சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe’s economic crisis spins out of control

ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

Peter Schwarz
20 August 2011

use this version to print | Send feedback

உலகப் பங்குச் சந்தைகள் மற்றும் நிதியச் சந்தைகளின் நெருக்கடி அதிகரித்த முறையில் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. அரசாங்கங்கள் தங்கள் செல்வாக்கிற்கு உட்படுத்த முடியாத போக்குகளால் திணறுகின்றன.

செவ்வாயன்று உலகின் நான்காம் மற்றும் ஆறாவது பெரிய பொருளாதாரங்களின் தலைவர்களான அங்கேலா மேர்க்கெலும், நிக்கோலா சார்க்கோசியும் ஒரு அவசர உச்சிமாநாட்டில் கூடிப் பேசினர்; சந்தைகளை அமைதிப்படுத்த வேண்டும் என்பது மாநாட்டின் நோக்கமாக இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின் பங்குச் சந்தைகள் மூன்று ஆண்டுகள் இல்லாத அளவு சரிந்த வகையில் இதை எதிர்கொண்டன.

ஜேர்மனிய DAX வியாழனன்று 6 சதவிகிதத்திற்கு சற்றே குறைவான இழப்பைக் கண்டது; பிரெஞ்சு CAC 40, 5.5 சதவிகிதம் குறைந்தது; பிரிட்டனின் FTSE 4.5 சதவிகிதம், அமெரிக்க Dow Jones Industrial Average 3.7 சதவிகிதம் குறைந்தது. வெள்ளியன்று கீழ்நோக்குச் சரிவு தொடர்ந்தது. இம்மாதத் தொடக்கத்திலிருந்து, DAX 20 சதவிகிதம் குறைந்துவிட்டது. இத்தகைய சரிவுகள் 1930களின் பெருமந்த நிலையின் நினைவுகளைத்தான் மனத்திற்குக் கொண்டுவருகின்றன.

பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பீதி வணிகர்கள் ஆழ்ந்த மந்த நிலையை எதிர்பார்க்கின்றனர் எனக் காட்டுகிறது; ஏற்கனவே அதற்குக் கட்டியம் கூறுவது போல் வளர்ச்சி தேக்கம் அடைந்துவிட்டது, வேலையின்மை உயர்விகிதங்களில் செல்கிறது. பெருநிறுவனங்கள் இதை எதிர்கொள்ளும் வகையில் புதிய பணிநீக்க அலைகளை மேற்கொள்ளும்; அரசாங்கம் இன்னும் கூடுதலான குறைப்புக்களை வரவு-செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளும்.

1930 களின் கசப்பான அனுபவங்கள் மீண்டும் அதேபோல் வரும் அச்சத்தைக் கொடுக்கின்றனபொருளாதாரத்தில் என்று மட்டும் இல்லாமல், அரசியலிலும் இந்நிலைதான் உள்ளது. உலகப் பொருளாதாரத்தின் சரிவுடன் பெருகிய தேசிய அழுத்தங்கள் தோன்றி ஐரோப்பிய ஒன்றியம் தொடர்வதற்கு அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது; இதைத்தவிர, மிருகத்தனமான ஏகாதிபத்திய போர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் அதிகரித்துள்ளன.

தற்போதைய நெருக்கடி 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்னும் ஆழமானது. அப்பொழுது ஐரோப்பா பாசிசம், போர் என்பவற்றுள் இறங்கியது, அமெரிக்க முதலாளித்துவம் சமூக சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் அதை எதிர்கொண்டு, ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா ஒரு மேலாதிக்கம் கொண்ட பொருளாதார சக்தியாக வெளிப்பட்டது. இன்று, அமெரிக்காவே நெருக்கடியின் குவியப்புள்ளியாக உள்ளது; எந்த ஒரு நாடு அல்லது நாடுகளின் கூட்டும் உலக முதலாளித்துவத்தின் நங்கூரம் என்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாது.

சந்தைப் பொருளாதாரத்தை சமூகக் கொள்கைகளுடன் நிதானமாக்கிய வகையில் போருக்குப் பின், மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார மறுசீரமைப்பானது, பெருமந்த நிலையில் இருந்து உள்ளீர்த்துக் கொண்ட படிப்பினைகளின் குறிப்பில் செயல்படுத்தப்பட்டன. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச ஆட்சியால் தகர்க்கப்பட்டபின், சோவியத் ஒன்றியத்தின் முடிவு சோசலிசம் தோற்றுவிட்டது, தடையற்ற முதலாளித்துவச் சந்தை வெற்றி அடைந்துவிட்டது என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்று கூறப்பட்டது.

