World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Youth sentenced to years in jail for posting Facebook notices during British riots

பிரிட்டிஷ் கலகங்களின்போது பேஸ்புக்கில் அறிவிப்புக்களை வெளியிட்டதற்கு இளைஞர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது

By Robert Stevens
18 August 2011

Back to screen version

பிரிட்டனில் தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கடும் நடவடிக்கைகள் சிறிதும் குறைவின்றித் தொடர்கின்றன. செவ்வாயன்று இங்கிலாந்தின் அராங்க நீதிமன்ற நீதிபதிகள் பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டதற்காக இரு இளைஞர்களுக்கு நீண்டகால சிறைத் தண்டனையை வழங்கினர்.

20 வயது Jordan Blackshaw 22 வயதான Sutcliffe-Keenan ஆகியோர் எந்த கலகங்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் செஸ்டர் அரசாங்க நீதிமன்றம்தீவிர குற்றச் சட்டம் 2007ன் 44, 46வது பிரிவுகளின் கீழ், தண்டனைக்குரிய குற்றத்திற்கு மற்றவர்களை உதவும் வகையில் வேண்டும் என்றே ஊக்கும் கொடுத்ததற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டனர்.

Blackshaw ஒரு பேஸ்புக்நிகழ்வை”, “நோர்த்விச் சிறுநகரத்தைச் சிதைத்து உடையுங்கள் என்று அழைக்கப்பட்டதை நிறுவிய பின்னர் கைது செய்யப்பட்டார். Blackshaw வின் நிகழ்வு மக்களைக் கலகம் செய்வதற்காக மக்டோனல்ட் உணவு விடுதிக்கு முன் கூடுமாறு வேண்டியது என்று நீதிமன்றம் கூறியது.

CPS எனப்படும் அரசாங்கக் குற்றவியல் துறை நிகழ்வு பற்றிய முன்னறிவிப்பு நோர்விச்சில் பீதி அலையைத் தூண்டியது என்று கூறியது; சிறுநகரில் கலகங்கள் இல்லை என்றாலும், அவர்கள் கூற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் இவ்வாறு நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் பேஸ்புக் தகவல்களைப் பின்பற்றி Blackshaw வின் கருத்துக்களைப் பார்த்து அந்த உணவு விடுதியை அடைந்து அவரைக் கைது செய்தனர் என்று தெரியவந்துள்ளது.

வாரிங்கடன் கலகங்கள் என்ற பேஸ்புக் பக்கத்தை Sutcliffe-Keenan ஆகஸ்ட் 9ல் நிறுவினார். இப்பக்கமும்மிக உண்மையான பீதியைத் தோற்றுவித்தது எனக் கூறப்பட்டது. அந்தப் பக்கத்தை ஒட்டி எவ்வித தொந்திரவுகளும் ஏற்படவில்லை என்றாலும் இவ்வாதம் முன்வைக்கப்பட்டது. Sutcliffe-Keenan 24 மணி நேரத்திற்குள் தானே அப்பக்கத்தை அகற்றிவிட்டார்.

Blackshaw மற்றும் Sutcliffe-Keenan ஆகியோருக்குத் தண்டனை வழங்குகையில், நீதிபதி எல்கன் எட்வர்ட்ஸ் அரசாங்கம் தூண்டிவிட்டுள்ளகுற்றத்தன்மைக்கு எதிரான வலதுசாரி வெறித்தனத்தை பயன்படுத்திக் கொண்டார்; அனைத்துப் பாராளுமன்ற கட்சிகள், பொலிஸ் மற்றும் செய்தி ஊடகம் ஆகியவை இந்த வெறித்தனத்தைப் பரப்பியுள்ளன. Blackshaw “ஒரு தீயவர் என்று குறிப்பிட்ட எட்வார்ட்ஸ், “நாட்டை ஒரு கூட்டுக் கிறுக்குத்தனம் பிடியில் கொண்டபோது இது நடந்தது. உங்கள் நடத்தை மிக இழிவானது, பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு இரத்தத்தை உறைய வைக்கிறது.” என்றும் சேர்த்துக் கொண்டார்.

Blackshaw மற்றும் Sutcliffe-Keenan ஆகியோரின் விதி எந்த அளவிற்கு அரசாங்கம், நீதித்துறை மற்றும் பொலிஸ் ஜனநாயக நெறிகளை ஒதுக்கியுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருவரும் ஆகஸ்ட் 9 அன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது; ஒரே வாரத்திற்குள் பழிவாங்கும் தன்மையுடைய தண்டனைகள், முறையான வழிவகைக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல், வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 6ம் திகதி கலவரங்கள் தொடங்கியதில் இருந்து 2,770க்கும் மேற்பட்டவர்கள் முன்னோடியில்லாத வகையில் பொலிசின் வலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,200 பேருக்கும் மேலானவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றுள் 64% காவலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின்தீவிர குற்றங்களுக்காக காவல் உத்திரவு விகிதம் குற்றவியல் நீதிமன்றங்களில் 10 சதவிகிதம் என்று இருந்தது.

