இப்போர்கள் ஒவ்வொன்றிலும் நேட்டோ படைகள் தரையிலும் வானிலும்
முக்கியப் பங்கைக் கொண்டிருந்தன;
லிபிய மக்கள் பெரிய அளவில் தொடர்பை இதில் கொண்டிருக்கவில்லை.
கடாபி ஆட்சியின் உட்சிதைவு இறுதிச் சிதைவிற்கு முன்னிழல் ஆயிற்று.
முன்னாள் உயர்மட்ட உதவியாளர்கள் அல்லது அதிகாரிகள் கடந்த வாரத்தில் நாட்டை விட்டு
ஓடிவிட்டனர்.
உள்துறை மந்திரி நசர் அல் மப்ரூக் அப்துல்லா கெய்ரோவிற்குத் தன் குடும்பத்துடன்
ஓடிவிட்டார்.
முன்னாள் துணைப் பிரதம மந்திரி அப்டெல் சலாம் ஜலௌட் எதிர்ப்பாளர்கள்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியான மேற்கு மலைகளுக்குச் சென்றுவிட்டார்;
ஆட்சியின் உயர்மட்ட எண்ணெய்த்துறை அதிகாரி ஒம்ரான் அபுக்ரா துனிசியாவிற்குத்
தப்பிச் சென்றுவிட்டார்.
கடாபி ஆட்சியின் திடீர்ச்சரிவு நேட்டோ குண்டுத் தாக்குதலின்
விளைவினால் அதிகம் நேர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது;
இவற்றில்
20,000
முறை
விமானங்கள் பறந்ததும்,
7,000
முறை
தாக்குதல்கள் தரை இலக்குகள் மீது நடத்தப்பட்டதும் அடங்கும்.
செய்தி ஊடகத் தகவல்கள் வான் தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களில் மிகவும்
அதிகமாகவிட்டதாக தெரிவிக்கின்றன;
இந்நடவடிக்கைகள் மிக நெருக்கமாக எதிர்ப்புத் தரைப்படைகளின் தாக்குதல்களுடன்
ஒருங்கிணைந்து நின்றன.
Los Angeles Times
ல் வந்துள்ள ஒரு கருத்துப்படி,
லிபியப் போரில் அமெரிக்கா சற்றே ஒதுங்கியுள்ளது என்ற கூற்று ஒருபுறம்
இருந்தபோதிலும்,
“பென்டகன்
இப்பொழுது வான் தாக்குதலில் இரண்டாவது பெரிய இடத்தைக் கொண்டுள்ளது,
விமானத் தாக்குதல்களில்
16
சதவிகிதத்திற்கும் மேலானவை அமெரிக்காவால் நடத்தப்பட்டவையே”,
பிரான்ஸ்தான் கூடுதலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
நோர்வே போன்ற சிறிய ஐரோப்பிய நேட்டோ நாடுகள் தங்கள் குண்டுக்
கிடங்குகளைத் தீர்த்து,
போரில் இருந்து விலகியவுடன் அந்த இடங்களை இட்டு நிரப்புமாறு எவ்வித பகிரங்க
அறிவிப்பும் இல்லாமல்,
ஒபாமா நிர்வாகம் அமெரிக்கப்
படைகளுக்கு இசைவு கொடுத்துள்ளது.
கணக்கிலடங்கா செய்தி ஊடகத் தகவல்கள்,
குறிப்பாக பிரிட்டிஷ் ஊடகம்,
பிரிட்டஷ் போர் விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகளின் பங்களிப்பை உயர்த்திக்
காட்டும் நோக்கமுடையது,
கடாபி ஆட்சியின் சரிவு,
மக்களின் எழுச்சியால் என்று இல்லாமல் ஏகாதிபத்தியத் தலையீட்டின் விளைவு
என்பதைத்தான் உறுதிபடுத்துகின்றன.
“இப்போரின்
போக்கை மாற்றியதில் பெரும் பங்கை,
எழுச்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட சர்வதேச ஆதரவு கொண்டுள்ளது”
என்று சனிக்கிழமை
Independent
எழுதியது.