இக்கூற்றுக்களை கடந்த மூன்று மாதங்கள் சிதைத்துவிட்டன. சந்தைகள், குறிப்பாக நிதியச் சந்தைகள் அதனுடைய அழிக்கும் சக்தியைத்தான் நிரூபித்துள்ளன. ஊக வணிகர்கள் அரசாங்கங்களுக்கு ஆணையிடுகின்றனர், அவை சமூகத்தை அழிவில் தள்ளி, மக்களின் பரந்த அடுக்குகளின் வாழ்க்கை முறைகளை அழிக்கின்றன.

பொது நிதி கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளும் செல்வந்தர்களின் சொத்துக்களும் காப்பாற்றப்படுகின்றன; அதே நேரத்தில் கல்வி, சுகாதாரம், முதியோர் பாதுகாப்பு ஆகியவைஅழிக்கப்படுவதுடன் இளைஞர்கள் எந்த வருங்கால வாய்ப்பும் இன்றித் தெருவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றைத் தொடர்ந்து மற்றொரு சிக்கன நடவடிக்கை  செயல்படுத்தப்பட்டு, மந்த நிலையை அதிகரிக்கிறது; அதையொட்டி பொதுத்துறையில் புதிய ஓட்டைகள் ஏற்பட்டுவிட்டன; வெளியேறும் வழியின்றி இதனால் ஒரு தீய வட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு முதலாளித்துவ அரசாங்கம் அல்லது கட்சியும் நிதியச் சந்தைகளின் தணிக்கமுடியாத தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. வரவிருக்கும் மந்தநிலையை கட்டுப்படுத்துவதற்காக, பொதுத்துறைத் திட்டங்கள் மாபெரும் அளவில் தொடக்கப்பட வேண்டும்; பில்லியன்கணக்கான யூரோக்கள் அதில் போடப்பட வேண்டும், ஊக இலாபங்கள் மற்றும் உயர் வருமானங்கள், செல்வங்கள் ஆகியவற்றின் மீது வரிவிதிக்கப்பட வேண்டும்; அல்லது அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்துவது ஒருபுறம் இருக்க, அவற்றைப் பற்றி கலந்துரையாடல்கள்கூடக் கிடையாது.

நிதியப் பிரபுத்துவத்தின் சக்தி மீறமுடியாது என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து உத்தியோகபூர்வக் கட்சிகளும், “இடதாயினும்சரி”, வலது என்றாலும்சரி, அதற்கு முன் தாழ்ந்து வணங்கி நிற்கின்றன. இன்று சமூகத்தின் வர்க்கத் தன்மையை மிகத் தெளிவாக பிரிட்டனில் இளைஞர்கள் சமீபக் கலகங்களில் கைது செய்யப்படுவதில் இருந்த வேற்றுமையைப் போல் காட்ட முடியாது; அவர்கள் மிகக் கடுமையான சிறைத் தண்டனையை மிகச்சிறிய குற்றங்களுக்காக, உடனடியாக முடியும் வழக்குகளில் அளிக்கப்படுகின்றனர். ஆனால் முழுத் தேசியப் பொருளாதாரங்களையும் செல்லுமிடமில்லாமல் பின்தள்ளிவிட்ட பங்குச் சந்தை சூதாடிகளும் ஊக வணிகர்களும் அவர்களுடைய குற்றங்களுக்கு எந்த விதத்திலும் பொறுப்புக் கூறும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படவில்லை.

ஐரோப்பாவில் அரசாங்கங்களும் கட்சிகளும் நிதியச் சந்தைகளின் வற்றாத பசி யூரோப் பத்திரங்கள் என அழைக்கப்படுபவற்றால் தீர்க்கப்பட முடியுமா என்று விவாதித்த வண்ணம் உள்ளனர்; அல்லது யூரோ கைவிடப்பட வேண்டுமா அல்லது பெரும் கடன்களில் சிக்கியுள்ள நாடுகள் அவற்றின் விதியை அனுபவிக்க விட்டுவிடப்பட வேண்டுமா போன்ற விவாதங்கள்தான் உள்ளன.