லண்டனில் மட்டும் 1,733 கைதுகள் செய்யப்பட்டுள்ளன; அவற்றுள் 11,005 பேர்மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரும் சிறு குற்றங்களுக்காக 6 மாத காலச் சிறைவாசம் கொடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் அரசாங்க நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட உள்ளன; இவை கலகத்தில் ஈடுபட்டதற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மான்செஸ்டர் நகரத்தில் கலகத்தின்போது 22வயது நபர் ஒருவர் இரு கோப்பை ஐஸ்க்ரீமும் ஒரு கோன் ஐஸைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டார். “நான் ஒரு பொதுக் கடைமையைச் செய்யவேண்டும், இத்தகைய விஷயங்களை விரைவாகவும் கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதி எச்சரித்தபின் அந்நபர் அரசாங்க நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்கள்சுதந்திரமான நீதித்துறை என்னும் கருத்தை ஏளனத்திற்கு உட்படுத்துகின்றன. மான்செஸ்டர் அரசாங்க நீதிமன்றத்தில் நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை 16 மாதங்களில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கியபின், நீதிபதி ஆண்ட்ரூ கில்பேர்ட் QC, “ஆகஸ்ட் 9 இரவு நடந்த தாக்குதல்கள் சாதாரணமான குற்றப் பின்னணியில் இருந்து முழுமையாக அவர்களை ஒதுக்கி விடுகிறது….. அக்காரணங்களை ஒட்டி, குறிப்பிட்ட குற்றங்களுக்காக வாடிக்கையாக உள்ள வழிகாட்டி தண்டனை நெறிமுறைகள் தற்போதைய வழக்கில் குறைந்த கனத்தைக் கொண்டவை என்று நான் கருதுவதால், அவற்றில் இருந்து விலகித் தண்டனை அளிக்கிறேன் என்றார்.

அவர் வழங்கிய தண்டனைகளால் பாதிக்கப்பட்ட இருவர் எதையும் திருடவில்லை ஒருவர் திருட்டுப் பொருளைக் கையாண்டதற்காகவும் மற்றவர்கண்டு எடுத்தல் என்ற திருட்டை செய்ததற்காகவும் தண்டனை பெற்றுள்ளனர்.

கலகத் தலைவர்கள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் தண்டனை, கடைகளைத் திருடுவதற்காகத் தாக்கி நுழைந்தவர்கள் 4 முதல் 7 ஆண்டுகள், தீ வைத்தவர்கள் மூன்றில் இருந்து 7 ஆண்டுகள் என்று பட்டியலிட்டுள்ளார்; இத்திருட்டுப் பொருட்கள் சாலையில் எறியப்பட்டிருந்தன, அவற்றை எடுத்துக் கொண்டோம் என்று கூறியவர்கள்கூட நான்கு ஆண்டுகள் வரை தண்டனை பெறவேண்டும் என்ற அளவுகோல் கணக்கின்படி, கில்பேர்ட் தண்டனையளித்துள்ளார் என்று Daily Mail குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய தண்டனைகள் அரசியல் தன்மை உடையவை என்பது வெளிப்படை. இவை அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வழங்கப்படுகின்றன; இவற்றின் நோக்கம் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் மிரட்டுவதாகும்.

லண்டனின் Camberwell Green குற்றவியல் நீதிமன்றங்கள் தொகுப்பின் தலைவரான Novello Noades கூறினார்: “கலகத்தில் தொடர்புடைய எவர் பற்றியும் நாம் கொடுத்துள்ள [அரசாங்கத்தின் குற்றவியில் நீதிமன்றங்கள், ஆட்சித்துறைக்குழுக்கள் பணி ஆகியவற்றில் இருந்து] உத்தரவுக் குறிப்பு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும்.”

மூன்று பேரின் தந்தைக்குச் 6மாத சிறைத் தண்டனை அளித்தபோது Noades இக்கருத்தைத் தெரிவித்தார். தன் வீட்டிற்கு அருகே இருந்த குப்பைத் தொட்டியில் காணப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இந்நபர் பார்த்தார் என்றாலும்கூட இச்சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் தான்உத்தரவுக் குறிப்பு என்னும் பொருளில் சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றார்.

செவ்வாயன்று இடைக்கால மெட்ரொபொலிட்டன் போலிஸ் ஆணையர் டிம் கோட்வின் பாராளுமன்றத்தின் உள்துறைக் குழுவிடம் தானும் மற்ற மூத்த அதிகாரிகளும் சில காலத்திற்கு ட்விட்டரை மூடிவிடுதல் பற்றி விவாதித்ததாக கூறினார்.