திரிப்போலிக்குத் தென்மேற்கு ஜின்டனில் நடந்த நிகழ்வுகள் பற்றிச் செய்தித்தாள்
குறிப்பிடுகிறது:
இங்கு அதன் நிருபர்
“மேற்கத்தைய
நபர்கள் குழு ஒன்று போர் உடை அணியாமல் கவனத்துடன் ஆயுதம் ஏந்தியிருந்ததை
எதிர்கொண்டார்.
அவர்கள் என்னுடன் பேசுவதில் தயக்கம் காட்டினர்,
தாங்கள் யார் என்று கூறவில்லை.
எழுச்சிப் போராளிகள் கருத்துப்படி இந்த
“ஆலோசகர்களின்”
திட்டம் செயல்படுத்தப்பட்டதால்தான் களத்தில் தற்போதைய வெற்றி.”
ஞாயிறன்று
இன்டிபென்டென்ட்டில்
வெளியிடப்பட்ட இரண்டாவது தகவல் கூறியது:
“பல
மாதங்கள் நேட்டோவின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த ஆட்சியின் படைகள்
எழுச்சியாளர்களைக் கடந்து வெளியுலகுடன் தொடர்பை மீண்டும் நிறுவும் திறனற்றவர்களாக
உள்ளனர்.
எழுச்சியாளர்கள் இன்னும் அதிக திறனைக் கொண்டிருக்கவில்லை,
ஆனால் பயிற்சி மற்றும் கணிசமான உதவியை முன்னாள் மேற்கத்தைய ஒப்பந்தப்
படைகளிலிருந்து பெறுகின்றனர்;
அவர்கள்தான் இப்பொழுது நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றனர்.”
ஜிலிடன் போரில் இருந்து ஒரு நிகழ்வை கார்டியன் கூறியுள்ளது;
இதன்படி டஜன் கணக்கான எழுச்சியாளர் துருப்புக்கள் கடும் மோதலில் கொல்லப்பட்டனர்;
அப்பொழுது ஒரு நேட்டோ போர் விமானம் பெரும் சேதம் விளைவித்துக் கொண்டிருந்த
T-72
டாங்கு
ஒன்றை அழித்தது.
இச்செய்தித்தாள் எழுச்சி வீரர் ஒருவரை மேற்கோளிட்டு இதைத் தெரிவித்தது.
“வான்தாக்குதல்
ஒரு பிரிட்டிஷ் முன்னணி வான் கட்டுப்பாட்டு அதிகாரியால் நடத்தப்பட்டது,
அவர் சமீபத்திய வாரங்களில் மிஸ்ரடாவிற்கு மேற்கே முன்னணியில் அதிகம் தென்படுபவர்.”
அசோசியேட்டட் பிரஸ் எழுதியது:
“சனிக்கிழமையன்று
லிபிய எழுச்சியாளர்கள் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து திரிப்போலியில் தங்கள் முதல்
தாக்குதலை தொடங்கினர் துப்பாக்கிச் சண்டைகளும் பீரங்கி முழக்கங்களும் நகரை அதிர
வைத்தன.
நேட்டோ விமானங்களும் மிக அதிக தாக்குதல்களை இரவில் நடத்தின,
நகரம் முழுவதும் பெரும் வெடிப்புக்களின் ஓசைகள் எதிரொலித்தன.”
ஞாயிறன்று
நியூ
யோர்க்
டைம்ஸ்
கூறியது:
“நேட்டோத்
துருப்புக்கள் எழுச்சியாளர்களுக்கு நாள் முழுவதும் நெருக்கமான வான் ஆதரவைக்
கொடுத்தன;
பல தாக்குதல்கள் கூட்டணி விமானங்களால் நடத்தப்பட்டன;
அவை திரிப்போலிக்கு ஜவியாவிலிருந்து செல்லும் பாதையை பாதுகாப்பாக்கிக் கொடுத்தன.