முதல் விருப்பத் தேர்விற்கு, கடனைத் திருப்பிக் கொடுப்பதில் இடரைக்காணும் நாடுகளின் அரசாங்கங்களுடைய ஆதரவு மற்றும் ஜேர்மனிய, பிரெஞ்சு சமூக ஜனநாயகக் கட்சியினர், பசுமைவாதிகள் ஆகியோரின் ஆதரவு உள்ளது. செலவுகள் மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகத்தான் யூரோப் பத்திரங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும் என்று அவர்கள் இணைத்துக் கூறுகின்றனர்; இதையொட்டி தனியான நாடுகளின்  வரவு-செலவுத் திட்டக் கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்படாத ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் ஆணைகளுக்கு ஏற்ப இயற்றப்படுகின்றன. யூரோப் பத்திரங்களை அறிமுகப்படுத்துவது என்பது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளின் விரிவாக்கம் என்ற பொருளைத்தரும்; கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் போன்ற நாடுகள் கட்டாயமாக அதற்கு உட்பட வேண்டும்; ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் அதைத்தான் பின்பற்ற வேண்டி வரும்.

இரண்டாம் விருப்பத்தேர்வு, வலதுசாரி ஜனரஞ்சக அரசியல்வாதிகள், முதலாளித்துவ ஸ்தாபனத்தின் பிரிவுகள் ஆகியவற்றால் ஆதரவைப் பெறுகிறது; இதில் ஜேர்மனியின் சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (FDP) அடங்கும். இவை தேசிய நலன்கள்தான் மிகவும் முக்கியமானவை எனக் கருதுகின்றன; யூரோவைக் கைவிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சிதைக்கவும், தேசியப் போட்டிகள், மோதல்கள், போர்கள் ஆகியவற்றின் பாதையில் செல்லவும் தயாராக உள்ளன. மத்தியதர வர்க்கத்தின் முன்னாள் இடதில் இருந்து இதற்கு எதிரொலி கிடைக்கிறது; அவர்கள் தேசிய அல்லது பிராந்திய சுதந்திரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றீடாகக் காண்கின்றனர்.

தொழிலாளர்கள் இந்த இரு முகாம்களையும் நிராகரித்தே தீர வேண்டும். ஐரோப்பாவில் மோதல் என்பது நாடுகளுக்கு இடையே அல்ல, வர்க்கங்களுக்கு இடையே நடைபெறுகிறது. அனைத்து ஐரோப்பியத் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றுதான் நிதியப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தை முறியடிக்க முடியும்; அதுவோ, வலுவான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள், அவற்றின் இழிந்த எதிர்ப்பாளர்கள் ஆகிய இருபுறத்தவராலும் ஆதரிக்கப்படுகிறது.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னிபந்தனை ஒரு சோசலிச வேலைத்திட்டம்தான். டிரில்லியன் கணக்கான சொத்துக்கள் மீதான கட்டுப்பாடு தனியார் கரங்களில் இருக்கும் வரை, பங்குச் சந்தை சூதாடிகள் நாடுகளின் முழுப் பொருளாதாரங்களின் விதியையும் நிர்ணயிக்கும் வரை ஒரு சமூகப் பிரச்சினைகூடத் தீர்க்கப்பட முடியாது. நிதிய அமைப்புக்களும் பெருநிறுவனங்களும் பொதுவில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். பொருளாதார வாழ்வு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பத் திட்டமிடப்பட வேண்டுமே ஒழிய, சந்தையின் பெரும் குழப்பம், மூலதனத்தின் உரிமையாளர்களின் இலாப நலன்களுக்காக அல்ல.

தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் ஒரு பொழுதும் அத்தகைய திட்டத்தை ஏற்காது. அவை ஆளும் உயரடுக்குடன் ஆயிரக்கணக்கான இழைகளின்மூலம் பிணைந்துள்ளன; அரசாங்கங்களிலும் இயக்குனர் குழுக்களிலும் அமர்ந்துள்ளனர்; கணக்கிலடங்காச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அவர்கள் காப்பதில்லை; ஆனால் கீழிருந்து வரும் அனைத்து எதிர்ப்புக்களையும் பிளவுறச் செய்து, முடக்கி, நசுக்கத்தான் முற்படுகின்றன.

தற்பொழுதுள்ள அரச ஸ்தாபனங்கள் மீது அழுத்தம் செலுத்துவதன்மூலம் ஒரு சோசலிச வேலைத்திட்டம் சாதிக்கப்பட முடியாது. அதற்கு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்காக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும். இதற்கு ஒரு புரட்சிகரக் கட்சி கட்டமைப்பது தேவையாகிறது; அதுதான் உலகம் முழுவதுமுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகப் பகுதிகள் கட்டமைக்கப்படுதல் என்பதின் பொருளாகும்.