அதை மூடிவிடச் சட்டபூர்வ அதிகாரம் உள்ளதா என நான் சிந்தித்தேன். சட்டப்பூர்வச் செயல் என்பது வினாவிற்கு உரியது.” ஆயினும்கூட சமூகச் செய்தியனுப்புதலை மூடுதல் என்பதுநம் விசாரணை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக நாம் தொடர வேண்டியது ஆகும்.” என்று கோட்வின் கூறினார்.

பொலிஸ் அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை விவாதித்தனர் என்னும் உண்மை பாராளுமன்றக் குழுவிடம் இருந்து சிறு அக்கறையைக் கூட ஏற்படுத்தவில்லை. குழுவின் தலைவரான தொழிற் கட்சி எம்.பி.கீத் வாஸ் சமூகத் தகவல் ஊடகம்மக்களை குறுகிய காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கலகம் செய்யவும் அனுமதிக்கிறது என்றார். “சமூகத் தகவல் ஊடகத் தளங்களை மூட வேண்டும், குறிப்பிட்ட வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பொலிஸ் ஆணையிடும் அதிகாரம் வழங்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

BBM எனப்படும் பிளாக் பெர்ரி தகவல் முறையை பொலிசார் ஊடுருவி கலகங்களின் முதல் நாளன்று கைதுசெய்யப்பட்டவர்களின் தொலைபேசிகளை ஆராய்ந்தனர் என்ற அறிக்கைகள் வெளிப்பட்டுள்ளன. கார்டியன் கருத்துப்படி, “பொலிசாரால் கைப்பற்றப்பட்ட கைபேசிகளில் இருந்து தகவல்களைத் திரட்டி BBM, டிவிட்டர் ஆகியவற்றின்மீது நேரடிக் கண்காணிப்பை மேற்கொண்டனர்.”

ஆகஸ்ட் 6 கலகங்கள் தொடங்கிய உடனேயே பொலிசார் நன்கு திட்டமிட்ட செயற்பாட்டை மேற்கோண்டனர் என்பதைத்தான் அனைத்தும் சுட்டிக் காட்டுகின்றன. ஆகஸ்ட் 4ம் திகதி பொலிஸ் ஆயுதமேந்திய அதிகாரிகள் 29 வயது மார்க் டக்கனை இரு தோட்டாக்களைச் செலுத்தி சுட்டுக் கொன்றது பற்றிய அமைதியான எதிர்ப்பின்மீது பொலிஸ் தாக்குதல் நடந்ததுதான் பதட்டங்களைத் தூண்டியது.

M15 உளவுத்துறைப் பணியையும் அரசாங்கம் பயன்படுத்தியது; அதேபோல் மிகப் பெரிய ஒற்றுக்கேட்கும் CGHQ எனப்படும் தேசிய பாதுகாப்பு மையத்தையும் மின்னணுக் கருவிகளைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டது. M15 உத்தியோகபூர்வமாக ஒற்றாடல், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து தேசியப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பணியைக் கொண்டுள்ளது; இதில்பேரழிவு ஆயுதங்கள் பற்றியும் அடங்கும். தொழிலாள வர்க்க இளைஞர்கள் இப்பொழுது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படுவது பிரிட்டனில் வர்க்க உறவுகளின் தீவிர நிலையை வெளிப்படுத்துகிறது.

Blackshaw மற்றும் Sutcliffe-Keenan ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகளைமிக நன்று என்று பிரதம மந்திரி டேவிட் காமரோன் பாராட்டியுள்ளார்.

நம் தெருக்களில் நடைபெற்றவை முற்றிலும் இழிந்தவை; அது தவறு, பொறுத்துக் கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலைக் கொடுக்கத்தான் குற்றவியல் நீதிமுறை செய்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

Blackshaw மற்றும் Sutcliffe-Keenan ஆகியோர்நம் தெருக்களில் ஏதும் செய்யவில்லை. பிரிட்டனின் ஆளும் உயரடுக்கிற்கு இது பொருட்டல்ல; கலகங்களைப் பயன்படுத்தி சமூகச்செய்தி இணையங்களை தணிக்கை செய்வதில் அவை ஈடுப்ட்டுள்ளன.

இத்தகைய பாசாங்குத்னம் மற்றும் இரட்டைத் நிலைப்பாடு திமிர்த்தனமானவை. டிவிட்டரும் அதேபோன்ற தளங்களும் மற்ற நாடுகளில் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாக உள்ளன எனக் கருதப்படும் அரசாங்கங்களுக்கு எதிராக ஆர்ப்பரிக்க பயன்படுத்தப்படுகையில், (ஈரான் போன்றவற்றில்), பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தி ஊடகமும் புதிய தொடர்புத்துறைக் கருவிகளின் சக்தியைப் பாராட்டி அவை பயன்படுத்துவதை நசுக்கும் முயற்சிகளைக் கண்டித்தன. ஆனால் அதே தளங்கள் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆகியோர் தாய்நாட்டில் உள்ள அராசங்கத்திற்கு எதிரான விரோதப் போக்கை வெளிப்படுத்துகறையில், அவை உடனடியாக அடக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றன.