மேற்கில் இருக்கும் எழுச்சியாளர்களின் தலைவர்கள் ஞாயிறன்று கடாபி விசுவாசிகள்
மீண்டும் ஜவியாவைக் கைப்பற்ற விடாமல் பக்கவாட்டில் இருந்து நகரத்தின் மீது
தாக்கினர்.”
பாதுகாப்பு குறித்து பகுத்து ஆராயும் நிறுவனமான
Stratfor,
அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமான பிணைப்புக்களை உடையது,
கூறியது:
“ஜவியாவில்
இருந்து முன்னேறும் எழுச்சிப்படைகள் பிறர் உதவியின்றிப் போராடுகின்றனர் என்பது
முடியாத காரியம்.
பங்கு பெறும் நேட்டோ நாடுகளில் இருந்து சிறப்பு நடவடிக்கைகளுக்கான அடையாளங்களைக்
காண்பது மிகவும் முக்கியமாகும்;
அவர்கள்தான் ஓசையின்றித் தாக்குதலுக்கு வழிநடத்தி கடாபியைக் கண்டுபிடித்து,
கைப்பற்றுவதற்கு நடவடிக்கைகளை செய்கின்றனர்.”
சிறப்புப் படைகளின் செயற்பாட்டு வீரர்களின் உதவி
“எழுச்சியாளர்களுக்கு
மிகவும் முக்கியமாகும்,
குறிப்பாக நெருக்கமான வான் ஆதரவு என வரும்போது”
என்று
Stratfor
விளக்கம் கொடுத்துள்ளது.
எழுச்சியாளர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கும் அவர்களுடைய நேட்டோ
தளபதிகளுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பு பற்றிய மிகத் தெளிவான அடையாளம்
திரிப்போலிக்கு சற்றே கிழக்கில் கடலோர மிஸ்ரடாவிலிருந்து பல நூறு துருப்புக்கள்
தரையிறங்கியதுதான்;
இந்த நடவடிக்கை நேட்டோ கடற்படை,
விமானப் படையினரால் கண்காணிக்கப்பட்டது;
லிபியத் தலைநகரை அணுகக் கூடிய அனைத்து கடல் பாதைகள் மீதும் அவை கட்டுப்பாட்டைக்
கொண்டுள்ளன.
வலதுசாரி முதலாளித்துவ கடாபி ஆட்சிக்குப் பதிலாக வரக்கூடியது
“ஜனநாயகம்”
அல்ல;
மாறாக ஒரு பிற்போக்குத்தனக் கைக்கூலி அரசாங்கம்,
நாட்டை மீண்டும் அரைக் காலனியாக மாற்றுவதற்காக லிபியா மீது போர் தொடுத்த
ஏகாதிபத்திய சக்திகளைத்தான் அது முற்றிலும் நம்பியிருக்கும்.
அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் கடந்த தசாப்தத்தில் கடாபியுடன்
தாங்கள் கொண்டிருந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டதற்குக் காரணம் நீண்டகால ஆட்சியாளர்
தன்
ஜனரஞ்சகக் கொள்கைகளைத் துறந்து ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் செய்து கொண்டதால்தான்.
ஆனால் பெரும் எண்ணெய் நிறுவனங்களின் நலன்கள் உண்மையில் கடாபி பதவியில் இருக்கும்
வரை பாதுகாப்பாக இராது என்று அடித்தளத்தில் கவலைகள் இருந்தன.
பெப்ருவரி மாதம் பெங்காசியில் ஆரம்ப எழுச்சியை அடுத்து—அங்குதான்
மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்கள்,
குறிப்பாக பிரெஞ்சு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன—அமெரிக்கா,
பிரான்ஸ்,
மற்றும் பிரிட்டன் விரைவில் செயல்பட்டு ஒரு மாற்றீட்டு ஆட்சியை அமைத்து,
இருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவப் படைகள் ஒன்றைத் திரட்டின.
கடாபியின் கரங்களிலிருந்து லிபிய மக்களை ஒரு இரத்தக்களறியில்
இருந்து காப்பாற்றுதல் என்பது போலிக் காரணமாகக் கூறப்பட்டாலும்,
நேட்டோ குண்டுவீச்சினால் இன்னும் அதிக லிபிய மக்கள்தான் கொல்லப்பட்டனர்;
அவர்களில் பலர் இராணுவத்தில் கட்டாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்;
அதைத்தவிர,
நூற்றுக்கணக்கான,
ஏன் ஆயிரக்கணக்கான குடிமக்களும் அடங்குவர் எனலாம்.
நேட்டோ கூற்றின்படி,
குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு,
கிட்டத்தட்ட லிபியாவின் படைகளில் பாதிப்பேர்
“நிலைகுலைந்துள்ளனர்”—இராணுவச்
சொல்லாட்சிப்படி கொல்லப்பட்டனர் அல்லது மோசமாகக் காயம் அடைந்துள்ளனர்.
இது இறப்பு எண்ணிக்கையை பல ஆயிரங்கள் உயர்தல் என்பதைக் காட்டும்;
ஆனால் நேட்டோ மற்றும் கடாபி ஆட்சி இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக லிபிய இராணுவ
இறப்புக்கள் எவ்வளவு என்பதைக் கூற மறுக்கின்றன.
கடாபிக்குப் பிந்தைய திரிப்போலி ஏகாதிபத்திய சக்திகள் மற்றும்
அவற்றின் வெகு நெருக்கமான அரபு நாடுகளில் உள்ள கூலிகள் என்ற வெளியாட்களின்
கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
“இடைக்காலப்
படை”
என்ற பெயரில் கிட்டத்தட்ட
1,000
முறையான
துருப்பினர் கட்டார்,
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் ஜோர்டானில் இருந்து லிபியத் தலைநகருக்கு
ஒழுங்கை நிலைநாட்ட அனுப்பப்படுவர்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கருத்துக்களை
நியூ
யோர்க்
டைம்ஸ்
மேற்கோளிட்டுள்ளது;
அவர்
“அமெரிக்க
இராணுவ மற்றும் பிற அரசாங்க ஆயுத வல்லுனர்கள் கடாபி ஆட்சி விழுந்தவுடன்
லிபியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர்;
அவர்கள் லிபிய எழுச்சி மற்றும் பிற சர்வதேசப் படைகள் ஆயுதங்களைப் பாதுகாக்க உதவுவர்.”
இது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவினால் உறுதி
செய்யப்பட்டது.
அவர் இராணுவச் செய்தித்தாள்
Stars & Stripes
இடம் அமெரிக்க அதிகாரிகள் சிறப்புப் பிரிவினராக இருப்பரே ஒழிய முறையான,
வாடிக்கைத் துருப்புக்களாக இருக்க மாட்டார்கள்.
“அரச
அலுவலகம் மற்றும் பிற நேட்டோ அரசாங்கங்களின் செயல்தான் ராஜதந்திர நெறிமுறைகளை
வகைப்படுத்துதலாக இருக்கும்
என்று பனேட்டா கூறினார்.”
திரிப்போலியில் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏற்படும்
என்பதைக் காட்டும் தயாரிப்புக்கள் பற்றி தீய அடையாளங்கள் உள்ளன.
ஞாயிறன்று வாஷில்டன்
போஸ்ட்,
லிபிய
“எழுச்சியாளர்களின்”
“திரிப்போலி
பிரிகேட்”
“பேர்சிய
வளைகுடா கட்டார் எமிரேட்டில் இருந்து வந்துள்ள சிறப்புப் படைகளிடம் இருந்து பல
மாதங்கள் பயிற்சி பெற்றது”
என எழுதியுள்ளது.
இந்தப் பிரிகேடின் தளபதி,
செய்தித்தாளிடம்
“உயர்மட்ட
கடாபி விசுவாசிகள் நூறுபேரைக் குற்றவாளிகள்,
தொந்தரவு தரும் திறன் உடையவர்கள்”
என்று விவரித்து
“நூறு
பேருக்கும் அதிகமானவர்களைக் கைது செய்யும்”
திட்டங்களைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
ஒரு
“எழுச்சித்
தலைவர்”
ஹுசம் நஜ்ஜைரை ராய்ட்டர்ஸ் பேட்டி கண்டது;
“எழுச்சியாளர்கள்
திரிப்போலித் தலைநகரின் மீது கட்டுப்பாடு கொள்ள முற்படும்போது,
ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயல்வரே ஒழிய,
முயம்மர் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் படைகளின் அச்சுறுத்தலை சமாளிக்க
மாட்டார்கள் என்ற வாய்ப்பு பற்றிக் கவலைப்படுவதாக”
அவர் கூறினார் எனத் தெரிவித்துள்ளது.
திரிப்போலிக்குள் போராளிகள் நுழைவது
“அவர்களுடைய
உட்பிளவுகள்,
இன,
பழங்குடிப் பிரிவுகள் ஆகியவற்றினால் அழுத்தம் கொண்டுள்ளது.
உதாரணமாக மேற்கத்தைய மலைகளில் இருந்து பெருகிய எண்ணிக்கையில் வரும் போராளிகள்,
நீண்ட,
தடித்த தாடிகளைக் கொண்டுள்ளனர்;
இது இஸ்லாமியர்களின் அடையாள முத்திரை ஆகும்;
இவர்கள் ஒரு புதிய லிபியா மேற்கத்தைய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொள்வதை
நிராகரிக்கக்கூடும்”
என்று ராய்ட்டர்ஸ் விளக்கியுள்ளது.
ஒரு தேசிய அரசாக உள்ள அனுபவம் லிபியாவிற்கு
60
ஆண்டுகளாகத்தான் உள்ளது;
ஏனெனில் பல நூற்றாண்டுகள் ஒட்டோமன் பேரரசினால் ஆளப்பட்ட மூன்று மாநிலங்களைக் கொண்டு
இது உருவாக்கப்பட்டது;
இதன் பின் இத்தாலிய காலனியாக மூன்று தசாப்தங்கள் மிருகத்தனமாக அடக்கப்பட்டது;
அந்த ஆட்சி பாதிக்கும் மேலான லிபிய மக்களைப் படுகொலை செய்தது.
அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த முடியாட்சி
1969ம்
ஆண்டு கடாபியின் தலைமையில் தீவிரத்தன அரபு தேசிய அதிகாரிகளால் வீழ்த்தப்பட்டது.
அடுத்த நான்கு தசாப்தங்களில் அவர் லிபியா மீதான கட்டுப்பாட்டை பல இனவழி,
பழங்குடி,
மதக் குழுக்கள் இவற்றின்மீது சமநிலை நிலைமையைக் கொண்டு கட்டுப்படுத்தினார்;
போட்டியாளர்களை விலைகொடுத்து வாங்கவும் சமூகக் குறைபாடுகளைச் சமாதானப்படுத்தவும்
நாட்டின் எண்ணெய் செல்வத்தைப் பயன்படுத்தினார்.
கடாபி ஆட்சியை ஏகாதிபத்திய ஆதரவுடைய சக்திகள் அழிப்பது,
அடித்தளத்திலுள்ள இந்த விரோதங்களின் வெடிப்பிற்கு அரங்கு அமைக்கிறது;
இது லிபிய மக்களுக்குக் கொடூரமான விளைவுகளைக் கொடுக்கும்.
லிபியப் பகுதி ஒரு தளமாகவும்,
ஏகாதிபத்திய தாக்குதல்கள் துனிசியா,
எகிப்து மற்றும் வட ஆபிரிக்க,
மத்திய கிழக்கு முழுவதும் மக்கள் இயக்கங்கள் மீது ஏகாதிபத்தியத் தாக்குதல்களை
அனுப்பும் தளமாக மாற்றும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது. |